இங்கிலாந்து
அணிக்கு எதிரான 5-வது ரி20 கிரிக்கெட் போட்டியில், 150ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய
வெற்றியை பெற்ற இந்திய அணி, ரி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது அசத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து
அணிகளுக்கிடையே 5-வது மற்றும் இறுதி ரி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற
இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில்
துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெற் இழப்புக்கு 247 ஓட்டச்ங்கள் எடுத்தது.10.3 ஓவர்களில் சகல விக்கெற்களையுமிழந்த
இங்கிலாந்து 97 ஓட்டங்கள் எடுத்து 250 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்திய
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சம்ஸன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினர். 7 பந்துகளில் 16 ஓட்டங்கள் அடித்த சஞ்சு சம்ஸன் ஆட்டமிழக்க திலக் வர்மா களமிறங்கினார்.
அபிஷேக் ஷர்மா, 17 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி
செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும்
அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் சூர்யகுமார் இரண்டு ஓட்டங்களில் வெளியேறினார். அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் அடித்தார்.ரோஹித்
சர்மா 35 பந்துகளில் சதம் அடித்ததே இந்தியாவின்
சதனையாகும்.
சூர்யகுமார்
வெளியேற களமிறங்கியிருந்த ஷிவம் துபே தனது
பங்கிற்கு பின்னி எடுத்து, 13 பந்துகளில்
30 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா ரிங்கு சிங்
ஆகிய இருவரும் தலா 9 ஓட்டங்களுடன் நடையை கட்டினர். அதிரடி காட்டிக்கொண்டிருந்த
அபிஷேக் ஷர்மா, 54 பந்துகளில், 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 135 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டமிழந்தார்.அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிந்தனர். இறுதியில், 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில், ப்ரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
248 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து
அணிக்கு இந்தியப் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.தொடக்க வீரர்கள் அதிரடி
காட்டினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. ஒரு முனையில்
சால்ட் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். 23 பந்துகளில்
55 ஓட்டங்கள் எடுத்திருந்த சால்ட் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி,
10.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய தரப்பில், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் தூபே , அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக, துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் அசத்திய அபிஷேக் ஷர்மா தேர்வானார்.தொடர் நாயகனாக, பந்து வீச்சில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.இந்த இமாலய வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை, 4 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
No comments:
Post a Comment