சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் துபாயில் மோத உள்ளன. இந்திய அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது.
இந்திய
அணி அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன்ஸ் டிராபியின்
இறுதிப் போட்டியை எட்டிய முதல் அணி என்கிற வரலாறு படைத்தது. நியூசிலாந்து அணி தங்களது அரையிறுதிப்போட்டியில்
தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஐசிசி
நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன,
இதில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை
வகிக்கிறது.
இரு
அணிகளும் 2000 சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும், 2019ஆம் ஆண்டும்,
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும்,
2021 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
2023 உலகக் கிண்ண அரையிறுதியில் இந்திய அணி
நியூசிலாந்தை வென்றுள்ளது. இது தான் நியூசிலாந்து அணியை இந்திய அணியை நாக் அவுட்டில்
வென்ற ஒரே போட்டியாகும்.
2021
ஆம் ஆண்டு நடந்த உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து
அணி வெற்றி பெற்றது.
ஐசிசி
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவும்
நியூசிலாந்தும் இது வரை இரண்டு முறை மோதியுள்ளன.அதில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு
முன்னர் இந்திய அணி 2000 ஆம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது,
இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 44
ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
ஒரு
நாள் உலகக்கிண்ணப் போட்டியில் இரு அணிகளும்
10 முறை மோதின. இதில் நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 4 முறையும் ஒரு போட்டி மழையால்
கைவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண
அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்.எஸ்
டோனியின் கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.
ஐசிசி ரி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை
ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இது இரு அணிகளும்
மூன்று முறை மோதியுள்ளன அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் ஐசிசியின் தொடர்களில் மொத்தம்
16 முறை நேருக்கு மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 10 முறையும் இந்திய அணி 5 முறையும்
ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணி
இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகவே இருந்துள்ளது.
No comments:
Post a Comment