Showing posts with label ஆப்கானிஸ்தான்.. Show all posts
Showing posts with label ஆப்கானிஸ்தான்.. Show all posts

Saturday, November 11, 2023

தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் போராடி வெளியேறிய ஆப்கானிஸ்தான்


 அகமதாபாத் நகரில் நடைபெற்ற 42வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் தென்னாப்பிரிக்காவை 400 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு பையனுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடுவதாக அறிவித்தது.

50  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 244  ஓட்டங்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். தென் ஆபிரிக்கா 47.3  ஓவர்கலில் 5 விக்கெர்களை இழந்த் 174   ஓட்டங்கள் எடுத்து  5விக்கெற்களால் வெற்றி பெற்றது.

ரஹமனுல்லா குர்பாஸ் 25, இப்ராஹிம் ஜாட்ரான் 15   கப்டன் ஷாகிதி 2 , ஓட்டங்களில் ஆட்டமிழக்க  ஓமர்சாய் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ரஹமத் ஷா 26  ஓட்டங்களிலும்,  இக்ரம் கில் 12 ஓட்டங்களீலும் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர்.  நம்பிக்கை நட்சத்திரங்கள் முகமது நபி 14, ரசித் கான் 14 ஓட்டங்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்கள் எடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஓமர்சாய் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சதத்தை நழுவ விட்டபோதிலும் 7 பவுண்டரி 3 சிக்சருடன் ஆட்டமிழக்காது 97(107) ஓட்டக்கள் குவித்து அசத்தினார்.

 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட்களையும் இழந்து 244  ஓட்டங்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில்   ஜெரால்ட் கோட்சி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

 245 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 64  ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கப்டன் தெம்பா பவுமா 23  ஓட்டங்களிலும், குவிண்டன் டீ காக் 41 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர்.

வேன் டெர் டுஷன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் நங்கூரத்தை போட முயற்சித்த ஐடன் மார்க்கம் 25, ஹென்றிச் க்ளாஸென் 10  ஓட்டங்களில் ரசித் கான் சுழலில் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி 24 ஓட்டஙளில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட போதிலும் மறுபுறம் தொடர்ந்து சவாலாக விளையாடிய டுசன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 76* (95) ஓட்டங்கள் குவித்தார். அவருடன் கடைசியில் ஆண்டிலோ பெலுக்வியோ 33* (37) ஓட்டங்கள் எடுத்ததால் 47.3 ஓவர்களிலேயே 247 ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  ரசித் கான் , முகமது நபி ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்து எழுச்சி கண்ட ஆப்கானிஸ்தானின் செமி ஃபைனல் வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச்சை முஜீப் தவற விட்டதால் முக்கால்வாசி பறிபோனது என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த அணி பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளியதுடன் வருங்காலத்தில் அசத்தும் அணியாக முன்னேறியுள்ளது. மறுபுறம் இந்த வெற்றியால் தென்னாபிரிக்கா 2வது இடத்தை உறுதி செய்து செமி ஃபைனலில் விளையாட தயாராகியுள்ளது.

Monday, January 30, 2023

பசியுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது



 

 விலைவாசி உயர்வு, உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால்  பசியுடன் இருப்பவர்களின் சடுதியாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் 10-ல் எட்டுக்கும் மேற்பட்ட அரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. உலகைப் பொறுத்தவரை, 2014 இல் 21% ஆக இருந்த உணவுப் பாதுகாப்பின்மை 2021 இல் 29% ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்  ௧9 தொற்றுநோய் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது, இது பெருமளவிலான வேலை இழப்புகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தியது, மேலும் உக்ரைனில் நடந்த போர் உணவு, ஆற்றல் மற்றும் உரத்திற்கான விலைகளை உயர்த்தியுள்ளது, போதுமான உணவை பல மில்லியன் மக்களுக்கு எட்டவில்லை, அது கூறியது. .Fஆஓ, ஊணீCஏF, , உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. ஏஜென்சிகளின் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பசி குறித்த ஐந்தாவது ஆண்டு கையிருப்பு அறிக்கை ஆகும்.

 அந்த ஆண்டுகளில், பசி மற்றும் ஊட்டச்சத்தின்மையைப் போக்குவதற்கான முன்னேற்றம் ஸ்தம்பிதமடைந்து பின்னர் பின்வாங்கியது. 2021 இல் 9.1% ஐ.நா முகமைகளால் அளவிடப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு 2000 இல் 14.3% ஆக இருந்தது, ஆனால் 2020 ஐ விட சற்று அதிகமாக உள்ளது.

இத்தகைய புள்ளிவிவரங்கள் "பசிக்கு எதிரான போராட்டத்தில் மந்தநிலை தொடர்கிறது" என்று அறிக்கை கூறுகிறது, இது நகரங்களுக்குச் சென்ற மக்கள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் உணவுப் பாதுகாப்பின்மையையும் எடுத்துக்காட்டுகிறது, அங்கு அவர்களுக்கு மலிவு உணவு குறைவாகவே கிடைக்கிறது.

"சத்தான உணவை உற்பத்தி செய்வதற்கும், ஆரோக்கியமான உணவுகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கும் எங்கள் விவசாய உணவு முறைகளை சீர்திருத்துவது மிகவும் முக்கியமானது" என்று அது கூறியது.

Fஆஓ இன் உணவு விலைக் குறியீடு கடந்த பல ஆண்டுகளில் உயர்ந்து, மார்ச் 2022 இல் சாதனையை எட்டியது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் பொருட்களின் விலைகள் சற்று குறைந்தாலும், 2020 ஆம் ஆண்டை விட 28% அதிகமாக இருப்பதால், அது மீண்டும் சரிந்தது.

ஆசிய-பசிபிக் பிராந்தியமானது ஆண்டுக்கு கிட்டத்தட்ட $2 டிரில்லியன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. அரிசி, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஏழைகளை கடுமையாகப் பாதித்தது.

ஐ.நா. ஏஜென்சிகள் "5F" நெருக்கடியின் ஒரு பகுதியாகும், போதுமான உணவு, தீவனம், உரம், எரிபொருள் மற்றும் நிதியுதவி இல்லாததால், கோதுமை, சமையல் எண்ணெய்கள் மற்றும் உரங்களுக்கு பிராந்தியத்தை நம்பியிருந்த பல நாடுகளில் உக்ரைனில் ஏற்பட்ட மோதல் கடுமையான அடியை ஏற்படுத்தியுள்ளது

ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் - அல்லது ஆசியாவில் வாழும் 45% மக்கள் - ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியாது, இரத்த சோகை மற்றும் உடல் பருமன் மற்றும் பசி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

சுற்றுலா மற்றும் உற்பத்தித் தொழில்களில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களைத் தாக்கிய தொற்றுநோயின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது, 2019௨021 ஆம் ஆண்டில் 10 தாய்லாந்தில் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக அறிக்கையின் தரவுகளின்படி - இது பல ஆண்டுகளுக்கு முந்தையதை விடவும் அதிக விகிதமாகும். பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சராசரி வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. உலக வங்கி தரவுகளின்படி, 2015௨018 க்கு இடையில் வறுமை ஏற்கனவே 2.6% அதிகரித்துள்ளது.

"வறுமையின் அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஒன்றாகச் செல்லும்" என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் ஆசிரியர் ஸ்ரீதர் தருமபுரி நிலைமையை விளக்கினார்.

ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் போதிய உணவுகள் எதிர்கால ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை சமரசம் செய்கின்றன, ஏனெனில் அவை குழந்தைகளை வளர்ச்சி குன்றிய அல்லது வீணாக்குதலால் பாதிக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் நோய்க்கு ஆளாகின்றன. ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள குழந்தைகளில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் வளர்ச்சி குன்றியதால் அல்லது அவர்களின் வயதுக்கு ஏற்ற சிறிய உயரத்தால் பாதிக்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

அறிக்கையிலிருந்து வேறு சில விவரங்கள்:

- ஆப்கானிஸ்தானில், 70% மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பொருளாதாரம் சரிந்தது, வெளிநாட்டு உதவி கிட்டத்தட்ட ஒரே இரவில் நிறுத்தப்பட்டதால் மில்லியன் கணக்கானவர்களை வறுமை மற்றும் பட்டினியில் தள்ளியது.

- கம்போடியாவில், பாதி மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள்.

- ஆசியாவில் 15௪9 வயதுடைய பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது சோர்வை ஏற்படுத்துகிறது மற்றும் அதன் மிகக் கடுமையான வடிவங்களில் நுரையீரல் மற்றும் இதய பாதிப்பை ஏற்படுத்தும்.

Monday, September 6, 2021

ஆப்கானில் கால்களை இழந்தவர் ஜப்பானில் தங்கம் வென்றார்

கண்ணிவெடி  அகற்றும்  தொழில் நுட்பக்குழுவின்   பொறியாளராக அவுஸ்திரேலியரான  கேனோயிஸ்ட் கர்டிஸ் மெக்ராத், ஜப்பானில் நடக்கும் பராலிம்பிக்  தங்கப் பதக்கம்  பெற்றார். ஆப்கானிஸ்தானில்  பணியாற்றும்போது  ஏற்பட்ட  விபத்தில் இரண்டு  கால்களையும்  இழந்தவர் கேனோயிஸ்ட் கர்டிஸ் மெக்ராத்.

டோக்கியோ பராலிம்பிக்கில்  ஆண்கள் கேஎல் 2 கேனோ ஸ்பிரிண்ட் பிரிவில்  மெக்ராத் முதலிடம் பிடித்தார். ஐந்து  வருடங்களுக்கு  முன்னர்  ரியோ  ஒலிம்பிக்கில்  வென்ற  தங்கத்தை கர்டிஸ் மெக்ராத்  தக்க  வைத்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 24 வயதுடைய  கேனோயிஸ்ட் கர்டிஸ் மெக்ராத் பணியாளராக இருந்தார்ஆப்கானிஸ்தானின் கிளர்ச்சியடைந்த பகுதிகளில்  மூன்று மாதங்கள்  கடமையாற்றினார்.ஆகஸ்ட் 23, 2012 அன்று  எதிர்பாராத  விபத்தில் இரண்டு  கால்களையும்  இழந்தார்.

ஆனால் ஒரு இளம் போர் பொறியாளராக அவர் உலகின் மிக ஆபத்தான வேலைகளில் ஒன்றான கண்ணிவெடிகளை அகற்றும் நாட்டில் பணியாற்றியதற்காக வருத்தப்பட மாட்டேன் என்று மெக்ராத் கூறினார்.

"ஆமாம் நான் அங்கு இருந்தேன். நான் மேம்பட்ட வெடிபொருட்களைத் தேடிக்கொண்டிருந்தேன், பள்ளிப் பேருந்துகள், வேலைக்குச் செல்லும் மக்கள் பாதுகாப்பாகச்  செல்வதற்கு  பாதையை  ஏற்படுத்திக் கொடுத்தேன். எனது பங்களிப்பில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்" என்று மெக்ராத் கூறினார்.

குண்டுவெடிப்புக்குப் பிறகு  மெக்ராத் சோர்ந்து விடவில்லைஅவர் ஏற்கனவே ஒரு ஊனமுற்ற விளையாட்டு வீரராக மாறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். ஓரளவு நனவை ஒரு உயிர்வாழும் பொறிமுறையாகப் பராமரிக்க, அவரை வாழ வைக்க உதவுபவர்களிடம் "பாராலிம்பிக்கில் நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள்" என்று அவரது அதிகாரப்பூர்வ வலைத்தளமான CurtisMcgrath.com  இல் பதிவிட்டார்

இரண்டு வருடங்களுக்குள் மெக்ராத்   முதலில் முயற்சித்த கேனோயிங்கில் தேசிய அளவில் போட்டியிட்டார். பாரா விளையாட்டுகளின் உச்சத்திற்கு அவரது உயர்வு எவ்வளவு சுவாரசியமாக இருந்தது. ஆகஸ்ட் 23, 2012 அன்று மெக்ராத் தனது கால்களை இழந்தார். செப்டம்பர் 15, 2016 அன்று, அவர் ஒரு பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றார்.

Thursday, June 6, 2019

முதலாவது வெற்றியைப் பெற்றது இலங்கை



கார்டிஃப் சோபியா கார்டனில்  நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 34 ஓட்டங்களால் இலங்கை  வெற்றி பெற்றது. கார்டிஃப் சோபியா கார்டனில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை வெற்றி பெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நாணயச்சுழற்சியில்  வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 36.5  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் 32.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்துடுப்பட்டக்காரர்களான. அணித்தலைவர் திமுது கருணாரத்தன், குசல் பெரேரா ஆகியோர்   களம் இறங்கினர். 30 ஓட்டங்களில் கருணாரத்ன ஆட்டமிழந்தார். குசல் பெரேராவுடன் திரிமானே இணைந்தார்இவர்கள் இருவரும் அணியைக் காப்பாற்றுவார்கள் என ரசிகர்கள் நம்பினர். திரிமானே 25 ஓட்டங்கலில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் இலங்கையின் நிலை மிக மோசமாகியது. குசல் மெண்டிஸ் 2, ஏஞ்சலோ மத்யூஸ் 0, தனஞ்செய டி சில்வா 0, திஸர  பெரேரா 2, இஸுரு உடன 10  ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கையின் நம்பிக்கை தகர்ந்தது.

குசல் பெரேரா தனது 12 ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். 78 ஓட்டங்கள் எடுத்த குசல் பெரேரா, ரஷீட் கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். சுரங்க லக்மால், மலிங்க ஆகியோர் கலத்தில் நின்றபோது மழை பெய்தது. 21 ஆவத் ஓவரில்  ஒரு விக்கெற்றை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்த இலங்கை, ஆறு விக்கெற்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. மழக் காரணமாக 41 ஓவர்கள் விளையாட முடிவு செய்யப்பட்டது. 36.5 ஓவர்கலில் இலங்கை சகல விக்கெற்கலையும் இழந்து 201 ஓட்டங்கள் எடுத்தது. முகமது நபி நான்கு விக்கெற்களையும், ரஷீட் கான், ஸ்ரெட்ரன் ஆகியோர் தலா  இரண்டு விக்கெற்களையும், ஹமிட் ஹஸன் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

மழை காரணமாக டக் வேத் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எனும் வெற்றி  இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஷஸாத்,, ஹஸ்ரத்துல்லா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். இலங்கையின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் சொற்ப ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

நஜிபுல்லா சட்ரன் 43 ஓட்டங்களும்,  ஷசாத் 30 ஓட்டங்களும், மொஹமது நபி 23 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். 32.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த ஆப்கானிஸ்தான் 152 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. பிரதீப்  நான்கு  விக்கெற்களையும், மலிங்க விக்கெற்களையும், உடன்,பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். பிரதீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


   100 போட்டிகளில் விளையாடிய இலங்கை வீரர் லாஹிரு திரிமானே 25 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 6 ஓட்டங்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 3000 ஒட்டங்களை நிறைவு செய்தார். அடித்தார்து, புதிய மைல்கல்லை கடந்தார்.
அஞ்சலோ மத்ஹ்டியூஸ் டக் அவுட் ஆனார். உலகக்கிண்ணப் போட்டியில் மத்தியூஸின் மூன்றாவது டக் அவுட்டாகும்தொடர்ந்து இரண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் டக் அவுட்டான நான்காவது வீரர்.

ஆப்கானின் சகலதுறை வீரர்  முகமது நபி 30 ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். உலகக்கிண்ணத் தொடரில்   ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இதுவே சிறந்த பந்துவீச்சு ஆகும். 2015 உலகக்கிண்ணத் தொடரில் ஷபூர் சத்ரான் 38 ஓட்டங்கள்  கொடுத்து நான்கு விக்கெற்கள் எடுத்ததே இருந்ததே முந்தைய சிறந்த பந்துவீச்சு ஆகும்.
இலங்கை பந்துவீச்சாளர் நுவான் பிரதீப்பும்   நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், இந்த சாதனையை செய்யும் ஒன்பதாவது இலங்கை வீரர் ஆவார்.


 சர்வதேச போட்டியில் இலங்கை அணியின் வெற்றியில் சுமார் 687 நாட்களுக்குப் பின் பங்கேற்றுள்ளார் லசித் மலிங்கா. இந்த இடைவெளியில் மலிங்கா இலங்கை அணிக்காக 22 ஒருநாள் போட்டிகள், ஆறு ரி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால், எதிலும் இலங்கை அணி வெற்றி பெறவில்லை. அந்த குறையை போக்கியுள்ளது இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி. மேலும், மலிங்கா உலகக்கிண்ணத் தொடரில்  அதிக விக்கெற்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் 24 உலகக்கிண்ணப் போட்டிகளில் 46 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். மெக்கிராத் 71, முத்தையா முரளிதரன் 68, வாசிம் அக்ரம் 55, சமிந்தா வாஸ் 49 விக்கெற்களை வீழ்த்தி, முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.