Saturday, March 12, 2016

கட்சிக்குள் களை எடுக்கும் ஜெயலலிதா அச்சத்தில் அமைச்சர்கள்

அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரம் மிக்க தலைவராக வீற்றிருக்கும்  ஜெயலலிதாவுக்கு எதிராக இதுவரை சிறு துரும்பு கூட அசையவில்லை..விசுவாசம் மிக்க தொண்டர்களும்  அடிபணியும் அமைச்சர்களும் கிடைத்தது ஜெயலலிதாவின் அதிர்ஷ்டம்.  அதீத விசுவாசத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு பிரதி உபகாரமாக பதவிகளை வழங்கும் ஜெயலலிதா ஒரு கட்டத்துக்கு மேல் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

உடன்பிறவா சகோதரியான சசிகலாவை துரத்திய ஜெயலலிதா பின்னர் அவரை மன்னித்து சேர்த்தார்.  சசிகலாவின் உறவினர்கள் அதிகார போதையில் குவித்த சொத்து விபரங்கள் பற்றிய விபரம் தெரிந்தபின்னர் அவரை துரத்தினார்.  சிறிதுகாலம் அமைதியாக இருந்த  சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் பக்கம் வந்ததும் அடங்கிவிட்டார்.  யார்மீதும் நம்பிக்கை வைக்காதவர் ஜெயலலிதா. பன்னீர்ச்செல்வத்தின் மீது நம்பிக்கை வைத்து அவரை இரண்டு தடவை முதலமைச்சராக்கினார். இப்போ அவர் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீமானிக்கும் சக்தியாக ஓ.பன்னீர்ச்செல்வம்,நந்தம் விஸ்வநாதன்,வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி,பழனியப்பன் ஆகிய ஐந்து  பேர் உள்ளனர். இவர்களை ஐவர் அணி என அழைக்கின்றனர். இந்த ஐவர் அணியின் மீது சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.

   தமிழக அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் உறவினர்கள் அரச வளங்களைப் பயன்படுத்தி முறைகேடாக நடப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்க்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் களை எடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்துகிறார் ஜெயலலிதா. அமைச்சர்களினதும் சட்ட மன்ற உறுப்பினர்களினதும்  ஆசியுடன் வலம் வருபவர்களின் பதவிகளை பறித்து அவர்களை வெறும் செல்லாக் காசக்கிவிட்டார். ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஐவர் அணியின் விசுவாசிகளும் தப்பவில்லை.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை  உச்ச நீதி மன்றத்தில்  நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தள் பிரசாரத்தின்  பிரதான பேசு பொருளாக ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கப்போகிறது. இந்த நிலையில் அமைச்சர்களும் அவர்களது உறவினர்களும் போடும் ஆட்டம் பற்றிய விபரங்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு போயுள்ளது. ஜெயலலிதாவின் அருட் பார்வையில் இருக்கும் பன்னீர்ச்செல்வத்துக்கு முதல் அடி விழுந்துள்ளது. அவரது உறவினகளும் விசுவாசிகளும் சேர்த்த சொத்து விபரங்களை ஜெயலலிதா பார்த்து அதிர்ந்துவிட்ட்டார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை அமைச்சர்கள் வெகு விமர்சையாகக் கொண்டடுவார்கள். தமது தாயின் பிறந்தநாள் எது எனத்தெரியாத அமைச்சர்களுக்கு ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு கிழமை முன்னரே தெரிந்து விடும்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொடியள் 68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. அவ்வைபவத்தில்  பன்னீர்ச்செல்வத்துக்கு பன்னீர்ச்செல்வம் தலைமை தங்கிவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அவர் ஓரம் கட்டப்பட்டார். சட்ட மன்ற உறுப்பினரின் தலைமையில் விழா நடப்பதை அமைச்சர்  பன்னீர்ச்செல்வத்துக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.


