Showing posts with label ஐ.பி.எல். Show all posts
Showing posts with label ஐ.பி.எல். Show all posts

Monday, February 27, 2023

சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

 

 சின்னை சூப்பர் கிங்ஸ் வீரரான   பென் ஸ்டோக்ஸ் அனைத்து ஐபிஎல் கிரிக்கெட்  போட்டிகளிலும்  இடம் பெறமாட்டார் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 ஐபிஎல் நடப்பு சீசன் தொடர் மார்ச் 31ஆம் திகதி தொடங்கி மே 28ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் டோனி கப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டியுடன், டோனி ஐபிஎல் போடிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டோனிக்கு பின்னர் கப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அயர்லாந்து , அவுஸ்திரேலியா ஆகிய   அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் கடைசி சில ஆட்டங்களில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Sunday, January 22, 2023

காவ்யா மாறனைக் காதலிக்கும் ரசிகர்


 ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் போட்டி போலவே தென் ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்க டி20 (எஸ்.ஏ டி20) போட்டிகள் இந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ஐ.பி.எல். உரிமையாளர் அணிகள் தான் இந்த தொடரில் விளையாடும் 6 அணிகளையும் வசப்படுத்தியுள்ளன. அவ்வகையில், ஐ.பி.எல். தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி நிர்வகித்து வருகிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாக இயக்குநர்தான்காவ‌யா மாறன்.   கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்ற 16-வது ஐ.பி.எல். ரி20 கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலத்தின் போது, ஏலம் ஒருபுறம் பரபரப்பாக செல்ல, இவரது பெயர் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அவரது கியூட் சிரிப்புகளுக்காகவே ஏலத்தை நேரலையில் காண ரசிகர்கள் குவிந்தார்கள்.

ஐ.பி.எல். போட்டிகளின் போது தனது அணியை உற்சாகப்படுத்த வரும் அவரைக் காண வேண்டும் என்பதற்காகவே பல ரசிகர்கள் போட்டியைக் காண மைத்தினத்திற்கு விஜயம் செய்வதுண்டு. இதேபோல், டி.வி அல்லது அலைபேசி முன் தங்கள் கவனத்தை கொண்டு செல்வதுண்டு. அந்த அளவிற்கு புகழ்பெற்ற பிரபலமாக வலம் வருகிறார் காவ்யா மாறன்.

 சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும், சன் டி,வி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவருக்காகவே தங்களது சொந்த ஊர் அணியை விட்டு விட்டு, ஐதராபாத் அணிக்காக ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இப்படி அவருக்காக ரசிகர்கள் செய்யும் செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில், காவ்யா மாறனின் தற்போது புகழ் கடல் தாண்டி தென் ஆப்பிரிக்க வரை சென்றுள்ளது. அங்கு நடைபெற்று வரும் எஸ்.ஏ டி-20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் போது ஒரு ரசிகர் காவ்யா மாறனுக்கு கல்யண ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த ரசிகர் கையில் ஏந்தியிருக்கும் பதாகையில் “காவ்யா மாறன் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?” என்று எழுதி ஹார்ட் வரைந்து கல்யண ப்ரொபோஸ் செய்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Monday, March 14, 2016

மோசடி மன்னன் விஜய் மல்லையா தலை மறைவு

கிங் பிஷர் விமான நிறுவனம், கிங்க்பிஷர் மதுபான ஆலை, மருத்துவமனை உதைபந்தாட்டம்,கிரிக்கெற்,போர்முலா 1 ஆகியவற்றின்  உரிமையாளரான விஜய் மல்லையா   வாங்கிய கடனை  மீளச்செலுத்த முடியாத நிலையில் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டர். சுமர் 1.2 பில்லியன் டொலர் சொத்தின் உரிமையாளரான அவர்  வேண்டுமென்றே கடனை திரும்பச்செலுத்தத் தவறிய  மோசடியாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். 17  வங்கிகளில்   கோடிக்கணக்கான பணத்தை   கடனாகப் பெற்றதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 


