Showing posts with label ராஜஸ்தான். Show all posts
Showing posts with label ராஜஸ்தான். Show all posts

Tuesday, April 29, 2025

சூறாவளியாகச் சுழன்றடித்த சூர்யவன்ஷி


 

 கிறிக்கெற் உலகில் சாதனை படைத்த 14 வயதுப் பாலகனைப் பற்றியே விளையாட்டுலகம் இப்போது பேசுகிறது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சியின் அபார சதத்தால் ராஜஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெற்களை இழந்து 209 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 80 ஓட்டங்களும் பட்லர் 50 ஓட்டங்களும் எடுத்தனர் .

கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூர்யவன்சி, யஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ராஜஸ்தான் அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்தனர். 14 வயது சிறுவனான வைபப் சூரியவன்சி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். ஒரு பக்கம் இவர் அடித்து ஆட மறுமுனையில் ஜெய்ஸ்வால் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார். சூர்யவன்சி 17 பந்துகளில் தனது அரை சதத்தை கடக்க இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் எனோட்டங்ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையும் ஐ பி எல் வரலாற்றில் சூர்யவன்சி படைத்தார். தொடர்ந்து இருவரும் தங்களது அதிரையை தொடர ராஜஸ்தான் ராயல் அணி எட்டாவது ஓவரிலேயே 100 ஓட்டங்களை கடந்தது.

அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் சூரியவன்சி தனதாக்கினார்.

38 பந்துகளில் 103 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற மறுமுனையில் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.

ல் ராஜஸ்தான் ராயல் 15.3 ஓவர்களில் 210 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஜெய்ஸ்வால் 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும் கப்டன் ரியான் பராக் 32 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை களத்தில்

53 பந்துகளில் சதம் அடித்த சூர்யவ்வன்ஷி   3 உலக சாதனையுடன்  6 ஐபிஎல் வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளார்.  11 சிக்ஸர்கள்  7 பவுண்டரிகள் அடித்து குஜராத் பந்து வீச்சாள‌ர்களை திணறடித்தார்.

14 வருடம் 32 வயதில் 100 ஓட்டங்களைத் தொட்ட சூர்யவன்ஷி  ரி20 கிறிக்கெட்ற்ல் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பைக்கு எதிராக 2013ஆம் ஆண்டு உள்ளூர் தொடரில் மகாராஷ்டிராவின் விஜய் ஜோல் 18 வருடம் 118 நாட்களில் சதத்தை அடித்தார்.


ரி20 கிறிக்கெற்றில்  மிகவும் இளம் வயதில் அரை சதத்தை அடித்த வீரர் என்று உலக சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர்  முகமது நபியின்  மகன் ஹசன் ஐசக்கில் 2022ஆம் ஆண்டு 15 வருடம் 360 நாளில் அரை சதத்தை அடித்ததே முந்தைய சாதனையாகும்.

 இந்தப் போட்டியில் அடித்த 101  ஓட்டங்களில் 93.06%  ஓட்டங்களை அதாவது 94 ஒட்டங்களை சூர்யவன்ஷி பவுண்டரிகள்   சிக்ஸர்களால் மட்டுமே அடித்துள்ளார்.  ஒரு  ரி20 போட்டியில்  பவுண்டரிகளால் மட்டுமே அதிக சதவீத  ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். 

 2024ஆம் ஆண்டு மேகாலயாவுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா 92.45%  ப்ப்ட்டங்களை  பவுண்டரிகளால் அடித்ததே முந்தைய சாதனை.

. ஐபிஎல் தொடரில் இளம் வயதில் 50 ஓட்டங்களையும் , 100  ஓட்டங்களையும் அடித்த இந்திய வீரர் என்ற இரட்டை வரலாற்று சாதனைகளையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக

  ரியான் பராக்  17 வருடம் 175 நாட்களில் அரை சதம் அடித்தார்.

 மனிஷ் பாண்டே  19 வருடம் 253 நாட்களில் சதம் அடித்தார்.   அந்த இருவரின் சாதனைகளையும் சூர்யவன்ஷி  ஒரு போட்டியிலேயே முறியடித்தார்.

  5. 35 பந்துகளில் சதத்தை அடித்த சூர்யவன்சி ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் சரித்திரத்தையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2010இல் மும்பைக்கு எதிராக ராஜஸ்தானுக்காக யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். 

கிறிஸ் கெய்லுக்கு   பின் 2வது வேகமான ஐபிஎல் சதத்தை அடித்த வீரராகவும் சூரியவன்சி சாதனை படைத்துள்ளார்.

க்றிஸ் கெய்ல்ஸ் - 30 பந்துகளிலும்

வைபவ் சூர்யவன்ஷி - 35 பந்துகளிலும்

யூசஃப் பதான் - 37 பந்துகளிலும்

டேவிட் மில்லர் - 38  பந்துகளிலும்

ட்ராவிஸ் ஜெட் - 39 பந்துகளிலும் சதம் அடித்தர்.  

  ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் முஜீப் உர் ரஹ்மான் 17 வருடம் 39 நாட்களில் ஆட்டநாயகன் விருதை வென்றதே முந்தைய சாதனை.

ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக (11) சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2010இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே  வீரர்  முரளி விஜயையும் 11 சிக்சர்கள் அடித்துள்ளார். இது போக குறைந்த (3) போட்டிகளில் ஐபிஎல் சதத்தை அடித்த இந்திய வீரராகவும் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சேசிங்கில் வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

  

Wednesday, April 9, 2025

சாதித்தார் சாய் சுதர்சன் வென்றது குஜராத்


  குஜராத் மாநிலம் அஹம‌தாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் போட்டியில்   ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய குஜராத 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனான சாய் சுதர்சன் ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார்.

நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  ராஜஸ்தான் கப்டன் சஞ்சு சாம்சன், பந்து வீசைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத  20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ராஜஸ்தான் 159  ஓட்டங்கள் எடுத்தது.

  குஜராத் அணிக்கு கப்டன் சுப்மன் கில் 2  ஓட்டங்களுடன் வெளியேறினார். சாய் சுதர்சன், பட்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய சுதர்சன், 32 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 80  ஓட்டங்கள் சேர்த்த போது தீக் ஷனா பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்த  பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் வெளியேற களத்துக்கு வந்த ஷாருகான் அதிரடி காட்டினார்.

 பரூக்கி வீசிய 12வது ஓவரில்   2 பவுண்டரி  அடித்த‌ ஷாருக்கான், ஷாருக்கான், தீக் ஷனா வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து மிரட்டினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 62  ஓட்டங்கள்  சேர்த்த போது தீக் ஷனா 'சுழலில்' சிக்கிய  ஷாருக்கான்  36  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.53 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்த சாய்சுதர்சன் ஆட்டமிழந்தார். 

சுதர்சன் 82 ரன்னில் (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ரஷித் கான் (12) நிலைக்கவில்லை. சந்தீப் சர்மா வீசிய 20வது ஓவரில் அசத்திய ராகுல் திவாதியா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

குஜராத் அணி 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 217  ஓட்டங்கள் எடுத்தது. 218 எனும்  இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தானின் வீரர்கள் நிலைக்கவில்லை கப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஜோடி ஓரளவு கைகொடுத்தது.  மூன்றாவது விக்கெட்டுக்கு 48  ஓட்டங்கள் அடித்தபோது 26 ஓட்டங்கள் எடுத்த பராக் ஆட்டமிழந்தார்  பறக்கவிட்டார்.  சாம்சன் 41 ,ஹெட் மெயர்  52 ஓட்டங்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. 

ஐபிஎல் இல் விளையாடிய  முதல் 30 இன்னிங்ஸ்களில்  அதிக  ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சாய் சுதர்சன். இவர், 1307  ஓட்டங்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில்  1338 ஓட்டங்களுடன் ஷான் மார்ஷ்  உள்ளார். 1141 ஓட்டங்களுடன்  கிறிஸ் கெயில்: மூன்றாவது இடத்திலும், 1096 ஓட்டங்களுடன் . கேன் வில்லியம்சன் நான்காவது இடத்திலும், 1082 ஓட்டங்களுடன்  மேத்தியூ ஹைடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி கப்டன் சஞ்சு சாம்சன்,   தனது 300வது 'ரி-20' போட்டியில் பங்கேற்றார். 

பிரிமியர் லீக் அரங்கில் குஜராத் அணி, ராஜஸ்தானுக்கு எதிராக 6வது வெற்றியை பதிவு செய்தது.  இரு  அணிகளும் மோதிய 7 போட்டியில், குஜராத் 6 போட்டிகளிலும்,  ராஜஸ்தான் ஒரு போட்டியிலும்  வென்றன.

 

Sunday, March 23, 2025

உலக சாதனையுடன் வென்றது ஹைதராபாத்

      ஹைதராபாத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான  போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் சன் ரைசஸ் ஹைதராபாத்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத்  முதலில் துடுபெடுத்தாடி  6 விக்கெற்களை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்தது.

287 எனும் இமாலய  இகக்குடன் களம்  இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கலில்விக்கெற்களை இழந்து 242 ஓட்டங்கள் எடுத்தது.ஹைதராபாத் 44  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இஷான் கிசான் சதத்தை அடித்தார்.  47 பந்துகளில் ஆட்டமிழக்காது  106*  ஓட்டங்கள்   அடித்தார்டிராவிஸ் ஹெட்  31 பந்துகளில் 67 ஓட்டங்களும், ஹென்றிச் க்ளாஸென்  14 பந்துகளில் 34 ஓட்டங்களும்,   நிதிஷ் ரெட்டி   15 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

4 ஓவர்களில் 76 ஓட்டங்களிக் கொடுத்து  ஆச்சார் வெறுப்பேற்றினார்.

   தேஷ்பாண்டே, 3, தீக்சனா 2 விக்கெற்களை எடுத்தனர்ராஜஸ்தானுக்கு  வீரர்களான ஜெய்ஸ்வால் 1, கப்டன் ரியான் பராக் 4   நிதீஷ் ராணா 11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.   சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டினார்மூன்றாவது விக்கெட்டுக்கு 11   ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  சாம்சன்  66 (37)    ஜுரேல் 70 ஓட்டங்கள் எடுத்தனர்.    சிம்ரோன் ஹெட்மயர் முடிந்தளவுக்கு அதிரடியாக போராடி 42 , சுபம் துபே 34* (11)  ஓட்டங்கள்  எடுத்தனர்.   20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 242 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தப் போட்டியையும் சேர்த்து  ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்  4 முறை 250க்கும் மேற்பட்ட  குவித்து சாதனை படைத்தது. (287/3, 286/6, 277/3, 266/7) குவித்துள்ளது. இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250  ஓட்டங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி,இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே ஆகியன தலா 3 முறை 250+ ஓட்டங் கள் அடித்ததே முந்தைய சாதனை. இஷான் கிஷான்  ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  

Sunday, May 12, 2024

ஐபிஎல் 2024 சாதனைகள்

                                   சாதனை வீரர் சஞ்சு சாம்சன் 

சஞ்சு சாம்சனின்  தலைமையில் அசத்தி வரும் ராஜஸ்தான் கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டியில் 471* ஓட்டங்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் அதிக ஓட்டங் கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல போட்டியிட்டு வருகிறார். மே 7ஆம் திகதி  டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 222 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தானுக்கு தனி ஒருவனாக 86 (46) ஓட்டங்கள் குவித்த அவர் முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடினார். அந்தப் போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்த சஞ்சு சாம்சன் இதுவரை தனது ஐபிஎல் கேரியரில் 159 இன்னிங்ஸில் 205* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் எம்எஸ் டோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

 எம்.எஸ். டோனி, 165 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் விராட் கோலி 180, ரோஹித் சர்மா 185, சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் டெல்லிக்கு எதிரான போட்டியும் சேர்த்து ராஜஸ்தான் அணிக்கு இதுவரை சஞ்சு சாம்சன் 56 போட்டிகளில் கப்டனாக செயல்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட வீரர் என்ற ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வார்னே 55 போட்டிகளில் ராஜஸ்தானின் கப்டனாக செயல்பட்டதே முந்தைய சாதனையாகும்.

டெல்லி, சென்னையை மிஞ்சி ஹைதராபாத்  சாதனை

லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.   முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விகெற்களை இழந்து 165  ஓட்டங்கள் எடுத்தது. ஹைதராபாத் விக்கெற் இழப்பு இன்றி  167  ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75* (28) ஓட்டங்கள் குவித்தார்.    டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரி 8 சிக்சருடன் 89* (30) ஓட்டங் கள் குவித்தார். அதனால்  45 நிமுடங்களில் 9.4 ஓவரிலேயே 167 ஓட்டங்கள் எடுத்த லக்னோ மிகவும் எளிதாக வெற்றி பெற்றது.   ஐபிஎல் வரலாற்றில் 150+ இலக்கை அதிவேகமாக வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற   புதிய வரலாறு படைத்துள்ளது

2008ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 155 ஓட்டங்கள் இலக்கை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12 ஓவரில் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும்.  இந்த வருடம் முழுவதுமே எதிரணிகளை கருணையின்றி அடித்து நொறுக்கி வரும் ஹைதராபாத் அணி மொத்தமாக 146* சிக்சர்கள் பறக்க விட்டுள்ளது.  ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்துள்ள ஹைதராபாத் புதிய சாதனை படைத்துள்ளது.

2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 9.4 ஓவரிலேயே 167/0 ஓடங்கள் எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 10 ஓவரின் முடிவில் அதிகபட்ச  ஓட்டங் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்தது. இதற்கு முன் இதே சீசனில் டெல்லிக்கு எதிராக முதல் 10 ஓவரில் ஹைதராபாத் 158/4 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Thursday, April 11, 2024

விதிமுறையை மீறிய ராஜஸ்தான் முதல் தோல்வியுடன் சஞ்சு சாம்சனுக்கு தண்டனை

ஜெய்பூரில் நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் 3 விக்கெட்களால் தோல்வியடைந்ததுராஜஸ்தான் ராயல்ஸ் அணி  முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் ஏப்ரல் 10ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 5வது போட்டியில் குஜராத்திடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38), ரியன் பராக் 76 (48) ஓட்டங்கள் எடுத்த   196  ஓட்டங்கள் எடுத்தது.

  குஜராத் ப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (44) ஓட்டங்கள் குவித்தார். இருப்பினும் எதிர்புறம் சாய் சுதர்சன் 35, மேத்யூ வேட் 4, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16, சாருக்கான் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.     குஜராத்தின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் ராஜஸ்தான் வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது அடித்து நொறுக்கிய ராகுல் திவாட்டியா 22 (11) ஓட்டங்களும்ரஷிட் கான் 24* (11) ஓட்டங்களும் அடித்து கடைசி பந்தில் வெற்றியை பறித்தனர்.

ரன் ரேட் காரணமாக தொடர்ந்து ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

 இந்த போட்டியில் 18வது ஓவரின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை ராஜஸ்தான் வீசி முடிக்கவில்லை. அதனால் அப்போதே உள்வட்டத்திற்கு வெளியே ராஜஸ்தான் அணியின் 2 வீரர்களிக் குறைத்ததால்  நடுவர்கள் தண்டனை கொடுத்தனர். ‍  இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விதிமுறையை 2024 தொடரில் ராஜஸ்தான் அணி முதல் முறையாக மீறியுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முதல் தவறு என்பதால் ராஜஸ்தான் அணியின் கப்டன் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 இதையும் படிங்க: கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி குஜராத்தை காப்பாற்றிய கில்.. விராட் கோலியை முந்தி புதிய சாதனை இதை சஞ்சு சாம்சன் ஏற்று கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. அத்துடன் இதே தவறை மீண்டும் ராஜஸ்தான் அணி செய்தால் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சமும் மற்ற 11 வீரர்களுக்கு தலா 6 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடியசுப்மன் கில்  6 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (43) ஓட்டங்கள் அடித்து   வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் . இப்போட்டியில் அடித்த 72 ஓட்டங்களையும் சேர்த்து சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் 94 இன்னிங்ஸில் 3 சதங்கள் உட்பட 3045* ஓட்டங்களை எடுத்துள்ளார்அதை 24 வருடம் 215 நாட்கள் வயதில் எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் விராட் கோலி 26 வருடம் 186 நாட்களில் 3000ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஐபிஎல் தொடரில் 2வது வேகமான 3000 ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

 லக்னோ அணிக்காக விளையாடும் நட்சத்திர கே.எல் ராகுல் 80 இன்னிங்ஸில் வேகமாக 3000 ஓட்டங்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். தற்போது 94 இன்னிங்ஸில் 3000 ஓட்டங்கள் அடித்துள்ள கில் அந்தப் பட்டியலில் 2வது வீரராக இடம் பிடித்துள்ளார். மொத்தத்தில் இந்த வருடம் குஜராத்தின் புதிய கப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Monday, April 1, 2024

இடதுகை பந்துவீச்சாளர்களிடம் அகப்படும் ரோஹித் சர்மா


 ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில்  மும்பை துடுப்பெடுத்தாடியது.முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் முதல் 4 பந்துகளை இஷான் கிஷன் எதிர்கொண்டு ஒரு ரன்னை  ஓட்டம் எடுத்தார். இதன்பின் 5வது பந்தை எதிர்கொண்ண ரோஹித் சர்மா   டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்   அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடன் ஆர்சிபி அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் 15 முறை டக் அவுட்டாகி மேக்ஸ்வெல், பியூஷ் சாவ்லா, மன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் உள்ளனர்.    

இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் யாக்கர்களை எதிர்கொள்வதுரோஹித் சர்மாவுக்கு சிரமமாக  உள்ளது.    ஷாகின் சா அப்ரிடி, டிரண்ட் போல்ட், மிட்செல் மார்ஷ் என அதிவேக இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டாலே ரோகித் சர்மா ஆட்டம் இழந்து வருகிறார். 

 போல்ட்டிடம் ரோகித் சர்மா ஆட்டம் இழப்பது இது இரண்டாவது முறையாகும். மொத்தம் பவுல்ட்டிடம் 20 பந்துகளை ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா எதிர்கொண்டு இருக்கிறார். இதில் அவர் 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இரண்டு முறை ஆட்டம் இழந்திருக்கிறார்.

Friday, March 29, 2024

ரியான் பராக் அதிரடி வென்றது ராஜஸ்தான்


 டெல்லி கப்பிட்டலுக்கு எதிராக ஜெய்பூரில் நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ்  12  ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  டெல்லி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 5  விக்கெற்களை  இழந்து 185  ஓட்டங்கள் எடுத்தது.  186 எனும் வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய  டெல்லி 18 .6  ஓவர்களில்  5 விக்கெற்களை இழந்து 173  ஓட்டங்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால் 5, ஜோஸ் பட்லர் 11 ,கப்டன் சஞ்சு சாம்சன் 15 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.  அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் நிதானமாக விளையாடினார். அவருடன் ஆச்சரியப்படும் வகையில் ஐந்தாவதாக களமிறங்கி 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 54 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 29 (19) ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ரியான் பராக் அரை சதமடித்து அசத்தினார்.   துருவ் ஜுரேல் 20 (12) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.    கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டலாக விளையாடிய  ரியன் பராக் 20வது ஓவரில் அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிராக 25 ஓட்டங்கள் அடித்து மொத்தம் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84* (45) ஓட்டங்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சிம்ரோன் ஹெட்மயர் 14* (7) ஓட்டங்கள் எடுத்ததால் 20 ஓவர்கலில்  ராஜஸ்தான் 185 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி சார்பில் கலீல் அஹ்மத், குல்தீப், அக்சர், நோர்ட்ஜே, முகேஷ் குமார்  ஆகியோர்  தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

186 ஓட்டங்களைத்  துரத்திய டெல்லிக்கு மிட்சேல் மார்ஷை 23  ஓட்டங்கள்   ரிக்கி புய்யை டக் அவுட் எனத் தடுமாறியபோது,

டெல்லியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் ரிசப் பண்ட் தடுமாற்றமாக விளையாடினார்.3வது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் வார்னர் 49 (34) ஓட்டங்களில் அவுட்டாக அடுத்த சில ஓவரில் ரிஷப் பண்ட் தடுமாறி 28 (26) ஓட்டங்களுடன் வெளியேறினார்.    கடைசி நேரத்தில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி போராடியதால் வெற்றியை நெருங்கிய டெல்லிக்கு ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 173  ஓட்டங்கள்  எடுத்து போராடி தோல்வியடைந்தது.

 இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 9 லீக் போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே 9 வெற்றிகளை பெற்ற அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் கடைசியாக 2019 சீசனில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றதே முந்தைய சாதனையாகும்.

                        இளம் புயல்  ரியான்பராக்

 அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்ட அவர் பல்வேறு தருணங்களில் விராட் கோலியை போல் பேசுவது, நடுவர்களை கலாய்ப்பது, முன்னாள் வீரர்களை மறைமுகமாக கிண்டலடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். அதனால் வாயில் பேசாமல் அடக்கமாக இருந்து செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

கடந்த வருடங்களில் 6, 7 போன்ற கீழ் வரிசையில் விளையாடி வந்த அவருக்கு இம்முறை ராஜஸ்தான் நிர்வாகம் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தது. அதில் லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 43 (29) ஓட்டங்கள் அடித்து அசத்திய அவர் இப்போட்டியில் அபாரமாக விளையாடி 84* ஓட்டங்கள் குவித்து தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சொந்த சாதனை படைத்தார்.

  22 வருடம் 139 வயதாகும் ரியான் பராக்  இதுவரை ஐபிஎல் தொடரில் 56, உள்ளூர் தொடரில் 44 என மொத்தமாக 100 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 100 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதையும் படிங்க: இன்னும் 2 வருஷத்துல ரியன் பராக் அதையும்

ஐந்து வருடங்களாக திணறிய அவர் தற்போது இளம்  புயலாக முன்னேறி வருகிறார் என்றே சொல்லலாம். அவர் படைத்துள்ள அந்த சாதனையின் பட்டியல்:

 1. ரியன் பராக் : 22 வருடம் 139 நாட்கள்*

 2. சஞ்சு சாம்சன் : 22 வருடம் 157 நாட்கள்

 3. வாஷிங்டன் சுந்தர் : 22 வருடம் 181 நாட்கள்

4. இசான் கிசான் : 22 வருடம் 273 நாட்கள்

 5. ரிசப் பண்ட் : 22 வருடம் 361 நாட்கள்