Monday, March 17, 2025

16 மில்லியன் லைக்குகளை அள்ளிய புகைப்படம்

சம்பியன்ஸ் கிண்ணத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.  இந்திய அணியின் இந்த வெற்றி இந்திய ரசிகர் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மைதானத்தில் பெரிய அளவில் மகிழ்ந்து கொண்டாடினர்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அவரது ஸ்டைலில் இந்த கோப்பையை கொண்டாடினார்.   பிட்ச்சின் மத்தியில் கோப்பையை வைத்து இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல அவர் ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார். கடந்த ஆண்டு ரி20 உலக கிண்ணத்தை  வென்ற போதும் இதே போன்ற தனித்துவமான போஸ் கொடுத்திருந்தார்.

அதே மாதிரி இம்முறையும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.   அவர் பதிவிட்டிருந்த   புகைப்படம் தான் தற்போது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.  அவர் பதிவிட்ட அந்த புகைப்படமானது வெறும் 6 நிமிடங்களில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று அதிவேகமாக ஒரு லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற சாதனையை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது.

  அந்ப் புகைப்படமானது தற்போது வரை 16 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அவர் ஒருவேளை ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்த கப்டனுக்கான ரேஸிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments: