Sunday, February 28, 2010

உலகக்கிண்ணம்2010


டென்மார்க்
ஐரோப்பாக் கண்டத்தின் பலம் வாய்ந்தஉதைபந்தாட்ட நாடுகளில் ஒன்றானடென்மார்க் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை
யப் பெற்றுள்ளது. குழு "1' இல் டென்மார்க், போர்த்துக்கல், சுவீடன், ஹங்கேரி,அல்பேனியா, மால்டனா ஆகிய நாடுகள்போட்டியிட்டன. டென்மார்க், போர்த்துக்கல்,ஹங்கேரி ஆகியன பலம் வாய்ந்தநாடுகளாகையினால் பலத்த எதிர்பார்ப்புஇருந்தது.10 போட்டிகளில் விளையாடிய டென்மார்க் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றது.மூன்று போட்டிகளை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்விஅடைந்து 21 புள்ளிகளுடன் உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 16 கோல்கள்அடித்த டென்மார்க்குக்கு எதிராக ஐந்துகோல்கள் அடிக்கப்பட்டன. 14 தடவை
மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.ஹங்கேரியுடனான முதலாவதுபோட்டி கோல் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டி
யில் 1 0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியிடம் டென்மார்க் தோல்வி அடைந்தது. போர்த்துக்கலுக்கு எதிரான முதலாவதுபோட்டியில் 3 2 என்ற கோல்
கணக்கில் டென்மார்க் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் முடிந்தது. மால்டனாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில்தலா 3 0 என்ற கோல் கணக்கிலும் அல்பேனியாவுக்கு எதிரான போட்டியில் 3 0என்ற கோல் கணக்கிலும் தனது ஆதிக்கத்தை
நிலைநாட்டியது டென்மார்க்.ஐந்து போட்டிகளில் டென்மார்க்குக்குஎதிராக கோல் அடிக்கப்படவில்லை.ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் டென்
மார்க்கால் கோல் அடிக்க முடியவில்லை.டென்மார்க் உதைபந்தாட்ட அணியின்வீரர்கள் ஐரோப்பிய விளையாட்டுக் கழகங்களில் விளையாடுகிறார்கள். அணித்தலைவர் தொம்ஸன் ஏ.சிமிலான், வில்லாரியல் ஆகிய கழகங்களில் விளையாடுகிறார்.டானியல் அசீர் (லிவர்பூல்), டானியல்ஜென்சன் (பேர்மன்), கிறிஸ்ரிபன்பொல்கின் (ஜுவான்டேஸ்), டெனிஸ்ரொமானிரி (அஜெக்ஸ்), நிக்கல்ஸ் பென்டிட்(அர்சனால்) செரேன் லாசன் ஆகியோர் எதிரணிகளை மிரட்ட தயாராகஉள்ளனர். மார்ட்டின் எல்சன் பயிற்சியாளராக உள்ளார்.

உலகக்கிண்ணம்2010


சுவிட்ஸர்லாந்து
உலகக் கிண்ணஉதைபந்தாட்டப்போட்டியில் விளையாடுவதற்கு சுவிட்ஸர்லாந்து தகுதி பெற்றுள்ளது. குழுஇரண்டில் சுவிட்ஸர்லாந்து, கிரீஸ், லத்வியா, லக்ஸம்பேர்க், இஸ்ரேல், மோல்டோ ஆகிய நாடுகள் போட்டியிட்டன. 10போட்டிகளில் விளையாடிய சுவிட்ஸர்லாந்து ஆறு போட்டிகளில் வெற்றி
பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்விஅடைந்தது. 18 கோல்கள் அடித்த சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக எட்டு கோல்கள்
அடிக்கப்பட்டன. சுவிட்ஸர்லாந்து 22 புள்ளிகளுடன் உலகக் கிண்ண போட்டியில்விளையாடும் தகுதியைப் பெற்றது.லக்ஸம்பேக்குடனான முதலாவது
போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில்தோல்வியடைந்த சுவிட்ஸர்லாந்து இரண்டாவது போட்டியில் 3 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதுவேசுவிட்ஸர்லாந்து ஒரு நாட்டுக்கு எதிராகஅடித்த கூடிய கோல்களாகும். இஸ்ரேலுக்கு எதிரான இரண்டு போட்டிகளும்வெற்றி தோல்வி இன்றிமு டிவடைந்தது.முதல் போட்டி 2 2 என்ற கோல் கணக்கில்சமநிலையில் முடிந்தது. இரண்டாவதுபோட்டியில் இரு அணிகளும் கோல்அடிக்கவில்லை.
அலெக்ஸாண்டர் பெரி பிளாசிஸ் நிக்குவோ ஆகிய இருவர் மீதும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இருவரும் தலாஐந்து கோல்கள் அடித்துள்ளனர். ஒட்மார்ஹட் பீல்ட் பயிற்சியாளராக உள்ளார்.குழு "எச்' இல் ஸ்பெயின் ஹொண்டுராஸ், சிலி ஆகிய நாடுகளுடன் சுவிட்ஸர்லாந்தும் உள்ளன

Thursday, February 25, 2010

உலகக்கிண்ணம்2010


ஸ்லோவாக்கியா
ஒன்றிணைந்த செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றானஸ்லோவாக்கியா உலகக் கிண்ணஉதைபந்தாட்டப் போட்டியில் விளையாடு
ம் தகுதியைப் பெற்றுள்ளது. குழு "3'இல் ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,செக்குடியரசு, அயர்லாந்து, போலந்து,சன்மரினோ ஆகிய நாடுகள் போட்டியிட்டன.குழு 3 இல் 22 புள்ளிகளைப் பெற்றுமுதலிடத்தைப் பிடித்த ஸ்லோவாக்கியாஉலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.10 போட்டிகளில் விளையாடியஸ்லோவாக்கியா ஏழு போட்டிகளில்வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தியது. இரண்டு போட்டிகளில்தோல்வி அடைந்தது. 22 கோல்கள் அடித்தஸ்லோவாக்கியாவுக்கு எதிராக 10கோல்கள் அடிக்கப்பட்டன. 18 தடவைமஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.இரண்டு முறை எச்சரிக்கை விடப்பட்டது.சன்மரினோவுக்கு எதிரான போட்டியில் 7:0 என்ற கோல் கணக்கில் வென்றுதனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.மூன்று போட்டிகளில் ஸ்லோவாக்கியாவுக்குஎதிராக கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஸ்லோவேனியாவுக்கு எதிரானஇரண்டு போட்டிகளிலும் ஸ்லோவாக்கியா தோல்வி அடைந்தது.முதலாவது போட்டியில் 2 1 என்றகோல் கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 2 0 என்ற கோல் கணக்கிலும்ஸ்லோவாக்கியா தோல்வி அடைந்தது.லிவப்பூர் அணியில் விளையாடும் மார்ட்டின்ஸ்கிரெல், மார்க்ஹம்கித், ஆறுகோல்கள் அடித்து அசத்தி உள்ள னர் ஸ்ரனிஸ்லார் செஸ்ரக் ஆகியோர் மீது மிகுந்தஎதிர்பார்ப்பு உள்ளது. விளாடிமிர் வெசஸ்ஸ்லோவாக்கியா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவரதுதந்தை செக்கோஸ்லோவாக்கியா அணியின் வீரர் என்பதுகுறிப்பிடத்தக்கது.குழு எஃப்பில்இத்தாலி, நியூஸிலாந்து, பரகுவேஆகிய நாடுகளும்ஸ்லோவாக்கியாவும்உள்ளன

மெட்ரோநியூஸ்

Thursday, February 18, 2010

உலகக்கிண்ணம்2010


சேர்பியா
உதைபந்தாட்ட அரங்கில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் திகதி முதலாவது சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் செக். குடியரசை வென்று சேர்பியா, உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளது.
யூகஸ்லோவியாவில் இருந்து மொன்ரனெக்ரோ, சேர்பியா ஆகியன தனித்தனி நாடுகளாக பிரிந்த பின்னர் முதன் முதலில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது சேர்பியா.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தகுதி காண் போட்டியில் குழு 7 இல் சேர்பியா, பிரான்ஸ், ஒஸ்ரியா, லிதுவேனியா, ரோமானியா, போரோ தீவுகள் ஆகியன போட்டியிட்டன. பலம் வாய்ந்த பிரான்ஸை பின்னுக்குத் தள்ளிய சேர்பியா 22 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
10 போட்டிகளில் விளையாடிய சேர்பியா ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியை சமநிலைப்படுத்தியது. இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
22 கோல்கள் அடித்த சேர்பியாவுக்கு எதிராக எட்டு கோல்கள் அடிக்கப்பட்டன.
23 தடவைகள் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒரு முறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
உதைபந்தாட்ட அரங்கில் பலம் வாய்ந்த பிரான்ஸுக்கு எதிரான முதலாவது போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த சேர்பியா இரண்டாவது போட்டியை 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலைப்படுத்தியது. ரோமானியாவுக்கு எதிரான போட்டியில் 5 0 என்ற கோல் கணக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. ஐந்து போட்டிகளில் சேர்பியாவுக்கு எதிராக விளையாடிய எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் கழகத்தில் விளையாடும் நெமஞ்சாவிடிக் பெரீஸ்,தலைவர் டெஜான்ஸ் ரக்கோவிச், மார்கோபன்ரவிக், மிலான் ஜோவனோவிக் ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
மிலான்ஜோவனோவிக் ஐந்து கோல்கள் அடித்துள்ளார். ரடோமிர் அன்ரிச் பயிற்சியாளராக உள்ளார்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஒன்பது தடவைகள் விளையாடிய யூகஸ்லோவியா இன்று இல்லை.
ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா ஆகிய நாடுகளுடன் "டி' பிரிவில் சேர்பியா உள்ளது.

உலகக்கிண்ணம்2010


நெதர்லாந்து
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஐரோப்பா கண்டத்தில் இருந்து தெரிவான நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. எட்டுப் போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 24 புள்ளிகளுடன் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் நெதர்லாந்து, நோர்வே, ஸ்கொட்லாந்து, மர்ஸிடோனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் குழு 9 இல் போட்டியிட்டன. எட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நெதர்லாந்து 17 கோல்கள் அடித்தது. நெதர்லாந்துக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. ஒன்பது முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
மர்ஸிடோனியாவுக்கு எதிரான போட்டியில் 4 0 என்ற கோல் கணக்கில் வென்றது நெதர்லாந்து. ஆறு போட்டிகளில் நெதர்லாந்துக்கு எதிராக கோல் அடிக்கப்படவில்லை.
எட்வின் வன்டர், ரொவுட்வன், பென்மாக்விக், வன்பஸ்ரின், அர்ஜின் ரொபன், ரொஜிஸ், மஸ்ரிஜென், மாக்வன் பூமல் ஆகியோர் நெதர்லாந்தின் வெற்றியில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
நெதர்லாந்து உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மாக்வன் கடமையாற்றுகிறார்.
டிர்க்குமிட், கிளாஸ் ஹன்டலா ஆகியோர் தலா மூன்று கோல்கள் அடித்துள்ளனர்.
ஜப்பான், கமரூன், டென்மார்க் ஆகிய நாடுகளுடன் குழு "ஈ' யில் நெதர்லாந்து உள்ளது.

உலகக்கிண்ணம்2010


இத்தாலி
ஐரோப்பாவின் பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணியும் உலக உதைபந்தாட்ட சாம்பியனுமான இத்தாலி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. குழு எட்டில் இத்தாலி, அயர்லாந்துக் குடியரசு, பல்கேரியா, சைப்பிரஸ், மொன்ட
னெக்ரோ, கிரீஸ் ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக மோதின.
10 போட்டிகளில் விளையாடிய இத்தாலி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலைப்படுத்தியது. 18 கோல்கள் அடித்த இத்தாலிக்கு எதிராக ஏழு கோல்கள் அடிக்கப்பட்டன. 24 புள்ளிகளுடன் குழு 8 இல் முதலிடம் பிடித்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது இத்தாலி. இத்தாலிக்கு எதிராக 19 தடவைகள் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு முறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
சைப்பிரஸுக்கு எதிராக 3 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது இத்தாலி. இத்தாலிக்கு எதிராக அயர்லாந்தும் சைப்பிரஸும் தலா இரண்டு கோல்கள் அடித்தன. இத்தாலிக்கு எதிராக ஒரு நாடு அடித்த அதிக கோல்கள் இதுவாகும். ஆறு போட்டிகளில் இத்தாலிக்கு எதிராக கோல்கள் அடிக்கப்படவில்லை. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளும் முறையே 1 1, 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன.
இத்தாலிய கோல் கீப்பரான கியான் லுகி பவ்பனிடம் கோல் அடிப்பது மிகவும் சிரமமான காரியம். அணித் தலைவரான பபியோ கவைரோ, மத்திய கள வீரரான கன்னரோ கத்துசோ அல்படோகிளாடினே ஆகியோர் உலகக் கிண்ணத்தை தக்க வைக்கும் நம்பிக்கையில் உள்ளனர். அல்பட்டோ கிளாடினோ நான்கு கோல்கள் அடித்துள்ளார். அனுபவமும் ஆற்றலுமிக்க மர்கிலோவிட்டி இத்தாலிய உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். நியூஸிலாந்து, பரகுவே,சுலோவேனியா ஆகியவற்றுடன் எஃப் பிரிவில் இத்தாலி உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

தி.மு.க.வின் திட்டத்தால்அதிர்ந்து போயுள்ள பா.ம.க.


