Thursday, February 23, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்23

ம‌கனுக்கு மனைவியாக வந்தவளை அடைய துடிக்கும் காமுகனின் கதை தான் 1936 ஆம் ஆண்டு வெளியான நவீன சாரங்க தரா. குடும்ப உறவைக் கேள்விக்குறியாக்கிய இப்படம் அன்றைய ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஸ்திரபுரத்து மன்னன் நரேந்திரன்(எஸ்.எஸ்.மணி பாகவதர்) தன் மகன்சாரங்க தராவுக்கு(எம்.கே.தியாகராஜ பாகவதர்) திருமணம் செய்வதற்கு முடிவு செய்கிறார். தனக்கு பிறகு நாட்டை ஆட்சி செய்யப்போகும் மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் பொறுப்பை ராஜ குருவிடம் ஒப்படைக்கிறார். மன்னனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு புறப்படுகிறார் ராஜகுரு. சாரங்க தராவுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி பல நாடுகளுக்கு அலைந்த ராஜகுரு. சித்திராங்கியை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். தனது நாட்டு இளவரச‌ன் சாரங்க தராவுக்கு ஏற்ற பெண் சித்திராங்கி தான் என்று முடிவு செய்கிறார்.
சித்திராங்கியின் தகப்பன் சித்திராங்க ராஜனிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்தி தனது பயணத்தின் காரணத்தைக் கூறுகிறார் ராஜகுரு. தனது நாட்டு இளவரச‌ன் சாரங்க தராவுக்கு ஏற்ற இளவரசி சித்திராங்கி தான் என்று கூறுகிறார். சாரங்க தராவின் ஓவியத்தை பார்த்த சித்திராங்கி தன் மனதைப் பறிகொடுக்கிறாள். தந்தையின் அனுமதியுடன் அஸ்தனாபுரம் நோக்கி ராஜகுருவுடன் செல்கிறாள் சித்திராங்கி.
இளவரச‌ன்சாரங்க தராவை எதிர்பார்த்து அஸ்தனாபுரத்து அந்தபுரத்தில் இருந்த இந்திராங்கியை பார்ப்பதற்குச் சென்ற மன்னன் நரேந்திரன் அவளது அழகில் மயங்கிவிடுகிறார். மருமகளாக வந்தவளை மனைவியாக்க ஆசைப்பட்டான். தன் விருப்பத்தைச் சித்திராங்கியிடம் கூறுகிறான். தான் ஆபத்தில் சிக்கி இருப்பதை உணர்ந்த சித்திராங்கி தான் விரதம் இருப்பதாகப் பொய்சொல்லி விரதம் முடிந்ததும் ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறாள். சித்திராங்கி கூறிய பொய்யை உண்மையென நம்பிய மன்னன் சந்தோஷத்துடன் தன் இருப்பிடம் செல்கிறார்.
சாரங்க தராவும் சித்திராங்கியும் ஒரு நாள் ச‌ந்திக்கின்றனர். இதனை கண்ட மன்னன் சாரங்க தராவை சிறையிலடைத்து அவனது கைகளை வெட்டுகிறான். மன்னனின் ச‌பல புத்தியை அறிந்த மக்கள் மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழுகிறனர். திடீரென சிறையில் தோன்றிய ச‌ந்நியாசினி சாரங்க தராவுக்கு கைகளை கொடுத்து சாரங்க தராவையும் சித்திராங்கியையும் சேர்த்து வைக்கிறார்.
பவளக் கொடிக்கு பின் எம்.கே.தியாராஜ பாகவதர் நடித்த இரண்டாவது படம் நவின சாரங்க தரா. டைரக்ஷன் கே.சுப்பிரமணியம். பாபநாச‌ம் சிவன் இப்படத்துக்காக 41 பாடல்களை எழுதினார். கல்கத்தா மிஸ் கோமளா பாட்டியின் குரூப் டான்ஸ் பார்க்கத்தக்கது என்ற வாச‌கத்துடன் விளம்பரம் செய்யப்பட்டது. விபரீதமான கதை என்றாலும் ரசிகர்களின் பேராதரவுடன் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. 1953 ஆம் ஆண்டு இப்படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.
வள்ளித் திருமண நாடகத்தில் தனது பிரபலமான பாடலான நளின‌குமாரி நடன சிங்காரி என்ற பாடலைசாரங்க தராவில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று எம்கேக.தியாகராஜ பாகவதர் விரும்பினார். இயக்குநர் கே.சுப்பிரமணியம் அதனை விரும்பவில்லை. ச‌க்தியிடமிருந்துவேல் பெறுவதற்காக முருகன் பாடும் பாடல் நம் படத்திற்கு பொருந்தாது என்றார். இதனால் இருவருக்கும் சிறு அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அரை மனதுடன் இயக்குநர் ஒப்புக்கொண்டார் படம் வெளியானதும் சிவபெருமான் கிருபை வேண்டும் என்று பாகவதர் பாடிய பாடல் வெற்றிபெற்றது.
இதே காலகட்டத்தில் கொத்தமங்கலம் சீனு சாரங்க தராவாகவும், டி.எம்.சாரதாம்பாள் சித்திராங்கியாகவும் நடித்தசாரங்க தரா என்ற படம் வெளியாகிதோதால்வியடைந்தது.
ரமணி


மித்திரன்11/02/12

Wednesday, February 22, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்22

அழகான கிராமத்துப் பெண் அழகில்லாத கிராமத்தவனை மணப்பதனால் ஏற்பட்ட உணர்வுப் போராட்டமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி.
வண்டிச்சோலை என்ற அழகான கிராமத்தில்செம்பட்ட என்ற இளைஞன். அந்த ஊரில் உள்ள அனைவரும் அவனை செம்பட்ட என்றே அழைப்பார்கள். அழுக்கான உடையும் அவலட்ச‌ணமாக உள்ள அவனை முதன் முதலில் பார்ப்பவர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். அந்த கிராமத்திலுள்ள ச‌கலரின்தேவைகளையும் நிறைவேவற்றுபவன். அக்கிராமமக்கள் அவனிடத்தில் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செம்பட்டபோபாகும்போது தமக்குதேதவையானவைகளை ச‌கலரும் சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்ட பொருட்களை மறக்காமல் வாங்கி வந்து அவர்களிடம் கொடுப்பான் செம்பட்ட.
செம்பட்டயாக சிவகுமார் மிக இயல்பாக நடித்தார். சிவகுமாரின் மனைவி தீபா மிகவும் அழகானவள். தன் அழகு பற்றி மிகப் பெருமைக் கொள்வாள். தன் கணவன் அழகற்றவன் என்ற எண்ணம் தீபாவின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. வெறுப்புடனேயே கணவனுடன் வாழ்ந்து வந்தாள் தீபா. அந்த கிராமத்துக்கு வன இலாகா அதிகாரியாக வருகிறார் சிவச்ச‌ந்திரன். சிவச்ச‌ந்திரனின் அழகும் நாகரிக நடை உடை பாவனையும் தீபாவைக் கவர்ந்துவிட்டது.
தீபாவும் சிவச்ச‌ந்திரனும் நெருங்கி பழகுகின்றார்கள். சிவச்ச‌ந்திரனின் அழகில் மயங்கிய தீபா கால போக்கில் சிவச்ச‌ந்திரனிடம் தன்னை@ய இழக்கிறாள். தீபாவுக்கும் சிவச்ச‌ந்திரனுக்கும் இடையேயான உறவு பற்றி ஊர் மக்களுக்கு தெரிய வருகிறது. தீபாவைப் பற்றி சிவகுமாரிடம் ஊர் மக்கள் கூறுகின்றனர். தன் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள சிவகுமார். அவற்றை நம்பவில்லை. சிவச்ச‌ந்திரனுடன் தீபா ஊரை விட்டு ஓடியதால் அதிர்ச்சியில் சிவகுமார்தற்கொலைசெய்கிறார் இறந்துவிடுகிறார்.
சிவகுமார், தீபா, சிவச்ச‌ந்திரன், வினு ச‌க்கரவர்த்தி, ஹெரான் ராமசாமி ஆகியோர் நடித்தனர். சிவகுமாரின் 100 வது படமான ரோஜாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியது. வச‌னம் கிருஷ்ணா இயக்கம் இரட்டையர் தேவாஜ்மோகன்.
புலமைப் பித்தன், கங்கை அமரன் ஆகியோரின் பாடல்களுக்கு இமை அமைத்தவர் இளையராஜா. வெத்தல வெத்தல வெத்தலயோ, மாமன் ஒரு நாள் மல்லிகை பூ கொடுத்தான், என்னுள் எங்கோ ஏங்கும் கீதம், உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச‌ கிளி உச்சி மலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ரமணி
மித்திரன் 04/02/12

Sunday, February 19, 2012

ஸ்டாலினுக்குப் போட்டியாகக்களமிறங்கும் அழகிரி

அழகிரி அரசியலுக்கு வரும் வரை அண்ணன், தம்பி உறவு சுமுகமாக இருந்தது. அழகிரியின் ஆசை அதிகரிக்க தி.மு.க. மெதுவாகப் பிரியத் தொடங்கிவிட்டது.
பெங்களூரில் நடக்கும் வழக்கின் ஜெயலலிதாவின் மீதான பிடி இறுகியதால் அரச வழக்கறிஞருக்கு நெருக்குதல் அதிகமானது

திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் இருக்கும் பிரச்சினைகள் பெரும் பூதங்களாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அழகிரி அரசியலுக்கு வரும்வரை ஸ்டாலினுக்கு போட்டியாக கழகத்தினுள் யாருமே இல்லை. தனக்குப் பின் ஸ்டாலின் தான் என்ற அசையாத நம்பிக்கை வைத்திருந்த கருணாநிதியின் எண்ணத்தில் அழகிரியின் அதிரடி அறிக்கைகள் சலனத்தை ஏற்படுத்தின. மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். ஸ்டாலின் கருணாநிதியின் மகன், மதுரையில் கட்சியை வளர்த்தவர் என்ற தகுதியுடன் அசியல் அரங்கில் அடி எடுத்து வைத்தவர். அழகிரி அரசியலுக்கு வரும்வரை அண்ணன் தம்பி என்ற உறவு சுமுகமாகவே இருந்தது. அழகிரியின் ஆசை அதிகரிக்க திராவிட முன்னேற்றக் கழகம் மெது மெதுவாகப் பிரியத் தொடங்கியது.
கருணாநிதி இருக்கும்வரை அடுத்தத் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர் அழகிரி. அழகிரிக்கு ஆதரவாக ஒரு சில தலைவர்கள் இருந்தாலும் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை முன்னிறுத்துவதற்கு வெளிப்படையாக எவரும் கருத்துச் சொல்வதில்லை. ஸ்டாலினுக்கு எதிராகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து கழகத்தினுள் புயலைக் கிளப்பி உள்ளார் மூத்த தலைவர்களில் ஒருவரான வீர பாண்டி ஆறுமுகம். பொதுக் குழுவில் சிறிய இந்துக் குலத்துச் சிங்கம் ஸ்டாலினுக்கு எதிராகத் தன் மகனைக் களமிறக்கி மூக்குடைபட்டு உள்ளது.
கட்சியின் மிகப் பெரிய பலங்களில் ஒன்று இளைஞர் அணி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதற்காக மாவட்டம் தோறும் நேரில் சென்று நேர்முகப் பரீட்சை நடத்தி வருகிறார் ஸ்டாலின். கட்சித் தலைவர்கள் மேடை ஏறிப் பேசுவார்கள். அவர்களின் பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்தக் கூட்டங்களைச் சிறப்பாக செய்து முடிக்க இளைஞர் பட்டாளத்தின் உதவி கண்டிப்பாகத் தேவை. கட்சித் தலைவர் என்ற சிம்மாசனத்தில் தான் அமரும் போது இளைஞர் அணி பூரண ஆதரவு வழங்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். ஸ்டாலினின் இந்த எண்ணத்துக்கு ஆப்பு வைக்க முயற்சித்து அகப்பட்டுக் கொண்டார் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்முகத் தேர்வு வீரண்பாண்டி ஆறுமுகத்தின் மகனின் தலைமையில் நடைபெறும் என்று வீரபாண்டி ஆறுமுகன் தன்னிச்சையாக அறிவித்தார். வீரபாண்டி ஆறுமுகத்தின் இந்த அறிவிப்பு மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் விழித்துக் கொண்டது கட்சித் தலைமை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக எவரும் இளைஞர் அணி நிர்வாகிகளைத் தெரிவு செய்யக் கூடாது என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்ப் பத்திரிகையான முரசொலியில் அறிக்கை பிரசுரமானது. முரசொலியில் பிரசுரமான அறிக்கையைப் படித்ததும் இளைஞர் அணியில் சேர விரும்புபவர்களின் விண்ணப்பத்தைத் தான் பெறப் போகிறேன். புதிய இளைஞர் அணியினர் தெரிவு செய்யவில்லை என்று கரணம் அடித்தார் வீரபாண்டி ஆறுமுகன்.
வீரபாண்டி ஆறுமுகத்துடன் தொலைபேசியில் கதைத்து சேலம் இளைஞர் தேர்வை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கலாம் அல்லவீரபாண்டி ஆறுமுகத்தை நேரில் அழைத்து இப்படி செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கலாம். கட்சித் தலைவருக்கு எதிராக நடக்க வேண்டாம் என்று முரசொலியில் பிரசுரமான அறிக்கை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. ஸ்டாலினுக்கு எதிராக யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று பகிரங்கமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இது. ஸ்டாலினை எதிர்த்தால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கை வெளியான அதேவேளை, அழகிரியின் பேட்டி கிலியை உண்டாக்கி உள்ளது.
தலைவர் இருக்கும்வரை அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அடித்துக் கூறி வந்த அழகிரி தலைமையில் பொறுப்பை ஏற்கத் தயார் என்று பேட்டியளித்து ஸ்டாலினுக்கு எதிரான தனது போட்டியைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஸ்டாலினுக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கருணாநிதி விட்டு விட்டார். அரசியலை விட்டு ஒதுங்க முடியாத சூழ்நிலைக் கைதியாக உள்ளார் கருணாநிதி. சமாதானம், ஒத்துப்போதல், இணங்கி நடத்தல் என்பன அழகிரிக்கு பிடிக்காத விடயங்கள். தலைமைப் பதவிக்குப் போட்டி போட வேண்டாம் என்று அழகிரிக்கு கூறக் கூடியவர்கள் யாரும் கட்சிக்குள் இல்லை. வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி போன்ற தலைவர்கள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளனர். அழகிரியின் பின்னால் இவர்கள் நின்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டாலினின் பின்னால் தான் இருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும். இலட்சக்கணக்கான தொண்டர்களும் ஸ்டாலினின் பின்னால் உள்ள முரசொலியின் நிர்வாகப் பொறுப்பு ஸ்டாலினின் மகன் உதயநிதியிடம் உள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிர்வாகியாக ஸ்டாலினின் விசுவாசி கலியப் பெருமான் நியமிக்கப்பட்டுள்ளார். மாறன் சகோதரர்கள்ஸ்டாலினையே ஆதரிப்பார்கள்.அடுத்ததலைவர் யார் என்றகேள்வி எழுந்தால்ஸ்டாலினின்கையே ஓங்கும்.வைகோ,விஜயாகந்த் போன்று புதியகட்சியை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பு அழகிரியிடம் இல்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராகக் கர்நாடகாவில் நடைபெறும் வருமானங்களுக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கின் பிடி இறுகுவதில ஜெயலலிதாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரச தரப்பில் ஆஜராகி வாதாடும்வழக்கறிஞர் ஆச்சாரியாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது ஜெயலலிதா பலமுறை திண்டாடினார். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக நீதித்துறையில் இருக்கும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார். அரசு தரப்பு வக்கீலாக கடமையாற்றும்ஆச்சார்யாவை அட்வகேட் ஜெனரலாக‌ கர்நாடக அரசு நியமித்தது.
அட்வகேட் ஜெனரல், அரச தரப்பு வழக்கறிஞர் ஆகிய இரட்டைப் பதவியை ஒருவர் வகிக்கக் கூடாது என்று வக்கீல் வீரபத்தையா என்றவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். ஒருவர் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அட்வகேட் ஜெனரல் பதவி மதிப்புமிக்கது. கௌரவமானது. ஆகையினால் அரச தரப்பு வழக்கறிஞர் பதவியை க்கைவிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். கௌரவப் பதவியை விட நீதியை நிலை நாட்டுவது தான் முக்கியம் எனக் கருதிய ஆச்சாரியா அட்வகேட் ஜெனரல் பதவியைத் துறந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகின்றார்கள். அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கிறது. இதேவேளை, அடுத்த பிரதமர் ஆசையில் ஜெயலலிதா மிதக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவைப்படும் போல் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
பாரதீய ஜனதாக் கட்சியுடனான ஜெயலலிதாவின் இணைப்பின் முதற் கட்டமே ஆச்சாரியா தான்மீதான‌ பாய்ச்சலாகச்
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடைபெறவுள்ளது. சசிகலாவின் சாட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயலலிதாவைத்திணறவைத்த‌ ஆச்சார்யா வின் கேள்விகள்சசிகலாவையும் திணற வைக்கும் என்பது வெளிப்படையே. சசிகலாவிடம் தான் கேள்விகள் கேட்கக் கூடாது என்று மறைமுகமாகச் செயற்பட்டவர்களில் முகத்தில் கரியைப் பூசி உள்ளார் ஆச்சார்யா.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/02/12

