Showing posts with label மாதவன். Show all posts
Showing posts with label மாதவன். Show all posts

Friday, February 17, 2023

மாதவனின் தங்க மகன் வேதாந்த்


 இளைஞர்களுக்கான கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் போட்டியில் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதுதொடர்பான நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடவுளின் ஆசிர்வாதத்தால் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் பிரிவுகளில் தங்கப்பதக்கமும், 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதோடு கலப்பு பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வேதாந்த் பெற்று அசத்தியுள்ளார்.

நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்டுள்ள தனது மகனை நடிகர் மாதவன் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். வேதாந்த் குறித்து பல இடங்களில் பெருமையாக குறிப்பிட்டுள்ள மாதவன், தனது மகன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளார். டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது உள்ளிட்ட வெற்றிகளின் மூலம், அவ்வப்போது வேதாந்த் பெயர் செய்திகளில் இடம்பெறுவது தொடர்கதையாகி உள்ளது.

 

Wednesday, June 29, 2022

கிறிக்கெற்றில் கலக்கும் கெளதம் மேனனின் மகன்

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்கே வர வேண்டும் என்று இல்லாமல், அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து அதிலும் சாதனைகளை படைக்கலாம் என சில பிரபலங்களின் வாரிசுகள் எடுத்துக்காட்டாக மாறி வருகின்றனர். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகிறார். இந்நிலையில், மாதவனை வைத்து முதல் படத்தை இயக்கிய கெளதம் மேனனின் மகனும் சினிமாவுக்கு வராமல் கிறிக்கெற்றில்அதுவும் ரிஎன்பிஎல் இல் நுழைந்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குநர் கெளதம் மேனனே ஒரு தீவிர கிறிக்கெற் ரசிகர் தானாம். ரசிகர் மட்டுமில்லாமல் நன்றாக கிறிக்கெற்ஆடக் கூடியவர். சினிமாவா? அல்லது கிறிக்கெற்றா? எதை வாழ்க்கையாகத் தேர்வு செய்வது என முடிவெடுக்கும் நிலை வரும் போது சினிமாவை தேவு செய்திருக்கிறார் கெளதம் மேனன். இதனை அவரே பழைய பேட்டியில் குடும்பத்தை பற்றி கூறும்போது கூறியுள்ளார். கெளதம் மேனனின் மகன்கள் கிறிக்கெற் வீரர்களாக மாறவே முடிவெடுத்து அதற்கான முயற்சியில் மூத்த மகன் ஆர்யா தற்போது வெற்றியும் கண்டிருக்கிறார்.

கெளதம் மேனன் மகன் தற்போது ஆரம்பித்துள்ள தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பந்து வீச்சாளராக களமிறங்கி உள்ளார் இயக்குநர் கெளதம் மேனன் மகன் ஆர்யா யோஹான் மேனன். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக இவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார். கெளதம் மேனன் மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 யோஹான் அத்தியாயம் ஒன்று இயக்குநர் கெளதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து இயக்க ஆரம்பித்து டிராப்பான யோஹான் அத்தியாம் ஒன்று படத்தின் டைட்டிலே இவரது மகன் ஆர்யா யோஹான் பெயரை வைத்துத் தானா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். கெளதம் மேனனின் மற்ற மகன்களும் கிறிக்கெற்றில் ஆர்வம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tuesday, April 19, 2022

சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்றார் வேதாந்த்

 டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச  நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் தங்கம் வெள்ளி  ஆகிய பதக்கங்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

  டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் (cஒபென்ககென்) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீற்ற ர் fரே பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியின் 200 மீற்றர் Fல்ய் பிரிவில் இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தங்கம் வென்றார். மறுநாள் நடைபெற்ற 800 மீற்றர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்

இந்த தகவலை நடிகர் மாதவன் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில், கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபனில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும், கடவுளின் கருணையுடனும் சஜன் மற்றும் வேதாந்த் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். பயிற்சியாளர் பிரதீப் சார், ஸ்Fஈ மற்றும் ஆண்ஸா ஆகியோருக்கு மிக்க நன்றி. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, 16 வயதான வேதாந்த் மாதவன்  பெங்களூரில் நடைபெற்ற 47வது ஜூனியர் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றார். அதற்கு முன், மார்ச் 2021 இல் நடந்த லாட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன் போட்டியில் வேதாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.