Tuesday, September 30, 2008

தமிழககாங்கிரஸின் கனவுக்குமுற்றுப்புள்ளிவைத்த முதல்வர்


தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் இல்லை என்று முதல்வர் கருணா
நிதி வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனவெளிப்படையாக அறிவித்து விட்டார். விஜய
காந்தின் கட்சித் தொண்டர்களுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் இடையிலான
உரசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தஇரண்டு விஷயங்களினால் தமிழக அரசியல்
சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்க
வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்டகால கனவை முதல்வர் கருணாநிதி கலைத்துவிட்
டார். 1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாத்துøர தலைமையிலான திராவிட முன்
னேற்றக் கழகத்திடம் தமிழக அரசைப் பறிகொடுத்தபின்னர் தமிழகத்தில் தனது செல்வாக்கை
இழந்த காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கைமீண்டும் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள்
எவையும் வெற்றியைக் கொடுக்கவில்லை.திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் ஆகியவை ஆட்சிஅமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி பெருத்துணை
புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதுஅதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற திராவிட
முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பதற்குரியஅறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் திராவிடமுன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மிகப் பெரிய கூட்டணியில் இப்போது
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தான் எஞ்சியுள்ளன. காங்கிரஸ் கட்சி
யின் ஆதரவுடன் தமிழக ஆட்சி நடைபெறுவதனால்ஆட்சியில் பங்கு கேட்டால் தமிழக அரசு
தந்துவிடும் என்று நம்பிய காங்கிரஸ் கட்சிபணிவுடன் ஆட்சியில் பங்கு கேட்டது.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சிஎன்ற கோஷத்துடன் திராவிட முன்னேற்றக்
கழகம் ஆட்சி நடத்துகிறது. மத்தியில் கூட்டாட்சிமாநிலத்திலும் கூட்டõட்சி என்ற புதிய
கோஷத்தை தமிழக காங்கிரஸ் முன் வைத்தது.தமிழக ஆட்சியைப் பங்கு போட்டு தமது கட்சி
யில் உள்ளவரை அமைச்சராக்க வேண்டும்என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்
முயற்சி செய்தார். தமிழக ஆட்சியில் பங்குகேட்டால் புதுவையில் தமக்கு பங்கு தர வேண்டு
ம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டதும்தமிழக காங்கிரஸ் கட்சி மௌனமாகியது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவி
யுடன் தான் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில்ஆட்சி நடத்துகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம்கொடுத்தால்
புதுச்சேரி அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடந்தர வேண்டும்
என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.புதுவை அமைச்சரவையில் திராவிட முன்
னேற்றக் கழகம் இடம்பெறுவதற்கு புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஒத்துக்
கொள்ளாது என்ற நம்பிக்கையிலேயேமுதல்வர் இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் போன்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலும் பல பிரிவுகள் உள்ளன. காங்
கிரஸ் கட்சிக்குள் பிரிவுகள் பல இருந்தபோதும் புதுவை அமைச்சரவையில் திராவிட முன்
னேற்றக் கழகத்துக்கு இடம்கொடுக்கக் கூடாதுஎன்பதில் புதுவை காங்கிரஸ் உறுப்பினர்கள்உறுதியாக உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின்அமைச்சரவைக்
கனவை முதல்வர் தகர்த்த அதேவேளை விஜயகாந்தின் முதல்வர் கனவுக்கு குறுக்கே வடி
வேல் வந்து நிற்கிறார்.வடிவேலின் வீட்டின் மீதும் அலுவலகத்தின்
மீதும் கடந்த வாரம் நடந்த தாக்குதலுக்கு விஜயகாந்த் தான் காரணம் என்று வடிவேல் குற்றம்
சாட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்பின்னணியில்தான் வடிவேல் தன் மீது குற்ற
ம் சுமத்துவதாக விஜயகாந்த் கூறியுள்ளார்.வடிவேலின் வீட்டின் மீதான தாக்குதலுக்கும்
தனது கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று விஜயகாந்த் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஆøகயினால் தாக்குதலின் பின்னணியில் விஜயகாந்த் இருக்கிறாரோ என்ற சந்தேகம் சில
ரிடம் உள்ளது. தவிர இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்குரிய எந்தவிதமான
ஒரு நடவடிக்கையையும் விஜயகாந்த் முன்னெடுக்கவில்லை.
நடிகர் சங்கத் தலைவராக இருந்து பல நல்லகாரியங்களைச் செய்த, விஜயகாந்த் அரசியல்
தலைவராகியதும் அரசியல் நோக்கத்துடனேயே செயற்படுகிறார்.
விஜயகாந்துடனான பிரச்சினையினால்உணர்ச்சிவசப்பட்ட வடிவேல், விஜயகாந்தை
எதிர்த்து போட்டியிடுவதற்காகவே அரசியல்கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக கூறி
யுள்ளார்.
ரசிகர்களின் ஆதவுடன் அரசியல் கட்சிஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர்
எம்.ஜி.ஆர். ரசிகர்களின் பலத்தில் உள்ள நம்பிக்கையால் அரசியல் கட்சி ஆரம்பித்தார் விஜ
யகாந்த். சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த்மட்டும் வெற்றி பெற்றார். அவரை நம்பிப்
போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர்.ரசிகர்களின் ஆதரவுடனும் அரசியல்
கட்சியின் பலத்துடனும் தேர்தலில் வெற்றிபெற்றவர் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
நெப்போலியன், எஸ்.எஸ். சந்திரன், ராதாரவி, என். வி. சேகர் ஆகிய நடிகர்களுக்கு ரசி
கர்களின் ஆதரவு பெரியளவில் இருக்கவில்øல என்றாலும் அரசியல் கட்சியின் பலத்தி
னால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். பலமான அரசியல் கட்சியின் செல்வாக்குடன்
தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகர்தோல்வியடைந்தார்.
ரசிகர்களின் ஆதரவும் அரசியல் பின்புலமும் இல்லாத வடிவேல் கட்சி ஆரம்பிக்கப்
போவதாக கூறுவது நøகச்சுவை போல் தோன்றினாலும் பலமான அரசியல் கட்சி ஒன்று அவ
ருக்குப் பின்னால் இருக்கிறது.விஜயகாந்த்துக்கு எதிராக வடிவேல் பகிரங்
கமாகக் குற்றம் சாட்டியதால் வடிவேல் நடிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக விஜயகாந்
தின் கட்சித் தொண்டர்கள் கிளர்ந்தெழக்கூடும்.ஆகையால், வடிவேல் நடிக்கும் படங்கள்
வெளிவருவதில் சிக்கல் ஏற்படலாம்.எப்படியோ, சினிமாவுடன் மறக்கப்பட
வேண்டிய நகைச்சுவை அரசியலிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 18 09 08

முப்பெரும்தேவியரே போற்றி



மலைமகளே மாதரசியே
கலையூர்தியே கற்பகமே
முக்கண்ணன் நாயகியே
முக்கனியே வந்திடம்மா

நாரணியே தரணிபோற்றும்
பூரணியே வந்திடம்மா
பகையைதீர்த்திடம்மா வெற்றி
வாகையைத்தந்திடம்மா


நண்ணார்மிடுக்கொடிக்க
மண்ணிலேவந்திடம்மா
எல்லையிலாநாயகியே
தொல்லைகளைப்போக்கிடம்மா

திருப்பாற்கடலில்தோன்றியவளே
திருமாலைத்துணையாய் தேர்ந்தவளே
திருவேஉருவாய் உடையவளே
கருணைக்கண்காட்டிடம்மா

செங்கமலநாயகியேதாயே
மங்காதசெல்வம் தந்திடம்மா
திருமகள் எனும்நாமத்தவளே
திரும்பியேகொஞ்சம்பாரம்மா


செல்வத்துக்கதிபதியே
செல்வியே முண்டகாசினி
பெருந்தன்மைகாத்திடவே
பெருமலையைத்தந்திடம்மா


கலைகளின் நாயகியே
கலைவாணியே வந்திடம்மா
முத்தமிழைத்தந்திடம்மா
பக்தர் நாம்சிறப்புறவே

நான்முகன் கிழத்தியே
வெண்தோடகத்தில் இருப்பவளே
பண் இசைபாடிடவே
நாவினில் வந்திடம்மா

வெண்டாமரைத்தேவியே
கண்மலர்ந்துபார்த்திடம்மா
கலையரசியேமாதேவி
நிலையாகநின்றிடம்மா

அங்கையற்கண்ணியே போற்றி
அர்த்தநாரீஸ்வரியே போற்றி
அலையிடைப்பிறந்தவளேபோற்றி
செல்வாம்பிகையே போற்றி
வித்தியார்த்திதேவியேபோற்றி
முப்பெரும்தேவியரே போற்றி
ஆதிபராசக்தியே போற்றி போற்றி

ரமணி
வீரகேசரி வாரவெளியீடு 28 09 08

Thursday, September 25, 2008

சர்ச்சைகளுக்குமத்தியில் சரித்திரம்படைத்தார்



இந்தியாவின் 13 ஆவது ஜனாதிபதியாகபிரதீபா பட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மிக அதிகளவில்
வாக்களித்து தமது நாட்டின் ஜனாதிபதியாகபிரதீபா பட்டீலை மிக அதிகப்படியான வாக்கு
களால் தெரிவு செய்துள்ளனர்.இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்குப்
பின்னர் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியார் என்ற கேள்வி எழுந்த உடனேயே எமது
ஜனாதிபதியான அப்துல் கலாம் இரண்டாவதுமுறையும் ஜனாதிபதியாக வரவேண்டு
ம் என்று இந்தியாவின் பெரும்பாலான மக்கள்கருதினார்கள்.
மக்கள் விருப்பத்துக்கு மாறாக இந்திய அரசியல் வாதிகள் அப்துல் கலாமைத் தவிர்த்து
வேறு ஒருவரை ஜனாதிபதி ஆக்கும் முயற்சியில் இறங்கினர்.
விஞ்ஞானியாக உலகுக்கு அறிமுகமாகியஅப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதி
யான பின்பும் அரசியலை விட ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கே முதலிடம்
கொடுத்தார். இரண்டாவது முறை ஜனாதிபதியாகப் போவதில்லை என்று அப்துல்
கலாம் அறிவித்தது அரசியல் வாதிகளுக்குவாய்ப்பாகப் போய்விட்டது.
மீண்டும் தான் ஜனாதிபதியாவதை அப்துல் கலாமே விரும்பவில்லை என்று கூறிய
அரசியல்வாதிகள் தமது சொல்லுக்குத்தலையாட்டும் ஒருவரைத் தேடத் தொடங்கினர்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் தமது செல்வாக்கை ஜனாதிபதி
தெரிவில் காட்ட முனைந்தன. இதன் காரணமாக ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்
யும் முடிவில் காலதாமதம் ஏற்பட்டது.துணை ஜனாதிபதி பைரோசிங்
ஷெவாக்கை ஜனாதிபதியாக்க வேண்டும்என்று பாரதீய ஜனதாக் கட்சி கூறியது.
துணை ஜனாதிபதியான ஷெகாவத்துக்கும்ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை
எழுந்தது. அதன் காரணமாக பாரதீய ஜனதாக்கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்
பாளரானார் ஷெகாவத்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சியோ முடிவெடுக்க முடியாது தடுமாறி
யது. காங்கிரஸ் கட்சியும், கொம்யூனிஸ்ட்கட்சிகளும் ஆளுக்கு ஒருபுறமாக நின்று
தமது செல்வாக்கைக் காட்ட முயற்சித்தன.தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லியில்
முகாமிட்டு காங்கிரஸ் கட்சிக்கும் கொம்யூனிஸட் கட்சிக்கும் இடையில் இணைப்பாள
ராக செயற்பட்டார்.காங்கிரஸ் கட்சி கூறுபவர்களை கொம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரித்தன. கொம்யூ
னிஸ்ட் கட்சிகள் சிபார்சு செய்பவர்களைகாங்கிரஸ் கட்சி நிராகரித்தது. இறுதியில் இந்
தியாவின் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் தொடங்கும் வகையில் பிரதீபா பட்டீ
லின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந் தியாவின் பல மாநிலங்களில் இருந்துபல சமூகத்தவர்களும், பலமதத்தவர்களும்இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இதுவரை பெண் ஒருவர்இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்ப
டவில்லை. இந்தக் குறையைப் போக்கும்விதமாக பெண் ஒருவரின் பெயர் இந்திய
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என கோஷமிட்டவர்கள் இதனைமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். எதிர்க்கட்சிக
ளோ இதனை எப்படி முறியடிக்கலாம் என்றுதிட்டம் போட்டன.
பிரதீபா பட்டீலை எதிர்த்து தனது வேட்பாளரை நிறுத்த விரும்பாத பாரதீய ஜனதாக்
கட்சி சுயேட்சையாகப் போட்டியிட்ட ஷெகாவத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கு
ம் வேளையில் ஜெயலலிதா, சந்திரபாபுநாயுடு, முலாயம்சிங் ஆகிய தலைவர்கள்
மூன்றாவது அணி என்று தம்மை அழைத்துக்கொண்டு தமது சார்பில் ஜனாதிபதி வேட்
பாளரைக் களமிறக்க ஆலோசனை செய்தனர்.
பிரதீபா பட்டீலும், ஷெகாவத்தும் நேரடியாகப் போட்டியிட்டால் பிரதீபா பட்டீல்
வெற்றி பெறுவது உறுதி.இந்த நிலையில் பிரதீபா பட்டீலை ஓரம்
கட்டக் கூடிய வேட்பாளரைத் தேடிய மூன்றாவதுஅணி ஜனாதிபதி அப்துல் கலாø
மயே மீண்டும் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என முடிவு செய்தது.
அரசியல் வாதிக்குரிய எந்தவிதமான குணநலன்களும் இல்லாது ஜனாதிபதி மாளிகைø
ய மக்கள் மாளிகையாக மாற்றிஅமைத்த அப்துல் கலாமின் பெயரை மூன்றா
வது அணி அறிவித்ததும் நடு நிலையாளர்கள் அதிர்ந்து விட்டனர்.
அரசியல் செய்தது போதும் மாணவர்களுக்காகதனது வாழ்க்கையை அர்ப்பணிக்கப்
போகிறேன் என்று கூறிய அப்துல்கலாம்இதற்கு ஒப்புக் கொள்ளமாட்டார் என்றே பல
ரும் கருதினர்.காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தநிலையில் மூன்றாவது அணித்தலை
வர்கள் அப்துல் கலாமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜனாதிபதித் தேர்தலில் சூடு ஏறத்தொடங்கிய வேளையில் போட்டியின்றி
ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாதுஎன்பதை உணர்ந்த அப்துல் கலாம் போட்டி
யின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்படக்கூடிய சூழல் இல்லை என் பதை உணர்ந்து
கொண்ட அவர் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினால் யோசிக்கலாம் எனக் கூறினார்.
இந்த வார்த்தை அவருக்கு எதிராக ஒருசிலரைப் பேச வைத்தது. யாரையும் பகைக்கக்
கூடாது என்பதற்காக ஒருமித்த கருத்தைஈட்டும்படி அவர் கூறியதை சில அரசியல்
வாதிகள் பகிரங்கமாக விமர்சித்தனர்.மூன்றாவது அணியின் முயற்சி தோல்வி
யில் முடிந்ததனால் ஜனாதிபதி தேர்தலில்யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என
மூன்றாவது அணி அறிவித்தது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி பிரதீபாபட்டீல்தான் என்ற திட்டவட்டமான முடிவான
நிலையில் பிரதீபா பட்டீலுக்கு எதிராககுற்றச் சாட்டுகள் குவிந்த வண்ணம் இருந்
தன.மிக மோசமான ஒரு குற்றவாளியையேகாங்கிரஸ்கட்சி தேர்வு செய்துள்ளது.
கொலை மோசடி, பழிக்குப்பழி என்று மூன்றாந்தர அரசியல் வாதிபோல் பிரதீபா பட்டீல்
நடந்து கொள்வார் என அவருக்கு எதிரானவர்கள் பிரசாரம் செய்தனர்.
நாளும் பொழுதும் பிரதீபா பட்டீலை பற்றிய புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இவற்றை எல்லாம் புறந்தள்ளிய காங்கிரஸ்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் பிரதீபாவுக்கு
ஆதரவு தேடும் கூட்டங்களை கோலாகலமாக நடத்தின.
ஜனாதிபதி தேர்தலில் அன்று மூன்றாவதுஅணியின் மிக முக்கிய தலைவர்களில் ஒரு
வரான ஜெயலலிதா மனம்மாறி தேர்தலில்வாக்களிக்கும்படி தனது கட்சியின் நாடாளு
மன்ற உறுப்பினர்களுக்கும், சட்டசபைஉறுப்பினர்களுக்கும் உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த மனமாற்றத்தினால்வைகோவின் கட்சி உறுப்பினர்களும்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தனர்.தமிழக சட்டசபையைச் சேர்ந்த 234 உறுப்
பினர்களில் 231 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஆகியவற்றின் சார்பில் 66 உறுப்பினர்கள்
சட்ட சபையில் உள்ளனர்.ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்
னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாக்க
ளிக்கவில்லை. ஒரு வாக்கு செல்லாதது.ஷெகாவத்துக்கே வாக்குகள் பதிவாகியி
ருக்கவேண்டும்.ஆனால் தமிழகத்தில் ஷெகாவத்துக்கு 59
வாக்குகள் கிடைத்தன. மாறி வாக்களித்தநான்கு பேர் யார் என்ற கேள்விக்கு விடைதெரி
யவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்லாது ஷெகாவத்துக்குவாக்களிக்க வேண்டிய 30 நாடாளு
மன்ற உறுப்பினர்களும் 47 சட்டமன்றஉறுப்பினர்களும் பிரதீபா பட்டீலுக்கு வாக்களித்
துள்ளனர்.பிரதீபாவுக்கு மொத்தம் 6 இலட்சத்து 26ஆயிரத்து 350 வாக்குகள் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 11ஆயிரத்து 766 வாக்குகள் அவருக்குக்
கிடைத்துள்ளன. கட்சி மாறி கிடைத்த வாக்குகளால்தான் இவ்வளவு கூடுதல் வாக்குகள்
பிரதீபாவுக்குக் கிடைத்துள்ளது.அதே சமயம், ஷெகாவத்துக்கு 3 இலட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9ஆயிரத்து 895 வாக்குகள் குறைந்துள்ளன.
குஜராத்தில் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேர் அசாம் கண பரிஷத்தைச் சேர்ந்த
15 சட்டசபை உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள்பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர்.
இதேபோல், ஜார்க்கண்ட், அருணாசலப்பிரதேசத்திலும் பிரதீபாவுக்கு, எதிர் முகாமி
லிருந்து கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக
கூட்டணிக்கு 37 பேர் உள்ளனர். அவர்களில்8 பேர் பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர்.
அதை விட மோசமாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 8 பா.ஜ.க உறுப்பினர்களில்
ஒருவர் மட்டுமே ஷெகாவத்துக்கு வாக்களித்துள்ளார். மற்ற 7 பேரும் பிரதீபாவுக்கு
வாக்குப்போட்டு விட்டனர்.மத்திய பிரதேச மாநிலத்தில் ஷெகாவத்துக்கு
ஆதரவாக விழுந்த 11 வாக்குகளில்ஓம் ஜெய ஸ்ரீ ராம் என்ற எழுத்துக்கள் இருந்ததால்
அவை செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதனால் ஷெகாவத்துக்குப்
பின்னடைவு ஏற்பட்டது. மிஸோராம், கேரளா, மேற்கு வங்கம், திரி
புரா ஆகிய மாநிலங்களில் ஷெகாவத்துக்குஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.
ரமணி

