Monday, March 24, 2025

ஐபிஎல் இல் காணாமல் போன அணிகள்

  ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகிவிட்டது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கடந்த 18 சீசன்களில்  விளையடிய சில அணிகள் பங்கேற்று பின்னர் நிரந்தரமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகின.  அந்த அணிகளின் பட்டியல்.

டெக்கான் சார்ஜர்ஸ்:

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வகிறது. இந்த அணி கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. டெக்கான் கிரானிக்கல் நிறுவனம் இந்த அணியை நிர்வகித்து வந்தது. ஆந்திராவை மையப்படுத்தி இந்த அணி ஆடியது. 2012ம் ஆண்டு வரை மட்டுமே இந்த அணி ஆடியது. கில்கிறிஸ்ட் தலைமையில் 2009ம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தையும் கைப்பற்றியது.

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா:

கேரளாவை மையப்படுத்தி இந்த அணி ஆடியது. 2011ம் ஆண்டு மட்டுமே இந்த அணி ஆடியது. மஹேல  ஜெயவர்தன தலைமையில் இந்த அணி ஆடியது. ஆனால், அந்த ஒரே சீசனில் இந்த அணி தொடரில் இருந்து விலகியது. கொச்சி பிரைவேட் கிரிக்கெட் லிமிடெட் இந்த அணியை நிர்வகித்தது.

புனே வாரியர்ஸ் இந்தியா:


சஹாரா இந்தியா பரிவார் நிறுவனம் இந்த அணியை நிர்வகித்தது. 2011ம் ஆண்டு கொச்சி அணியுடன் இந்த அணியும் ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. புனேவை மையமாக கொண்டு ஆடிய இந்த அணிக்கு கங்குலி கப்டனாக ஆடினார். 2011ம் ஆண்டு 9வது இடத்தையும், 2012ம் ஆண்டு கடைசி இடத்தையும், 2013ம் ஆண்டு கடைசி இடத்தையும் பிடித்தது. 2013ம் ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து இந்த அணி விலகியது.

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்:


சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக சென்னை , ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், 2016ம் ஆண்டு உருவானது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட். டோனி தலைமையில் களமிறங்கிய முதல் சீசனில் மோசமான தோல்வி அடைந்து வெளியேறியது. பின்னர், அடுத்த ஆண்டு ஸ்மித் கப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியின் உரிமையாளர் கோயங்கா தற்போது லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை நிர்வகித்து வருகிறார். இந்த அணி இரண்டு சீசன்கள் மட்டுமே ஆடியது.

குஜராத் லயன்ஸ்:


2016ம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பதிலாக களமிறங்கிய அணிகளில் புனேவுடன் இணைந்து களமிறங்கிய அணி குஜராத் அணி ஆகும். இந்த அணியும் 2 சீசன்கள் மட்டுமே ஆடியது. குஜராத் அணிக்கு கப்டனாக சுரேஷ் ரெய்னா ஆடினார். இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் இந்த அணியை நிர்வகித்தது.

இந்த அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி மட்டுமே சம்பியன் பட்டம் பெற்றது. மற்ற அணிகள் சம்பியன் பட்டம் பெற முடியவில்லை.

 

   

 

No comments: