Monday, March 14, 2016

மோசடி மன்னன் விஜய் மல்லையா தலை மறைவு

கிங் பிஷர் விமான நிறுவனம், கிங்க்பிஷர் மதுபான ஆலை, மருத்துவமனை உதைபந்தாட்டம்,கிரிக்கெற்,போர்முலா 1 ஆகியவற்றின்  உரிமையாளரான விஜய் மல்லையா   வாங்கிய கடனை  மீளச்செலுத்த முடியாத நிலையில் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டர். சுமர் 1.2 பில்லியன் டொலர் சொத்தின் உரிமையாளரான அவர்  வேண்டுமென்றே கடனை திரும்பச்செலுத்தத் தவறிய  மோசடியாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். 17  வங்கிகளில்   கோடிக்கணக்கான பணத்தை   கடனாகப் பெற்றதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 


யுனைட்டட் வங்கி, ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் விஜய் மல்லையா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தத்தவில்லை. அதன் காரணமாக வேண்டுமென்றே கடனை திரும்பச்செலுத்தத் தவறிய  மோசடியாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். 7500 கோடி ரூபா கடனை அவர் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டி பாரத ஸ்டேட் வங்கி, தேசிய கடன் தீர்ப்பாயத்தில் புகார் செய்தது. அப்புகாரை விசாரித்த தீர்ப்பாயம் அவரிக் கைது செய்து கடவுச்சீட்டை   பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. அப்போது விஜய் மல்லையா கைது  செய்யப்படுவார் என்ற செய்தி பரவியது. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஒன்றிணைந்து உச்ச நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. அந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் அவரது கடவுச்சீட்டை பறிக்க உத்தரவிட்டது.  கடந்த மாதம் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் என சி.பி.ஐ  அறிவித்ததாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
விஜய் மல்லையாவின் மீது  சுமார் ஒரு வருடமாக பல புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அப் புகார்களின்  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை மல்லையாவின் கிங் பிசிஷர் நிறுவனம் பொருளாதாரச்சிக்கலில் தவிக்கிறது.   கிங் பிஷர் விமானங்கள் பறக்கும் உரிமையை மத்திய அரசு தடை செய்துள்து. ஜெர்மன் நாட்டின் வங்கி ஒன்றுக்கு மல்லையா செலுத்த வேண்டிய பணத்துக்கு ஈடாக துருக்கியின் தரித்து நின்ற இரண்டு விமானக்களை அந்த நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது. விதி முறைகளை மீறி மல்லையாவுக்கு கடன் கொடுக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுலாக்கப் பிரிவு இதனை விசாரித்து மல்லையாவின் மீது வழக்குப் பதிவு  செய்யுள்ளது.

கர்நாடகாவின் ம‌ங்களூருக்கு அருகே உள்ள பண்டவன் நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வணிக நிர்வாக தத்துவ ஆய்வுக்காக கலிபோனியா தெற்குபல்கலைக்  கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.   இரண்டு பெண்கியாத் திருமணம் செய்தார் முதல் மனிவியுன் மகனான சித்தார்த் மல்லையா இவரை போன்று உடக வெளிச்சத்தில் பிரபலமானவர். இரண்டாவது மனைவிக்கு  இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். 1984 ஆம் ஆண்டு யுனைட்டட் பிரவேரிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்ருளிருந்து அவரது புகழ் உச்சத்தில் ஏறியது. சுமார் அறுபது பன்னாட்டு நிறுவனங்கள் கொண்ட  குழுவாக இது வளர்ச்சியடைந்தது.

2005  ஆம் ஆண்டு கிங் பிஷர் விமான நிறுவனம் ஆம்பிக்கப்பட்டது.. 32 நாடுகளுக்கு இந்த விமான நிறுவனம் சேவை செய்கிறது. 2007 ஆம் ஆண்டு ஸ்கொட்ஸ் விஸ்கியை கையகப்படுத்தியது. மிகக் குறைந்த  கட்டணத்தில் விமான சேவையை நடத்தி மற்றைய விமான நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்தார். மல்லையாவின் வியாபார  சாம்ராஜ்யம் விரிவடைந்ததனால் அவருடைய  புகழ் உலகெங்கும்பரவியது கிழக்கு வங்காளம்,கோல்கத்த ஆகிய நகரங்களில் உள்ள உதைபந்தட்ட்ட கழகங்களுக்கு மல்லையாவின் நிறுவனம்  ஆதரவளிக்கிறது..

பெங்களூர் ரோயல் சலஞசை மலையாவின் நிறுவனம்  வாங்கியுள்ளது. குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் உள்ளத்தால் அங்கும் முதலீடு செய்துள்ளார்.போம்முலா அகர பந்தயத்திலும் கால்  பதித்து தனது பெயரில் ஒரு அணியை வாங்கியுள்ளார். இந்தியாவின் பெறுமதி மிக்க பொருள்களை பாதுகாத்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். இலண்டனில் திப்பு சுல்தானின் வாள் ஏலத்துக்கு விடப்பட்ட போது 17000 டொலர் கொடுத்து அதை இந்தியாவின் உரிமையாக்கினார். நியூயோக்கில் மகாத்மா காந்தியின் கடிதத்தையும்  ஏலத்தில் வாங்கினார்.