பன்னீர்ச்செல்வத்தை நிழலாகத் தொடர்ந்து  செயற்பட்ட வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் அசோக், மீனவர் அணி மாநில துணைச்செயலாளர் ரமேஷ் , எம்,ஜி,ஆர் மன்ற பொருளாளர் வரைக்கூர் அருணாசலம், எம்,ஜி,ஆர் மன்ற மன்ற இளைஞர் அணிச்செயலாளர் எல்லைப்பட்டி முருகன் ஆகியோர் பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பன்னீர்ச்செல்வத்தின் மகனான ரவீந்திரனின் சொத்து விபரங்கள் ஜெயலலிதாவை உருக்கி உள்ளது. சென்னையிலும் மும்பையிலும் உள்ள அவரது சொத்து விபரங்களைப் பார்த்து ஜெயலலிதா  மலைத்துவிட்டர். அடக்கமும் அமைதியும் உள்ள பன்னீர்ச்செல்வத்துக்குப்  பின்னால் தகிடு தத்தங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.
பெயரைப் போன்றே விசுவாசத்துக்கு உதரணமானவர்   நந்தம் விஸ்வநாதன் அவரின் விசுவாசத்தில் கீறல் விழுந்துள்ளது.  ஜெயலலிதாவின் பிறந்தநாளை அந்த மாவட்ட அமைச்சர்கள் முன்னின்று நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த திருமணவிழாவை அவைத்தலைவர் மதுசூதனன் முன்னின்று நடத்தினர். அமைச்சர் விஸ்வநாதன் ஓரம் கட்டப்பட்டார்.  தனி குளுமத்துடனான தொடார்பும் ராமநாதபுர மாவட்ட சோழர் மின்திட்டமும் விஸ்வநாதன் ஓரம் கட்டப்படுவதன் முக்கியா காரணிகள்.  விஸ்வநாதனின் மகன் அமர் நாத் சோலார் மின் திட்டத்தில் பங்குதாரர் என்பதை உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பரத்தில் ஜெயலலிதாவின் படம்  தான் போடப்பட வேண்டும் என்ற தலைமயின் உத்தரவை விஸ்வநாதனின் ஆதரவளர்கள் மீறி விட்டனர். இதுவும் ஒரு குற்றச்சாட்டாகப் பதியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட த்தில் நடைபெற இருந்த விழாக்களில் கலந்து கொள்வதற்கு  விஸ்வநாதனுக்கு அனுமதி  வழங்கப்படவில்லை.


  திண்டுக்கல் மாவட்ட பழனி நகரச்செயலளரும்  விஸ்வநாதனின்  ஆதரவாளருமான  மாரியப்பனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.   பன்னீர்ச்செல்வம், விஸ்வநாத ஆகியோர் ஓரம் கட்டப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்களின் பதவி பறிக்கப்படுவதும் சக்தி மிக்க ஐவர் அணியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் இசக்கி பாண்டியனின் பதவி பறிக்கப்பட்ட சூடு ஆறுவதற்கு முன்னர்  சின்னையாவின் பெயருக்கு முன்னால் இருந்த அமைச்சர் என்ற கெளரவப் பதவி பறிக்கப்பட்டது. கனிசி மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரனின் உதவியாளர்  இலஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால் ராஜேந்திரனின் பதவி பறிக்கப்பட்டது.

ஐவர் அணியின் முக்கிய புள்ளிகளான பன்னீர்ச்செல்வம், நந்தம் விஸ்வநாதன்,பழனியப்பன் ஆகியோர் காஞ்சி புரத்தில் நடந்த  மகளிர் தின மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. தமிழக சட்ட சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது  தமிழக அரசின் ஊழலை எதிர்க்கட்சிகள்  பெரிதுபடுத்துவர்கள்  என்பதை உணர்ந்த ஜெயலலிதா முன்னேற்பாடாக ஊழல் புள்ளிகளை வெளியேற்றுகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ வேட்பாளர் பட்டியலில்  ஊழல் செய்தவர்களுக்கு இடம் இல்லை என்பதை ஜெயலலிதா  சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். புதியவர்கள் இடம் பிடிப்பார்கள் என்ற செய்தி அரசல் புரசலாக வெளிவருகிறது. ஜெயலலிதாவின் நடவடிக்கையைப் பார்த்தால்  அது உண்மைபோல் தெரிகிறது. ஜெயலலிதாவுக்காக காவடி எடுத்து உருண்டு புரண்டவர்களின் அத்து மீறல் பட்டியல் ஜெயலலிதாவிடம் உள்ளது. அசைக்க முடியாதவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். இதனாலமற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் வேட்பாளர் பட்டியல்  வெளிவரும்போது உள்ளே இருப்பவர்கள் யார் வெளியேற்றப்பட்டவர்கள் யார் என்ற விபரம் அம்பலமாகும்.
வர்மா 
தமிழ்த்தந்தி
13/03/16

No comments: