Thursday, November 29, 2012

அரசியலான தூக்குத் தண்டனை


மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது   அரசியலில் அதிர் வலைகளை  எழுப்பியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் பாகிஸ்தானிலே உள்ள குழுவினராலேயே நடத்தப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டிய போதெல்லாம் பாகிஸ்தான் அதனை மறுதலித்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

மும்பையில் நடைபெற்ற தாக்குதல் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்ததுதாக்குதலை நடத்தியவர்கள் தாக்குதல் நடைபெற்ற இடங்களை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். மூன்று நாள் போராட்டத்தின் பின்பே  பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த தாஜ் ஹோட்டல்  மீட்கப்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில் கசாப்பைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 கசாப்பின் வாக்கு மூலத்தின் பிரகாரம் மும்பைத் தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் தான் தீட்டப்பட்டது என்றும் பாகிஸ்தானிலிருந்து தாக்குதல் வழி நடத்தப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டதுஇதனை  பாகிஸ்தான் முதலில் மறுத்தது மும்பைத் தாக்குதலில் உயிரோடு பிடிக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கசாப் மேன் முறையீடு செய்தார். மேன் முறையீட்டு மனுவும் கசாப்புக்கு கை கொடுக்கவில்லை. ஜனாதிபதியிடம்  கருணை மனு சமர்ப்பித்தார்ஜனாதிபதியும் கைவிட்டு விட்டார்.

கசாப்புக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டதும் இவ்வளவு விரைவாக மிக இரகசியமாக கசாப் தூக்கில் இடப்படுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. கசாப்புக்கான தூக்குத் தண்டனை நாள் குறிக்கப்பட்டால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதற்கெதிரான பேராட்டங்கள் நடைபெறும் என்பதனால் கசாப்பின் இறுதி நாள் மிக இரகசியமாக வைக்கப்பட்டது. புனே ஏர்வாடா சிறையில் யாரையோ தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அங்குள்ளவர்கள் அறிந்தனர். தூக்கு மேடை சரி பார்க்கப்பட்டதன் மூலம் அங்குள்ளவர்கள் இதனை அறிந்தனர்.

கசாப்பைத் தூக்கிலிட்ட பின்னரே அதனை உலகுக்கு அறிவித்தது இந்தியா. கசாப்பின் உடலை வாங்குவதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. கசாப்பின் உடலை தம்மிடம் அல்லது கசாப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தலிபான் இயக்கம் இப்போது இந்தியாவையும் குறி வைத்துள்ளது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இன்னொருவர் அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி அப்சல் குருவை எப்போது தூக்கிலிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு  இந்திய அரசு இதுவரை பதிலேதும் கூறவில்லை. ஆனால் கசாப்பை அவசரமாகவும் இரகசியமாகவும் தூக்கிலிட்டது இந்தியா. இந்திய நாடாளுமன்ற நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கசாப் தூக்கிலிடப்பட்டதாகவும் சில விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்மும்பைத் தாக்குதலில் பலியான வெளிநாட்டவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகளை  உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பிரமுகர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக தமிழ் தேசிய ஆர்வலர்கள்  போராடி வருகின்றனர்அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  துடிக்கின்றனர். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விட்டு தமது கடமை முடிந்ததென்று  இருக்கின்றனர்.

பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சப்ரஜித் சிங்கின் நிலை என்னாகுமோ என்று அவரது உறவினர்கள் பரிதவிக்கின்றனர். இந்தியபாகிஸ்தான் எல்லையில் சப்ரஜித் சிங்கை பாகிஸ்தான் படையினர் கைது செய்தனர். உளவு பார்க்க வந்ததாக குற்றம் சாட்டி நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட சப்ரஜித் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சப்ரஜித்  சிங் சமர்ப்பித்த கருணை மனு நிலுவையில் உள்ளது. அவரது உயிரைக் காப்பாற்ற பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் முயற்சி செய்கின்றனர்கசாப்பைத் தூக்கிலிட்டதற்குப் பதிலடியாக சப்ரஜித் சிங்கை பாகிஸ்தான் தூக்கிலிடுமோ என்ற அச்சம் அவரது  உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக வாக்களித்த இந்தியா அதே நாளில் கசாப்பைத் தூக்கிலிட்டது உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மெட்ரோநியூஸ் 30 /11/12Sunday, November 25, 2012

திரைக்குவராதசங்கதி 47


திரைப்ப‌டங்கள்அனைத்தும்வெற்றிபெறவேண்டும்என்றேநடிகரும்ரசிகர்களும்விரும்புவார்கள்100ஆவதுபடம்பிரமாண்டமான‌வெற்றிப்படமாகஅமையவேண்டும்என்றேநடிகரும்,ர‌சிகர்களும்விரும்புவார்கள்.நடிகர்திலகத்தின்100ஆவது படமான நவராத்திரி, மக்கள்திலகத்தின்ஒளிவிளக்குஎன்பனமிகப் பெரியவெற்றிபெற்றன.வேறுஎந்தஒருநடிகரின்அல்லதுநடிகையின்100ஆவதுபடம்இப்படிவெற்றிபெற்றதில்லை.சர‌த்குமார்தனது100ஆவதுபடமானதலைமகன்வெற்றிபெறவேண்டும்எனமுழுமூசுச்டன்செயற்பட்டுவருகிறார்.சூப்பர்ஸ்டார்என்றபெயரெடுத்தர‌ஜினிகாந்த்தனது100ஆவதுபடத்தைர‌சிகர்களின்விருப்பத்துக்குமாறானதனதுஆத்மதிருப்திக்காகநடித்தார்.ர‌ஜினியின்100ஆவதுபடம்ஸ்ரீராகவேந்திரா.அக்ஷன்,ஸ்டைல்,கோபம்போன்றஎதுவுமற்ற அமைதி,அடக்கம்,பரிவுஆகியவைஅடங்கியபுதியதொருர‌ஜினியைராகவேந்திராவில்ர‌சிகர்கள்க‌ண்டனர்.ராகவேந்தரின்தீவிர‌பக்தன்ர‌ஜினிகாந்த்.அவர‌துவர‌லாற்றைதனது100ஆவதுபடமாகதயாரிக்கவேண்டும்எனர‌ஜனிவிரும்பினார்.ர‌ஜினியின்வெற்றிப்படங்கள்பலவற்றைஇயக்கியஎஸ்.பி.முத்துராமன்தான்அப்படத்தைஇயக்கவேண்டும்எனஅவர்விரும்பினார்.தனதுவிருப்பத்தை எஸ்.பி.முத்துராமனிடம் ர‌ஜினி கூறினார்.

        எஸ்.பி. முத்துராமனின்குடும்பம் சுயமரியாதைஇயக்கத்தில் அதி தீவிர‌ பற்றுள்ளது.அவர‌துதகப்பன்சுயமரியாதைஇயக்கத்தின்தீவிர‌மானறுப்பினர்.சுயமரியாதையின்கீழ்வளர்ந்தஎஸ்.பி.முத்துராமன்புராணப்படத்தைஇயக்கத்தயங்கினார்.தனதுநிலையைர‌ஜினியிடம்விரிவாகஎடுத்துக்கூறினார்.எஸ்.பி. முத்துராமனின் விளக்கத்தைர‌ஜினிஏற்றுக்கொண்டதால்அவருடன்அது பற்றிவிவாதிக்கம்பவில்லைராகவேந்தரின்வாழ்க்கையைபடமாக்கதகுதியானவர்தனதுகுருநாதர்எஸ்.பாலசந்தர்தான்எனமுடிவுசெய்தார்ர‌ஜினி.சற்றும்தாமதிக்காமல்தனதுமனதில்இருந்தஎல்லாவற்றையும்குருநாதர்கே.பாலச்சந்தரிடம்கூறினார்.எஸ்.பி.முத்துமராமனின்தயக்கம்பற்றிகுருநாதரிடம் கூறிய ர‌ஜினி இது பற்றிஅவருடன் பேசும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ர‌ஜினியின் மனதில் உள்ள எண்ணங்களை நன்கு புரிந்த எஸ். பாலசந்தர்,ரஜினியின்வேண்டுகோளுக்குஇணங்கஎஸ்.பி.முத்துராமனைததனது வீட்டிற்குஅழைத்தார்.புராணப் படங்களைஇயக்குவதில்தனக்குஉள்ள சிக்கல்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார் எஸ்.பி. முத்துராமன்.அவர் தர‌ப்புநியாயங்களைஅவதானமாகக்கேட்டஎஸ்.பாலசந்தர்இறுதியில்தனதுதீ ர்ப்பைக் கூறினார்.
          ர‌ஜினியைமாறுபட்டவேடங்களில்இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். புராணப்படமொன்றில்ர‌ஜினியைஇயக்கஅவரால்முடியும்என்றநம்பிக்கையைஎஸ்.பி.முத்துராமனுக்குஏற்படுத்தினார்.ஸ்ரீராகவேந்திராவைகவிதாலயாதயாரிக்கும்.இதற்குரியவசதிகள்எல்லாவற்றையும்கவிதாலயாஏற்படுத்தித்தரும்.ர‌ஜினியின்உணர்வுகளுக்குமதிப்பளித்துஇதைஇயக்கஒப்புக்கொள்ளுங்கள்என்றுகே.பாலசந்தர்கூறினார்.கவிதாலயாபாலசந்தரின்சொந்தநிறுவனம்.வெற்றிப்படங்கள்பலவற்றைதந்தநிறுவனம்.கே.பாலசந்தர்கொடுத்தஊக்கம்எஸ்.பி.முத்துராமனின்மனதைமாற்றியது.ர‌ஜினியின்விருப்பப்ப‌டிஸ்ரீராகவேந்திராதயாரானது.எஸ்.பி.முத்துராமன்இயக்கினார்.குடும்பப்படங்கள், அடிதடிப் படங்கள்மட்டுமல்ல புராணப்படங்களையும்இயக்கமுடியும் என்று எஸ்.பி. முத்துராமன் வெளிப்படுத்தினார்.ஸ்ரீ ராகவேந்திரா தயாரான போதுர‌ஜினிஅசைவத்தைதவிர்த்தார்.அதனைஅறிந்தபடப்பிடிப்புக்குழுவினர் அனைவரும்அசைவத்தை துறந்தனர். ஸ்ரீராகவேந்திராமிகப்பெரியவெற்றி பெறவில்லை என்றாலும்ர‌சிகர்களின் மனதை கவர்ந்த படம்எனப் பெயர் பெற்றது.

ரமணி
மித்திரன் 11/02/07
107

Sunday, November 18, 2012

ஸ்டாலினுக்கு வரவேற்பு அழகிரிபுறக்கணிப்புஇலங்கையில்நடைபெற்றஇறுதிக்கட்டயுத்தத்தின்போதுஇரட்டைவேடம்போட்டுஉலகத்தமிழர்களிடம்இருந்தசெல்வாக்கைஇழந்தகருணாநிதிஅதனைமீண்டும்பெறுவதற்காகதனதுஅரசியல்திருவிளையாடலைஆரம்பித்துள்ளார்தூசுபடிந்துகிடந்தரெசோஇயக்கத்தைதூசுதட்டிதமிழகத்தில்மாநாடுநடத்திஅதில்எடுக்கப்பட்டதீர்மானங்களைஐநாவுக்குஅனுப்பிவைத்துள்ளார்கருணாநிதிநெடுமாறன்,வைகோ,சீமான்,டாக்டர்மதாஸ்ஆகியோர்இலங்கைத்தமிழர்களுக்காகக்குரல்கொடுத்துபலபோராட்டங்களைநடத்தினார்கள்இவர்களுக்குநாம்சற்றும்சளைத்தவர்களல்லஎன்பதைக்காட்டுவதற்குஜெயலலிதாவும்கருணாநிதியும்பலபோராட்டங்களைநடத்தினார்கள்அவற்றில்உண்ணாவிரதநாடகம்பெரும்பங்குவகிக்கின்றது
இலங்கைவிவகாரம்ஐநாவில்சூடுபிடித்துள்ளநிலையில்ரெசோத்தீர்மானங்க ளை அனுப்பிஐநாவில்திராவிமு ன்னேற்றக்கழகத்தின்பெயரைஉறுதியாகப்பதித்துள்ளார்கருணாநிதி.ரெசோமா நாட்டைநடத்துவதற்குஒருசிலமுட்டுக்கட்டைகள்போடபட்டன.அவற்றைஎல்லாம்முறியடித்துரெசோமாநாட்டைநடத்தினார்கருணாநிதி.இலங்கைத்தமிழர்விவகாரத்தில்அக்கறைஉள்ளவெளிநாட்டினருக்குஅழைப்புவிடுக்கப்பட்டது.ஒருசிலரபுறக்கணித்தார்கள்.பலர்ரெசோமாநாட்டில்கலந்துகொண்டுதமதுகருத்தைத்தெரிவித்தனர்.


கருணாநிதிநடத்தியரெசோமாநாட்டின்மீதுமத்தியஅரசும்தமிழகஅரசும்ஒருகண்வைத்திருந்தன.ஸ்டாலினும்,நாடாளுமன்றஉறுப்பினர்டிஆர்பாலுவும்கடந்தவாரம்ரெசோதீர்மானங்களைஐநாதுணைச்செயலர்யான்லியாசனிடம்கையளித்தனர்.ஐநாவுக்குஸ்டாலினையும்டிஆர்பாலுவையும்அனுப்பியகருணாநிதினிமொழிமூலம்ரெசோதீர்மானங்களைப்பிரதமர்மன்மோன் சிங்கிடம் ஒப்படைத்தார்.ஐநாவிலும்டில்லியிலும்ரெசோதீர்மானங்கள்ஏககாலத்தில்ஒப்படைக்கப்பட்டதனால்கருணாநிதிமகிழ்ச்சியடைந்துள்ளார்.
ரெசோதீர்மானங்களைஐநாவில்ஒப்படைத்தஸ்டாலின்.அங்¬ருந்துஇங்கிலாந்துக்குச்சென்றார்.பிரித்தானியதமிழர்பேரவையின்ஏற்பாட்டில்இங்கிலாந்துநாடாளுமன்றகட்டடத்தில்உலகத்தமிழர்பண்பாட்டுமாநாடுநடைபெற்றது.அந்தமாநாட்டில்ஸ்டாலினும்கலந்துகொண்டார்.உலகத்தமிழர்பண்பாட்டுமாநாட்டில்ஸ்டாலின்கலந்துகொண்டதைத்தமிழ்ஆர்வலர்கள்சிலர்விரும்பவில்லைஎன்றாலும்அவர்களால்ஸ்டாலினைத்தடுக்கமுடியவில்லை.
தமிழகமீனவர்கள்கடலில்தாக்கப்படும்போதும்இலங்கைத்தமிழர்கள்இன்னல்படும்போதும்தமிழகமுதல்வராகஇருந்தகருணாநிதிஇந்தியப்பிரதமர்மன்மோகன்சிங்குக்குகடிதம்எழுதினார்.ஆட்சிமாறியது.தமிழகமுதல்வர்ஜெயலலிதாஇந்தியப்பிரதமருக்குக்கடிதம்எழுதினார்.கருணாநிதி,ஜெயலலிதாஆகியோரின்கடிதங்களுக்குஇந்தியமத்தியஅரசுபதில்கடிதம்எழுதும்.ஆனால்,பிரச்சினைஎவையும்தீர்க்கப்படவில்லை.
இலங்கைப்பிரச்சினையைநாவுக்குகொண்டுசென்றதால்தமிழகஅரசியல்தலைவர்களைவிடதமதுகட்சித்த‌லைவர்உயரத்தில்இருப்பதாகதிராவிடமுன்னேற்றக்கழகத்தொண்டர்கள்கருதுகிறார்கள்.உட்கட்சிப்பூசலில்சிக்கித்தவிக்கும்திராவிடமுன்னேற்றக்க‌ழகத்தில்ஸ்டாலினின்கைஓங்கிஉள்ளது.இதனைஉணர்ந்துகொண்டகருணாநிதிஸ்டாலினைமுன்னிலைப்படுத்துகிறார்.
ரெசோதீர்மானங்களைஸ்டாலின்ஐநாவுக்குக்கொண்டுச்சென்றதும்உலகத்தமிழர்பண்பாட்டுமாநாட்டில்கலந்துகொண்டதும்சகலஊடக‌ங்ளிலும்தலைப்புச்செய்தியாகமிளிர்ந்தன.
வெளிநாட்டுச்சுற்றுப்பயணத்தைமுடித்துக்கொண்டுநாடுதிரும்பியஸ்டாலினுக்குவிமானநிலையத்தில்பிரமாண்டமானவரவேற்புக்கொடுத்துஅசத்தினார்கருணாநிதி.டாலினேஎதிர்பாராதவகையில்பிரமாண்டமானவரவேற்பும்பாராட்டுவிழாவும்நடைபெற்றது.கருணாநிதி,அன்பழகன்,ஆற்காடுவீராசாமி,கனிமொழிஉட்படதிராவிடமுன்னேற்றக்கழகத்தலைவர்களும்,தொண்டர்களும்விமானநிலையத்தில்நிறைந்திருந்தனர்.அழகிரியும்,வீரபாண்டிஆறுமுகம்இந்நிகழ்ச்சிகளில்கலந்துகொள்ளவில்லை.
டி.ஆர்.பாலுவுக்கும்,அமைச்சர்பழனிமாணிக்கத்துக்கும்இடையேஏற்பட்டகருத்துமோதலின்போதுஅழகிரியும்,ஸ்டாலினும்இணைந்துடி.ஆர்.பாலுவுக்காகவாதிட்டனர்.வெளிநாட்டுப்பயணத்தைமுடித்துக்கொண்டுதாயகம்திரும்பியஸ்டாலினைவரவேற்றவர்களில்டி.ஆர்.பாலுமுன்னிலையிலிருந்தார்.

ஸ்டாலின்,அழகிரி,கனிமொழிஎனக்முகோணஅதிகாரப்போட்டியில்திராவிட‌முன்னேற்றக்கழகம்சிக்கித்தவிப்பதாகசெய்திகள்கசிந்துள்ளநிலையில்ஸ்டாலினைவரவேற்கவிமானநிலையத்துக்குகனிமொழிசென்றதுபலரைஆச்சரியப்படவைத்துள்ளது.
திராவிடமுன்னேற்றக்கழகத்தின்அடுத்ததலைவர்யாரென்பதில்ஸ்டாலினுக்கும்,அழகிரிக்கும்இடையேபனிப்போர்நடைபெறுகிறது.அன்பழகன்போன்றமூத்ததலைவர்கள்ஸ்டாலினின்பக்கம்நிற்கின்றனர்.கருணாநிதியைத்தவிர‌வேறுயாரையும்தலைவராகஏற்கமாட்டேன்என்றுசபதம்செய்துள்ளார்அழகிரி.இந்தநிலையில்,தனக்குஅடுத்துஸ்டாலின்தான்தலைவர்என்றுசமிக்ஞைகாட்டியுள்ளார்கருணாநிதி.
மெட்ரோநியூஸ் 16/10/12


Friday, November 16, 2012

தாலிபாக்கியம்


வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு  இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது.

  இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா? அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை 

  கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன். இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு ந‌டக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள்.

  த‌ன‌க்கு இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் என்று வ‌ள்ளிப்பிள்ளை க‌ன‌விலும் நினைக்க‌வில்லை.ந‌ட‌க்க‌ப்போவ‌து ந‌ல்ல‌தென்றுதான் அனைவ‌ரும் கூறுகிறார்க‌ள். ஆனால் அவ‌ளுக்கு இதி துளி கூட‌விருப்ப‌ம் இல்‌லை.

   வ‌ள்ளிபிள்ளையின் க‌ண‌வ‌ன் க‌ந்த‌சாமிக்கு வ‌லு ச‌ந்தோச‌ம். அவ‌ர‌து வாழ்நாளில் செய்ய‌முடியாத‌ சாத‌னை இன்று ந‌ட‌க்க‌ப்போகிற‌து என்பதில் அவ‌ருக்கு இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி.க‌ந்த‌‌சாமியின்மீது வ‌ள்ளிப்பிள்ளைக்கு ஏற்ப‌ட்ட‌கோப‌ம் இன்னும் அட‌ங்க‌வில்லை.

   எத்த‌னை வ‌ய‌தில் த‌ன‌க்குத்திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌தென்று வ‌ள்ளிப்பிள்ளைக்குத்தெரியாது. அவள் ஏழாம் வ‌குப்பில் ப‌டித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் த‌க‌ப்ப‌ன் வ‌ந்து இடை‌யில் கூட்டிச்சென்றார்.அன்று இர‌வு  க‌ந்த‌சாமியின் கையால் சோறு குடுப்பித்தார்க‌ள்.அன்றிலிருந்து அவ‌ள் க‌ந்த‌சாமியின் ம‌னைவி.

    க‌ந்த‌சாமி வ‌ள்ளிப்பிள்ளையின் முறை மைத்துன‌ன்.ந‌ல்ல‌ குடிகார‌ன்.க‌ள்ளு,சாராய‌ம், க‌சிப்பு என‌ எது கிடைத்தாலும் முடாக்க‌ண‌க்கில் குடிப்பான்.கா ணி,பூமி இருந்த‌த‌னால் ப‌டிப்பைப்ப‌ற்றிக் க‌ந்த‌சாமி க‌வ‌லைப்ப‌ட‌வில்லை.

வ‌ருட‌ம் கூட‌க்கூட‌ க‌ந்த‌சாமியின் குடும்‌ப எண்ணிக்கையும் கூடிய‌து.நான்கு பெண்பிள்ளைக‌ளும்  க‌டைசியாக‌ ஒரு ஆண் குழ‌ந்தையும் பிற‌ந்த‌பின்ன‌ர் குடும்ப‌ அங்க‌த்த‌வ‌ர் தொகையும் நின்று விட்ட‌து.

 வ‌ள்ளிப்பிள்ளையின் பெண் பிள்ளைக‌ள் அனைவ‌ரும் அழ‌கான‌வர்க‌ள் என்ப‌த‌னால் க‌னடா,ஜேர்ம‌னி,பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய‌நாடுக‌ளில் உள்ள‌ உறவின‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் ச‌ம்ப‌ந்திக‌ளாயின‌ர்.க‌டைசி யா க‌ப்பிற‌ந்த‌ வ‌னும் மூத்த‌ அக்காவுட‌ன் க‌ன‌டாவுக்குச்சென்றுவிட்டான்.

   ஒரு குறையும் இல்லாம‌ல் வ‌ள்ளிப்பிள்ளை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அளுக்கு ஒரு குறை இருப்ப‌தாக‌ க‌ந்த‌சாமி கூறிய‌தால் தான் இன்று அந்த‌க்குறையைத்தீர்ப்ப‌த‌ற்கான ஏற்பாடு நடைபெறுகிற‌து.

  ஆல‌ம‌ர‌த்துக்குக்கீழே ஒ ரு த‌டியாகக்‌கிட‌ந்த‌ அண்ண‌மார் இன்று பிள்ளையார் கோயிலாகி உள் ம‌ண்ட‌ப‌ம் ,வெளி ம‌ண்ட‌ப‌ம்,வெளி வீதி, தேர் என்று சிற‌ப்பாக‌ இருக்கிற‌து.ஊரிலுள்ள‌ மண்வீடுக‌ள் எல்லாம் மாளிகையாகி விட்ட‌ன‌.ஊரே சிற‌ப்பாக‌ இருக்கும்போது வள்ளிப்பிள்ளை ஏன் சிற‌ப்பாக‌ இருக்க‌க்கூடாது என‌க்க‌ந்த‌சாமி கேட்ட‌த‌னால் இன்று பிள்ளையார் கோயிலில் வ‌ள்ளிப்பிள்ளையின் க‌ழுத்தில் தாலிக‌ட்ட‌ப்போகிறார் க‌ந்த‌சாமி.

    "என்ன‌ பொம்ளை முக‌த்திலை வெக்க‌ம் க‌ளைக‌ட்டுது".சுந்த‌ரேச‌க்குருக்க‌ள் வ‌ள்ளிப்பிள்ளையைப்பார்த்து ப‌கிடி ப‌ண்ணினார்.   

   "எங்க மாப்பிளை? அவ‌ர் எப்ப‌வும் மாப்பிளைதான்.பேர‌ன் பிற‌ந்தா என்ன‌? பேத்தி பிற‌ந்தா என்ன‌? பூட்டி பிற‌ந்தா என்ன‌? க‌ந்த‌சாமி எண்டைக்கும் மாப்பிளைதான்" சுந்த‌ரேச‌க்குருக்க‌ள் கூறிய‌தைக்கேட்ட‌ வ‌ள்ளிப்பிள்ளை மேலும் வெட்க‌ப்ப‌ட்டாள்.

    தொப்புளில் புர‌ளும் இர‌ட்டைப்ப‌ட்டுச்ச‌ங்கிலி, புலிப்ப‌ல்லுப்ப‌தித்த‌ ப‌த‌க்க‌ம்,த‌டித்த‌ கைச்ச‌ங்கிலி,விர‌ல்க‌ள் நிறைய‌ மோதிர‌ம், த‌ங்க‌முலாம் பூசிய‌ கைக்க‌டிகார‌ம் என‌ ந‌கைக்க‌டைபோல் ஜொலித்தார் க‌ந்த‌சாமி.இத‌ற்கு மாறாக‌ வ‌ள்ளிப்பிள்ளையின் உட‌லை ஒரு நூல் ச‌ங்கிலியும் ஒரு சோடி காப்புமே அல‌ங்க‌ரித்த‌ன‌.

   ஆல‌ய‌ம‌ணி டாண் டாண் என‌ ஒலி எழும்பிய‌போது  விஷேட‌ பூஜையின் பின் த‌ன‌து அன்பு ம‌னைவியின் க‌ழுத்தில் க‌ந்த‌சாமி தாலி க‌ட்டினார். க‌ந்த‌சாமியின் ம‌ன‌தில் இருந்த‌ பார‌ம் இற‌ங்கிய‌து.வ‌ள்ளிப்பிள்ளையின் க‌ழுத்தில் பார‌ம் ஏறிய‌து.வாழ்ந்துகெட்ட‌ நேர‌த்தில் இது தேவையா என‌ வ‌ள்ளிப்பிள்ளை கேட்ட‌போது,தேவைதான் என‌ப்பிள்ளைக‌ள் கூறிய‌தால் பிள்ளைக‌ள் செய்து கொடுத்த‌ தாலியைச்சும‌ந்தாள் வ‌ள்ளிப்பிள்ளை.

   க‌ந்த‌சாமியின் வீடு அன்று க‌ல்யாண‌க்க‌ளை க‌ட்டிய‌து.உற‌வின‌ர்க‌ள்,ந‌ண்ப‌ர்க‌ள்,ச‌ம்ப‌ந்தி வீட்டுக்கார‌ர்க‌ள் எல்லோருக்கும் த‌ட‌ல் புட‌லாக க‌ல்யாண‌ விருந்து ந‌டைபெற்ற‌து.க‌ந்த‌சாமியும் த‌ன் ப‌ங்குக்கு போத்த‌ல் போத்த‌லாக‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ஊற்றிக்கொடுத்தார்.எப்ப‌வோ ந‌ட‌க்க‌ வேண்டிய‌ ந‌ல்ல‌ காரிய‌ம் எத்த‌னையோ வ‌ருட‌ங்க‌ளின் பின் ந‌டந்த‌து.

  இர‌வு இர‌ண்டும‌ணி வ‌ரை க‌ந்த‌சாமியும் வ‌ள்ளிப்பிள்ளையும் நித்திரை கொள்ள‌வில்லை. ஐந்து பிள்ளைக‌ளும் மாறிமாறிக்க‌தைத்தார்க‌ள்.அதிகாலை ஐந்து ம‌ணிக்கு எழும்பி தோட்ட‌த்துக்குப்போகும் க‌ந்த‌சாமி எட்டும‌ணி வ‌ரை எழும்ப‌வில்‌லை.நித்தி ரை‌ம் முழிப்பும் அள‌வுக்கு மிஞ்சின‌ குடியும் அவ‌ரை எழும்ப‌விட‌வில்‌லை.

"என்‌ன‌ப்பா இன்னும் எளும்ப‌ ம‌ன‌மில்லையே"

 "எளும்புற‌ன் எளும்புற‌ன்" என‌க்கூறிக்கொண்டு க‌ண்விழித்த‌ க‌ந்த‌சாமிக்கு வ‌ள்ளிப்பிள்ளையின் புதுப்பொலிவு ஆச்ச‌ரிய‌த்தைக்கொடுத்த‌து.ம‌டிப்புக்க‌லையாத‌ புதுத்தாலியுட‌ன் வ‌ள்ளிப்பிள்ளை வேலை செய்வ‌தைப்பார்த்த‌ க‌ந்த‌சாமியின் ம‌ன‌ம் ஒருக‌ண‌ம் துணுக்குற்ற‌து.
குளித்துச்சாப்பிட்டுவிட்டுவ‌ழ‌மைபோல் சை‌க்கிளுட‌ன் வெளியேறினார் க‌ந்த‌சாமி.

  "என்‌ன‌ப்பா எங்கை போறியள்? நேத்து க‌ன‌க்க‌ குடிச்ச‌னீங்க‌ள்தானே. இண்டைக்கெண்டாலும் குடியாதேங்கோ"

  "இல்லை இல்லை குடிக்க‌ப்போகேல்லை.பொடிய‌னுக்கு ஒரு ச‌ம்ப‌ந்த‌ம் பாக்க‌ச்சொல்லி புறோக்க‌ருக்குச்சொன்ன‌னான். அந்தாள் இண்டைக்கு வ‌ர‌ச்சொன்ன‌து. நான் ம‌ற‌ந்துபோன‌ன்." எனக்கூறிக்கொண்டு சைக்கிளை உதைத்து ஏறினார் க‌ந்த‌சாமி.

   வீட்டு வாச‌லில் சைக்கிள் ம‌ணிச்ச‌த்த‌ம் கேட்ட‌து."ஆர் ஓவ‌சிய‌ரே? அவ‌ர் ச‌ந்திப்ப‌க்‌க‌ம் போட்டார்"உள்ளே இருந்து குர‌ல் கொடுத்தார் வ‌ள்ளிப்பிள்ளை.

"ச‌ந்திக்கோ? அங்கை ஏதோபிர‌ச்சின‌யாம்.அதுதான் அந்த‌ப்ப‌க்க‌ம் போக‌வேண்டாம் எண்டு சொல்ல‌த்தான் வ‌ந்த‌னான்"

"பிர‌ச்சினையோ?எ ன்‌ன‌பிர‌ச்சினை ஓவ‌சிய‌ர்?"

 "ஏதோ ஹ‌ர்த்தாலாம். க‌டையைப்பூட்ட‌ வேண்டாம் எண்டு ஆமிசொல்லுதாம். க‌டை எல்லாம் பூட்டித்தான் கிட‌க்காம்"  

  ஓவ‌சிய‌ர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ச‌ந்திப்பக்‌க‌ம் துப்பாக்கி வெடிச்ச‌த்த‌ம் கேட்ட‌து.
 
 "என்ன‌ ஓவ‌சிய‌ர் வெடிச்ச‌த்த‌ம் கேக்குது?"  வ‌ள்ளிப்பிள்ளை க‌ல‌க்க‌த்துட‌ன் கேட்டாள்.

  "நீ உள்ளை போ பிள்ளை நான் பாத்து வாற‌ன்."  என‌க்கூறிய‌ப‌டி ஓவ‌சிய‌ர் வேக‌மாக‌ச் ச‌ந்திப்பக்‌க‌ம் சைக்கிளைச்செலுத்தினார்.


 ஓவ‌சிய‌ர் ச‌ந்தியை நோக்கிச்செல்ல‌ ச‌ந்தியிலிருந்து ச‌ன‌ம் அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு ஓடிவ‌ந்த‌து.

  "ஓவசிரிய‌ர் அங்கை போகாதேங்கோ. ஆமிக்கார‌ன் சுடுறான்.நாலுபேர் செத்துப்போச்சின‌ம்.க‌ந்த‌சாமிக்கும் சூடு ப‌ட்டுப்போச்சு.திரும்புங்கோ." என்றான் எதிரேவ‌ந்த ப‌சுப‌தி.

"எடே க‌ந்த‌சாமிக்கு என்ன‌ ந‌ட‌ந்து."

  ஓவ‌சிய‌ரின் கேள்விக்குப்பதில் கூறாம‌ல் சைக்கிளை வேக‌மாக‌ மிதித்தான் ப‌சுப‌தி.

சூர‌ன்.ஏ.ர‌விவ‌ர்மா

மித்திர‌ன் 05/11/2006

Wednesday, November 14, 2012

தண்ணீர் தண்ணீர்


பட..பட...பட....படபடபட..பட‌....படகதவுதட்டும் சத்தத்தினால் திடுக்கிட்டு விழித்தார் சண்முகம்பிள்ளை. மங்கிய வெளிச்சத்தில் நேரத்தைப்பார்த்தார்.12 .45 மணி. ஆமி செக்பண்ண வந்திருக்கிறாங்கள் என நினைத்தபடி படுக்கையைவிட்டு பதட்டத்துடன் எழுந்தார்.

 அலுவலக விசயமாக கொழும்புக்குப்போகவேண்டும். பிரச்சினை இல்லாத லொட்ஜ் எது அன்று சண்முகம்பிள்ளை கேட்போது ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள இந்த லொட்ஜ் விலாசத்தைக்கொடுத்தார் சுந்தரம்.

 "நான் கொழும்புக்குப்போன இந்த லொட்ஜிலைதான் நிக்கிறனான். ஒரு பிரச்சினையுமிராது. செக் பண்ணேக்கை பிடிபட்டாலும் அலுவல் பாத்து எடுத்துப்போடுவாங்கள்."என்ற சுந்தரத்தின் வாக்குறுதியை நம்பி வந்த
சண்முகப்பிள்ளையின் மனது படபடத்தது.

  ‌...‌...‌..‌...‌...‌...கதவில் ட்டும் த்தம் அதிகரித்தது. அடையாளஅட்டை,பொலிஸ்ரிப்போட்,யாழ்ப்பாணஅடையாளஅட்டை,அலுவக்கடிதம் கையில் எடுத்தார்.ண்முகம்பிள்ளையின் நாவண்டது. ஸ்வதிவிலாஸில் சாப்பிட்டசாலாத்தோசை தாகத்தை அதிகமாக்கியது.வெளியே ‌‌ந்தடி அதிகமாகியது.யாரையோ பிடித்துவிட்டார்கள் எனநினைத்தடி பைப்பைத்திருகி இரண்டு கிளாஸ் ண்ணீரை வெனக்குடித்தபின் வைத்திறந்தார்.

 "ஐயா ண்ணி குடிச்சஅம்பதுபேர் வாந்தி எடுத்ததாலை. ஆஸ்பத்திரியிலை சேத்திருக்கினமாம். பைப்பிலை ண்ணி குடியாதையுங்கோ.இந்தாங்கோ ண்ணிப்போத்தல்"எனக்கூறியடி ண்ணீர்ப்போத்தலை ஒருவர் நீட்டினார்.

சூரன்..விவர்மா
15/04/10

Monday, November 12, 2012

விடியலைத்தேடி
கிரீச்.....கிரீச்....கிரீச்..... இருட்டின் அமைதியைக்கிழித்துக்கொண்டு அந்தப்பழைய சைக்கிள் மேட்டையும் பள்ளத்தையும் பொருட்படுத்தாது  விரைந்தது. சைக்கிளின் கிரீச் சத்தத்துக்குபோட்டியாகக்குரல் எழுப்பிய சுடலைக்குருவியின் சத்தம் ஓய்ந்துவிட்டது.  தூரத்தில்கேட்ட அந்தச்சைக்கிளின் சத்தத்தின்மூலம் வருவது ஜோசேப்தான் என்பதை உறுதி செய்தார் காதர்.

   "அண்ணை ஜொசேப்பு வாறான். இண்டைக்கு நல்ல செய்தி வருமெண்டு நினைக்கிறன்." என்றார் காதர்.காதரின் ஆறுதல் வார்த்தை குமாருக்குத்தெம்பைக்கொடுத்தது. கிரீச் என்ற சத்தம் காதரின் வீட்டுப்படலையடியில் நின்றது. படலையைத்திறந்து சைக்கிளை மரத்தில் சாத்தினார் ஜோசேப்.

 "ஆரது ஜோசப்பே"வீட்டினுள் இருந்துகேட்டபடியே வெளியே சென்றார் காதர்.
  "அது நான் ஜோசெப்" எனப்பதிலளித்தபடி வீட்டினுள் நுழைந்தார் ஜோசேப்.மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஜோசேப்பின் முகத்தை அனைவரும் ஆவலாகப்பார்த்தனர்.குளிர் காற்று அவ்வப்போது கைவிளக்கை அணைப்பது போல் போக்குக்காட்டிவிட்டுச்சென்றது.
  "எல்லாம் சரி இண்டைக்கு பத்து மணிக்கு போட் வெளிக்கிடுது.பத்து நிமிசத்திலை ட்ரக்ரர் வரும். ட்ரக்ரர் உங்களைக்கடற்கரையிலை இறக்கும் பிரச்சினை இல்லாமல் போய்ச்சேரலாம்".

 ஒரு கிழமைக்குமுன்பே பயணத்துக்குத்தயாராக இருந்தவர்களுக்கு பத்து நிமிடம் பல மணி நேரம் போல் தெரிந்தது.காதரின் குடும்பத்தவர்களை ஆரத்தழுவிய குமாரின் குடும்பத்தவர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர். குமாரின் மனவி, மகள் பிரியா, மகன் கிருஸ்ணா  ஆகியோர் காதரின் பிள்ளகளிடம் விடை பெற்றனர்.

 குமாரின் குடும்பம் ட்ரக்ரரில் ஏறியபோது காதரின்கண்கள் பனித்தன.குமாரைப்பற்றியோ அவரின் குடும்பத்தைப்பற்றியோ காதருக்கு எதுவும் தெரியாது.இந்தியாவுக்கு ஆட்களை அனுப்பு ஜோசேப் ஒரு வாரத்துக்குமுன் குமாரின் குடும்பத்தை  காதரின் வீட்டில் தங்கவைத்தார்.
குமாரின் குடும்பத்தவர்கள் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் கேட்ட காதரின் குடும்பம் அதிர்ச்சியடைந்தது. வீடு, சொத்து,சுகம் எல்லாவற்றையும் இழந்து இந்தியாவுக்குச்செல்லும் குமாரின் குடும்பத்தைப்பிரிவதால் நீண்ட நாள் நண்பனைப்பிரிவதுபோல் கவலைப்பட்டார் காதர்.
  ட்ரக்ர் கடற்கரையை அடைந்ததும் எல்லோரையும் ஒரே இடத்தில் நிற்கும்படி கூறிவிட்டு போனார் ஜோசேப். இந்தியாவுக்கு அகதியாகபோகும்பலர் ஆங்காங்கே நின்றனர்.  சிறிது நேரத்தில் இரண்டுபேருடன் வந்த ஜோசேப் இவ்வளவுபேரும் என்ரை ஆக்கள்.எண்ணிப்பாத்து கூட்டிப்போங்கோ என்றார்.
  ஜோசேப்புடன் வந்த இருவரும் அவர்களை எண்ணிப்பார்த்துவிட்டுத்தங்களுடன் அழைத்துச்சென்றனர். தமது மூட்டை முடிச்சுக்களைத்தூக்கிக்கொண்டு அந்த இருவரின் பின்னால் சென்றனர்.சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றவர்களுடன் அவர்கள் இணைந்தனர்.

  "கிருஸ்ணா" அந்த இருட்டிலும் குமாரின் மகன்  கிருஸ்ணாவை அடையாளம் கண்ட ஒருவர் குரல் கொடுத்தார். அந்தக்குரலோசையிலிருந்து தன்னை அழைத்தது லம்பேட் என உறுதிசெய்தான்கிருஸ்ணா .கிருஸ்ணாவின் வீடும் குமாரின் வீடும் இராணுவமுகாமுக்கு அருகே இருந்ததனால் சொந்தவீட்டிலிருந்து வெளியேறி தாய்நாட்டிலேயே அகதியானார்கள்.கிருஸ்ணாவும் லம்பேட்டும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.
இந்தியாவுக்கு அகதியாகச்செல்வது இரகசியமானதால் யாருக்கும் சொல்லாமலேயே புறப்பட்டனர்.எதிர்பாராத சந்திப்பினால் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
   அவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.கிருஸ்ணாவும், லம்பேட்டும் வெவ்வேறு ட்ரோலரில் ஏறும்படி பணிக்கப்பட்டனர்.
"அப்பா நான் லம்பேட்டோடைவாறன் " எனக்கூறிவிட்டு லம்பேட்டின் பின்னால் ஓடினான் கிருஸ்ணா. அதிர்ச்சியில் குமார் உறைந்து நிற்க ஐயா ஏறுங்கோ என குமாரைத்தூக்கி ஏற்றினார் ஒருவர். இருட்டிலே ஆளையாள் தெரியாது தடுமாறினார்கள்.அப்பா,அம்மா,தம்பி.தங்கச்சி,அண்ணா.அக்கா என்றும் பெயரைக்கூறியும் ஒருவரை ஒருவர் தேடினார்கள். பிரியாவின் குரலைக்கேட்ட குமார் தட்டுத்தடுமாறி அவர்களின் அருகில் சென்றார்.

    "எங்கையப்பா தம்பியைக்காணேல்லை". என்று மகனைத்தேடினார் குமாரின் மனைவி.பிரியாவும்தன் பங்குக்கு அண்ணா எங்கே என்றுகேட்டார்.குமாரின் உடம்பு படபடத்து வியர்வையில் நனைந்தது.

"அவன் லம்பேட்டோடை மற்ற போட்டிலை வாறான்"
தட்டுத்தடுமாறிக்கூறினார் குமார்.குமாரின் பதிலைக்கேட்ட மனைவி அதிர்ச்சியடைந்தார்.

"எடேதம்பி போட்டை நிப்பாட்டு போட்டை நிப்பாடு"  எனக்கூச்சலிட்டார்.

 "இதென்ன பஸ்ஸே கண்ட இடத்திலை நிப்பாட்ட.போட் நடுக்கடலிலை போகுது சத்தம் போடாதையணை" இருட்டிலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.

 "ஐயோ என்ரைபொடியன் போட் மாறி ஏறிப்போட்டான்.அந்தப்போட்டிலை இருந்து அவனை இந்தபோட்டுக்கு மாத்துங்கோ"

 " எணே ஆச்சி கத்தாதையணை. இதிலை நிப்பாட்டினா நேவிக்காரன் சுட்டுப்போடுவான்.கரைக்குப்போய் உன்ரை பொடியனைத்தேடலாம்."

   நேவிக்காரன் சுட்டுப்போடுவான் என்ற வசனம் பலரைக்கிலிகொள்ள வைத்தது.அந்த மிரட்டலால் குமாரின் மனைவியும் அமைதியானாள்.

   "அண்ணை நெருபெட்டி இருக்கா" குமாரின் அருகில் இருந்த ஒருவர் கேட்டார்.யாரோ ஒருவர் தீப்பெட்டியைக்கொடுத்தார். தீக்குச்சி வெளிச்சத்தில் அந்த இளைஞனின் முகத்தைக்கண்ட குமார் அதிர்ச்சியடைந்தார்.காணிப்பிரச்சினையின் போது துப்பாக்கியுடன் வந்து குமாரை மிரட்டிய இளைஞனும் அகதியாக வருவதை அறிந்த குமார் மனதுக்குள் சிரித்தார்.

    ட்ரோலரின் உள்ளே இருக்க விரும்பாத சிலர் மேல் தளத்தில் இருந்தனர்.எஞ்சினுக்கு அருகேசேர்ந்த கடல் நீரை சிறு பிளாஸ்ரிக் வாளியால் அள்ளி வெளியே ஊற்றினார் ஒருவர். அணியத்திலே கயிற்றைப்பிடித்து வழி காட்டியவர் எஞ்சினை நிப்பாட்டு எனச்சத்தம் போட்டார்.மேல்தளத்தில் இருந்தவர்கள் அவசரமாக உள்ளே அனுப்பப்பட்டனர். எஞ்சினை நிறுத்திவிட்டு நங்கூரத்தைக்கடலில் இறக்கினார்கள்.ஓட்டிகள் இருவரும் வழி காட்டியவருக்கு அருகில் சென்று அவர் காட்டிய திசையில் பார்த்தார்கள்.தூரத்திலே நேவியின் நடமாட்டம் தெரிந்தது.

  ஓட்டிகளில் ஒருவர் நட்சத்திரத்தைப்பார்த்து நேரத்தைக்கணித்தார். இந்த நேரத்தில் நேவி இவ்விடத்தில் நிற்பதில்லை.மூவரும் சுற்றிவரநோட்டமிட்டனர்.கண்ணுக்கெட்டியதூரத்தில் வேறு நேவிப்படகு எதுவும் தெரியவில்லை.தனித்து நிற்பது பாதுகாப்பில்லை என்பதனால் அது அதிக நேரம் நிற்காது உறுதியாக நம்பினார்கள்.

   மேல்தளத்தில் இருந்தவர்கள் அவசரமாக உள்ளே சென்றதனால் சலசலப்பு அதிகரித்தது.நித்திரையிலிருந்தவர்கள் எழுந்து மலங்க மலங்க முளித்தார்கள்.கடலிலே நேவி நிற்கும் செய்தி உள்ளே இருப்பவர்களிடம் கசிந்ததனால் சிலர் வாய்விட்டு அழத்தொடங்கினர்.சிலர் இஷ்டதெய்வங்களைத்துணைக்கு அழைத்தனர்.சிலரின் உடல் பயத்தில்சில்லிட்டது.

  கடல் அமைதியாக இருந்தது. மூவரும் அந்தக்கரும் புள்ளியையே உற்று நோக்கினார்கள்.இடையிடையே நாலாபுறமும் அவதானித்தனர்.  அவர்கள் எதிர்பார்த்த அந்தச் சம்பவம் ஆரம்பமானது.தூரத்தே தெரிந்த கரும்புள்ளி அசையத்தொடங்கியது.கரும்புள்ளி கண்ணைவிட்டு மறைந்ததும் ட்ரோலர் மீண்டும் புறப்பட்டது.அப்போது உள்ளே இருந்தவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஒருமணித்தியாலம் கடலில் தாமதித்ததனால் இந்திய எல்லையை விரைவில் அடைய வேண்டும் என்பதனால் ட்ரோலர் வேகம் பிடித்தது.

  திடீரெனக்கடலில் தோன்றிய வெளிச்சம் அனைவரையும் கிலியடைய வைத்தது.ட்ரோலரை நோக்கி அந்த வெளிச்சம் விரைந்தது. கூட்டிவை கூட்டிவை என அணியத்தில் நின்றவர் சத்தம் போட்டார்.. அமைதியைக்குலைத்துக்கொண்டு வெடிச்சத்தம் கேட்டது. ஐயோ நேவி சுடுறான் என ஒருவர் சத்தம்போட்டார்.

  உயிர் வாழவேண்டும் என்ற ஆசையில் தாய்நாட்டை விட்டுத்தப்பி ஓடுபவர்களின் உயிரைக்குடிக்கக்கடற்படைக்கப்பலிலிருந்து குண்டுகள் புறப்பட்டன.கடலிலே தீப்பிளம்பு ஒன்று தோன்றியது.போட் அடிபட்டுப்போச்சு தன்னையும் அறியாது அணியத்தில் நின்றவர் சத்தமாகச்சொன்னார்.  அதை அறிந்த குமாரின் மனைவி மகனை நினைத்து அழத்தொடங்கினாள்.

   இறங்குறதுக்கு ஆயத்தமாகுங்கோ என ஓட்டி ஒருவர் கூறியதால் அனைவரும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.ராமேஸ்வரம் வந்திட்டுது என ஒருவர் அருகில் இருப்பவரிடம் சொல்லிச்சந்தோசப்பட்டார்.முழங்காலளவு தண்ணீரில் அனைவரும் இறக்கப்பட்டனர்.ஓட்டிகளில் ஒருவர்முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.பெட்டிகளையும் பாக்குகளையும் கீழேவைக்கமுடியாததனால் தலையிலும் இடுப்பிலும் சுமந்து சென்றனர்.
   கண்ணுக்கு எட்டியதூரத்தில் கடற்கரையோ கட்டடங்களோ
தெரியாததனால்தயக்கத்துடன் அவரைப்பின் தொடர்ந்தனர்.கடல் நீர் இல்லாத ஒரு இடத்தைக்காட்டி இதிலே நில்லுங்கோ. காலையிலை எங்கடை ஆக்கள் வந்து உங்களைக்கூட்டிப்போவார்கள் எனக்கூறிவிட்டுச்சென்றார். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே  அவர்களை ஏற்றிவந்த ட்ரோலர் இருட்டில் மறைந்தது.

    ராமேஸ்வரத்தில் இறங்கியதும் அகதி முகாமுக்குப்போகலாம் என நம்பியவர்கள் கடலில் இறக்கிவிடப்பட்டதனால் செய்வதறியாது தடுமாறினர்.நடுக்கடலில் எரிந்த போட்டை நினைத்து குமாரின் குடும்பம் கண்ணீர் சிந்தியது. அவர்கள் நின்ற இடத்தில் தண்ணீர் அதிகரித்தது.முழங்கால் வரைஉயர்ந்த தண்ணீர் இடுப்புவரை சென்றது.கடல் தம்மை மூழ்கடித்து விடுமோ என்ற பயத்தில் பலர் அழத்தொடங்கினர்.சிறிது நேரத்தில் நீர் குறைந்து பின்னர் உயர்ந்தது.இந்திய மீன் பிடிப்படகுகளின் வெளிச்சங்கள் ஆங்காங்கே தெரிந்தன.இருள்விலகி வெளிச்சம் மெதுவாகத்தோன்றத்தொடங்கியது. அவர்களின் கண்களுக்கு கடற்கரை தெரியவில்லை.தாம் மண்மேட்டிலே இறக்கிவிடப்பட்டதை அப்போதுதான் உணர்ந்துகொண்டனர்.

   இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாகச்சென்றவர்களில் ஒருவர் தனது சிறிய  வானொலிக்கு உயிர் கொடுத்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தி அறிக்கை ஒலி  அவர்களைப்பரபரப்படைய வைத்தது.கடற்படையினரின்  தாக்குதலில்பயங்கரவாதிகளின் படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்ற தலைப்புச்செய்தியைக்கேட்டதும் குமாரின் குடும்பம் கதறி அழத்தொடங்கியது.

  "ஐயோ அந்தப்பயங்கரவாதத்துக்குப்பயந்துதானே அகதியா வந்தனாங்கள். என்ரைபிள்ளையபயங்கரவாதியாம்"குமாரின் மனைவி எழுப்பிய அவல ஓலத்தில் வானொலிச்செய்தியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.கடலை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த ஒருவரின் முகத்தில் சந்தோச ரேகை தெரிந்தது.தான் கண்டதை மற்றவர்களுக்குக் காட்டினார்.அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். தூரத்தேதெரிந்த அப்படகு அவர்களை நோக்கி வந்தது.ஓட்டி கூறியதுபோல் அவர்களைக்காப்பாற்ற அப்படகு வருகிறதென அவர்கள் நினைத்தார்கள்.அருகில் வந்தபின்னர் அது அவர்களைக்காப்பாற்றவந்த படகு அல்ல இலங்கையிலிருந்து அவர்களுடன் வந்த அகதி ட்ரோலர் என்பதை அறிந்தார்கள்.
 ட்ரோலரில் இருந்து இறங்கியவர்கள் அந்த மேட்டை நோக்கிச்சென்றார்கள்.

  "அப்பா லம்பேட் வாறார். அண்ணாவும் வருவார்" எனப் ப்ரியா சந்தோசத்துடன் சத்தம் போட்டாள்.குமாரும் லம்பேட்டை அடையாளம் கண்டார்.குமாரின் மனைவியின் கண்ணிலிருந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது.குமார் ஓடிச்சென்று லம்பேட்டைக்கட்டிபிடித்து கிருஸ்ணா எங்கே எனக்கேட்டார்.
"அவன் வரேல்லை. இயக்கத்துக்குப்போட்டான்" என்றார் லம்பேட்.

சூரன்.ஏ.ரவிவர்மா.
25/10/12