Friday, October 16, 2015

அரசியல் வலையில் நடிகர் சங்கம்தமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடர்கதையாகவே இருக்கும். அறிஞ்ர் அண்ணா, கலஞர் கருணாநிதி,நடிகவேள் எம்.ஆர்.ராட்க்ஹா,எம்.கே.ராதா போன்றவர்கள் நாடகங்களின் மூலம் தமது அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தினார்கள்.சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரின் சினிமாக கவர்ச்சியினால் அவர்களது ரசிகர்கள் அரசியலை நோக்கித்திரும்பினார்கள்.

 அரசியல் கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் அன்றைய நடிகர்கள் அரசியலையும் சினிமாவையும் வெவ்வேறாகக் கருதினார்கள்.அரசியலிலும் நடிப்பிலும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் நடிகர் சங்கத்தில் ஒன்றாக இருந்தார்கள்.இன்பதுன்பங்களில் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர். ஆனால்இன்றைய நடிகர்கள் நடிகர் சங்கத்தில் தமது அரசியலைப் புகுத்திவிட்டனர்.

த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தேர்த‌லைவிட‌ இந்திய‌ நாடாளும‌ன்ற‌த்தேர்த‌லைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாகி உள்ள‌து ந‌டிக‌ர் ச‌ங்க‌த் தேர்த‌ல்.நாளை ந‌ட‌ர் பெற‌ உள்ள‌ ந‌டிக‌ர் ச‌ங்க‌த்தேர்த‌லினால் சில‌ குடும்ப‌ங்க‌ள் இர‌ண்டாகி உள்ள‌ன‌. த‌யாரிப்பாள‌ர்க‌ள்,வினிடோக‌ஸ்த‌ர்க‌ள்இய‌க்குந‌ர்க‌ள் இர‌ண்டாகி விட்ட‌ன‌ர்.ந‌டிக‌ர்,ச‌ங்க‌ த‌லைவர் ‌ ச‌ர‌த்குமார்  செய‌லாள‌ர் ‌ ராதார‌வி ஆகியோரின் ந‌ட‌வ‌டிக்கையினால் வெறுப்ப‌டைந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்களை நீக்க‌ வேண்டும் என‌  குர‌ல் கொடுத்த‌ன‌ர்.விஷாலின் குர‌ல் ஓங்கி ஒலித்த‌த‌னால் அந்த‌ அணிக்கு விஷால் அணி என‌ பெய‌ர் சூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. கார்த்தி,க‌ருணஸ் போன்ற‌ இள‌ம் ந‌டிக‌ர்க‌ளும் நாச‌ர்,சிவ‌குமார்சத்தியராஜ்  மூத்த‌ ந‌டிக‌ர்க‌ளும் ச‌ர‌த்குமார் ராதார‌வி ஆகியோருக்கு எதிராக‌ போர்க்கொடி தூக்கி உள்ள‌‌ன‌ர்.


 எஸ்.எஸ்.வாசன்,கே.பி.சுந்தராம்பாள் எம்.ஆர்.ரதா ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் சங்கம் சிவாஜி தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்துக்கென  கட்டடம் கட்டப்பட்டது.எம்.ஜிஆர். முதல்வரானபோதும் நடிகர்சங்கத்துக்கு உதவிபுரிந்தார். விஜயகாந்த்  தலைவரானபோது பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார். தமிழ்,தெலுங்கு,மலையாள நடிகர்கள் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது.தெலுங்கு ,மலையாள நடிகர்கள் தமக்கென நடிகர் சங்கங்களை ஆரம்பித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து விலகினார்கள்.

சரத்குமார் தலைவராகவும்ராதாரவி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் நடிகர் சங்கம்  பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கியது.15 வருடங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நடிகர் சங்கத்தில்  ஊழல் நடைபெற்றது. நாட்டாமையின் தீர்ப்புகள் விமர்சனம் செய்யப்பட்டன. சில தீர்ப்புகளை மாற்றும்படி விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. நியாய‌ங்க‌ள் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டாமையினால் ந‌டிக‌ர் ச‌ங்க‌த்தேர்த‌ல் சூடுபிடித்துள்ள‌து.

தேர்த‌ல் பிர‌சார‌ம் அன‌ல் ப‌ற‌க்கிற‌து.ராதார‌வி,ராதிகா,சிம்பு ஆகியோரின் பேச்சுக‌ள் முக‌ம் சுழிக்க‌ வைக்கின்ற‌ன‌. விஷாலை விஷால் ரெட்டி என‌ விழித்து அவ‌ர் த‌மிழ‌ர‌ல்லை என்ப‌தை ராதிகா  ப‌றை சாற்றுகிறார். அவ‌ரின் தாய் சிங்க‌ள‌ப்பெண்ம‌ணி என்ப‌தை வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விட்டார்.ராதா ர‌வி ஒருப‌டி மேலேபோய் த‌ங்க‌ளை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளை நாய்க‌ள்,ப‌ர‌தேசி நாய்க‌ள் என்கிறார்.சிம்பு சினிமா வ‌ச‌ன‌ம் போல் ஒருமையில்  வாடா போடா என‌ திட்டித்தீர்க்கிறார்.விஷாலுட‌ன் ந‌ய‌ன‌தாரா நெருக்க‌மான‌தால்தான் சிம்பு ச‌ர‌த்குமார் அணிக்கு  ஆத‌ர‌வு தெரிவிக்கிறார். ச‌ர‌த்குமாரின் ம‌க‌ள் மீதான‌ காத‌ல்தான் விஷால் அவரை எதிர்ப்ப‌தாக‌ சிம்பு குற்ற‌ம் சாட்டுகிறார்.
பிர‌ச்சினைக‌ளைப் பெரிதாக்காம‌ல் ஒற்றுமையாக‌ ந‌டிக‌ர் ச‌ங்க‌ தேர்த‌ல் நடைபெற‌ சில‌ர் எடுத்த‌ முய‌ற்சிக‌ளை விஷால் த‌ர‌ப்பு ஏற்றுக்கொள்ல‌வில்லை.க‌மல் த‌ன‌து ஆத‌ர‌வை விஷால் த‌ர‌ப்புக்கு வெளிப்ப‌டையாக‌த் தெரிவிரத்து விட்டார்.ர‌ஜினிக்குச் சொந்த‌மான‌ திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌த்தில் விஷால் த‌ர‌ப்பு கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌து. இத‌னால் ர‌ஜினியின் ஆத‌ர‌வு விஷால் த‌ர‌ப்புக்கு என்ற‌ க‌ருத்து உருவான‌து.ர‌ஜினியின் அதேதிரும‌ண‌ ம‌ண‌ட‌ப‌த்தில் த‌ன‌து கூட்ட‌த்தை ந‌ட‌த்தி அந்த‌ பிர‌சார‌த்தை ச‌ர‌த்குமார் முறிய‌டித்தார். ம‌தில் மேல் பூனையாக‌ உள்ள‌ ர‌ஜினி த‌ன‌து முடிவை இன்ன‌மும் அறிவிக்க‌வில்லை.


ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு த‌ன‌து ஆத‌ர‌வு என‌ விஜ‌ய‌காந்த் தெரிவித்துள்ளார்.ஜெய ய‌ல‌லிதா, ச‌ர‌த்குமார் ஆகிய‌ இருவ‌ருக்ககும் எதிர்ர‌ன் விஜ‌ய‌காந்த் யாருக்கு வாக்க‌ளிப்பார் என்ப‌து இர‌க‌சிய‌மான‌த‌ல்ல‌.
 
  நாசர் அணியில் நடிகை சோனியா, பிரேம் ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்களும், சரத்குமார் அணியில் ராதாரவி, ராம்கி, நிரோஷா, நளினி, பசி சத்யா, எஸ்.எஸ்.ஆர் கண்ணன், உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதில் சரத்குமார், நிரோஷா, ராம்கி, ராதாரவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நடிகை நளினி சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவராக இருக்கிறார். குயிலி, ஆர்த்தி, பாத்திமா பாபு, குண்டு கல்யாணம், ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் கட்சியினர் யாரும் போட்டியிடக்கூடாது என கட்சித்தலைமை அறிவித்து விட்டது. இதனையடுத்து இவர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதுவும் சரத்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடை உத்தரவு ராதாரவிக்கு இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக விசுவாசியான அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் சங்கத்தேர்தலில் அரசியல் புகுந்துவிட்டது.
விஜய்,அஜித் ஆகிய இருவரும் தமத் ஆதரவை வெளிபடையாக  அறிவிக்கவில்லை. விஜயின் ஆதரவு சரத்குமாருக்குத்தான் என ஊகிக்கக்கூடியதாக‌ உள்ளது. விஜக்கும் சிவகுமா ர்குடும்பத்துக்கும் இடையேயான பகையும்  அவருக்கு எதிரான விஷாலின் போக்கும் இதற்கு காரண‌ம் என சொல்லப்படுகிறது. சங்கரின் படத்தில் விஜவுடன் இணந்து நடிக்க சூர்யா மறுத்துவிட்டார். அழகிய தமிழ் மகனுடன் போட்டி போட்ட வேல் வெற்றி பெற்றது. வேலாயுதத்துக்கு போட்டியாக வந்த ஏழாம் அறிவு பேசப்பட்டது.காவலன் வெளியானபோது கார்த்தியின் சிறுத்தை போட்டிக்கு வந்தது  புலி படத்துக்கு போட்டியா  பாயும் புலியை விஷால் முந்திக்கொண்டு வெளியிட்டார். விஜயை சந்திக்க விஷால் மறுத்துவிட்டார். இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்துப்பார்த்தால் விஜய்  சரத்குமாரையே  ஆதரிப்பார் என எண்ணத்தோன்றுகிறது.

நடிகர் சங்கத்தேதல் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. வேற்றி தோல்வி எப்படி இருந்தாலும் நடிகர் சங்கம் இரண்டாகப்போவது உறுதியாகிவிட்டது.


No comments: