Showing posts with label தமிழகஅரசியல். Show all posts
Showing posts with label தமிழகஅரசியல். Show all posts

Thursday, November 23, 2017

அரசியல் ஆயுதமான ஒப்பரேஷன் கிளீன் மணி

    
 சசிகலாவின் குடும்பம்
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் குடும்பத்தினர்,  உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும்  அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பெரும் எடுப்பிலான சோதனையை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 190 இடங்களில்  2000  அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரியவருகிறது. இது போன்ற மிகப்பெரியதொரு சோதனை இந்தியாவிலேயே இதுவரை நடைபெறவில்லை. திருமணத்துக்குச் செல்வதற்காக 200 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.  
ஜெயா தொலைக்காட்சி அலுவலகம்,மிடாஸ் மதுபான ஆலை,  கொடநாடு,சிறுதாவூர் பங்களா  உட்பட பல அலுவலகங்களில் தீவிர சோதனைநடைபெற்றது.மகாதேவன்,விவேக்,கிருஷ்ணப்பிரியா,வெங்கடேசன்,திவாகரன்,விவேகானந்தன்,டாக்டர்வெங்கடேசன்,டாக்டர்சிவகுமார்,கலியப்பெருமாள் பாஸ்கரன்,பரணி கார்த்திக் , புகழேந்தி உட்பட பலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டுத் தேடினர்.
மன்னார்குடியைச் சேர்ந்த சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த சசிகலா,  அரசியல்வாதியான நடராஜனைத் திருமணம் செய்தார். கணவருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்த சசிகலா, வீடியோ  கடை ஒன்றை நடத்தினார். நடராஜனின் அரசியல் தொடர்புகளினால் அரசியல் கட்சிகளின்  கூட்டங்களை வீடியோ எடுக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.  ஜெயலலிதாவுடனான நெருக்கம் உடன் பிறவா சகோதரிவரை வளர்ந்தது. தனி ஆளான ஜெயலலிதாவின் பக்கத்துணையாக சசிகலா இருந்தார்.  சசிகலா என்ற ஒற்றைப் பெண்மணியின் பின்னால் அவருடைய மன்னர் குடி குடும்பம் பெரு வளர்ச்சி பெற்றது. 
 
 
சினிமாவிலும் அரசியலிலும் ஜெயலலிதா சம்பாதித்தற்கு மிக அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியானது மன்னார்குடி  குடும்பம் ஜெயலலிதாவின் சொத்துக்களில் அதிகமானவை பினாமியின் பெயரிலேயே உள்ளன. வருமானம் தரும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என்பனவற்றை மிரட்டிப்பறிப்பதில் சசிகலாவின் உறவினர்கள் தேர்ச்சி பெற்றனர்.பரம்பரை பரம்பரையாக தொழில் செய்பவர்களின் சொத்தை விட அதிகமான சொத்துக்களை மன்னார்குடி இளவல்கள் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் களம் தாழ்த்தித் தெரிந்துகொண்டதால்  சசிகலாவுடன் மன்னார்குடி குடும்பத்தை விரட்டினார் ஜெயலலிதா. பின்னர் சசிகலாவை மட்டும் மன்னித்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.  அந்த மன்னிப்புத்தான் அவருக்கு எதிரானதாக மாறியது.
வருமானவரி அதிகாரிகளின் சோதனையின் போது 1௦௦௦ கோடிக்கும் அதிகமான முறைகேடுகள், போலி நிறுவனங்கள், போலியான் கணக்கு வழக்குகள் என்பன தெரியவந்துள்ளது. வள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் யாராவது  செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. வைரங்கள், அனுமதிப் பத்திரம் இல்லாத துப்பாக்கிகள் , நகைகள்,   முக்கியமான ஆவணங்கள் அன்பான கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதனையும் உறுதி செய்யவில்லை. ஜெயலலிதாவின் வீட்டில் நள்ளிரவு  சோதனை நடத்தப்பட்டது. சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என செய்திகள்வெளியாகி உள்ளன. முக்கியமான பல ஆவணங்கள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு விட்டதாகவும், அவற்றைத் தேடி வருமானவரித்துறை அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச்  செல்லப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 விவேக்

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதனை எதிர்த்து சிலர் கோஷம் போட்டார்கள். தினகரன்,திவாகரன்,விவேக் ஆகியோர் மிரட்டலான பாணியில் பேட்டியளித்தார்கள்.  இந்தச்சோதனை அரசியல்  பழிவாங்கல் என தினகரனும் திவகரனும் அறிவித்தனர். அதிகாரிகள் தமது கடமையைச்செய்தார்கள் என்று விவேக் தெரிவித்தார்.  சசிகலாவை முழுமையாகப்  பாவித்துவித்த ஜெயலலிதா, அவரைக்கைவிட்டு விட்டார் என திவாகரன் குற்றம் சாட்டுகிறார். அதனை தினகரன் மறுக்கிறார். எனது வீட்டில் சோதனை  நடைபெறவில்லை. எனது நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது எனக் கூறி தினகரன் தப்பிக்கிறார். ஜெயலலிதாவின் மருத்துவ சிடியை சில இடங்களில் அதிகாரிகள் விசாரித்ததாக திவாகரன் குற்றம் சாட்டுகிறார்.  அதனை புகழேந்தி மறுக்கிறார். மன்னார்குடிக் குடும்பத்தில் உள்ள சில பிரச்சினைகள் சந்திக்கு வந்துள்ளன.
தமிழக  அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துவதற்கு மத்தியில் ஆட்சிசெய்யும் பாரதீய ஜனதா விரும்புகிறது. தினகரன் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். அவரை  அடக்குவதற்காகவே இதன் ஒப்பரேஷன் என சிலர் வியாக்கியானம் செய்கிறார்கள். இதே போன்ற அதிரடிச்சோதனைகள் முன்னரும் தமிழகத்தில் நடைபெற்றன. அந்த விசாரணைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 கிருஷ்ணகுமாரி
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது 570 கோடி ரூபாவுடன் கைப்பற்றப்பட்ட கொன்டனர்களின் விசாரணை, 89 கோடி ரூபா வழங்கிய ஆவணம்,  நந்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, முன்னாள் தலைமைச்செயலாளர் ரம் மோகன் ராம்,மணல் மாபியா சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,குட்கா குடோன் ஆகிய இடங்களில் சோதனை செய்து பணம்,நகை, ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. அந்த விசாரணைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் மூடு மந்திரமாக உள்ளன. தினகரன் தரப்பு அடங்கிவிட்டால் இந்த விசாரணைகள் எல்லாம் மூடி மறைக்கப்படும்.


  

Wednesday, April 1, 2015

அணைக்கமுடியாத அணைக்கட்டு பிரச்சினை

 தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான அணைக்கட்டு பிரச்சினை மீணடும் பூதாகரமாக புறப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது எனுமிடத்தில் அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. அந்தத்திட்டத்தை கர்நடக அரசு கைவிட  மத்திய அரசு  வலியுறுத்த வேண்டும் என தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரியின் குறுக்கே இரண்டு இடங்களின் குறுக்கே அணைகட்டுவதற்கு கர்நடக் அரசு திட்டமிட்டுள்ளது.முதலில் மேகதாது என்னுமிடத்தில் அணைகட்டுவதற்கு நடவடிக்கை எடுகப்போவதாக அறிவித்துள்ளது.காவிடியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்டுவதை தடிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.அந்தத் தீர்மானத்தை பிரதமரிடம் கையளீப்பதற்கு தமிழக எம்பிக்கள் அனைவரும் செல்ல வேண்டும் என ;பன்னீர்ச்ச்செல்வம் வேன்டுகோள் விடுத்தார்.

தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க சகலம் கட்சி எம்பிக்களும் இணைந்து பிரதமரை சந்தித்து மகஜரை கையளித்தனர்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,சுதர்சன நாச்சியப்பன்,கண்ணதாசன் ஆகியோர் இதிக் கலந்து கொள்ளவில்லை. தமிழக முதல்வரின் கோரிக்கையை திராவிட முன்னேற்றக்கழக எம்பிக்கள் அனைவரிம் ஏற்ருக்கொண்டு ஆச்சரியப்படுத்தி உள்ளனர். ஜெயலலிதா முதல்வர் ஸ்தானத்தில் இருந்திருந்தால் இப்படியான கோரிக்கையே விடுக்கப்பட்டிருக்காது.