Wednesday, February 15, 2012

என்று மறையும்


கிராய்ப்பிள்ளையார் கோயிலின் காலைப்பூசை முடிவடைந்த பின்னர் சில பக்தர்கள்
ஆலயத்தினுள் இருந்தனர். பலர் ஆலயத்துக்கு வெளியே உள்ள மரங்களின் கீழ்
இருந்தனர். அர்ச்சனை செய்ய விரும்பியவர்கள் ஐயரைச் சுழ்ந்து நின்றனர்.
அப்போது தூரத்திலே வித்தியாசமான சத்தம் கேட்டது. மரத்தின் கீழ்
இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்தவாறு வானத்தை அண்ணாந்து
நோக்கினர். அவர்களின் கண்களுக்கு எதுவுமே புலப்படவில்லை.
கோயிலின் தெற்குப் பக்க வெளி வீதியில் நின்றவர் பதைபதைப்புடன் மரத்தின்
கீழ் இருந்தவர்களைக் கைகாட்டி அழைத்தார். மரத்தின் கீழ் இருந்தவர்கள் ஓட்டமும்
நடையுமாக அவரை நோக்கிச் சென்றார்கள். மேற்குத் திசையில் பலாலிப்
பக்கத்தில் வானத்திலே சில புள்ளிகள் தெரிந்தன. வித்தியாசமான சத்தத்துக்கு
அந்த ஹெலிகள்தான் காரணம் என அவர்கள் அறிந்து கொண்டனர். ஏழு ஹெலிகள்
வரிசையாக அவர்களைத் தாண்டிச் சென்றன.
ஆனையிறவுக்குப் போறாங்கள் போலை என்று அங்கு நின்றவர்களில் ஒருவர் கூறினார்.
மற்றவர்கள் அதை ஆமோதித்தனர். ஹெலிகள் எங்கே போகின்றன என்று ஊகித்தவர்கள்
மீண்டும் மரத்தின் கீழ் அமர்ந்தனர். இரண்டு பேர் மட்டும் கிழக்கு நோக்கிச்
செல்லும் ஹெலிகளைப் பார்த்துக்கொண்டு நின்றனர். ஹெலிகளை பார்த்துக்கொண்டு
நின்றவர்கள் மீண்டும் பதை பதைப்புடன் கைகளைக் காட்டி மரத்தின் கீழ்
இருந்தவர்களை அழைத்தனர். மரத்தின் கீழ் இருந்தவர்கள் மீண்டும் ஓட்டமும்
நடையுமாக அவர்களை நோக்கிச் சென்றனர். அந்த ஏழு ஹெலிகளும் திடீரென தரை இறங்கின‌.
தில்லைஅம்பலத்திலை இறங்குறாங்கள். வறணியை சுத்தி வளைக்கப் போறாங்கள் போலை என
ஒருவர் கூறினார். அதற்கு மற்றவர்கள் ஆமாம் போட்டனர். அந்த ஏழு ஹெலிகளும்
மீண்டும் பலாலி நோக்கிச் சென்றன. சுமார் பதினைந்து நிமிடங்களின் பின்னர்
அந்த ஏழு ஹெலிகளும் மீண்டும் பலாலியிலிருந்து தில்லையம்பலம் நோக்கிச் சென்றன.
நடக்கப் போகும் விபரீதத்தை அறியாதவர்கள் கிராய்ப்பிள்ளையார்
கோயிலிலிருந்து தமது வீடு நோக்கிச் சென்றனர்.
வடமராட்சியின் வான்வெளியை ஹெலிகளும், ஏரோபிளேன்களும், சீப்பிளேன்களும்
ஆக்கிரமித்திருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவ ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டது. ஆலயங்களிலும் பொது இடங்களிலும் மக்கள் இருப்பது
பாதுகாப்பானது என வானொலியில் விசேட செய்தி அடிக்கடி ஒலிபரப்பாகியது.
உடுப்பிட்டியையும், வல்வெட்டித்துறையையும் கைப்பற்றிய இராணுவம் மேலும் முன்னேறிக்
கொண்டுடிருந்தது. பொம்பர் குண்டுகளும், ஹெலிகளின் பிப்ரிகலபர்களும்,
ஏரோக்களின் பீப்பாக் குண்டுகளும் வடமராட்சியை அதிரச் செய்தன.
இராணுவத்திடமிருந்து தப்புவதற்கு விரும்பியவர்கள் வதிரி, கரவெட்டி ஆகிய
கிராமங்களை நோக்கி நகர்ந்தனர்.
சிதம்பரத்தின் வீட்டிற்கு அயலிலுள்ளவர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர்.
வீட்டை விட்டுப் போவதில்லை என்பதில் சிதம்பரம் உறுதியாக இருந்தார்.
குமர் பெட்டையையும், இளந்தாரிப் பொடியனையும் வைச்சுக் கொண்டு தனிச்சிருக்கிறது
நல்லதல்ல என்று சிதம்பரத்தின் மனைவி பலமுறை கூறிவிட்டார். மனைவியின்
சொல்லுக்கு சிதம்பரம் மசியவில்லை.
சிதம்பரத்தின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெயர்ந்த மக்கள்
சாரிசாரியாக சென்றனர். வயதானவர்களை சைக்கிளில் இருத்தி சைக்கிளை உருட்டி
சென்றனர். சில வயதானவர்களை கதிரையில் இருத்தி கதிரையைப் பல்லக்கு போல்
து}க்கிச் சென்றனர். ஆடு, மாடு, கோழி என்பனவற்றை விட்டுச் செல்ல மனமில்லாத
சிலர் அவற்றையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். எஜமான்களின் பின்னே
நன்றியுள்ள நாய்களும் சென்றன. சிதம்பரத்தின் நாயான வீமன் தனது எல்லைக்குள்
வந்த நாய்களைக் கண்டதும் சிறிது தூரம் விரட்டிச் சென்று விட்டு மீண்டும் தனது
வீட்டுக்கு வந்தது.
""வீட்டிலை தனியா இருந்தவையை சுட்டுப்போட்டாங்களாம். கலட்டிப்பிள்ளையார்
கோயிலிலை இருந்த பொடியங்களை ஆமி பிடிச்சுப் போட்டுதாம்.'' சிதம்பரத்தின்
மகள் மல்லிகா தான் கேள்விப்பட்டவற்றைத் தகப்பனிடம் கூறினாள். முகத்தில்
எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது மகள் கூறுவதைக் கேட்டார் சிதம்பரம்.
""நாங்களும் ஆமி அறிவிச்சகோயிலுக்குப்போவமப்பா. சனத்தோட சனமா இருந்தா
பயமிராது. அண்ணாவை நினைக்க பயமாக் கிடக்கப்பா'' என்று கூறினாள் மல்லிகா.
சிதம்பரத்தின் மகள் மல்லிகா ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். அவளது அண்ணன்
கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பு மாணவன். பெரிய மனுஷி போல் தகப்பனுக்கு
ஆலோசனை கூறினாள் மல்லிகா. மல்லிகாவின் பயத்தை உணர்ந்த சிதம்பரம்
வீட்டைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டார்.
அந்தக்கோவில் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. வல்லிபுரக் கோவில்,
சன்னதி ,நல்லு}ர்க் கோயில்களின் தேர் ,தீர்த்தத்துக்கு கூடும் அதே
சனக்கூட்டத்தால் கோவில் திக்கு முக்காடியது. இப்படி ஒரு சனக்கூட்டத்தை அந்தக்
கோயில் கண்டதில்லை.அந்தக் கோயில் எல்லையில் சிதம்பரம் இப்போதுதான் காலடி
எடுத்து வைத்தார். சிதம்பரத்தின் கிராமத்தவர்கள் ஒரு மரத்தின் கீழ்
இருந்தார்கள். தம்முடன் வந்து இருக்கும் படி சிதம்பரத்தை அழைத்தார்கள்.
சிதம்பரமும், மனைவியும், பிள்ளைகளும் தமது கிராமத்தவர்களுடன் கலந்தனர்.
நீண்ட தூரம் நடந்த களைப்பு, பயம், பதற்றம், பசி என்பனவற்றினால்
சிதம்பரத்தின் மனைவி சோர்வடைந்தாள். தண்ணி கிடக்கே என சிதம்பரத்தின்
மனைவி கேட்டாள். அருகில் இருந்த ஒருவர் தண்ணீரைக் கொடுத்தார். தாகம் தீரக்
குடித்தாள் சிதம்பரத்தின் மனைவி. தண்ணீரின் தேவையை உணர்ந்த சிதம்பரம்
தண்ணீர் எங்கே எடுக்கலாம் என அருகில் இருந்தவரைக் கேட்டார். கிணறு இருக்கும்
திசையைக் காட்டினார் அவர். செம்பையும் , வாளியையும் எடுத்துக் கொண்டு
கிணற்றடியை நோக்கிச் சென்றார் சிதம்பரம். கிணற்றைச் சுற்றி நிறைய சனம்.
ஒருவர் தண்ணீரை வாளியால் ஊற்றினார். சுற்றி நின்றவர்கள் நீரைப் பெறுவதற்காக
முண்டியடித்தனர். அரைவாசிக்கும் மேற்பட்ட நீர் வெளியில் சிந்தியது.
""தள்ளி நில்லுங்கோ, தள்ளி நில்லுங்கோ. நெருக்குப்படாமல் நிண்டால் தண்ணி
எடுக்கலாம். ஆமிக்காரன் வெளிக்கிட்டது எளியதுகளுக்கு வாச்சுப் போச்சு'' என்று
நீரை ஊற்றியவர் கூறினார்.
சிதம்பரத்தின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் சுருக்கெனத் தைத்தன. தண்ணீர்
எடுக்காமல் திரும்பிச் சென்றார்.
""ஏனப்பா தண்ணி இல்லையே'' மகள் கேட்டாள்.
""தண்ணி நிறையக் கிடக்கு பிள்ளை அதைத் தாறவனுக்குத்தான் மனசு சரியில்லை.
இப்பிடி ஒரு அவமானம் வரக்கூடாது எண்டுதான் வீட்டிலை இருப்பம் எண்டனான். வாங்கோ
வீட்டை போவம்''
""உங்களுக்கென்ன விசரே. சனமெல்லாம் உயிரைக் கையிலை பிடிச்சுக் கொண்டு ஓடுது.
நீங்கள் வீட்டை போவம் எண்ணுறியள்'' சிதம்பரத்தின் மனைவி வெகுண்டெழுந்தாள்.
""சரி நீங்கள் நில்லுங்கோ நான் போறன்'' எனக் கூறிக்கொண்டே சயிக்கிளை
உருட்டத் தொடங்கினார் சிதம்பரம். சிதம்பரத்தின் மனைவியும், மகளும், மகனும்
அவரின் பின்னால் மௌனமாகச் சென்றனர்.
வடமராட்சியை இராணுவம் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது. பாடசாலைகளிலும்,
ஆலயங்களிலும் தங்கி இருந்தவர்கள் தமது வீட்டுக்குத் திரும்பினர். சிதம்பரத்தின்
அயல் வீட்டுக்காரரான சண்முகத்தின் குடும்பம் வீட்டுக்குத் திரும்பியது.
சிதம்பரத்தின் வீடு பூட்டியிருந்தது.
""என்னப்பா வீடு பூட்டிக் கிடக்கு. சிதம்பர மண்ணையவை எங்கை போச்சினமோ
தெரியாது?'' சண்முகத்தின் மனைவி கேட்டாள்.
""மச்சானுக்கு புத்தூரிலை ஆக்கள் இருக்கினம். அவை அங்கை போயிருப்பினம்.
பங்கரை மூடச் சொல்லி ஆமி அறிவிச்சிருக்கு. நான் மச்சான் வீட்டு பங்கரை
மூடிப்போட்டு வாறன்'' எனக் கூறிய சண்முகம் மண்வெட்டியுடன் சிதம்பரத்தின் வீட்டை
நோக்கிச் சென்றார். சிதம்பரத்தின் வீட்டு பங்கர் மிகவும் பாதுகாப்பானது.
ஷெல் வீச்சு, விமான கைக்குண்டு தாக்குதல் நடந்தால் அருகில் உள்ளவர்கள்
சிதம்பரத்தின் வீட்டு பங்கருக்குத்தான் செல்வார்கள். சிதம்பரத்தின் வீட்டைச்
சுற்றிப் பார்த்தார். சிதம்பரம் திருடர் வந்து போன அடையாளம் எதுவும் இல்லை.
பங்கரை மூடுவதற்கு முன் எட்டிப் பார்த்த சண்முகத்தின் மேனி சில்லிட்டது. சப்த
நாடிகளும் ஒடுங்கி என்ன செய்வதெனத் தெரியாதுஅதிர்ச்சியில் உறைந்தான்.
சண்முகத்தின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் சிதம்பரத்தின் வீட்டை நோக்கி
ஓடினார்கள். பங்கருக்குள் சதைக்குவியலாக சிதம்பரத்தின் குடும்பம் கிடந்தது.
சிதம்பரத்தின் வீட்டுக்குப் பின்னால் உள்ள வடலிக்குள் எழுந்த வீரனின்
குரைப்புச் சத்தம் உறவினர்களின் அழுகுரலை விஞ்சியது. சிதம்பரத்தின் செல்ல
நாயான வீரனின் வித்தியாசமான குரைப்புச் சத்தம் வந்த வடலியை நோக்கி
சென்றவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி மேலெங்கும் இரத்தக் காயங்களுடனும் அரைகுறை
ஆடைகளுடனும் மயங்கிய நிலையில் சிதம்பரத்தின் மகள் கிடந்தாள்.
சூரன். ஏ.ரவிவர்மா
ஜீவநதி
மார்கழி 2011

Tuesday, February 14, 2012

இது ஒரு அரண்மனைக் காதல்

பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமீலா பாக்கர் பவுல்ஸை மணமுடிக்கப் போவதான செய்தி பிரிட்டிஷ் மக்களிடையே பெருத்த உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் திருமணம் முடிக்கலாம் என்று ஒரு சாராரும், விவாகரத்துச் செய்தவரை சார்ள்ஸ் மணக்கக் கூடாது என்று ஒரு சாராரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இளவரசர் சார்ள்ஸின் திருமண அறிவிப்பினால் இங்கிலாந்தின் தேவாயலங்கள் கூட திருமணத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக் கூறியுள்ளன. சார்ள்ஸின் இரண்டாவது திருமணம் இங்கிலாந்துத் தேவாலயங்களை இரண்டாக்கியுள்ளது.
டயானாவைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சார்ள்ஸ் கமீலா மீது காதல் கொண்டார். சார்ள்ஸ் டயானா திருமணத்துக்கு கமீலா பூரண ஆதரவு தெரிவித்தார். டயானாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கமீலா மீதான காதலை தனது இதயத்தில் ஒரு மூலையில் சார்ள்ஸ் வைத்திருந்தார்.
சார்ள்ஸ் டயானா இருவருக்கும் இடையிலான திருமண வாழ்வு பற்றி உலகின் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. 1984 ஆம் ஆண்டு ஹரி பிறந்த பின்னர் அவர்களின் திருமண வாழ்வில் பெரும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் அது விவாகரத்தில் முடிந்தது.
இளவரசி டயானா எயிட்ஸ் நோயாளர்கள் மீது மிகுந்த கருணை காட்டினார். கண்ணிவெடியில் சிக்கியவர்கள் மீது மிகுந்த அனுதாபம் காட்டினார். எயிட்ஸ், கண்ணிவெடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக இளவரசி டயானா பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார்.
இளவரசர் சார்ள்ஸ் விவாகரத்துச் செய்த பின்னர் எகிப்தின் கோடீஸ்வரர் அல்பாய்ட் டொடியை காதலித்தார் டயானா. பிரிட்டிஷ் அரண்மனை டயானாவின் காதலுக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தது. டயானாவை மோப்பம் பிடிக்கும் பத்திரிகைகள் டயானா டொடி ஆகியோர் அரைகுறை ஆடையுடன நிற்கும் படங்களை வெளியிட்டு பிரிட்டிஷ் அரண்மனையை மேலும் நெருக்குதலுக்குள்ளாக்கின.

பாரிஸில் இளவரசி தன் காதலருடன் நிற்பதை அறிந்த பத்திரிகைப் படப்பிடிப்பாளர்கள் அவர் தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டனர். புகைப்படப்பிடிப்பாளர்களுக்கு போக்குக் காட்டிய டயானாவும் டொடியும் வேறு பாதையால் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினர். அதனை அறிந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் அவர்கள் சென்ற காரை விரட்டிச் சென்றனர்.
மிக வேகமாகச் சென்ற கார் சுரங்கப் பாதையில் இருந்ததூணுடன் மோதியதில் டயானா, டொடி, சாரதி ஆகிய மூவரும் மரணமாகினர்.
டயானா கொல்லப்பட்ட விபத்து உண்மையில் விபத்து அல்ல திட்டமிட்ட செயல் என டொடியின் தந்தை தெரிவித்தார். டயானா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்தார். முன்னால் வந்த கார் தான் விபத்தை ஏற்படுத்தியது என்று பல மர்ம முடிச்சுகள் டயானாவின் மரணத்தின் பின்னணியில் இருக்கின்றன. அந்த முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படவில்லை. இந்த மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
டயானா மரணமான பின்னர் கமீலாவை சார்ள்ஸ் மணமுடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. டயானா கார் விபத்தில் கொல்லப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த பின்னர் சார்ள்ஸின் மறுமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சார்ள்ஸ், கமீலா இருவரும் விவாகரத்துப் பெற்றவர்கள். விவாகரத்துப் பெற்றவர்கள் மறுமணம் செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை இங்கிலாந்துத் திருச்சபை வகுத்துள்ளது. இளவரசி டயானா மரணமானதால் சார்ள்ஸ் திருமணம் செய்வதற்குத் தடை இருக்காது. கமீலாவின் முன்னாள் கணவர் பார்க்கர் பவுள்ஸ் உயிரோடு இருப்பதால் கமீலா திருமணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இளவரசர் சார்ள்ஸை த் திருமணம் செய்த பின்னர் கமீலாவுக்கு இளவரசிப் பட்டம் வழங்கப்படமாட்டாது. எலிஸபெத் மகாராணிக்குப் பின்னர் சார்ள்ஸ் மன்னராவார். அப்போதும் கமீலாவுக்கு மகாராணிப் பட்டம் வழங்கப்பட மாட்டாது.கான்வெல் கோ மகள் என்ற பட்டம் மட்டுமே கமீலாவுக்கு வழங்கப்படும்

சார்ள்ஸ் மூலம் கமீலாவுக்கு குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு அரசுரிமை கிடையாது. சார்ள்ஸு_க்குப் பின்னர் வில்லியம் இளவரசராகப் பட்டம் சூட்டப்படுவார். அரச விதிமுறைகளுக்கு மாறாக சார்ள்ஸ் திருமணம் முடிக்கப்போவதால் அவரது மகன் வில்லியத்துக்கு முடி சூட வேண்டும் என்று பிரிட்டனில் உள்ள சிலர் கூறுகின்றனர்.
சார்ள்ஸ், கமீலா திருமண அறிவிப்பு வெளியான பின்னர் சில திருச்சபைகள் கருத்து எதனையும் கூறவில்லை. ஆனால் ஒரு சில பிரிவுகள் இந்தத் திருமணத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்து நாட்டின் மன்னன் பதவி வழியாக அந்த நாட்டில் உள்ள தேவாலயங்கள் அனைத்துக்கும் தலைவராகிவிடுவார். அப்படிப்பட்ட ஒருவர் மறுமணம் செய்யக்கூடாது என்பது ஒரு சிலரின் கருத்து. தேவாலயங்களின் முடிவெடுக்கும் உயர்மட்ட சினோட் கறுப்பினர்களில் அதிகமானோர் விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்த ஒருவர் தலைவராக வரக்கூடாது என்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
கமீலாவின் பாட்டியுடைய அம்மா அலிஸ் கைப்பல். இவர் சார்ள்ஸுடைய சின்னத்தாத்தாவின் அப்பாவான ஏழாம் எட்வேட்டின் மிக நெருங்கி நண்பர். மன்னர் எட்வேட்டை ராணி அலெக்சாண்டியா கவனிப்பதை விட நண்பனான அலிஸ் மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை ஒன்று அரண்மனையில் நிலவியது.
கமீலாவின் கொள்ளுப்பாட்டியான அலிஸ் கெப்பனுக்கும் சார்ள்ஸின் கொள்ளுத் தாத்தாவான 7வது எட்வேட் மன்னருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அந்தக் காலத்து பத்திரிகைகள் கிசுகிசுத்தன. அன்று ஆரம்பமான நெருக்கம் இன்றும் தொடர்கிறது போல் தெரிகிறது.
சிம்பாவேயின் சுதந்திர தினத்தன்று 1980ஆம் ஆண்டு சார்ள்ஸின் அதிகாரபூர்வ பாதுகாவலர் பொறுப்பை கமீலா ஏற்றார்.

சார்ள்ஸ் - கமீலா இருவரும் மிகவும் நெருங்கிப் பழகினாலும் அவர்களிடையேயான காதல் உடனடியாக ஆரம்பிக்கவில்லை.
உலகமே அதிசயித்து மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் மிகவும் ஆடம்பரமான முறையில் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது. டயானாவின் மீது பிரிட்டிஷ் மக்கள் அளவற்ற பாசம் வைத்தனர். இளவரசி டயானாவின் அழகு உலக மக்களைக் கவர்ந்தது.
சார்ள்ஸ் - டயானா இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்ட போது இருவரும் இணைந்து வாழவேண்டும் என்றே உலகில் உள்ள அனைவரும் விரும்பினார்கள். இளவரசியான டயானா மீது பிரியமுள்ளவர்கள் டயானாவுக்காக இரங்கினார்கள். பிரச்சினை விஸ்வரூபமாகி விவாகரத்தில் போய் நின்றது.
சார்ள்ஸ் விவாகரத்துச் செய்த டயானா, எகிப்திய கோடீஸ்வரரைக் காதலித்ததை பிரிட்டிஸ் மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. டயானா டொடி திருமணம் நடைபெறக் கூடாது என்றே பிரிட்டிஷ் மக்களில் பலர் விரும்பினார்கள். கார் விபத்தில் டயானா மரணமானதும் டயானா மீதான அனுதாபம் மேலும் அதிகமாகியது.
உலகில் உள்ள புகைப்படப் பிடிப்பாளர்களால் மிக அதிக தடவை படம் பிடிக்கப்பட்டவர் என்ற பெருமை டயானாவுக்கு உண்டு. புகைப்படப் பிடிப்பாளர்களின் வேட்டையே டயானாவின் மரணத்துக்குக் காரணம். டயானா மரணமானதும் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டது என்றே பிரிட்டிஷ் மக்கள் நம்பினார்கள். சார்ள்ஸின் திருமண அறிவிப்பு பிரிட்டிஷ் மக்களிடையே புதிய உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சார்ள்ஸுக்கு டயானா மூலம் வில்லியம், ஹரி என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கமீலாவுக்கும் இராணுவ அதிகாரி அன்ட்ரூ பாக்கர் பவுஸிக்கும் டாம், லாரா என்ற இருவர் உள்ளனர்.
சார்ள்ஸின் இரண்டாவது திருமண அறிவிப்பு இங்கிலாந்தில் புதிய பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. தேவாலயங்களில் உள்ள சில பிரிவுகள் சார்ள்ஸின் மறுமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் காதலியைக் கரம்பற்றுவதா? அரியணைக்கு அரசனாக இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டும் என்று பல தேவாலயங்கள் சார்ள்ஸுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துள்ளன.
சினோட் அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் போது சார்ள்ஸின் மறுமண அறிவிப்பு அங்கே விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு விவாதிக்கப்படும் பட்டியலில் இந்தப் பிரச்சினை இடம்பெறவில்லை என்றாலும் இப்பிரச்சினை அங்கு முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த உறுப்பினர்கள் மூவர் இந்த விவாகரத்தைக் கிளறுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அவர்கள் கான்டர் பெற்றி பேராயர் ரோவன் வில்லியம்ஸின் கவனத்துக்கு கொண்டுவர உள்ளனர்.
சார்ள்ஸின் திருமண அறிவிப்பு வெளியான உடனே தேவாலயங்கள் பல அதற்கு ஆதரவு தெரிவித்தன. நாள் செல்லச்செல்ல எதிர்ப்புகள் வலுவடைந்ததால் சில தேவாலயங்கள் மௌனம் காக்கின்றன. சில தேவாலயங்கள் வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
சார்ள்ஸ் கமீலா மறுமணம் தொடர்பாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன. சார்ள்ஸின் மறுமணத்துக்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பிரிட்டிஷ் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
டெய்லி மெயில் நடத்திய கருத்துக்கணிப்பில் 58 சதவீதத்தினர் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 14 சதவீதமானோர் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.டெய்லி மெயில் தொலைபேசி மூலமாகவே இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது.
த டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்புத் திருமணத்துக்கு ஆதரவாக 43 சதவீதத்தனரும் எதிராக 22 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 சதவீதமானவர்கள் இதில் தமக்கு அக்கறை இல்லை எனத் தெரிவித்தனர்.



த டெய்லி எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் 64 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். த சன் நடத்திய கருத்துக் கணிப்பில் 73 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். த டெய்லி மிரர்நடத்திய கருத்துக் கணிப்பில் 90 சதவீதமானவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு சார்ள்ஸ் மன்னராகக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
சார்ள்ஸ், டயானா திருமணத்தின் போது இங்கிலாந்தில் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்று சார்ள்ஸ், கமீலா மறுமணத்துக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக கேட்ஸ் ஹெட் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் விடுமுறை வழங்கப்பட மாட்டாதென இங்கிலாந்தின் பிரதமர் டொனி பிளேயர் அறிவித்துள்ளார்.
சார்ள்ஸ் திருமண அறிவிப்பு வெளியான பின்னர் பேட்டியளித்த கமீலா தன்னைத் திருமணம் செய்யும்படி இளவரசர் மண்டியிட்டுக் கேட்டதாகத் தெரிவித்தார். இது இளவரசரின் முறை தவறிய காதலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது.
சார்ள்ஸ் மறுமணம் சம்பந்தமாக பிரிட்டிஸின் ஆதரவும், எதிர்ப்பும் தோன்றியுள்ள நிலையில் இளவரசனின் மகன் ஹரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் மகள் ஜென்னாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
பட்டத்து இளவரசு வில்லியம் திருமணத்தில் அக்கறை செலுத்தவில்லை. அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அதனால் தான் திருமணத்தில் ஆர்வமில்லை என்று பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இளையவரான ஹரி அண்மையில் நாஜி உடுப்பில் விருந்துக்குச் சென்றதால் பத்திரிகைகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தன.
அரண்மனையும், திருமணமும், கிசுகிசுவும் ஒன்றையொன்று விட்டு பிரியாதவை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.



1970 வின்ஸ்டன் போலோ போட்டியின் போது கமீலாவை இளவரசர் சந்தித்தார்.
1973இல் இராணுவ அதிகாரி ஆன்ட்ரூ பார்க்கர் பவுல்சை கமீலா மணந்தார். 1995இல் இவர்களது மணம் முறிந்தது. 1981இல் டயானாவை சார்ள்ஸ் மணந்தார்.
1992இல் சார்ள்ஸும், கமீலாவும் பேசிக்கொண்ட டெலிபோன் உரையாடல் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை வெளிக்காட்டியது. ஐ லவ் யூ என்று சார்ள்ஸ் கமீலாவிடம் சொல்லியிருந்திருக்கிறார்.
1995இல் கமீலா ஆன்ட்ரூவிடம் விவாகரத்துப் பெற்ற பின்னர் சார்ள்ஸ_டன் நெருங்க ஆரம்பித்தார்.
1996 ஓகஸ்டில் சார்ள்ஸ் இளவரசி டயானாவை விவாகரத்துச் செய்தார். 1997இல் இல் டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
1998இல் முதன் முறையாக இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியை கமீலா சந்தித்தார்.
1999இல் சார்ள்ஸ் 50 ஆவது பிறந்த நாளில் கமீலாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார். அது வரை எந்த நிகழ்ச்சிக்கும் தனித்தனியே வந்து செல்வார்கள்.
1999 கமீலா மற்றும் இளவரசர்கள் சார்ள்ஸ், வில்லியம் மற்றும் ஹரியுடன் கிhPன் ஐலண்டில் விடுமுறைக்குச் சென்றனர்.
2000 ராணி எலிசபெத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு கமீலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் அங்கு சந்தித்தனர். இதுதான் கமீலாவுடனான சார்ள்ஸ் நட்பை ராணி ஏற்றுக் கொண்டதன் அடையாளம் என்று கருதப்பட்டது.
2004இல் சார்ள்ஸின் அலுவலகத்தில் அடிக்கடி காணப்பட்டார்.
2005 இருவரும் மண முடிக்க ராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்தார்.
ரமணி
மெட்ரோநியூஸ் 18/02/2005

Sunday, February 12, 2012

சந்திக்கு வந்த வாரிசு யுத்தம் தனித்து நிற்கும் விஜயகாந்த்

தலைவருக்குப் பின் ஸ்டாலின் என்பது தி.மு.க. வின் எழுதாக சட்டம் அழகிரியின் வரவு ஸ்டாலினுக்குப் போட்டியானது. கனிமொழியின் பிரவேசம் வாரிசுப் போட்டியை அதிகரித்தது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர விரும்பிய விஜயகாந்த்தை நடுத்தெருவில் கைவிட்டு விட்டார் ஜெயலலிதா
.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட பொதுக் குழு அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சையுடன் முடிவடைந்தது. கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தில் எழுதாத சட்டமாக இருந்தது. அழகிரியின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தென் மாவட்டத்தில் வளர்த்த அதேவேளை ஸ்டாலினுக்குப் போட்டியாகவும் அவர் வளர்ந்தார். ஸ்டாலினா அழகிரியா என்ற சர்ச்சை நீண்டு கொண்டிருக்கையில் கனிமொழியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி. கனிமொழியின் அரசியல் பிரவேசம் வாரிசு போட்டியை அதிகரித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் பொதுக் குழுவுக்கான நாள் குறிக்கப்பட்டது முதல் அடுத்து நடைபெறப் போவது பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியாகின. ஸ்டாலினுக்கு உப தலைவர் பதவி அழகிரிக்கு கட்சியின் முக்கிய பதவி, கனிமொழியை முன்னிலைப்படுத்த வேண்டும் போன்ற யூகங்கள் பத்திரிகை சஞ்சிகை என்பவற்றின் பக்கங்களை நிறைத்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை தமிழகத்தின் பிரபல வார சஞ்சிகை நடத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்றே அதிகமானோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி இல்லை என்பது இக் கருத்துக் கணிப்பின் மூலம் வெளிப்படையாகத் தெரிய வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் வைகோதான் என்ற வினோதமான முடிவையும் சிலர் தெரிவித்திருந்தனர். அமைதியாக நடந்த பொதுக் குழுக்கூட்டத்தை திசை திருப்பினார் வீரபாண்டி ஆறுமுகம். தலைவர் இருக்கும் போதே அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு வேண்டாம் என்று வீரண்பாண்டி ஆறுமுகம் முழங்க தளபதிதான் அடுத்த தலைவர் என்று சிலர் குரல் கொடுத்தனர். பொதுக் குழுவில் ஏற்பட்ட இக் கலகலப்பை கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எதிர்பார்க்கவில்லை. கழகத் தேர்தல்கள் ஏகமனதாகவே நடந்துள்ளன. இனியும் அப்படித்தான் நடக்க வேண்டும். அடுத்த தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் என்று கருணாநிதி சவால் விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் புகைந்திருந்த வாரிசுச் சண்டை பொதுக் குழுவில் எதிரொலித்தால் ஸ்டாலினிடம் தலைமைப் பதவியைக் கொடுத்தால் அழகிரி சன்னதமாடுவார் என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். அதனால் தான் அடுத்த தேர்தலில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து ஸ்டாலினின் ஆதரவாளர்களின்வாயை அடைத்துவிட்டார். ஸ்டாலினா? அழகிரியா? என்ற சர்ச்சை தற்காலிகமாக அமைதியடைந்துள்ளது. இது எப்போது பூகம்பமாக வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறாது என்பதையும் கருணாநி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்புகள் எவற்றையும் காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசாவும் கனிமொழியும் சிக்கியுள்ள போது மௌனமாக இருக்கிறது என்று பலரும் குற்றம் சாட்டினார்கள்.
மத்திய அரசைக் கைப்பற்ற பாரதீய ஜனதாக் கட்சி துடிக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் தமிழகத்தில் ஜெயலலிதாவின் மதிப்புக் கூடி விடும். தவிர அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்று சோ கூறியதையும் கருணாநிதி ஞாபகப்படுத்தினார். காங்கிரஸ் எப்படித்தான் அடித்தாலும் அதைத் தாங்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் கருணாநிதி. ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவி கொடுக்க வேண்டும். காங்கிரஸுடனான உறவை முறிக்க வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இரண்டு விருப்பங்களும் நிறைவேறாது என்பதைக் கருணாநிதி அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.
ஸ்டாலினுக்கு உரிய பதவியைக் கொடுக்க வேண்டிய தருணங்களை தவறவிட்ட கருணாநிதி வாரிசுச் சண்டையால் கழகம் உடைவதை விரும்பவில்லை. ஸ்டாலின் தலைவராவதை அழகிரி விரும்பவில்லை. அழகிரி தலைவராவதை கழகத்தில் உள்ள தொண்டர்கள் சிலர் விரும்பவில்லை.

சங்கரன் கோவில் இடைத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே சங்கரன் கோவில் தொகுதியில் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு வருமாறு விஜயகாந்துக்கு சவால் விடுத்தார். தமிழக அரசின் 24 அமைச்சர்கள் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களின் போது விஜயகாந்தின் அரசியல் கட்சி பல இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விஜயகாந்த் சவாலாக விளங்கினார். இன்று அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமாறு ஜெயலலிதா விஜயகாந்துக்குச் சவால் விடுத்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பன சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜயகாந்தும் தனித்தும் களம் இறங்கினார். இது அவருக்கும் பலத்த அடியாகவே இருக்கும். விஜயகாந்த் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதை ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் விரும்பி இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி சேரக் கூடாது என்று முடிவு செய்த ஜெயலலிதா இப்பொழுதே விஜயகாந்த்தைத் தனிமைப்படுத்தியுள்ளார். காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறிச் செல்வதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறிவிட்டதால் காங்கிரஸில் விஜயகாந்த் கூட்டணி சேர்வதற்கான கதவு மூடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் தொண்டர்களும் விஜயகாந்துடன் இணைந்த காலம் போய் விஜயகாந்தின் ஆதரவாளர்களும் முக்கியஸ்தர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரும் நிøலமை தோன்றியுள்ளது. சிறுவயது முதலே விஜயகாந்தின் உற்ற நண்பனாக விளங்கிய ராவுத்தர் இப்ராஹிம் அண்ணா திராவிர முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். விஜயகாந்தை நடிகனாக்க வேண்டும் என்பதற்காகச் சென்னையில் உள்ள பல சினிமா நிறுவனங்களுக்குச் சென்று வாய்ப்பு கேட்டவர் ராவுத்தர் இப்ராஹிம். விஜயகாந்துக்காகப் பெருந்தொøகப் பணத்தைச் செலவிட்டு படம் தயாரித்தவர்.

விஜயகாந்தின் கட்சியில் இருந்து அவர் ஆயிரம் பேர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளõர். ஜெயலலிதாவின் நடவடிக்கையினால் விஜயகாந்த் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை எதிர்த்து விஜயகாந்தால் தனித்து நின்று ஜெயிக்க முடியாது. விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் மூவரும் ஜெயலலிதாவாலும் விஜயகாந்தாலும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்தால் தான் வெற்றி பெறலாம். இல்லையேல் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வெற்றியைப் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
வர்மா,
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/02/12


Tuesday, February 7, 2012

தமிழ் இலக்கியப் பரப்பில்கல்கி கைவைக்காத துறையேஇல்லை

இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. முதலாவது நோக்கம் தேசநலன். ,ரண்டாவது நோக்கம் தேசநலன். மூன்றாவது நோக்கம் தேசநலன்இப்படி 1941ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி காவல் தெய்வமான விநாயகரைச் சாட்சியாக வைத்து கல்கி சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிட்டார் அமரர் ~~கல்கி.
அமரர் கல்கி நூற்றாண்டு விழாவை தமிழ் ,லக்கிய உலகம் ,ப்பொழுது கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
நாவல், குறுநாவல், சிறுகதை, அரசியல் விமர்சனம், சங்கீத விமர்சனம், பயணக்கட்டுரை, சினிமா விமர்சனம் என்று அவர் தொடாததில்லை. தொட்டுப் பொன்னாக்காததில்லை.
வாசகர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே வாசகர்களுக்குக் கொடுத்தார். தனக்குப் பிடிக்காத எதையும் வாசகர்களுக்குத் திணித்ததில்லை. நகைச்சுவையாக விமர்சனம் செய்வது அவரின் தனிப்பாணி. சம்பந்தப்பட்டவர் மனம் நோகாதபடி அவர்கள் விடும் தவறைச் சுட்டிக்காட்டுவது கல்கியின் தனிப்பாணி.
சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தமிழிசைப் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக வேண்டும் என்பதற்காக தமிழிசைப் பாடல்கள் பலவற்றை எழுதினார்.
அவர் எழுதி தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்இன்றும் காற்றினிலே தவழ்ந்து ரசிப்பவர் மனதை நிறைக்கின்றன.
மென்மையான உணர்வுடன் நகைச்சுவை கலந்து அவர் எழுதும் தலையங்கங்கள் மூலம் எதிர்கால அரசியல் நிலைப்பாடு எப்படிஇருக்கும் என்பதைச் சகலரும் அறியக்கூடியதாக இருக்கும். தனிநபர் வெறுப்பு, குரோதம் எதுவுமற்ற அவரது நடை எவரையும் இலகுவாக கவர்ந்து விடும் தன்மை வாய்ந்தவை.
காந்திஜியின் அனுமதியுடன் 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகப் போரில் ஈடுபட்டு சிறை சென்றார். கல்கி சிறையில் இருந்த போது எம்.எஸ்.வி. நடித்த சகுந்தலை திரைப்படம் வெளியாகியது.

கல்கி எழுதும் விமர்சனங்கள் தமிழ் வாசகர்களுக்கு வேதவாக்கு. கல்கியின் பேனை ஒரு திரைப்படத்தைப் பாராட்டி எழுதிவிட்டால் அந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சகுந்தலை படத்துக்கு கல்கி விமர்சனம் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சதாசிவம் விரும்பினார். ஆனால் அது நடக்கக்கூடிய சம்பவமாக இருக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுது கல்கி மாயவரம் சிறையில்இருந்தார்.
கல்கியின் சத்தியாக்கிரகம் மாயவரம் சாமி அய்யங்கார் ஆர்.கே.சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் விரும்பியதால் மாயவரத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட கல்கி மூன்று மாதச்சிறைத் தண்டனை பெற்று மாயவரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
சிறையில்இருந்த கல்கியை தன்னுடைய செல்வாக்கினால் வெளியே அழைத்துச் சென்று தஞ்சாவூரில் ஓடிக்கொண்டிருந்த சகுந்தலை படத்தைப் பார்க்க வைத்த அன்றிரவே கல்கியிடமிருந்து விமர்சனத்தையும் எழுதி வாங்கிய பின் அவரைப் பத்திரமாக மறுபடியும் சிறையில் சேர்த்துவிட்டார் சதாசிவம். அந்த விமர்சனம் ஹிந்து உட்பட பல பத்திரிகைகளில் வெளியாகியது.
கல்கியின் விமர்சனத்துக்கு மக்கள் மத்தியில்இருந்த மதிப்புக்கு இந்த ஒரு சம்பவமே போதும். சதாசிவத்தைப் பற்றி கல்கி ஏற்கனவே அறிந்திருந்த போதிலும் இவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் கல்கி அன்றுதான் அறிந்து கொண்டார்.
சிறையிலிருந்து வெளியேறியதும் சொந்தப் பத்திரிகை நடத்துவதென்றால் சதாசிவத்தின் நிர்வாகத்தின் கீழ்தான் நடத்த வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார்.
கல்கி சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் துணையாக நின்றவர்களில் சிறந்த நிர்வாகியான சதாசிவம், மூதறிஞர் ராஜாஜி, டி.கே.சி., திருமதி.எம்.எஸ்.வி. ஆகியோர் முதன்மையானவர்கள்.
கல்கிக்குப் பிடிக்காதவை சிபார்ஸும், விடுமுறையும். திறமை எங்கு இருந்தாலும் அதை ஊக்குவிக்க அவர் தவறியதில்லை. அச்சுக்கோர்க்கும் வேலை செய்த விந்தன் என்பவர் எழுதிய சிறுகதையைப் படித்துவிட்டு அவரைக் கல்கி சஞ்சிகையின் உதவி ஆசிரியராக்கினார்.

நகைச்சுவைச் சிறப்பிதழ் வெளியிடுவதனால் உதவி ஆசிரியர்கள் கண்டிப்பாக ஏதாவது நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும். அவற்றிலிருந்து சிறந்தவையைத் தெரிவு செய்வார். எவ்வளவு பிரபலமானவரின் ஆக்கம் என்றாலும் தரமில்லை என்றால் பிரசுரிக்க மாட்டார்.
சிறந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அதை தமிழில் மொழி பெயர்த்து கல்கியில் வெளியிடுவார். கல்கியைத் தொடர்ந்து படிப்பவர்கள் வேற்றுமொழியில் உள்ள சிறந்த கதை, கவிதை, நாவல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
குழந்தைகளைக் கண்டால் கல்கியும் குழந்தையாகி விடுவார். நீதிக்கதை, போதனைக்கதை சொல்லி குழந்தைகளின் மனதைக் கவர்ந்திடுவார். ஆனந்த விகடனில் பணியாற்றிய போது குழந்தைகளுக்கென்று சில பக்கங்களை ஒதுக்கியிருந்தார்.
கல்கி சஞ்சிகையை ஆரம்பித்த போதும் குழந்தைகளுக்கான சில பக்கங்களை ஒதுக்கினார். குழந்தைக் கவிஞர்களான அழ.வள்ளியப்பா, தேசிக விநாயகம்பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பிரசுரித்தார். இன்று கல்கி நிறுவனம் குழந்தைகளுக்காக கோகுலம் என்னும் சஞ்சிகையை வெளியிடுகிறது.
சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்தீபன் கனவு,அலை ஓசை, கள்வனின் காதலி என்று பேராசிரியர் கல்கி புகழ்கூறும் நவீனங்கள்இன்றும் கல்கியின் பெருமையைக் கூறும் சாட்சிகளாக உள்ளன.
அவர் எழுதிய சரித்திர நாவல்கள் அனைத்தையும் எதிர்கால சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
கல்கியின் தொடர் நாவல்களைப் படிக்கும் போது அடுத்தவாரம் என்ன நிகழும் என்பதை வாசகர்கள் அறிவதற்குப் பெரும் ஆவலாக இருப்பார்கள். பொறுமையில்லாத சிலர் நேரிலும் கடிதமூலமும் முடிவைத் தெரிவிக்கும் படி கல்கியைக் கேட்டார்கள்.
அகஸ்தியர், கர்நாடகம், குகன், தமிழ்த்தும்பி, தமிழ் மகன், துதிக்கையான், பரிசோதகர், முகமூடி, ராசி, வழிப்போக்கன், விறிசி, ஒரு தமிழ் மகன், கிராமவாசி, தமிழ்த்தேனீ, தும்பி, தேனீ, யமன், பிரகஸ்பதி, பெற்றோன், விகடன் லாங்கூலன், விவசாயி, ஒரு பிராமண இளைஞன் என்பன கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் புனைபெயர்கள்.
கல்கி என்னைத் தாக்கி எழுதினாலும் தூக்கி எழுதினாலும் அதை வரவேற்கிறேன் என்று செம்மங்குடி சீனிவாச ஐயர் ஒருமுறை கூறினார்.
இந்திய மத்திய அரசு மாநிலங்களில் ஹிந்தி மொழியைத் திணிக்க முற்பட்ட போது அதை விமர்சித்து அவர் எழுதிய தலையங்கங்கள் இன்றும் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமானதாக உள்ளன.
பொன்னியின் செல்வன் நாவலில் இலங்கை அரசில் ஏற்பட்ட குழப்பங்களின் பின் நிலையான அரசு அமையவேண்டும் என நினைத்த பௌத்தத் துறவிகள் அருள்மொழிவர்மரை அரசாளும்படி கேட்க அதற்கு அவர் கூறும் காரணம் இன்றும் இலங்கை அரசியலுக்குப் பொருத்தமாக உள்ளது.
ஆயிரத்தைனு}று வயதான அரசமரம் இன்னும் நிற்பது என்னவோ உண்மைதான். ஆனால் தர்மம் செத்துப் போய் எத்தனையோ நாளாகிவிட்டது என்று வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் நாவலில் சொல்வதும் அவரின் எழுத்துக்கள் சிரஞ்சீவித்தன்மை வாய்ந்தவை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
தினக்குரல் 16/05/1999

Sunday, February 5, 2012

சீண்டுகிறார் ஜெயலலிதா சீறுகிறார் விஜயகாந்த்

அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்ததும் எதிர்பார்த்தது போலவே, திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசியலில் தனக்கு நெருக்கமாக இருந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆரம்பத்தில் அடக்கி வாசித்த விஜயகாந்த் இப்போது ஆவேசமாக பேசத் தொடங்கி விட்டார். அவரது ஆவேசப் பேச்சினால் தமிழக ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப்போவதில்லை.

அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சசிகலாவும் அவரது குழுவினரும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா, திவாகரன், ராவணன் போன்றவர்களின் சிபார்சில் அமைச்சரானவர்களின் பதவி பறிக்கப்பட்டன. அவர்களின் தயவில் உயர் பதவி வகித்த பொலிஸ் அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்பட்டனர்.
திவாகரனை கோட்டைவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பொலிஸார் அதிரடியாக ராவணனைக் கைது செய்தது.
ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவும் அவரது குழுவினரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சில தகவல்கள் சசிகலா தரப்புக்கு அனுப்பப்படுகின்றது. திவாகரனைக் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் மிக இரகசியமாக செய்யப்பட்டன. இந்தத் தகவல் தெரிந்ததனால் திவாகரன் தலைமறைவாகி விட்டார். சசிகலாவின் நலனில் அக்கறை உள்ள சிலர் இன்னமும் ஜெயலலிதாவின் அருகில் இருப்பதையே இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது. திவாகரனைத் தேடி தமிழகப் பொலிஸார் அலைந்து கொண்டிருக்கையில் சசிகலாவும் அவரது குழுவினரும் எதுவும் தெரியாதது போல் அமைதியõக இருந்தனர்.
தனது ஆட்கள் எவரையும் தமிழக அரசால் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் விட மாட்டேன் என்று சசிகலாவின் கணவன் நடராஜா சபதமிட்டார். அவரது வாயை அடக்கும் விதமாக இராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்ட சபை தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர்களைத் தெரிவு செய்வது அமைச்சராக யாரை நியமிப்பது அரசுக்குக் கிடைக்கும் ஒப்பந்தங்களை விநியோகிப்பது போன்றவற்றில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ராவணன். கட்சியில் உள்ளவர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதிலும் ராவணன் பங்கு முக்கியமானது.
பஞ்சாயத்து வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்வதற்காக கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை மிரட்டி 10 இலட்சம் ரூபா பெற்றது, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே மணல் விற்பனை உரிமம் பெறுவதற்காக ஒரு கோடி ரூபா கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை மணல் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்படவில்லை. ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செயலாளர் செல்வராசா கார் விபத்தில் பலியானார். செல்வராசாவின் மகன் இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். செல்வராசாவின் விபத்து மரணமும், ராவணனுக்கு எதிராக திரும்பக் கூடிய வாய்ப்பு உள்ளது.
ராவணனைக் கைது செய்த பொலிஸார் அவரை எந்தப் பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பல பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அவரை அலைக்கழித்தார்கள். ராவணனன் கைது செய்வதற்கு முன்பு அவரது நிழல் போல் செயல்பட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் வழங்கிய சில தகவல்களின் அடிப்படையிலேயே ராவணன் கைது செய்யப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்ததும் எதிர்பார்த்தது போன்றே திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்ட போது தன்னைக் கைது செய்யுமாறு அலுவலகம் சென்று வேண்டுகோள் விடுத்தார் ஸ்டாலின். ஆனால் தனது கட்சிக்காரர்களையே ஜெயலலிதா கைது செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ராவணனின் கைது ஆரம்பம் தான்

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்குமிடையேயான பகையால் தமிழக சட்ட மன்றம் பரபரப்பாகியது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததாக உண்மையில் ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததற்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த உண்மை தெரிந்து கொண்டும் கருணா நிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொதுக் கொள்கையின் அடிப்படையிலேயே விஜயகாந்தும், ஜெயலலிதாவும் கூட்டணி சேர்ந்தனர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் எதிர்பார்த்தது போன்றே கூட்டணிக் கட்சிகளை கைவிட்டுவிட்டார் ஜெயலலிதா.
தமிழக ஆட்சிபற்றி அடக்கி வாசித்த விஜயகாந்த் இப்போது ஆவேசமாகப் பேசத் தொடங்கி விட்டார். விஜயகாந்தின் ஆவேசப் பேச்சுக்கள் எவையாலும் தமிழக ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. அசுர பலத்தில் உள்ள அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விஜயகாந்தின் ஆதரவு தேவை இல்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் தமது பலத்தைக் காட்ட வேண்டிய களமாக சங்கரன் கோயில் இடைத்தேர்தல் அமையப் போகிறது.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்ததனால்தான் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வியடைந்தது. ஜெயலலிதா முதல்வரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். இருவரும் தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் கருணாநிதி மீண்டும் முதல்வராகி இருப்பார். ஆட்சி பீடம் ஏறியதும் பழையதை மறப்பது ஜெயலலிதாவின் சுபாவம். இப் பொழுதும் அதனையே திரும்ப மீட்டியுள்ளார். விஜயகாந்த்துடன் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிட்டிருந்தாலும் தமிழக சட்ட சபைத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்று வீறாப்பு பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் அனுதாப அலையில் முதல்வரான ஜெயலலிதா அப்போதும் இப்படித்தான் பிதற்றினார்.
தமிழக சட்ட சபையில் இருந்து விஜயகாந்தும் அவரது கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். சட்ட சபையின் விதியை மீறியதாக‌ 10 நாட்களுக்கு சட்ட சபையில் கலந்து கொள்வதற்கு விஜயகாந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்ட சபை இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சங்கரன் கோயில் இடைத்தேர்தல் தொடங்கும் போது தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கி விடும்.
வர்மா,சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு05/05/12