மெட்ரோநியூஸ் 27 07 2007

Sunday, September 21, 2008

தமிழக அரசியல் பங்காளியாக துடிக்கிறது தமிழக காங்கிரஸ்



இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் மிகப் பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக்கழகம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது யாருடன் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தடுமாறிக்கொண்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கட்சியும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேறி அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துடன் இணைந்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேற்றியது. மாக்சிஸ்ட் கட்சியும், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெறியேறிய கட்சிகளில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மீளப் பெறுவதாயின் அக்கட்சிகளின் பலத்தை ஒத்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் உள்ளது.
தமிழகத்தில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு திக்கில் உள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் அடுத்த தேர்தலையும் இணைந்து சந்திக்க உறுதி பூண்டுள்ளன.
திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சியும் அடுத்த தேர்தலில் இணைந்தே போட்டியிட வேண்டிய சூழலில் உள்ளன. இதேவேளை விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி என்று கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சியோ பாட்டாளி மக்கள் கட்சிக்கு பரிந்து பேசுவதைத் தவிர்த்து வருகிறது. இடதுசாரிகள் இதுவரை யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றைத் தவிர வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர விரும்புகின்றனர்.
தமிழகத்தில் இழந்திருக்கும் செல்வாக்கை மீளப் பெறுவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு செல்லும் அதே வேளையில் பொது மக்களுக்குத் தேவையான பொருட்களை சலுகை விலையில் வழங்கி வருகிறது.
தமிழக அரசு கவர்ச்சிகரமான பலதிட்டங்களை முன்னெடுத்துச் சென்றாலும் மின்வெட்டு தமிழக அரசுக்கு கரும்புள்ளியாகவே உள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்படும் மின் வெட்டை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகின்றன. தமிழக அரசை அகற்றுவதற்கு மின்வெட்டு ஒன்றே போதும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
பலவீனமாக இருக்கும் கூட்டணியை பலமடையச் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலையில் தமிழக முதல்வர் உள்ளார். திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி, விஜயகாந்தின் கூட்டணி அமைந்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிக்கலாம். இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்பமாட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டு தொகுதி உடன்பாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்தான் அப்படி ஒரு நிலை உருவாகும். தொகுதி உடன்பாடு சுமுகமாக நடைபெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பலியானதாகி விடும்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு வழி தான் தமிழக முதல்வரின் முன்னால் உள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம்கொடுத்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம்.
1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடமுன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியை தமிழக ஆட்சியில் இருந்து அகற்றியது. அண்ணா நூற்றாண்டு விழாவில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது.
கட்சிகளின் கூட்டணி எப்படி இருக்கும் என்ற ஆரூடங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை கழகத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றி விடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக் கொண்டே வருகிறது.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்கு சன் தொலைக்காட்சியும் ஒரு காரணம். மாறன் சகோதரர்கள் முதல்வரை விட்டுப் பிரிந்த பின்னர் கழகத்தின் சாதனைகளுக்கு சன் தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தின் பலமான ஊடகம் இல்லாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கப் போகிறது.
ஆட்சியைத் தக்க வைக்க முதல்வர் கருணாநிதி தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறார். எம்.ஜி.ஆரைத்தவிர வேறு எவரையும் தொடர்ந்து ஆட்சி அமைக்க தமிழக மக்கள் அனுமதிக்கவில்லை.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு (21.09.2008)

பொறுமை காக்கிறார் வைகோ


தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணிக் குழப்பங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி சேர்ந்த பல கட்சிகள் இன்று சிதறிப் போயுள்ளன. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் நீடித்தாலும் வெளியேற முடியாத சூழ்நிலையில் கூட்டணியில் இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் பிரதான பங்கு வகித்தவர் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தினார். வைகோவின் அரசியல் பலத்தை உணர்ந்த கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமது கட்சியின் வெற்றிக்காக அவருடன் கூட்டணி சேர்ந்தார்கள்.
வைகோவின் வளர்ச்சி தமிழகத்தின் இரு பெரும் கழகங்களையும் கதி கலங்க வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம் வைகோவின் அரசியல் வளர்ச்சியை அசைத்துப் பார்த்தது. வன்னியர் சமூகத்தின் வாக்கு வங்கி என்று மார்தட்டிய பாட்டாளி மக்கள் கட்சிக்குரிய முக்கியத்துவத்தை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வழங்கினர். அதன் காரணமாக வைகோ சற்று பின்தள்ளப்பட்டார். கூட்டணியில் தனக்குரிய இடத்தை கேட்டுப் பெறுவதில் டாக்டர் ராமதாஸ் கண்டிப்பாக இருந்தார். கூட்டணியின் வெற்றிக்காக சில விட்டுக் கொடுப்புகளுடன் தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களைத் தாங்கிக் கொண்டõர் வைகோ. வன்னியர் வாக்கு வங்கி மூலம் உச்சத்துக்குச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி குறையத் தொடங்கியுள்ளது. வன்னியர்கள் அதிகளவு உள்ள இடங்களிலேயே பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றுக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இத்தனை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை.
அடுத்த தேர்தலையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்கத் தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் வைகோ.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வைகோ இணைந்திருந்தபோது அவருக்கு கடைசி இடமே கிடைத்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது.
செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைகோவுக்கு எதிராகப் போராடினார்கள்.
செஞ்சி இராமச்சந்திரனும் எல். கணேசனும் வைகோவுக்கு எதிராகக் கிளர்ந்தபோது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்து விட்டது என்ற கருத்து நிலவியது. வைகோவை எதிர்த்து போராடியவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் அரவணைத்தது. ஆனால், அந்தச் சலசலப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வைகோவின் செல்வாக்கின் முன்னால் அவர்களது கிளர்ச்சி தவிடு பொடியானது.பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டைகளில் வைகோவுக்கு செல்வாக்கு உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கும்மிடிப் பூண்டி, அணைக்கட்டு, திண்டிவனம் போன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு வைகோ தான் காரணம்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 61 இடங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. வைகோவின் தயவு இல்லையென்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை இதனைவிடக் குறைவானதாக இருக்கும். எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் வைகோ இருந்திருந்தால் கூட்டணிகளின் தயவு இன்றி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து ஆட்சி அமைத்திருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளான இடதுசாரிகள் வெளியேறி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் தூக்கி எறிந்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸின் தமிழகத் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேரத் துடிக்கின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானது.
தனக்குரிய மரியாதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிடைக்கும் என்று வைகோ நம்புகிறார். வைகோவின் நம்பிக்கையை ஜெயலலிதா நிறைவேற்றுவரா? தட்டிக் கழிப்பாரா என்பதை அறிய அரசியல் உலகம் ஆவலாக உள்ளது.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு (14.09.2008)

Tuesday, September 16, 2008

இமயம் சரிந்தது


பராசக்தி பெற்ற தவப்புதல்வனின் மறைவால் தமிழ் இதயங்கள் அனைத்தும் குமுறியழுதுகொண்டிருக்கின்றன. ஈடுசெய்ய்யமுடியாத என்றசொற்றொடர் இலட்சத்தில் ஒருவரான நடிகர் திலகத்துக்குப் பொருந்தி உள்ளது.
ஈடு இணையற்ற நடிப்புலக இமயம் சரிந்ததால் இட்டுநிரப்பமுடியாத பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
பாடத்தெரிந்தவர்கள் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்திருந்தகாலம்.50சங்கீதங்கள் 75 சங்கீதங்கள் உள்ளதிரைப்படம் எனவிளம்பரம் செய்யப்பட்டகாலம். நடிகர்களுடன் நடிகர்களும் போட்டிபோட்டுப்பாடிநடித்தகாலம்.
ஒரு புதியநடிகர் மூச்சுவிடாமல் வசனம் பேசிநடித்ததால் தமிழ்த்திரை உலகம் அவரைத்திரும்பிப்பார்த்தது.ஒரே படத்தின் மூலம் வி.சி.கணேசன் பிரபலமானார்.1952 ஆம் ஆண்டு வெளியான "பராசக்தி" 52 வாரங்கள் ஓடிசாதனை புரிந்ததால் தமிழ்த்திரை உலகின் புதியசகாப்தம் ஆரம்பமானது.
கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க வி.சி.கணேசன் காரணமானார்.
9152 ஆம் ஆண்டி பராசக்தியைத்தொடர்ந்து இரண்டாவது படமான "பணம்" வெளியானது.என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம் ஆகியோர் இணைந்து நடித்தனர். 1953 ஆம் ஆண்டு மூண்றாவது படமான "பரதேசி" என்ற தெலுங்குப் படம் வெளியானது. அதே ஆண்டு வெளியான "பூங்கோதை","திரும்பிப்பார்" ஆகியன வி.ச்.கணேசனின் புகழை அதிகமாக்கின.
9154 ஆம் ஆண்டி வெளியான"மனோகரா" மீண்டிம் ஒருமுறை கலைஞர்,கணேசன் கூட்டணியை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. பராசக்தியின் வசனம் மறக்கமுதல் மனோகராவின் வசனம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்தது.
மனோகரா படத்தில் படத்தில் வரும் மனோகரனின் தாயார் பத்மாவதி,தந்தை புருஷோத்தமன்,தந்தையின் காதலி வசந்தசேனை,வசந்தசேனையின் மகன் அசடன் வசந்தன் ஆகியபாத்திரங்களை அவர் நாடகத்தில் ஏற்று நடித்திருந்தார்.
சினிமாவுக்குமுன்னோட்டமாக நாடகத்தில் அனைத்துப்பாத்திரங்களையும் நடித்துள்ளார். நாடகத்தில் பத்மாவதியாக நடிகர்திலகம் நடித்ததுபோன்று திரைப்படத்தில் கண்ணாம்பா நடிக்கவில்லை என நாடகத்தைப்பார்த்தவர்கள்கள்கூறுகின்றார்கள்.அதே ஆண்டு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான மனோகரா படத்திலும் இவர் நடித்தார்.மனோகரா வெளியாகி பரபரப்பான நேரம் "கூண்டுக்கிளி" என்ற படம் வெளியானது.இருபெரும் திலலங்கள் நடித்த இப்படம் தோல்வியடைந்தது.கூண்டுக்கிளி சிவாஜியின் 17 ஆவது படம்.




