Friday, December 31, 2021

இங்கிலாந்தின் 50 ஆவது டக் அவுட்

இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள்  2021 டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது.

இந்த நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் மெர்போர்னில் தொடங்கியது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நான்கு மாற்றங்களுடன் இங்கிலாந்து களம் இறங்கியது. என்றாலும் பலன் அளிக்கவில்லை.

தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 12 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹசீப் ஹமீத் டக்அவுட் ஆனது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் 50-வது டக்அவுட் இதுவாகும்.

வளமான எதிர் காலத்துக்காக வகைவகையான வாழ்த்துகள்


  அனைவருக்கும்  ஆங்கிலப் புது வருட வாழ்த்துகள். இன்று முழுவதும் வாழ்த்துக் கூறியே களைத்துப் போவார்கள்.   இனம்,மதம்,மொழி கடந்து கொண்டாடப்படும் நாள் இது . 2021 ஆம் ஆண்டு போய்விட்டது. 2022 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கடந்து போகையில் புது  வருடத்தில் புது  மனிதராக  இருப்போம். துன்பம்,துயரம் எல்லாம் போய்விடும் என்றே அனைவரும் கருதினர். கொரோனாவின் கோரத்தாண்டவம்  முடிவடையும். இனி எல்லாம் சுகமே என்ற நினைப்பில் இடி விழுந்தது.

கொரோனா தொற்றுகாரணமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கு  இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கையின் வருமானம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி தடைப்பட்டது.   இலங்கையை முன்னேற்றும் உறுதி மொழியுடன் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் கையைப் பிசைகிறது. வட்டி கட்டுவதற்கு கடன் வாங்க வேன்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. இலங்கை அரசங்கத்தின் ஸ்திரத்தத்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். பங்காளியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி  வெளியேறப் போகிறேன் என மிரட்டுகிறது. வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம என அரசாங்கத்தின்  சார்பில் சவால் விடப்படுகிறது.

அரசியலில் தமது இருப்பை வெளிக்காட்டுவதில் தலைவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.  பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைத்தேடி அலைகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. சில பொருட்களை வாங்குவதற்காக  நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

 எரிவாயு கிடைப்பதில்லை,உணவுப்பொருள் தட்டுப்பாடு,டொலர் கட்டுப்பாடு,மரக்கறிகளின் விலை அதிகரிப்பு,எரிப்பொருட்களின் விலை உயர்வு,பஸ் கட்டண அதிகரிப்பு,முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு,திடீர் மின் வெட்டு,நீர் வெட்டு,வாகன இறக்குமதிகளுக்கு தடை, பேக்கரிப் பொருட்கள் விலை உயர்வு , சீனி இலை,பால்மா  இல்லை  என பட்டியல் நாளாந்தம் நீண்டுக்கொண்டே செல்கின்றது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில்தான் 2022 ஆம் ஆண்டு வரப்போகிறது.

 புதிய வருடத்தை வரவேற்கும் மனநிலையில் மக்கள்  இல்லை. இதற்கமையவே,ஆங்காங்கே மக்கள் சில பொருட்களை வாங்குவதற்குபல மணி நேரம் காத்துக்கிடக்கும் வரிசைகளும் நீண்டுச்செல்கின்றது.

அண்மையில், இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதியை ஜனாதிபதி தடை செய்திருந்தார். இதற்கு எதிராக பல பகுதிகளில் விவசாயிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இரசாயன உர பயன்பாட்டிலிருந்து நீங்கி, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுத்த முடிவை நிராகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பின்னர் செய்கை உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அரசாங்கம், செய்கை உரத்திற்கு மானியம் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில்,டொலர் தட்டுப்பாடு காரணமாக உர இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாது இறக்குமதியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையால், சீனி உட்பட்ட பொருட்கள் அடங்கிய 1,300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் போதியளவு உள்ளதாகவும்,உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்றும் அரசாங்க தரப்புகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2020 மார்ச் 11 ஆம் திகதியன்று, உலக சுகாதார நிறுவனம் (WHO) கொவிட்19 உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. இலங்கையில்  வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையினாலும், ஏராளமான வெளிநாட்டினராலும் வைரஸ் பரவலினால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது.  இலங்கையில் முதல் தொற்றாளர் 2020 ஜனவரி 27 ஆம் திகதி இனங்காணப்பட்டதுடன் முதல் இலங்கை நாட்டவர் 2020 மார்ச் 10 ஆம் திகதியன்று  கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்டார்.  

 நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை  இலங்கை விரைவாக அறிமுகப்படுத்தியதுடன் 2020 மார்ச் 16 ஆம் திகதி நாடளாவிய முடக்கத்தை நடைமுறைப்படுத்தியது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதுகாப்பான சூழலில் சிகிச்சை பெற்றனர், சோதனை மற்றும் தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகள் விரைவாக அதிகரித்தன, மேலும் ஆபத்து மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏற்கனவே நிதி தடைகளை எதிர்கொண்டுள்ள வேளையில், இந்த தொற்றுநோய் நாட்டின் மீது மேலதிகமான வளக் கோரிக்கைகளை முன்வைத்தது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிதி, தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் உதவியைத் திரட்டுவதை விரைவாக ஒருங்கிணைப்பதே சவாலாக இருந்தது.

கொரோனா காரணமாக இலங்கையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. விஷேட நடைமுறைகள் போக்குவரத்து வசதி என்பனவற்றால் அத்தியாவசியப் பொருட்கள்  விநியோகிக்கப்பட்டன.  சில பொடுட்களின் விலை அதிகரிக்கப்பட்டதே தவிர தட்டுப்பாடு  இல்லாமல் சகல பொருட்களும் கிடைத்தன.

ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. கண்ணுக்கெட்டிய  தூரத்தில் , துறைமுகத்தில் பொருட்கள்  உள்ளன. அவற்றை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு டொலர் கையிருப்பில் இல்லை. இது மக்களின் தவறு அல்ல. யாரோ தவறு செய்ததற்கான தண்டனையை மக்கள் அனுபவிக்கிறார்கள். பொருளாதாரப் பின்னடைவுதான் இத்தனைக்கும் காரணம். பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் சொல்லும் ஆலோசனையைத்தான் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும் சொல்கிறார்கள்.

வீம்பைக் கைவிட்டு , நிபந்தனைகளை ஆராய்ந்து கடன் வாங்கினால்தான் நாட்டை மீட்கலாம்.  மீட்பர்கள் மனம் வைப்பார்களா?

Thursday, December 30, 2021

அமெரிக்காவுக்குப் பறந்த ஐபிஎல் வீரர்

இந்தியாவில் ஆண்டு தோறும் பல ஆயிரம் இளம் வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து விளையாட வந்தாலும் அவர்களில் வெகு சிலருக்கே தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் டொமஸ்டிக் கிரிகெட் மற்றும் ஐபிஎல் போன்ற தொடர்களில் தான் விளையாடி வருகின்றனர். அப்படி உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் ஒரு சிலருக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு வெளிநாடுகளுக்கு சென்று விளையாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரரான பிபுல் சர்மா இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். 

  38 வயதான இவர் இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கிரிக்கெட்டில் மொத்தம் 59 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3012 ஓட்டங்களை எடுத்து, 126 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு 105 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 84 விக்கெட்டுகளைவீழ்த்தி, 1203 ஓட்டங்களை எடுத்துள்ளார். 

 சிறப்பாக விளையாடிய அவருக்கு  இந்திய ஏ அணியில் இடம் கிடைக்கவில்லை.  இதன் காரணமாக விரக்தி அடைத்த அவர் தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்றுள்ளார். இவருக்கு முன்னதாகவே பல வீரர்கள் இதே போன்று இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காமல் அமெரிக்கா சென்றுள்ளனர். 

அவுஸ்திரேலிய பூர்வக்குடி வீரர் ஸ்காட் போலண்ட்

 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 32வது வயதில் அறிமுகமாகி 2வது இன்னிங்சில் இங்கிலாந்தை 68  ஓட்டங்களுக்குச் சுருட்டிய ஸ்காட் போலண்ட் அவுஸ்திரேலிய ஆதி மண்ணின் மைந்தர்களான பூர்வக்குடியினத்தைச் சேர்ந்தவர். 4 ஓவர்கள் பந்தி வீசி  7  ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

ஜேசன் கில்லஸ்பிக்குப் பிறகு அவுஸ்திரேலியா அபார்ஜினல் என்று அழைக்கப்படும் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த போலண்ட் மண்ணின் மைந்தனாக மெல்போர்னில் டெஸ்ட் அறிமுகம் கண்டு அசத்தியுள்ளார். இவர் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஏற்கெனவே அவு016-ல் அறிமுகமானார்.

அதன் பிறகு ரி20 அறிமுகப் போட்டியிலும் ஆடினார். ஆனால் டெஸ்ட்டில் இப்போதுதான் முதல் முறையக அரிமுகமானார்.

பிரசித்தி பெற்ற பார்க்டேல் கிரிக்கெட் கிளப்புக்காக 6 வயதிலேயே யு௧2 கிரிக்கெட் போட்டியில் ஆடியவர். அப்படியே வளர்ந்து விக்டோரியா பிரீமியர் கிரிக்கெட் கிளப்பில் 16 வயதில் இணைந்தார்.

  பாப் ஹாலண்ட் என்ற ஒரு லெக் ஸ்பின்னர் சிட்னி ஸ்பெஷலிஸ்டோ அதே போல் போலண்ட் மெல்போர்ன் ஸ்பெஷலிஸ்ட். மெல்போர்ன் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு ஒரு சுடுகாடுதான். ஆனால் போலண்டுக்கு மட்டும் இங்கு பந்துகள் பேசும். சமீபத்தில் கூட நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான கவுண்ட்டி ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் 3/33, 5/56 என்று விக்கெட்டுகளைக் குவித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 272 விக்கெட்டுகளை இதற்கு முன் எடுத்துள்ளார். பெரும்பாலான விக்கெட்டுகள் மெல்போர்னில்தான்.

இவரை கடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அடிலெய்டில் பாட் கமின்ஸ் இல்லாததால் அணிக்கு அழைத்தனர். விக்டோரியா ரசிகர்களால் இவர் பெரிதும் பாராட்டப்பட்டார், காரணம், ஷேன் வார்ன், மறைந்த டீன் ஜோன்ஸ், மற்றும் மெர்வ் ஹியூஸ் ஆகியோர் இந்த மண்ணிலிருந்துதான் அவுஸ்திரேலியாவுக்கு ஆடியுள்ளனர்.

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு இவரது வருகையின் மூலம் மேலும் பலம்பெற்றுள்ளது, ஏற்கெனவே மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ், இப்போது ஜை ரிச்சர்ட்சன், கேமரூன் கிரீன், மைக்கேல் நேசர் என்று சேர்ந்து கொண்டே போகிறது.

போலண்ட் டெஸ்ட் அறிமுகமானதை சக பூர்வக்குடி வீரர் ஜேசன் கில்லஸ்பி,  பூர்வக்குடி ஆஸ்திரேலியாவுக்கு இது பெருமைமிக்க நாள்என்று கொண்டாடுகிறார். போலண்டை இப்போது அவுஸ்திரேலியாவே கொண்டாடி வருகிறது.

Wednesday, December 29, 2021

கோவாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிலை


கோவா தலைநகர் பனாஜியில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிறிக்கெற்றுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.  அதேவேளை உதைபந்தாட்டத்தி விரும்பும் ரசிகர்களும் வ் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளனர். பிறேஸில்,ஆட்ஜென்ரீனா,ஜேர்மனி,இத்தாலி ஆகிய நாடுகளையும்,, பீலே, மரடோனா, மெஸ்ஸி,ரொனால்டோ,நெய்மர்  போன்ற வீரர்களையும்  நேசிக்கும் ரசிகர்களும்  இந்தியாவில் உள்ளனர். உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி  ஆரம்பமாகையில் தமக்கு விருப்பமான நாட்டுக்கொடியை வீட்டு வாசலில் ஏற்றி வைபார்கள்.

உதை பந்தாட்ட உலகின் உட்சப்பட்ச வீரனான கிறிஸ்ரியானோ ரொனல்டோவுக்கு கோவாவில் சிலை  ஒன்று நிறுவபட்டுளது.

இது குறித்து கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை அமைச்சர்  மைக்கேல் லோபோ கூறுகையில்,

இளைஞர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்திலும் நாட்டிலும் உதைபந்தாட்டத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

எங்கள் குழந்தைகள் இந்த புகழ்பெற்ற   வீரரை போல் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அவர் கால்பந்து விளையாட்டில் ஒரு  உலக ஜாம்பவான்என அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

போர்ச்சுகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக்   தொடரில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அவர் யூ எப் சாம்பியன்ஸ் லீக் தொடரில் 140 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 முறைபேலண்-டி-ஓர் விருதைவென்றுள்ளார். இந்த விருதை அதிக முறை பெற்றுள்ள ஐரோப்பாவை சேர்ந்த கால்பந்து வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

 சர்வதேச கால்பந்து போட்டிகளில் 115 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் 36 வயதான ரொனால்டோ, சிலை வைக்கும் அளவுக்கு முற்றிலும் தகுதியான நபர் ஆவார்.