இந்தியா , நியூசிலாந்து அணிகள் மோத உள்ள, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது.
இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் லீக் சுற்றில் மோதியதால்,
மைதானத்தில் சூழல் எப்படி இருக்கும் என இரண்டு அணிகளும் அறிந்திருக்கின்றன. இதனால்,
போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தியாவை விட நியூசிலாந்து
அணி வலுவாக இருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவுக்கு
கடும் நெருக்கடி கொடுக்கக்கூடிய அணியாக நியூஸிலாந்து உள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர்
தலைமையிலான அந்த அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ் ,ரச்சின் ரவீந்திர ஆகிய
மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே சுழற்பந்து வீச்சில் உள்ள பன்முகத்தன்மையின்
அடிப்படையில் வலுவாக உள்ளனர். லீக் சுற்று போட்டியில் அவர்களின் பந்துவீச்சை இந்திய
வீரர்கள் சமாளித்தாலும், இறுதிப்போட்டி கடும் சவாலாக இருக்கும்.
: நியூசிலாந்து அணி களத்தில் ஃபீல்டிங் மூலம் மட்டுமே
30/ 40 ஓட்டங்களை சேமிக்கும் திறன் கொண்டுள்ளது. அட்டகாசமான கேட்சுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. சாண்ட்னர், வில் யங் , மைக்கேல் பிரேஸ்வெல் போன்றவர்கள்
சிறந்த பீல்டர்களாக திகழ்கின்றனர். கூடுதலாக எதிரணி வீரர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தக்
கூடிய க்ளென் பிலிப்ஸ்ம் நியூசிலாந்து அணியில் இருக்கிறார். அவர் தனது விதிவிலக்கான
பீல்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படும்
போது, அவர்களின் சிறந்த ஃபீல்டர்கள் அனைவரும் வளையத்தில் இருப்பதால், அவர்கள் ஒற்றை ஓட்டத்தை நிறுத்துவதன் மூலம் அழுத்தத்தை அதிகரிக்கின்றனர்.
இந்தியாவைப்
போலவே, நியூசிலாந்து அணியும் சூழ்நிலைக்கு ஏற்ற துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளது. லீக் போடிட்யில் அவர்கள்
சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், கம்பேக் கொடுக்கும் திறன் கொண்டுள்ளனர். ரச்சின்,
யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் விரைவான தொடக்கத்தை
வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிடில் ஆர்டருக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கி தருகின்றனர்.
பெரும்பாலான அணிகள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடுவதில் சிரமப்பட்டாலும்,
டாம் லாதம், டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் போன்றவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
இந்தியாவும் சளைத்ததல்ல 2013 சம்பியன்ஸ் தொடரில்
டோனி தலைமையில் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா கோப்பையையும் வென்றதுசம்பியனது. 2017 சம்பியன்ஸ்
கிண்ணப் போட்டியில் விராட் கோலி தலைமையிலிறுதிப்
போட்டிக்குச் சென்ற இந்திய அணிபாகிஸ்தானிடம்
தோற்றது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.
சம்பியன்ஸ்
கிண்ண வரலாற்றில் தொடர்ந்து மூன்று தொடர்களில் (2013, 2017, 2025) இறுதிப்போட்டிக்குச் சென்ற பெற்ற முதல் அணி என்ற ஹட்ரிக் உலக சாதனையை இந்தியா
படைத்துள்ளது
2023 டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற 2023
உலகக்கோப்பை, 2024 இல் ரி20 உலகக் கோப்பை
ஆகியவற்றில் இந்திய சம்பியன் பட்டத்தை வென்றது.
தற்போது நடைபெறும் சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 4 ஐசிசி தொடர்களிலும் இந்திய
அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்குத்
தகுதி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா
படைத்துள்ளது.
இதற்கு முன் 1975 – 1983 காலகட்டங்களில் மேற்கு இந்தியா
, 2000 – 2003 காலகட்டங்களில் இந்தியா, 2019 – 2021 காலகட்டங்களில் நியூசிலாந்து அணிகள்
தலா 3 இறுதிப் போட்டிக்குத் தொடர்ந்து தகுதி பெற்றதே முந்தைய சாதனை. இதிலிருந்து மற்ற
அணிகளை காட்டிலும் இந்திய ஐசிசி தொடர்களில் நன்றாக செயல்படுவது தெரிகிறது.
கோலி,ரோஹித்
ஆகியோருக்கு கடைசி சம்பியன் தொடர் என்பதால்
கூடுதல் கவனம் பெற்றுள்ளது
ரமணி
9/3/25
சம்பியன்கிண்ணம்25,பாகிஸ்தான்,துபாய்,விளையாட்டு,கிறிக்கெற்,தமிழன்,இந்தியா,,நியூஸிலாந்து,
No comments:
Post a Comment