பராசக்தி பெற்ற தவப்புதல்வனின் மறைவால் தமிழ் இதயங்கள் அனைத்தும் குமுறியழுதுகொண்டிருக்கின்றன. ஈடுசெய்ய்யமுடியாத என்றசொற்றொடர் இலட்சத்தில் ஒருவரான நடிகர் திலகத்துக்குப் பொருந்தி உள்ளது.
ஈடு இணையற்ற நடிப்புலக இமயம் சரிந்ததால் இட்டுநிரப்பமுடியாத பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
பாடத்தெரிந்தவர்கள் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்திருந்தகாலம்.50சங்கீதங்கள் 75 சங்கீதங்கள் உள்ளதிரைப்படம் எனவிளம்பரம் செய்யப்பட்டகாலம். நடிகர்களுடன் நடிகர்களும் போட்டிபோட்டுப்பாடிநடித்தகாலம்.
ஒரு புதியநடிகர் மூச்சுவிடாமல் வசனம் பேசிநடித்ததால் தமிழ்த்திரை உலகம் அவரைத்திரும்பிப்பார்த்தது.ஒரே படத்தின் மூலம் வி.சி.கணேசன் பிரபலமானார்.1952 ஆம் ஆண்டு வெளியான "பராசக்தி" 52 வாரங்கள் ஓடிசாதனை புரிந்ததால் தமிழ்த்திரை உலகின் புதியசகாப்தம் ஆரம்பமானது.
கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க வி.சி.கணேசன் காரணமானார்.
1952 ஆம் ஆண்டுபராசக்தியைத்தொடர்ந்து இரண்டாவது படமான "பணம்" வெளியானது.என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம் ஆகியோர் இணைந்து நடித்தனர். 1953 ஆம் ஆண்டு மூண்றாவது படமான "பரதேசி" என்ற தெலுங்குப் படம் வெளியானது. அதே ஆண்டு வெளியான "பூங்கோதை","திரும்பிப்பார்" ஆகியன வி.சி.கணேசனின் புகழை அதிகமாக்கின.
1954 ஆம் ஆண்டி வெளியான"மனோகரா" மீண்டும் ஒருமுறை கலைஞர்,கணேசன் கூட்டணியை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. பராசக்தியின் வசனம் மறக்கமுதல் மனோகராவின் வசனம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்தது.
மனோகரா படத்தில் படத்தில் வரும் மனோகரனின் தாயார் பத்மாவதி,தந்தை புருஷோத்தமன்,தந்தையின் காதலி வசந்தசேனை,வசந்தசேனையின் மகன் அசடன் வசந்தன் ஆகியபாத்திரங்களை அவர் நாடகத்தில் ஏற்று நடித்திருந்தார்.
சினிமாவுக்குமுன்னோட்டமாக நாடகத்தில் அனைத்துப்பாத்திரங்களையும் நடித்துள்ளார். நாடகத்தில் பத்மாவதியாக நடிகர்திலகம் நடித்ததுபோன்று திரைப்படத்தில் கண்ணாம்பா நடிக்கவில்லை என நாடகத்தைப்பார்த்தவர்கள்கள்கூறுகின்றார்கள்.அதே ஆண்டு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான மனோகரா படத்திலும் இவர் நடித்தார்.மனோகரா வெளியாகி பரபரப்பான நேரம் "கூண்டுக்கிளி" என்ற படம் வெளியானது.இருபெரும் திலகங்கள் நடித்த இப்படம் தோல்வியடைந்தது.கூண்டுக்கிளி சிவாஜியின் 17 ஆவது படம்
கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, இல்லற ஜோதி,துளிவிஷம்,தூக்குத்தூக்கி,எதிர்பாராதது ஆகியபடங்கள் நடிகர்திலகத்தின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தின.பாடத்தெரிந்த நடிகர்கள் நடித்த அந்த நாட்களிலேயே பாடல்கள் இல்லாத "அந்தநாள்" வெளியாகி புரட்சியை ஏற்படுத்தியது. 1957 ஆம் ஆண்டு "பராசக்தி" தெலுங்கில் வெளியானது.
பி.யு.சின்னப்பாவின் பாடல்களுடன்வெளியாகி வெற்றிபெற்றபடம் "உத்தமபுத்திரன்"1958 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர்திலகத்தின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. நடிகர் திலகம் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்த "உத்தமபுத்திரன்" 100 நாட்களுக்குமேல் ஓடி சாதனை புரிந்தது.
"உத்தமபுத்திரன்" படத்தில் வரும் "யாரடி நீ மோகினி" என்றபாடலின் ஆட்டம் ரசிகர்களின் மனதை விட்டு என்றும் நீங்காது. அந்தப்பாடலைப்பற்றிக் றும்போதெல்லாம் "அந்தப்பெருமை எனக்கல்ல நடன இயக்குனர் ஹீராலாலுக்கே" என பணிவாகச்சொல்வார் நடிகர்திலகம்.
"சம்பூர்ணராமாயணம்" என்ற படத்தில் பரதனாகவே வாழ்ந்தார்.இந்தப்படம் 26 வாரங்கள் ஓடியது. "அன்னையின் ஆணை"திரைப்படத்தில் பெளத்ததர்மத்தை பரப்பும் சாம்ராட் அசோகனில் அசோகனாக நடித்து பெளத்த தர்மத்தை கண் முன் நிறுத்தினார்.1957 ஆம் ஆண் டுவெளியான"வீரபாண்டியகட்டப்பொம்மன்" இந்தியாசுதந்திரமடைந்த முதலாவது அத்தியாயத்தை மனதில் பதிய வைத்தது.வீரபண்டியகட்டப்பொம்மன் என்றால் சிவாஜி,சிவாஜி என்றால் வீரபண்டியகட்டப்பொம்மன் என்ற உணர்வை அனைவரின் மனதிலும் ஆழப்பதித்தது.
ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டமும், பிரான்ஸ் நாட்டின் அதி உன்னதமான் "செவாலியர்" விருதும் வீரபண்டிய கட்டப்பொம்மன் மூலம் சிவஜிக்குக் கிடைத்தது.
அங்கம் குறைந்த ஆணழகனாக நடித்த"பாகப்பிரிவினை"31வாரங்கள் ஓடியது. பாகப்பிரிவினையைத் தொடர்ந்து வெளியான "இரும்புத்திரை" 26வாரங்கள் ஓடியது. "படிக்காத மேதை" திரைப்படம் அவர் ஒரு படிக்காதமேதை என்பதை நிரூபித்தது. "தெய்வப்பிறவி" "விடிவெள்ளி" ஆகியனகுடும்ப உறவுகளால் ஏற்படும்குழப்பங்களின் விளைவுகளை வெளிக்காட்டின
சிவாஜிகணேசன் நடித்த "பாவமன்னிப்பு" 25 வாரங்கள் ஓடியது."பாவமன்னிப்பைத்தொடர்ந்து வெளியான "பாசமலர்"தமிழ்த்திரைப்படவரலாற்றில் புது அத்தியாயத்தை உருவாக்கியது.அண்ணன் தங்கை பாசம் எப்படி இருக்கவேண்டும் எனபதைஉணர்த்தியது. உருகாத உள்ளங்களையும் உருகவைத்தபடம் பாசமலர்.
நான் தனிப்பிள்ளை எனக்கு சகோதரர்களில் விருப்பம் இல்லை என்றவர்களே இப்படிப்பட்ட பாசமுள்ள அண்ணன் எனக்கு இருந்திருக்கக்கூடாதா என ஏங்கவைத்த படம் பாசமலர்.
சுதந்திரப்போராட்டத்தியாகியான வ.உ.சி யாக நடித்த "கப்பலோட்டியதமிழன்"இந்திய சுதந்திரபோராட்ட காலங்களை கண் முன்நிறுத்தியது.கொடை வள்ளல் கர்ணன் எப்படி இருந்திருப்பான் என்பதை நெஞ்சில் பதித்த படம்"கர்ணன்"."நவராத்திரி" படத்தின் மூலம் சிருங்காரம், ஹாஸ்யம்,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம் ஆகிய நவரசங்களையும் ஒன்பது பாத்திரங்களாக நடித்து அதிசயிக்கவைத்தார்.


"சாந்தி" திரைப்படத்தில் "யாரிந்தநிலவு" என்
ற பாடல் காட்சியை பட்மாகுவதற்கு இயக்குநர் பீம்சிங் சகலஏற்பாடுகளையும் செய்துவிட்டு நடிகர்திலகத்துக்கு பாடலைப்போட்டுக்காட்டினார் பாடலைக்கேட்டபின்னர் "இன்றுமன சரியில்லை நாளை படப்பிடிப்பை வைக்கலாம்" என்றுகூறினார் சிவாஜிகணேசன்.இரண்டு நாட்கள் படப்பிடிப்புதடைப்பட்டது.
என்ன செய்வதென்று தெரியாது தவித்த இயக்குநர் பீம்சிங் ,மூன்றாவது நாள் நடிகர் திலகத்தின் வீட்டுக்குப்போய் என்னபிரச்சினை எனக்கேட்டார்.
"எவ்வளவு அருமையான பாடல். எப்படி இசை அமைத்திருக்கிறார்கள். எவ்வளவு உருக்கமாகப்பாடியுள்ளார்.அந்தப்பாடலுக்கு ஒத்திக்கை பார்த்துவிட்டேன். நாளைக்குப்படப்பிடிப்பை வைக்கலாம்" என்றார். ஒருபாடல் காட்சி எவ்வளவு தத்ரூபமாக அமையவேண்டும் என்பதில் அவர் செலுத்திய அக்கறையே அப்பாடலின் வெறிக்குக்காரணமானது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில், சிவாஜி தொடர்ந்தும் இருந்திருந்தால் "திருவிளையாடல்" "கந்தன்கருணை" "திருவருட்செவ்வர்" "திருமால் பெருமை" "ராஜராஜசோழன்" " கர்ணன்"போன்ற் சிறப்பான படங்கள் ரசிகர்களுக்குக்கிடைத்திருக்காது.
1958ஆம் ஆண்டு வெளியான "தில்லானமோகனம்பாள்"சங்கீதம் தெரியாதவர்களையும் தாளம் போடவைத்தது. கொத்தமங்கலம் சுப்புவின் கதாபாத்திரங்கள்னான சிக்கல் சண்முகசுந்தரத்தை நடிகர் திலகமும், தில்லானாமோகனாம்பாளை நாட்டியப்பேரொளி பத்மினியும் கண்முன்னால் கொண்டுவந்துநிறுத்தினார்கள். நாதஸ்வரமேதை யும்,நாட்டியதாரகையும்எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நடித்துக்காட்டினர் .
திருவருட்செல்வரில் அப்பர் சுவாமிகளாகத்தனை வருத்தி ஒப்பனை செய்து தளர் நடை போட்டு உருண்டுபுரண்டுநடித்த சிவாஜி மீண்டும் தெய்வமகனில் தன்னை வருத்திநடித்தார். தெய்வமகனில் வரும் மூண்று சிவாஜியும் மூண்றுவித நடிப்பைவெளிப்படுத்தின.
புரட்சிப்படமான் "சிவந்தமண்" இலங்கையில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டபடம். அந்தப்படத்தில் நடிப்பதற்கு முதலில் எம்.ஜி.ஆர் ஒப்பந்தம்செய்யப்பட்டார். பின்னர் ஜெய்சங்கர் ஒப்பந்தம் செய்யப்படார். சிவாஜி நடித்த "தந்தி" என்ற ஹிந்திப்படம் 38 வாரங்கள் ஓடியது.
"வியட்நாம் வீடு" "விளையாட்டுப்பிள்ளை" "ராமன் எத்தனை ராமனடி""எங்கிருந்தோ வந்தாள்" வசந்தமாளிகை""சொர்க்கம்" "பாபு""நீதி"கெளரவம்" "அவன்தான் மனிதன்" "ஞானஒளி" உட்படபலபடங்கள் ரசிகர்களின் மனதை விட்டுநீங்காத படங்களாகும்.
1972 ஆம் ஆண்டு வெளியான "வசந்தமளிகை" இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் வெளியான முதலாவது தமிழ்ப்படம். இந்தியாவில் 250 நாட்களூம், இலங்கையில் 41 வாரங்களும் ஓடியது.ஒருபிரதி இரண்டுதிரை அரங்குகளில் ஓடிய முதலாவது படமும் இதுதான். யாழ்ப்பாணத்தில் உள்ள வெலிங்டன்,லிடோ ஆகிய இரு திரை அரங்குகளில் ஒரே ஒரு படப்பிரதியுடன் 150 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது.
1973 ஆம் ஆண்டு முதலாவது தழிழ் சினிமாஸ்கோப்படமான "ராஜராஜசோழன்" வெளியானது.
1971 ஆம் ஆண்டுமுதல் 1983 ஆம் ஆண்டுவரை இவர் நடித்த ஒரு சிலவற்றைத்தவிர மற்றைய எல்லாம் வெற்றிப்படங்களே. இவர் நடித்தபடங்கள் இந்தியாவில்; மட்டுமன்றி இலங்கையிலும் 100 நாள், வெள்ளிவிழா கொண்டாடியதுடன் வசூலிலும் சாதனை படைத்தன.
அவர் நடிக்கவுள்ள பாத்திரத்தைப்பற்றி இயக்குநரோ தயாரிப்பளரோ கூறியவுடன் ஒப்பனைக்கலைஞரான ரங்கசாமியை அழைத்து இந்த வேடம் எப்படி இருக்கவேண்டும். தலை எப்படி இருக்க வேண்டும் எனக்கூறி விடுவார்.ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொருவித்தியாசம் இருக்கவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
சிவாஜி நடித்த படங்களின் கதாசிரியர், இயக்குநர்யாராக இருந்தாலும் அது சிவாஜி படமென்றேபேசப்பட்டது. நடிகர் யாரெனப்பார்த்தே ரசிகர்கள் அன்று படம்பார்த்தார்கள். சகநடிகர்கள் எப்படிநடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.தனக்கு ஈடாகமற்றவர்களும் நடிக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.தன்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடிக்கவேண்டும் என நடித்துக்காண்பிப்பார்.
அவருடய ஒவ்வொருபடமும் ஒவ்வொரு அத்தியாயம் நடிப்பு என்ற மொழியின் பல்கலைக்கழகமான அவ்ரின் சதனையை முறியடிக்க யாரலும் முடியாது. படப்பிடிப்புக்குத்தயாராகிவிட்டால் பாத்திரமாகவேமாறிவிடுவார். சக்கரவர்த்தியாக, மன்னனாக,சேவகனக,வக்கீலாக,நீதிபதியாக,பொலிஸ் அதிகாரியாக அவர் மாறிவிடுவார்.
சிறுவயதுவேடங்களில் தொப்பை வயிறுடன் ஓடி ஆடிசில படங்களில் சிவாஜி நடித்தபோது இது இவருக்குத்தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.
எனக்கேற்ற வேடங்களை உருவாக்கித்தாருங்கள் என சிவாஜி சவால்விட்டார். அதன் பின் வெளியான" மிருதங்கசக்கரவர்த்தி" மிருதங்க வித்துவானுக்கு சவால் விட்டது.
மிடுக்கான பொலிஸ் அதிகாரியான வெள்ளை ரோஜா ,திருப்பம்என்பனவும் தராசுபட வக்கீல் வாழ்க்கை படத்தில் தனிமனித வாழ்க்கைப்போராட்டத்தைசித்திரிக்கும் பாத்திரம்
சிரஞ்சீவி படத்தின் கப்பல் சிப்பந்தி ஆகியபாத்திரங்கள் சிவாஜியைக் குறை கூறியவர்களுக்கு பதிலாக அமைந்தது.
பராசக்தி_குணசேகரன் கள்வனின்காதலி_முத்தையன் உத்த்மபுத்திரன்_பார்த்திபன்,விக்கிரமன் படிக்காதமேதை_ரங்கன் பாகப்பிரிவினை_கண்ணையன் இபாசமலர்_ராஜசேகர்இதில்லானாமோகனாம்பா_ள் சிக்கல் சண்முகசுந்தரம் தெய்வமகன்_சந்து,விஜயன்,கண்ணன் சிவந்தமண்_பாரதி வியட்நாம்வீடு_பிரஸ்டீஜ் பத்மனாதஐயர் எங்கள்தங்கராஜா_பட்டாக்கத்திபைரவன் பட்டிக்காடாபட்டணமா_மூக்கையன் கெளரவம்_பரிஸ்டர் ரஜினிகாந்த் நவராத்திரி ஒன்பது வேடங்கள் போன்ற பலவும் கற்பனைப்பத்திரங்கள்தான் என்றாலும் அவை அனைத்தும்மனதை விட்டு நீங்காதவை.

