Saturday, March 25, 2017

சைனா மேன் குல்தீப் யாதவ்

 
அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தர்மசாலாவில்  நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய குல்திப் யாதவ்  சைனா மேன் பந்து வீச்சின் மூலம் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.  உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்த 22 வயதான இவர் 228  ஆவது வீரராக இந்தியா சார்பில்  அறிமுகமானார்.

அஸ்வின் ஓஃவ் ஸ்பின்னர், ஜடேஜா லெஃப்ட் ஆம் ஸ்பின்னர், குல்தீப் யாதவ் சைனா மேன் லெஃப்ட் ஆம் ஸ்பின்னர். மதிய உணவு வரை 31 ஓவர்களில் 131  ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையுடன் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் குல்தீப் நாதரின் பந்து வீச்சில் சரிந்தனர் மதிய உணவு இடைவேளைக்குப் பின் நான்காவது ஓவரில்  ஆட்டத்தின் போக்கு மாறியது. 35  ஆவது ஓவரை குல்தீப் நாயர் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட வானர், ரகானேயிடம்  பிடிகொடுத்து  ஆட்டமிழந்தார். ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய காரணமான ஹேண்ட்ஸ்  காம்,, ஸ்வெல் ஆகியோர் தாலா எட்டு ஓட்டங்களில்  குல்தீப் யாதவின் பந்தி வீச்சில் ஆட்டமிழந்தனர். முக்கியமான மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். சைனா மேன் பந்தில் பல்வேறு மாறுபட்ட கூக்ளி.  ஓஃவ் ஸ்பின்,லெக் ஸ்பின் வீசி அவுஸ்திரேலிய வீரர்களைத் திணறடித்தார்.

குல்தீப் நாயர் வேகப் பந்து வீச்சாளராகப் பயிற்சி பெற்றார். பயிற்சியாளர் கபில் பாண்டேயின் ஆலோசனையின் பின்னர் லெக் ஸ்பின்னராக மாறினார்.  22 முதல் தர போட்டிகளில் 81 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்  

1993  ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இடையிலான  டெஸ்ட் போட்டியில் சீனாவைப் பூர்வீகமாகக்கொண்ட  எல்லிஸ் அச்சாங் அன்பவரின் பந்து  வீச்சில்  ஆட்டமிழந்த இங்கிலாந்து வீரரான வால்டர் ரொபின்ஸ் , கோபமடைந்து  ப்ளடி   சைனா மேன்  எனத் திட்டினர்.  அன்றில்  இருந்து மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் இடதுகைப் பந்தி வீச்சை  சைனா மேன் பந்து வீச்சு என்பார்கள். போல் அடம்ஸ், மைக்கல் பெவன்,  பிராட்  ஹோக், சாமுவேல் பத்ரி போன்றவர்கள் இப்படியான பந்து வீச்சாளர்கள்  ஆவர்.

இரட்டை இலை முடங்கியதால் கேள்விக்குறியான அ.தி.மு.க

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றுவதற்கு சசிகலா செய்த சதியால் அந்தக் கட்சியின் இரட்டை இலைச்சின்னத்தையும் கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கி விட்டது. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்த இரட்டை இலைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு அணிகளும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் அதனைமுடக்கிவிட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள இரட்டை இலை இல்லாததால் இரண்டு அணிகளும் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு கட்சியின் சின்னம் மிக முக்கியமானது. கட்சித் தலைமை அடையாளம் கட்டும் வேட்பாளருக்கு வாக்களித்துப் பழக்கப்பட்டவர்கள் புதிய சின்னத்துக்கு வாக்களிக்க  நிர்ப்பந்தப் படுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில்  செல்வாக்கு மிக்கவர் என்றால் கட்சிமாறி சின்னம்  மாறினாலும் வெற்றி பெறுவார். பன்னீர் அணியில் போட்டியிடும் மதுசூதனன் ஆர்.கே. நகரில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  இப்போது இரட்டை இலை இல்லை. நான் நியமித்த வேட்பாளர் இவர்தான்   என அடையாளம் காட்ட ஜெயலலிதாவும்  இல்லை. ஆர்.கே.நகரின்  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்பதனால் அவருக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.
சசிகலாவின் அணியின்   வேட்பாளரான தினகரன் ஆர்.கே.நகருக்குப் புதியவர். இரட்டை இலைச் சின்னம் இல்லை. ஜெயலலிதாவின் மன்னார்குடி குடும்பத்தவர் என்ற பிரசாரம் அவருக்கு எதிராக தீவிரமடையும் நிலை உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தோல்வி நிச்சயம் எனத் தெரிந்து கொண்டு தீபா போட்டியிடுகிறார். அரசியல் பின்புலம் எதுவும் இல்லை.ஆர்.கே.நகர் தொகுதிக்குப் புதியவர். இவர்கள் மூவரும் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழக வாக்கைப் பிரிக்கப்போகிறார்கள். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  40 சதவீதமான  வாக்கு இருக்கிறது. ஜெயலலிதா போட்டியிட்டபோது முதல்வரின் தொகுதி ஜெயலலிதாவின் செல்வாக்கு என்பனவற்றின் காரணமாக 55 சதவீத வாக்கைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அடுத்துவந்த பொதுத்தேர்தலில் 22 சதவீவித வாக்கு குறைந்தது. ஆர்.கே.நகரில் ஜெயலளிதைரண்டு முறை போட்டியிட்டபோதும் தேர்தல் வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை.இவை எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அமையப்போகின்றன.

பன்னீரின் அணி  இரட்டை மின்கம்ப சின்னத்தைத் தெரிவு செய்துள்ளது. இந்தச்சின்னத்தைப் பார்க்கும் போது இரட்டை இலை போன்று தோற்றமளிப்பதால் விபரம் தெரியாதவர்கள் இரட்டை இலை என நினைத்து அதற்கு வாக்களிப்பார்கள். அதிமுக புரட்சித்தலைவி அம்மா என பன்னீர்ச்செல்வத்தின் அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.  அதிமுக அம்மா என கட்சிக்குப் பெயரிட்ட தினகரனுக்கு தொப்பிச்சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தொப்பியின் மூலம் எம்.ஜி.ஆரை  ஞாபகப்படுத்த‌  ஆனால், எம்.ஜி.ஆரின் தொப்பிக்கும் தினகரனின் தொப்பிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இரண்டு அணிகளின் கட்சிப் பெயர்களிலும் அதிமுகவும் அம்மாவும் இடம்பிடித்துள்ளன. பன்னீர்ச்செல்வத்தின் தரப்பு இரட்டை மின் கம்பச்சின்னத்தைக் கேட்டுப் பெற்றது. தினகரனுக்கு முதலில் ஆட்டோ சின்னம் கொடுக்கப்பட்டது. தமக்குத் தொப்பி வேண்டும் என அவர்கள் கேட்டார்கள்.

எம்.ஜி.ஆர் புதிய கட்சியை ஆரம்பித்த பின்னர்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நான்குமுறை உட்கட்சிப் பூசல்கள் நடைபெற்றன.  அவற்றில் இரண்டு முறை கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆருக்கு எதிராக 100குற்றச்சாட்டுகளை முன்வைத்த எஸ்.டி சோமசுந்தரம் போராட்டம் நடத்தினார். .நமது கழகம் என்றபெயரில் கட்சியை ஆரம்பித்தர். கடைசியில் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். 1988 ஆம் ஆண்டு நெடுசெழியன், பண்டிருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், அரங்கநாயகம் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தார்கள். ஒரு வருடத்தில் எம்.ஜி.ஆரிடம் தஞ்சமடைந்தனர்.பண்டிருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்தின் கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜெயலலிதாவுடன்  இணைந்தார். எம்.ஜி.ஆர் காலத்தில் நால்வர் அணி. ஜெயலலிதாவின் காலத்தில் ஐவர் அணி. இப்போ தினகரனுக்கு ஆலோசனை சொல்வது நால்வர் அணி என்கிறார்கள்.

