Showing posts with label விளையட்டு. Show all posts
Showing posts with label விளையட்டு. Show all posts

Tuesday, December 9, 2025

மாபெரும் சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்


  இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா  இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270  ஓட்டங்களை மட்டுமே குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 106  , பவுமா 48  ஓட்டங்களையும் குவித்தனர்.

271  ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 39.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 271 ஓட்டங்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

 இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 23 ஆவது வயதிலேயே 3 விதமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 6 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

 இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 121 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். இந்த போட்டியில் அவர் அடித்த சதம் அவரது முதல் ஒருநாள் சதமாக பதிவாகியது. ‍ ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகள்,ரி20 போட்டிகளில் சதமடித்துள்ள ஜெய்ஸ்வால் நேற்று ஒருநாள் போட்டியிலும் சதமடித்து 3 வகையான போட்டிகளிலும் சதமடித்த 6 ஆவது இந்திய வீரராக 23 வயதிலேயே அபார சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

  இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் சதமடித்த இந்திய வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், கே.எல் ராகுல், சுரேஷ் ரெய்னா ஆகிய 5 வீரர்கள் சாதனை நிகழ்த்தியிருந்தனர். இவ்வேளையில் 6 ஆவது இந்திய வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் .

  

Sunday, January 21, 2024

Under 19 உலகக் கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண (அண்டர் 19 உலகக் கோப்பை) கிறிக்கெற் போட்டி  ஜனவரி 19ஆம் திகதி  தென் ஆபிரிக்காவில் ஆரம்பமானது.   இலங்கையில் நடைபெறவிருந்த இந்த போட்டி பல்வேறு காரணங்களால்  தென்னாப்பிரிக்காவுக்கு  மாற்றப்பட்டது. 16 நாடுகள்  இந்ந்த்சப் போட்டியில் விளையாடுகின்றன.  5 மைதானங்களில்  41  போட்டிகள் நடைபெற உள்ளன.

குரூப் ஏ - பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா

குழு பி - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் சி - அவுஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஸிம்பாப்வே

குழு டி - ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்

 50 ஓவர்கள் வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் பாபர் அசாம் போன்ற பல முக்கிய வீரர்கள் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகினர்.

 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண  கிறிக்கெற் போட்டியில் அதிகமுறை இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த முறையும் இந்திய அணி நடப்பு சம்பியனாக களமிறங்கும். இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப்   போட்டியில்  இந்தியா ஐந்து  முறை சம்பியனானது.   மூன்று முறாஇ ரன்னர்  -அப் ஆந்து.

இந்திய அணி 2000, 2008, 2012, 2018 , 2022 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலியா இதுவரை மூன்று முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.   1998, 2002 , 2010 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது.

பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது.  கடந்த 2004 ,2006 ஆம் ஆண்டுகளில்  பாகிஸ்தான் சம்பியனானது. 

1998 ம் ஆண்டு  இங்கிலாந்து,2014 ம் ஆண்டு  தென்னாப்பிரிக்கா,2016 ம் ஆண்டு மேற்கு இந்தியா,2020 ம் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் சம்பிஅனாகின.  இலங்கை ஒரே  ஒரு முறை இருதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்தது.

முகமது நபியின் மகன் ஹசன் ஐசகில் , ரஷித் கானின் மருமகன் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Tuesday, May 23, 2023

ஐபிஎல் இல் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

16 வருட ஐபிஎல் வரலாற்றில்  இதுவரை ஒவ்வொரு அணியும் எவ்வளவு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்ற விபர்ம. 

ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 16வது ஆண்டாக இந்த தொடர் நடைபெற்றுவருகிறது.  இந்நிலையில் 16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள்   முடிவடைந்தது. இம்முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி என மொத்தம்  நான்கு அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கடந்த ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகின. இந்த அணிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் 16 வருட ஐபிஎல் தொடரில் இதுவரை ஒவ்வொரு அணியும் எவ்வளவு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறித்து இங்கு காணலாம்.

 

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 முறை

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் உள்ள சென்னை அணி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. மொத்தம் 14 வருடங்கள் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள சென்னை அணி 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2019, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டு என இதுவரை 12 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, அதிக முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 12 முறை ப்ளேஆஃப் சென்ற சென்னை அணி அதில் 9 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இதில் 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

                                    2. மும்பை இந்தியன்ஸ் - 10 முறை

16 வருடங்கள் தொடரில் விளையாடி அதில், 5 முறை சாம்பியன் பட்டத்தினை தன்வசப்படுத்தியுள்ள மும்பை அணி 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2020 மற்றும் இந்தாண்டுடன் மொத்தம் 10 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் 6 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மும்பை அணி அதில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.