உணர்ச்சிகரமாக நடிக்கும்போது அவ ரது கண்கள் தானாகவே சிவந்துவிடும்.திருவிளையாடல் படத்தில் சிவபெருமானாக நடிக்கும் போது கண்களை இமைக்காமல் இருந்தார். நடிகர் திலகத்தின் காலத்தில் கே.ஆர். ராமசாமி, பாலையா,ரங்கராவ்,சகஸ்ரநாமம்,கண்னாம்பா,பானுமதி,எம்.ஆர்.ராதா,ஜெமினிகணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன்,முத்துராமன்,நம்பியார்,மேஜர் சுந்தரராஜன்,நாகேஷ்,எஸ்.வி.சுப்பையா,கே.ஆர்.விஜயா,சாவித்திரி,சரோஜாதேவி,சுஜாதா,ஜெயலலிதா ஆகியோர் சிவாஜிக்குப்போட்டியாக நடித்தனர்.
திருவிளையாடல் படத்தில் தருமி வேடத்தில் நடித்த நாகேஷ் இரண்டு நிமிடங்களில் நடிகர் திலகத்தை ஓரம் கட்டும்வகையில் நடித்தார்.அதை நடிகர்திலகம் சவாலாக ஏற்றுக்கொண்டாரேதவிர பொறாமையாக நினைககவில்லை.கிருஷ்ணன்_பஞ்சு,ஏ.பி.நாகராஜன்,பீம்சிங், ஸ்ரீதர்,ஏ.சி.திருலோகசந்தர்,சி.வி.ராஜேந்திரன் போன்றோர் சிறந் தமுறையில் சிவாஜியை இயக்கினார்கள்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,கவிஞர் கண்ணதாசன்,சக்தி கிருஷ்ணசாமி,வியட்நாம்வீடு சுந்தரம்,தங்கப்பத்க்கம் மகேந்திரன்,போன்றவர்களின் வசனங்களுக்கு சிவாஜிகணேசன் உயிரூட்டினார்.கவிஞர் கண்ணதாசன்,ரி.எம்.செளந்த்ரராஜன்,விஸ்வநாதன்_ராமமூர்த்தி,சிவாஜிகணேசன் கூட்டணியை உடைக்க எத்தனை நூற்றாண்டு சென்றாலும் முடியாது.
விஜய்,அர்ஜுன்,முரளி ஆகிய இள்ம் நடிகர் களுடனும் நடித்துள்ளார். முதல் மரியாதை,தேவர் மகன், படையப்பா ஆகியன அவருக்கு புகழையும் பெருமையையும் ஏற்படுத்தின.
1985ஆம் ஆண்டு வெளீயான முதல் மரியாதை அவர்மீது மரியாதையை ஏற்படுத்தியது. பழய ரசிகர்களும் புதிய ரசிகர்களும் அவரின் நடிப்பாற்றலை வியந்துபாராட்டியபடம் முதல் மரியாதை.
அரசியலில் அவர் தோல்வியடைந்தாலும் நேரு,இந்திராகாந்தி,ராஜாஜி,அறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோர் அவர் மீது மி குந்த மதிப்புவைத்திருந்தனர். தமிழ்நட்டின் முதல்வர்களான பக்தவத்சலம்,கர்மவீரர் காமராஜர்,அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,வி.என்.ஜானகி ஆகியோ ருடன் அவருக்கிருந்த தொடர்பு மிக இறுக்கமானது.
தமிழகதலை நகரானசென்னை செவாலியர் வீதியில் உள்ள அன்னை இல்லத்தின் துயரசம்பவமாக மட்டும் இது அமையவில்லை.உலகத்தமிழர்கள் அனைவரின் வீட்டிலும் நடைபெற்ற துயர சம்பவமாகவேஇது அமைந்தது.
சிவாஜி மறைந்ததில் இருந்து தகனக்கிரியை நடைபெறும் வரை தமது இன்பம் துன்பம் அனைத்தையும் மறந்து நடிப்புலக மாமேதைக்காக உருகினார்கள்.கலைஞரின் வசனத்தில் பெரியாராக நடிக்கும் அவரின் கனவு நிராசையானது.
சாம்ராட் அசோகன்,கர்ணன்,செக்கிழுத்தசெம்மல் வ.உசி, புரட்சிக்கவிஞர் பாரதி,வீரபாண்டியகட்டபொம்மன், காத்தவராயன்,அரிச்சந்திரன்,பரதன், மகாகவிகாளிதாசன்,அம்பிகாபதி,சலீம்,சாஜஹான்,அப்பர்,திருமங்கையாள்வார்,குலசேகராழ்வார்,சிவாஜி போன்றகாவியநாயகர்களும், பத்மனாதன்,செள்த்ரி, பரிஸ்டர்ரஜினிகாந்த்போன்றசமூக நாயகர்களும் ஒரே இரவில் வி.சி.கணேசனுடன் சென்றுவிட்டர்கள்.
சூரன்.ஏ.ரவிவர்மா
தினக்குரல் 25 7 2007

