அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தப் போவதாக ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் பரப்புரை செய்தார். ட்ரம்ப் பதவி ஏற்ரு ஒரு மாதம் முடிவதர்கிடையில் தேர்தல் பிரராச வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். குவாத்தமாலா, ஈக்வடார் கொலம்பியா நாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவில் தங்கி இருக்கும் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்ற
அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல்
தொகுப்பு நபர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சான்
அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து புறப்பட்ட
அமெரிக்க இராணுவ விமானங்கள்பஞ்சாப் அமிர்தசரஸில்
தரை இறங்கின.
அமெரிகாவில்
வசதியாக வாழலாம் எனச் சென்றவர்கள் விலங்குகள்
போல் அனுப்பபட்டுள்ளனர். கைதிகளைப்
போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில்
முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்
பரவியது. ஆனால் அந்தப் படங்களில் இருப்பவர்கள்
இந்தியர் அல்ல என சில முன்னணிப் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன.
ஹிந்துஸ்தான்
டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை
உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில்
எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.
104
இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக
எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும்
இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
சட்டவிரோதமாக
குடியேறியதாக கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு மிக மோசமாக
அமெரிக்கா நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரே வெளியிட்டுள்ளார்.
அத்தோடு இந்தியர்களை Illegal Aliens என்றும் கேவலமாக சித்தரித்துள்ளார்.
இந்த
நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற
அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான். குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.
இந்த
நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற
அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பின்னணி
இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது
கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ
கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள
எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதுவரை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான். குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும்
அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள்
என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.
ட்ரம்ப்
அதிபராக வந்தது முதல் பல்வேறு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய
பிற நாட்டவரை தற்போது வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்தியர்களும் கூட
இதில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க
அதிகாரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் மூலமாக, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக
நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது.
சட்ட
விரோதமாக தங்கள் நாட்டில் வசிப்பதாக கூறி 4 வயது குழந்தை உட்பட 104 பேரை கைவிலங்கு
(handcuffs) போட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த விவகாரம் குறித்து
நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
"அமெரிக்க சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை. வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை திரும்ப பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். நாடு கடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
அந்த சி 17 ராணுவ விமானத்தில் வந்த ஒருவர், கைகளுக்கு
விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாகவும்
கூறியிருக்கிறார். மேலும் மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததகாவும் அமிர்தசரஸ்
வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்
கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து இருந்தன. இது தொடர்பான புகைப்படமும்
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டு மத்திய அரசு தரப்பில்
மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விமானத்தில்
வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
36 வயதான ஜஸ்பால் சிங் கூறியதாவது:- கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில்
செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாக கூறியிருக்கிறார். மொத்த பயணத்திலும் இப்படியே
அழைத்து வந்ததாகவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்பால் சிங், அமெரிக்கா எல்லையை கடந்த
24 ஆம் திகதி தாண்ட முயற்சிக்கும் போது அந்நாடு எல்லை பாதுகாப்பு ரோந்து படையினரால்
பிடிக்கப்பட்டாராம். டிராவல் ஏஜெண்ட் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவில்
இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை
அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு கை விலங்குகளுடன் விமானத்தில் ஏற்றப்பட்டு
நாடு கடத்தப்பட்டது குறித்து மத்திய பாஜக அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சி
எம்பிக்களின் கேள்வி. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர்
பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக
குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வ்ருகின்றனர்.
அமெரிக்காவில்
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக மத்திய
அரசு கனத்த மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கேள்வி எழுப்பி
வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது
என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
ரமணி
16.2.25
No comments:
Post a Comment