பெண்ணாகரம் இடைத் தேர்தலின் மூலம் தமது பலத்தைக் காட்டுவதற்காக தமிழக அரசியல் கட்சிகள் களமிறங்கத் தயாராக இருந்த வேளையில் பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நிலை எழுந்துள்ளது.
கடந்த தேர்தலில் வாக்களித்த சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட எட்டு எதிர்க்கட்சிகள் டெல்லியில் உள்ள தேர்தல் தலைமை ஆணையகத்தில் புகார் செய்ததனால் பெண்ணாகரம் தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர்ப் பட்டியல் வெளியிடுவதை நிறுத்துமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணாகரம் தொகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேவேளை ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி இருந்தது. அப்படி இரண்டாவது பெயரைத்தான் நீக்கினோம். 30 ஆயிரம் பேரை நீக்கியதாகக் கூறியதில் எந்தவித உண்மையும் இல்லை என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அமுதாவி விளக்கமளித் துள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாமையினால் பெண்ணாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டினால் பெண்ணாகரம் இடைத் தேர்தல் தள்ளிப் போகும் சூழ்நிலை எழுந்துள்ளதே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை அது எந்தவிதத்திலும் தடுக்கப் போவதில்லை.
பெண்ணாகரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அவரின் மகன் அன்புமணி உட்பட அக் கட்சியின் பிரமுகர்கள் அனைவரும் பெண்ணாகரத்தில் முகாமிட்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாக திராவிட முன்னேற்றக் கழகமும் பெண்ணாகரத்தில் களமிறங்கியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகி விட்டது. அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கவரும் திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் தோல்விகளையும் அக்கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரத்தினால் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் தொண்டர்களும் மனம் மாறியுள்ளனர். அமைச்சர் வேலுவின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
துணை முதல்வர் ஸ்டாலின் பெண்ணாகரத்துக்கு விஜயம் செய்த போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 5000 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகளவு இருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணாகரத்தில் அரச கல்லூரி கட்டப்படும் என்ற துணை முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி தமிழக அரசின் இலவச கொங்கிறீட் வீட்டுத் திட்டம், இலவச உயர் கல்வித் திட்டம் ஆகிய அறிவிப்புகளும் பெண்ணாகரம் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மிக்க பெண்ணாகரத்தில், வெற்றி பெறும் நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆகிய இரு பெரும் சுறாக்களுக்கு மத்தியில் தனியாகப் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி "இனமா? பணமா?' என்ற கோஷத்தை மக்கள் முன் வைத்துள்ளது.
மற்றக் கட்சிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற கோஷத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் முன் வைத்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெண்ணாகரம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 54,000 வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 45,000 வாக்குகளும் பெற்றிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியத் தேர்தல் கமிஷனின் வைர விழாவில் ஜெயலலிதாவைக் கலந்து கொள்ளுமாறு தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த விவகாரம் டெல்லிவரை பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லி செல்லும் ஜெயலலிதா சோனியாவைச் சந்திக்கிறார், புதிய கூட்டணி உதயமாகிறது என்று தமிழகத்தில் கொளுத்திப் போட்ட வெடி டெல்லிவரை அதிர்ந்தது. தலைமைத் தேர்தல் கமிஷன் விளக்கமளிக்க வேண்டிய சூழ்நிலையும் இதனால் ஏற்பட்டது.
தமிழக அமைச்சரவையில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர். ராகுல் காந்தியும் இதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு கொடுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன் வருவது சந்தேகமே.
கூட்டணிக் கட்சிக்குரிய மரியாதையையும் மதிப்பையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஓரளவு கொடுத்து வருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருத்து கூட்டணிக் கட்சிக்குரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. ஆகையினால் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அமைச்சராகும் கனவு தற்போதைக்கு நிஜமாகும் சூழ்நிலை இல்லை.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 14/02/10

Monday, February 15, 2010

உலகக்கிண்ணம்2010


ஜேர்மனி
ஐரோப்பாக் கண்டத்தின் பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றான ஜேர்மனி 26 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய ஜேர்மனி எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளைச் சமநிலைப்படுத்தியது.
இங்கிலாந்து, ரஷ்யா, பின்லாந்து, வேல்ஸ், அஸபர்ஜான் ஆகிய நாடுகள் குழு நான்கில் போட்டியிட்டன.
வீச்சென்ஸ்னுக்கு எதிரான முதலாவது போட்டியில் 60 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 40 என்ற கோல் கணக்கிலும் அஸபைஸானுக்கு எதிரான போட்டியில் 40 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற ஜேர்மனி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. பின்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டியில் 33 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டி 11 என்ற கோல் கணக்கிலும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஜேர்மனிக்கு எதிராக ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகூடிய மூன்று கோல்களை பின்லாந்து அடித்தது.
ஜேர்மனிக்கு எதிரான ஆறு போட்டிகளில் எதிர்த்து விளையாடிய நாடு கோல் எதனையும் அடிக்கவில்லை. 26 கோல்கள் அடித்த ஜேர்மனிக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. இரண்டு தடவைகள் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு தடவை எச்சரிக்கை விடப்பட்டது.
அணித் தலைவர் மைக்கல் பல்லக், மிரோசில்க்கொலஸ் இவர் 93 சர்வதேசப் போட்டிகளில் 43 கோல்கள் அடித்துள்ளார். பிலிப்ஸ் லஹ்ம், லூகாஸ் பொடங்கி ஆகியோரை சமாளிப்பது எதிரணிகளுக்கு சிரமமானதாக இருக்கும்.
மிரோசில்வ் கொலஸ் ஏழு கோல்களும் லூகாஸ் பொடஸ்கி ஆறு கோல்களும் மைக்கல் பலக் நான்கு கோல்களும் அடித்துள்ளனர். அவுஸ்திரேலியா, கானா, சேர்பியா ஆகியவற்றுடன் குழு "டி' யில் ஜேர்மனி உள்ளது.

Sunday, February 14, 2010

உலகக்கிண்ணம்2010


இங்கிலாந்து
உலகில் உள்ள மிக அதிகமான உதைபந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகனான டேவிட் பெக்கம், வேர்ன் ரூனி ஆகியோரின் பலத்தினால் எதிரணிகளை கலங்கச் செய்யும் நாடு இங்கிலாந்து 10 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்து 27 புள்ளிகளுடன் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து தெரிவான அணிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து, உக்ரேன், குரோசியா, பெலாரஸ், கஸகஸ்தான், அன்டோரா ஆகிய ஆறு நாடுகளும் குழு 6இல் போட்டியிட்டன. உக்ரேன், இங்கிலாந்துக்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போன்றே முதலாவது போட்டியில் தோல்வி அடைந்தாலும் உக்ரேன் இரண்டாவது போட்டியில் தனது நாட்டில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
அன்டோராவுக்கு எதிரான போட்டியில் 6 0, கஸகஸ்தான், குரோசியா ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டியில் தலா 5 1 என்ற கோல் கணக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது இங்கிலாந்து. நான்கு போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை. ஏனைய ஐந்து போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒருகோல் அடிக்கப்பட்டது.
உக்ரேனுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. இத்தகுப் போட்டியில் இங்கிலாந்து கோல் அடிக்கவில்லை.
34 கோல்கள் அடித்த இங்கிலாந்துக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன. ஏழு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒருமுறை சிகப்பு அட்டை காட்டப்பட்டது. ரூனி, பெக்கம், பிராங்ளம், பேட்டு, ஸ்டீபன் கெராட், பீற்றர் குரூஸ், ஜேமய்ன் டிபோ ஆகியோரை கட்டுப்படுத்துவது எதிரணிகளுக்கு சிரமமானதாக இருக்கும். ரூனி ஒன்பது கோல்கள் அடித்து அசத்தி உள்ளார். ஸ்டீபன்கொரட் ஒரு போட்டியில் நான்கு கோல்களும் இன்னொரு போட்டியில் மூன்று கோல்களும் அடித்துள்ளார். 135 நிமிடங்கள் மட்டும் விளையாடிய ஜேமய்ன் டிபோ மூன்று கோல்கள் அடித்துள்ளார். பீற்றர் குரோஸ், பிராங்கலம் பேட் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்துள்ளனர். டேவிட் பெக்கம் கோல் எதுவும் அடிக்கவில்லை என்றாலும் அச்சுறுத்தும் வீரராக உள்ளார்.
"சி' பிரிவில் அமெரிக்கா, அல்ஜீரியா, சுலோவேனியா ஆகிய நாடுகளுடன் இங்கிலாந்து உள்ளது.

Friday, February 12, 2010

உலகக்கிண்ணம்2010


ஸ்பெய்ன்
உதைப்பந்தாட்டத்தின் சொர்க்கபுரியாகத் திகழும் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து 53 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற போட்டியிட்டன. பலம் வாய்ந்த பல நாடுகள் உள்ள ஐரோப்பாவில் இருந்து 13 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் உள்ள உதைபந்தாட்டக் கழகங்களும் பிரபல்யம் வாய்ந்தவை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள உதைப்பந்தாட்டக் கழகங்களில் உலகின் பிரபலமான உதைபந்தாட்ட வீரர்கள் விளையாடுகின்றனர்.
பிரேஸில், ஆர்ஜென்ரீனா போன்ற நாட்டு உதைபந்தாட்ட நட்சத்திர வீரர்களை ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.
ஐரோப்பாவில் உள்ள 53 நாடு ஒன்பது குழுக்களாக முதலாவது சுற்றில் போட்டியிட்டன.
எட்டுக் குழுக்களில் தலா ஆறு நாடுகளும் ஒன்பதாவது குழுவில் ஐந்து நாடுகளும் போட்டியிட்டன. ஒன்பது குழுக்களிலும் முதலிடம் பெற்ற நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. மேலும் நான்கு நாடுகளைத் தேர்வு செய்வதற்காக அதிக புள்ளிகள் பெற்ற எட்டு நாடுகள் இரண்டாம் சுற்றில் போட்டியிட்டன. எட்டு நாடுகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற நான்கு நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
முதல் சுற்றில் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்று பெற்று 30 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் விளையாட ஸ்பெய்ன் தகுதிபெற்றது. ஸ்பெய்ன், பொஸ்னியா, துருக்கி, பெல்ஜியம், எஸ்தோனியா, ஆர்மேனியா ஆகிய நாடுகள் குழு ஐந்தில் போட்டியிட்டன. ஸ்பெய்னுக்கு எதிராக விளையாடி எந்தவொரு நாடும் வெற்றிபெறவில்லை.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 50, பொஸ்னியாவுக்கு எதிராக 52, ஆர்மோனியாவுக்கு எதிரான போட்டியில் 40 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற ஸ்பெய்ன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஆறு போட்டிகளில் ஸ்பெய்னை எதிர்த்து விளையாடிய எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை. ஸ்பெய்னுக்கு எதிராக பொஸ்னியா அதிகபட்சமாக இரண்டு கோல்கள் அடித்தது.
28 கோல்கள் அடித்த ஸ்பெய்னுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 13 தடவைகள் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. டேவிட் வில்லா ஏழுகோல்கள் அடித்துள்ளார். டேவிட் வில்லா, ஜேன் மனுவல மாடா ஆகியோர் தலா மூன்றுகோல்கள் அடித்தனர்.
சிறந்த கோல் கீப்பரான அணித்தலைவர் ஐகர்கசிலாஸ், டேவிட் பில்லா ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஹொண்டூராஸ் சிலி, சுவிட்ஸர்லாந்து ஆகியநாடுகளுடன் எச் பிரிவில் ஸ்பெயின் உள்ளது.

Monday, February 8, 2010

தி.மு.க.வின் திட்டத்தால்அதிர்ந்து போயுள்ள பா.ம.க.


பெண்ணாகரம் இடைத் தேர்தலின் மூலம் தமது பலத்தைக் காட்டுவதற்காக தமிழக அரசியல் கட்சிகள் களமிறங்கத் தயாராக இருந்த வேளையில் பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நிலை எழுந்துள்ளது.
கடந்த தேர்தலில் வாக்களித்த சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட எட்டு எதிர்க்கட்சிகள் டெல்லியில் உள்ள தேர்தல் தலைமை ஆணையகத்தில் புகார் செய்ததனால் பெண்ணாகரம் தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர்ப் பட்டியல் வெளியிடுவதை நிறுத்துமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணாகரம் தொகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேவேளை ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி இருந்தது. அப்படி இரண்டாவது பெயரைத்தான் நீக்கினோம். 30 ஆயிரம் பேரை நீக்கியதாகக் கூறியதில் எந்தவித உண்மையும் இல்லை என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அமுதாவி விளக்கமளித் துள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாமையினால் பெண்ணாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டினால் பெண்ணாகரம் இடைத் தேர்தல் தள்ளிப் போகும் சூழ்நிலை எழுந்துள்ளதே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை அது எந்தவிதத்திலும் தடுக்கப் போவதில்லை.
பெண்ணாகரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அவரின் மகன் அன்புமணி உட்பட அக் கட்சியின் பிரமுகர்கள் அனைவரும் பெண்ணாகரத்தில் முகாமிட்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாக திராவிட முன்னேற்றக் கழகமும் பெண்ணாகரத்தில் களமிறங்கியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகி விட்டது. அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கவரும் திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் தோல்விகளையும் அக்கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரத்தினால் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் தொண்டர்களும் மனம் மாறியுள்ளனர். அமைச்சர் வேலுவின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
துணை முதல்வர் ஸ்டாலின் பெண்ணாகரத்துக்கு விஜயம் செய்த போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 5000 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகளவு இருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணாகரத்தில் அரச கல்லூரி கட்டப்படும் என்ற துணை முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி தமிழக அரசின் இலவச கொங்கிறீட் வீட்டுத் திட்டம், இலவச உயர் கல்வித் திட்டம் ஆகிய அறிவிப்புகளும் பெண்ணாகரம் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மிக்க பெண்ணாகரத்தில், வெற்றி பெறும் நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆகிய இரு பெரும் சுறாக்களுக்கு மத்தியில் தனியாகப் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி "இனமா? பணமா?' என்ற கோஷத்தை மக்கள் முன் வைத்துள்ளது.
மற்றக் கட்சிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற கோஷத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் முன் வைத்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெண்ணாகரம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 54,000 வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 45,000 வாக்குகளும் பெற்றிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியத் தேர்தல் கமிஷனின் வைர விழாவில் ஜெயலலிதாவைக் கலந்து கொள்ளுமாறு தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த விவகாரம் டெல்லிவரை பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லி செல்லும் ஜெயலலிதா சோனியாவைச் சந்திக்கிறார், புதிய கூட்டணி உதயமாகிறது என்று தமிழகத்தில் கொளுத்திப் போட்ட வெடி டெல்லிவரை அதிர்ந்தது. தலைமைத் தேர்தல் கமிஷன் விளக்கமளிக்க வேண்டிய சூழ்நிலையும் இதனால் ஏற்பட்டது.
தமிழக அமைச்சரவையில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர். ராகுல் காந்தியும் இதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு கொடுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன் வருவது சந்தேகமே.
கூட்டணிக் கட்சிக்குரிய மரியாதையையும் மதிப்பையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஓரளவு கொடுத்து வருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருத்து கூட்டணிக் கட்சிக்குரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. ஆகையினால் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அமைச்சராகும் கதை தற்போதைக்கு நிஜமாகும் சூழ்நிலை இல்லை.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 07/02/10

Wednesday, February 3, 2010

விகடனில்என்கதை


குலதெய்வம்
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். பசியுடன் அலைந்த முதிய மீனுக்கு இரை கிடைக்கவில்லை. திடீரென நீரினுள் எழுந்த வித்தியாச அலையினால் எச்சரிக்கையான அந்த முதிய மீன் தனது இனத்தவரின் வருகை என்பதை புரிந்து கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. மிகச் சிறிய மீன்கள் முன்னே துள்ளிக் குதித்து வர, அதன் பின்னே பெரியதும் சிறியதுமான மீன்கள் அணிவகுத்து வந்தன. அதிக கூட்டமாக வரும் மீன்களைக் கண்ட முதிய மீன் ஆச்சரியத்துடன் பார்த்தது.
முதிய மீனை ஒரு பொருட்டாகக் கணக்கில் எடுக்காது மீன் கூட்டம் விலத்திக் கொண்டு விரைந்தது.
"ஏனப்பா என்ன ஏதாவது பிரச்னையா? சுனாமி வரப் போகுதா? எதற்காக இப்படிக் கூட்டமாக ஓடி வருகிறீர்கள்?" என்று முதிய மீன் கேட்டது.
"நாங்கள் பாதுகாப்பாக வாழப் போகின்றோம்," எனக் கூறிய சிறிய மீன், பெரிய மீன்களை முந்திக் கொண்டு சென்றது.
பாதுகாப்பாக உயிர் வாழ்வா?
எம்மையே பிடித்து விழுங்கத் துடிக்கும் பெரிய மீகள்கள், வலிமையான வலைகள்... இவற்றிடமிருந்து எப்படி நாம் உயிர் பிழைத்து பாதுகாப்பாக வாழ்வது எனச் சிந்தித்தபடி இரை தேடியது முதிய மீன்.
மீண்டும் ஒரு முறை நீரின் சலசலப்பு வித்தியாசமானதால் எச்சரிக்கையடைந்த முதிய மீன் உற்றுப் பார்த்தது. தன் இனத்தவரின் வரவினால் ஏற்பட்ட நீரின் மாற்றம் என்பதை உணர்ந்து நிம்மதியானது. முன்னர் வந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மீன்கள், முதிய மீனைக் கடந்து சென்றன.
"எல்லோரும் எங்கே போகிறீர்கள்?" என்று முதிய மீன் கேட்டது.
"நாங்கள் பாதுகாப்பாக வாழப் போகின்றோம்," என்று கூறிய படி மீன்கள் வேகமாகச் சென்றன.
"நீ எதற்காக தனியே நிற்கிறாய்..? எங்களுடன் வந்தால் பாதுகாப்பாக உயிர் வாழலாம்," என்று முதிய மீனிடம் அதன் வயதை ஒத்த மீனொன்று அழைப்பு விடுத்தது.
"எங்கே ஐயா நாம் பாதுகாப்பாக வாழ்வது?" என்று முதிய மீன் கேட்டது.
"உனக்கு சங்கதி தெரியாதா?! குமரிக் கண்டத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாட்டில் மீனை பாதுகாக்க சட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்களின் குலதெய்வம் மீனாம். ஆகையால், பாதுகாப்பு வலையம் அமைத்து மீனைப் பாதுகாக்கிறார்களாம்," என்றது புகலிடம் தேடிச் செல்லும் மீன்.
"அப்படியா... உண்மையாகவா?!" என்று ஆச்சரியத்துடன் கேட்டது, முதிய மீன்.
"பக்கத்து நாட்டுக்காரன் மீன் பிடித்தாலும், அந்த நாட்டுக்காரன் அடிக்கிறானாம்," என்று கூறியபடி பாதுகாப்பு வலையம் நோக்கி சென்றது அந்த மீன

