Monday, June 26, 2023

சூர தரிசனம்


 

யாழ்ப்பாணத்து இனிய நினைவுகள்  8


----------------------

இம்முறை யாழ்ப்பாணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை அதில் ஒன்று நான் கண்ட சூர தரிசனம் ஆகும்

சூர தரிசனமா?  என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

. ஆம் அது எனக்கு ஒரு  தரிசனமாகவே இருந்தது

கிழக்கு பல்கலைக் கழகத்தில் இந்து நாகரிகத்துறையில் எம் பில் பட்டம் மேற்கொள்ளும்  வினோகா   எனும் மாணவி தேவரையாளி  இந்து கல்லூரியினை  நிறுவிய சூரன் எனும் பெரியாரையும். அவரின் கல்விப் பணிக ளையும்  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்

அவருக்கு நானும் ஒரு மேற்பார்வையாளர்

மேற்பார்வையாளரின கடமைகளுள்  ஒன்று  மாணவருக்கு உதவியாக களப்பணியில் ஈடுபடுவ தாகும். ( இதை அவர் செய்யாமலும் விடலாம்)  

 மாணவருடன் கள ஆய்வு வேலைகளில் ஈடுபட இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்

ஒரு நாளின் பெரும் பகுதியை அதற்கு ஒதுக்கினேன்

அதன்படி அன்று காலை அச்சுவேலி சென்று காரில் விவோகாவை ஏற்றிக் கொண்டுகொண்டு தேவரையாளி இந்துக் கல்லூரி இருக்கும் பகுதிக்குச் சென்றேன்

தேவரையாளி  இந்துக் கல்லூரியில் எம்மைக் காத்துக் கொண்டு நின்றார் சூரனின்  பேரனான ரவி வர்மா அவர்கள்

கல்லூரியின் முன்னால் சூரன் என்னும் பெரியாரின் உருவச்சிலை நீண்டு உயர்ந்து   மிகக்  கம்பீரமாக நின்று. கொண்டு இருந்தது

ஏனைய தமிழ் அறிஞர்களின் சிலைகளைப் போல சூரன் அமர்ந்து  கொண்டிராமல் நின்று கொண்டிருந்தமை எனக்கு ஒரு குறியீடாகக் காணப்பட்டது

யாழ்ப்பாணத்தில் அன்று நிலவிய கல்விச் சமத்துவமின்மைக்கு எதிராக போராடி

ஒரு நிறுவனத்தையே நிறுவிய அவரைப் பற்றி எனக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஏற்கனவே கூறி இருந்தார்

பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார்  கார்த்திகேசு அங்கே   ஒரு காலத்தில் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தெரியும்

சிறிது நேரத்தில் அங்கு வன்னிய குலம்

ராஜேஷ் கண்ணா

 எஸ் கே லோகநாதன்

வதிரி ரவீந்திரன்

போன்ற புத்திஜீவிகள் வந்து விட்டார்கள்

சிலர் ஏற்கனவே நான் அறிந்தவர்கள்

உரையாடல் தொடங்கியது

கலந்துரையாடல் மெருகேற மெருகேற  அகழ்வாய்வில் அசாதாரணமான பொருட்கள் மேற்கிளம்புவது   போல பல புது புது விஷயங்கள் வெளிவர தொடங்கின

மண்ணைத் தோண்டி அகழ்வாய்வு செய்வது போல மனிதர்களின் மனதை தோண்டியும் அகழ்வாய்வு செய்ய வேண்டும்

மண் தரும் உண்மைகள் போல மனமும் பல உண்மைகளைத் தரும்

ஆங்கிலம் கற்பிக்கும் சைவப் பாடசாலைகளை ஆறுமுகநாவலர் ஆரம்பித்த காலத்தில்  அப் பாடசாலைகளில் பலருக்கும் படிக்கும் வாய்ப்பு ஏற்படவி ல்லை 

படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு மறுக்கவும்  பட்டது

முக்கியமாக விளிம்பு நிலை மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

அதனை ஓரளவு போக்கியவர்கள் கிறிஸ்தவர் மிஷனரிகளே

இந்த நேரத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை சைவ  அறிஞர்கள் புரவலர்கள்  துணையுடன் ஆரம்பித் தார்கள்

அத்தகைய. ஒரு  பாடசாலை ஏனைய ஆங்கிலப் பாடசாலைகளில் கற்கும் சந்தர்ப்பம் ஏற்படாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது

அந்தப் பாடசாலையின் முன்னோடியாகதா திகழ்ந்தது தேவரையாளி இந்து கல்லூரி என்பது புரிய வந்தது

தேவரையாளி இந்துக் கல்லூரி நிறுவிய சூரனின் கல்விப் பணிகளை  ஆறுமுகநாவலரின் பணிகளின் நீட்சி என்று கூறுவார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

ஆறுமுக நாவலர் அன்று  யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தர்களாக  இருந்த

செல்வந்தரிடமிருந்து பணம் திரட்டியது போல

 சூரனும் அப் பிரதேசத்தில் மேல் எழுந்த வர்த்தகர்களிடமிருந்து பணம் திரட்டி இந்தப் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது


இதற்கு சமாந்தரமாக சிங்களப் பகுதிகளில் பாடசாலைகளும் ஆரம்பித்துள்ளன

இலங்கை கல்வி வரலாற்றை  ஆராய்பவருக்கு   இவை  முக்கிய தகவல்கள் ஆகும்

 மர வேலையிலே தேர்ச்சி பெற்ற  தொழிலாளியாக இருந்த  சூரன் தன் சுய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்.

அது ஒரு காலத்தின் வரலாறு ஆகும்

 அதைப் பதிப்பித்திருக் கிறார்  இருக்கிறார் ராஜ ஸ்ரீகாந்தன்

அதற்கான ஒரு அழகான முன்னுரையும் எழுதி இருக்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

 அந்நூல் எமக்குப் பல பழைய தகவல்களைத் தருகின்றது

பாடசாலையின் வரலாறு

 அதனை உருவாக்க நடத்திய போராட்டங்கள்

 அதில் கல்வி கற்றோர்

 கற்பித்தோர்

அதன் மூலம் உயர்நிலை அடைந்தோர்

எனப்பல தகவல்களை அங்கு வந்தோர் உரையாடினர்

நீங்கள்  வராவிட்டால் இவ்வளவு பேர்களையும் ஒன்றாகச்சந்தித்திருக்க முடியாது சேர்

 என்று விவோவா கூறினாள்

நிறையத் தகவல்களை ஒருங்கே பெற்றுக் கொண்ட பெரு மகிழ்ச்சி அவளுக்கு

அங்கு வந்திருந்த ராஜேஷ் கண்ணா சமூகவியல் விரிவுயாளர்

அவர் பார்வை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

அவரது விளக்கங்கள் என்னை புதிய திசைகளில் சிந்திக்க வைத்தன

இன்றைய இளம் தலைமுறையின் பார்வை அது.

 அவரிடம் ஆலோசனைகள்  பெறுமாறுமாறு. நான் விவோகாவைக் கேட்டுக் கொண்டேன்.

 விவோகாவுக்கு உதவி புரியுமாறு அவரிடமும் கேட்டுக் கொண்டேன்

 அவர் தான் எழுதிய மூன்று நூல்களை எனக்குத் தந்தார்

மதிய உணவு உண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டனர் ஆனால் விவேகா தன் வீட்டில் எனக்கான மதிய உணவுகளைச் செய்திருந்தாள்

நண்பர் கலாமணி அந்த ஊரவர். அவர் சுகயீனமுற்று இருப்பதாக அறிந்தேன்

அவரைச் சந்திக்க மனம் அவாவியது

நண்பர் ரவீந்திரனும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்

தேவரையாளி கல்விச் சமூகத்திடம் இருந்து விடைபெற்று கலாமணி வீடு நோக்கிச் சென்றேன்

பாடசாலைக்கு வெளியே வரும்போது மீண்டும் சூரன் சிலைக்கு முன்னால்  நின்றேன்

அப் பெரியார் இன்னும் பெரிதுயர்ந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் செய்தல்

அன்னயாவிவிலும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறிவித்தல்

என் பாரதி பாடல் ஞாபகத்துக்கு வந்தது

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழை மக்களுக்காக ஒரு பாடசாலை நிறுவிய சூரன்

என் மனதை நினைத்து நின்றார்

மீண்டும் சூரன் சிலையை நோக்கினேன்

இன்னும் அது  நெடிதுயர்ந்து நின்றது

இப்போது சொல்லுங்கள்

அது

 சூர தரிசனம் தானே?

