Wednesday, March 9, 2016

தீர்க்க முடியாத பிரச்சினைகளால் அவதிப்படும் மக்கள்

துன்பப்படும் மக்களின்   பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க ஆட்சிபீடம் ஏறி ய நல்லிணக்க அரசாங்கம் தமிழ் மக்களின் தலையாய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை கட்டவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் மேலோங்குகிறது. தமிழ் அரசியல் அகதிகளின் விடுதலை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரட்டப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறிவது ஆகியனவற்றில் அரசாங்கம் மென் போக்கைக் கடைப்பிடிக்கிறது.

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக்கோரி பலதடவை உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணா  விரத காலத்தில் சிறைச்சாலைகளுக்குப்  படையெடுக்கும் அரசியல்வாதிகள் பசப்பு வாக்குறுதிகளைக் கொடுத்து . உண்ணாவிரதத்தைக் கைவிடச்செய்வர்கள். அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிடுவார்கள். தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். முடிவிலி இல்லாத தொடர்கதையாக  உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

 . காணாமல்   போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன்னிலையில் தோன்றிய பலர் ஆதாரங்களுடன் தமது புகார்களைக் கொடுக்கின்றனர்.  படையினர் பிடித்துச்சென்றனர்,இராணுவம் கைது செய்தது,விசாரித்துவிட்டு விடுவோம் என அழைத்துச்சென்றனர்..இராணுவத்திடம் சரணடைந்தனர்,இராணுவத்திடம் ஒப்படைத்தோம், காவலரணில் கைது செய்தனர்  என்றே பலர் தமது புகாரில் பதிவு செய்துள்ளனர்.  சம்பவம்  நடைபெற்ற போது பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரிகளின் பெயர், அப்போதைய புலனாய்வாளர்களின் பெயர் என்பனவற்றை பாதிக்கபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவற்றை எல்லாம செவிமடுத்த காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்  சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்  படை அதிகாரிகளை எப்போ விசாரிப்பது  குற்றச்சாட்டு உண்மையானால்  அவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது போன்ற கேள்விகளுக்கு விசாரணைக்குழு பதிலளிக்கவில்லை.


காணாமல் போனவர்களைப் பாரிய விபரங்களை கேட்டறியும் ஜனாதிபதி அணைக்குழுவால் விசாரணையை மட்டுமே செய்ய முடியும். குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இல்லை.  ஜனாதிபதி தண்டனை வழங்குவார் என தலைவர் கூறியுள்ளார். யுத்தகளத்தில் வீரத்தைக் கட்டிய படையினரைத் தண்டிக்க எதிர்க்கட்சிகள் இடம் கொடுக்கமாட்டார்கள். தண்டனை என்பது  கானல்நீராகிவிடும். இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என ஐநா அடிக்கடி வலியுறுத்து. ஐநாவின் முன்னால் படையினரை குற்றவாளியாக்கினால் இலங்கை கொந்தளிக்கும் என  அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் கடும் தொனியில்  கூறியுள்ள்ளனர். 

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற கோரி  ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். 25 வருடங்களாக முகாமில் அகதி வாழ்க்கை வாழும் தாம் தமது சொந்த இடத்தில் குடியேற வேண்டும் என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானது தான்.மருதனார்மடம் கண்ணகி அகதி முகாமில் வாழும் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டத்தை  நடத்தினர். யாழ்ப்பணத்தில் உள்ள  32 அகதி முகாம்களில் வாடும் மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

அகதி வாழ்வு என்பது சுதந்திரன் ஜனநாயகம் சோசலிசம் என கோரல் கொடுக்கும் அரசாங்கங்களுக்கு ஏற்புடையதல்ல. சொந்த நாட்டியேயே அகத்து வாழ்வு என்பதை ஜீரணிப்பது கஷ்டமாக உள்ளது. தமது வாழ்வதற நிலங்களை இன்னொரு பகுதியினர் ஆக்கிரமித்து தம்மை அகதியக்கியாக்கியதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய கொடுமைக்கு ஆ ளாகியுள்ளனர். ஒரு நாள் அகதி வாழ்க்கையே கொடுமையானது. 25 வருட அகதி வாழ்க்கை ஒருதலை முறையின் வாழ்க்கையை அடிமைப்படுத்திவிட்டது.
பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் விரட்டப்ப்பட்ட மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை. வட பகுதியில் உள்ள சிவில்  சமூகங்களும் இதனை பெரிதாக எடுக்கவில்லை. அனுதபச்செய்தியாக அவர்களின் போராட்டம் மங்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அகதி முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எந்த ஒரு அமைப்பும் அறிக்கைவிடவில்லை. வாடா பகுதிச்சமூகமும் அவர்களைக் கைவிட்டு விட்டதோ  என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அகதி முகமா மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தினத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்த மில் குடியேற்ற அமைச்சரிடம் இது பற்றி வினவிய போது அவர் மேலதிக தகவல்களை கேட்டார். அகதி முகமா மக்கள் பற்றிய பூரணமான விபரங்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்பதை இது வெளிக்காட்டுகிறது. சொந்த  இடத்தில் குடியேற போராட்டங்கள் நடைபெறும்   வேளையில்  பலாலி விமான நிலையம்  மயிலிட்டி மின் பிடி துறைமுகம்  ஆகியவற்றின்  விஸ்தரிப்புக்காக காணி அளவிடப்படுகிறது.


 . தமிழ் அரசியல் அகதிகளின் விடுதலை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரட்டப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறிவது  ஆகியவற்றுக்கு பொறுப்புக் கூரவேண்டிய கடமை இந்த அரசாங்கத்துக்கு உள்ளது.
வானதி
சுடர் ஒளி
மார்ச்09/மார்ச்15

No comments: