Monday, March 3, 2025

இந்தியச் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து

துபாயில் நடந்த ச‌ம்பியன்ஸ்  கிண்ண லீக்  போட்டியில் நியூசிலாந்தை  எதிர்கொண்ட இந்தியா 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

  இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக  வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார்.  நான்கு 'ஸ்பின்னர்களுடன் இந்தியா களம் புகுந்தது.   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு  செய்தது.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து  249 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது.

  இந்திய அணி  ஆரம்பத்தில் திக்குமுக்கடியது.  மாட் ஹென்றி 'வேகத்தில்'  2  ஓட்டங்கள் எடுத்த சுப்மன் கில்   எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார். ஆனார். ஜேமிசன் பந்தில் கப்டன் ரோஹித் சர்மா 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். 11 ஓட்டங்கள் எடுத்த் கொலியும் பவிலியன் திரும்ப‌ கோலியும் (11) விரைவில் வெளியேற,  7 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த இந்தியா 30 ஓட்டங்கள் எடுத்தது.

 ஸ்ரேயாஸ், அக்சர் படேல் ஜோடி  நான்காவது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தது. 42 ஓட்டங்களுடன் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.  ஓட்ட எண்ணீக்கையை உயர்த்துவதற்காக அதிரடியாக விளையாடிய  ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார் நம்பிக்கையுடன்  நின்ற ராகுல் 23 ஓட்டங்களில் வெளியேறினார். 

 கடைசிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் இறங்கினார்.    ஜடேஜா, 16  பாண்ட்யா 45,   ஷமியை  5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது.ஹென்றி 5 விக்கெற்களை வீழ்த்தினார்.

250 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெறும்  கனவில்  களம் இறங்கிய நியூஸிலாந்து இந்தியாவின் சுழலில் சிக்கி தோல்வியடைந்தது. ரவிந்திரா 6,  ' வில் யங் 22 ,டேரில் மிட்சல் 17  ஓட்டங்களில் வெளியேறினர். 26 ஓவர்களில் 3 விக்கெற்களி இழந்த நியூஸிலாந்து 104 ஓட்டங்கள்  அடித்தது.

  வில்லியம்சன், லதாம் ஆகிய இருவரும்  சிறிது நேரம் போராடினர்.  வில்லியம்சன், 77 பந்துகளில்  ஒருநாள் அரங்கில் 47வது அரைசதத்தை  எட்டினார். லதாம் 14,   கிளன் பிலிப்ஸ் 12, பிரேஸ்வெல் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.  அக்சர் படேல் பந்தில் வில்லியம்சன்   81 ஓட்டங்களுடன் வெளியேற இந்தியாவின் வெற்றி உறுதியானது.  ஹென்றியை 2 ஓட்டங்களில் வெளியேற்றிய  வெளியேற்றிய வருண், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது

  ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 13வது முறையாக 'டாஸ்' வெல்ல தவறியது. ரோகித் தலைமையில் மட்டும் 10 முறை (2023 நவ.- 2025, மார்ச்) 'டாஸ்' வெல்லவில்லை. அதிக முறை 'டாஸ்' வெல்ல தவறிய கேப்டன் பட்டியலில் ரோகித் (10) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் லாரா (12, 1998 அக்.-1999 மே), நெதர்லாந்தின் பீட்டர் போரன் (11, 2011 மார்ச்-2013 ஆக.) உள்ளனர்.

'சூப்பர்மேன்' பிலிப்ஸ்

தனது 300வது ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கிய கோலி, மாட் ஹென்றி வீசிய பந்தை (6.4வது ஓவர்) அடித்தார். இதை 'பேக்வார்ட் பாய்ன்ட்' திசையில் நின்ற கிளன் பிலிப்ஸ் அந்தரத்தில் பறந்து, வலது கையை நீட்டி அற்புதமாக பிடிக்க, அதிர்ச்சியில் வெளியேறினார் கோலி (11). இந்த 'கேட்ச்சை' 0.62 வினாடி நேரத்தில் கணித்து கச்சிதமாக பிடித்தார் பிலிப்ஸ். ஜான்டி ரோட்ஸ் போன்ற இவரது 'சூப்பர்மேன்' சாகசத்தை பார்த்து, துபாய் அரங்கில் இருந்த கோலி மனைவி அனுஷ்கா, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

* பின் ஹென்றி வீசிய பவுன்சரை (45.5வது ஓவர்) ஜடேஜா (16) அடிக்க, அனுபவ வில்லியம்சன் பறந்து 'கேட்ச்' பிடித்து அசத்தினார்.

* இத்தொடரில் நியூசிலாந்து அணி 96.0 சதவீத 'கேட்ச்' பிடித்து முதலிடத்தில் உள்ளது. ஒரு கேட்ச் மட்டுமே நழுவவிட்டது.

ஒருநாள் அரங்கில்   தனது மந்தமான அரைசதத்தை எட்டினார் ஸ்ரேயாஸ் (75 பந்தில்). இதற்கு முன் 74 பந்தில் (எதிர், வெ,இ., 2022, ஆமதாபாத்) அரைசதம் அடித்திருந்தார்.

ஷமியை தாக்கிய பந்து

ஹென்றி பந்தை (49.5வது ஓவர்) அடித்த ஷமி 2வது ஓட்டத்துக்கு ஓடினார். அப்போது நியூசிலாந்து பீல்டர் எறிந்த பந்து ஷமியின் முதுகில் பலமாக தாக்கியது. சிறிது நேரம் 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். பின் சகஜ நிலைக்கு திரும்பினார் ஷமி.

ஹென்றி 5 விக்.

  5 விக்கெட் வீழ்த்திய மாட் ஹென்றி (5/42), சம்பியன்ஸ் தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது நியூசிலாந்து வீரரானார். முதலிடத்தில் ஜேக்கப் ஓரம் (5/36, எதிர், அமெரிக்கா, 2004) உள்ளார்.


                                                  கோலி '300'

நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய விராத் கோலி, ஒருநாள் அரங்கில் 300வது போட்டியில் விளையாடிய 7வது இந்திய வீரரானார். இதுவரை 300 போட்டியில், 51 சதம் உட்பட 14,096 ஓட்டங்கள்  குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463 போட்டி), டோனி (350), டிராவிட் (344), முகமது அசார் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) இம்மைல்கல்லை எட்டினர்.

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 300 ஒருநாள், 100 டெஸ்ட், 100 'ரி-20' போட்டிகளில் விளையாடிய முதல் வீரரானார் கோலி. இதுவரை இவர், 300 ஒருநாள், 123 டெஸ்ட், 125 சர்வதேச 'ரி-20'ல் பங்கேற்றுள்ளார்.

முதல் வெற்றி

சம்பியன்ஸ்  தொடரில் அரங்கில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 2 முறை மோதின. இதில் நியூசிலாந்து (2000, நைரோபி), இந்தியா (2025, துபாய்) தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

5 விக்கெட்

சுழலில் அசத்திய வருண் சக்ரவர்த்தி (5 விக்கெட், 42 ஓட்டங்கள் , 10 ஓவர்) சம்பியன்ஸ் தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார்.

* சம்பியன்ஸ்தொடரில்  அறிமுகமான முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2வது பவுலரானார் வருண். முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (6/52, எதிர்: நியூசிலாந்து, 2017) உள்ளார்.

* இது, ஒருநாள் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன், கட்டாக்கில் (2025, பிப். 9) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தி, 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

No comments: