Thursday, February 20, 2025

நடப்பு சம்பியனை வீழ்த்திய நியூஸிலாந்து


 ச‌ம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 320 ஓட்டங்கள் எடுத்தது.47.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் 270 ஓட்டங்கள் எடுத்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. 

பகிஸ்தானின் பந்து வீச்சு முக்கியமானவர்களை வெளியேறியது.  டெவோன் கான்வே 10  ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன்  ஒரு ஓட்டத்துடனும் வெளியேறினர்.அதிரடி ஆட்டக்காரர் டரில் மிட்செல், 10 ஓட்டங்ள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார்.   வில் யங்கும் டாம் லாத்தமும், பொறுமையாக ஆடி விளையாடினர். ஒரு கட்டத்தில், அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினர்.

சதம் அடித்து அசத்திய வில் யங் 107 ரஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  கிளேன் பிலிப்ஸ் உடன் இணைந்து பவுண்டரி மழை பொழிந்தார் டாம் லாத்தம். அதிரடியாக ஆடிய கிளேன் பிலிப்ஸ் 61 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார்.

 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் எடுத்தது.சிறப்பாக விளையாடிய‌ விளையாடிய டாம் லாதம்  ஆட்டமிழக்காது 118*  ஓட்டங்கள் எடுத்தார்.

  321  ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி விரர்கள் ஏமாற்றினர். 

தொடக்க வீரர் சவுத் ஷகீல் 6, க‌ப்டன் முகமது ரிஸ்வான் 3 ,  பகர் சமான் 24  ஓட்டங்களில்  ஆட்டம் இழந்தனர். இருப்பினும், பாபர் அசாம், சல்மான அலி அகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச்   சேர்த்தனர்.

42 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, சல்மான தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அரை சதம் அடித்த பாபர் அசாம் 64 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.   குஷ்டில் ஷா, அதிரடியாக ஆடி 69  ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.

பாகிஸ்தான் 47.2 ஓவர்களிலனைத்து விக்கெற்களையுமிழந்து 260 ஓட்டங்கள்  எடுத்தது. ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லதாம் வென்றார்.

Wednesday, February 19, 2025

பாகிஸ்தானில் மினி கிறிக்கெற் திருவிழா


 கிறிக்கெற் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கத் துடிக்கும்  மினி உலக கிறிகெற் திருவிழாவான சம்பியன் கிண்ணப் போட்டி இன்று புதன் கிழமை பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது.

  இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ்  ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மறு பிரிவிலும்  போட்டியிடுகின்றன.இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடக்கும் சர்வதேச கிறிக்கெற் போட்டி என்பதனால்  மிக முக்கியத்துவம்  பெறுகிறது.

ச‌ம்பியன் கிண்ணத்தை  வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் டொலரும், , இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டொலரும் பரிசாக வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில், உலகின் முதல் எட்டு ஒருநாள் அணிகள் பங்கேற்கும்.

இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சம்பியன்' பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியிந்துடுப்பாட்டம் பலமாக உள்ளது. சமீபத்தில் கராச்சியில் நடந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 355 ஓட்டங்களைத் துரத்தி வென்றது. கீப்பர், கப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், பகர் ஜமான், சல்மான் அகா, உஸ்மான் கான் தமது பலத்தி நிரூபிப்பார்கள். பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, 'ஸ்பின்னர்' அப்ரார் அகமது அசத்துவார்கள்.

புதிய கப்டன் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி அசத்துகிறது. முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பின் கராச்சியில் நடந்த பைனலில் மீண்டும் பாகிஸ்தானை சாய்த்து, கோப்பை வென்றது. இன்றும் அசத்தினால், 'ஹட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம். டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் என நிறைய 'ஆல்-ரவுண்டர்கள்' இருப்பது பலம். அனுபவ வில்லியம்சன், கான்வே, லதாம் ரன் மழை பொழியலாம். பந்துவீச்சில் ரூர்க்கே, மாட் ஹென்றி, சான்ட்னர் மிரட்டலாம்.

இரு அணிகளும் 118 ஒருநாள் போட்டியில் மோதின. பாகிஸ்தான் 61, நியூசிலாந்து 53ல் வென்றன. 3 போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.

* சம்பியன்ஸ் டிராபி அரங்கில் 3 முறை மோதின. பாகிஸ்தான் இரண்டு முறையும்,நியூசிலாந்து ஒரு போட்டியிலும்  வென்றன.


 * கராச்சி மைதானத்தில் 9 போட்டிகளில்  மோதின. நியூசிலாந்து 5 முறை வெற்றி பெற்றது.

* கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில்  நியூசிலாந்து 3,  மூன்றுமுறை  வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

1998ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த மினி உலகக்கோப்பையை இதுவரை வென்ற அணிகள் விபரம்

1998ம் ஆண்டு - தென்னாப்பிரிக்கா

200ம் ஆண்டு - நியூசிலாந்து

2002ம் ஆண்டு - இந்தியா, இலங்கை

2004ம் ஆண்டு - வெஸ்ட் இண்டீஸ்

2006ம் ஆண்டு - ஆஸ்திரேலியா

2009ம் ஆண்டு - ஆஸ்திரேலியா

2013ம் ஆண்டு - இந்தியா

2017ம் ஆண்டு - பாகிஸ்தான்

இன்று நிலவும் கிரிக்கெட் சூழலுக்கு நேர் எதிரான சூழல் தான் 1996ம் ஆண்டில் காணப்பட்டது.  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களை வலுவாக நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துக்கொண்டு இருந்தது. ஆனால், இன்றைய நிலவரத்தை போன்று அன்று பொருளாதார ரீதியாக பிசிசிஐ வலுவாக இல்லை. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, 1996 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியாவிற்கு உதவி தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான், இந்தியாவிற்கு ஆதரவாக இணைந்து செயல்பட அப்போதைய பாகிஸ்தான், இலங்கை ஆகியன முன்வந்தன.

 1987ம் ஆண்டிலேயே இந்தியாவிலும்  பாகிஸ்தானிலும்  ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இங்கிலாந்திற்கு வெளியே நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுவாகும். அந்த போட்டியில் இந்தியா பெரும்பங்கு வகித்த நிலையில், 1996 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது.

   1996ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்சபை   பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற தீவிரமாக விரும்பியது.அந்த காலத்தில் ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும் லாப நோக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்தபோது, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இணைந்து சென்று அங்கு ஒரு போட்டியில் பங்கேற்றன. இதன் மூலம், இலங்கை பாதுகாப்பான நாடுதான் என்பதை உறுதி செய்தன. இன்றும் இலங்கைக்கு பயணம் செய்து, அர்ஜுனா ரணதுங்கா போன்றவர்களிடம் கேட்டால், இது ஒரு மறக்க முடியாத ஒரு செயல் என்று குறிப்பிடுவர்.

  கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் அபாய நாட்களுக்கு பதிலளித்த நாட்கள் அவை. ஆனால் இன்று, பலவீனத்தின் எந்த அறிகுறியும் அதிகமாக சுரண்டப்படுவதற்கான அழைப்பாக உள்ளது.

 , காலங்கள் உருண்டோடி இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர் துருவங்களாக உருவெடுத்துள்ளன. அரசியல் சூழல் காரணமாக, இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாகவே பாகிஸ்தானுக்கு செலவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், எல்லை தாண்டி கிரிக்கெட் விளையாட இந்தியாவை அனுமதிப்பதில்லை என்பதில்  அரசியல் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. விளையாட்டும் அரசியலும் கலக்கக்கூடாது என்று சொல்பவர்கள் இருப்பார்கள், ஆனால்  விளையாட்டு தனியாக இயங்காது.

  

Tuesday, February 18, 2025

குளிர்கால ஆசியப் போட்டி சீனா முதலிடத்தில் உள்ளது.

சீனாவில் நடைபெறும்குளிர்கால ஆசியப்போட்டியில்   32 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனாமுதலிடத்தைப் பிடித்துள்ளது,  தென் கொரியா 15 தங்கங்களுடன் இரண்டாவதி இடத்திலும் ஜப்பான் 9 தங்கங்களுடன் மூன்றவது இடத்திலும் உள்ளன. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 7வது அஸ்தானா-அல்மாட்டி ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் கஜகஸ்தான் படைத்த 32 தங்கங்களின் சாதனையை சீன‌ சமன் செய்து.

  வியாழக்கிழமை நடைபெற்ற பயத்லான் பெண்களுக்கான 4x6 கிமீ ரிலேவில் மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம், ஹார்பின் ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பனிப் போட்டிகளில் சீனா தனது 19வது தங்கப் பதக்கத்தைப் பெற்றது, இது ஒரு குளிர்கால ஆசியப் போட்டியில் சீனக் குழுவிற்கு இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

பயத்லான் மகளிர் 4x6 கி.மீ ரிலேவில், சீன நால்வர் குழுவான டாங் ஜியாலின், வென் யிங், சூ யுவான்மெங் மற்றும் மெங் ஃபன்கி ஆகியோர் 1 மணி நேரம், 29 நிமிடங்கள் மற்றும் 6.3 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றனர். 26 வயதான மெங் அற்புதமான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தென் கொரியாவை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார், அதே நேரத்தில் கஜகஸ்தான் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

ஆண்களுக்கான 4x7.5 கி.மீ. தொடர் ஓட்டத்தில், ஜப்பான் 1 மணி நேரம், 24 நிமிடங்கள் மற்றும் 20.3 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றது. கஜகஸ்தான் 58.4 வினாடிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கத்தையும், சீனா 1:25:32.7 வினாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

மேலும் யாபுலியில், வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஸ்னோபோர்டு அரை-குழாய் இறுதிப் போட்டிகள் பலத்த காற்று காரணமாக இரத்து செய்யப்பட்டன, பல மறுசீரமைப்பு முயற்சிகளுக்குப் பிறகு, புதன்கிழமை தகுதிச் சுற்றின் முடிவுகள் இறுதிப் புள்ளிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஜப்பானின் சாரா ஷிமிசு மற்றும் தென் கொரியாவின் கிம் ஜியோன்-ஹுய் ஆகியோர் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்

 

   

ரைபகினாவின் முன்னாள் பயிற்சியாளர் வுகோவ் இடைநீக்கம்


 எலெனா ரைபாகினாயின்    முன்னாள் பயிற்சியாளர் ஸ்டெஃபனோ வுகோவ்   நடத்தை விதிகளை மீறியதாக WTA த நிர்வாகக் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, அவரைத் தடை செய்ய முடிவு செய்தது.

செவ்வாயன்று, WTA தனது விசாரணையை முடித்துவிட்டதாகக் கூறியது. , அவரது இடைநீக்கம் "அமலில் உள்ளது" என்றும் கூறியது. அவர் எவ்வளவு காலம் தடையில் இருப்பார் என்பதைக் குறிப்பிடவில்லை. தற்காலிக இடைநீக்கத்தின் கீழ் இருந்த குரோஷிய பயிற்சியாளர் வுகோவ் தான் தவறு செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

2022 விம்பிள்டன் சம்பியனான ரைபகினா, கடந்த மாதம் அவுஸ்திரேலிய ஓபனில், வுகோவ் அவர்கள் இணைந்து பணியாற்றிய ஆண்டுகளில் “என்னை ஒருபோதும் தவறாக நடத்தவில்லை என்றும், தற்காலிக இடைநீக்கத்துடன் தான் உடன்படவில்லை என்றும் கூறினார். 

Sunday, February 16, 2025

மார்ச் 22 இல் ஐபிஎல் ஆரம்பம்


 கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் மார்ச் 22 ஆம் திகதி ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை முதல் போட்டியில் விளையாட உள்ளன. மே 22 ஆம் திகதி இதே மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.

பிளேஆஃப்கள் மே 20 முதல் மே 25 வரை நடைபெறும். குவாலிஃபையர் 1 , எலிமினேட்டர் போட்டிகள் முறையே மே 20, 21 ஆகிய திக‌திகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். தகுதிச் சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தா நகரில் நடைபெறும்.

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இந்த சீசனில் 65 நாட்களில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெறும்.   

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி


 

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஓ.பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகியோரை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி சேர்க்க வேண்டும் என்ற குரலை எடப்பாடி அடக்கி ஒடுக்கிவிட்டார். எடப்பாடி சொல்வது தான்  பொதுச் சபையில் நிறவேறும் என்ற எழுதப்படாத விதியை அமுல் படுத்தியுள்ளார். எடப்பாடிக்கு  எதிரானவர்களும், பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இணைக்கப்பட வேண்டும் என நினைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பேசாமடைந்தைகளாக  இருக்கிறார்கள்.

  எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்துள. எடப்பாடி பழனிசாமியையே அரசியலுக்கு கொண்டு வந்த குருநாதர்தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. என பதவி வகித்தவர்; ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்; அவரது வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்; ஆனால் சசிகலா குடும்பம், அதிதீவிர உண்மையான விசுவாசி செங்கோட்டையனை இன்று வரை கைவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் கனத்த அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது திடீரென கலகக் குரல் எழுப்பி இருப்பது மிக சாதாரணமாக கடந்து போய்விடக் கூடியது அல்ல என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கருத்து.   அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகதில் போர்க்கொடி எழுப்பியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.  செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதுமே 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு  ஆதரவு தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்பாரதீய ஜனதா,பாட்டாளி  மக்கள் கட்சி, தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி,தமிழ்  மாநிலக் கட்சி ஆகியவைஒன்றிணைந்து  மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே டெல்லியின் கணக்காகும். 

டெல்லியின் கனவுக்கு எடப்பாடி முட்டிக்கட்டை போடுகிறார்.செங்கோட்டையனின் போர்க்கொடிகுப் பின்னால் சசிகலா  இருப்பதாகக் கருதப்படுகிறது. எடப்பாடிக்கு ஆதர்வானவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறை திடீர் தேடுதல் நடத்தியும் அவர் அசரவில்லை.அதனால்தான் செங்கோட்டையன் உசுப்பிவிடப்பட்டுள்ளார்.

  செங்கோட்டையன் விவகாரத்தை முன்வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன்.  ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு ஏறத்தாழ அரசியல் அத்தியாயத்தின் இறுதி கட்டத்தில் இருந்தவர்தான் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பெற்றது செங்கோட்டையன் அத்தியாயம். சசிகலா குடும்பத்தின் மீதான 'மாறாத' விசுவாசம்  இன்றும் தொடர்கிறது.

 சசிகலா சிறைக்குப் போகும் நிலையில் கூவத்தூரில் செங்கோட்டையனை முதல்வராக்க அவரது குடும்பம் தீவிரமாக முயன்றது.காலமும் நேரமும் எடப்பாடிக்கு ஆதர்வாக நின்றதால் அவர் முதலமைச்சரானார்.

 சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் தனது குருநாதரான செங்கோட்டையனை வேண்டா வெறுப்பாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி   எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிரியாகிவிட்டார்; ஆனால் செங்கோட்டையனோ சசிகலா குடும்பத்திடம் இருந்து இம்மியளவும் விலகாமல் இன்று வரை தொடர்பில்தான் இருந்து வருகிறார்.

கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவை மேற்கு மண்டல சீனியரான முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எங்களை வளர்த்து அடையாளம் காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்த இருவரது படமுமே எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. இதனை எப்படி எங்களால் ஏற்க முடியும்? என்றார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாரோ, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் அமைப்புதான் என மழுப்பலாக மட்டுமே பதிலளித்துள்ளார். செங்கோட்டையனின் போர்க்கொடுக்கு இதுதான் முக்கிய காரணம்.

   கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்தியபொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது  கழகத்தினுள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினால்  கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார்.

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அலுவலகத்தை, சென்னை ராயப்பேட்டையிலுள்ள   தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக பழனிசாமி திங்கள்கிழமை காலையில் திறந்து வைத்தார்.  மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர் யில், செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.  கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை, எடப்பாடி பழனிசாமி போடாததும், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அவரிடம் கலந்து பேசாததுமே அதிருப்திக்கு காரணமென்று தெரிகிறது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்கும் வேலையில் ஆறு  தலைவர்கள் ஈடுபட்டதாக செய்தி ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியை ஒன்றுபடுத்தாவிட்டால் வருங்காலத்தில் பெரிய தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். எனவே இந்த ஆறுபேர் மட்டுமின்றி, கட்சியின் பல்வேறு தலைவர்களும் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.  செங்கோட்டையன் தற்போது அளித்துள்ள விளக்கம் என்பது அதிருப்தியின் நீட்சி தான்.

எடப்பாடியின் தலைமையில் 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைததால் அடுத்த கட்டத்த் த‌லைவர்கள்  நொந்து போயுள்ளனர்.  செங்கோட்டியன் பூனைக்கு மணி கட்டியுள்ளார்.

 

ரமணி

16/2/25    


 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  இரண்டாவது ஒரு நாள்  போட்டியில் 174 ஓட்டங்களால்  வெற்றி பெற்ற இலங்கை  தொடரை  வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 281 ஓட்டங்கள் எடுத்தது. 282 வெற்றி இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா 24.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 107 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பதும் நிசங்க 6  ஓட்டங்களுடன் வெளியேறினார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த நிசான் மதுசங்க, குசல் மென்டிஸ் ஜோடி  ஆட்டத்தைக் கையில் எடுத்தது.நிசான் மதுசங்க 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தா, குசல்  மெண்டிஸுடன் இணந்த அசலங்க அதிரடியாக விளையாடினார்.   குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். குசல் மென்டிஸ் 101 ஓட்டங்கள் எடுத்தார். சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலியா 107  ஓட்டங்கள் எடுத்தது. ஸ்மித் அதிக பட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.வெல்லாலகே 4விக்கெற்களும், அசித பெர்னாண்டோ , வன் இந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெற்கலையும் எடுத்தனர். போட்டி நாயகன் விருது  குசல் மென்டிஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகனாக சரித் அசலங்கா தெரிவானார்.  

Friday, February 14, 2025

துடுப்பாட்டத்தில் ஸீரோ, கப்டன்ஷியில் ஹீரோ

 

 இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், கப்டனாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.  களத்தில் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் எதிர்பார்த்த முடிவுகளை கொடுத்தன. அதேநேரம், துடுப்பாட்டத்தில்  இந்த தொடர், சூர்யகுமார் யாதவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் முறையே, 0,12,14,0,2 என மிக செயற்பாட்டை  வெளிப்படுத்தினார்.   5 போட்டிகளில் சேர்த்து 28  ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ளார். இதனால், ஒரு பேட்ஸ்மேன் ஆக சூர்யகுமார் யாதவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

பேட்டிங்கில் சொதப்பினாலும், கப்டன்ஷியில் அசத்தியதால் சூர்யகுமார் யாதவ் மீதான விமர்சனங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில் தான், இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.. இதில் இந்திய அணியை கப்டன் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். கடந்த சில காலங்களாகவே மோசமான ஃபார்மில் உள்ள ரோகித், இந்த தொடர் மூலம் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உள்ளூரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ,அண்மையில் களமிறங்கிய ரஞ்சிபோட்டியில் கூட ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை. பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி, கப்டனாக கூட அணியை திறம்பட கையாளவில்லை என விமர்சனங்கள் குவிகின்றன.

நியூசிலாந்து ,அவுஸ்திரேலிய அணிகளுகு  எதிரான இந்தியாவின் தோல்விகளுக்கு, ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் மிக முக்கிய காரணமாகும். அவரது துடுப்பாட்டத்தை  இந்திய அணி எவ்வளவு சார்ந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

ச‌ம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது. இதன் மூலம் வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். பேட்டிங்கில் சொதப்பினாலும், சூர்யகுமார் யாதவை போன்று கப்டன்ஷியில்  அணிக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை தவறினால், இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடும், கடைசி ஐசிசி தொடராகவும் சம்பியன்ஸ் ட்ராபி இருக்கலாம்.     

6000 ஓட்டங்கள் 600 விக்கெட்கள் ரவீந்திர ஜடேஜா சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 முதலில் விளையாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 248  ஓட்டங்கள் எடுத்தது. க‌ப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இந்தியாவுக்கு   ரவீந்திர ஜடேஜா ,அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா  ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

 249 ஓட்டங்களைத் துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் 2, ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் அ வெளியேறினர்.  சுப்மன் கில் 87, ஸ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ஓட்டங்கள் எடுத்ததால்  38.4 ஓவர்களில் 6விக்கெற்களை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்து   எளிதாக வெற்றி பெற்றது.

  9 ஓவர்களில்  ஒரு மெய்டன் உட்பட வெறும் 26 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா 12* ஓட்டங்களும் அடித்து  அசத்தினார். இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 42* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அ  இந்தியா – இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

  ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.  ஆண்ட்ரூ பிளின்டாப் 37, ஹர்பஜன் சிங் 36, ஜவஹல் ஸ்ரீநாத்/ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 35 விக்கெட்டுகள் எடுத்தனர்.

  3 விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜா மொத்தம் 600* விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.  அவர்   6000 ஓட்டங்கள் குவித்துள்ளார்.   சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்கள் , 600 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக கபில் தேவுக்கு பின் அந்த சாதனையை படைக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

  1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.  இந்த வெற்றிக்கு 87 ஓட்டங்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2023 ஒருநாள் உலகக் கிண்ண றுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் தங்கள் முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது

கடந்த ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 

சிலம்பு

9/2/25

  

Tuesday, February 11, 2025

இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது அமெரிக்கா


 அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தப் போவதாக ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் பரப்புரை செய்தார். ட்ரம்ப் பதவி ஏற்ரு ஒரு மாதம் முடிவதர்கிடையில் தேர்தல் பிரராச வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். குவாத்தமாலா, ஈக்வடார்  கொலம்பியா நாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 அமெரிக்காவில் தங்கி இருக்கும் ஏழு  இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை   வெளியேற்ற  அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள்  இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து  புறப்பட்ட அமெரிக்க இராணுவ  விமானங்கள்பஞ்சாப் அமிர்தசரஸில் தரை இறங்கின.

அமெரிகாவில் வசதியாக வாழலாம் எனச் சென்றவர்கள் விலங்குகள்  போல் அனுப்பபட்டுள்ளனர்.   கைதிகளைப் போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால்  அந்தப் படங்களில் இருப்பவர்கள் இந்தியர் அல்ல என சில முன்னணிப் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில் எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

104 இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்கா நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்த  நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரே வெளியிட்டுள்ளார். அத்தோடு இந்தியர்களை Illegal Aliens என்றும் கேவலமாக சித்தரித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை  அமெரிக்க  ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான்.  குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.

இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை  அமெரிக்க  ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான்.  குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.

ட்ரம்ப் அதிபராக வந்தது முதல் பல்வேறு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரை தற்போது வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்தியர்களும் கூட இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். 

அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் மூலமாக, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது.

சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் வசிப்பதாக கூறி 4 வயது குழந்தை உட்பட 104 பேரை கைவிலங்கு (handcuffs) போட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

 "அமெரிக்க சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை. வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை திரும்ப பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். நாடு கடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 அந்த சி 17 ராணுவ விமானத்தில் வந்த ஒருவர், கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததகாவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.   அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து இருந்தன. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டு மத்திய அரசு தரப்பில் மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விமானத்தில் வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். 36 வயதான ஜஸ்பால் சிங் கூறியதாவது:- கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாக கூறியிருக்கிறார். மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததாகவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்பால் சிங், அமெரிக்கா எல்லையை கடந்த 24 ஆம் திக‌தி தாண்ட முயற்சிக்கும் போது அந்நாடு எல்லை பாதுகாப்பு ரோந்து படையினரால் பிடிக்கப்பட்டாராம். டிராவல் ஏஜெண்ட் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு கை விலங்குகளுடன் விமானத்தில் ஏற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டது குறித்து மத்திய பாஜக அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்வி. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வ்ருகின்றனர். 

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசு கனத்த மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

ரமணி

16.2.25

இடம் பெயர்ந்த காஸா மக்களுக்கு சவால்விடும் குளிர்காலப் புயல்

 காஸா பகுதியில் ஒரு பேரழிவு தரும் குளிர்காலப் புயல் வீசி வருகிறது, இதனால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் பலவீனமான கூடாரங்கள், புயல், குளிர் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவை.  காஸா மக்களுக்கு, புயல் என்பது வெறும் இயற்கையின் செயல் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையைப் பிளந்த பேரழிவுகளின் வரிசையில் ஒரு கூடுதல் சோகம்.