Thursday, February 2, 2012

முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது.
இந்தியா கடந்த ஆண்டு 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 19 போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இரண்டு அணிகளும் 338 ஓட்டங்கள் எடுத்ததனால் போட்டி சமநிலையில் முடிந்தது. இலங்கை ஒரு நாள் ÷õட்டிகளில் விளையாடியது. 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. அவுஸ்திரேலியா 23 போட்டிகளில் விளையாடி 16 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா ஒன்பது போட்டிகளில் விளையாடியது.இதில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஒருபோட்டி சமநிலையில் முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 3 -2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5- 0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.
மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடிய இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. எட்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய இலங்கை ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒருபோட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2- 2 என்ற கணக்கில் சமப்படுத்தியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3- 2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 -1 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது.
இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியா ஒருதொடரில் தோல்வியடைந்தது ஒரு தொடரில் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவற்றக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை தோல்வியடைந்தது. மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இலங்கை சமப்படுத்தியது.
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டியில் மோதின. அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா இலங்கையில் கடந்த ஆண்டு ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடின. அவுஸ்திரேலியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்து. ஒருபோட்டி மழை காரணமாகக் கைவிட்பபட்டது.
இந்தியாவும் இலங்கையும் கடந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடின. இந்தியா வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இந்தியா கடந்த ஆண்டு ஐந்து போட்டிகளில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது. ஒரு போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராகவும் நான்கு போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராகவும் 300 ஓட்டங்களைக் கடந்தது. இந்தியா, இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக 338 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து, கென்யா, பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா கடந்த ஆண்டு 300 ஒட்டங்களுக்கு மேல் அடித்தது. இங்கிலாந்து 333 ஒட்டங்கள் அடித்தபோது அவுஸ்திரேலியா 334 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 303 ஒட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்துக்கு எதிராகஇரண்டு போட்டிகளிலும் சிம்பாப்பேக்கு எதிராக ஒருபோட்டியிலும் இலங்கை 300 ஓட்டங்களைக் கடந்தது. இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் 300 ஓட்டங்கள் அடிக்கவில்லை இங்கிலாந்து 299 ஓட்டங்கள் அடித்தது.


இந்த ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 -2 என்ற கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது. முதலாவது போட்டியில் 43 ஒட்டங்கள் மட்டும் எடுத்து குறைந்த ஒட்டங்களில் ஆட்டமிழந்தது. இலங்கை முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்கா 299 ஓட்டங்கள் அடித்தபோது 304 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 312 ஒட்டங்கள் அடித்தபோது 314 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.டில்ஷானிடமிருந்த தலைமைப் பதவி மஹேலவிடம் கைமாறியது. புதிய தலைமை புதிய பயிற்சியாளரின் கீழ் முக்கோணத் தொடரை சந்திக்கத் தயாராக உள்ளது. இலங்கை மலிங்க மட்டும் தான் எதிரணிக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஏனைய பந்து வீச்சாளர்கள் எப்போதும் ஒட்டங்களை வாரி வழங்குவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை பலமானது தான். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழப்பதால் அடுத்து வருபவர்கள் நெருக்கடியைத் எதிர்நோக்குகின்றனர்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை மிகப் பலம் வாய்ந்தது. அணியில் போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் காப்பாற்றினார்கள். முதல் 10 ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்தும் இந்திய பந்து வீச்சாளர்கள் அதன் பின்னர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை. கடைசி 10 ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கி வெற்றியை பறிகொடுத்து விடுகிறார்கள்.
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/02/12



Wednesday, February 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்21

வெளிநாட்டில் படித்து அந்நிய கலாசாரத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவர் தமிழ்க்கலை, கலாசாரம், இந்துமதம் என்பவற்றைக் கிண்டலடிக்கிறான். மனைவியை மறந்து விபசாரி வீடே கதியென்று கிடக்கும் இளைஞன் இறுதியில் குஷ்டரோராகியாகிறான். பால்வினை நோயான‌ எயிட்ஸ் பற்றி அதிகம் அறிந்திடாத காலத்தில் வெளியான இப்படத்தின் மூலம் விபசாரியிடம் சென்றால் வாழ்க்கை சீரழியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்பும் எம்.ஆர்.ராதா வெளிநாட்டு கலை கலாசாரத்தைத் தனது கிராமத்திலும் புகுத்துவதற்கு விரும்புகிறார். விபசாரியின் வீடேட கதியென்று எம்.ஆர்.ராதா கிடப்பதனால் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்கின்றனர். திருமணம் முடிந்தால் விபசாரியிடம் எம்.ஆர்.ராதா @பாகமாட்டார் என்று பெற்றோர் நம்பினர். திருமணத்தின் பின்னர் விபசாரியிடம் போவதை எம்.ஆர்.ராதா நிறுத்தவில்லை. விபசாரி எம்.என்.ராஜத்தின் வீடே கதியென்று கிடக்கிறார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதாவுக்கு குஷ்டரோகம் வருகிறது. அவரது அவலட்ச‌ணமான உருவத்தை ச‌கிக்க முடியாத எம்.என்.ராஜம் அவரை விரட்டி விடுகிறார். நல்ல உணவை தூக்கி எறிந்த எம்.ஆர்.ராதா சாப்பிடுவதற்கேக வழியின்றி பிச்சை எடுக்கிறார். அவருடைய அவலட்ச‌ணமான உருவத்தை பார்த்த சிலர் அருவருப்புடன் பிச்சை கொடுக்காது விலகி செல்கின்றனர்.
நண்பனான எஸ்.எஸ்.ஆரிடம் பிச்சைகேட்கிறார். எஸ்.எஸ்.ஆரினால் கூட எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண முடியவில்லை. கண் பார்வை இழந்த எம்.ஆர்.ராதாவால் உலகத்தை பார்க்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியின்றி அலையும்போது இளமை பருவத்தில் செய்த செயல்கள் ஞாபகத்தில் வருகின்றன. தன் மீது உயிரை வைத்திருந்த மனைவி ஸ்ரீரஞ்ச‌னி மீதும் நண்பன் எஸ்.எஸ்.ஆரின் மீதும் வீண் பழி சுமத்தியதை நினைத்து வருத்தப்படுகிறார். சாப்பாட்டுக்கு மூன்று மைல் தூரம் போக வேண்டும் என்று ஒருவர் கூற தாயின் பிரேதத்துடன் மூன்று மைல் தூரம் உள்ள சுடலைக்கு நடந்து போக வேண்டுமா என்று கேட்ட ஞாபகம் வந்து எம்.ஆர்.ராதாவை வாட்டியது.
எஸ்.எஸ்.ஆரும் ஸ்ரீரஞ்ச‌னியும் எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண்கின்றனர். எஸ்.எஸ்.ஆரையும், ஸ்ரீரஞ்ச‌னியையும் இணைத்து தப்பாக நினைத்த எம்.ஆர்.ராதா. தன் மனைவியை காப்பாற்றும்படி எஸ்.எஸ்.ஆரின் கையில் ஒப்படைக்கிறார்.


ரத்தக்கண்ணீர் படத்தின் வச‌னங்கள் அனைத்தும் இந்துமத கொள்கையை நக்கலடிப்பவையாகவே உள்ளன. 3000 தடவைமேடைஏறிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் திரைப்படமான போதும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. பாடல்கள் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்த வேவளையில் வெளியான இப்படத்தின் வச‌னங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தன. எம்.ஆர்.ராதா வச‌னங்கள் இன்றும் மனதில் நிழலாடுகின்றன.மாமனாரைப் பார்த்து மிஸ்டர் பில்லை என்பார். நெற்றியில் இருக்கும் விபூதியைசுட்டிக் காட்டி என்ன மான் இது கோடு கோடா இருக்கு என்று எம்.ஆர்.ராதா கேட்க. இது பட்டை விபூதி என்கிறார் மாமன், வாட் பாட்டை என்று திரும்ப கேட்பார். எல்லா க‌ட்சிலையும் பிஸினஸ்ல பூத்துட்டான் பெக்கர்ஸ் என்ற அரசியல் கட்சி அனைத்தும் வியாபார நோக்கத்தில் அமைந்தவை என்ற வச‌னம் இன்றைக்கு சாலப் பொருந்துகிறது.
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது என்ற சி.எஸ்.ஜெயராமனின் பாடலும், எம்.ஆர்.ராதாவின் இடைக்குரலும் காலத்தால் அழியாதவை. நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் ஜொலித்த எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் மிகச் சிற்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று வித்தியாச‌மான பாத்திரங்கள் கிடைத்திருந்தால் அவரது நடிப்பு இன்னமும் ஒருபடி கூடுதலாக புகழ் பெற்றிருக்கும்.


பாடல்களில் தமிழ் சினிமா உலகம் கட்டுண்டிருந்த வேளையில் வச‌னத்தின் மூலம் மக்களின் பேரபிமானத்தை பெற்ற படம் ரத்தக்கண்ணீர். நடிப்பாலும் பேச்சாலும் கவர்ந்தவர் எம்.ஆர்.ராதா. அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைச் சுண்டி இழுத்தார் எம்.என்.ராஜம்.
1954 ஆம் ஆண்டு இப்படத்தைத் தயாரித்தது பெருமாள் முதலியாரின் நஷனல் பிக்ஸர்ஸ். கதை வச‌னம் கே.தங்கராசு. இசை சிதம்பரம் எஸ்.ஜெயராமன். பாடல்கள் அ.மருதகாசி, ஆத்மநாதன். எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், ச‌ந்திரபாபு, துரைசாமி, ஸ்ரீரஞ்ச‌னி, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி, அங்கமுத்து ஆகியோர் நடித்தனர். எம்.எல்.வச‌ந்தகுமாரி பாடிய கதவைச்சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச்சாத்தடி என்ற பாடல் விபசாரியின் மனநிலையை நன்கு விளக்குகிறது. ரி.பி.ரத்தினம் பாடிய ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாது ஆளை ஆளைப் பார்க்கிறார் என்ற பாடல் விபசாரியைத் தேடிச் செல்பவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரமணி


மித்திரன்