Showing posts with label கொல்கத்தா. Show all posts
Showing posts with label கொல்கத்தா. Show all posts

Thursday, May 8, 2025

நடப்பு சம்பியனை வெளியேற்றிய சென்னை

ஈடன் கார்டன் மைதானத்தில் டோனி சிக்சர் விளாச, சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது. 180 என்ற வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன், சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

க‌ப்டன் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளுக்கு 48  ஓட்டங்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மனீஷ் பாண்டே, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38  ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, ரசல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 179  ஓட்டங்கள்  எடுத்தது. இதனால், 180  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆயுஷ் மாத்ரே, டேவன் கான்வே ஆகிய இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். ஐபிஎல்-இல் தனது முதல் போட்டியில் விளையாடிய உர்வில் படேல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அது நீண்ட நேரத்திற்கு நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 31  ஓட்டங்கள் எடுத்திருந்த அவர் அவுட்டாகி வெளியேறிய நிலையில், மறுமுனையில் விக்கெட்டும் சரிந்து கொண்டிருந்தது.

அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவால்ட் பிரேவிஸ், கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறடித்தார். 25 பந்துகளில் 52  ஓட்டங் களை எடுத்திருந்த அவரும் அவுட்டாகி வெளியேறிய நிலையில், சென்னை அணி பரிதாபமான சூழலில் சிக்கியது.

பின்னர், டோனியுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடிய துபே 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், டோனி அடித்த சிக்ஸ் போட்டியை சென்னை அணி பக்கம் திருப்பியது.

19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது சென்னை அணி. இதன் மூலம், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டும் இல்லாமல் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழக்க செய்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் டோனி 153 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். அத்துடன் 47 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை (153+47) எடுக்க உதவியை முதல் விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையை தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் 174 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

 கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி 14* ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 100* முறை ஆட்டம் இழக்காது  களத்தில் இருந்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையையும் டோனி படைத்துள்ளார்.

1. எம்எஸ் தோனி: 100*

 2. ரவீந்திர ஜடேஜா: 80

3. கைரன் பொல்லார்ட்: 52

4. தினேஷ் கார்த்திக்: 50

5. டேவிட் மில்லர்: 49

20 ஆவது ஓவரில் 71 சிக்ஸர்கள் அடித்து சரித்திரம் படைத்துள்ளார் டோனி 

அபாரமாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ்  25 பந்துகளில் 52  ஓட்டங்கள்  விளாசி திருப்பு முனையை உண்டாக்கினார். குறிப்பாக வைபவ் ஆராரோ வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என 30  ஓட்டங்கள் தெறிக்க விட்ட அவர் போட்டியை தலைகீழாக மாற்றினார்.  

ரகானேவை அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா, பிரிமியர் லீக் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த சென்னை வீரர்கள்  பட்டியலில் டுவைன் பிராவோவை (140 விக்கெட், 116 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். ஜடேஜா, 184 போட்டியில், 141 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

பிரிமியர் லீக் அரங்கில் 5000  ஓட்டங்கள்   எடுத்த வீரர்கள் வரிசையில் இணைந்தார் ரகானே. இதுவரை 197 போட்டியில், 5017  ஓட்டங்கள்  (2 சதம், 33 அரைசதம்) குவித்துள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 9வது வீரரானார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனை பாராட்டும் விதமாக, போட்டிக்கு முன் மைதானத்தின் 'மெகா' ஸ்கிரீனில், 'இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறோம்' என்று காண்பிக்கப்பட்டது. அப்போது கோல்கட்டா, சென்னை அணி வீரர்கள் அணிவகுத்து நிற்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று இருந்த, நடப்பு சாம்பியனான கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமிருந்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால், சென்னை அணிக்கு எதிராக நேற்று தோற்றதன் மூலம் கொல்கத்தாவின் பிளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது. ஏற்கனவே இரண்டு அணிகள் 16 புள்ளிகளும், ஒரு அணி 15 புள்ளிகளும், ஒரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கொல்கத்தா கிட்டத்தட்ட நடப்புத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. எற்கனவே சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராத் அணிகள்,பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Wednesday, April 9, 2025

போராடித் தோற்றது கொல்கத்தா

 கொல்கத்தா டன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கொல்கத்தா    லக்னோ அணிகள் மோதின லக்னோவுக்கு எதிராக  கடைசி ஓவர் வரை 'டென்ஷன்' எகிறிய போட்டியில் லக்னோ பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. 4  ஓட்ட வித்தியாசத்தில் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

நணயச் சுழற்சியில்கொல்கத்தா க‌ப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 3 விக்கெற்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது. 239 ர்னும் பிரமாண்டமான இலக்கைத் துரத்திய  கொல்கத்தா 7 விக்கெற்களை  இழந்து 234 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான மிட்சல் மார்ஷ், மார்க்ரம் கலக்கினர்.  முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 99  ஓட்டங்கள்  சேர்த்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் மார்க்ரம் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.   . இத்தொடரில் நான்காவது அரைசதம் கடந்த மார்ஷ், 81  ஓட்டங்களுடன் வெளியேறினார்.

  பூரன். 21 பந்துகளில்   அரைசதம் எட்டினார். ரசல் ஓவரில் (18வது), பூரன் 24  ஓட்டங்கள்  விளாசினார்.   கடைசி 10 ஓவர்களில்  143  ஓட்டங்கள் அடிக்கப்பட்டன.  லக்னோ அணி 20 ஓவர்கலில் 3 விக்கெற்களை இழந்து  238 ஓட்டங்கள் எடுத்தது.   பூரன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்தார்.

239  எனும் கடின இலக்கை விரட்டிய கொல்கத்தா மிரட்டியது.   குயின்டன்15,  நரைன், 30 ஓட்டங்களுடன் வெளியேறினர்.  26 பந்துகளில்  அரைசதம் எட்டிய‌னார் ரகானே. ஷர்துல் தாகூர் பந்தில் ரகானே 61 ஓட்டங்கள் அடித்த ரகானே ஆட்டமிழந்ததுடன் கொல்கத்தசவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  ரமன்தீப் சிங் 1, ரகுவன்ஷி 5   வெங்கடேஷ், 45 , ரசல் 7 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களீல்   7 விக்கெற்களை  இழந்து  கோல்கட்டா  201 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி 12 பந்துகளில்  வெற்றிக்கு 38  ஓட்டங்கள்  தேவைப்பட்டது. அவேஷ் கான் ஓவரில்  19 ஓட்டங்கள் , ரிங்கு சிங் 14  ஓட்டங்கள்  (6,4,4) விளாச, 'டென்ஷன்' அதிகரித்தது. கடைசி ஓவரில் 24  ஓட்டங்கள்  தேவை என்ற நிலையில், பிஷ்னோய் பந்துவீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்ஷித் ராணா, அடுத்த இரு பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வாய்ப்பு மங்கியது. கடைசி 3 பந்துகளில் 19 ஓட்டங்கள்  தேவைப்பட்டன. 3 சிக்சர் அடித்தால் 'சூப்பர் ஓவருக்கு' வாய்ப்பு இருந்தது. ரிங்கு சிங் (4, 4, 6) விளாசியும் பலன் கிடைக்கவில்லை. கோல்கட்டா அணி 20 ஓவரில் 234/7 ரன் மட்டும் எடுத்து, தோற்றது. ரிங்கு சிங் (38), ஹர்ஷித் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை பூரன் வென்றார்.

லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் தனது 100வது பிரிமியர் போட்டியில் பங்கேற்றார். இவருக்கு '100' என்ற நம்பர் பொறிக்கப்பட்ட சிறப்பு 'ஜெர்சி'யை லக்னோ ஆலோசகர் ஜாகிர் கான் வழங்கினார்.

 தடுமாறிய ஷர்துல், பிரிமியர் அரங்கில் தொடர்ந்து 5 'வைடு' (12.1வது ஓவர்) வீசிய முதல் வீரரானார்.

பிரிமியர் அரங்கில் லக்னோ அணி அதிபட்சமாக 257/7 ரன் (எதிர், பஞ்சாப், 2023, மொகாலி) எடுத்து உள்ளது.   இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (238/3) பதிவு செய்தது.

பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 2,000  ஓட்டங்கள்  எட்டிய இரண்டாவது வீரரானார் பூரன் (1198 பந்து). முதலிடத்தில் ரசல் (1120 பந்து) உள்ளார்.

  61 ஓட்டங்கள் எடுத்த கொல்கத்தா கப்டன் ரகானே, 'ரி-20' அரங்கில் 50வது அரைசதம் அடித்தார். 'ரி-20' அரங்கில் 7,000  ஓட்டங்கள்  (276 போட்டி) எட்டி அசத்தினார்.

பிரிமியர் அரங்கில்,  ஓட்ட  அடிப்படையில் 3வது குறைவான வித்தியாசத்தில் (4 ஓட்டங்கல் ) லக்னோ வென்றது. இதற்கு முன் 1  ஓட்டம்  (எதிர், கோல்கட்டா, 2023), 2  ஓட்டங்கள்  (எதிர், கோல்கட்டா, 2022) வென்றிருந்தது.

* பிரிமியர் அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் 4 அல்லது அதற்கு குறைவான ஓட்ட‌ வித்தியாசத்தில் 7 முறை  கொல்கத்தா  தோற்றது. இதில் 3 முறை லக்னோவிடம் தோல்வியை சந்தித்தது.

Sunday, March 23, 2025

முதல் போட்டியில் வென்றது பெங்களூர்


 கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட்ட வீரரான டீ கொக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரேனுடன், கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.

10 ஓவர்களில் 1 விக்கெற்றைஇழந்த கொல்கத்தாவின் எனைய வீரர்கள் தடுமாறினார்கள். நரேன் 44 , ரகானே 56 , வெங்கடேஷ் ஐயரை 6 , ரிங்கு சிங் 4 , அண்ட்ரே ரசல் 4 , ரகுவன்சி 30 ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்த கொல்கத்தா 174 ஓட்டங்கள் எடுத்தது.

ஜோஸ் ஹேசல்வுட் 2, கருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்தப் போட்டியில் ரசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை சுனில் நரேன் எதிர்கொண்டார். அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டதால் அதை அவர் அடிக்கவில்லை. அதைப் பார்த்ததும் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுத்தார். அடுத்த நொடியே பந்தை எதிர்கொண்ட வேகத்தில் சுனில் நரேன் பேட் அவரை அறியாமலேயே பின்னே சென்று ஸ்டம்ப்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்து ஒயிட் என்று சில நொடிகள் முன்பாக நடுவர் அறிவித்து விட்டார். அதனால் அந்த பந்து காலாவதியானதன் காரணமாக சுனில் நரேன் ஹிட் விக்கெட் முறையில் தப்பி தொடர்ந்து விளையாடினார்.

பெங்களூர் அணியின் பில் சாட் 56, படிக்கல்10,ராஜ் படிதார் 34, ஓட்டங்கள் எடுத்தனர். 16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்கள் எடுத்தார். கருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்

Sunday, December 8, 2024

கொல்கத்தாவின் புதிய கப்டன் ரகானே?


 ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கப்டன் யார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் அஜிங்கிய ரகானே நியுமிக்கப்படலாம் என்கிற தகவல்  வெளியாகியுள்ளது.

ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அஜிங்கிய ரகானேவை அவருடைய அடிப்படை விலையான 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரகானே உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரை தற்போது கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நடப்பு சம்பியனான கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி ஏழத்தின் போதே எழுந்தது. சென்ற வருடம் கொல்கத்தா அணியின் வெற்றிக் கப்டனான ஸ்ரேயஸ் ஐயரை இந்த நடந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அவரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு ஒரு புது கப்டன் தேவை என்கிற நிலை உள்ளது.

இதற்கிடையில் கொல்கத்தா அணி ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் அவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் கொல்கத்தா வேறு ஒரு திட்டம் வைத்திருந்தாக கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அஜிங்கியா ரகானேவை கப்டன் ஆக்குவதற்காக தான் கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது. 36 வயதான ரகானேவை ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக கப்டனாக செயல்ப்பட்ட அனுபவம் உள்ளதால் புதிய வீரரை கப்டனாக நியமிப்பதைவிட அனுபவம் வாய்ந்த ரகானேவை கப்டனாக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது நடந்து சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கப்டனாக இருந்தாலும், ரகானேவின் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்த தொடரில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே கொல்கத்தா அணி அவரை கப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற முடிவில் இருப்பதாக தெரிகிறது. 

Monday, May 27, 2024

ஐபிஎல் 2024 சம்பியனானது கொல்கத்தா


                 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.சன்ரைசர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 113 ஓட்டங்களை எடுத்தது.10.3 ஓவர்கள் முடிவில் 2  விக்கெற்களை இழந்து  114 ஓட்டங்கள் எடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

டந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கிய ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி 17 ஆம்திகதி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ,ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.

நாணயச் சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கப்டன் பேட் கம்மின்ஸ் முதலில்துடுப்பாட்டத்தைத்  தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா ,டிராவிஸ் ஹெட் களம் ஆகியோர் இறங்கினார்கள். அபிஷேக் சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ராவிஸ் ஹெட்டும் டக் அவுட் ஆகி வெளியேறினார். 

  ராகுல் திரிபாதி எய்டன் மார்க்ரம் உடன் ஜோடி சேர்ந்தார்.  திரிபாதி 9 ரன்களில் நடையைக்கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய நிதிஷ் ரெட்டி மார்க்ரம் உடன் இணைந்து பொறுமையாக விளையாடினார். அந்தவகையில் 10 ஓட்டங்கள் களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

 எய்டன் மார்க்ரம்  20 ஓட்டங்கள் எடுத்தார். 10.2 ஓவர்கள் முடிவில் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.  அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 17 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்தார். 

தலைவர்பேட் கம்மின்ஸ் 24  ஓட்டங்கள் எடுத்தார்.   20 ஓவர்கள் முடிவில் 113 ஓட்டங்களை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

 தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இதில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்டார் சுனில் நரைன். அடுத்த பந்துலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 6 ஓட்டங்களில் வெளியேற அடுத்து   வெங்கடேஸ் ஐயர். ரஹ்மானுல்லா குர்பாஸுடன் ஜோடி சேர்ந்து அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 குர்பாஸ் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ஓட்டங்கள் எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார்.  10.3 ஓவர்கள் முடிவில் 2  விக்கெற்களை இழந்து  114 ஓட்டங்கள் எடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. ஐபிஎல் சீசனில் 3 வது முறையாக கோப்பை வென்றிருக்கிறது கொல்கத்தா அணி.

2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா சென்னை, மும்பைக்கு பின் 2வது வெற்றிகரமான அணியாக வரலாற்று சாதனை படைத்தது. மறுபுறம் ஹைதராபாத் போராடாமலேயே தோற்றதால் தோனிக்குப் பின் உலகக் கோப்பையையும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற கப்டன் என்ற இமாலய சாதனையை படைக்கும் வாய்ப்பை பட் கமின்ஸ் தவற விட்டார்.

பிறந்தநாள் பரிசு

  இந்த தொடரில் மொத்தம் 488 ஓட்டங்கள் , 17 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சுனில் நரேன் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.  சென்னையில் 2012இல் முதல் முறையாக கொல்கத்தா ஐபிஎல் கோப்பையை வென்ற உணர்வு தற்போது உள்ளதாக சுனில் நரேன் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய பிறந்தநாளில் 3வது ஐபிஎல் கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

முக்கிய போட்டிகளில் முடங்கிய ட்ராவிஸ் ஹெட்

நடப்பு ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 1 பந்தை மட்டுமே சந்தித்து ஓட்டம்  எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

  ஐபிஎல் இறுதிப்போட்டி உட்பட கடைசியாக நடந்த 4 போட்டிகளில் 3 டக் அவுட்டுடன் 34 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஹெட். மேலும், நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தாவிற்கு எதிரான 3 போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட், டக் அவுட் ஆகியுள்ளார்.

 

ட்ராவிஸ் ஹெட் கடைசி நான்கு இன்னிங்ஸ்:

0(1) vs பஞ்சாப் கிங்ஸ்

0(2) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

34(28) vs ராஜஸ்தான் ராயல்ஸ்

0(1) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 ஏமாற்றிய ஹெட் - அபிஷேக் ஜோடி:

  அதிரடி ஹிட்டுக்கு பெயர் போன தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட்  அபிஷேக் ஷர்மா,  அதிர்ச்சியை கொடுத்தனர். அபிஷேக் சர்மா 2 ஓட்டங்களிலும், ஹெட் ஓட்டம் எடுக்காமலும்   ஆட்டமிழந்தனர். அபிஷேக், ஹெட் ஜோடி  நடப்பு ஐபிஎல் சீசன் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ஸ்டிரைக் ரேட்களில் ஒன்றாக அமைத்து கொடுத்தனர்.

அபிஷேக் சர்மா 202.95 லிலும், ஹெட் 209.29 ஸ்டிரைக் ரேட்டிலும் விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.

அபிஷேக் சர்மா,ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் 15 ஆட்டங்களில் 3 சதம் மற்றும் 2 ஐம்பது பிளஸ் ஸ்டாண்டுகளுடன் 691 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். இந்த சீசனில் ட்ராவிஸ் ஹெட் 567 ஓட்டங்களுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 15 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 484 ஓட்டங்கள் குவித்துள்ளார் அபிஷேக் சர்மா.

24.75 கோடி ஆட்டநாயகன்

கொல்கத்தாவின்  வெற்றிக்கு மூன்ரு ஓவர்களில்  14ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்சேல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். 24.75 என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டநாயகன் விருதுகளை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட போது பலரும் தம்மை கிண்டலடித்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை வைத்து ஐபிஎல் தொடரிலும் அசத்தியதாக ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

முக்கிய அணிகள்  இல்லாத  இறுதிப் போட்டி

17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி கூட இடம் பெறாத ஐபிஎல் இறுதிப் போட்டியாக இது நடைபெற்றது.

 14 முறை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஐபிஎல் இறுதி போட்டியில் பங்கேற்று இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடி உள்ளது. டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்று இருக்கிறது. அதில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

 மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆறு முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதில் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.

சரித்திரம் படைத்த ஸ்ரேயாஸ்

ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய கப்டன்கள் வரிசையில் ஐந்தாவது இந்திய கப்டனாக இடம் பெற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். முன்னதாக டோனி, ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் ,ஹர்திக் பாண்டியா ஆகிய நால்வர் மட்டுமே ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய கப்டன்கள் ஆவர்.

ஐபிஎல் 2024 விருது, பரிசுத் தொகை வென்றவர்களின் முழு விவரம்:

எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன்நிதிஷ் குமார் ரெட்டிரூ.10 லட்சம்

ஃபேர்பிளே விருதுசன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பர்பிள் கேப் வின்னர்ஹர்ஷல் படேல் (24 விக்கெட்டுகள்) –   ரூ.10 லட்சம்  .

ஒரேஞ் கேப்விராட் கோலி (741 ஓட்டங்கள், ரூ.10 லட்சம்) – 

மதிப்புமிக்க வீரர்சுனில் நரைன் (488 ஓட்டங்கள், 17 விக்கெட்டுகள்), ரூ.10 லட்சம்

பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதுஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்ரூ.50 லட்சம்

ஐபிஎல் 2024 2வது இடம்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்ரூ.12.5 கோடி 

ஐபிஎல் 2024 சம்பியன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஷ்ரேயாஸ்   ரூ.20 கோடிக்கான காசோலையுடன்   ஐபிஎல் டிராபியும் வழங்கப்பட்டது.