Tuesday, February 2, 2010

உலகக்கிண்ணம்2010


நியூசிலாந்து
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஓசியானிக் தீவுகளில் இருந்து தெரிவான ஒரே ஒரு நாடு நியூசிலாந்து. உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் ஓசியானிக் தீவுகளில் இருந்து நியூசிலாந்தைத் தவிர 10 நாடுகள் போட்டியிட்டன. ஏபி.என இரு குழுக்களாக போட்டியிட்டு முதலிடம் பிடித்த மூன்று நாடுகளும் நியூசிலாந்தும் இரண்டாவது சுற்றில் போட்டியிட் டன. இரண்டாவது சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்ற நியூசிலாந்து முதலிடம் பெற்றது. ஆறு போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து ஐந்து வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றது. 14 கோல்கள் அடித்த நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன.
முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நியூசிலாந்து ஆறாவது போட்டியில் தோல்வி அடைந்தது. பிஜி தீவுடனான முதலாவது போட்டியில் 2 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூசிலாந்து இரண்டாவது போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. வனுதுதீவுக்கு எதிராக 4 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
ஓசியானிக் தீவுகளில் நியூசிலாந்து முதலிடம் பெற்றாலும் ஆசியாவில் ஐந்தாவது இடத்தைப் பெற்ற நாட்டுடனான போட்டியில் வெற்றி பெற்றால்தான் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற முடியும். தோல்வி அடைந்தால் ஐந்தாவது இடத்தைப் பெற்று நியூசிலாந்தை வென்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறும்.
அவுஸ்திரேலியா, தென் கொரியா, வட கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஐந்தாவது இடத்தைப் பிடிப்பதற்காக பஹ்ரேனும், சவூதி அரேபியாவும் மோதின. முதலாவது போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது போட்டியில் 2 2 கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது. இரண்டு போட்டிகளும் சம நிலையில் முடிந்ததால் புள்ளிகளின் அடிப்படையில் பஹ்ரேன் ஐந்தாவது இடததைப் பிடித்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக பஹ்ரேனும் நியூசிலாந்தும் மோதின. முதலாவது போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காமையினால் சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஒரு கோல் அடித்து வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் நியூசிலாந்து முதன் முதலில் விளையாடியது.
அணித் தலைவரான ரியான் நெல்சன், ரிவேர்ஸ், ஷேன் சிமெல்ட், கோல் கீப்பர் மார்க் பொஸ்ரன் ஆகியோர் நியூசிலாந்தின் வெற்றியில் பெரும் பங்காற்றியுள்ளனர். ரிக்கி ஹெபேட் நியூசிலாந்து உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
ஆறு தகுதி காண் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது.
14 கோல்கள் அடித்த நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. ஆறு முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஒரு தடவை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு முறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ஷேன் சிமெல்ட் எட்டு கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
இத்தாலி, பரகுவே, சுலோவனியா ஆகிய நாடுகளுடன் எஃப் பிரிவில் நியூசிலாந்து உள்ளது.

உலகக்கிண்ணம்2010


ஜப்பான்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஆசியாவில் இருந்து தகுதி பெற்ற நான்காவது நாடு ஜப்பான். கடந்த ஐந்து வருடங்களில் மூன்று தடவை ஆசிய சம்பியனான பலம் வாய்ந்த நாடு ஜப்பான்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடுவதற்கு நடைபெற்ற மூன்றாவது சுற்று தகுதிகாண் போட்டியில் குழு 2 இல் ஜப்பான், பஹ்ரேன், ஓமான், தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றன. நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது ஜப்பான். 12 கோல்கள் அடித்த ஜப்பானுக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளிகள் பெற்ற ஜப்பான் நான்காவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.
நான்காவது சுற்றில் குழு 1 இல் அவுஸ்திரேலியா, ஜப்பான், பஹ்ரேன், கட்டார், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நான்காவது சுற்றில் எட்டுப் போட்டிகளில் விளையாடிய ஜப்பான் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 11 கோல்கள் அடித்த ஜப்பானுக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன. 15 புள்ளிகளுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்ற ஜப்பான் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 1 என்ற கோல் கணக்கில் வென்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது ஜப்பான். எட்டுப் போட்டிகளில் ஜப்பானுக்கு எதிராக எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை. அவுஸ்திரேலியா 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஹ்ரேன் 2 3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவும் பஹ்ரேனும் ஜப்பானுக்கு எதிராக தலா இரண்டு கோல்கள் அடித்தன. ஒரு போட்டியில் ஜப்பானுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகூடிய கோல்கள் இவையாகும்.
மூன்றாவது, நான்காவது தகுதி காண் போட்டிகளில் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளை சமப்படுத்திட ஜப்பான் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஜப்பானுக்கு எதிராக 12 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. ஜப்பான் 23 கோல்கள் அடித்தது. ஜப்பானுக்கு எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன.
ஜப்பான் தேசிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சன்சுகி நகா முரா, கெய்சுகி ஹொண்பா அணித் தலைவர் யுஜி காயாவா ஆகியோர் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அணியின் பயிற்சியாளராக ஒகாடா உள்ளார். மாசுஸ்ரிலியோ தனகா, சன்சுகி நகாமுரா, யூசு கிரோஎன்டோ, யுஜி நகா ஸாவா ஆகியோர் தலா மூன்று கோல்கள் அடித்துள்ளனர்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு ஈயில் ஹொலண்ட், கமரூன், டென்மார்க் ஆகியவற்றுடன் ஜப்பான் உள்ளது.