பராக்காவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஓம் அகமது அல்-ரம்லி, புயல் தனது கூடாரத்தை நாசமாக்கிய பிறகு, தனது உடைமைகளைக் காப்பாற்ற தீவிரமாகப் போராடினார்.

 பாலஸ்தீன அரசியல்வாதிகள்  காஸாவை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி சண்டையிடுகிறார்கள், ஆனால் இந்தப் போருக்கான இறுதி விலையை செலுத்துவது மக்கள்தான்.நிலம் அடர்ந்த சேற்றின் சேற்றாக மாறுவதால் நிலைமை மோசமடைகிறது, இடம்பெயர்ந்தவர்களை சிக்க வைத்து, தப்பிக்கவோ அல்லது உதவி பெறவோ தடையாகிறது.

இடைவிடாத மழையும், பலத்த காற்றும் முகாம்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன, மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு புகலிடம் இல்லை.எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை சூடாக வைத்திருக்க எந்த வழியையும் இழக்கச் செய்துள்ளது. ஈரப்பதமான மற்றும் குளிரான சூழ்நிலையில் வாழ்வதால், மக்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது.

வடக்கு  காஸாவில், நிலைமை அதே அளவுக்கு மோசமாக உள்ளது. ஜனவரியில் ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்திரத்தன்மையின் சாயல் கிடைக்கும் என்று நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள், இடிபாடுகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை.

வீதிகள், வீடுகள் ,உள்கட்டமைப்புகள் என்பன  அழிக்கப்பட்டுள்ளன, மேலும் உயிர்வாழ்வது அன்றாடப் போராட்டமாகிவிட்டது.

தாங்க முடியாத இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மனிதாபிமான அமைப்புகளுக்கு அவசர துயர அழைப்புகளை அனுப்பி, இன்னும் உறுதியான கூடாரங்கள், வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் சிறிதளவு நிவாரணத்தை வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகள் இந்த அழைப்புகளை எதிரொலித்து, காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளன.சுகாதார சேவைகள் பற்றாக்குறையின் மத்தியில் குளிர் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகளை அவை எடுத்துக்காட்டுகின்றன.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்படி,  காஸாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோதலால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் அடைக்கலம் தேடும் முகாம்களில் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் எதுவும் இல்லை. சுத்தமான தண்ணீர், வெப்பமூட்டும் உபகரணங்கள் , அத்தியாவசிய மருந்துகள் என்பன  பற்றாக்குறையாக உள்ளன.

 ஊர்மிளா

Tuesday, February 4, 2025

அபிஷேக் சர்மாவின் அதிரடி சாதனைகள்

 37 பந்துகளில்  100.. 13 சிக்ஸ்.. வாட்சன், டீ காக், ரோஹித்தை முந்திய அபிஷேக்.35 பந்துகளுக்கள் சதம் அடித்திருந்தால் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருப்பார்.

இங்கிலாந்துக்கு நடைபெற்ற ரி20 கிரிக்கெறிக்கெற் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது.  மும்பையில்  நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 248 ஓட்டங்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி களம்  இற்ங்கிய இங்கிலாந்தை 10.3 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 97 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது  இந்தியா 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 135 ஓட்டங்கள் 2 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.

 சர்வதேச ரி20 கிறிக்கெற்றில் அதிகபட்ச ஓட்டங்கள்  (135) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 126 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை.  சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதத்தை அடித்து குறைந்தது ஒரு விக்கெற்  எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரே ரி20 போட்டியில் சதத்தையும் விக்கெட்டும் எடுத்ததில்லை.

இப்போட்டியில் 13 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் நனைத்த அபிஷேக் சர்மா சர்வதேச ரி20 கிறிக்கெற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர்தலா 10 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இந்தப் போட்டியில் முதல் 6 ஓவர்களில் மட்டும் அபிஷேக் 58 ஓட்டங்கள் அடித்தார்.   சர்வதேச ரி20 போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச  ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 53 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இந்தப் போட்டியில் 10.1 ஓவர்கலில்  சதத்தை தொட்டார்.   சர்வதேச ரி20 போட்டியில் குறைந்த ஓவரில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இடதுகை வீரரான அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய அணிக்காக ரி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார்.

ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.  அவுஸ்திரேலிய வீரர் ஆரன் ஃபின்ச், கிறிஸ் கெயில் ஆகியோர் தலா 47 பந்துகளில் சதம் அடித்த பட்டியலில் அபிஷேக் இடம்பெற்றார்.

ரி20- போட்டிகளில் முதல் பவர் ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தது.

95/1 vs இங்கிலாந்து - மும்பை /2025

82/2 vs ஸ்காட்லாந்து / துபாய் - 2021

82/1 vs வங்காள தேசம் / ஹைதராபாத் - 2024

78/2 vs தென் ஆப்பிரிக்கா / ஜோஹன்ஸ்பர்க் - 2018

Sunday, February 2, 2025

கிறிக்கெற் வரலாற்றில் இங்கிலாந்து மோசமான தோல்வி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது ரி20 கிரிக்கெட் போட்டியில், 150ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்ற இந்திய அணி, ரி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது அசத்தியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5-வது மற்றும் இறுதி ரி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்  நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெற் இழப்புக்கு 247  ஓட்டச்ங்கள் எடுத்தது.10.3 ஓவர்களில் சகல விக்கெற்களையுமிழந்த இங்கிலாந்து 97 ஓட்டங்கள் எடுத்து 250 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சம்ஸன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினர்.  7 பந்துகளில் 16 ஓட்டங்கள் அடித்த   சஞ்சு ச‌ம்ஸன் ஆட்டமிழக்க திலக் வர்மா களமிறங்கினார்.

  அபிஷேக் ஷர்மா, 17 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும்  அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.  அணித்தலைவர் சூர்யகுமார் இரண்டு ஓட்டங்களில் வெளியேறினார்.  அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் அடித்தார்.ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்ததே இந்தியாவின்  சதனையாகும்.

  சூர்யகுமார்  வெளியேற களமிறங்கியிருந்த ஷிவம் துபே தனது  பங்கிற்கு   பின்னி எடுத்து, 13 பந்துகளில் 30 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா  ரிங்கு சிங்  ஆகிய  இருவரும் தலா  9 ஓட்டங்களுடன் நடையை கட்டினர். அதிரடி காட்டிக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா, 54 பந்துகளில், 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 135 ஓட்டங்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்தார்.அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிந்தனர். இறுதியில், 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில்,  ப்ரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 248 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்தியப் பந்து வீச்சாள‌ர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. ஒரு முனையில் சால்ட் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்  அடுத்தடுத்து வெளியேறினர். 23 பந்துகளில் 55  ஓட்டங்கள் எடுத்திருந்த சால்ட் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய தரப்பில்,  முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் தூபே , அபிஷேக் ஷர்மா ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக, துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் அசத்திய அபிஷேக் ஷர்மா தேர்வானார்.தொடர் நாயகனாக, பந்து வீச்சில் கலக்கிய  வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.இந்த இமாலய வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை, 4 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

டெஸ்ட்கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டி அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் புது சாதனை படைத்துள்ளார்.

கிறிக்கெற் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஒரே ஒரு ஓட்டத்தால்   அந்த சாதனையைத் தவறவிட்டார்.ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஓட்டம் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார். க‌ப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்ளை எட்டிய 15வது வீரர் ஸ்மித் ஆவார். அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம்  ஓட்டங்களை எட்டிய 4வது வீரர் ஸ்மித் ஆவார். இதற்கு முன்பு அலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங்  ஆகியோர்மட்டுமே இந்த சாதனையை எட்டியிருந்தனர்.

35 வயதான ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிராக 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 4 இரட்டை சதங்கள், 34 சதங்கள், 42 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 68 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 205 இன்னிங்ஸ்களில்  விளையாடிய‌ ஸ்மித்தின் அதிகபட்சமாக்  239 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சராசரி 56.25 வைத்துள்ளார். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பின்னர் ஒரு வருட   தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் சிறப்பாக ஆடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஸ்மித்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்மித் 165 ஒருநாள் போட்டியில் ஆடி 12 சதங்களும், 34 அரைசதங்களும் விளாசி 5 ஆயிரத்து 662 ரன்கள் எடுத்துள்ளார். 67 டி20 போட்டிகளில் ஆடி 1094 ரன்களும், 103 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 485 ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களுடன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரிேல யூனிஸ் கான், கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை முறியடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

எகிறிய எடப்பாடி அடங்கிய அண்ணாமலை


  அண்ணா திராவிட முன்னேற்றக்  கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே  இருந்த பிரச்சனைகள் வெடித்துக் கிளம்பி உள்ளது. தேனும் பாலும் ஓட தேன் நிலவு கொண்டாடிய எடப்பாடிக்கும் , மோடிக்கும் இடையே புகுந்த அண்ணாமலையால் எடப்பாடி தனிக்குடித்தனம் போய்விட்டார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்த அண்னாமலை சந்தர்ப்பம் கிடைக்கும்  போதெல்லாம் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விட்டு வைக்கவில்லை.  தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்  இருக்கையில் பாரதீய ஜனதாக் கட்சிதான் தமிழகத்தின் எதிர்க் கட்சி என அண்ணாமலை அறித்தார். இதனால் எடப்பாடி கொதிப்படைந்து  பாரதீய ஜனதாக் கட்சியுடனான தொடர்பைத் துண்டித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வரும் என  இலவு காத்த கிளியாகக் காத்திருந்த  பாரதீய ஜனதாக் கட்சி ஏமாற்றமடைந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்களை கட்டம் கட்டும் நடவடிக்கையை எடப்பாடி எடுத்துள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் கோவை வேலுச்சாமி, மைத்ரேயன், முல்லைவேந்தன், சின்னச்சாமி ஆகியோரை அதிரடியாக நியமித்தார் எடப்பாடி. இந்த நியமனம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. கோவையில் கோலோச்சும் நிர்வாகி ஒருவர்  முடக்கும் விதமாகவே கோவை வேலுச்சாமியை கட்சியின் மாநில பொறுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் விஅரம் அறிந்தவர்கள்.  கோவையில் கோலோச்சும் நிர்வாகிக்கு எதிரானவர்கள் இந்த விவாதத்தை பேசு பொருளாக்கி வருகின்றனர்.

