Wednesday, November 30, 2022

நவம்பர் 30: சிறப்பம்சங்கள்

ஆர்ஜென்ரீனா, போலந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் 16வது சுற்றுகு முன்னேறின. மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க் ஆகியன வெளியேறுகின்றன.

அவுஸ்திரேலியா 2006-க்குப் பிறகு முதல் முறையாக நாக் அவுட்டை எட்டியுள்ளது. அவுஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்து போட்டியினடுத்த சுற்றுக்கு முன்னேறியது. சர்ச்சைக்குரிய பெனால்டி அர்ஜென்ரீனாவுக்குக் கிடைத்தபோது, மைதானத்தில் இருந்த 88 ஆயிரம்  ஜோடி கண்களும் கோலை எதிர்பார்த்தபோது போலந்து கோல்கீப்பர் அதை தடுத்தார்.

1971-க்குப் பிறகு துனிசியாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்தது.பிரான்சில் பிறந்த வஹ்பி கஸ்ரி,  58வது நிமிடத்தில் பாக்ஸில் ட்ரிப்ளிங் செய்து, பேக்-அப் கோல்கீப்பர் ஸ்டீவ் மன்டாண்டாவைக் கடந்த பந்தை வலைக்குள் தள்ளினார்.கோப்பை போட்டி. துனிசியாவின் வெற்றியானது உலகக் கிண்ணப் போட்டியில்  பிரான்ஸின் 6-வது வெற்றி தொடர் முடிவுக்கு வந்தது.

கடந்த ஏழு உலகக் கிண்ணப் போட்டிகளில்  மெக்சிகோ 16-வது சுற்றுக்கு முன்னேறியது.  

பிரான்ஸ் மற்றும் போலந்து அணிகள் மோதும் ஆட்டம் டிசம்பர் 4ஆம் திகதி அல் துமாமா மைதானத்தில் நடைபெறுகிறது.

டிசம்பர் 3ஆம் திகதி அல் ரய்யான் மைதானத்தில்  ஆர்ஜென்ரீனா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான  போட்டி நடைபெறும் .

Friday, November 25, 2022

உலகக்கிண்ண வெற்றியைக் கணிக்கும் உயிரின‌ங்கள்

 

ஜேர்மனிக்கு எதிரான ஜப்பானின் அதிர்ச்சி வெற்றியை டையோ என்ற நீர்நாய் சரியாக யூகித்தது, அதே நேரத்தில் பஹ்ரைனில் உள்ள ஒரு கிளி அமெரிக்கா இங்கிலாந்தை வெல்லும் என்று கணித்துள்ளது.

ஜப்பானில், டையோ என்ற நீர்நாய், ப்ளூ சாமுராய்கள்  குழுநிலை ஆட்டத்தில் ஜெர்மனியை ,  ஜப்பான் தோற்கடிக்கும் என  சரியான கணிப்பு செய்தது. நீர்நாய்க்கு ஒரு பந்து வழங்கப்பட்டது.   தையோ ஜப்பானின் கொடியால் குறிக்கப்பட்ட வாளியில் பந்தை போட்டது.

துபாயில் டோபி என்ற பென்குயின் கணிப்பு செய்து வருகிறது. இதுவரை சவுதி அரேபியா மற்றும் ஜப்பானின் வெற்றிகளை இப்பறவை சரியாக கணித்துள்ளது. இருப்பினும், டோபியின் சில கணிப்புகள் தவறானவை என்று  ஒப்புக்கொள்ளப்பட்டது.

  பஹ்ரைனில் உள்ள ஒரு கிளி, குரூப் பி போட்டியில் இங்கிலாந்தை அமெரிக்கா வீழ்த்தும்  எனக் கணித்துள்ளது.அமெரிக்க ஆடவர் தேசிய   அணிஅந்த வீடியோ வெளியிட்டுள்ளது.

  2010 FIFA உலகக் கிண்ணப் போட்டியின்போது பால் எனும் ஆக்டோபஸ்,  தனது துல்லியமான போட்டிக் கணிப்புகளால் உலகளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஜேர்மனியில் உள்ள ஒரு நீர்வாழ் உயிரின மையத்தில் வைக்கப்பட்டிருந்த பாலுக்கு  இரண்டு உணவுப் பெட்டிகள் வழங்கப்பட்டன.இரண்டு பெட்டிகளிலும் விளையாடும் அணிகளின் கொடி பொறிஎந்தக் க்டி பொறிக்கப்பட்ட பெட்டியின் உணவைச் சாப்பிட்டதோ அந்த அணி வெற்றி பெறும் என  கருதப்பட்டது.

யூரோ 2008, 2010   உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களில்  ஜெர்மனியின் ஆட்டங்களின் முடிவுகளை பால் கணித்தது.

 2008 யூரோக்களில் ஆக்டோபஸ் நான்கு துல்லியமான கணிப்புகளைச் செய்தது. அனைத்தும் ஜேர்மனி விளையாடிய போட்டிகள்.2010 உலகக் கோப்பையில், பால் எட்டு கணிப்புகளைச் செய்தது.   அனைத்தும் துல்லியமாக இருந்தன. ஜேர்மனிக்கு எதிரான அரையிறுதியில் ஆக்டோபஸ் ஸ்பெயினை வெற்றியாளராக தேர்வு செய்தது போல் ஸ்பெய்ன்  1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டிக்கு, ஸ்பெயின் கொடியுடன் குறிக்கப்பட்ட பெட்டியை பால் தேர்வு செய்தது. மேலும் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வென்றது.

அக்டோபர் 2010 இல்  ஆக்டோபஸ் இறந்தது.  இறக்கும் போது பவுலின் வயது இரண்டரை ஆண்டுகள், பொதுவாக உயிரினங்களின் சராசரி ஆயுட்காலம்.பாலைப் போன்ற  துல்லியமான ஜோதிடர் இல்லை.

Wednesday, November 23, 2022

வானவில்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கட்டார்


 வேல்ஸ் ரசிகர்கள் அணிந்திருந்த வானவில் தொப்பிகளையும், சீருடைகளையும் காவலர்கள் அகற்றியதாக  வேல்ஸ்  உதைபந்தாட்ட கூட்டமைப்பு  குற்றம் சாட்டியுள்ளது.

  அமெரிக்காவுடனான  போட்டிக்கு முன்னதாக, , LGBTQ+  சமூகத்துடன் ஒற்றுமையாக அணிந்திருந்த ரெயின்போ  தொப்பிகளை அகற்றுமாறு ரசிகர்களிடம் கூறப்பட்டதற்கு  வேல்ஸ்  உதைபந்தாட்ட சங்கம் சங்கம்(FAW)  எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

 வானவில் சட்டை அணிந்ததற்காக மைதானத்தினுள் நுழைய அனுமதி  மறுக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகையாளர் கிராண்ட் வால்,  கூறினார்.

"இப்போது: பாதுகாப்புக் காவலர் என்னை   மைதானத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்" என்று வால் ட்விட்டரில் பதிவிட்டார்.அவர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் காவலில் வைக்கப்பட்டதாகவும், ஒரு பாதுகாப்பு ஊழியர்  அவரது கைகளில் இருந்து தனது தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்." என்றும் அவர் கூறினார்.

இதேவேளை   பியர் வேண்டும்" என்ற கோஷம் உலக கவனத்தை ஈர்த்தது. மைதானங்களில் மதுபானத்துடன் கூடிய பியர் விற்பனை தடை செய்யப்பட்டது. உலகக் கிண்ண  தொடக்க ஆட்டத்தில் ஈக்வடார் ரசிகர்களால் கூறப்பட்ட சிலிக்கு எதிரான கோஷங்களை பீபா கண்டிக்கிறது.

பாரதீய ஜனதா தலைவர்களினால் ஆட்டம் காணும் குஜராத் அரசியல்


 குஜராத் சட்ட சபைத் தேர்தலை இந்திய அரசியல்களம் மிக  உன்னிப்பாக அவதானிக்கிறது. குஜராத் மண்ணின் மைந்தர்களான பிரதமர்  மோடி, அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆகிய  இருவரின் செல்வாக்கை குலைக்கப்போகும் தேர்தல் என எதிர்க் கட்சிகள் கட்டியம் கூறுகின்றன.  பாரதீய ஜனதாவிடம் இருந்து குஜராத் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி களம்  இறங்கியுள்ளது.

 கங்கிரஸ் தலைவர்களினால் செய்ய் முடியாததைச் செய்து காட்டப்போஓஒவதாக  கெஜ்ரிவால் சபதம் போட்டுள்ளார். குஜரத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வலுவாக  இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் பரதீய ஜனதாவுக்குத் தாவியுள்ளனர்.    ஆகையால்  முன்னரை விட பலம் அதிகரித்துளதாக பாரதீய ஜனதா நம்புகிறது. தேர்தல் வேட்பாளர் பட்டியல் அந்த நம்பிக்கையை குலைத்துள்ளது.

பாரதீயஜனதாக் கட்சி, கங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இது வரை காலமும்  வலுவான  போட்டியாளராக இருந்தன. ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் கால் பதித்துள்ளதால் மும்முனைப் போட்டியாகியுள் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

  டிசம்பர் 1 ஆம் திகதியும், 5 ஆம் திகதியும் இரண்டு கட்டங்களாகச் தேர்தல் நடைபெற உள்ளது.   அசைக்க முடியாத அரை நூற்றாண்டுகால பாரதீய ஜனதாவின் ஆட்சிக்கு உட்கட்சிப்  பூசல் பெரும் தலைவலியாகியுள்ளது. முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கபப்டவில்லை.  காங்கிரஸில் இருந்து தாவியவர்களுக்கு தேர்தலில் போட்டியுட  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில்,   166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாரதீய ஜனதா  அறிவித்திருக்கிறது . உள்ளுர் தலைவர்களிப் புறக்கணித்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, காங்கிரஸிலிருந்து  இடம் மாரிய  ஹர்திக் படேல் உள்ளிட்ட புதுமுகங்களின்  பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.   காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சேர்ந்த பலருக்கு      தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கபட்டுள்ளது.  இது  கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலர்  இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 ஐந்து அமைச்சர்கள் உள்பட 38 எம்.எல்.ஏ-க்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாதது கட்சிக்குள்  அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. தற்போதைய சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா , அமைச்சர்களில், பிரிஜேஷ் மெர்ஜா, ராஜேந்திர திரிவேதி, பிரதீப் பார்மர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.மறுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களில், பிரிஜேஷ் மெர்ஜா, ராஜேந்திர திரிவேதி, பிரதீப் பார்மர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பா.. எம்.எல்.-வுமான விஜய் ரூபானிக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. ``நான் போட்டியிட வாய்ப்புக் கோரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்ற எனக்குக் கட்சி வாய்ப்பளித்தது. இப்போது என்னைப் பஞ்சாப் பா..-வுக்கு பொறுப்பாளர்களாக நியமித்திருக்கின்றனர்'' என்று கூறியிருக்கிறார் விஜய் ரூபானி.

தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டாமையினால்   பாரதீய ஜனதாவின்  முக்கிய தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும், குஜராத் பா..-வின் பழங்குடியினப் பிரிவின் தலைவருமான ஹர்ஷத் வாசவாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகி அவர், நந்தோத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல,    குஜராத் சட்டசபை உறுப்பினர்களான  தினேஷ் படேல், சதீஷ் படேல் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிடவிருக்கின்றனர்.

வஹோதியா   தொகுதியில் ஆறு முறை  வெற்றி பெற்ற  மதுபாய் ஶ்ரீவஸ்தவுக்கும் இந்தத் தேர்தலில் சந்தர்ப்பம்  வழங்கப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகியவர், ``1995-ல் சுயேச்சையாக நின்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். அப்போது மோடியும் அமித் ஷாவும் என்னை பா..-வில் இணையுமாறு கேட்டுக்கொண்டதால்தான், கட்சியில் இணைந்தேன். தற்போது பா..கமீது கடுங் கோபத்திலிருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு எம்.எல்.-வான கேசரி சொலான்கி என்பவர் தனக்கு சீட் வழங்காததால், கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்துவிட்டார். இந்த நிலையில், அதிருப்தியிலிருப்பவர்களைச் சமாதானப்படுத்த மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவியை குஜராத்துக்கு அனுப்பியிருக்கிறது பா.. மேலிடம். ஆனால், அவரைப் பார்ப்பதையே பல அதிருப்தி எம்.எல்.-க்கள் தவிர்த்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

``கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் பா.. அரசுமீது ஒரு சில விஷயங்களில் குஜராத் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருவதாக சொல்லப்படுகிறது. அந்த அதிருப்தியைச் சமாளிக்கவே பல தொகுதிகளில் பழைய ஆட்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களில், அந்தக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.-க்கள் சிலர், பா..-வை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதால், அந்தக் கட்சியின் வாக்குவங்கி சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன'' என்கின்றனர் குஜராத் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள்.

பாரதீய ஜனதாவின் புதிய வேட்பாளர்களை  குஜராத் மக்கள் ஏற்ருக்கொள்வார்களா நிராகரிப்பார்களா என்பது தேர்தலின்  பின்னரே தெரிய வரும்.

உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை எட்டியது

ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகைப் பிரிவின் கணிப்புகளின்படி, உலகின் எட்டு பில்லியன் குடியிருப்பாளர்  பிறந்துள்ளார். 

உலக மக்கள்தொகை கடந்த 12 ஆம்திகதி சனிக்குழமை  எட்டு பில்லியனை எட்டியுள்ளது.ரொம் நகரின் ஸ்பிரிட்டோ மருத்துவமனையில் பிரந்த குழந்தை மூலம் இந்த தொகை எட்டப்பட்டது.லிவியானா வாலண்டேக்கு பிறந்த குழந்தைக்கு லியோனார்டோ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 1950 இல் இருந்த அளவை விட மூன்று மடங்கு - மேலும் பூமியில் முன்பை விட அதிகமான மக்கள் இருந்தாலும், நாம் நீண்ட காலம் வாழ்கிறோம், மக்கள்தொகை வளர்ச்சி 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மெதுவான விகிதத்தில் உள்ளது.

2020 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1% க்கும் கீழே குறைந்தது. இது பெரும்பாலும் குறைவான பிறப்பு விகிதம் காரணமாகும், பெண்கள் மற்றும் பெண்களுக்கான பரவலான கருத்தடை மற்றும் சிறந்த கல்வி மற்றும் இயக்கம் காரணமாக பெண்கள் குறைவான குழந்தைகளை பெற்றுள்ளனர்.

உலக மக்கள்தொகை மேலும் வயதாகி வருகிறது - 10% 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இது 2050 க்குள் 16% ஆக அதிகரிக்கும்.2050ல் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து வயதுக்குட்பட்டவர்களை விட இரு மடங்காக இருக்கும். 

உலகில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டு பகுதிகள் கிழக்கு,தென்கிழக்கு ஆசியா ஆகும், இதில் 2.3 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர், மேலும் மத்திய மற்றும் தெற்காசியாவில் 2.1 பில்லியன் மக்கள் உள்ளனர்.சீனாவும் இந்தியாவும் தலா 1.4 பில்லியன் மக்களுடன், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளாக  உள்ளன. ஐநா கணிப்புகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு முதல் முறையாக இந்தியா சீனாவை மிஞ்சும். 

2050 வரை திட்டமிடப்பட்ட அதிகரிப்பில் பாதிக்கும் மேற்பட்ட எட்டு நாடுகளில்  பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கும். காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகியவையே அவையாகும். சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் 2050 இல் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பில் பாதிக்கும் மேல் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கோ , தான்சானியா ஜனநாயகக் குடியரசில்  மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். அடுத்த 30 ஆண்டுகளில் இரு மக்கள்தொகையும் இரட்டிப்பாகும்.ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களில், நைஜீரியா , எத்தியோப்பியா ,எகிப்தில் மிகப்பெரிய எழுச்சிகள் இருக்கும்.இந்தியா , சீனாவிற்கு வெளியே ஆசியாவில், பாகிஸ்தான் , பிலிப்பைன்ஸில் ஆகிய நாடுகளின் சனத்தொகை அதிகரிக்கும்.

  உலகில் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த  46 நாடுகள்  உள்ளன.  இவை 2050 க்கு இடையில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும். 

இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி (மூன்றில் இரண்டு பங்கு) ஏற்கனவே நடந்தவற்றால் இயக்கப்படும் - மற்றும் மக்கள்தொகையின் இளைஞர் அமைப்பு

நீண்ட கால கருவுறுதல் காரணமாக உலக மக்கள்தொகை பல தசாப்தங்களில் இருந்ததை விட மெதுவாக வளர்ந்து வருகிறது.பெண்களுக்கு 2.1 அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் உள்ள நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழ்கின்றனர்.இது தோராயமாக உலகளவில் பூஜ்ஜிய வளர்ச்சியை உருவாக்கும்.

 பிறப்பு விகிதம் குறைவதால் அல்லது இடம்பெயர்வு அதிகரிப்பு காரணமாக 61 நாடுகளின் மக்கள்தொகை இப்போது மற்றும் 2050 க்கு இடையில் 1% அல்லது அதற்கும் அதிகமாக குறையும். உக்ரைன் போர் அதன் மக்கள்தொகை அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2050 க்குள் அதன் மக்கள்தொகையில் 20% க்கும் அதிகமானோர் இழக்க நேரிடும் என்று கணிப்புகள் காட்டுகின்றன.

மற்ற நான்கு மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான  பல்கேரியா, லாட்வியா, லிதுவேனியா , செர்பியா ஆகிய நாடுகளிலும் அடுத்த மூன்று தசாப்தங்களில் இதேபோன்ற மக்கள் தொகை குறைவடையும். ஒட்டுமொத்த ஆயுட்காலம் 2019 இல் தொற்றுநோய்க்கு முன் 72.8 ஆக இருந்து கடந்த ஆண்டு 71 ஆக குறைந்தது. இருப்பினும், கோவிட்-ன் தாக்கம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரே மாதிரியாக இல்லை. 

மத்திய மற்றும் தெற்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுட்காலம் சுமார் மூன்று ஆண்டுகள் குறைந்துள்ளது. 

ஆனால் ஆஸ்திரேலியாவும் , நியூசிலாதும்  தங்கள் எல்லைகளை மூடிக்கொண்டு, பெரும்பாலான தொற்றுநோய்களுக்கு "பூஜ்ஜிய CஓVஈD" கொள்கையைப் பின்பற்றின, அடுத்தடுத்த பூட்டுதல்களின் போது பிற காரணங்களால் இறக்கும் அபாயம் குறைவதால் ஆயுட்காலம் 1.2 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் கர்ப்பத்தில் சில குறுகிய கால குறைப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த சரிவுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஐநா நிபுணர்கள் தெரிவித்தனர். 

உலக மக்கள்தொகை தொடர்ந்து வளரும் - 2030 இல் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் இருக்கும்.இது 2080 களில் 10.4 பில்லியன் மக்களில் உச்சத்தை அடையத் தொடங்கி 2100 வரை அந்த அளவில் இருக்கும்.அதன் பிறகு, போக்குகள் நிச்சயமற்றவை. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓசியானியாவின் மற்ற பகுதிகள், வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா ஆகியவை இந்த நூற்றாண்டின் இறுதியில் மக்கள்தொகையில் இன்னும் அதிகரிக்கும்.

ஆனால் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உட்பட உலகின் பிற பகுதிகள் 2100 ஆம் ஆண்டிற்கு முன்பே உச்சத்தை அடைந்து வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கும். 

 "இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதாபிமானத்தை அங்கீகரிப்பதற்கும், ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை வியத்தகு முறையில் குறைத்துள்ள ஆரோக்கிய முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் ஒரு சந்தர்ப்பம்."

 "அதே நேரத்தில், இது நமது கிரகத்தைப் பராமரிப்பதற்கான நமது பகிரப்பட்ட பொறுப்பை நினைவூட்டுவதாகும், மேலும் ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு தருணம்" என்று எட்டு பில்லியன் மைல்கல்லைப் பற்றி ஐ.நா பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்

Tuesday, November 22, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி – 44


  பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான கவிஞர்களில் முத்துலிங்கமும்  ஒருவர்.   எம்.ஜி.ஆரை அவமானப் படுத்தியதற்காக  தான் செய்த வேலைகளைத் தூக்கி எறிந்தவர் கவிஞர் முத்துலிங்கம்.

1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்யா ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தார்கவிஞர் முத்துலிங்கம், அப்போது அங்கே ‘மீனவ நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும், ‘இந்தப் படத்தில் நீ எந்தப் பாட்டு எழுதியிருக்க..?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நான் எந்தப் பாட்டையும் எழுதலை’ என்றார். எம்.ஜி.ஆர். அதிர்ச்சியாக ‘ஏன்?’ என்றார். ‘என்னை யாரும் பாட்டு எழுத கூப்பிடலை..’ என்றார் கவிஞர் முத்துலிங்கம்.

உடனே அங்கேயிருந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை?’’ என்று கோபத்துடன் கேட்டார். ‘நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை’ என்றார் ராஜாராம். உடனே முத்துலிங்கத்தை பர்த்து   ‘நீங்க எங்க போனீங்க..?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘ஒரு அவசர வேலையா ஊருக்குப் போயிருந்தேன். உடனேயே கிளம்பிட்டதால யார்கி்டடேயும் சொல்லிட்டுப் போக முடியலை’ என்றார்.  

உடனே எம்.ஜி.ஆர்., ராஜாராமிடம் ‘அதான் இப்போ வந்துட்டார்ல்ல..? இவரை வைச்சு ஒரு கனவு பாட்டு எழுதி வாங்குங்க..’ என்றார். ‘படம் முடிஞ்சிருச்சே..’ என்றார் ராஜாராம். உடனேயே, படத்தின் இயக்குநர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர்கள் வந்ததும், ‘இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைச்சு ஒரு கனவுக் காட்சி பாடலை ரெடி பண்ணுங்க. அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்திக்கலாம்’ என்றார். அவர்களும் ராஜாராம் சொன்ன மாதிரியே ‘அதற்கான சிச்சுவேஷன் படத்துல இல்லையே’ என்றார்கள்.

‘கனவுப் பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் வேணும்..? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வர்றதுதானே கனவுப் பாட்டு.. அதற்குத் தனியா என்ன சிச்சுவேஷன் ணும்..? உங்க ‘உரிமைக் குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாட்டுக்கு எப்படி சிச்சுவேஷன் வந்துச்சு..? அது மாதிரி இதை ரெடி பண்ணுங்க.. அப்புறமா ஷூட்டிங்கை வைச்சுக்கலாம்’ன்னு ஸ்ரீதரிடம் கண்டிப்பா சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர். அப்புறம் அந்த கனவுப் பாடலா நான் எழுதியதுதான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலா அமைஞ்ச ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாட்டும் முதல்ல ரொம்ப எளிதா அமையலை. இந்தப் பாடலுக்கு முதல்ல நான் எழுதியிருந்த பல்லவி…

‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்

அங்கங்களே மன்மதனின் படைக்களம்

இரவினிலே தீபமாகும் உன் முகம் – நீ

இன்பத் தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்

என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலில் ‘படைக்களம்’ என்ற வார்த்தையில் இயக்குநர் ஸ்ரீதருக்கு ஏதோ சந்தேகம் வந்தது. ‘படைக்கலன் என்றுதானே இருக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘படைக்கலன்’ என்றால் அது ‘ஆயுத’மாகிவிடும். ‘படைக்களம் என்றால் அது போர்க்களமா’கிவிடும் என்று அவருக்கு உணர்த்தினேன். ஆனாலும், அவருக்குத் திருப்தியில்லாததால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

அப்போது இசையமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதனுகும் .க்கும் ஒரு மிகப் பெரிய சந்தேகம். ‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்’ என்றிருந்த வரியில் ‘அடைக்கலம்’ என்ற வார்த்தைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இதை அப்படியே விட்டுட்டா நாளைக்கு யாராவது ‘அடைக்கலம்’ என்ற பெயர் வைச்சிருக்கிறவன் கோர்ட்ல கேஸ் போட்டு நம்மளை கோர்ட்டுக்கு இழுப்பான். அதெல்லாம் வேண்டாம்.. அதையும் மாத்து’ன்னு சொல்லிட்டார்.

அப்புறம் அந்த பல்லவி மொத்தத்தையும் மாற்றி

‘தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ –

நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ’

என்று எழுதினார்  முத்துலிங்கம்.

  சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தவர் முத்துலிங்கம்.  சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தார். பாடத்தில் மனப்பாடப் பகுதியாக, கம்பராமாயணத்தி லிருந்து ஆறு பாடல்கள் வைத்திருந்தார்கள். அதன் சொல்ஓசையில் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணம் முழுவதையும் படித்தார். அர்த்தம் தெரிந்து படிக்கவில்லை. சந்தத்துக்காகவே முத்துலிங்கம் படித்தார். அந்த வாசிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை… எனத் தொடர்ந்தது.  15ஆவது வயதில் முதல் கவிதை எழுதி கல்கிக்கு அனுப்பினார். ஆனால், திரும்பி வந்தது. திரும்பி வந்த அந்தக் கவிதை 44ஆண்டுகள் கழித்து கலைமகளில் பிரசுரமானது.

1966இல் முரசொலியில் உதவி ஆசிரியராக முத்துலிங்கம் வேலை செய்தபோது . தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த முத்துலிங்கம் முரசொலியிலிருந்து விலகி அலையோசையில் சேர்ந்தார். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தபோது . அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினார்.

அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினார்.. அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றார். எம்.ஜி.ஆர் வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.

“இது நாட்டைக் காக்கும் கை – உன்

வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை  முத்துலிங்கத்தியும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம் என் முத்துலிங்கம் தெரிவித்தார்..

“அன்புக்கு நான் அடிமை – தமிழ்ப்

பண்புக்கு நான் அடிமை ’’

“இது நாட்டைக் காக்கும் கை – உன்

வீட்டைக் காக்கும் கை’’

இந்தக் கை நாட்டின் நம்பிக்கை – இது

எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை ’’

“மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ

வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ!!’’

உள்பட 1,500 திரைப்பாடல்களை எழுதிக் குவித்தவர், கவிஞர் முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.

காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, முதல் அரசவைக் கவிஞர் ஆனார். இராஜாஜி முதல்வரான பிறகு, அப்பதவியை நீக்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணதாசனையும் புலமைப்பித்தனையும் அரசவைக் கவிஞர்கள் ஆக்கினார். அதற்குப் பிறகு முத்துலிங்கம் அரசவைக் கவிஞ்ரானார்.. கலைஞர், ஆட்சிக்கு வந்ததும் ‘நானே ஒரு கவிஞன். என் ஆட்சியில் இன்னொரு கவிஞன் எதற்கு?’ எனக்கேட்டு அப்பதவியை ரத்து செய்தார். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அப்பெருமை கிடைத்தது. அரசவைக் கவிஞர் என்பது இலாகா இல்லாத அமைச்சரைப் போல. அவருக்கு கார், தொலைபேசி, உதவியாளர் ஆகிய வசதிகள் உண்டு. அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

‘மதுரையை மீ்ட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்னும் பாட்டில் ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்னும் வரி வரும். இந்த வரியால் சென்சாரில் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது? அதனால் ‘கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்’ என மாற்றிவிடுங்களேன் என்றார் எம்.ஜி.ஆர்.

  பாட்டின் மீட்டருக்குச் சரியாக ‘மகர கொடி’ என்று போடலாமா? என முத்துலிங்கம் கேட்டார்.

மீன் என்றாலும் மகரம் என்றாலும் ஒன்றுதானே… அப்படியானால், முன்பே உள்ள வரியோடு ஒருமுறையும், மகர கொடி என்று பாடி ஒருமுறையும் பாடலைப் பதிவுசெய்யுங்கள். சென்சாரில் பிரச்சினை வந்தால் சமாளிப்பதற்கு அது உதவும் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்னும் வரிகளை மட்டும் கொண்ட பாடல் மட்டுமே ஒலிப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வியிடம் “நான் இரண்டு முறையில் ஒலிப்பதிவு செய்யச் சொன்னேனே” என்று சொல்லியிருக்கிறார்.

“நீங்கள் ஏற்றுக்கொண்ட வரிகள்தான் இவை என்று முத்துலிங்கம் சொன்னார்” என்று எம்.எஸ்.வி. தெரிவித்திருக்கிறார். படம் சென்சாருக்குச் சென்றது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்தது.

படத்தின் வரிகளை சென்சார் அதிகாரிகளிடம் காட்டி, படத்தின் சூழலை விளக்கி இந்த வரிகளால் ஏதாவது பிரச்சினை வருமா என்று அவர்களிடம் கேட்டு, இந்த வரிகளால் எந்தப் பிரச்சினையும் வராது என்று அவர்கள் உறுதி அளித்ததால்தான், கோட்டையிலே நமது கொடி பறக்க வேண்டும் என்னும் வரியையே மெல்லிசை மன்னரிடம்  முத்துலிங்கம் தெரிவித்தார்.

இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். படத்தின் வெற்றி விழாவில், “பாடலாசிரியர் என்றால் பாட்டை எழுதுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். நமக்காக சென்சார் அதிகாரிகளைப் பார்த்து, பேசி, அவர்களின் விளக்கத்தைப் பெற்று, இவ்வளவு வேலைகளை யார் பார்ப்பார்கள்? அதனால்தான் முத்துலிங்கத்துக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறேன்” என்றார்.