எம்,ஜி ஆரின் மீது அதிருப்பதியடைந்த  திருநாவுக்கரசர், கட்சியைக் கைப்பற்றப் போவதாக 1996 ஆம் ஆண்டு அறிவித்தார்.   அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்14  நாடாளும்மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.அவர்களில்  7  பேர் திருநாவுக்கரசரின் பின்னால் நின்றார்கள். ஒரு வருடத்தில்எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார் திருநாவுக்கரசர். எம்.ஜி ஆர்.இறந்தபோது ஜானகியும் ஜெயலலிதாவும்  முட்டி மோதியதால் கட்சி இரண்டாகி சின்னம் முடக்கப்பட்டது.  ஜானகி அரசியலை விட்டு விலகியதால் பிரிந்தவர்கள் சேர்ந்தனர். முடக்கப்பட்ட சின்னம் விடுவிக்கப்பட்டது. இப்போது ஜெயலிதாவின் மரணத்தின் பின்னர் சசிகலாவின் பதவி ஆசையால் அண்ணா திரவிட முன்னேறக் கழகம் இரண்டானது. இரண்டு அணிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்க் உரிமை கோரியதால் கழகப் பெயர்,கொடி,சின்னம் ஆகியவை முடக்கப்பட்டன.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் அவர் ஆரம்பித்த கட்சிக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் மருது கணேஷுக்கும் மதுசூதனனுக்கும்  இடையில் தான் போட்டி நடைபெறும்.திரவுட முன்னேற்றக் கழக வாக்குகள் சிதறாமல் இருந்தால் அக் கட்சியன் வேட்பாளர் மருது கணேஷ்  வெற்றி பெறுவார். வைகோ,திருமாவளவன்,வாசன், முத்தரசன்   ஆகியோரின் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கு ஆதரவு இல்லை எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தக் கட்சிகளின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் வேட்பாளர்களின் கவனம் அங்கே திரும்ப வாய்ப்புள்ளது.

தமிழக மக்களின் மன உணர்வை வெளிப்படுத்த நிலையில் ஆர்.கே. நகர வாக்காளர்கள் இருக்கின்றனர்.தமிழகத்தின் எதிர்காலம் ஆர்.கீ.நகர்  வாக்காளரின்   விரல் நுனியில் தங்கியுள்ளது.
வர்மா  
  

Tuesday, March 21, 2017

இரட்டை இலைக்காக மல்லுக்கட்டும் அ.தி.மு.க நிர்வாகிகள்

அரசியல் சாணக்கியரான கருணாநிதியால் வீழ்த்த முடியாத அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தை சசிகலாவின் மன்னார்குடிக் குடும்பம் சிதறடித்துள்ளது. சசிகலாவின் பின்னால் இருக்கும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக அரசு இயந்திரம் இயங்குகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் உள்ளவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உரிமை கோருகிறார்கள்.ஜெயலலிதாவின்  மறைவினால் காலியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெற உள்ளது.


ஆர்.கே. நகர் என சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. இத் தொகுதியில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏழு முறை வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ் ஆகியன தலா இரண்டு முறை வெற்றி பெற்றன. ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது முதல்வரின் தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்றது.ஆகையினால் இரண்டு முறையும் அதி கூடிய வாக்கு வித்தியாசத்தினால் வெற்றி பெற்றார்.
அரசியல் தலைவரின் மறைவின் பின்னர் நடைபெறும் இடைத் தேர்தலில் அனுதாப அலை உருவாகும். ஆர். கே. நகரின் அப்படி ஒரு அலை இல்லை.ஜெயலலிதாவின்  மரணம் பற்றிய சந்தேகம் அங்கே வலிமை பெறப்போகிறது. ஜெயலலிதா இறந்ததும் அவசர அவசரமாகசெயற்பட்ட உடன் பிறவா சகோதரி சசிகலா ஜெயலலிதாவின் வீடு,ஜெயலலிதாவின் அறை,ஜெயலலிதாவின் கார் ,ஜெயலலிதா அமர்ந்தா  இருக்கை போன்றவற்றைக் கைப்பற்றினார்.  சசிகலா சிறைக்குப் போனதும் அவரது குடும்ப உறுப்பினரான தினகரன் அவற்றைக் கையகப்படுத்தினார்.


உண்மையான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அடையாளம் காணும் களமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையப்போகிறது. சசிகலாவின் அணியின் சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். பன்னீரின் அணிசார்பாக மதுசூதனன் களம் இறங்கி உள்ளார். ஜெயலலிதாவின் அடையான அட்டையுடன் அவருடைய அண்ணன் மகள் தீபா  ஆர்.கே.நகரில் வலம் வருகிறார். மேலோட்டமாகப் பார்த்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள்  மூன்று பிரிவுகளாக இருப்பது போலத் தோன்றுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர விசுவாசிகள் நான்காவது பிரிவாக உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத இவர்கள் தமது கட்சியின்   வேட்பாளரில் விருப்பம் இல்லை என்பதை வெளிக்காட்ட நோட்டோவுக்கு வாக்களிப்பார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன்,மதுசூதனன்,தீபா ஆகிய மூவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளைப் பிரிக்கப்போகிறார்கள்.  மருது கணேஷ் எனும் கழகத்தின் அடிமட்டத் தொண்டரை திராவிட முன்னேற்றக் கழகம் தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. கடந்த தேர்தல்களின் போது இரண்டாவது இடத்தைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறது. விஜயகாந்தின் கட்சி மதிவாணனையும் பாரதீய ஜனதாக் கட்சி கங்கை அமரனையும் வேட்பாளராக அறிவித்துள்ளன.

மதுசூதனன், தினகரன் ஆகிய இருவரும் இரட்டை இலைச்சின்னத்தை எதிர் பார்க்கிறார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக்கழக விதிகளின் பிரமாணப்படி கழகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப் படவில்லை என பன்னீர்ச்செல்வத்தின் அணி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.  கழகப் பொதுச்செயலாளர்தான்  வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும்    என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விதி.தமிழகம்,புதுவை,ஆந்திரா,கேரளா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியமாநிலங்களில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்   தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தெரிவு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் காலத்திலே தெட்டத்தெளிவாக எழுதப்பட்டுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. நியமனம் செய்யப்படுள்ளார் எனும் குற்றச்சாட்டை தேர்தல் இணையம் ஏற்றுக்கொண்டால் சசிகலாவின் கையில் இருந்து இரட்டை இலைச்சின்னம் பறிபோய்விடும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதுசூதனும் தினகரனும் அறிவித்துள்ளனர். இரட்டை இரட்டை இலைச்சின்னம் தீவை இல்லை எனக் கூறிவந்த தீபா இப்போது யார்ட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோர உள்ளதாக அறிவித்துள்ளார். தீபாவுக்கும் இரட்டை இலைச்சின்னத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பது வெளிப்படை. மதுசூதன்,தினகரன் ஆகியவர்களின் வெற்றி இரட்டை இலைச்சின்னத்தில்  தான் தங்கி உள்ளது. தேர்தல் வாரியத்தின்  முடிவுதான் அவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகிறது.


ஸ்டாலின்,பன்னீர்ச்செல்வம், தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலான முதல் தேர்தல் இது  என்பதால் அவர்களின் எதிர்கால வெற்றிப் படிக்கட்டாக இத் தேர்தல் நோக்கப்படுகிறது. தினகரனைத் தோற்கடிப்பதில் பன்னீர் தரப்பு முனைப்பாக உள்ளது. தினகரன் வெற்றி பெற்றால் எடப்பாடியின் பதவிக்கு ஆபத்து.  ஆகையால் தினகரனைத் தோற்கடிப்பதற்கான உள்ளடி வேலைகள் கழகத்தின் உள்ளேயே நடைபெறும். அந்நிய செலாவணி மோசடியில் குற்றப்பணம் கட்டியதால் போட்டியிட முடியாது என்ற வதம் ஒருபக்கத்தில் உள்ளது. அக் குற்றத்தில் இருந்து தப்புவதற்காக தான் சிங்கப்பூர் பிரஜை என தினகரன் சொன்னது அவருக்கு எதிராக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் அல்லாத ஒருவர் அந்தக் கட்சி சார்பில் எப்படிப் போட்டியிட முடியும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு சிதறிக்கிடக்கிறது. ஆர்.கே. நகருக்கு அறிமுகம் இல்லாதவர் தினகரன். போயஸ்கார்டனில் இருந்து விரட்டப்பட்ட தினகரனை கடைசிவரை ஜெயலலிதா மன்னிக்கவில்லை.தினகரன் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை அவரது அணியில் உள்ளவர்கள் மனப்புர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. கடையாக நடைபெற்ற தேர்தல்களில் ஆர்.கே. நகர் மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர். ஜெயலலிதாவுக்கு வாக்களித்தவர்கள் தினகரனுக்கு வாக்களிப்பார்கள் என்பதை உறுதியயாகச் சொல்ல முடியாது. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என தினகரன் பேட்டியளித்துள்ளார். அவருடைய பேட்டியின் பின்னணியில் பணப் பட்டுவாடா இருக்குகோமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருது கணேஷ் [வயது 42] மாதிரியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தற்போது ஆர்.கே. நகரில் வசிக்கிறார்.   இவரது குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தது. 15 வயது முதல் அரசியலில் ஈடுபடுகிறார். பி,காம்,பி.எல் .எம்.ஏ படிதட இவர் பத்திரிகையாளராக்கப் பணிபுரிகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கும்  இத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற சேகர் பாபுவின் ஆதரவும் மருது கணேஷுக்கு இருக்கிறது. புதியவரை கட்சியின் அடிமட்டத் தொண்டனை  வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் விருப்பத்தால் மருது கணேஷின் பக்கம் அதிர்ஷ்டக் கற்று விசிகாற்று வீசியது..


பன்னீர்ச்செல்வத்தின் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். 77 வயதான இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட காவளியைச் சேர்ந்தவர். பழைய வண்ணாரப்பேட்டையில் தற்போது வசிகிறார். எஸ்.எஸ்.எல்.சி படித்த இவருக்கு  56 வருட அரசியல் அனுபவம் உள்ளது.முன்னாள் அமைச்சரான இவர்  ஆர்.கே. நகரில் முன்பு போட்டியிட்டு வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் விசுவாசி என்பன  இவரின் பலமாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்கான நீதி கேட்கும் போராட்டம் ஜெயலலிதாவின் விசுவாசிகளையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.மன்னர் குடியைச் சேர்ந்த தினகரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என்ற தகுதியுடன் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அக்கினிப் பரீட்சியாக  இருக்கப்போகிறது.
வர்மா.

Wednesday, March 15, 2017

விஷப்பரீட்சைக்குத் தயாராகும் ஆர்.கே நகர்


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெயலலிதாவை இரண்டுமுறை முதலமைச்சராக்கிய ஆர்.கே நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஜெயலலிதா மரணமானதால்  அத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 12    ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14  ஆம்திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.   ஏப்ரல் மாதம் 15  ஆம் திகதி  தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்பதால் தமிழக மக்களின் அரசியல் அபிலாஷை என்னவென்று அன்று தெரிந்துவிடும்.


எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க  முடியாத இரும்புக்கோட்டையாகக் கட்டி எழுப்பியவர் ஜெயலலிதா.ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்துள்ளது.சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு கும்பிடுபோடும் அணி. ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை  கேட்கும் பன்னீர் தலைமையிலான அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகி உள்ளது. சசிகலாவின் தலைமையை பன்னீர்ச்செல்வம் ஏற்றபோது கடுப்பாகிய ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை ஆதரித்தனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் சசிகலாவின் பின்னால் நிற்கின்றனர். 11சட்டமன்ற உறுப்பினர்களும்   12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீரை ஆதரிக்கின்றனர். எடப்பாடியை முதலமைச்சராக்குவதற்கு ஆதரவளித்தவர்கள் தொகுதிப்பக்கம் போகமுடியாது தவிக்கின்றனர் .ஜெயலலிதாவால்  விரட்டப்பட்ட தினகரனை மன்னித்த சசிகலா அவருக்கு துணைப் பொருளாளர் பதவியைக்கொடுத்துள்ளர். ஜெயலலிதா மன்னிக்காதவரை சசிகலா எப்படி மன்னிக்க முடியும் என்ற தொண்டர்களின் கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை.ஜெயலலிதாவுடன் இருந்தபடியால் சசிகலாவை ஆதரித்தவர்கள்  தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் மூன்றாகப் பிரிந்துள்ளன.. இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தனி ஒருவராகப் பரிணமித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பாதையில் பயணம் செய்யப்போவதாக மூன்று அணிகளும் பரப்புரைசெய்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிக்கும் தீபாவால் வெற்றி பெறமுடியாது. சசிகலாவின் அணிக்கும் பன்னீரின் தலைமையிலான அணிக்கும் இடையிலான  போட்டியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்து விட்டனர்.


அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எம்.ஜி.ஆர் இறந்த போது ஜானகி தலைமையிலும் ஜெயலலிதாவின் தலைமையிலும்  கட்சி இரண்டானபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. அதே போன்ற ஒரு நிலைமை  ஜெயலலிதா இறந்த பின்னரும் ஏற்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என பன்னீரின்  தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. அப்புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவிலேதான் இரட்டை இலையின் எதிர்காலம் தங்கி உள்ளது.

மூன்று வருடங்களில் மூன்றாவது தேர்தலுக்கு முகம் கொடுக்க உள்ள ஆர்.கே நகர்  ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக இருந்தது. பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக மாறியது.,2015 ஆம் ஆண்டு இத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா  160000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  2016  ஆம் ஆண்டு 97218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அத் தொகுதியில் குறைந்துள்ளதையே இது காட்டுகின்றது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பு இன்று குலைந்துள்ளதால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ஆர். கே நகரில் வெற்றி பெற்று தனது  தலைமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் திராவிட முன்னேற்றக்கழக செயல் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு அலையை தனக்கு சாதகமாகக்கும் வகையில் காய்களை நகர்த்தி வெற்றி பெற்றால்தான் அவருடைய தலைமையின் மதிப்பு உயரும். ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக்  கழக ஆட்சியின் அலங்கோலம், விவசாயிகளின் பிரச்சினை,குடிநீர் தட்டுப்பாடு,ரேசன் கடையில்  பொருட்கள் இல்லாமை, எரிபொருள் விலை அதிகரிப்பு குடிநீர் தட்டுப்பாடு போன்ற பல அஸ்திரங்கள் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக உள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி தகுதியான வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும். காங்கிரஸ்,இந்தியமுஸ்லீம் லீக், கொங்கு மக்கள் பேரவை ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சீமான், ராமதாஸ் ஆகியோர் தமது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளனர். பாரதீய ஜனதா, மக்கள் நலக் கூட்டணி ஆகியனவும் களத்தில்  இறங்கத் தயாராக இருக்கின்றன. விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார். இடைத் தேர்தலில் நம்பிக்கை இல்லை என ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்..  ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சார்பாகக் குரல் கொடுத்த வைகோ அமைதியாக இருக்கிறார். சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆலோசனையின் படி இயங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை தமிழக மக்கள் விரும்பவில்லை. இதனை உணர்ந்த தமிழக அரசியல்வாதிகள் பொது வேட்பாளரைக் களத்தில் நிறுத்தி தமது ஒட்டு மொத்த எதிர்ப்பை வெளியிட வேண்டும்.ஆனால்,,அப்படிஒரு  நிலைமை அங்கே இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளைச் சிதறடிப்பதற்கு  சகல கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. ..

ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும் ஒற்றைவரிக் கோரிக்கையுடன் பன்னீர்ச்செல்வத்தின் அணி களத்தில் இறங்க உள்ளது. சசிகலாவின் குடும்ப ஆதிக்கம், கூவத்தூர் கூத்து, தினகரனின் அடாவடி போன்றவை பன்னீரின் அணிக்கு பக்க பலமாக  உள்ளன.

ஆர்.கே  நகரில்  262721   வாக்காளர்கள் உள்ளனர்.   134307   பெண்  128305 ஆண்   109 முன்றாம் பாலின வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக  உள்ளனர். பெண்களின் ஆதரவினால் தான் ஜெயலலிதாவை அசைத்துப் பார்க்க முடியாதிருந்தது. பெண்களைக் குறிவைத்து அவர் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள்  போன்றவற்றால் வசதி இல்லாத பெண்களின் மனதில் ஜெயலலிதா இருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் வாக்காளர்கள் பன்னீரையா சசிகலாவையா ஆதரிப்பார்கள் என்பதை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.தீபாவின் உருவத்தில் ஜெயலலிதாவை காண்பவர்கள் இருப்பதனால்  தீபாவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இடைத் தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல் என்பது எழுதப்படத விதி. சுமார் பன்னிரண்டு வருடங்களின் பின்னர் ஆளும் கட்சிக்கு சவால் விடும் தேர்தலாக ஆர்.கே .நகர் இடைத் தேர்தல் அமைய உள்ளது.   வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கு பல  முன்னேற்படுகளைச் செய்தாலும் முற்று முழுதாக அதைத் தடுக்க முடியாதுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது திருமங்கல இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை திருமங்கலம் பார்முலா என்பார்கள். திருமங்கல வெற்றிக்குப் பின்னர்  அழகிரியின் பெயர் பிரபலமானது. அழகிரியால் ஒரேஒரு சட்டமன்ற உறுப்பினரைத்தான் பெற முடிந்தது.  சசிகலா தனது கைப்பிடிக்குள் 122  சட்ட மன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்.

ஆர்.கே. நகரில் தோல்வியடைந்தாலும் அதிக வாக்குகள் பெற வேண்டிய கட்டாயத்தில் பன்னீரின் அணியும் சசிகலாவின் அணியும் இருக்கின்றன.  ஜனநாயகத்தின் பண்புகள் அனைத்தும் உடைக்கப்பட்டு பணநாயகம் தலை எடுத்துள்ள  நிலையில் ஆர்.கே. நகர் வாக்களர்களின் முடிவிலே தான்  தமிழக அரசியலின் எதிர்காலம் தங்கி உள்ளது.
வர்மா

Friday, March 10, 2017

தமிழகத்தைப் பாதுகாக்க நெடுவாசலில் போராட்டம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றவும் தமிழக முதல்வர் பதவியைப் பிடிக்கவும் பன்னீர்ச்செல்வம் அணியும் சசிகலா அணியும் தமது பலத்தைக் காட்டுகின்றன. இதற்கிடையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இரு தரப்பும் பட்டிமன்றம் நடத்துகின்றன. தமிழகம் அழிவடையாமல் பாதுகாப்பதற்காக நெடுவா சலில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழகம் பாதிப்படையும் என உணர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  போராட்டம் நடத்துகின்றனர்.இருபது நாட்களுக்கு மேலாக நடைபெறும் இப் போராட்டத்தை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கண்டனம் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டதென தமிழக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள்  கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியபோது அன்று தமிழக முதலமைச்சராக இருந்த பன்னீர்ச்செல்வம் பிரதமர் மோடியைச் சந்தித்து அவசரச்சட்டமூலம் ஜல்லிக்கட்டுத் தடையை உடைத்தார். அதனால் வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.இன்று நெடுவாசலில் போராட்டம் நடைபெறும் போது தமிழக அரசியல் களம் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. பன்னீர்ச்செல்வம் தூக்கி எறியப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி உள்ளார். மத்திய அரசுக்கு பிடித்தமில்லாத ஒருவர் முதலமைச்சராக இருப்பதால் மத்திய அரசு கணக்கெடுக்காமல் இருக்கிறது. தவிர ஐந்து மாநிலங்களின் தேர்தல் பரபரப்பால் தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்ப்பதற்கு மோடிக்கு நேரமில்லை. 


  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ்தான் காரணம்.  நெடுவாசலை அடையாளம் காட்டியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என தனது எதிர்க் கட்சிகளை அடையாளம் காட்டிவிட்டு பாரதீய ஜனதா அரசு கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போதுதான்  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் கால்கோள் இடப்பட்டது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு குற்றம் சுமத்துகிறது. மீதேன் வாயு தொடர்பாக ஆய்வு நடத்துவதற்குத்தான்  திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதலளித்தது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தப்பிக்கிறார். அரசியல்வாதிகள் தம்மைப் பாதுகாப்பதில் குறியாக இருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளைக் கணக்கில் எடுக்காத மக்கள்  போராட்டம் நடத்துகிறார்கள். நெடுவாசலில்   மீதேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் உறுதிபடக்கூறியுள்ளனர்.

 ஹைட்ரோகார்பன்  திட்டத்தால் தமிழகம் பாலைவனமாகிவிடும் .விவசாய நிலங்கள் பாழடைந்து விடும். நிலத்தடி நீர் காணமல் போய்விடும் என்பதை அறிந்த தமிழக மக்கள் அதற்கு  எதிராகப் போராடுகிறார்கள். தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் வரத்து என பாரதீய ஜனதா அரசு கூறுகிறது. மத்திய அரசாங்கத்தை தமிழக மக்கள் நம்பவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றி அத் துறைசார் வல்லுனர்கள் கூறுவதைக் கேட்டால் நடுக்கம் ஏற்படுகிறது

மீதேன் வகை எரிவாயுக்கள்,எண்ணெய் ஆகியவற்றின் கூட்டுக்கலவையைத்தான் ஹைட்ரோ கார்பன் என்பார்கள். பூமியின் கீழே சுமார்  பத்தாயிரம் அடி ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கிடக்கும் வாயுவை வெளியே எடுத்து பெற்றோலியப் பொருட்களையும் எரிவாயுவையும் தனித்தனியாகப் பிரித்து எடுப்பார்கள்.மேலோட்டமாகப் பார்த்தால்  ஆபத்தில்லாத வேலை போன்று தான் தோற்றமளிக்கும். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மிக ஆபத்தானவை. உலகின் பல நாடுகள் இதற்குத் தடை விதித்துள்ளன. நெடுவாசலில் 2500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டொரு இடங்களில் துளையிடுவர்கள்  நிலத்தடி நீர், சுண்ணாம்புக்கல் ,பாறை ஆகியவற்றை ஊடுருவி  ஹைட்ரோகார்பன்  பகுதியைச்சென்றடையும். அங்கிருந்து பக்கவாட்டில் செல்லும் குழாய்கள் எரிவாயுவை வெளியே இழுத்துவரும். இந்தச்செயற்பட்டின் போது நிலத்தடி நீர் முற்றிலுமாக வெளியேற்றப்படும். அதனைச்செய்வதற்கு இராசயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். அக்கலவைகலவைகளால்  புற்றுநோய்,  சுவாசக்கோளாறு, சிறுநீரக நோய் போன்றவை ஏற்படும். நிலத்தடி நீர்  வெளியேற்றப்படுவதால் விவசாய நிலம் பாலைவனமாகும்.

நிலத்தடியின் உறங்கிக்கிடக்கும் எரிவாயுவை வெளியே கொண்டு வருவதற்கு இரண்டு கோடி லீற்றர் தண்ணீர் தேவைப்படும். எரிவாயுவைப் பிரித்தெடுக்க கழிவுகளை அகற்றும் நடைமுறையை   மிகப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். சயனைட் வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டதில் இருந்து இந்திய இன்னமும் மீளவில்லை நெடுவாசலில் பிரித்தெடுக்கப்படும் எரிவாயு குழாய் மூலம் 80 கி.மீ  தூரத்தில் உள்ள  கோவிக்கலப்பை என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படும்.20 வருடங்களுக்கு எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எரிவாயு கிடைக்கும் அளவைப் பொறுத்து மேலும்  10 வருடங்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் நீடிக்கப்படலாம்.

பெற்றோலியப் பொருட்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இந்தியா  உள்ளது. 2010 ஆம் ஆண்டு மீதேன் திட்டத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். எரிபொருளின் பவனை கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற ஆய்வையும் வெளியிட்டார். அப்போது தமிழகம், புதுவை,ஆந்திரா,  ,குஜராத், அருணாசலப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் உள்ள 46  இடங்களில் எரிவாயு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நெடுவாசல், காரைக்கால் ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதிக வளமுள்ள பகுதியாக காவிரி படுக்கை அடையாளம் காணப்பட்டது. வர்த்தக் ரீதியாக எரிவாயும் கிடைக்கும் இடம் என 2008 ஆம் ஆண்டு நெடுவாசல் உறுதி செயப்பட்டது.

காங்கிரஸ் அரசால் திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த ஹைட்ரோகார்பன்  திட்டத்தை பாரதீய ஜனதா அரசு   தூசு தட்டி கையில் எடுத்துள்ளது.இந்திய மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்தான் இதனை ஏலத்தில் எடுத்துள்ளார். அதனால் தான் மத்திய அரசு அவசரம் காட்டுகிறது என்ற கருத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. எரிவாயு எடுப்பதற்காக அடையாளம் காணப்பட்ட 46 இடங்களில்  31  இடங்களுக்கு மட்டுமே டெண்டர் கோரப்பட்டது.இவற்றை  4பொதுத்துறை நிறுவனங்களும்   17 தனியார் நிறுவனங்களும் ஒரு வெளிநாட்டு நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.  நெடுவாசலுக்காக ஆறு நிறுவனங்கள் போட்டியிட்டன.

நெடுவாசலில்  27 85 ஆயிரம் பரல்எண்ணெயும்   1243 மில்லியன் அடி அளவு எரிவாயுவும் எடுக்க முடியுமாம். இதனால் அரசுக்கு  ஆயிரம் கோடி ரூபா ரோயல்ரியாகவும்   9300 கோடி ரூபா பங்காகவும் கிடைக்கும். தேடுவாசலில் உள்ள விவசாய மக்களுக்கு தெருக்கோடி கூட மிஞ்சாது. மத்திய கிழக்கு நாடுகளில்  மக்கள் குடியிருப்பு  இல்லாத இடங்களில்தான் இத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், அரபிக்கடல், வங்காளவிரிகுடா ஆகிய கடல் பரப்புகளில் எராளமான எண்ணெய் வளம் உள்ளது.  ஹைட்ரோகார்பன் திட்டத்தை கடல் பகுதியில் நடைமுறைப் படுத்தினால் மக்கள் குடியிருப்பும் விவசாய நிலங்களும் வளமாகும்.
வர்மா