Thursday, March 13, 2025

சம்பியன்ஸ் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் 4 விக்கெற்களால் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

252 ஓட்டங்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா , ஷுப்மன் கில் அகியோர் முதல் விக்கெட்டிற்கு 105 ஓட்டங்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ரோஹித் ஷர்மா 76 ஓட்டங்களுடனும், , , ஷுப்மன் கில் 31 , கோலி இட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.49வது ஓவர் வரை போராடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை அதிகமுறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

83 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.263 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெற்களை வீழ்த்திய ரச்சின் ரவீந்ரா தொடர் நாயகன் விருது பெற்றார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவிந்திரா  ஆகிய‌ இருவரும் 7 ஆவது ஓவரில்  51 ஓட்டங்கள் அடித்து  நம்பிக்கையளித்தனர்.  8வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி களத்துக்கு வந்ததும் ஆட்டத்தின் போக்கு  மாறியது.   குல்தீபின் பந்தை அடித்த வில்லியம்சன் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 12. 2 ஓவர்களில் 3 விக்கெற்கலை இழந்த நியூஸிலாந்து  75  ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த 81 பந்துகள்  இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

லதாம் 14,  பிலிப்சை 34  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  மிட்சல், 91 பந்தில் தனது மந்தமான அரைசதத்தை எட்டினார். கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடினார்.   மிட்சல் 63   ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்  கடைசி 10 ஓவர்களில் 79  ஓட்டங்கள் அடித்தது நியூசிலாந்து.  50 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த நியூஸிலாந்து  251 ஓட்டங்கள் எடுத்தது. பிரேஸ்வெல்  ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்தார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா  சூறாவளியாக சுழன்றடித்தார். ஏதோ ஒரு முடிவுடன் வந்ததுபோல் அவர் விளையாடினார். 41 பந்துகளில் ரோஹித் அரைசதம் அடித்தார்.   முதல் விக்கெட்டுக்கு 105  ஓட்டங்கள் அடித்த நிலையில் கிளன் பிலிப்ஸ் வழக்கம் போல பறந்து ஒரே கையால் பிடித்து 31 ஓட்டங்களுடன் சுப்மன் கில்லை வெளியேற்றினார்.

பிரெஸ்வெல்லின் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்த கோலி எல்.பி.டபிள்யுவில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர். நியூசிலாந்து வீரர்கள் ஆர்ப்பரித்தனர். 'ரிவியு' கேட்டும்   கோலியின் ஆட்டமிழப்பு உருதியானது. சிறிது நேரத்தில் ரோகித்  76 ஓட்டங்களுடன் வெலியேற  பதற்றம் அதிகரித்தது.

ஸ்ரேயாஸ், அக்சர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தது. பிலிப்ஸ் ஓவரில் ஸ்ரேயாஸ் அடித்த பந்து 'லாங்-ஆன்' திசையில் நின்ற ஜேமிசன் கைக்கு நேராகச் சென்றது.  அவர் 'கேட்ச்சை' நழுவவிட்டார். 48 ஓட்டங்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்

அக்ர் படேல் 29, ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல், அணியை கரை சேர்த்தார். ரூர்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரவிந்திர ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 15வது முறையாக ரோஹித் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்தர்.  ஒருநாள் அரங்கில் அதிக முறை 'டாஸ்' வெல்லாத கப்டன் பட்டியலில் முதலிடத்தை  லாரா பகிர்ந்து கொண்டார் ரோஹித்.இருவரும் 12 முறை தோல்வியடைந்தன.

இறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் நான்கு 'கேட்ச்சை' நழுவவிட்டனர்.ஷமி வீசிய பந்தை  நேராக அடித்தார் ரச்சின். இது ஷமியின் விரலில் பட்டு 'கேட்ச்' நழுவியது. வலியால் அவதிப்பட்ட ஷமிக்கு 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார்.  வருண் சக்ரவர்த்தி பந்தை ரச்சின் துாக்கி அடிக்க, எல்லையில் இருந்து ஓடி வந்த ஸ்ரேயாஸ் 'கேட்ச்சை' கோட்டைவிட்டார்.  ஜடேஜாவின் பந்தில்   பிலிப்ஸ் கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் கோட்டைவிட்டார் சுப்மன் கில்.

ஐ.சி.சி., ஒருநாள் தொடரின் 'நாக்-அவுட்' போட்டியில் (உலக கோப்பை அல்லது சம்பியன்ஸ் டிராபி) இரு அணிகளின் துவக்க ஜோடியும் 50 ஒட்டங்களுக்கு  மேல் எடுத்தது 2வது முறையாக அரங்கேறியது.   நியூசிலாந்தின் யங்-ரச்சின் 57  ஓட்டங்கள் அடித்தனர். இந்தியாவின் ரோகித்-சுப்மன் 105  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இதற்கு முன் இந்தியா-பாக்., மோதிய உலக கோப்பை காலிறுதியில் (1996, மார்ச் 9, பெங்களூரு) துவக்க ஜோடிகள் (சச்சின்-சித்து 90, அன்வர்-சோகைல் 84  ) எடுத்தனர்.

சம்பியன்ஸ் தொடரில்  அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த இரண்டாவது இந்திய வீரரானார் ஷமி  ஷமி(9 ஓவர், 1/74). முதலிடத்தில் உமேஷ் யாதவ்(2/75, எதிர், தென் ஆப்ரிக்கா, கார்டிப், 2013) உள்ளார்.

இந்திய 'ஸ்பின்னர்'கள்   37.3 சதவீத பந்துகளை 'ஸ்டம்ப்சை' தாக்கும் வகையில் துல்லியமாக வீசினர். 38 ஓவர்களில் 144 ஓட்டங்கள் மட்டும் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

 38 ஓவர் வீசி ஒருநாள் அரங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர் வீசியதில், மூன்றாவது இடம்  பிடித்தனர். . முதல் இரு இடங்களில் 41.2 ஓவர் (எதிர், வெ.இ., இந்துார், 2011), 30 ஓவர் (எதிர்,கென்யா, குவாலியர், 1998) உள்ளன.

  சாம்பியன்ஸ் டி கிண்ண  அரங்கில் அதிக ஓவர் 'ஸ்பின்னர்'கள் வீசிய அணிகளின் பட்டியலில் இந்தியா (38 ஓவர்) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் இலங்கை (39.4 ஓவர், எதிர், ஆஸி., கொழும்பு, 2002, அரையிறுதி) உள்ளது.

நியூசிலாந்து வீரர் வில்லியம்சனின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. 'பீல்டிங்' செய்ய வரவில்லை. மாற்று வீரராக மார்க் சாப்மேன் களமிறங்கினார்.


நாதன் ஸ்மித் பந்தில் (5.3வது ஓவர்) ஒரு இமாலய சிக்சர் (92 மீ., துாரம்) அடித்த ரோகித், ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (344 சிக்சர், 273 போட்டி) உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர், 398 போட்டி) உள்ளார்.

  3வது ரன்னை எடுத்த போது நியூசிலாந்துக்கு எதிராக 1000  ஓட்டங்கள் எட்டினார் ரோகித்.* ஒருநாள் அரங்கில் கப்டனாக 2,500 ஓட்டங்கள் கடந்தார் ரோகித்.

நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் ஃபைனலில் வெற்றி பெற்று இந்தியா புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன் 2000 சம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில்நியூஸிலாந்திடம்  இந்தியா தோல்வியையே சந்தித்தது. 3 சம்பியன்ஸ் ட்ராபிகளை (2002, 2013, 2025*) வென்ற முதல் அணி என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது இதற்கு முன் அவுஸ்திரேலியா 2 கோப்பைகளை வென்றதே  முன்னைய  சாதனை. 

No comments: