அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 174 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை தொடரை வென்றது.
நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 281 ஓட்டங்கள்
எடுத்தது. 282 வெற்றி இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா 24.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும்
இழந்து 107 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத்
துடுப்பாட்ட வீரரான பதும் நிசங்க 6 ஓட்டங்களுடன்
வெளியேறினார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த நிசான் மதுசங்க, குசல் மென்டிஸ் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தது.நிசான் மதுசங்க 51 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தா, குசல் மெண்டிஸுடன் இணந்த அசலங்க
அதிரடியாக விளையாடினார். குசல் மெண்டிஸ் சர்வதேச
ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். குசல் மென்டிஸ் 101 ஓட்டங்கள்
எடுத்தார். சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியா 107 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்மித் அதிக பட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.வெல்லாலகே 4விக்கெற்களும், அசித பெர்னாண்டோ , வன் இந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெற்கலையும் எடுத்தனர். போட்டி நாயகன் விருது குசல் மென்டிஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகனாக சரித் அசலங்கா தெரிவானார்.
No comments:
Post a Comment