சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 320 ஓட்டங்கள் எடுத்தது.47.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் 270 ஓட்டங்கள் எடுத்தது.
நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
பகிஸ்தானின் பந்து வீச்சு முக்கியமானவர்களை வெளியேறியது. டெவோன் கான்வே 10 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் ஒரு ஓட்டத்துடனும் வெளியேறினர்.அதிரடி ஆட்டக்காரர் டரில் மிட்செல், 10 ஓட்டங்ள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார். வில் யங்கும் டாம் லாத்தமும், பொறுமையாக ஆடி விளையாடினர். ஒரு கட்டத்தில், அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினர்.
சதம் அடித்து அசத்திய வில் யங் 107 ரஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கிளேன் பிலிப்ஸ் உடன் இணைந்து பவுண்டரி மழை பொழிந்தார் டாம் லாத்தம். அதிரடியாக ஆடிய கிளேன் பிலிப்ஸ் 61 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் எடுத்தது.சிறப்பாக விளையாடிய விளையாடிய டாம் லாதம் ஆட்டமிழக்காது 118* ஓட்டங்கள் எடுத்தார்.
321 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி விரர்கள் ஏமாற்றினர்.
தொடக்க வீரர் சவுத் ஷகீல் 6, கப்டன் முகமது ரிஸ்வான் 3 , பகர் சமான் 24 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். இருப்பினும், பாபர் அசாம், சல்மான அலி அகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர்.
42 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, சல்மான தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அரை சதம் அடித்த பாபர் அசாம் 64 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். குஷ்டில் ஷா, அதிரடியாக ஆடி 69 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
பாகிஸ்தான் 47.2 ஓவர்களிலனைத்து விக்கெற்களையுமிழந்து 260 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லதாம் வென்றார்.
No comments:
Post a Comment