Showing posts with label தேர்தல்21. Show all posts
Showing posts with label தேர்தல்21. Show all posts

Tuesday, May 4, 2021

தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியின் ஏற்றமும் இறக்கமும்

  இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்த  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும்  தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்  மீண்டும் தமது  கட்சியின் அங்கீகாரத்தைப்  பெற்றுள்ளன. விஜயகாந்தின் தேசிய  முற்போக்கு  திராவிடக்  கட்சி  படுதோல்வியடைந்ததால் அங்கீகாரத்தை  இழந்துள்ளது. ஒருதொகுதியிலும்  வெற்றி பெறாவிட்டாலும் 6.85 சதவீத  வாக்கு  பெற்ற  நாம்  தமிழர்  கட்சி  அங்கீகாரம்  பெற்ற கட்சியாக பரிணமிக்கிறது.

 தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. கடந்த மே மாதம் 2 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கூட்டனி   அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது . மு. ஸ்டாலின் மே 7ம் திகதி  முதல்வராகப் பதவியேற்கிறார்.

தமிழகதேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்ற விபரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

வெற்றி விவரம் திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி திமுக - 125 இடங்களில் வெற்றி காங்கிரஸ் - 18 விசிக - 4 மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4 சிபிஎம் - 2 சிபிஐ - 2 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி1, மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றீந்திய  யூனியன்  முஸ்லிம்  லீக்,மக்கள்  விடுதலைக்  கட்சி,  ஆதித்  தமிழர்  பேரவை  ஆகியன  போட்டியிட்ட  தொகுதிகளில்  தோல்வியடைந்தன.

அதிமுக கூட்டணி - 75 இடங்களில் வெற்றி அதிமுக - 65 பாமக - 5 பாஜக ‍ 4 , புரட்சி  பாரதம்  1 தொகுதியில்  வெற்றி பெற்றது. வாசனின்   தமிழ்  மாநில  காங்கிரஸ்  , பெருந்தலைவர்  மக்கள்  கட்சி,  தமிழ்  மக்கள்  முன்னேற்றக்  கழகம், மூவேந்தர்   முன்னேற்றக்  கழகம்,  மூவேந்தர்  முன்னேற்ற  முன்னணி, பசும்  பொன்  தேசியக்  கழகம் ஆகிய  கட்சிகள்  போட்டியிட்ட  தொகுதிகளில்   வெற்றி  பெறவில்லை.

 கமலின் மக்கள் நீதி  மய்யம், சீமானின்  நாம் தமிழர்தினகரனின்  அம்மா  மக்கள்  முன்னேற்றக்  கழகம் ஆகியன ஒரு தொகுதியில்  கூட  வெற்றி  பெறவில்லை.   கமலின்  கட்சியும்தினகரனின்  கட்சியும்  வெற்றி  பெறவில்லை  ஆயினும்   பலதொகுதிகளில் பிரதான  வேட்பாளர்களுக்கு  போட்டியாக  இருந்தன. கொங்கு  மண்டலத்தில் கமலின்  கட்சி  கணிசமான  வாக்குகளைப்  பெற்றுள்ளது

அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகத்தை விட, 4.4 சதவீதம் வாக்குகளை அதிகமாகதிராவிட  முன்னேற்றக்  கழகம்  பெற்றுளது. இந்திய  நாடாலுமன்றத்  தேர்தலைல்  பெற்ற  வாகுகளை விட  அதிகமான  வாக்குகளை  இரண்டு  பிரதான  கட்சிகளும்  பெற்றுள்ளன. இதனால் இரண்டு  கட்சிகளின்  வாக்கு  சத  வீதமும்  அதிகரித்துள்ளன. 234 தொகுதிகளிலும்  தனியாகப்  போட்டியிட்ட  சீமானின்  நாம்  தமிழர்  கட்சி  6.85 சதவீத  வாக்குகளைப்  பெற்று மூன்றாவது  கட்சியாக உருவெடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.., 37.7 சதவீதம்; .தி.மு.., 33.3; காங்கிரஸ், 4.27; பா..., 3.80; பா.., 2.62; இந்திய கம்யூ., 1.09; மார்க்சிஸ்ட் கம்யூ., 0.85; நாம் தமிழர் கட்சி, 6.85; மக்கள் நீதி மய்யம், 2.45; விடுதலை சிறுத்தைகள் கட்சி, 1.06 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன..தி.மு.., 2016 சட்டசபை தேர்தலில், 40.88 சதவீத வாக்குகளை பெற்றது.

 2019 நாடாளுமன்றத்   தேர்தலில், 19.19 சதவீத  வாக்குகளை மட்டும் பெற்றது. தற்போதைய, சட்டசபை தேர்தலில், அதன் வாக்கு சதவீதம் அதிகரித்து, 33.3 சதவீதமாகி உள்ளது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.., 31.7 சதவீதம் வாக்குகளை பெற்றது.  2019 நாடாளுமன்றத் தேர்தலில், 33.5 சதவீதமாக அதிகரித்தது. இந்த தேர்தலில், 37.7 சதவீதம் வாக்குகளை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.

234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, 6.85 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இக்கட்சி, 2016 சட்டசபை தேர்தலில், 1.06 சதவீதம்; 2019  நாடாலுமன்றத் தேர்தலில், 3.85 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில், அதன் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற, சட்டசபை தேர்தலில், இரண்டு எம்.எல்..,க்கள் அல்லது 6 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும். நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.

  திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணியில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஐந்து இடங்களில் வெற்றி பெற்ற பாட்டாலி  மக்கள்  கட்சியும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக மாறியுள்ளன...மு.., கூட்டணியில் இடம் பெற்று,


போட்டியிட்ட  அனைத்து  தொகுதிகளிலும்  படுதோல்வியை சந்தித்த தேசிய  முற்போக்கு  திராவிட  கழகம்  அங்கீகாரத்தை இழந்துள்ளது. அக்கட்சியின், வாக்கு  சதவீதம் மிக மோசமாக சரிந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வாகு  சதவீதம் அதிகரித்துஉள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அக்கட்சி சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்  தேர்தலில் வாக்களித்தவர்களைவிட  இந்த சட்டசபை தேர்தலில், 23.87 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர். அண்ணா  திராவிட  முன்னேற்றக்க  கழகமும், திராவிட  முன்னேற்றக்  கழகமும் நாடாளுமன்றத்  தேர்தலில், அதிக இடங்களை கூட்டணிக்கு கொடுத்ததால், அக்கட்சிகளுக்கான ஓட்டுவாக்கு  சதவீதம் சரிந்தது.

சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காகவே, சிறிய கட்சிகளையும் தங்கள் சின்னங்களில் போட்டியிட வைத்து, இரு கட்சிகளும், தலா, 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டன.இதன் காரணமாக, இந்த கட்சிகளுக்குமான வாக்கு  சதவீதம் அதிகரித்துள்ளது.

Monday, May 3, 2021

மே 7 ஆம் திகதி முதல்வராக பதவி ஏற்கிறார் ஸ்டாலின்


 தமிழக சட்ட சபை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபெற்ற திராவிட  முன்னேற்றக் கழகக் கட்சியின்  தலைவர் ஸ்டாலின் எதிர் வரும் 7 ஆம் திகஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளார்.. திராவிட முன்னேற்றக் கூட்டணி 159  இடங்கலில் வெற்றி  பெற்றது. திராவிட  முன்னேற்றக் கழகம்  தனித்து 125  இடங்களில்  வெற்றி   உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட  வேட்பாளர்களில்  8 பேர்  வெற்றி பெற்றதால் திராவிட  முன்னேற்றக் கழகத்தில் பலம் 133 ஆக அதிகரித்துள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  கூட்டணியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும், இடதுசாரி கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன தலா 4 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன..அறுதிப்பெரும்பான்மை பெற்றதால் திராவிட  முன்னேற்றக்  கழகத் தலைவர்  ஸ்டாலின் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

  தேர்தல் வெற்றிக்குப்பின் நேரு உள் அரங்கில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடத்த உத்தேசித்திருந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

திராவிட  முன்னேற்றக் கழகத்தின்  மூன்றாவது முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்யப்படும் முதல்வராகிறார். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா  குற்றவாளியாக தீர்ப்பு வெளியானதால் . பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின்  மறைவுக்குப்   பின்னர்  சசிகலாவை  முதல்வராக்க  முயற்சி  செய்யப்பட்டது.  ஜெயலலிதாவுடன் சசிகலாவும்  குர்ரவாலி  என  தீர்ப்பு  வெளியானதால்  தனக்கு  விசுவாசமான  எடப்பாடை  பழனிச்சாமியை  முதலமைச்சராக  அறிவித்தார்   சசிகலா.

Saturday, April 3, 2021

வரம்புமீறும் வருமானவரிச் சோதனை

அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள், முக்கிய பிரமுகர்கள்  ஆகியோரைக் குறிவைத்து வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்துவது வழமையானது. மாநிலத் தேர்தல்கள் நடைபெறும்போது நடைபெறும் சோதனைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் என்றால் பணப்புழக்கம் அதிகரிப்ப்தைத் தடுக்க முடியாமல் அதிகாரிகள் தடுமாறுவது ஒன்றும்  புதிதல்ல. எதிர்க் கட்சித்தலைவர்களை முடக்குவதற்கு அரசுகள் இதனை ஒருஆயுதமாகப் பயன்படுத்துவதும் எழுதாத சட்டமாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ,பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் பிரசாரம் மக்கலைக் கவர்ந்துள்ளது. ஸ்டாலினை குழப்புவதற்காக அவரது மகள் வீட்டில் கடந்த 2 ஆம் திகதி சோதனை நடைபெற்றது. அதேநாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் வீடுகளிலும் வருமானவரிச் சோதனை நடைபெற்றது. ஆனால், ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோரின் வீட்டில் நடைபெற்ற சோதனை முக்கியமான பேசுபொருளானது.

சென்னை, நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை -வீடு, கணவர் சபரீசன் அலுவலகம்; அண்ணா நகர் தி.மு.. வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி வீடு, அலுவலகம்; 'ஜி ஸ்கொயர்' கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் என, சென்னையில், ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில்,   காலை, 7:00 மணி முதல் சோதனை துவங்கியது.இதே போல திருவண்ணாமலையில், தி.மு.., - எம்.பி., அண்ணாதுரை வீடு உட்பட, தமிழகம் முழுதும், 28க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.இதில், 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து, சோதனையில் ஈடுபட்டனர்.

கரூர் தொகுதியில், .தி.மு.., சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தி,மு.., சார்பில், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், செந்தில் பாலாஜியின், கரூர், ராமேஸ்வரப்பட்டி வீடு; அவரது தம்பி அசோக்குமாரின், கரூர், ராமகிருஷ்ணாபுரம் வீடு; தி.மு.., மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணனின், ராயனுார் வீடு உட்பட, கரூரில் ஆறு இடங்களில் சோதனை நடந்தது.

தஞ்சாவூர், தி.மு.., வடக்கு ஒன்றிய செயலரும், திருவையாறு தொகுதி தி.மு.., வேட்பாளர் சந்திரசேகரன் ஆதரவாளருமான, முரசொலி என்பவரின் வீடுகளிலும்சோதனை நடந்தது. தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள வீடு, சீனிவாசபுரம் அருகே மல்லிகைபுரத்தில் உள்ள முரசொலியின் வீடுகளில், நேற்று சோதனை நடத்தினர். தொடர்ந்து, திருவையாறு தொகுதிக்குட்பட்ட, அவரது சொந்த ஊரான தென்னங்குடி கிராமத்தில் உள்ள வீட்டிலும், 5 மணி நேரமாக சோதனை நடத்தினர்.

சிவகாசியில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கார் டிரைவர் வீட்டில், வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். சிவகாசி, திருத்தங்கலில் வசிக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கார் டிரைவர் சீனிவாச பெருமாள் வீட்டில், மதுரையை சேர்ந்த, 6 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் குழுவினர், நேற்று சோதனை நடத்தினர். ஒன்றரை மணி நேரம் நடந்த சோதனையில், எதுவும் சிக்கியதாக தெரியவில்லை. சென்னை வருமான வரி துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த புகாரின் படி, சோதனை நடத்தியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்

ஸ்டாலின் பரப்புரை  செய்யும் இடங்களிலும் சோதனைகள் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையில் ஸ்டாலின் பரப்புரை செய்தபின்னர். எவ. வேலுவின் வீடு, அலுவலகங்கள் அவருக்குச்சொந்தமான கல்லூரி, நிறுவனங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனைகள் முடிந்தபின்னர் பலகோடி ரூபா ,ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன வென்று யாருக்கும் தெரியாது.

ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டில் ஒரு இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் வங்கியில் எடுக்கப்பட்ட ஆவணத்தைக் காட்டியபின்னர் பணத்தைத் திரும்ப ஒப்படைத்ததாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பாரதி தெரிவித்தார். இந்தச் சோதனைகள் ஸ்டாலினைப் பாதிக்கவில்லை. அவர் தனது வழமையான கடமையைச் செய்தார்.  ராஜாத்தி அம்மாளின் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றபோது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியவர் கருணாநிதி. ஸ்டாலினின் மகன் ஒருபடி முன்னேபோய் உதயநிதி  எனது வீட்டில் சோதனை செய்யுங்கள் என சவால் விட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது 60 கோடி ரூப கைப்பற்றப்பட்டது அதற்கு என்ன நடந்தது எனத் தெரியாது. உரிய ஆவனங்கள் இன்றி கன்டெய்னரில்  கைப்பற்றப்பட்ட பணம் பாதுகாப்பாக  வங்கியில் வைப்பிலிடப்பட்டதுஅண்ணா திராவிட அமைச்சரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைஅய்ரியில் பனம் கொடுக்கப்பட்டவர்களின் பெயர் விபரம் இருந்தது. அந்த டயரி இப்போ எங்கே இருக்கிறதெனத் தெரியாது.

இந்தச் சோதனைகள் மத்திய, மாநில அரசுகளின் மீது எதிர்ப்பலைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. யாருக்கு வாக்களிக்கலாம் என முடிவு செய்யாதவர்களின் மனநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு ண்டு.