Tuesday, March 1, 2016

அதிகரிக்கும் கொடூரம் மக்களை முடக்கும் ஹர்த்தால்

யுத்தம் தனது  கொடுமையான முகத்தை வெளிப்படுத்தியபோது உறங்கிக்கிடந்த  கொடூரன்கள் இன்று  வெளிச்சத்துக்கு  வரத்தொடங்கிவிட்டன. கொள்ளை,கொலை,பாலியல்  பலாத்காரம் வழிப்பறி,கோஷ்டி மோதல் என்பன மக்களை துன்புறுத்துகின்றன. ஆவா குரூப் போன்றவை மக்களை அச்சமடைய  வைத்துள்ளன.நிம்மதியான இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக்கொண்டிருக்கும் போது நியாயம் கேட்டு போராடும் அமைப்புகளின் ஹர்த்தால் அழைப்புகள்  இயல்பு நிலையை  சீர்குலைக்கின்றன.

புங்குடுதீவு மனைவியின் கொலையின் பின்னர் நடைபெற்ற ஹர்த்தாலும், நீதி மன்றத்தின் மீதான தாக்குதலும் ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டால் மக்களை வீட்டுக்குள் முடக்கிவிடுகின்றன. யுத்த காலத்திலும் தனிப்பட்ட வன்முறைகளை வெளிக்காட்டாத யாழ்ப்பாணத்துக்கு இப்போ என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. திருட்டு,வழிப்பறி,ஏமாற்று என்பன சர்வசாதாரணமாகிவிட்டன. பாலியல் குற்றங்கள் மிக அதிகளவில் தலை தூக்குகின்றன.  சட்டம் ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்ட சமூகமாக வாழ்ந்த மக்கள் சட்டம் ஒழுங்கு சீர் குலைவதைக் கண்டு   வெறுத்துப்போயுள்ளனர்.

தப்புச்செய்வதற்கு பயந்தகாலம் மலையேறிவிட்டது. தயங்காமல் குற்றச்செயல்களை  செய்யலாம் என்ற  எண்ணம் எழுந்துள்ளது. தவறு செய்பவர்களை கடுமையாக தண்டித்தவர்கள் இல்லை எனற மனநிலையால் குற்றங்கள் பெருகிவிட்டன. புங்குடுதீவு மனைவியின் படுகொலையை அடுத்து  குற்றவாளிகளைக் கைதுசெய், தண்டனைகொடு என்ற கோஷம் கொழுந்து விட்டெரிந்தது. அக்குக்க்ரத்துடன் தொடர்புடைய சிலர் கைது  செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது இன்றுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு தவணை போடப்படுகிறது.

புங்குடுதீவு மனைவியின் கோழையை அடுத்த எழுந்த உணர்வலைகள் இப்படி ஒரு குற்றச்செயல் இந்த மண்ணில் நடைபெறாது  என்ற கருத்தை வலியுறுத்தியது. ஆனால், அதன் பின்னரும் இதே போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட ச்ம்பவங்கலித் தோடேந்து போராட்டங்கள் கடை அடைப்புகள்,போக்குவரத்து முடக்கம் என்பன பகுதி பகுதியாக நடைபெற்றன. இப்படியான குற்றச்செயல்கள் குறைவதாகத் தெரியவில்லை. பாலியல்வன்முறைக்கு  எதிராக பாரியளவில் போராட்டங்கள் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டும் கடந்த வரம் வவுனியாவில் ஒரு மாணவி பாலியல் வல்லிரவுக்குப் பலியாகினார். வவுனியா மனைவிக்கு நடந்த கொடுமையைக் கண்டித்து கடந்த வாரம் வடமாகாணத்தில் ஹர்த்தால் நடைபெற்றது.  குற்றச்செயல்கள் நடைபெற்றதும் அதனைக் கண்டித்து ஹர்த்தால்,போராட்டம் என்பனவற்றை நடத்துவதில்  பிரயோசனம் இல்லை. இப்படிப்பட்ட குற்றங்கள் நடைபெறாமல் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினால் இப்படிப்பட்ட குற்றங்களை இல்லாமல் செய்யலாம்.

 குற்றவாளிகள் திடீரென உருவாகுவதில்லை.  சிறு சிறு குற்றங்கள் செய்பவர்கள் தண்டனையில் இருந்துதப்பி விடுகிறார்கள்  சிறுதண்டனையின் பின்னர் சமூகத்துடன்  இணைபவர்களும் குற்றச்செயல்களில் சம்பந்தப்படுகிறார்கள். சிறை  வாசம் குற்றவாளியைத் திருத்த வேண்டும்.ஆனால், சிறை சென்று திரும்பியவர்கள் மீண்டும் மீண்டும்  அதே போன்ற குற்றங்களை எதுவித தயக்கமும் இன்றி செய்கிறார்கள்.


