உலக அரசியலில் அதிகாரம் மிக்க பிரதமர், ஜனாதிபதி பதவிகளில் உள்ள பெண் அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு சில நாடுகளில் பெண்கள் ஜனாதிபதியாக இருக்கிறார்கள். அவர்கள் பொம்மை போன்றுதான் செயற்படுகிறார்கள். ஆண்களுக்கு நிகராக பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். அரசியலில் பெண்களின் வகிபாகம் மிகவும் குறைவாக உள்ளது.
உலக
அரசியலுக்கு முதல் பெண் பிரதமரைத் தந்த இலங்கையில் பெண்
அரசியல்வாதிகலின் பங்களிப்பு
மிகவும் குறைவாக உள்ளது.
பெண் பிரதமரையும்,
பெண் ஜனாதிபதியையும்
உலகுக்குக் கொடுத்த நாடு எனும் பெருமை இலங்கைஉள்ளது. அந்த இரண்டு மதிப்பார்ந்த
பதவிகளில் தாய் ஸ்ரீமாவும்,
மகள் சந்திரிகாவும் இருந்தார்கள்.
இலங்கையில் அதிகரம் மிக்க அமைச்சுப்
பதவியில் பெண்கள் யாரும் இருக்கவில்லை. சுகாதாரம்,
மகளிற் Pஓஓன்ற அமைச்சுகள்தான்
பெண்கலுக்காக ஒதுக்கப்பட்டன.
அரசியலில்
பெண்களுக்கு அதிக இடம் ஒதுக்கபப்ட
வேண்டும் என்பதில் மாற்ருக் கருத்தி இல்லை.அதற்குரிய இடத்தை
அரசியல் கட்சிகள் ஒதுக்குவதில்லை. போரட்டங்களின்
போது பெண்கள் முன்னின்று
செயற்படுவார்கள். முன்னணியில் நின்ரூ போராடும் பெண்களை திட்டமிட்டு கொச்சைப்
படுத்தும் காரியங்களும் கனகச்சிதமாக நடை பெறுகின்றன.
அரசியலில்
மக்கள் பங்கேற்பு அல்லது மக்களின் அரசியல்
பங்குபற்றல் என்பது ஜனநாயகத்தில் அதி
முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.மக்களின் அரசியல் பங்கேற்பு அதிகம்
இருக்க வேண்டும் என்பது 'மக்கள் அரசியலைப்
பற்றி அதிகம் சுதந்திரமாகப் பேசுவதும்
அதிகளவில் சுதந்திரமாக அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதும்'
என்ற குறுகிய பொருளில் தவறாக
விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலில் விரும்பிய கட்சியை ஆதரித்து பிரச்சாரம்
செய்வது நிச்சயமாக ஓர் அரசியல் உரிமையாகும்.
ஆனால் அரசியல் பங்கேற்பு என்பது
மக்கள் அரசியல் ரீதியாக எப்போதும்
அதிகளவில் ஓடித்திரிவதல்ல. அரசியலிலும்
போராட்டங்களிலும் பெண்கள் மிக முக்கிய
இடத்தை வகிக்கிறார்கள்.அரசியலில் பெண்களுக்கக ஒதுக்கப்பட்ட
இடம் போதாது என்ற
குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
அரசியலில்
தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புவதாகவும், எனவே 50% பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தை
நியமனப் பட்டியலில் கட்டாயப்படுத்துமாறும் பல்வேறு
பகுதிகளைச் சேர்ந்த பெண் முஸ்லிம்
அரசியல் செயற்பாட்டாளர்கள் பிரதமர்
தினேஷ் குணவர்தனவை சந்தித்து கோரிக்கை
விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மனைவியும்,
அரசியல் செயற்பாட்டாளருமான பேரியல் அஷ்ரப் இது
தொடர்பாக கருத்துத்
தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து சுமார் 16 முஸ்லிம் பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள்
பிரதமர் குணவர்தனவை சந்தித்து பெண் பிரதிநிதித்துவத்தை உயர்த்துமாறு
வலியுறுத்தியுள்ளனர்.
"நாங்கள் நியமனப்
பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 50% உயர்த்துமாறு குணவர்தனவிடம்
கோரிக்கை விடுத்தோம், அவரிடமிருந்து எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்தது,"
என்று அவர் கூறினார்.முஸ்லிம் பெண்களை அரசியலுக்கு வரச்
செய்வது மிகவும் கடினம் என்ற
பொதுவான கருத்து சில நபர்களிடையே
இருப்பதாக ஃபெரியல் அஷ்ரப் குறிப்பிட்டார்.
“முஸ்லிம்
பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டால், அவர்களது நியமனப் பட்டியலில் காலியிடங்கள்
இருக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவது
மிகவும் கடினம் என்ற கருத்தும்
குறிப்பிட்ட சிலரிடையே உள்ளது. இது பொதுவான
கருத்து. சில நபர்களின் கூற்றுப்படி,
பெண் நியமனப் பட்டியல் கட்டாயத்
தேவையாக மாறினால், அவர்களின் பட்டியல் முழுமையடையாது.வேட்புமனுவில் முஸ்லிம் பெண்கள் இருப்பது சில
கட்சிகளின் நலன்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்தக் கட்சிகள்
அதை கட்டாயமாக்க வேண்டாம் என்று விரும்புவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
“முஸ்லிம்
பெண்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை
குணவர்தனவுக்கோ அல்லது ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவுக்கோ அணுக முடியாது. முஸ்லிம்
சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டுமே அவை வெளிப்படுகின்றன.
எனவே, பிரதமரை சந்தித்து, இந்த
கருத்து முற்றிலும் தவறானது என்றும், அரசியலுக்கு
வர தயாராக உள்ளோம் என்றும்
தெரிவிக்க வந்தோம்,'' என்றார்.
இதேவேளை,
பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்காதபட்சத்தில்
கட்சிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என பிரதிநிதிகள்
வலியுறுத்தியதாக மன்னார் மகளிர் அபிவிருத்தி
சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஷிரீன்
அப்துல் சாரூர் தெரிவித்தார்.
தற்கால
உலகில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்தாடல்களில் ஒன்றாக
பெண்களைப் வலுப்படுத்தல் என்ற அம்சம் உள்ளது.
இன்றைய சமூதாயத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை
சந்திக்கிறார்கள். அந்த பிரச்சினைகள் இல்லாமல்
செய்யப்படும் போது மாத்திரமே பெண்களுக்கான
பூரண சுதந்திரம், உரிமை என்பன கிடைக்கப்பெறும்.
இன்று அதிகமாக பல துறைகளிலும்
பெண்கள் வலுப்படுத்தப்பட வேண்டியவர்கள். பெண்கள் அரசியல், பொருளாதார,
சமூக ரீதியில் மாற்றங்களுடன் வலுப்படுத்தப்பட வேண்டும்.
2018 இல் 25 சதவீதம்
பெண்களுக்கான ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டன. இது
கடந்த உள்ளுராட்சி தேர்தல் முறைமையில் பரவலாக
பேசப்பட்டாலும் பெண்களின் அரசியல் பங்குபற்றல் வீதம்
ஓரளவு அதிகரித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 52.01% பெண்கள் உள்ளனர். அதில்
5.3%பாராளுமன்றத்திலும், 4.5%
மாகாண சபையிலும், 1.9% உள்ளுராட்சி சபையிலும் பெண்களின் பங்கேற்பு கடந்த காலத்தில் இருந்ததை
காணலாம். இன்று உள்ளுராட்சி சபையிலும்,
மாகாண சபையிலும் கடந்த காலங்களில் செய்த
திருத்தம் காரணமாக சபைகளில் 25% இட
ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனினும் கடந்த
தேர்தலில் அது முழுவதுமாய் வெற்றி
அளிக்கவில்லை. எனினும் கடந்த காலத்தினை
விட அதிகரித்துள்ளதை ஒப்பிட்டு அறிந்து கொள்ள கூடியதாக
உள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலில் உள்ளுராட்சி
சபைத் தேர்தலில் 22.2%, பெண்களளுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்தது. இது கடந்த காலத்தை
விட பாரிய மாற்றம் என்றே
குறிப்பிட வேண்டும்.
இலங்கையில்
அரசியலில் பிரவேசித்த சொற்பளவிலான பெண்களின் அரசியல் பிரவேசம் திடீரென
உருவானது ஆகும்.இந்த நாட்டில்
தலைவிகளாக வந்த பெண்கள் கணவன்
அல்லது தந்தை அரசியலில் சிறந்து
விளங்கியதனூடாக வந்தவர்கள்தான். ஆட்சியில் இருந்த
சிறிமாவோ அம்மையார், சந்திரிக்கா அம்மையார் போன்றோர் அவ்வாறானதொரு பின்னணியில் இருந்துதான் வந்தார்கள். பெண்கள் அதிகம் அரசியலில்
பங்கேற்காமல் இருப்பதற்கு இலங்கையில் காணப்படும் சமூக இறுக்கமே காரணமாகும்.
அந்த இறுக்கம் பெண்களை அதிகளவு அரசியலில்
ஈடுபடுவதற்கு அனுமதிப்பதில்லை.
இலங்கையில்
1989 தொடக்கம் 2020 வரையான தேர்தலின்படி பெண்கள்
பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் அளவு மிகக் குறைவாக
உள்ளது. 20 வருட காலத்தில் பெண்
பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. குறிப்பாக 10 சதவீதத்தை கூட தாண்டவில்லை. 2004
தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்திற்கு
5.8% ஆனவர்களே தெரிவானார்கள். இது இன்றுவரை மாறாப்பெறுமானமாக
இருக்கிறது. அந்தவகையில் 1989ஆம் ஆண்டு 5.8% ஆனவர்களும், 1994ஆம்
ஆண்டு 5.3%ஆனவர்களும், 2000ஆம்
ஆண்டு 4.0% ஆனவர்களும்,
2001ஆம் ஆண்டு 4.4% ஆனவர்களும், 2004ஆம்
ஆண்டு 5.8% ஆனவர்களும்,
2010 ஆம் ஆண்டு 5.8%ஆனவர்களும், 2015ஆம் ஆண்டு 5.8%ஆனவர்களும்,
2020இல் 5.3% பாராளுமன்றத்திற்கு பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் 94% ஆனவர்கள் ஆண்களாக தெரிவு செய்துள்ளனர்.
இதனால் பெண்கள் பங்கேற்பதற்கான தேவை
இலங்கையில் அதிகமாக உள்ளதை காணலாம்
அரசியலில் பெண்களி முன்னிலைப் படுத்துவதற்கான கட்டமைப்பை சகல அரசியல் கட்சிகளும் உருவாக்க வேண்டும்.