Thursday, December 5, 2013

கண்முன்னே அழிந்த வீடுகள் கண்ணீரில் தவிக்கும் மக்கள்

மோதரை 90/32 விகாரை வீதி என்ற முகவரியில் சுமார் 15 வருடமாக அவர்கள் குடியிருக்கிறார்கள். மின்சாரம், தண்ணீர்  போன்ற அடிப்படை வசதிகளை அவர்கள் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் நடை பெற்ற சகல தேர்தல்களிலும் அவர்கள் வாக்களித்துள் ளனர்.தேசிய அடையாள அட்டைகள் உள்ளன.அந்த இடத்தில் இருப்பதற்கான சகல ஆவணங்களும் அவர் களிடம் இருந்தும், கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இருக்க இடம்  இன்றி தவித்தனர்.
வழமை போன்று பொழுது புலர்ந்து ஆண்கள் வேலைக்கு சென்று விட்டனர்.சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்று விட்டனர்.காலை 10 மணிக்கு நீதிமன்ற ஊழியர்களும், நகர அபிவிருத்தி சபை அதிகாரி களும் புல்டோசருடன்  அவர்களுடைய குடியிருப்பை நெருங்கினர். அப்போது தான் அங்கு  நடக்கப்போகும்  விபரீதத்தை அவர்கள் உணர்ந்தனர்
.
அவர்கள் குடியிருக்கும் நிலம் அரசாங்கத்துக்கு சொந்தமானது  அந்த இடத்திலி ருந்து வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப் பளித்தது.10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரில் எதிர் காலம் கேள்விக்குறியானது.தேர்தல் காலங்களில் வீடுதேடிவரும் அரசியல்வாதிகள்  வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது பெரிதாக அக்கறை காட்ட வில்லை.தங்களின் நிலைமை குறித்து அதிகாரிகளுக்கு கடித மூலம் தெரிவித்தனர். அவர் களுக்கு ஆறுதல் கூற யாருமே முன்வர வில்லை.
அந்த இடத்திலிருந்து தாம் வெளியேறும்போது மாற்றிடத்தை அரசாங்கம் தரும் என்றே அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை அந்த நம்பிக்கை பொய்த்து விட்டது.புல்டோசரின் பசிக்கு பத்து வீடுகளும் பலியாகின.வீட்டிலிருந்த பொருட்களை மீட்பதற்குக் கூட அவகாசம் இருக்க வில்லை. சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், மாணவர்களின் புத்தகங்கள், தொலைக்காட்சி, ரேடியோ, உடுதுணிகள், அலுமாரி, உணவுப் பொருட்கள் எல்லாம்  மண்ணோடு மண்ணாகின. ஒரு சில நேரத்தினுள் எல்லாமே அழிந்தன.

அங்கு உள்ளவர்களினால் நாட்டப்பட்ட இரண்டு தென்னை மரங்கள்  மட்டுமே எஞ்சி உள்ளன. வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்ட அழகான பூ மரங்கள், பூந்தொட்டிகள் எல்லாம் துவம்சமாகின. பொருட்களை எடுப்பதற்கு அவகாசம் தந்திருந்தால் எமக்குத் தேவையான பெறுமதியான பொருட்களை மீட்டிருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக் கின்றனர்.

 திருமண வைபவங்கள், பிறந்த நாட்கள், மரணச்சடங்குகள் என்பனவையையும் 15 வருட காலத்தில் அங்கு வாழ்ந்தவர்கள் நடத்தியுள்ளனர். கைக்குழந்தைகள், சிறுவர்கள், முதியோரும் இதனால் பாதிக்கப்பட்டனர்.இங்குள்ள சிறுவர் கொட்டாஞ் சேனை சென்.அன்றனீஸ் மோதரை இந்து கல்லூரி ஆகியவற்றில்  கல்விபயில்கின்றனர்.மோதரையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பரிசுபெற வேண்டிய மாணவன் அணி வதற்கு உடை இல்லாததால் கண்ணீ ரோடு முடங்கிப் போயுள்ளான்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு  கிறிஸ்தவ வோலயம் உதவிசெய்தது. சுயமுயற்சியினால் குடும்பத் தைப்  பாராமரிக்கும்  ஆண்கள் என்ன செய்வ தென்று தெரியாது தவிக்கின்றனர். மூன்று பெரியவர் களும், இரண்டு சிறுவர்களும் மாலை போட்டு ஐயப்ப விரதம் அனுட்டிக்கிறார்கள்.  அவர்களின் விரதத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

வீடிழந்து நிற்கும் இவர்களின் எதிர்காலம் என்ன? இவர்கள் இப்படியே வீடற்றவர்களாக இருக்க வேண்டுமா? மாற்றிடம் கொடுத்த பின்  ஏற்பாடு செய்துவிட்டு வீடுகளை உடைத்திருக்கலாம். இவர் களுக்கு நம்பக்கையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை.இதற்கான நெருக்குதல்களை கொடுக்க வேண்டியது சமூக ஆர்வலர் களின் பங்கு.
மோதரை விஷ்ணு கோயிலுக்கு எதிரே உள்ள கோயிலின் வாகனத்தரிப்பிடத்தில் இவர்கள் எவ்வித வசதியும் இன்றி இருக்கின்றனர்.இவர்கள் தற்காலிக மாகத் தங்கி இருக்கும் இடமும் அரசுக்கு சொந்தமான இடம்.எவ்வித முன் அறிவித்தலும் இன்றி திடீரென   வீடுகள் உடைக்கப்பட்டதனால் இவர்களுடைய எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
சட்டவிரோத கட்டடடங்களும், குடியிருப்புகளும் தலைநகரில் அதிகம் உள்ளன.அவற்றை  அகற்றும்  நடவடிக்கை  துரிதகதியில் நடைபெறுகிறது.அதேபோன்ற வேகத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும்.
சுடர் ஒளி

01/01/13

3 comments:

Anonymous said...

வணக்கம்

பதிவைபடிக்கும் போது கண்ணீரில் நனைந்தோம் .... காலதேவன்தான் பதில் சொல்வான்..அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

துளசி கோபால் said...

என்னதான் கோர்ட் தீர்ப்பாக இருந்தாலும் முன்னறிவிப்பு இல்லாமல் எப்படி வீடுகளை இடிக்கலாம்?

குறைஞ்சபட்சம் ஒருமணி நேர அவகாசம் கொடுத்து இருக்கலாமே!

ப்ச்..... என்னவோ போங்க....

மனிதம் செத்துப்போக ஆரம்பிச்சுருக்கு:(