கிங் பிஷர் நிறுவன கலண்டர்கள் இவரை பிரபலப்படுத்தின நீச்சல் உடை அழகிகளின் கவர்ச்சிப் படங்கள் உள்ள காலண்டருக்கு உலகளாவிய ரீதியில் பெரு மதிப்புள்ளது. அந்த அழகிகளைக் கட்டிப்பிடித்து மல்லையாவும் போஸ் கொடுப்பார். ஐ.பிஎல்லில்  மூக்கை நுழைக்கும் மல்லையாவின் மகன் சித்தார்த் நடிகைகளுடன் அமர்ந்து போட்டியை ரசிப்பார்.
 வங்கிகளில் பெற்ற விவசாயக்  கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது  தற்கொலை செய்யும் ஏழை விவசாயிகளின் தொகை வருடா வருடம் அதிகரிக்கிறது. ஏழைகளுக்கு ஒரு நீதி மல்லையாவுக்கு ஒரு நீதியா  பலவங்கிகளை மோசடி செய்த மல்லையாவுக்கு தொடர்ந்து கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர் பல வங்கிகளை வாங்கிய  கடனை திரும்ப செலுத்தவில்லை எனத்தெரிந்து கொண்டும்  புதிய வங்கிகள் விதி முறைகளை மீறி அவருக்கு கடன் கொடுத்துள்ளன..

  
சந்தையில் மோசமான நிலையில் இருந்த கிங் பிஷர் நிறுவனத்தின் மீதான எதிர்மறை மதிப்பீடு, எதிர்மறை நிகர மதிப்பு போன்றவற்றை அலட்சியப்படுத்தி அந்நிறுவனத்துக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் கடனை வாரி வழங்கியிருக்கின்றன வங்கிகள்.

கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தின் சொந்த நிதிநிலை அறிக்கையின் படியே 2005-ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.

முன்னதாக, ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பிஎன்பி ஆகிய வங்கிகள் கடன் பணத்தை பகுதியளவு சரிக்கட்ட கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தன. இதில் ஐ.டி.பி.ஐ ரூ 109 கோடி மதிப்பில் 1.7 கோடி பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.


கடந்த மே மாதம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம், 2008-ல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் (ரூ 4,022 கோடி) வகிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 5 நிறுவனங்களில் வின்சம் டயமண்ட்ஸ் (ரூ 3,243 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ (2,653 கோடி), கார்ப்பரேட் பவர் (ரூ 2,487 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (ரூ 2,031 கோடி) ஆகியவை அடக்கம். ஆயிரக்கணக்கான வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த இத்தகைய நிறுவனங்கள்தான் தொழில் முனைவு மூலம் இந்தியாவை முன்னேற்றப் போகிறவர்களாம். இந்நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தன என்பது மட்டுமில்லை, இவை வாங்கிய கடன்கள் எதற்கு பயன்பட்டன என்பது கூட கேள்விக்குரியது.


தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? முதலாளிகள் தமது தகிடுதித்தங்களின் மூலமாகவோ, லஞ்சம் மூலமாகவோ அல்லது லாபியின் மூலமாகவோ விதிமுறைகளை வளைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழில்களுக்கு திருப்பிவிடுவது மல்லையாவுக்கு இது முதல் முறை அல்ல. கொள்ளையடிப்பதிலும் அதற்கு ஆளும் வர்க்கங்களை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.

தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பெனியைத் துவக்கி, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார் மல்லையா. இதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அப்பாவி மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தினார். இதற்கு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் ஆளும் அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் எந்தத் திசையில் எங்கே போய் சேர்ந்ததென்று தெரிந்தும் இன்றுவரை அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் மௌனம் சாதித்து வந்திருக்கின்றன.
முதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் இதே பொதுத்துறை வங்கிகள் தான் சிறிய கடனுதவிக்காக சாதாரண மக்களை விதிமுறைகளைக் காட்டி பயமுறுத்துகின்றன, நடையாய் நடக்க வைக்கின்றன. வேலை கிடைக்காததால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன.
  மல்லையா போன்ற பெருமுதலைகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கின்றன பொதுத்துறை வங்கிகள். அதே நெருக்கடியை காரணம் காட்டி அரசுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
மக்கள் பணத்தை முதலாளிகளின் பாக்கெட்டுக்கு திருப்பிவிடுவதையே முதலாளித்துவ அரசுகள் தம் தலையாய கடமையாக செய்யும் போது இந்த போலி ஜனநாயக முறைகளை கொண்டு மல்லையா போன்ற கொள்ளையர்களை தண்டிக்கவோ, அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவோ முடியாது.
ரமணி
தமிழ்த்த‌ந்தி
13/03/16


No comments: