Showing posts with label வாடகை. Show all posts
Showing posts with label வாடகை. Show all posts

Friday, May 29, 2020

பேருக்காக ஏ-320 விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்


மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம்  கொரோனா காரணமாக போபாலில் சிக்கி கொண்டது.   கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள் , அவரது இரண்டு குழந்தைகள் , பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லிக்கு அனுப்பி வைக்க 180 இருக்கைகள்கொண்ட  -320 விமானத்தை வாடகைக்கு எடுத்தார்.   இந்த விமானத்தின் வாடகை சுமார் ரூ. 20 இலட்சம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானம் திங்கட்கிழமை டெல்லியில் இருந்து போபாலுக்கு வந்தது. பின்னர் போபாலில் இருந்து அந்த நான்கு பேரையும் ஏற்றி டெல்லிக்கு சென்றது. மற்ற விவரங்களை விமான அதிகாரிகள் வெளியிடவில்லை