Showing posts with label பெங்களூரு. Show all posts
Showing posts with label பெங்களூரு. Show all posts

Sunday, March 17, 2024

பெங்களூரில் தண்ணீர்ப் பஞ்சம் ஐபிஎல் நடத்துவதில் சிக்கல்


 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் என்றால் அது பெங்களூரு மாநகரில் அமைந்துள்ள சின்னச்சாமி மைதானம்தான்.

  பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கோடை காலம் இன்னும் முழுமையாக தொடங்காத நிலையில் பெங்களூரு நகருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது. இப்படியான நிலையில் ஐபிஎல் போட்டியை சின்னச்சாமி மைதானத்தில் நடத்தினால் மைதானத்தினை பாராமரிக்க மட்டுமே தினம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லீற்ற ர் தண்ணீர் தேவைப்படும். இதுவே போட்டி நடக்கும் தினம் என்றால், ரசிகர்களின் பயன்பாட்டிற்கு கூடுதலாக லட்சக்கணக்கான லீற்ற ர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், இதனைக் கருத்தில் கொண்டு, பெங்களூரில் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு விசாகப்பட்டினம் அல்லது கொச்சி மைதானம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணை காலத்திற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விசாகப்பட்டினம் மைதானம் கொடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு அணிக்கு கொச்சி மைதானத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது பெங்களூரு  அணி ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், நிலைமையை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்கத்தொடங்கிவிட்டனர். 

Sunday, May 22, 2022

நீலத்துக்கு மாறிய பெங்களூர்

 ஐபிஎல்  2022 தொடரில் ஒரு அணிக்கு எதிரணியை சேர்ந்த வீரர்களும் ரசிகர்களும் நிர்வாகமும் முழு ஆதரவை கொடுக்கும் என்று யாருமே ஆரம்பத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 69-ஆவது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தாலும் அந்த அணி வென்றால் மட்டுமே தாங்கள் நாக்-அவுட் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சேர்ந்த அத்தனை பேரும் மும்பை வெற்றி பெற வேண்டும் என்று வெளிப்படையாக ஆதரவு கொடுத்தனர்.

  அணியின் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் நட்சத்திரம் விராட் கோலி போன்ற வீரர்கள் வெளிப்படையாக மும்பைக்கு ஆதரவு தருகிறோம் என்று தெரிவித்த நிலையில் ஒருபடி மேலே சென்று அந்த அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தின் புகைப்படத்தை வழக்கமான சிவப்பு நிறத்திற்கு பதில் நீல நிறமாக மாற்றியது.

ரசிகர்களும் மும்பையை தங்களது அணியைப் போல தலையில் வைத்து சமூக வலைதளங்களில் கொண்டாடி நிலையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பெங்களூரு ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே டெல்லியை தோற்கடித்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலி, டுப்லஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் ஆகிய பெங்களூர் நட்சத்திரங்கள் மும்பை அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு உங்களுக்கு ஆதரவு தருகிறோம் எப்படியாவது வெற்றி பெற்று விடுங்கள் என்று தமக்கு மெசேஜ் செய்ததாக இப்போட்டியில் 34 ரன்கள் விளாசி வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்ட டேவிட் போட்டி முடிந்த பின் தெரிவித்தார்.

இதுபற்றி கலகலப்புடன் அவர் பேசியது பின்வருமாறு. “இன்று காலை டு பிளேஸிஸிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதில் டுப்லஸ்ஸிஸ் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் மும்பை ஜெர்சியை அணிந்திருந்தனர், அதை பின்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர் செய்வேன் என்று கூறினார்.

அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் தொடரில் அசத்திய இவரை கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெரிய தொகைக்கு வாங்கிய பெங்களூர் அணி நிர்வாகம் முதல் போட்டியில் வாய்ப்பளித்து  ஒரு ஓட்டத்துட பென்சில் அமர வைத்து பின்னர் கழற்றிவிட்டது.

  விராட் கோலி போன்ற வீரர்களுடன் நண்பர்களாக தொடர்பில் இருக்கும் தம்மிடம் அவர்கள் மும்பை ஜெர்சி அணிந்து கேட்டுக் கொண்டதை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்கு பங்காற்றியதாக டிம் டேவிட் தெரிவித்தார். மேலும் அவரை பாராட்டி பெங்களூர் அணி நிர்வாகமும் டிம் டேவிட் பெங்களூரு சீருடை அணிந்த புகைபடத்தை பதிவேற்றி நன்றி தெரிவித்தது.

Wednesday, April 13, 2022

பெங்களூருவை தெறிக்கவிட்ட சிங்கப்படை

நவிமும்பை  டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற  ஐபிஎல் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடர்ந்து நான்கு  போட்டிகளிலும் வரிசையாக தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தை பிடித்த சென்னை இந்த போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கியது.    இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட், உத்தப்பா ஆகியோர் களம்  இறங்கினர். ருதுராஜ்  17 (16) ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய மொயின் அலி 3 (8) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது தேவையின்றி ரன் அவுட்டானதால் 36/2 என தடுமாறிய சென்னைக்கு மீண்டும் 5-வது தோல்வி உறுதி என அந்த அணி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.  அப்போது களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே, வீரர் ரொபின் உத்தப்பாவுடன் ஜோடி  சென்னையை மீட்டெடுத்தது.

ஆரம்பத்தில் நிதானத்தை காட்டிய இந்த ஜோடி ஒருசில ஓவர்களுக்கு பின் பெங்களூரு பந்துவீச்சாளர்களை அதிரடி சரவெடியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர். நேரம் செல்ல செல்ல பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாத இந்த ஜோடி பவுண்டரிகளை விட சிக்சர்களை அதிகமாக பறக்கவிட்டு மைதானத்தில் ரன் மழை பொழிய தொடங்கினார்கள். அதற்கு ஏற்றார்போல் ஆரம்பத்தில் அற்புதமாக வீசிய பெங்களூர் பவுலர்கள் இவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு சரணடைந்து அதன்பின் ஓட்டங்களை வாரி வழங்கினர்.

பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அதன் கப்டன் டு பிளேஸிஸ் திகைத்துப் போய் நிற்க மறுபுறம் வெளுத்து வாங்கிய இவர்கள் இருவருமே அரைசதம் கடந்து 100 ஓட்டங்கள் எடுத்தனர்.  19-வது ஓவரில் 165 ஓட்டங்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 மெகா சிக்ஸர்கள் உட்பட 88 ஓட்டங்கள் எடுத்த ரொபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து பட்டையைக் கிளப்பிய ஷிவம் துபே கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 இமாலய சிக்சர் உட்பட 95* ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் மிரட்டலான ஆட்டத்தால்10 ஓவர்கலில் 60 ஓட்டங்கள் எடுத்த  சென்னை 20 ஓவர்களில் 216/4 என்ற பெரிய ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடசி ஓவரில் களம் இறங்கிய டோனி ஒரு பந்தைக்கூட சந்திக்கவில்லை. கசரங்க டி சில்வா இரண்டு விக்கெற்களையும், கெசில்வூட்  ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

217 என்ற மெகா இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு இலங்கை பந்துவீச்சாலர்  மகேஷ் தீக்ஷனா ஆரம்பத்திலிருந்தே தொல்லை கொடுத்தார். கப்டன் டு பிளேஸிசை 8 (9) ஓட்டங்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த நட்சத்திரம் விராட் கோலியை முகேஷ் சவுத்திரி 1 ஓட்டத்துடன்  ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத்தை 12 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்த  செய்த தீக்சனா ஆரம்பத்திலேயே போட்டியை சென்னையின் பக்கம் திருப்பினார். இதனால் 42/3 என தடுமாறிய பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 26 (11) ஓட்டங்கள்எடுத்து ஆட்டமிழந்தார்.   50/4 என மீண்டும் தடுமாறிய பெங்களூருவை இளம் வீரர் பிரபு தேசாய் அதிரடியாக 34 (18) ஓட்டங்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினாலும்  தீக்சனா அவரை காலி செய்தார்.

மற்றொரு இளம் வீரர் சபாஷ் அகமது தன் பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரிகள் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்து   ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் சென்னையின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேற இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/9 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பெங்களூரு தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் கப்டன் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.முகேஸ் செளத்திரி, பிராவோ ஆகியோர் தலா  ஒரு விக்கெற்றை வீழ்த்தினர்

மற்றொரு இளம் வீரர் சபாஷ் அகமது தன் பங்கிற்கு அதிரடியாக 4 பவுண்டரிகள் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்து   ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் சென்னையின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேற இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/9 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பெங்களூரு தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை வீரர் மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் கப்டன் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.முகேஸ் செளத்திரி, பிராவோ ஆகியோர் தலா  ஒரு விக்கெற்றை வீழ்த்தினர். சிவம் டுபே ஆட்ட நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

உத்தப்பா 9, சிவம் டுபே 8 சிக்ஸர்கள் அடித்தனர். சென்னை மூன்றாவது முறையாக 17 சிக்ஸர்கள் அடித்தது. முன்னதாக  2010 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராகவும்,2018 ஆம் அண்டு பெங்களூருவுக்கு எதிராகவும்  தலா 17 சிக்ஸர்கள் அடித்தது.

சிவம் டுபே, உத்தப்பா ஜோடி மூன்றாவது விக்கெற்றில் 165 ஒட்டங்கள் எடுத்தது. முதல் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தது. 22 பந்துகளில் 50 ஓடங்கள் எடுத்தது.

15 ஆவது ரி 20  சீசனில்  மூன்றாவது விக்கெற்றில் 165 ஒட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடி உத்தபா, சிவம் டுபே.  ப்ர்ங்கலூர் வீரர்களான விரட் கோலி, டுபிளஸிஸ்  பஞ்சாபுக்கு எதிராக 118 ஓட்டங்கள். குஜராத் வீரர்களன சிப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி 101 ஓட்டங்கள்.

சென்னை 200 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடியது. மும்பை,டில்லி,பஞ்சாப், பெங்களூரு,கொல்கட்டா ஆகியனவும்  200  போட்டிகலைல் விளையாடின.

Monday, April 11, 2022

நடுவரின் முடிவால் கொந்தளித்த கோலி


 மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 152 ஓட்டங்கள் இலக்கை விரட்டிய  பெங்களூரு 50/1 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆரம்பத்திலிருந்தே நிதானத்துடனும் அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்து வந்தார்.

 9‍ஆவது ஓவரில் களமிறங்கிய அவர் நிலைத்து நின்று 4 பவுண்டரிகள் உட்பட 48 ஓட்டங்கள் எடுத்து அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததார். அத்துடன் தனது அணியை வெற்றியின் அருகே அழைத்துச் சென்று கொண்டிருந்த அவரை இளம் தென் ஆப்பிரிக்க வீரர் தேவால்ட் பிரேவிஸ் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே அபாரமாக பந்துவீசி எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலியை தடுமாற வைத்துநடுவரிடம் அவுட் கேட்டார். அதை களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த விராட் கோலி உடனடியாக ரிவியூ செய்தார்.

 ஏனெனில் அந்தப் பந்து தனது கால்களில் படாமல் துடுப்பில்  பட்டதாக அவர் உணர்ந்தார். அதை தொடர்ந்து அதை 3-வது அம்பயர் சோதித்த போதுதுடுப்பு,  கால் ஆகிய இரண்டையுமே பந்து தொடுவதைப் போல அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெரியவந்தது. அந்த நிலையில் வெவ்வேறு திசைகளில் அதை பார்க்க முயற்சித்த அம்பயருக்கு அந்த பந்தை தெளிவாக பார்ப்பதற்கான வாய்ப்பு எந்த திசைகளிலும் கிடைக்கவில்லை. எனவே துடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக எந்தவித ஆதாரமும் கிடைக்காத நிலையில் களத்தில் ஏற்கனவே அம்பயர் அவுட் கொடுத்திருந்த காரணத்தை கையில் எடுத்த 3-வது அம்பயர் மீண்டும் அவுட் கொடுத்தார்.

இதனால் கடுப்பான விராட் கோலி கோபத்தில் மிகவும் ஆத்திரமடைந்து துடுப்பை விளாசிக்கொண்டே அம்பயரை திட்டிக்கொண்டே பெவிலியனுக்கு திரும்பினார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 அப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய நடுவரை பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏனெனில் அந்தப் பந்து முதலில்  துடுப்பில் தான் பட்டதாக பெரும்பாலான ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இது போன்ற தருணங்களில் துடுப்பிலும் காலிலும் பந்து படும் பட்சத்தில் துடுப்பில்  படுவதாக தான் நடுவர்  எடுத்துக் கொள்ள வேண்டுமென அடிப்படை கிரிக்கெட் விதிமுறை உள்ளது.

இது பற்றி எம்சிசி கிரிக்கெட் விதிமுறை 36.2.2 இல் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “ஒரு பேட்டரின் காலிலும் பேட்டிலும் ஒரே நேரத்தில் பந்து படுகின்ற தருணங்களில் அந்தப் பந்து முதலில் பேட்டில் படுவதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதி முறையின் அடிப்படையில் விராட் கோலி நிச்சயமாக அவுட் இல்லை என தெரியவருகிறது. இதனால் இதுபோன்ற மோசமான அம்பயர்களை ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் எப்படி பிசிசிஐ அனுமதிக்கிறது என்று நிறைய ரசிகர்கள் கேட்கின்றனர்.

  இந்த விதிமுறையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு அம்பயரை சாடியுள்ளது. அத்துடன் இதைவிட சிறந்த அம்பயர்கள் எங்கள் நாட்டில் உள்ளதால் உங்களுக்கு வேண்டுமெனில் அனுப்ப தயார் என  ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கலாய்த்துள்ளது.

Wednesday, March 30, 2022

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் போராடி வென்றது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்   6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

நா ண‌யச் சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் க‌ப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செயோட்டங்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 10 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய அணியின் க‌ப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 13 ஓட்டங்களில் ஹசராங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 10 ஓட்டங்க‌களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி  5 விக்கெட்களை இழந்து   67 ஓட்டங்கள்   எடுத்து தடுமாறியது.

  சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா கொல்கத்தா வீரர் ஷெல்டன் ஜாக்சனை அவரது முதல் பந்திலே வெளியேற்றினார்.

விக்கெட்கள் சரிந்தாலும் ஒருமுனையில் அதிரடி காட்டினார் ஆண்ட்ரே ரஸ்ஸல். அவர் 18 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் உமேஷ் - வருண் சக்ரவர்த்தி ஜோடி சற்று நிலைத்து நின்று ஓட்டங்கள் குவித்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹசராங்கா 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

129 ஓட்டங்ள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய  அனுஜ் ராவத்  ஓட்டம்  ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பாப் டு பிளெஸ்சிஸ் 5 ஓட்டங்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட‌ விராட் கோலி 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில்  உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.

  பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில்   3 விக்கெட்களை இழந்து  40 ஓட்டங்கள் எடுத்து  தடுமாறியது. இதன் பிறகு டேவிட் வில்லி - ரூதர்போர்டு ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடியது. வில்லி 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரூதர்போர்டு  28 ஓட்டங்கள் குவித்து சௌதீ பந்துவீச்சில் ஜாக்சன்-யிடம் கேட்ச் கொடுத்து  ஆட்டமிழந்தார்.

ஷாபாஸ் நதீம் சிறிது நேரம் அதிரடி காட்டினார். 3 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 20 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி ஓவரில் 7 விக்கெட் இழந்திருந்த நிலையில் 7 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக்கில் இருந்தார். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பெங்களூரு வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து, பவுண்டரி அடித்து பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியின் மூலம் பெங்களூரு அணி முதல்வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

Friday, October 15, 2021

ஐபிஎல் தொடரில் ராசி இல்லாத ராஜா விராட் கோலி

ரோயல் சலஞ்ச் பெங்களூருவில்  கோலி

11 வருடங்கள்  , 9 ஐபிஎல் தொடர்கள்

 8 வருடங்கள் கப்டன் 140  போட்டிகள்

 66 வெற்றிகள், 70 தோல்விகள் வெற்றி சதவீதம்   48%

  3 போட்டிகள் சமநிலையானது,

 4 போட்டிகளுக்கு முடிவு ஏதும் இல்லை

  49%  நாண‌யச் சுழற்சியில் வெற்றி

50 ஓட்டங்கள் 35

100 ஓட்டங்கள்  5

  413 பவுண்டரிகள்

 167  சிக்ஸர்கள்

30  சிக்ஸர்கள் 2016 ஆம் ஆண்டு

 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, ஆர்சிபி அணியில் 30 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார் விராட் கோலி.

2018-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரூ.17 கோடிக்கு கோலியைத் தக்கவைத்தது. அந்த சீசனில் கோலி 530 ஓட்டங்கள் குவித்தார். 

2016  ‍ஆம் ஆண்டு  இறுதிப் போட்டி ஒரேஞ் தொப்பி

2021-ம் ஆண்டு சீசனில் கோலி ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர்.

2016-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கோலி 2-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தார், அந்தத் தொடரிலும் 973 ரன்களை 16 போட்டிகளில் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். அதுமட்டுமல்லாமல் நிரந்தரமாகவே ஆர்சிபி அணிக்காக

2021-ம் ஆண்டு சீசனில் கோலி ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர்.

சம்பியன் கிண்ணம் கைக்கு எட்டவில்லை.

ஐபிஎல் தொடர் ஆரம்பமானபோது  விராட் கோலியை ரோயல் சலஞ்ச் பெங்களூரு அணி ஏலத்தில்  எடுத்தது. 2013 ஆம் ஆண்டு பெங்களூரு அனியின் கப்டனானார்  கோலி. எட்டு வருட கப்டன் பயணத்தை கோலி முடிவுக்குக் கொன்டுவந்துள்ளார். மிகச் சிறந்த வீரர், சாதனைகள் பலவற்றை அநாயசகமாக முறியடித்தவர்.சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரர். கப்டன் என்ற பெருமிதத்துடன் சம்பியன் கிண்ணத்தை தூக்கி மகிழ்ச்சியடையாமல் கப்டன் பதவியைத் துற‌ந்துள்ளார்.

 இந்திய கிறிக்கெற் அணித் தலைவராக இருக்கும் கோலி சர்வதேச வெற்றிக் கிண்ணம் எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் அந்த சோகம் தொடர்கிறது. துடுப்பாட்ட வீரனாக பிரகாசித்து வெற்றியின் உச்சங்கள் பலவற்றைத் தொட்ட கோலிக்கு சம்பியன் கிண்னங்கள் எவையும் வசமாகவில்லை.

  2008 ‍ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, ஆர்சிபி அணியில் 30 ஆயிரம் டொலருக்கு கோலியை ஏலத்தில் எடுத்தது. 12 போட்டிகளில் விளையாடிய கோலி 165 ஓட்டங்கள்  மட்டுமே அடித்தார்.

 2009 ஆம் ஆண்டு   கோலியின்  விளையாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டது. 246 ரன்கள் சேர்த்தார். 2010-ம் ஆண்டில் பெங்களூரு அணியிலேயே 3-வது அதிகபட்சமாக ஓட்டங்கள் சேர்த்த வீரராக கோலி 307 ஓட்டங்கள் சேர்த்தார்.

2011 ‍ஆம் ஆண்டுபெங்களூரு அனைத்து வீரர்களையும் ஏலத்தில் கழற்றிவிட்டாலும், கோலியை மட்டும் தக்கவைத்தது. விராட் கோலியைத் துணை க‌ப்டனாக நியமித்தது. க‌ப்டன் வெட்டோரிக்குக் காயம் ஏற்பட்டதால், சில போட்டிகளுக்கு கோலி க‌ப்டனாக செயல்பட்டார்.

அப்போது பெங்களுரு அணியின்  பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்ஸ், எதிர்காலத்தில் பெங்களூருக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் க‌ப்டனாக கோலி இருப்பார் எனக் கணித்தார். அந்த தொடரில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தார்போல், கோலி 2-வது அதிகபட்ச ஓட்டங்களைச் அடித்த‌ வீரராக மாறி 557 ஓட்டங்கள் குவித்தார். 2012-ம் ஆண்டு   கோலி 364 ஓட்டங்கள் அடித்தார்.

2013் ‍ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து கோலியின்  க‌ப்டன் பயணம் தொடங்கியது. அப்போது இருந்து இந்த சீசன் வரை பெங்களூரு அணியின் க‌ப்டனாக கோலி தொடர்கிறார். 2013 ‍ஆம் ஆண்டில் கோலி தலைமையில் பெங்களூரு அணி 5-வது இடத்தைப் பிடித்தது. துடுப்பாட்டத்தில் உச்சத்தில் சென்ற கோலி 634 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.  இதில் 6 அரை சதங்கள் அடங்கும்.

அடுத்த ஆண்டு தொடரில் பெங்களூருவின் மிக மோசமாக விளையாடியதால்  7-வது இடத்தைப் பிடித்தது, கோலி 359 ஓட்டங்கள் சேர்த்தார். பெங்களூருவின் கதை முடிந்ததென விமர்சனம் எழுந்தபோது  2015-ம் ஆண்டு அணியை தூக்கி நிறுத்தினார் கோலி.அந்தத் தொட‌ரில் பெங்களூருவை பிளே ஓஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற கோலி    505 ஓட்டங்களை அடித்தார்.

2016-ம் ஆண்டு பெங்களூருவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கோலி 2-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தார், அந்தத் தொடரிலும் 973 ஓட்டங்களை அடித்து ஒரேஞ் தொப்பியையும் வென்றார். 

2017-ம் ஆண்டு  தோள்பட்டை வலி காரணாக கோலி பல போட்டிகளில் விளையாடாததால், பெங்களூரு சீசனில் கடைசி இடத்தைப் பிடித்தது.

2018-ம் ஆண்டு   ரூ.17 கோடிக்கு கோலியைத் தக்கவைத்தது பெங்களூரு.  கோலி 530 ஓட்டங்கள் அடித்தார். பெங்களூரு 6-வது இடத்தைப் பிடித்தது.   2019-ம் ஆண்டுவரை ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுக்கு பெங்களூரு செல்லவில்லை.

2019-ம் ஆண்டு மார்ச் 28 ‍ஆம் திக‌தி ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ஓட்டங்களை தொட்ட இரண்டாவது வீரரானார்.  2020-ம் ஆண்டுபெங்களூரு பிளே ஓஃப் சுற்றுக்கு சென்றது.


2021-ம் ஆண்டு     ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

2021-ம் ஆண்டு   ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2-வது சுற்று தொடங்கும் முன் இந்த சீசனோடு க‌ப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.

  விராட் கோலியின்  ஐபிஎல் கப்டன் பயணம்  முடிவுக்கு வந்துள்ளது. ஆக்ரோசம்,அச்சுறுதல்,கோபம், வெறுப்பு, அழுத்தம் போன்றவற்றின் மூலம் எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் கோலியை இனிமேல் காணமுடியாது. வெற்றியுடன் போட்டியை முடிக்கவே வீரர்கள் விரும்புவார்கள். கப்டன் பதவியைத் துறக்கும் கோலி  நடுவருடன் வாக்குவாதம், தோல்வி, தலையைக் குனிந்தவாறு மைதானத்தை விட்டு வெலியேறினார்.


ஒரே உரிமையாளரின் அணிக்கு அதிக  போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கப்டன் கோலி.சம்பியன் கிண்ணத்தைத் தொட்டுத் தூக்காமல்    வெறுங்கையுடன் க‌ப்டன் பயண‌த்தை கோலி முடித்தது கோலியின் ரசிகர் அல்லாதவர்களுக்கும் வருத்தமளிக்கக் கூடியதே.ரி20 உலகக்கிண்னத்தை கோலியின் கையில் கொடுப்பதே சக வீரர்கள் கோலிக்குக் கொடுக்கும் கெளரவமாகும்


Tuesday, October 12, 2021

விராட் கோலியை வெளியேற்றிய சுனில் ந‌ரேன்

சுனில் நரேனின் அற்புதமான பந்துவீச்சு, சூழலுக்கு தகுந்தார்போல் அதிரடியான துடுப்பாட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில்  நடந்த எலிமினேட்டர் சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கோலி  துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு  அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் சேர்த்தது. 139 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது தகுதிச்சுற்றில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி. இதில் வெல்லும் அணி சென்னையுடன்  அணியுடன் கோப்பைக்காக கோதாவில் மோதும்.

 பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 18 பந்துகளை எதிர்கொண்டிருந்த படிக்கல் 5-வது ஓவரில் 21ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 49 ஓட்டங்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதனையடுத்து, அணியின் சரிவு தொடங்கியது.


  ஸ்ரீகர் பரத் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 33 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெங்களூரு 12 ஓவரில் 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கோலியைத் தொடர்ந்து ஏபி டிவில்லியர்ஸும் 11 ஓட்டங்களில் நரேன் பந்துவீச்சில் கோலியைப் போலவே ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் சுனில் நரேன் பந்துவீச்சில் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முக்கியமான மூன்று வீரர்களை சுனில் நரேனின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் பெங்களூரு அணி வீரர்கள் தடுமாறினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் 4 ஓவர்கள் வீசிய சுனில் நரேன் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷூப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஷப்மன் கில் 18 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி 6 ஓட்டங்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிவந்த வெங்கடேஷ் ஐயர் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, நிதிஷ் ராணா 23 ஓட்டங்களும், சுனில் நரேன் 26 ஓட்டங்களும் எடுத்து அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர். இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இயான் மோர்கன், ஷகிப் அல் ஹசன் களத்தில் இருந்தனர். இறுதிஓவரை டேனியல் கிறிஸ்டியன் வீசினர்.

அவருடைய முதல் பந்தை எதிர்கொண்ட ஹசன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து நெருக்கடியைக் கொடுத்தார். அதனையடுத்து, வந்த மூன்று பந்துகளுக்கு ஒவ்வொரு ஓட்டங்களாக எடுத்த  மோர்கனும், ஹசனும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதன்மூலம் ப்ளேஆப் சுற்றின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கொல்கத்தா அணி. பெங்களூரு அணி .பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது.

பெங்களூரு  அணிகடந்த இருதொடர்களிலும் ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றும் தோல்வியுடன் வெளியேறியது.  பெங்களூருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ப்டனாக இருந்தும் விராட் கோலியால் ஒரு கோப்பையைக்கூட வென்று கொடுக்க முடியவில்லை. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் கோலி என்பதில் ஐயமில்லை, ஆனால், எதையும் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனும் போது ஏதோ ஓர் இடத்தில் தவறு நேர்கிறது தெரிகிறது. கடந்த இரு சீசன்களிலும் ஆர்சிபி அணிக்கு சிறந்த வீரர்கள் அமைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.


கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் மட்டும்தான். சுனில் நரேன் வீழ்த்திய 4 விக்கெட்டுகள், கிறிஸ்டியன் ஓவரில் அவர் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே கொல்கத்தா பக்கம் திருப்பியது. 4 விக்கெட்டுகள், 15 பந்துகளில் 26 ஓட்டங்கள் சேர்த்த சுனில் நரேனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சுனில் நரேனுக்கு ஒத்துழைத்து வருண் சக்கரவர்த்தி, சஹிப் அல் ஹசன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இதில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், தனது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை, இதில் 7 டொட் பந்துகள் அடங்கும்

சஹிப் அல் ஹசன் 4 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்கள் கொடுத்தார் இதில் 6 டாட்பந்துகள் அடங்கும். இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி ஒட்டுமொத்த பெங்களூரின் ரன்ரேட்டின் கடிவாளத்தையே கைக்குள் அடக்கிவிட்டனர். இந்த மூவரும் 12 ஓவர்கள் வீசி 65 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 24 டாட் பந்துகள் அடங்கும்.

9 ஓவர்களில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் சேர்த்திருந்து. ஆனால், 3 சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீச வந்தபின், 6 விக்கெட்டுகளை இழந்து 77  ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.


பெங்களூருவின் அணியில்ஆ றுதல் அளிக்கக்கூடியது ஹர்சல் படேல் இந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த 2013ம் ஆண்டு பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். சஹல் 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் சுற்றி்ல் ஃபார்மில் இல்லாத சஹல் 2-வது சுற்றில் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார். சிராஜ் 4 ஓவர்கள்வீசி 19 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.