Sunday, March 2, 2025

ஜூன்மாதம் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார் பாக்


 

 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தலைவர் தாமஸ் பாக் ஜூன்  மாதம் 23  ஆம்   பதவி  விலகுகிறார். அவர் இராஜினாமா செய்வதை ஏற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்   நிர்வாகக் குழு  புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

புதிய ஐஓசி தலைவரிடம் ஒப்படைப்பு அதே நாளில் நடைபெறும், இது ஒலிம்பிக் தினமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. புதிய தலைவர் மார்ச் 20, 2025 அன்று கிரேக்கத்தின் கோஸ்டா நவரினோவில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

2024 ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிஸில் நடந்த ஐஓசி அமர்வில், ஐஓசி உறுப்பினர்கள் அவரைப் பதவியில் இருக்குமாறு    கோரிக்கை விடுத்த போதிலும்,  தலைவர்  பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, பாக் இந்த வாரம் ஐஓசி நிர்வாகக் குழுவிடம் தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார்.

1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் நடந்த ஒலிம்பிக்கில் ஃபாயில் ஃபென்சிங்கில் தங்கப் பதக்கம் வென்ற பாக், 2013  ஆம் ஆண்டு  செப்டம்பர் 10 ஆம் திகதி   சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்  ஒன்பதாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்., 2021 ஆம் ஆண்டு  மார்ச் 10 ஆம் திகதி  இரண்டாவது முறை  நான்கு ஆண்டு காலத்திற்கு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

No comments: