Friday, February 14, 2025

6000 ஓட்டங்கள் 600 விக்கெட்கள் ரவீந்திர ஜடேஜா சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 முதலில் விளையாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 248  ஓட்டங்கள் எடுத்தது. க‌ப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இந்தியாவுக்கு   ரவீந்திர ஜடேஜா ,அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா  ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

 249 ஓட்டங்களைத் துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் 2, ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் அ வெளியேறினர்.  சுப்மன் கில் 87, ஸ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ஓட்டங்கள் எடுத்ததால்  38.4 ஓவர்களில் 6விக்கெற்களை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்து   எளிதாக வெற்றி பெற்றது.

  9 ஓவர்களில்  ஒரு மெய்டன் உட்பட வெறும் 26 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா 12* ஓட்டங்களும் அடித்து  அசத்தினார். இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 42* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அ  இந்தியா – இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

  ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.  ஆண்ட்ரூ பிளின்டாப் 37, ஹர்பஜன் சிங் 36, ஜவஹல் ஸ்ரீநாத்/ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 35 விக்கெட்டுகள் எடுத்தனர்.

  3 விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜா மொத்தம் 600* விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.  அவர்   6000 ஓட்டங்கள் குவித்துள்ளார்.   சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்கள் , 600 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக கபில் தேவுக்கு பின் அந்த சாதனையை படைக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

  1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.  இந்த வெற்றிக்கு 87 ஓட்டங்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2023 ஒருநாள் உலகக் கிண்ண றுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் தங்கள் முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது

கடந்த ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 

சிலம்பு

9/2/25

  

No comments: