Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Saturday, January 22, 2022

துனுஷின் விவாகரத்து அறிவிப்பால் அதிர்ச்சியில் ரஜினி


  நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக  கடந்த 17 ஆம் திகதி டுவிட்டரில் அறிவித்திருந்தனர். இதனால் தனுஷின் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினியின் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையைத் தொடர உள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்து கொள்ளும் நேரம் இது! எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"

என்பதுதான் அந்தப் பதிவு.

அவர் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் ஐஸ்வர்யாவும் இதேபோன்றதொரு பதிவிட்டார். ஐஸ்வர்யா பதிவில், "இதற்கு கேப்ஷன் தேவையில்லை உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவுமே தேவை" எனக் குறிப்பிட்டிருந்தார். கவனமாக, தன் பெயரை 'ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' என்று குறிப்பிட்டிருந்தார்.

திரை உலகில் விவாகரத்து, மறுமணம் என்பது அடிக்கடி நடைபெறும் சம்பவம். சினிமா உலகைத் தாண்டி அரசியல், ஆன்மீகம் என  உச்சத்தில் இருக்கும் ஜினியின் குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என எவரும் எதிர் பார்க்கவில்லை.  விவாகரத்துப் பிரச்சினை  சுமார் மூன்று வருடங்களாக நீறு பூத்த நெருப்பாக இருந்ததாகவும் இப்போது  கனலாக வெளியாகி உள்ளது.

 நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்த பிரபலங்களில் ஒருவர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும்   நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் ஹிந்தியில் அத்ரங்கி ரே என்ற திரைப்படம் வெளியாகி பட்டய கிளப்பியது. இந்த நேரத்தில் தான் நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

ஐஸ்வர்யா தனுஷ் விவகாரத்து இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு முடிவுமே ஒரே நாளில் எடுத்து விட முடியாது. திருமணம், விவாகரத்து போன்ற விசயங்களும் அப்படித்தான். 25 ஆண்டுகாலம் வாழ்ந்து வெள்ளி விழா கொண்டாடிய தம்பதியர் கூட விவாகரத்து செய்து பிரிந்திருக்கின்றனர். அப்படித்தான் 18 ஆண்டு காலம் குடும்பம் நடத்திய தனுஷ் ஐஸ்வர்யாவும் இப்போது பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கான பின்னணியில் என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

சினிமாவில் நடிக்க வந்து சில ஆண்டுகளிலேயே பிரபலமான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டு பெரிய குடும்பத்து மருமகனானார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகராக இருப்பதால் நடிகைகளுடன் பலமுறை கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார் தனுஷ். பல நடிகைகளின் மண முறிவுக்கும் காரணம் தனுஷ்தான் என்று பேசப்பட்டது. சர்ச்சைகள் எழுவதும் சமாதானம் ஆவதும் வாடிக்கையானது  

தனுஷ் நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து முத்தக் காட்சிகள் இடம்பெற்றதால் அவரது குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியானாலும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தங்கள் உறவு சுமூகமாக இருப்பதை காட்டிக்கொண்டனர். சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது.

தனுஷின் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தமிழ் படங்கள் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் என பயணப்பட்டார் தனுஷ். ஐஷ்வர்யாவும் சினிமாவில் கவனம் செலுத்தினாலும் ஆன்மீகத்தின் பக்கம் பார்வையை திருப்பினார். கடந்த ஆண்டு அப்பா ரஜினிகாந்த் உடன் இமயமலைக்கு பயணப்பட்டார். பத்ரிநாத், கேதார்நாத் சென்று வந்தது முதலே நிறைய மாற்றங்கள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் தென்பட ஆரம்பித்தது.

ஆன்மீகத்தின் பக்கம் கவனத்தை திரும்பிய ஐஸ்வர்யா, யோகாவில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பெண்களுக்காக திவா யோகா மையத்தை தொடங்கினார். யோகாவில் முழுவதுமாக அர்ப்பணிக்க விரும்புவதாகவும் அதனால் இல்லற வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புவதாகவும் தனுஷ் இடம் கூறினாராம். தனுஷ் முதலில் ஏற்க மறுத்தாலும் தொடர் வற்புறுத்தல் காரணமாக ஐஸ்வர்யாவின் விருப்பத்திற்கு சம்மதம் கூறியதாகவும் தெரிகிறது.

மகள், மருமகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ரஜினிகாந்தை நிறையவே பாதித்துள்ளது. இருவரையும் அழைத்து பேசினாலும் பிரியவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்தே இருவரும் பரஸ்பரம் தங்கள் முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குப் பிறகு தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவே இணையத்தில் அதிகம் விசாரிக்கப்படுகிறது. தனுஷ், ஐஸ்வர்யா என்கிற நபர்களைக் கடந்து ரஜினிகாந்த் என்கிற மனிதர் இதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதே பலரின் கேள்வியாக, ஏக்கமாக இருந்தது. அவர் இதை மனதளவில் தாங்கிக்கொள்ள வேண்டுமே என்பதே அவர்களின் ஆதங்கமாக இருந்தது. பொங்கலன்றுதான் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு வந்த ரசிகர்களை உற்சாகமாகச் சந்தித்தார். அதற்குள் இப்படி ஆனது.

சமீபத்தில் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' ஷூட்டிங்கிற்கு தனுஷ் சென்றபோது ஐஸ்வர்யாவும் கூடப் போயிருந்தார். தேசிய விருது பெறும் விழாவின்போதுதான் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே மேடையில் விருதுபெற, உச்சி மோந்து பாராட்டிப் பதிவிட்டார் ஐஸ்வர்யா. அதன்பிறகு தனுஷின் குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டார்கள். இப்படியிருக்க, இடையில் என்ன ஆனது என்பதுதான் பலருக்கும் தோன்றும் கேள்வி.

இருவரின் விவாகரத்து பேச்சுவார்த்தை அளவிலேயே கடந்த பல மாதங்களாக இருந்தது. ஒவ்வொரு தடவையும் அந்தப் பேச்சு இறுதிக்கு வரும்போது ரஜினி அழைத்து சமாதானம் செய்வார். பிள்ளைகள் யாத்ராவும், லிங்காவும் அதை மேற்கொண்டு தள்ளிக்கொண்டு போகச் செய்வார்கள். குழந்தைகள் நலம் பற்றி யோசித்தவர்கள் யாத்ராவும், லிங்காவும் 14, 11 வயதை அடைந்த பிறகு மறுபடியும் இதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தைகளுக்கு இந்தப் பிரிவு பற்றி இருவராலும் சொல்லப்பட்டு விட்டதாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இருவரையும் போய் சந்திக்கலாம் என்றும் அதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். குழந்தைகள் இருவரும் தொடர்ந்து ஐஸ்வர்யாவிடமே வளர்வார்கள்.

போயஸ்காடனில் புது வீடுகட்டப்பட்டு வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்குமான வீடாம அது அரிவிக்கப்பட்டது. இருவரும் இணைந்து நடத்தும் நிறுவனங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

அதாவது தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் சமந்தா இடையே நெருக்கம் அதிகரித்தது இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் மனக் கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த போதும் இந்த விவாகரத்துக்கு பின்னணியில் தனுஷ் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் தற்போது தனுஷின் விவாகரத்து பின்னணியில் சமந்தா இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து இந்த நடிகை தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

அதுமட்டுமல்லாமல் போயஸ்கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டும் ஆறு ரஜினிகாந்த் வற்புறுத்தியதாகவும் இதனால் கடன் சுமையால் சிக்கித் தவித்த தனுஷிற்கு அவர் எந்தவித உதவியும் செய்யாததும் இந்த விவாகரத்துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இது போன்று பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டவர்கள் மனம் திறந்தால் தான் தெரியும்.

கொஞ்ச நாட்களுக்குப் பரபரப்பாகப் பேசப்படும் இச்செய்தி பின்னர் மற்றக்கடிக்கப்பட்டுவிடும். அவரவர்கள் தங்களை வேலையில் ஐக்கியப்படுத்திக் கொண்டு இந்தக் கடினமான சூழலைக் கடப்பார்கள்  காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும்.