பாலியல் குற்றம் ஒரு பெண்ணின்   வாழ்வை சீர்குலைத்து விடும் தன்மை வாய்ந்தது. எது வித அச்சமும் இன்றி பாலியல் குற்றங்கள்  நடைபெறுகின்றன. பாலியல் வல்லுறவின்  பின்னர் பெண் கொல்லப்படுவதால்  குற்றவாளி தப்பிவிட அதிக சந்தர்ப்பம் உள்ளது. தண்டனையில் இருந்து தப்பி விடலாம் என்ற எண்ணம் மேலோங்குகையில் இப்படியான குற்றங்கள் அதிகரிக்கின்றன. குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பட்டங்கள் ஹர்த்தால்கள் நடைபெற்றன. குற்றங்கள் குறைவதாகத் தெரியவில்லை.
 குற்றவாளிகளை கைது செய்வதில் சிலவேளைகளில் தாமதம் ஏற்படுகிறது. குற்றச்செயல் நடைபெறுவதாக பொஸுசுக்கு அறிவிப்பப்படும் போது சம்பவ இடத்துக்கு பொலிஸார்  தாமதமாக வருவதும் குற்றவாளிகள் தப்பிவிட காரணியாகிறது. பிணையில் விடுதலையாபவர்கள்   பயமின்றி மீண்டும் குற்றம் செய்கின்றனர்.  மேல் நீதி மன்ற நீதிபதி தலையிட்டு சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

 பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி ஹர்த்தால் நடத்துவதில் தவறு இல்லை. ஆனால், அதுவே வாழ்க்கையின் ஒரு அம்சமாக அமைந்து விடுமோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.  ஹர்த்தால்கள் திட்டமிடாது அவசர கதியில் அறிவிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற கவலையில்  சிலர் அதரவு தெரிவிக்கின்றனர். கந்தசஷ்டி காலத்தில் ஒருநாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடப்பட்டது. இந்துக்களில் மிக முக்கியமான விரதகாலம் என்பதை உணராது ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இதனை யாரும் பெரிதுபடுத்தவில்லை.  ஹர்த்தாலுக்கு திட்டமிட்டவர்கள் அன்றைய நாளைத் தவிர்த்திருக்கலாம். அடிக்கடி ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்தால் அதன் மீதான பற்றுதல் இல்லாமல் போய் சலிப்பு ஏற்பட்டுவிடும். 

ஹர்த்தாலன்று  அதற்குரிய காரணத்தை சிலர் மறந்துவிடுகின்றனர். தெருச்சண்டியர்கள் ஹர்த்தாலை தமக்கு சாதகமாக அமைத்துவிடுகின்றனர்.  கடைகளைப்  பூட்டுவதும் போக்குவரத்தை நிறுத்துவதும் தான் ஹர்த்தால் என்ற கருத்து அதிகமானவர்களிடம் இருக்கிறது. நகர்ப்பகுதிகளில் ஒருசில  மணி நேரம்  ஆர்ப்பட்டம் நடைபெறும் அதன் பின்னர் ஹர்த்தாலை  ஏற்பாடு செய்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அன்று முழுவதும் அதனை நினைவுக்கூரும்வகையில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

 சமூகத்தைச் சுற்றி நடைபெறும் குற்றச்செயல்களை எப்படி தடுப்பது போன்ற செயலமர்வுகளை  மக்களின் மத்தியில் விதைக்க வேண்டும். பாலியல் வல்லுறவு போன்ற கொடுமைகள்  நடைபெறாது தடுக்கும்  சமூகத்தை உருவாக்க வேண்டும்.
வானதி
சுடர் ஒளி
மார்ச் 02/ மார்ச் 08
2 comments:

Muruganandan M.K. said...

மிக முக்கியமான பதிவு
அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
ஆயினும் ஹர்த்தால்கள் இதற்கு ஒரு தீர்வு அல்ல.

நோயாளிகளும் உணவகங்களையே நம்பியிருக்கும் மக்களும் இவற்றால் எத்தனை பாதிப்புறுகிறார்கள் என்பதை சொகுசு நாற்காலியிலிருந்து ஹார்தாலுக்கு அழைப்புவிடுபவர்கள் சிந்திப்பதில்லை.

வைத்தியசாலைகள் திறந்திருக்கின்றன என்று சொல்லுவார்கள். ஆயினும் போக்குவரத்திற்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டி உள்ளது.

பார்மசிகளும் மூடப்படுவதால் மருந்து வாங்க முடியாது திணறிய நோயாளர்களை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன்.

வர்மா said...

Muruganandan M.K. said...
மிக முக்கியமான பதிவு
அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.
ஆயினும் ஹர்த்தால்கள் இதற்கு ஒரு தீர்வு அல்ல.

நோயாளிகளும் உணவகங்களையே நம்பியிருக்கும் மக்களும் இவற்றால் எத்தனை பாதிப்புறுகிறார்கள் என்பதை சொகுசு நாற்காலியிலிருந்து ஹார்தாலுக்கு அழைப்புவிடுபவர்கள் சிந்திப்பதில்லை.

வைத்தியசாலைகள் திறந்திருக்கின்றன என்று சொல்லுவார்கள். ஆயினும் போக்குவரத்திற்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டி உள்ளது.

பார்மசிகளும் மூடப்படுவதால் மருந்து வாங்க முடியாது திணறிய நோயாளர்களை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன்////

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா