37 பந்துகளில் 100.. 13 சிக்ஸ்.. வாட்சன், டீ காக், ரோஹித்தை முந்திய அபிஷேக்.35 பந்துகளுக்கள் சதம் அடித்திருந்தால் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருப்பார்.
இங்கிலாந்துக்கு
நடைபெற்ற ரி20 கிரிக்கெறிக்கெற் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. மும்பையில்
நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 248 ஓட்டங்கள் எடுத்தது.
இமாலய இலக்கை நோக்கி களம் இற்ங்கிய இங்கிலாந்தை
10.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து
97 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது இந்தியா
150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 135
ஓட்டங்கள் 2 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.
சர்வதேச ரி20 கிறிக்கெற்றில் அதிகபட்ச ஓட்டங்கள் (135) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 126 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை. சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதத்தை அடித்து குறைந்தது ஒரு விக்கெற் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரே ரி20 போட்டியில் சதத்தையும் விக்கெட்டும் எடுத்ததில்லை.
இப்போட்டியில்
13 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் நனைத்த அபிஷேக் சர்மா சர்வதேச
ரி20 கிறிக்கெற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று
சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா
ஆகியோர்தலா 10 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இந்தப்
போட்டியில் முதல் 6 ஓவர்களில் மட்டும் அபிஷேக் 58 ஓட்டங்கள் அடித்தார். சர்வதேச ரி20 போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர்
படைத்துள்ளார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்
ஜெய்ஸ்வால் 53 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இந்தப்
போட்டியில் 10.1 ஓவர்கலில் சதத்தை தொட்டார். சர்வதேச ரி20 போட்டியில் குறைந்த ஓவரில் சதத்தை
அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இடதுகை
வீரரான அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய
அணிக்காக ரி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை
அபிஷேக் சர்மா படைத்தார்.
ரி-20
போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர்
என்ற பெருமையை பெற்றார். அவுஸ்திரேலிய வீரர்
ஆரன் ஃபின்ச், கிறிஸ் கெயில் ஆகியோர் தலா 47 பந்துகளில் சதம் அடித்த பட்டியலில் அபிஷேக்
இடம்பெற்றார்.
ரி20-
போட்டிகளில் முதல் பவர் ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்களை
எடுத்து சாதனை படைத்தது.
95/1
vs இங்கிலாந்து - மும்பை /2025
82/2
vs ஸ்காட்லாந்து / துபாய் - 2021
82/1
vs வங்காள தேசம் / ஹைதராபாத் - 2024
78/2 vs தென் ஆப்பிரிக்கா / ஜோஹன்ஸ்பர்க் - 2018
No comments:
Post a Comment