 

பா.ஜ. கவுக்கு எதிராக களமாடும் தி.மு.க

திராவிட முன்னேற்றக் கழகம்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றிருந்த தமிழக அரசியலில் தன் இருப்பை பாரதீய ஜனதா அழுத்தமாகப் பதித்துள்ளது. ஜெயலலிதா  உயிருடன்  இருக்கும் வரை பம்மிக்கொண்டிருந்த பரதீய ஜனதா பன்னீரையும், எடப்பாடியையும் மோத விட்டு தான் நினைத்ததைச் சாதித்துள்ளது.

அமுலக்கத் துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ததால் அமைதியாக அரசியல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகவே  பாரதீய ஜனதாவுக்கு எதிராகக் களம்  இறக்கி உள்ளார். செந்தில் பாலாஜியின் மீதான விராசணைக்கு எதுவித தையும் இல்லை என தமிழக அறிவித்தது. அமுலாக்கத் துறையில் தொடர் விசாரணைகளால் அமைச்சர் நெஞ்சுவலியால் பாதிக்கபப்ட்டார்.  ஆவருக்கு  இதய மாற்று சிகிச்சை நடை பெற்றது.  ஆறு  வாரங்கள் வைத்தியர்களின் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருக்க வேண்டும் ஆனால், அவரைக்  கைது செய்த அமுலாக்கத்துறை அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறுகிறது. மேலும்  மூன்று அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும் என தச்கவல்  வெளியாகியுள்ளது.

    அறிக்கை, காட்டமான பேட்டிகள், முக்கியப் புள்ளிகளின் கருத்துகள் மூலமாக மட்டுமே பாரதீய ஜனதாவுக்கு எதிர் வினையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் நேரடியாக  மோதிப் பார்க்கத் துணிந்துள்ளது.    சமூக வலைத்தளங்களில் அத்து மீறும்  பாரதீய ஜனதக் கட்சியைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்த புகாரில், பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.க-வில் மாநில அளவில் பொறுப்பிலிருக்கும் ஒருவர், இந்த தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அவர் கைதைக் கண்டித்து, மதுரையில் நீதிபதி வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்திய மாவட்ட பா.ஜ.க தலைவர் உட்பட 43 பேர்மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய புகாரில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல, கொலை மிரட்டல் புகாரில் பா.ஜ.க-வின் நெசவாளர் அணியின் மாநிலச் செயலாளர் மின்ட் ரவி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. பா.ஜ.க-வில் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் ரெளடிகள் பட்டியலை மாவட்டவாரியாக எடுத்திருக்கிறது உளவுத்துறை. இதுவரை 124 ரெளடிகள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது 630 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கொலை, கொள்ளை, கடத்தல் எனக் குற்றப் பின்னணி கொண்டவர்களையெல்லாம் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைக்கத் தீவிரமாகியிருக்கிறது தமிழக காவல்துறை.

  பொருளாதாரக் குற்றப் பிரிவின் விசாரணையிலிருக்கும் ஆருத்ரா வழக்கை வேகப்படுத்தி, அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பா.ஜ.க நிர்வாகிகளைக் கைதுசெய்யவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஹரீஷ் என்பவருக்கும், பா.ஜ.க மாநிலத் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவருக்குமிடையேயான தொடர்புகள் விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும். கைதிலிருந்து தப்பிப்பதற்காக, வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் பா.ஜ.க பிரமுகரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷை இந்தியா கொண்டுவரும் முயற்சிகளும் நடக்கின்றன. விரைவிலேயே, ஆருத்ரா நெருப்பு கமலாலயத்தைப் பற்றும்.

மற்ற மாநிலங்களில் இதுவரை செய்ததுபோல இங்கேயும் செய்யப் பார்க்கிறது பா.ஜ.க. அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவது, ஆளுநரை வைத்துக் குடைச்சல் கொடுப்பது, ஊழல் கட்சி என முத்திரை குத்துவது    இதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென எங்களுக்குத் தெரியும் என திராவிட முன்னேற்றக் கழக த்தினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தி.மு.க தலைவர் காட்டும் வேகத்தைக் கண்டு அஞ்சுகிறது பா.ஜ.க.

மோடியப்பற்றி அவதூறாக பதிவிட்ட திராவிட மூன்னேற்றக் கழகத் தொண்டனை கண்டித்த தலைமைஒ அதை நீக்கும்படி  உத்தரவிட்டது. குஷ்புவைப் பற்றி கேவலமாக  பேசிய  பேச்சாளரை திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து நீக்கியது.

 அண்ணாமலையின் தொடர் அடாவடிப் பேச்சையும், செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையையும் ஸ்டாலின் மிக சீரியஸாகப் பார்க்கிறேர்.  . இது டெல்லியின் ஆசியில்லாமல் நடக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இதுபோலப் பல தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பா.ஜ.க-வுடன் இனி அனைத்து வகையிலும் தீவிரமாக மோதுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.  ஆளுநரோ, அண்ணாமலையோ, அமலாக்கத் துறையோ, அமித் ஷாவோ யாராவது  வரட்டும் மோதிப் பார்க்கலாம் என்பதுதான் தி.மு.க-வின் இப்போதைய முடிவு. அண்ணாமலைக்கும், தமிழக பா.ஜ.க-வுக்கும் பாடம் புகட்டவேண்டிய நேரமும் வந்துவிட்டது  என்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். 

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது சைதாப் பேட்டை நீதிமன்றம். இந்தச் சூழலில், புதுக் கோட்டை மாவட்டம், கல்லாக் கோட்டையிலிருக்கும் டி.ஆர்.பாலு தரப்புக்குச் சொந்தமான மது ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். போகிற போக்கைப் பார்த்தால், நாளொரு சவால், பொழுதொரு மோதல் என நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ரணகளமாகும்போலத் தெரிகிறது தமிழகம்.

 தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழலைப் பயன்படுத்தி, அரசியல் களத்தில் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்குமிடையேதான் சண்டை என்பதுபோலவும், தி.மு.க-வுக்கு நிகராக பா.ஜ.க வளர்ந்துவிட்டதைப்போலவும் ஒரு மாய்மாலம் காட்ட நினைக்கிறார்கள் டெல்லியை ஆள்பவர்கள். இதில் அ.தி.மு.க என்கிற ஒரு பெரிய கட்சியை, பேசுபொருளாகவே இல்லாமல் ஆக்கும் வியூகமும் இருக்கிறது. ஜூன் 23-ம் திகதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க-வும் கலந்துகொள்ளவிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி ஒன்று திரள ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில், தி.மு.க-வை ஓர் ஊழல் கட்சியாக முத்திரை குத்துவதுதான் பா.ஜ.க-வின் நோக்கம். அவர்களின் திட்டத்துக்கு ஏற்றாற்போல, செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளும் அமைந்துவிட்டன.

2ஜி  குற்றச் சாட்டின்  போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஊழல் புகார்  சுமத்தப்பட்டது. விசாரணை முடிவில்   குற்றச் சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவ்வில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்,  பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான  மோதலால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகையில்    தமிழக அரசியல் கள நிலமை மிகவும் சூடாகும்.

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி - 72

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் மருதகாசியின்  பாடல்கள் பட்டி தொட்டி எங்கும்  ஒலித்தன. பல  பிரச்சனிகள், சதிகளின் மத்தியில்   மருதகாசி புகழின் உச்சியில் இருந்தா. 

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார், மருதகாசி. சிலருடைய சூழ்ச்சியினால், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் மருதகாசிக்கு மோதல் ஏற்பட்டது. பிறகு உண்மையை அறிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுத வாய்ப்பளித்தார்.

 மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசி மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் மருதகாசி பாடல் எழுதுவது வழக்கம். ஒருமுறை டி.ஆர்.சுந்தரம் வெளிநாடு சென்றிருந்தபோது, மருதகாசியிடம் பொறாமை கொண்டிருந்த ஸ்டூடியோ நிர்வாகி ஒருவர், வேறொரு கவிஞருக்கு அதிக தொகையும், மருதகாசிக்கு குறைந்த தொகையும் கொடுத்தார். இதனால் மனம் நொந்த மருதகாசி, "இனி மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை'' என்ற முடிவுடன் சென்னைக்குத் திரும்பினார். வெளிநாடு சென்றிருந்த டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்ததும், எம்.ஜி.ஆரையும், பானுமதியையும் வைத்து "அலிபாபாவும் 40 திருடர்களும்'' படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவு செய்தார். "அலிபாபா'' படம் ஏற்கனவே இந்தியில் வெளிவந்திருந்தது. புதிதாக ஒரு பாடலை இசை அமைப்பது என்றும், 9 பாடல்களுக்கு இந்தி அலிபாபா படத்தின் மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்வது என்றும் சுந்தரம் தீர்மானித்தார். பாடல்களை எழுத மருதகாசியை ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் நிர்வாகியோ, "மருதகாசி முன்போல் இங்கு வருவதில்லை. சென்னை கம்பெனிகளுக்கு பாட்டு எழுதுவதில் பிசியாக இருக்கிறார்!'' என்று கூறிவிட்டார். உடனே சுந்தரம், "அப்படியானால் உடுமலை நாராயணகவிக்கு போன் செய்து, பாடல்களை எழுத உடனே இங்கே வரச்சொல்லுங்கள்'' என்று உத்தரவிட்டார்.

 சுந்தரம் வரச்சொன்னார் என்று அறிந்ததுமே, அவருடன் உடுமலை நாராயணகவி டெலிபோனில் தொடர்பு கொண்டார். மருதகாசியிடம் சகோதர அன்பு கொண்டவர் உடுமலை நாராயணகவி. மருதகாசிக்கும், நிர்வாகிக்கும் ஏற்பட்ட தகராறை சுந்தரத்திடம் அவர் கூறினார். "சரி. அவரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்றார், சுந்தரம். டி.ஆர்.சுந்தரத்தை உடுமலை நாராயணகவியும், மருதகாசியும் சந்தித்தனர். "அலிபாபாவில் வரும் பாடல்களுக்கு, இந்தி அலிபாபா மெட்டுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிய சுந்தரம், சில இந்தி இசைத்தட்டுகளை கவிராயரிடம் கொடுத்தார். உடனே கவிராயர், "மெட்டுக்கு பாட்டு அமைப்பது எனக்கு சரிப்படாது. புதிதாக பாட்டு எழுதுவதானால் எழுதுகிறேன். மெட்டுக்கு பாட்டு என்றால், அது மருதகாசிக்கு கைவந்த கலை'' என்றார். இதனால், "மாசில்லா உண்மைக் காதலே'', "அழகான பொண்ணுதான்... அதற்கேற்ற கண்ணுதான்...'' உள்பட 9 பாடல்களையும் மருதகாசியே எழுதினார். மாடர்ன் தியேட்டர்சுடன் மருதகாசிக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்தது. மாடர்ன் தியேட்டர் "பாசவலை'' படத்தை தயாரித்தபோது, பாடல் எழுத மருதகாசிக்கு அவசர அழைப்பு அனுப்பினார்கள். அப்போது சென்னையில் இரவு - பகலாக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். உடனே அவர் டி.ஆர்.சுந்தரத்துக்கு போன் செய்து, "உடனடியாக தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். மிக நன்றாக பாட்டு எழுதக்கூடியவர். நான் நாலைந்து நாட்களுக்குப்பின் வந்து கலந்து கொள்கிறேன்'' என்று சொன்னார். அதன்படி, பல பாட்டுகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். "குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்'' என்ற பாடல் மூலம், கல்யாணசுந்தரம் பெரும் புகழ் பெற்றார். "அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை'' என்ற  மருதகாசியின் பாடலும் `ஹிட்' ஆயிற்று. உடுமலை நாராயணகவியை தன் அண்ணன் போலவும், கல்யாணசுந்தரத்தை தம்பி போலவும் கருதி பாசம் செலுத்தியவர் மருதகாசி. டைரக்டர் பீம்சிங் இயக்கத்தில் தயாரான "பதிபக்தி'' படத்துக்கு "ரெண்டும் கெட்டான் உலகம் - இதில் நித்தமும் எத்தனை கலகம்'' என்ற பாட்டை எழுதினார். இந்த பாடல் பீம்சிங்குக்கு பிடிக்கவில்லை. "இன்னும் சிறந்த பல்லவி வேண்டும்'' என்றார். மருதகாசி சிறிது யோசித்துவிட்டு, "அண்ணே! நீங்கள் எதிர்பார்ப்பது போல எழுதக்கூடியவர் தம்பி கல்யாணசுந்தரம். அவரை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்'' என்று கூறி, ஒதுங்கிக்கொண்டார்.

 கவிஞர் மருதகாசியும், சாண்டோ சின்னப்பதேவரும் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பணியாற்றியபோதே நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிறகு தேவர் சென்னைக்கு வந்து, `தேவர் பிலிம்ஸ்' படக்கம்பெனியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து "தாய்க்குப்பின் தாரம்'' என்ற படத்தைத் தயாரிக்கத் தீர்மானித்தார்.   மருதகாசியை அழைத்து, "எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி, புரட்சிகரமான கருத்துக்களுடன் ஒரு பாடலை எழுதுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மருதகாசி எழுதிய பாடல்தான், "மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே'' என்ற பாடல். 1955-ல் சிவாஜிகணேசனும், பத்மினியும் நடித்த "மங்கையர் திலகம்'' படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. இதில், சிவாஜிக்கு அண்ணியாக, குணச்சித்திர வேடத்தில் பத்மினி நடித்தார். இப்படத்தில் மருதகாசி எழுதிய "நீலவண்ண கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!'' என்ற பாடலை, பத்மினிக்காக பாலசரஸ்வதி பாடினார். கருத்தாழம் மிக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.  இதே படத்தில், சிவாஜி பாடுவது போல் அமைந்த "நீ வரவில்லை எனில் ஆதரவேது?'' என்ற பாடலையும் மருதகாசி எழுதினார். உருக்கமான இந்தப்பாடலை தெலுங்குப்பாடகர் சத்யம் பாடினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி நடிக்க, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படம் சரியாக ஓடவில்லை. ஆனால், இப்படத்தில், மருதகாசி எழுதிய "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும், கண்கள் உறங்கிடுமா?'' என்ற பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

ஸ்ரீதரின் திரைக்கதை -வசனத்தில் வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த "உத்தமபுத்திரன்'' படத்தில், சிவாஜியும், பத்மினியும் படகில் செல்லும்போது பாடுவதுபோல அமைந்த "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே'' என்ற பாடலை, ஜி.ராமநாதன் இசை அமைப்பில் மருதகாசி எழுதினார். ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியது இப்பாடல்.

”நினைத்ததை முடிப்பவன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும் அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால் எமருதகாசியைக் கூப்பிட்டார்கள்.

அதில் ஏற்கனவே கண்ணதாசன் எழுதியிருந்த “நான் பொறந்த சீமையிலே நாலு கோடிப் பேருங்க. நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க” என்ற பாட்டு   மிகவும் பிடித்திருந்ததால் து இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது என்று மருதகாசி சொன்னார்.

ஆனால் எம்.ஜி.ஆர்.   பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கே உரிய தனித் தன்மை அதில் இல்லையே என்றார். எப்படி என்று மருதகாசி கேட்டபோது ,  ஆயிரத்தில் ஒருவன் என்பதற்கும் நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

பத்து நிமிடங்கள் நான் அசந்து உட்கார்ந்த மருதகாசி  இவர் பழைய எம்.ஜி.ஆர்.அல்ல. ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே. இருக்கும் மாமனிதர், என்ற எண்ணமும், அதுவரையில் அவரிடம்  வைத்து இருந்த நம்பிக்கையின் உயர்வும்- அவர் மனதில் வளர்ந்து கொண்டே போயிற்று.

பிறகு அதே சூழ்நிலைக்கு ட்யூன் போட்டு மருதகாசி  எழுதிய பாடல் தான் “கண்ணை நம்பாதே! என்று ஆரம்பிக்கும் பாடல் இந்தப் பாடல் எம்.ஜி.ஆருக்கு  பரி பூரண திருப்தியளித்தது. மறுநாள் ரிக்கார்டிங்கிற்கு வந்திருந்தார். பாடல் ஒலிப்பதிவு ஆவதற்கு ஐந்து  நிமிடங்களுக்கு முன் மருதகாசியைத்  தனியே அழைத்துச் சென்றார். கடைசி சரணத்தை மறுபடியும் பாடிக் காட்டுங்கள் என்றார்.

 “பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி மறந்து விட்டு தன் வழியே போகிறவர் போகட்டுமே” என்ற வரியில் தன் வழி நல்ல வழியாக,

வந்த வழியை விட சிறந்த வழியாக இருந்தால் தன் வழியே செல்வதில் என்ன தவறு? எனக் கேட்டார்.

பிறகு தான் “வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே” என்று மாற்றினார் மருதகாசி.

எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன்'' படத்தில் எம்.ஜி.ஆர். பாட அதற்கேற்ப பத்மினி நடனம் ஆடும் ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் -ராமமூர்த்தி அமைத்து விட்டனர். ஆனால் அந்த மெட்டுக்கு பல்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை. பிறகு, விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் அழைப்பின் பேரில், "ஆடாத மனமும் உண்டோ?'' என்ற பாடலை, மருதகாசி எழுதினார்.

மூடப்படும் பாடசாலைகளின் பின்னால் உள்ள கதை

 கல்வியில் முதலிடம்  பிடித்து சாதனை படைத்த வடமாகாணம்  இன்று சற்று பின்னடைந்துள்ளது. பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். தனியார் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். இழந்த  முதலிடத்தை இன்னமும்  பிடிக்கவில்லைஇந்த நிலையில் வடமாகானத்தில் மாணவர்கள்  இல்லாமையால் சுமார் 194 பாடசாலைகள்  மூடப்பட்டுள்ள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அதிர்ச்சிகரமான  உண்மை இன்றைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோரிடம்  உள்ளது. பேரப்பிள்ளை கல்வியில்  சாதிக்க வேண்டும் என்ற ஆசை பெரியவர்களிடம்  உள்ளது. அதீத ஆசைகள், ஆர்வங்கள்  காரணமாக  கிராமப்புறப் பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா பாடசாலை வளாகத்தில் அதிபர் குலேந்திரகுமார் தலைமையில்   நடைபெற்றபோது இதில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194  பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். மாணவர்கள் இல்லாமையால் அந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது முதலாவது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்கின்றார்கள், இரண்டாவது பிறப்பு விகிதம் குறைவு. எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினராலும், இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

நாங்கள் வாழவைக்க வேண்டுகின்ற இந்தச் சமூகம் , நாங்கள் வளமாக வாழவேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், இந்தப் பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன். எனவேதான் நான் உங்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்ளும் விடயம் வாழுகின்ற இந்தப்  பிரதேசம், வாழ வேண்டும் என்று விரும்புகின்ற மக்களை வாழவைக்க வேண்டிய வழிவகைகளை நீங்கள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இந்தச் சமூகத்திலேயே சில விடயங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் எங்களுக்குக் கூறுகின்றன. ஒன்று விவாகரத்து பெறுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இரண்டாவது  குழந்தை பேறு குறைந்து காணப்படுகின்றது.மூன்றாவது வயது சென்ற திருமணங்கள் அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று இன்னும் சில சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன.

குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, இவற்றையெல்லாம் கடந்து எமது சமூகம் வாழவேண்டும் என்றால் புலம்பெயர் சமூகம் ஆற்ற வேண்டிய பணி அதிகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

எனவே, இந்தச் சமூகத்தை வாழ வைக்க நீங்கள் செய்யும் சிறிய பணியுடன் நின்றுவிடாது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற உள நல பிரச்சினைகளுக்கு  தீர்வு காணவேண்டிய ஒரு காலம் இப்போது உங்கள் முன்னால் இருக்கின்றது.

வெறும் அரசியல்உரிமைசார் பிரச்சினைகள் மட்டும் எமக்கு இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இளைய சமூகத்தினர் மத்தியில்மாணவர்கள் மத்தியில்குடும்பங்கள் மத்தியில்சிறுவர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சமூக உள நல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் எங்களிடம் இருக்கின்றது. எனவே, அதை இன்று கூடியிருக்கும் புலம்பெயர் சமூகமும், இணைந்திருக்கும்  உள்ளூர் சமூகமும் உணர்ந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

நகர்ப்ப்புற பாடசாலையில் படித்தால்தான் தனது  பிள்ளை கல்வியில் உயர் நிலைக்குச் செல்லும்  என்ற  போலியான நம்பிக்கை  சில பெற்றோர் மத்தியில் உள்ளது.   கண்ணுக் கெட்டிய தூரத்தில் பாடசாலை இருக்கும் போது மிகத் தூரத்தில் உள்ள பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இதனால் அந்தக் குட்டும்பத்தின் செலவு அதிகரிக்கின்றது. நடந்து செல்லும் தூரத்தில்   பாடசாலை  இருக்கும்போது தூரத்துப் பாடசாலைக்குச் செல்லும்  பிள்ளையின் சிரமத்தைப் பெற்றோர் புரிந்துகொள்வதில்லை.

அந்தக் காலத்தில் ஒரு பாடசாலையை உருவாக்க   எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார்கள் என்பதை இன்றைய தலை  முறை சிந்திப்பதில்லை. ஒரு கல்விக்கூடம்  மூடப்படுவதன்  பின்னணியில் உள்ள துன்பத்தை  யாரும் கவனத்தில்  எடுப்பதில்லை. தனது சொந்த  ஊருக்கு வர வேண்டிய  பெருமைகள் எங்கோ  இருக்கும் நகரத்துக்குச் செல்வதை  எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை.

  ஒரு பாடசாலை  மூடப்படும்  பின்னணியில் இடப்பெயர்வுபுலம்  பெயர்வுபிறப்பு விகிதம்  குறைவு எனப் பல காரணங்கள்  இருக்கின்றனஇதன்  பின்னணியில் கல்வித்துறை  அதிகாரிகளும் என்ற   கசப்பான  உண்மையையும்  மறுக்க முடியாது. அருகில் உள்ள பாடசாலைகளில்  பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு  தூரத்தில் உள்ள பாடசாலைகளில்  பிள்ளைகள் சேர்க்கப்படுவதை எப்படி அனுமதிக்கிறார்கள்.

சைவம்   கற்பிக்க மறுத்த சில கிறிஸ்தவப் பாடசாலைகள்  இன்று சைவப்பாடசாலைபோல் இயங்குகின்றன. சாதி  வேற்றுமை பார்த்த சில பாடசாலைகள்  இன்று  சகலரையும்  உள்ளீர்க்கின்றன.

இது எமது கிராமம் இங்கிருக்கும் பாடசாலை மூடப்படக்கூடாது என்ற மனநிலை தோன்றினால்  எஞ்சி இருக்கும் பாடசாலைகளுக்கு ஆபத்து ஏற்படமாட்டாது.