கோவையின் நிர்வாகி பாரதீய ஜனதாவின்  மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். பாரதீய ஜனதாவின் நிகழ்ச்சி நிரலை அவர் நிறைவேற்றி   எடப்பாடிக்கு குடைச்சல்  கொடுக்கிறார்.  அவர் இல்லாமல் கோவையி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலை நிமிர முடியாது என அவர் ஒரு மாயையை  உருவாக்கி உள்ளார்.  அவரின் நடவடிக்கைகளால் எடப்பாடி பல  பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்.  அவ்வப்போது சமாதானங்கள் நடந்தாலும், உள்ளுக்குள் எடப்பாடிக்கு எதிராக கட்சிக்குள் அந்த கோவை புள்ளி செயல்படுவதாக எடப்பாடி திடமாக நினைக்கிறார்.   அந்த கோவை புள்ளிக்கு எதிராக இன்னும் சில சீக்ரெட் தகவல்கள் எடப்பாடி யிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அந்த கோவை புள்ளியை மட்டுமே நம்பி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது கோவையில் முழு வெற்றியை பெற முடியாது என நினைக்கிறார். அதனால்தான், அந்த கோவை புள்ளிக்கு இணையாக கோவையில் செல்வாக்கு வைத்திருக்கும் வேலுச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

 வேலுச்சாமியை நியமிக்கும் விவகாரம் இத்தகைய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,   அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்க‌ அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் மூன்று பேர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது, அண்ணா திராவிட் முன்னேற்றக் கழகத்தின் ஏனைய  சமூகத் தலைவர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருவதாகவும் கருதப் படுகிறது.

 பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செயப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல்,  நாடாளுமன்றத்  தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பொதுக்குழு கூடியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி இருந்து வெளியேறிய   தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று மூத்த  தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம்.

  முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம்.   இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அன்று முதல் பல அதிரடி முடிவுகளை எடுத்தார். கண்டதையும் பேசி தன்னுடைய இருப்பை காட்டிக்கொண்ட அண்ணாமலையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  கடுமையாக எதிர்த்தார்கள்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வளர்ந்துவிட்டது. தாமரை மலரப் போகிறது என அண்ணாமலை சொன்னதை டெல்லி மேலிடம் முற்று முழுதாக நம்பியது.தேர்தலின் படு தோல்வி உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இனிமேலும் விட்டு வைத்தால் கட்சி தமிழகத்தில் வளராது என எண்ணிய அமித்ஷா, அண்ணாமலையை மாற்ற முடிவு செய்துள்ளார்.

இதனால் தமிழக பாரதீயச் ஜனதாவின்  மூத்த தலைவர்கள் குஷியாகி தலைவர் கனவில் மிதந்தனர்.    வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் என மூத்த தலைவர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி போட்டனர்.

இதையெல்லாம் கண்காணித்த அண்ணாமலை  சாட்டையடி சம்பவத்தை அரங்கேற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை  காலில்  செருப்பை அணியமாட்டேன் எனவும் கூறி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ஆனால் டெல்லி மேலிடம் மட்டும் அவர் பக்கம் திரும்பவே இல்லை.  சண்டைக்காரன் பக்கம் செல்வோம் என எடப்பாடி காலில் விழுந்தார் அண்ணாமலை.

எடப்பாடியின் மகன் மிதுனை சந்தித்து அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்று கூடுவோம் என அவரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு  மிதுன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 சமீபத்தில் எடப்பாடிக்கு சொந்தமான நெருங்கிய வட்டாரத்தில் வருமானவரி சோதனை நடந்துள்ளது. இதை உடனடியாக நிறுத்தி விடலாம் என்றும் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக மிதுனை அழைத்துக்கொண்டு டெல்லி பறந்த அண்ணாமலை அமித்ஷாவிடமும் பேசியுள்ளார்.ஆனால் ஒரு மூன்று மாதம் மிதுன்  அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஏனென்றால் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் அண்ணா திராவிடக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  பாஜக கூட்டணி மலர இப்பதாக மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்  தலைவர்களை பற்றி இனி பேசமாட்டேன் என அண்ணாமலை சரணாகதி அடைந்துள்ளதால் எடப்பாடியும் சற்று குளிர்ந்துள்ளார்.

ரமணி

2/2/25