                                 3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  8 முறை

ஒவ்வொரு ஆண்டும் ஈ சாலா கப் நம்தே என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பெங்களூரு அணி இதுவரை 2009, 2010, 2011, 2015, 2016, 2020, 2021, 2022 என 8 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்த அணி மூன்று முறையும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த அணியும் 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.


                                               4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 6 முறை

ஐபிஎல் தொடரின் ஆஸ்தான அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணி இதுவரை 2011, 2014, 2016, 2017, 2018, 2021 என மொத்தம் ஆறு ஆண்டுகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்த அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொல்கத்தா அணியின் முதல் கோப்பை சென்னை அணிக்கு எதிராக வாங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றிருந்தால் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வாங்கிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கும்.


                                    5. டெல்லி கேப்பிடல்ஸ் - 6 முறை

டெல்லி அணியைப் பொறுத்த வரையில் துவக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் இருந்தது. அதன் பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் என தனது பெயரினை மாற்றியது. இந்த அணி இதுவரை 2008, 2009, 2012, 2019, 2020, 2021 என மொத்தம் 6 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஒருமுறை மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பினை இழந்தது.


                                   6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -  6 முறை

2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 2013, 2016, 2017, 2018, 2019, 2020 என மொத்தம் 6 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்த அணி அதில் ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.


 

                                            7.ராஜஸ்தான் ராயல்ஸ் - 5 முறை

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட வருடமான 2008ஆம் ஆண்டு கோப்பையை வென்று ஐபிஎல் கோப்பையை முதல் முறை வென்ற அணி என்ற பெருமைக்கு சொந்தமானது. இதுவரை 2008, 2013, 2015, 2018, 2022 என மொத்தம் 5 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.


8. பஞ்சாப் கிங்ஸ் - 2 முறை                 

ஐபிஎல் தொடரில் மிகவும் பரிதாபத்துக்குரிய அணி என்றால் அது பஞ்சாப் அணி தான். 2008ஆம் ஆண்டு முதல் உள்ள இந்த அணி தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் இருந்தது. அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் என பெயரை மாற்றிக்கொண்டது. இந்த அணி இதுவரை 16 தொடர்கள் விளையாடி 2008 மற்றும் 2014 என இரண்டு முறை மட்டும் தான் ப்ளேஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. இதில் 2014ஆம் வருடம் மட்டும் இறுதிப் போட்டிக்குச் சென்ற அந்த அணி கோப்பையை கொல்கத்தாவிடம் பறிகொடுத்தது.


                                          9 - குஜராத் டைடன்ஸ்  [2 முறை]

2022 ஆம் ஆண்டு புதிதாக உருவான அணிகளில் ஒன்றான குஜராத் டைடன்ஸ்   இரண்டாவது முறையும் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள்து.

 

Tuesday, February 14, 2023

இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் மோர்கன் ஓய்வு


  உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் கப்டன் யோன் மோர்கன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக  13 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்துள்ளார். 2019-ல் நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மோர்கன் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது- தொழில் முறையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்து விட்டது. அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். உண்மையிலேயே மிகப்பெரும் சாகசத்தை இப்போது இழக்கிறேன். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனக்கு பிடித்தமானவர்களுடன் நேரத்தை கழிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனது எதிர்காலத்தை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு முயற்சிக்கப் போகிறேன். இவ்வாறு மோர்கன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக 126 ஒருநாள் போட்டிகளிலும், 72 ரி20 போட்டிகளிலும் மோர்கன் செயல்பட்டுள்ளார். இரு போட்டிகளிலும் சோத்து இவரது தலைமையிலான அணி மொத்தம் 118 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இவர் 6,957 ரன்ஓட்டங்களும்,  ரி20 போட்டிகளில் 2,458

 ஓட்டங்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் மோர்கன் தனது 16 வயதின்போது அயர்லாந்து அணியில் அறிமுகமானார். 2009-இல் அவர் இங்கிலாந்து அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2011 – 12-இல் கொல்கத்தா அணி ஐபிஎல் சம்பியன் பட்டம் வென்றபோது, மோர்கன் அணியில் இருந்தார். இவரது தலைமையில் கொல்கத்தா அணி 2021-ல் இறுதிப் போட்டிக்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியடைந்தது.