தமிழக மக்களுக்காகாக  அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணந்து குரல் கொடுத்துள்ளன. இதே நிலை  நீடித்தால் தமிழகம் முன்னேறிவிடும்.ஆனால் அடுத்த கட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பின்வாங்கிவிட்டது.கர்நாடகத்துக்கு எதிரக தமிழகத்தில் பந்த் நடைபெற்றது சகல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மெளனமாக இருந்தது தமிழக பாரதீய ஜனதாக் கட்சியும் ஒப்புதல்ளிக்கவில்லை.

கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே காவிரியின் குறுக்கே அணை கட்ட உத்தேசித்துள்ளதாக கர்நாடகா கூறுகிறது. கர்நாடக மக்க்ளின் குடிநீர் பிரச்சினையா தமிழக மக்களின் விவசாயப் பிரச்சினையா முக்கியம் என்பதை தீஎமானிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசின் தலையிலே சுமத்தப்பட்டுள்ளது.
காவிரியின்குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கோரவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்கூறி உள்ளார். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் காவிடிப்பிரச்சினை தொடர்கதையாகவே இருக்கும்

சூரன்..ரவிவர்மா



Monday, January 26, 2015

பலப்பரீட்சைக்குத்தயாராகும் தமிழகம்

தமிழக அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் களமாக ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்த்தல்  பரிணமித்துள்ளது. தமிழ‌க முதல்வரின் தொகுதி என்ற சிறப்பைப் பெற்ற  ஸ்ரீ ரங்கம் தொகுதி நீதிமன்றத் தீர்ப்பினால் அவ‌மான‌ப்ப‌ட்ட‌து . வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவித்த வழகில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதனால்  ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம்  முந்திக் கொண்டு தனது வேட்பாளரை அறிவித்தது.  க‌ட‌ந்த‌ ச‌ட்ட‌ ச‌பைத் தேர்த‌லில் ஜெய‌ல‌லிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த என்.ஆனந்தை மீண்டும் களத்தில் நிறுத்தி உள்ளது திராவிட முன்னேற்ற கழகம். ஜெயலலிதா  105,328   வாக்குகள் பெற்றார் .ஆனந்த்  63,480  வாக்குகள் பெற்றார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தினுள் குழப்பங்கள் பல இருந்தாலும் தேர்தல் என்றால் ஒற்றுமையாகி விடுவார்கள் என்ற எண்ணத்தில் கருணாநிதி  தன‌து கட்சி வேட்பாளரை முந்திக்கொண்டு அறிவித்துள்ளார்.  அழகிரி ஒருபக்கத்தில் இருக்கிறார். கனிமொழி இரன்டு பக்க‌மும் தலையைக்காட்டியபடி உள்ளார். புதியவர்களின் நியமனங்கள் புதுத்தெம்பைக் கொடுக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கிறார். தமிழக சட்டசபைத்தேர்தலிலும் இந்திய நாடாளுமன்றத்தேர்தலிலும் அடைந்த தோல்வியை ஈடுகட்ட வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார்.

அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துடன் நேரடிப்போட்டியில் மோதத்தயாராகும் கருணாநிதி தோழமைக்கட்சிகளின் ஆதரவை எதிர் பார்க்கிறார். வெளியே நிற்கும் திருமாவளவனுக்கு தூது விட்டுள்ளார். கருணாநிதியின் வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டும் என  ராமதாஸ் கருத்துக் கூறி உள்ளார்.  திருமாவ‌ள‌வ‌னும் ராம‌தாஸும் ஆத‌ர‌வுத‌ருவார்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை க‌ருணாநிதியிட‌ம் உள்ள‌து.
காங்கிர‌ஸ் அர‌சை வீட்டுக்கு அனுப்ப‌வேண்டும் என துடியாக‌த்துடித்த‌  வைகோ பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சியுட‌ன் கூட்ட‌ணிசேர்ந்தார். பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சி ஆட்சிபீட‌ம் ஏறிய‌தும் வைகோவின் கோரிக்கைக‌ள் புற‌க்கணிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ரோச‌க்கார‌ வைகோ கூட்ட‌ணியில் இருந்து வெளியேறினார். ம‌க‌ன் அன்பும‌ணிக்கு அமைச்சுப்ப‌த‌வி கிடைக்கும் என‌ எதிர்பார்த்து ஏமாந்த‌ ராம‌தாஸ் கூட்ட‌ணியிலிருந்து மூட்டைக‌ட்டினார்.
பாரதீய ஜனதாக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அக்கட்சியின் சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மாக்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இறங்கி உள்ளது.
பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சியின் ஆட்சிக்கு  ஆத‌ர‌வு தெரிவித்த‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ விஜ‌ய‌காந்த் வெறுப்பில் இருக்கிறார்.த‌மிழ‌க‌த்துக்கு விஜ‌ய‌ம் செய்த‌ அமித் ஷா விஜ‌காந்தை ஏறெடுத்தும் பார்க்க‌வில்லை.

த‌‌மிழ‌க‌த்தில் மூன்றாவ‌து ச‌க்தியாக‌‌ தான் இருப்ப‌தை வெளிப்ப‌டுத்த‌வேன்டிய‌  தேவை இருப்ப‌த‌னால் இடைத்தேர்த‌லில் விஜ‌ய‌காந்த்‌ த‌ன‌து வேட்பாள‌ரை க‌ள‌ம் இற‌க்கும் சாத்திய‌க்கூறு உள்ள‌து.தோல்வி உறுதி என்றாலும் தேர்த‌லைச் ச‌ந்திப்ப‌தில் விஜ‌காந்துக்கு ஆர்வ‌ம் அதிக‌ம்.


காங்கிர‌ஸ் க‌ட்சி அமைதியாக‌ உள்ள‌து. ஜி.கே.வாச‌ன் வெளியேறிய‌த‌னால்  காங்கிர‌ஸின்  ப‌ல‌ம் ச‌ற்று குறைந்துள்ள‌து.த‌லைமை ஆணையிட்டால் தேர்த‌லில்போட்டியிட‌ த‌யார் என குஷ்பு அறிவித்துள்ளார். திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழக‌த்தில் ப‌ர‌ப‌ர‌ப்பு அரசிய‌ல் ந‌ட‌த்திய‌ குஷ்பு  அண்மையில் காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணந்தார்.குஷ்புவுக்கு கோயில்க‌ட்டிய‌ திருச்சிதான் அவ‌ருக்கு செருப்பு மாலைஅணிந்த‌து.காங்கிர‌ஸ் க‌ட்சி இடைத்தேர்த‌லில்போட்டியிடாது ஒதுங்கி திராவிட‌ முன்னேற்றக் க‌ழ‌க‌த்துக்கு வ‌ழிவிடும் சூழ்நிலை உள்ள‌து.


 இடைத்தேர்த‌லில் ஆளும்க‌ட்சி வெற்றி பெறுவ‌து வ‌ழ‌மையான‌து. ஆனால் திருச்சி இடைத்தேர்த‌ல் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்துக்கு நெருப்பாற்றைக்க‌டக்கும் ப‌த‌ற்ற‌ நிலையைத்தோற்றுவித்துள்ள‌து.


அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது திருச்சிமேற்கு,சங்கரன்கோயில்,புதுக்கோட்டை,ஏற்காடு,பண்டிருட்டி,ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. அனைத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்றது. அப்போது அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெறவேண்டும் என ஜெயலலிதா அறைகூவல் விடுத்தார். அவரின் அறைகூவலை செவிமடுத்த தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன்  வெற்றியைத்தேடிக்கொடுத்தனர்.

முதல்வர் தொகுதி என அடையாளமிடப்பட்ட திருச்சியில் எஸ்.வளர்மதியை வேட்பாளராக அறிவித்த ஜெயலலிதா அவ்ருடன் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவித்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா யாரையும் சந்திக்காது எங்கேயும் வெளியில் செல்லாது தனிமையில் இருந்தார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என  அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களும் தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால் பிர‌மாண்ட‌மான‌ முறை‌யில் வெற்றிபெற‌க்கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ உள்ள‌ன‌ர். ஜெய‌ல‌லிதா பெற்ற‌ வாக்குக‌ளைவிட‌ அதிக‌ வாக்குக‌ளைப் பெற்றால் அவ‌ரின் புகழுக்கு க‌ள‌ங்க‌ம் எற்ப‌டும் என்ப‌து அவ‌ர்க‌ளின் எண்ண‌ம். திருச்சியில் பெற‌ப்போகும் வெற்றி குறைந்த‌ மேல‌திக‌ வாக்குக‌ளால் பெற‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் அவ‌ர்க‌ள் விரும்புகின்ற‌ன‌ர். ஜெயலலிதா பெற்ற‌ வாக்குக‌ளைவிட‌ அதிக‌ப்ப‌டியான‌ வாக்குக‌ளைப்பெற்றால் அவ‌ரின் எதிர்கால‌ அர‌சிய‌லுக்கு பாதிப்பு வ‌ரும் என்ப‌தையும் அவ‌ர்க‌ள் க‌ண‌க்கிட்டுள்ள‌ன‌ர்.

நீதிம‌ன்ற‌த்தால் குற்ற‌வாளி என‌ தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ஜெய‌ல‌லிதாவை ம‌த்திய‌ நிதி அமைச்ச‌ர் அருண் ஜேட்லி ச‌ந்தித்த‌து அர‌சிய‌லில் அதிர்ச்சியைத்தோற்றுவித்துள்ள‌து.இத‌ற்குமுன்ன‌ரும்  ச‌ட்ட‌ அமைச்ச‌ராக‌ இருநத‌ ர‌விச‌ங்க‌ர் பிர‌சாத் ச‌ந்தித்த‌தும் அப்போது விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.காங்கிர‌ஸ் க‌ட்சி ஆட்சியில் இருந்த‌போது நிதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ ய‌ஷ்வ‌ந்த் சின்ஹாவை ஜெய‌ல‌லிதா ச‌ந்தித்த‌போது வ‌ருமான‌ வ‌ரி வ‌ழ‌க்குக்கு ப‌ரிந்துரைக் க‌டித‌ம் கேட்ட‌தாக‌ அவ‌ர் த‌ன‌து சுய‌ ச‌ரிதையிலெழுதி உள்ளார்.

வ‌ருமான‌ வ‌ரிக‌ட்டாத‌ வ‌ழ‌க்கு ச‌ம‌ர‌ச‌ம் செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌து. பெங்க‌ளூரில் ந‌ட‌க்கும் சொத்து குவிப்பு வ‌ழ‌க்கு திசைதிரும்புமா என்ற‌ எதிர்பார்ப்பு எழுந்துள்ள‌து. ப்ர்ர‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சி பெரும்பான்மையுட‌ன் ஆட்சி செய்தாலும்  முக்கிய‌மான‌ ம‌சோதாக்க‌ளை நிற‌வேற்றுவ‌த‌ற்குரிய‌ ப‌ல‌ம் இல்லை. பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சிக்கு நாடாளும‌ன்ற‌த்தில் பெரும்பான்மை இருந்தாலும் மேல் ச‌பையில் பெரும்பான்மை இல்லை.இர‌ண்டு ச‌பைக‌ளிலும் எதிர்ப்பு இன்றி ம‌சோதா நிறைவேற்ற‌ப்ப‌ட்டால்தான் அமுலாக்க‌முடியும்.  அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு நாடாளு ம‌ன்ற‌த்தில் 39 உறுப்பின‌ர்க‌ளும் மேல்ச‌பையில் 11 உறுப்பின‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர். ஆகையினால் பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சிக்கு  ஜெய‌ல‌லிதாவின் த‌ய‌வு தேவைப்ப‌டுகிற‌து.

த‌மிழ‌க‌த்தின் அடுத்த‌ முத‌ல்வ‌ர் க‌ன‌வில் இருக்கும் விஜ‌ய‌காந்தும் அன்பும‌ ணியும் அமைதியாக‌ இருக்கின்ற‌ன‌ர். த‌மிழ‌க‌ ஆட்சியைப்பிடிக்க‌ க‌ங்க‌ண‌ம் கட்டி இருக்கும் பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சி அமைதியாக‌ உள்ள‌து.திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌மும் அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌மும் திருச்சியில் த‌ம‌து  ப‌ல‌த்தைக்காட்ட‌ த‌யாராகிவிட்ட‌ன‌.

Saturday, November 8, 2014

தனி மரமான வாசன்

 இந்திய  நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் வெளியேறப்போகிறார்  என்ற  செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.  தே ர்தலின்போது ஏற்பட்ட எதிர்பார்ப்பை வாசன் பொய்யாக்கினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மேலிடம் அவர் மீது நம்பிக்கை இழந்தது. அவர் விரும்பிய சிலர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கவில்லை. இதை எல்லாம் மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் உள்ளன. வாசன் தலைமயிலான கோஷ்டி மிகப்பலமானது  1996 ஆம் ஆண்டு வாசனின் தகப்பன் ஜி.கே .மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணைந்து போட்டியிட்ட அவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது. ஊழல் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்வதை எதிர்த்து முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் க ழகத்துடன் இணைந்து படு தோல்வியடைந்தார்.
புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இப்போது இல்லை. ஆனாலும் துணிந்து  கட்சியை  ஆரம்பித்து விட்டார் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் உள்ளே கனன்று கொண்டிருந்த அனல் வெளிப்பட்டுவிட்டது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமைப் பொறுப்பில்  இருந்து ஞானதேசிகன் இராஜினாமா செய்தபின்னர்  வாசன் புதிய கட்சியைப்பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்தது. இப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை உள்ளது . அந்த அலையால்  வாசனுக்கு எந்தவிதமான விதமான இலாபமும் இல்லை. எழமுடியாத  அதல பாதாளத்தில் காங்கிரஸ் கட்சி விழுந்துள்ளது. தமிழகத்தில் இப்போது தேர்தல் நடைபெறும் சூழல் இல்லை. ஆகையினால் வாசனின் புதிய கட்சியுடன் இணைவதற்கு பெரிய கட்சிகள் இப்போதைக்கு தயாராக இல்லை. தேர்தல் நெருங்கும் போது பெரிய கட்சிகள் தன்னைத்தேடி வரும் என வாசன் நம்புகிறார்.


முப்பனார் புதிய கட்சியை ஆரம்பித்தபோது ப.சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன்,ஆதித்தன், அருணாசலம், தனுஷ்கோடி ஆனந்தன் , எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் போன்ற தலைவர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால் வாசனுக்கு ஆதரவாக ஞானதேசிகனைத்தவிர வேறு யாரும் இல்லை. ஞான‌தேசிகனுக்கு மக்கள் ஆதரவு இல்லை.



ஞானதேசிகன் இராஜினாமாச்செய்த உடனே  இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். ராகுல், சோனியா ஆகியோருக்கு விசுவாசமானவர் இளங்கோவன். மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்துபோய் புதிய கட்சியை ஆரம்பித்தபோதும் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். மூப்பனாரின் மகன் இப்போது காங்கிரஸில் இருந்து பிரிந்தப்போதும் தலைமைப் பதவி இளங்கோவனைத் தேடிவந்துள்ளது. பிரிந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற  கழகம் ஆகியவற்றுடன்  கூட்டணி சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் இளங்கோவன். காங்கிரஸை தூக்கி நிறுத்த வேண்டிய தலையானபணி இளங்கோவனுக்கு உள்ளது.   நேருகுடும்பத்துக்கு  வெளியே உள்ள ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என  சிதம்பரம் கூறி உள்ளார். இதனை ராகுலும்,சோனியாவும் ரசிக்கவில்லை.  ஸ்பெக்ரம் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் இராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். இதுவும் சிதம்பரத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. ஆகையினால் அடுத்தகுறி சிதம்பரமாக இருக்கலாம். அப்படி ஒருநிலை ஏற்பட்டால் அவர் வாசனுடன் சேர்ந்துவிடுவார். அது வாசனுக்கு பெரும் பலமாக அமைந்துவிடும்.
தமிழகத்தில்  ஏதாவது மாற்றங்கள் செய்யும்போது தமிழகத் தலைவர்களுடன் ஆலோசனை செய்வது வழமை . இளங்கோவனைத் தலைவராக்கியபோது ஒப்புக்குக்கூட யாரையும் கலந்தாலோசிக்கவில்லை.  இளங்கோவனைத்  தவிர மற்றவர்களை மத்திய காங்கிரஸ் தலைவர்கள் நம்பவில்லை. இதனால் இளங்கோவன் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்க உள்ளார். இதனால் தமிழக காங்கிரஸில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உண்டாகும். இது வாசனுக்கு சாதகமாக அமையும்.