யுனைட்டட் வங்கி, ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் விஜய் மல்லையா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தத்தவில்லை. அதன் காரணமாக வேண்டுமென்றே கடனை திரும்பச்செலுத்தத் தவறிய  மோசடியாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். 7500 கோடி ரூபா கடனை அவர் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டி பாரத ஸ்டேட் வங்கி, தேசிய கடன் தீர்ப்பாயத்தில் புகார் செய்தது. அப்புகாரை விசாரித்த தீர்ப்பாயம் அவரிக் கைது செய்து கடவுச்சீட்டை   பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. அப்போது விஜய் மல்லையா கைது  செய்யப்படுவார் என்ற செய்தி பரவியது. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஒன்றிணைந்து உச்ச நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. அந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் அவரது கடவுச்சீட்டை பறிக்க உத்தரவிட்டது.  கடந்த மாதம் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் என சி.பி.ஐ  அறிவித்ததாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
விஜய் மல்லையாவின் மீது  சுமார் ஒரு வருடமாக பல புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அப் புகார்களின்  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை மல்லையாவின் கிங் பிசிஷர் நிறுவனம் பொருளாதாரச்சிக்கலில் தவிக்கிறது.   கிங் பிஷர் விமானங்கள் பறக்கும் உரிமையை மத்திய அரசு தடை செய்துள்து. ஜெர்மன் நாட்டின் வங்கி ஒன்றுக்கு மல்லையா செலுத்த வேண்டிய பணத்துக்கு ஈடாக துருக்கியின் தரித்து நின்ற இரண்டு விமானக்களை அந்த நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது. விதி முறைகளை மீறி மல்லையாவுக்கு கடன் கொடுக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுலாக்கப் பிரிவு இதனை விசாரித்து மல்லையாவின் மீது வழக்குப் பதிவு  செய்யுள்ளது.

கர்நாடகாவின் ம‌ங்களூருக்கு அருகே உள்ள பண்டவன் நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வணிக நிர்வாக தத்துவ ஆய்வுக்காக கலிபோனியா தெற்குபல்கலைக்  கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.   இரண்டு பெண்கியாத் திருமணம் செய்தார் முதல் மனிவியுன் மகனான சித்தார்த் மல்லையா இவரை போன்று உடக வெளிச்சத்தில் பிரபலமானவர். இரண்டாவது மனைவிக்கு  இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். 1984 ஆம் ஆண்டு யுனைட்டட் பிரவேரிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அன்ருளிருந்து அவரது புகழ் உச்சத்தில் ஏறியது. சுமார் அறுபது பன்னாட்டு நிறுவனங்கள் கொண்ட  குழுவாக இது வளர்ச்சியடைந்தது.

2005  ஆம் ஆண்டு கிங் பிஷர் விமான நிறுவனம் ஆம்பிக்கப்பட்டது.. 32 நாடுகளுக்கு இந்த விமான நிறுவனம் சேவை செய்கிறது. 2007 ஆம் ஆண்டு ஸ்கொட்ஸ் விஸ்கியை கையகப்படுத்தியது. மிகக் குறைந்த  கட்டணத்தில் விமான சேவையை நடத்தி மற்றைய விமான நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்தார். மல்லையாவின் வியாபார  சாம்ராஜ்யம் விரிவடைந்ததனால் அவருடைய  புகழ் உலகெங்கும்பரவியது கிழக்கு வங்காளம்,கோல்கத்த ஆகிய நகரங்களில் உள்ள உதைபந்தட்ட்ட கழகங்களுக்கு மல்லையாவின் நிறுவனம்  ஆதரவளிக்கிறது..

பெங்களூர் ரோயல் சலஞசை மலையாவின் நிறுவனம்  வாங்கியுள்ளது. குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் உள்ளத்தால் அங்கும் முதலீடு செய்துள்ளார்.போம்முலா அகர பந்தயத்திலும் கால்  பதித்து தனது பெயரில் ஒரு அணியை வாங்கியுள்ளார். இந்தியாவின் பெறுமதி மிக்க பொருள்களை பாதுகாத்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். இலண்டனில் திப்பு சுல்தானின் வாள் ஏலத்துக்கு விடப்பட்ட போது 17000 டொலர் கொடுத்து அதை இந்தியாவின் உரிமையாக்கினார். நியூயோக்கில் மகாத்மா காந்தியின் கடிதத்தையும்  ஏலத்தில் வாங்கினார்.

கிங் பிஷர் நிறுவன கலண்டர்கள் இவரை பிரபலப்படுத்தின நீச்சல் உடை அழகிகளின் கவர்ச்சிப் படங்கள் உள்ள காலண்டருக்கு உலகளாவிய ரீதியில் பெரு மதிப்புள்ளது. அந்த அழகிகளைக் கட்டிப்பிடித்து மல்லையாவும் போஸ் கொடுப்பார். ஐ.பிஎல்லில்  மூக்கை நுழைக்கும் மல்லையாவின் மகன் சித்தார்த் நடிகைகளுடன் அமர்ந்து போட்டியை ரசிப்பார்.
 வங்கிகளில் பெற்ற விவசாயக்  கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது  தற்கொலை செய்யும் ஏழை விவசாயிகளின் தொகை வருடா வருடம் அதிகரிக்கிறது. ஏழைகளுக்கு ஒரு நீதி மல்லையாவுக்கு ஒரு நீதியா  பலவங்கிகளை மோசடி செய்த மல்லையாவுக்கு தொடர்ந்து கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர் பல வங்கிகளை வாங்கிய  கடனை திரும்ப செலுத்தவில்லை எனத்தெரிந்து கொண்டும்  புதிய வங்கிகள் விதி முறைகளை மீறி அவருக்கு கடன் கொடுத்துள்ளன..

  
சந்தையில் மோசமான நிலையில் இருந்த கிங் பிஷர் நிறுவனத்தின் மீதான எதிர்மறை மதிப்பீடு, எதிர்மறை நிகர மதிப்பு போன்றவற்றை அலட்சியப்படுத்தி அந்நிறுவனத்துக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் கடனை வாரி வழங்கியிருக்கின்றன வங்கிகள்.

கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தின் சொந்த நிதிநிலை அறிக்கையின் படியே 2005-ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.

முன்னதாக, ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பிஎன்பி ஆகிய வங்கிகள் கடன் பணத்தை பகுதியளவு சரிக்கட்ட கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தன. இதில் ஐ.டி.பி.ஐ ரூ 109 கோடி மதிப்பில் 1.7 கோடி பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.


கடந்த மே மாதம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம், 2008-ல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் (ரூ 4,022 கோடி) வகிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 5 நிறுவனங்களில் வின்சம் டயமண்ட்ஸ் (ரூ 3,243 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ (2,653 கோடி), கார்ப்பரேட் பவர் (ரூ 2,487 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (ரூ 2,031 கோடி) ஆகியவை அடக்கம். ஆயிரக்கணக்கான வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த இத்தகைய நிறுவனங்கள்தான் தொழில் முனைவு மூலம் இந்தியாவை முன்னேற்றப் போகிறவர்களாம். இந்நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தன என்பது மட்டுமில்லை, இவை வாங்கிய கடன்கள் எதற்கு பயன்பட்டன என்பது கூட கேள்விக்குரியது.


தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? முதலாளிகள் தமது தகிடுதித்தங்களின் மூலமாகவோ, லஞ்சம் மூலமாகவோ அல்லது லாபியின் மூலமாகவோ விதிமுறைகளை வளைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழில்களுக்கு திருப்பிவிடுவது மல்லையாவுக்கு இது முதல் முறை அல்ல. கொள்ளையடிப்பதிலும் அதற்கு ஆளும் வர்க்கங்களை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.

தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பெனியைத் துவக்கி, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார் மல்லையா. இதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அப்பாவி மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தினார். இதற்கு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் ஆளும் அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் எந்தத் திசையில் எங்கே போய் சேர்ந்ததென்று தெரிந்தும் இன்றுவரை அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் மௌனம் சாதித்து வந்திருக்கின்றன.
முதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் இதே பொதுத்துறை வங்கிகள் தான் சிறிய கடனுதவிக்காக சாதாரண மக்களை விதிமுறைகளைக் காட்டி பயமுறுத்துகின்றன, நடையாய் நடக்க வைக்கின்றன. வேலை கிடைக்காததால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன.
  மல்லையா போன்ற பெருமுதலைகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கின்றன பொதுத்துறை வங்கிகள். அதே நெருக்கடியை காரணம் காட்டி அரசுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
மக்கள் பணத்தை முதலாளிகளின் பாக்கெட்டுக்கு திருப்பிவிடுவதையே முதலாளித்துவ அரசுகள் தம் தலையாய கடமையாக செய்யும் போது இந்த போலி ஜனநாயக முறைகளை கொண்டு மல்லையா போன்ற கொள்ளையர்களை தண்டிக்கவோ, அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவோ முடியாது.
ரமணி
தமிழ்த்த‌ந்தி
13/03/16