பாரதீய ஜனதாக் கட்சி பதவி ஏற்ற பின்னர் சத்தம் இல்லாமல் செய்து வரும் காரியங்களால் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்க்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழகத் தலைவர்கள் அஞ்சுகிறார்கள்>
ஒரே
நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்பி ஆகிய இரண்டு திட்டங்களை அமுல் படுத்துவதில் பாரதீய ஜனா அரசு
முஐப்புக் காட்டி வருகிறது.மத்திய அரசுத் தேர்தலையும்,மாநிலத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா பிடிவாதமாக உள்ளது.அதற்காக ஒரு ஆணைக்குழுவை நியமித்து
ஒப்புதல் பெற்றுள்ளது.ஆணைக்குழுவில் இருபவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு
ஒத்து ஊதுபவர்கள் என்பது கடந்த கால வரலாறு.
இப்போது
தொகுதி மறு சீரமைப்புப்பற்றி அமித்ஷா உரக்கப்
பேசுகிறார். தமிழக எதிர்க் க்டசித் தலைவர்களும்,
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சில
தலைவர்களும் கடும் எதிர்ப்புக் காட்டுகின்றனர்.தமிழக பாரதீய ஜனதா கட்சி, , தமிழ்
மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட ஐந்து
கட்சிகளைத் தவிர அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து
கட்சிகளும் கலந்து கொண்டன.
புதிய நாடாளுமன்றத்தை அமைக்கும் போதே எம்பிக்களில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ற வாரு கட்டப்பட்டது.தற்போது 543 எம்பிக்களும்,245
, மாநிலங்களவி எம்பிக்களும் உள்ளனர். புதிய பாராளுமன்றத்தில் 888 எம்பிக்களும்,
348 மாநிலங்களவை உறுப்பினர்களும் அமரக்கூடிய
வசதி உள்ளது.
தொகுதி
மறு சீரமைப்புக்கு எதிராக தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டலின்
நடத்தினார். அங்கு சில தீர்மானங்களும் நிற
வேற்றப்பட்டன.தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாடாளுமன்ற
உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை
அமைத்திடவும் அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 30 வருடத்திற்கு மறு வரையை தள்ளி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
848 தொகுதிகளாக அதிகரித்தால், உத்தரபிரதேசத்தில்
63 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும், தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகள்தான் கூடுதலாகக் கிடைக்கும்.
எந்தவகையில் பார்த்தாலும், இந்திய ஜனநாயகத்தை, இந்திய நாடாளுமன்றத்தின் தலைமைப் பொறுப்பை
வடவர்கள் எடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்கும் நிலைதான் ஏற்படும்.
2026 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்போவதை பொதுவாக மக்கள் தொகை கணக்கிட்டு தான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாக குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி, மற்றும் சுகாதாரம் முன்னெச்சரிக்கை மூலமாக இதை சாதித்து இருக்கிறது. இப்போது இருக்கின்ற 543 நாடாளுமன்ற தொகுதிகளில் தொடர்ந்து செய்ய இருப்பதால் மக்கள் தொகை குறைவால் எம்பிக்களின் தொகை குறையும் அபாயம் உள்ளது .29 எம்பிக்கள் இழப்பு ஏற்படும்.
நாடாளுமன்ற தொகுதியின் எண்ணிக்கை 848 ஆக ஆக உயர்த்தப்பட்டு
தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்துகு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால்
தற்போதைய மக்கள் தொகையின் படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும்.
இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.இந்த இரண்டு முறைகளில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட
மாநிலங்களுக்கு அதிகமாக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும.
இது வெறும் உறுப்பினர்களை பற்றிய கவலை இல்லை.
தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை.நம் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கின்ற முக்கிய
பிரச்சினைகளில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை
உங்கள் எல்லாரும் முன் நான் வைக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த
தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதுக்குள் நமக்கான கருத்து வேறுபாடும்
வரும் நிச்சயம் இருக்காது என நினைக்கிறேன். கூடாது என்று விரும்புகிறேன். இந்திய நாட்டின்
அமைப்பின் கூட்டாட்சிக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை
ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்துவ
உரிமையில் நேரடியான தாக்குதல். இப்படி சமநிதியற்ற அநீதியான தொகுதி மறு சீரமைப்பு செயல்படுத்தப்பட்டால்
இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
அனைத்து
கட்சி கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் மிகவும் காட்டமாகப் பேசினார்கள்.
பாரதீயஜனதாவுடன் இணக்கமாகச் செயற்படும் அன்புமணியும்
மிகவும் ஆக்ரோஷமாகக் கருத்துத் தெரிவித்தார்.
தொகுதி
மரு சீரமைப்பால் தமிழகத்தின் தொகுதிகள் குறைக்கப்பட
மாட்டாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்., தி.மு.க. மட்டுமல்ல, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ்
கட்சியின் முதலமைச்சரான சித்தராமைய்யாவும் தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சரான
ரேவந்த் ரெட்டியும்கூட அமித் ஷாவின் வாக்குறுதியை சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்.
கடந்த
வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் "தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களில்
எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அமித் ஷா தெளிவுபடுத்தவில்லை.
மறுவரையறையால்
தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்கிறாரே தவிர, தென்னிந்தியாவிலும்
வட இந்தியாவிலும் எவ்வளவு இடங்கள் அதிகரிக்கும் என்பதைச் சொல்லவில்லை. எந்த அடிப்படையில்
அதிகரிக்கும்?" எனக் கேள்வியெழுப்பினார் ரேவந்த் ரெட்டி.
அதேபோல,
கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் அமித் ஷா தென் மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதி
நம்பத்தகுந்ததல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.
இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட 58 கட்சிகள் பங்கேற்றன.
கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தொகுதி எண்ணிக்கை மறுவரையறையை எதிர்த்தன.
இந்த விவகாரத்தை கையாள்வது தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
அதிமுக
சார்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்,
“நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்
கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு
அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது” என்று கூறினார்.
பாமக
தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய போது, “தொகுதி மறு சீரமைப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்திடவும்,
அடுத்தடுத்த போராட்ட செயல் திட்டங்களை வகுக்கவும் நமது முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு
நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும். அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்” என்றார்.
ஒவ்வொரு
மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டுமென
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதன்படி இந்தியாவில் மூன்று முறை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன.
கடைசியாக
1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, 1973ல் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன.
இதற்குப் பிறகு 1975ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, மக்கள் தொகை கட்டுப்பாட்டுத்
திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இதனால், மக்கள் தொகை நிலைபெறும்வரை தொகுதி
மறுவரையறையை நிறுத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி
மறுவரையறை செய்யாமல் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
2001ல்
இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக
இருந்தபோது, தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. ஆகவே,
2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை
மறுவரையறை செய்ய வேண்டும்.
மக்கள்
தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள்
தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள்
தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு
நடந்தால், அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்யலாம்.
இந்தப்
பின்னணியில்தான் 2026-ஐ ஒட்டி தொகுதி மறுவரையறை நடந்தால், அது தமிழ்நாட்டைக் கடுமையாக
பாதிக்கும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன. ஆகவேதான், நாடாளுமன்றத் தொகுதிகளின்
எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள விகிதாச்சாரத்திலேயே தொகுதிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்க வேண்டுமென அவை கோருகின்றன.
மத்திய
அரசுக்கு எதிராக தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கை உள்ளது.
ரமணி
9/3/25
No comments:
Post a Comment