Friday, March 4, 2016

தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை குற்றவாளிகள்

தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஜெயலிதாவின் அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் இனைந்து போட்டியிடுவதற்காக அரசியல் தலைவர்கள் பேச்சு வரத்தை நடத்தி வரும் நிலலையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதம் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலையில் கற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், ஸ்ரீ ஹரன் என்னும் முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட்டது. முருகனின் மனைவியான நளினியின் மரணதண்டனை கருணையின் அடிப்படையில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. றொபேட் பயஸ்,ரவிக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. 20 வருடங்களுக்கு மேலாக ஆயுள்தண்டனை அனுபவிப்பவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்பதனால் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் நலவரும்விடுதலைக்காக ஏங்கினர். மத்தியில் அட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இவர்கள் விடுதலை செய்யப்படுவதை விரும்பவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இவர்களை விடுதலை செய்வதில் அதிக அக்கறை காட்டவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய இயக்கங்களுக்கு எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் போட்டிபோட்டு அதரவு வழங்கினார்கள்.விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆரின் விசுவாசத்தைப் பெற்றது. ஏனைய இயக்கங்கள் கருணாநிதியின் ஆதரவைப் பெற்றன. இலங்கைத் தமிழரின் விடுதலைக்காகப் போராடியவர்கள் அன்றே இரண்டு அணியாகப் பிரிந்தனர். வைகோ,பழ.நெடுமாறன் போன்றவர்களும் வெளிப்படையாக இலங்கைத் தமிழரின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். இலங்கைத் தமிழர்கள் மீது எதுவித பிடிமானமும் இல்லாது அரசியல் நடத்துபவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என தமிழக சட்ட சபையில் ஆர்ப்பட்டம் செய்த ஜெயலலிதா தேர்தல் சமயங்களில் இலங்கைத் தமிழர்கள் மீது அதிக அக்கறை காட்டுவார். தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக மீண்டும் ஏழு பேரின் விடுதலையை கையில் எடுத்துள்ளார். ராஜீவ் கொளாவ்யில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபோரையும் விடுதலை செய்வதற்கான ஆலோசனையை வழங்குமாறு மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் சாதுரியமான அரசியல் காய் நகர்த்தலால் எதிர்க் கட்சிகள் அனைத்தும் விக்கித்துப் போய் நிற்கின்றன.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகிறார். ராஜீவைக் கொலை செய்தவர்களை விடுதலை செய்ய முயற்சிக்கிறார் என தமிழக சட்ட சபையில் முழங்கிய ஜெயலலிதா இப்போது தேர்தல் காலத்தில் அவர்களின் விடுதலையை வலியுறுததுவதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்துள்ளார். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் வாதாடியவர் வைகோ. அவரின் முயற்சியினால் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான ஆணையை நீதி மன்றம் வழங்கியது. அந்த ஆணையில் உள்ள சட்டச்சிக்கலால் ஜெயலலிதா உச்சத்தில் மிளிர்கிறார்ஆயுள்தண்டனை அனுபவிப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்தமையினால் அவர்களின் விடுதலை மத்திய அரசின் கைகளில் உள்ளது. இந்தச்சட்டச்சிக்கலை தெரிந்து கொண்ட ஜெயலலிதா அன்றைய காங்கிரஸ் அரசுக்கு நெருக்டி கொடுப்பதற்காக மூன்று நாட்களில் ஏழு போரையும் விடுதலைசெய்யப்போவதாக சவால் விடுத்தது. அதனை எதிர்த்து அன்றைய காங்கிரஸ் அரசு நீதி மன்றத்தை நாடியதால் அவர்களின் விடுதலை கிடப்பில் போடப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை கையில் எடுத்த ஜெயலலிதா, தமிழக சட்ட சபை தேர்தல் நெருங்குகையில் தூசு தட்டியுள்ளார். ஜெயலலிதாவின் கடிதத்துக்கு பாரதீய ஜனதாக் கட்சியின் பதில் எப்படி இருக்கப்போகிறது என்பதே அரசியல் அரங்கின் எதிர் பார்ப்பு. அவர்களை விடுதலை செய்வதற்கு அனுமதித்தால் காங்கிரஸ் பார்த்துக்கொண்டிருக்காது. நாடாளாவிய ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். திராவிட முனேற்றக் கழக‌ம் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கசப்பு ஏற்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் கடிதம் மத்திய அரசுக்கு போய் சேர முன்னே கருணாநிதி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதாவுடன் கூட்டுச்சேரத் துடிக்கும் விஜயகாந்துக்கு இக்கடிதம் எரிச்சலை ஏற்படுத்தும். தமிழகத்தில் வலுவான ஆதரவு இல்லாத பாரதீய ஜனதாக் கட்சி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அவர்களின் விடுதளிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் அதன் பலனை ஜெயலலிதாதான் அறுவடை செய்வர் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இதனால் ஜெயலிதாவின் கடிதத்தை உடனடியாக பரிசீலிக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பிய அக்டிதம் மக்கள் நலக் கூட்ட்னிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அக் கூட்டணித் தலைவர்களில் ஒருவரான வைகோ விடுதலிப் புலிகளின் தீவிர ஆதரவாளர். அங்கே உள்ள இடதுசாரித் தலைவர்கள் வ்சிடுதளிப் புலிகளை கடுமையாக எதிர்ப்பவர்கள். ஏழு பேரையும் விடுதலை செய்யப்போவதாக் தமிழக சட்ட சபையில் ஜெயலலிதா அறிவித்தபோது அதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச்செய்தனர். இடதுசாரி உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு அதரவு தெரிவித்து அவர்களின் பின்னே சென்றனர். இடதுசாரித் தலைவர்கள் ஏழு பேரின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அதனை வைகோ எப்படி எதி கொள்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பிய ஒரு கடிதத்துன் மூலம் எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஜெயலலிதா நிலை குலைய வைத்துள்ளார். வாழும் வரை சிறிய விட்டு விடுதலையாவோமாஎனத் தவிக்கும் ஏழு பேரின் தலையும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக்கப்பட்டுள்ளது. வர்மா துளியம்.கொம் 04/02/16

No comments: