Monday, April 29, 2024

டோனியின் ரசிகருக்கு 103 வயது

 ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு  உலகலாவிய ரீதியில் இலட்சக்ககக்கான இரசிகர்கள்  உள்ளனர். சென்னை அணியின்  போட்டி என்றால் மைதானமே மஞ்சள் நிறமாக மாறிவிடும். டோடியைப் பார்ப்பதற்காகவெ ரசிகர் படாளம் மைதானத்தை நீக்கிப் படையெடுக்கிறது.

ஆறிலிருந்து அறுபது வரை எனப் பொதுவாக வரையறை செய்வார்கள். சென்னையைச் சேர்ந்த 103 வயதான எஸ் ராம்தாஸ்  என்பவர் சென்னை அணியின் தீவிர ரசிகராவார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, நீரிழிவு நோயுடன் போராடும்  ராமதாஸ், சிஎஸ்கே விளையாடும்  ஐபிஎல் ஆட்டத்தைத்  தவறவிட்டதில்லை.

 1920ல் கோவையில் உடுமலைப்பேட்டையில் பிறந்தார். அவர் தனது பியுசியை முடித்துவிட்டு, பிரிட்டிஷ் ராணுவத்தில் ராணுவத்தில் ஏர்-ரைட் முன்னெச்சரிக்கை என்ற பிரிவில் இருந்தார். திருச்சியில் பணியமர்த்தப்பட்டார். அந்தக் காலத்திலும் கிரிக்கெட் விளையாடினார். “நான் 103 மூத்த வாலிபன். நான் வயதானவன் அல்ல. நான் மூத்த இளைஞன், நான் கிரிக்கெட்டை விரும்புகிறேன், நான் கிரிக்கெட்டைப் பார்க்கிறேன், ”என்று சூப்பர் ரசிகன் ராம்தாஸ் சமூக ஊடகங்களில் உரிமையாளரால் பகிரப்பட்ட வீடியோவில் கூறினார்.

சிஎஸ்கே ஜெர்சி அணிந்த ராம்தாஸ், இந்த சீசனுக்கு முன்பு சிஎஸ்கே கேபடன் பதவியில் இருந்து விலகிய எம்எஸ் தோனியைப் பற்றி பேசும்போது உற்சாகமாக ஒலித்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது மகன், டோனி, ரவீந்திர ஜடேஜா  ,சுரேஷ் ரெய்னா ஆகியோரின் படங்களையும் காட்டினார், அதில் ராமதாஸ் மிகத் தெளிவாக அடையாளம் காட்டினார்.

எம்எஸ் டோனியைப் பார்க்க விரும்புகிறீர்களா என்றும் ராமதாஸிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர், “ஆம். அவருக்கு (டோனி) நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் அழைக்கும்போது, நாங்கள் செல்ல வேண்டும். அவருடைய நேரத்திற்கு ஏற்ப நாம் செல்ல வேண்டும் என்றார்..

Sunday, April 28, 2024

குஜராத் கோட்டையில் கொடி நாட்டிய பஞ்சாப் கிங்ஸ்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்    ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. நாணயச் சுழற்சியில்  வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார்.  

முதலில் துடுப்பெடுத்தாடிய  குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 199  ஓட்டங்கள்  சேர்த்தது.விக்கெற்களை இழந்து 199 ஓட்டங்கள்  பஞ்சாப்  19.4 ஓவர்களில்  7 விக்கெற்களை இழந்து 200  ஓட்டங்கள் எடுத்து வெற்றி .

 தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் இருந்த குஜராத் கப்டன் சுப்மன் கில் 48 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 89 ஓட்டங்கள் அடித்தார்.

அதன் பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பவர்ப்ளேவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. பவர்ப்ளேவில் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் ஒரு ஓட்டம் ,   ஜானி பேரிஸ்டோவ் 22 ,சாம் கரன் 5 ஓட்டங்களில் வெளியேறினர்.

 ஷஷாங்க் சிங் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை  அணிக்கு தொடர்ந்து வழங்கி வந்தார். இவர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தார். இவருடன் இணைந்த பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் அஷூதோஷ் சர்மா,  ஷஷாங்க் சிங்கிற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் விளையாடினார். பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடிய ஷஷாங்க் சிங் 25 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.

கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது.  19வது ஓவரில் பஞ்சாப் அணி 18 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் மட்டும் தேவைப்பட்டது. 20வது ஓவரை வீசிய நல்கண்டே முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார்.  அடுத்த பந்தை வைய்டாக வீச, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை களத்தில் இருந்த ஷஷாங் சிங் 29 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 61 ஓட்டங்கள் அடித்தார்.   குஜராத் அணி இந்த போட்டியில் மொத்தம் 9 கேட்ச்களை மிஸ் செய்திருந்தது.

வீடற்றவர்களை வெளியேற்றுகிறது பிரான்ஸ்


 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்தையும்  முறியடிப்பதற்கு பிரான்ஸ் முன்னுரிமை கொடுக்கிறது.  பிரான்ஸ் நகரத்தில் தெருவோரத்திலும், கைவிடப்பட்ட கட்டடங்களிலும் வசிக்கும் வீடற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் பிரான்ஸ் தீவிர கவனம் செலுத்துகிறது.

நகரத்தை விளையாட்டுகளுக்கு சிறப்பாகக் காட்டுவதற்காக  வீடற்றவர்களை தெருக்களில் இருந்தும் , அவர்கள் தங்கி இருக்கும் இடங்களில்  இருந்தும்  அகற்ற அதிகாரிகள் விரும்புவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன

பாரிஸின் தெற்கு புறநகரில் உள்ள பிரான்ஸின் மிகப்பெரிய க்ட்ட்டடத்தில்  இருந்து நூற்றுக்கணக்கான மக்களை பொலிஸார் வெளியேற்றியுள்ளனர் , ஒலிம்பிக்கிற்கு முன்னதாக தலைநகர் பகுதியில் இருந்து அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் ,வீடற்றவர்கள் ஆகியோரை  அகற்ற அதிகாரிகள் முயல்வதாக தொண்டு நிறுவனங்களின் புதிய குற்றச்சாட்டுகளைத் தூண்டியது.

கைவிடப்பட்ட பேருந்து நிறுவன தலைமையகக் கட்டடத்தில்  சுமார் 450 பேர் வரை வசித்து வந்தனர், அவர்களில் பலருக்கு அகதி அந்தஸ்து, சட்டப்பூர்வ ஆவணங்கள் , பிரான்ஸில் வேலை செய்யும் ஆவணங்கள் ஆகியவை  உள்ளன.   ஆனால் அவர்களுக்கு சரியான வீடுகள் கிடைக்கவில்லை. அவர்கள்  அங்கிருந்து வெளியேற்றி   பிரான்சின் பிற பகுதிகளுக்கு பேருந்துகளில்  அனுப்பினர்.

வெளியேற்றப்பட்ட  450 பேரில் 50 பெண்களும் 20 குழந்தைகளும் அடங்குவர். உள்ளூர் பள்ளிகளில் குறைந்தது 10 குழந்தைகள் படிக்கின்றனர். மத்திய நகரமான ஓர்லியன்ஸ் அல்லது தென்மேற்கு நகரமான போர்டியாக்ஸுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அந்தக் கட்டடத்தில் இருந்த பலர்  பிரான்ஸை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஏனெனில் அங்கு வேலைகள் உள்ளன. சூடானைச் சேர்ந்த 29 வயதான அபாகர், “நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்" என்றார். லாஜிஸ்டிக்ஸ் படிப்பை மேற்கொள்வதற்காக பாரிஸில் இருந்த அவருக்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மனிதாபிமான அமைப்பான Médecins du Monde இன் பால் அலௌசி, மூன்று ஆண்டுகளாக அங்கு  தங்கி இருந்தவர்களுக்கு  சுகாதார ஆதரவை அளித்து வந்தார். அவர் Revers de la Médaille (The Medal's Other Side) இன் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார், இது பரிஸ் பகுதியில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீடற்ற மக்கள் மீது ஒலிம்பிக் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவிப் பணியாளர்களின் கூட்டு அமைப்பாகும்.

அந்தக் கட்டடத்தில்  வசித்தவர்களில்  80% பேர், சூடான், எத்தியோப்பியா , எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள்.  பலர் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களைக் கொண்டிருப்பவார்கள். தாக அலௌசி கூறினார். பலருக்கு கட்டிடத் தளங்கள் மற்றும் தச்சு வேலைகள் உட்பட வேலைகள் இருந்தன.

ஒலிம்பிக் போட்டிகள்  முடிந்ததும் அவர்கள் தங்கி இருந்த இடங்களுக்கு  மீண்டும் அழைத்து வரப்படுவார்களா? அல்லது புதிய இடத்தில் தங்க வைக்கப்படுவார்களா என்பது  பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை.

பரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்ற நெட்ட சிங்க‌

"எனது ஒலிம்பிக் பதக்க இலக்கு 2024 அல்ல, ஆனால் 2028 அல்லது 2032 இல் ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே எனது கனவு" என்று இலங்கையின் பூப்பந்து வீரன் வீரன் நெட்டசிங்க [28] தெரிவித்தார்.

 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 13 வரை பிரான்சில் 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இலங்கையர் ஆவார்.

 சர்வதேச  தர வரிசையில்  72வது இடத்தில் உள்ள நெட்டசிங்க, சீசன் முழுவதும் ஈர்க்கக்கூடிய 24,030 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி பெற்ற வீரர்களில் 32வது இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

  , தகுதிகாண் பட்டியலில் உள்ள இளைய வீரராக உள்ள , தனது அபார திறமையை வெளிப்படுத்தி, விளையாட்டில் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறார்.

  த‌ந்தையான ரொஷான் தம்மிக்கவின் பயிற்சியில் நெட்டசிங்க  முன்னேற்ற மடைந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் உலக தரவரிசையை 50 க்குக் கீழே குறைப்பதே அவரது பிரதான இலக்காகும்.     

ப‌ரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புகளுக்காக விளையாட்டு அமைச்சு 8.2 மில்லியன் ரூபாவை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

மோடியின் வெறுப்புப் பேச்சால் கிளர்ந்தெழுந்த எதிர்க் கட்சிகள்

 இந்திய நாடாளுமன்றத்தின்  இரண்டாம் கட்டத்  தேர்தல்  பிரசாரத்தின் போது  இந்தியப் பிரதமரான மோடியின் பேச்சு   பேசு பொருளாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை  வாக்காளர்களைக் கவர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை  விமர்சித்த மோடி, இஸ்லாமிய மக்களைப்  புண்படுத்தியதாகக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில்  இல்லாததைப் பிரசாரத்தில் தெரிவித்தார்.

 "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?" என  பிரதமர்  கேள்வி எழுப்பினார்.

ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகள்  பெறுபவர்கள் என  மோடி சொல்லியது இஸ்லாமியர்களைத்தான் என எதிர்க் கட்சிகள் தெரிவிக்கின்றன.

மோடி பேசியது  உண்மைக்கு மாறான தகவல் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். முதல் கட்ட தேர்தல் வாக்குப் பதிவின்  போது  பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை எழுந்ததால்  மோடி,  தரம் தாழ்ந்து  பிரசாரம் செய்கிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமரின்  இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, "முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. பயத்தின் காரணமாக, அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப விரும்புகிறார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு இப்போது நாடு முழுவதும் ஆதரவு வரத் தொடங்கிவிட்டது. இந்த நாடு அதன் பிரச்னைகளில் வாக்களிக்கும். அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும்" என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் பற்றிய பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாரதீய ஜனதா  சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.   பிரதமர் மோடியின்  பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த உஸ்மான் கனி , ராஜஸ்தானில் இந்த பேச்சு காரணமாக 3 முதல் 4இடங்களை பாரதீய ஜனதா இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது, பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உஸ்மான் கனி நீக்கப்பட்டுள்ளார்.

மோடியின்   சர்ச்சைக் குரிய தேர்தல் பரப்புரை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக  பரதீய ஜனதாவின் மீது  காங்கிரஸ் 16 புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் அவர்களை 'நாட்டில் ஊடுருவியவர்கள்` என்றும் 'அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள்' என்றும் கூறியிருந்தார்.

ஆனால், பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங்கின் 18 ஆண்டுகால பழைய உரையில், இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை வழங்குவது குறித்து மன்மோகன் சிங் பேசவில்லை என காங்கிரஸ் கட்சி தெளிவு படுத்தியது. 

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது மதச் சின்னங்களையோ, மதம், மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவோ கூடாது. நடத்தை நெறிமுறைகளின்படி, எந்தவொரு மத அல்லது இனம் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசுவது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.இந்த விதிகளை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் சிலர் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோருகின்றனர்.

ஆனால், தேர்தல் ஆணையம்  மோடிக்கு எதிராகவோ அல்லது பாரதீய ஜனதாவுக்கு எதிராகவோ எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆனையமும் பாரதீய ஜனதாவின் கைப்பாவையா என எதிர்க் கட்சிகள் கேட்கின்றன.  இந்தியா சுதந்திரமடைந்த  பின்னர்  இந்தியாவில் பிரதமர் மோடியைப் போல்    வேறு எந்த பிரதமரும் இவ்வளவு தரம் தாழ்ந்து வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தவில்லை  என்று எதிர்க்கட்சித் தலைவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்

  எதிர்க் கட்சிகள்  கொடுத்த நெருக்கடியால் தேர்தல் ஆணையம் பாரதீய ஜனதாத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.வெறுப்புப் பேச்சைப் பரபிய மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

கடந்த மார்ச் மாதம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகாய், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.தேர்தல் பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக சாகேத் கோகலே கூறியிருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸின் இந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததா என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, நவம்பர் 2023-இல், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் 'பனவ்தி' என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதால், தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

சமீபத்தில், ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறிய ஆட்சேபகரமான கருத்து குறித்து புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு 48 மணி நேரம் தடை விதித்தது.

பாரதீய ஜனதா தொடர்பான விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையையும், எதிர்க்கட்சி விவகாரங்களில் தீவிரமாக செயலாற்றுவதையும் சிலர் ஒப்பிடுகின்றனர்.

மூன்று மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில்   மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு  கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரளத்தில் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும்,     கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், மஹாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம் மற்றும் பிஹார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 89 தொகுதிகளில்வாக்களிப்பு நடைபெற்றது.

 பாரதீய ஜனதாவின் 10 வருட சாதனைகளை வெளிப்படுத்தாமல், துவேசப் பேச்சுக்களை  பிரதமர் கக்குவதால் அவருக்குத் தோல்விப்பயம் வந்து விட்டது என எதிர்க்கட்சிகள் கட்டியம் கூறுகின்றன

ரமணி

Monday, April 22, 2024

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

பரீஸ் 2024 ஒலிம்பிக்  தீபம் பண்டைய ஒலிம்பியாவில் செவ்வாயன்று   பாரம்பரிய விழாவில் ஏற்றப்பட்டது.

மேகமூட்டமான வானம் காரணமாக பரவளைய கண்ணாடிக்குப் பதிலாக காப்புச் சுடரைப் பயன்படுத்தி, கிரேக்க நடிகை மேரி மினா , ஒலிம்பிக் சுடரை ஏற்றினார்.

 கிரீஸ் ஜனாதிபதி  கேடரினா சகெல்லரோபௌலோ, பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா ,பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ஆகியோர் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் விழாவில் கலந்துகொண்டனர்.  அமெரிக்க மெஸ்ஸோ சோப்ரானோ ஜாய்ஸ் டிடோனாடோ ஒலிம்பிக் கீதத்தைப் பாடினார்.

1896 ஆம் ஆண்டு முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அனைத்து மார்பிள் பனாதெனிக் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி பாரிஸ் 2024 அமைப்பாளர்களிடம் ஒலிம்பிக் சுடர் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து, விழாவில் நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 27 அன்று, 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸ் விளையாட்டுப் போட்டிக்கு சில வாரங்களுக்குப் பிறகு ஏவப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் மூன்று-மாஸ்ட் கப்பலான பெலெம் இல் சுடர் பிரான்சுக்குச் செல்லும்

 கரீபியன், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளில் பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு கடல்கடந்த பிரதேசங்கள் வழியாக அதன் 12,000-கிலோமீற்றர் (7,500-மைல்) பயணத்தின் போது 400 நகரங்கள் மற்றும் டஜன் கணக்கான சுற்றுலா இடங்கள் வழியாக இது செல்லும்.

  மே 8 ஆம் திகதி  ஒலிம்பிக் ஜோதி மார்செய்லுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .  ஜோதியை  ஏந்திய 10,000 அதிதிகள் , 64 பிரெஞ்சு பிராந்தியங்கள் வழியாக சுடரை ஏற்றிச் செல்வார்கள்.

இது ஜூலை 26 அன்று பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா   சீன் கரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது    விளையாட்டுகளின் முக்கிய மைதானத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 

எவ்வாறாயினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அது தேசிய மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்களன்று  ஒப்புக்கொண்டார். படகுகளில் அணிகள் சீன் வழியாகச் செல்வதற்குப் பதிலாக, விழாவை ஈபிள் கோபுரத்திலிருந்து ஆற்றின் குறுக்கே உள்ள "ட்ரோகாடெரோ" கட்டிடத்திற்கு மட்டுப்படுத்தலாம் அல்லது "ஸ்டேட் டி பிரான்சுக்கு கூட மாற்றலாம்" என்று மக்ரோன் கூறினார்.

                ஒலிம்பிக் சீருடைகள் அறிமுகம்

பரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்  போட்டி வீரர்களுக்கான சீருடைகளை அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் அறிமுகம் செய்தன.

 பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், [ஏப்ரல் 17 ஆம் திகதி] புதன்கிழமை  அஸ்திரேலியாவின் தொடக்க விழா சீருடைகள்   சிட்னியின் க்ளோவ்லி பேயில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

அஸ்திரேலியாவின் சின்னமான பச்சை மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வடிவமைப்புகள் ஒன்பது விளையாட்டு வீரர்கள் அணிந்து காட்சிப்படுத்தினர். சீருடைகளின் மையப் பகுதியாக, ஜாக்கெட் லைனிங் முழுவதும் அனைத்து 301 அஸ்திரேலிய கோடைகால ஒலிம்பிக் சம்பியன்களின் பெயர்களுடன், ஜாக்கெட் பாக்கெட்டில் அஸ்திரேலிய ஒலிம்பியன்களின் உறுதிமொழியை பிளேசர் உள்ளடக்கியது.

ஒலிம்பிக்கில் அஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் வீராங்கனைகள் டி-ஷர்ட் அல்லது டேங்க் டாப் தங்கம் மற்றும் பச்சை நிற ரிப்பிங்கை தங்கள் பிளேஸருக்குக் கீழே அணியலாம். அவர்கள் தங்கள் தோற்றத்தை நிறைவு செய்ய கல் நிற சினோ ஷார்ட்ஸ் அல்லது பச்சை மற்றும் தங்க நிற ஓம்ப்ரே ப்ளீடேட் ஸ்கர்ட்டையும் தேர்வு செய்யலாம்.

இதற்கிடையில், ஆண் ஒலிம்பியன்கள் நீட்டிக்கப்பட்ட சினோ ஷார்ட்ஸுடன் கூடிய டி-ஷர்ட்டின் மேல் ஒற்றை மார்பக லினன் பிளேஸரை அணிவார்கள்.

 


பரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்களுக்கான ஜப்பானின் அதிகாரப்பூர்வ ஆடை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பிரகாசமான சிவப்பு டாப்ஸ் பிரெஞ்சு தலைநகரின் சூரிய உதயங்களால் ஈர்க்கப்பட்டது, அதே சமயம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்ததை விட, கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளில் 34 சதவீதம் குறைக்கப்பட்டது என்று ஆடை விநியொகம் செயும் நிறுவனமான  ஆசிக்ஸ் கார்ப் தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்ட் டெய்கி ஹாஷிமோடோ, கைப்பந்து வீரர் யுஜி நிஷிதா மற்றும் போசியா வீரர் தகாயுகி ஹிரோஸ் உட்பட மற்ற விளையாட்டு வீரர்களுடன் டோக்கியோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

       அமெரிக்க கூடைப்பந்து ஒலிம்பிக்  ஆண்கள் அணியை அறிவிப்பு

அமெரிக்க கூடைப்பந்து தனது ஆடவர் ஒலிம்பிக் அணியை அமெரிக்கா அறிவித்தது - ஜேம்ஸ், கரி, டுரான்ட், பாம் அடேபாயோ, டெவின் புக்கர், ஜோயல் எம்பைட், ஜெய்சன் டாட்டம், அந்தோனி டேவிஸ், ஜூரு ஹாலிடே, டைரீஸ் ஹாலிபர்டன், அந்தோனி எட்வர்ட்ஸ் மற்றும் காவி லியோனார்ட் ஆகியோர் தற்போதைய 12 பெயர்கள். பட்டியலில் உள்ளனர்.

குழுவில் 10 ஒருங்கிணைந்த ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் ஏழு வீரர்கள் உள்ளனர்; டுரான்ட் மூன்று, ஜேம்ஸ் இரண்டு, அடேபாயோ, புக்கர், ஹாலிடே மற்றும் டாட்டம் தலா ஒன்று. இந்த சீசனில் 12 வீரர்கள் சராசரியாக 24.2 புள்ளிகள், 7.0 ரீபவுண்டுகள் மற்றும் 5.6 அசிஸ்ட்கள் பெற்றனர், 3-புள்ளி வரம்பில் இருந்து 39% எடுத்தனர். அமெரிக்கப் பட்டியலில் உள்ள திறமைகளின் அளவு திகைக்க வைக்கிறது. 12 கமிட்களில், ஏழு பேர் ஒரு ஆட்டத்திற்கு NBA இன் முதல் 15 மதிப்பெண்கள் பட்டியலில் சீசனை முடித்தனர். ஜேம்ஸ் லீக்கின் ஆல்-டைம் ஸ்கோரிங் லீடர், கர்ரி 3-பாயின்டர்களில் ஆல்-டைம் லீடர், ஹாலிபர்டன் இந்த சீசனில் அசிஸ்ட்-பெர்-கேம் பட்டத்தை வென்றார் மற்றும் 10 பேர் இந்த சீசனிலும் ஆல்-ஸ்டார்களாக இருந்தனர்ஜேம்ஸ் 2004 இல் வெண்கலம் மற்றும் 2008 மற்றும் 2012 இல் தங்கம் வென்ற பிறகு நான்காவது பதக்கத்தை எதிர்நொக்குகின்றார். ர். பட்டியலில் டேவிஸ் (2012), அடேபாயோ (2020), புக்கர் (2020), டாட்டம் (2020),  ஹாலிடே ( 2020).  ஆகியோர் தங்கம் வென்றனர்.

அமெரிக்கக் குடிமகனாக ஆன பிறகு கடந்த ஆண்டு அமெரிக்காவுக்காக விளையாடத் தேர்ந்தெடுத்த லியோனார்ட் மற்றும் எம்பியிட் ஆகியோரைப் போலவே கரியும் முதல் முறையாக ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளனர். கேமரூனில் பிறந்த மையமும் பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் பிரான்ஸை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்திருக்கலாம். அமெரிக்க  ஜிம்னாஸ்டிக் அணியில்சுனி லீ இடம்பிடிப்பார் 

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆல்ரவுண்ட் சம்பியனான சுனி லீ, கடந்த ஆண்டு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார்.

 கடந்த ஆண்டு தனது இரண்டாம் பருவத்திற்குப் பிறகு நோய்வாய்ப்பட்டதால் அவர் புலிகளை விட்டு வெளியேறினார். அவர் பாரிஸுக்கு திரும்பி வருவது உறுதியான விஷயமாக இருக்கவில்லை, ஆனால் இப்போது அவர் மீண்டும் வரவிருக்கும் பைல்ஸுடன் அமெரிக்க அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.