கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் மார்ச் 22 ஆம் திகதி ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை முதல் போட்டியில் விளையாட உள்ளன. மே 22 ஆம் திகதி இதே மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.
பிளேஆஃப்கள்
மே 20 முதல் மே 25 வரை நடைபெறும். குவாலிஃபையர் 1 , எலிமினேட்டர் போட்டிகள் முறையே
மே 20, 21 ஆகிய திகதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்
நடைபெறும். தகுதிச் சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தா நகரில் நடைபெறும்.
மொத்தம் 70 போட்டிகள் கொண்ட லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இந்த சீசனில் 65 நாட்களில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெறும்.
No comments:
Post a Comment