மனைவி தந்த பதவி

இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி தனது பதவியை தக்க வைப்பதற்காக அரசியல் சட்டங்களை மாற்றியமைத்த முஷாரப்பைஅரசியல் புரட்சி மூலம் வீழ்த்திய பாகிஸ்தானின் அரசியல்வாதிகளின் பார்வை ஆசிப் அலி சர்தாரியின் மீது விழுந்துள்ளது.
அரசியல் பின்னணி, அரசியல் அனுபவம் எதுவும் இல்லாது ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவின் கணவன் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் சர்தாரிக்கு உள்ளது.
பெனாசிர் பூட்டோ பிரதமராக இருந்த போது அரசியலில் அதிகளவு ஆர்வம் காட்டாது வியாபாரத்தை முன்னேற்றுவதிலேயே சர்தாரி குறியாக இருந்தார். முஷாரப்பின் ஆட்சியின் போது ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சர்தாரி 11 வருட காலம் சிறையில் இருந்தார். தான் குற்றம் செய்யவில்லை. ஊழல் எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்கத் தவறிய சர்தாரி தான் ஒரு மனநோயாளி என நிரூபிப்பதில் வெற்றி பெற்றார். மன நோயாளி என நீதிமன்றத்தில் அறிவித்த சர்தாரி பாகிஸ்தானின் ஜனாதிபதியாகலாமா என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
குண்டு வெடிப்பில் பெனாசிர் மரணமானார். நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் நவாஷ் ஷெரிப் உள்ளார். இந்த இடைவெளியை பயன்படுத்திய சர்தாரி ஜனாதிபதியானார். பெனாசிர் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சர்தாரியை ஜனாதிபதியாக்கி உள்ளது. பெனாசிர் மறைந்ததும் கட்சித் தலைமை மகனான பிலாலிடம் ஒப்படைக்கப்பட்டது. பிலாலின் கல்வி முடியும் வரை அவர் அரசியலில் ஈடுபட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் அரசியல் கக்தி மீது நடப்பதற்கு ஒப்பானது. கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு உதாரணமாக பாகிஸ்தான் அரசியல் உள்ளது. பாகிஸ்தான் மக்களின் விருப்பம், அமெரிக்க அரசின் விருப்பம், தலிபான், அல்குவைதா, பாகிஸ்தானின் பழங்குடியினர் ஆகியோரின் எதிர்பார்ப்பு என்பனவற்றை ஒரே நேரத்தில் நிறைவேற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை பாகிஸ்தானின் ஜனாதிபதிக்கு உள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினரின் போராட்டங்களுக்கு வழிவிட வேண்டிய கடப்பாடும் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு உள்ளது. இதேவேளை அண்டை நாடான இந்தியாவின் அரசியல் நல்லுறவை வளர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு பாகிஸ்தானின் ஜனாதிபதி சர்தாரியின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
அனுபவம் உள்ள அரசியல்வாதிகளே பாகிஸ்தானில் நிலையான ஆட்சியைக் கொண்டு வர முடியாது திணறுகின்றனர். இந்த நிலையில் எந்த விதமான அரசியல் அனுபவமும் இல்லாத சர்தாரி பாகிஸ்தானை எப்படி நிர்வகிக்கப் போகிறார். ஜனாதிபதியாக சர்தாரி பதவி ஏற்றாலும் அங்கு நடைபெறும் குண்டுச் சத்தங்கள் இன்னமும் ஓய்வு பெறவில்லை.
பாகிஸ்தானில் அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது என்பது உண்மையே தவிர அங்குள்ள மக்கள் அரசியல் மாற்றத்தை ஏற்றுள்ளார்களா என்பது புரியவில்லை.
பாகிஸ்தானின் அரசியல் மதத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மதத்துக்கு அவதூறு ஏற்படுத்துபவர்கள் அல்லது மத ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதவர்கள் அங்கு அதிகாரம் செலுத்த முடியாது. முஷாரப்பின் ஆட்சி மாற்றத்துக்கு செம்மசூதியும் ஒரு காரணம். செம்மசூதி மீதான தாக்குதலினால் பாகிஸ்தான் மக்கள் முஷாரப்பை ஆட்சியில் இருந்து விரட்ட தருணம் பார்த்திருந்தனர். பாகிஸ்தானின் இராணுவம் முஷாரப்புக்குப் பக்கத் துணையாக இருந்ததனால் அவரது ஆட்சியை அகற்றுவது சிரமமாக இருந்தது. பாகிஸ்தான் இராணுவமும் முஷாரப்பை கைவிட்டதனால் ஆட்சி மாற்றம் சுலபமானதாக இருந்தது.
முஷாரப்பின் ஆட்சி அகற்றப்பட்டது. சர்தாரியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. சர்தாரியின் முன்னால் உள்ள பணி மிகப் பிரமாண்டமானது. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ஜனாதிபதி சர்தாரியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். பாகிஸ்தானின் இராணுவமும் உளவுப் படையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. வி

ரமணி; மெட்ரோ வார இதழ்12.09.2008

Wednesday, September 10, 2008

உழைப்பு

ஊண் இன்றி உறக்கமின்றி
உழைத்திடுவார் உழைத்திடுவார்
உழைத்ததை குதிரையிலே
கொடுத்திடுவார் கொடுத்திடுவார்
கொடுத்ததை திரும்ப
எடுத்திடுவார் எடுத்திடுவார்
எடுத்ததுடன் இரண்டை
இழந்திடுவார் இழந்திடுவார்

சூடாமணி 29.07.2007

Sunday, September 7, 2008

மக்களின் மனதைக் கவர்வதற்கு சலுகை வழங்குகிறது தமிழக அரசு



அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் துவண்டிருக்கும் தமிழக மக்களின் வயிற்றில் பால் வார்த்தது போல் கிலோ அரிசி ஒரு ரூபா என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டாலும் மின் தடை என்ற அஸ்திரம் மக்களின் வாழ்வில் இருளை ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் வாழ்வில் இன்றியமையாத தொன்றாக மின்சாரம் உள்ளது. மின்கலப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்தடை அமுலுக்கு வரப் போகிறது என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்த போது அவை எல்லாம் பூச்சாண்டி எனப் பூசி மெழுகிய தமிழக அரசு >தற்போது மின் தடை பற்றி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் மின்சாரத்தை பாவிப்பதில் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு வந்தன. சாதாரண விழாக்களிலும் பிரமாண்டமான மாநாடுகளிலும் தனது தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை வீண் விரயம் செய்வதில் ஆளும் கட்சிக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் செயற்பட்டன.தமிழக அரசினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மின் தடையைக் காரணம் காட்டி தி.மு.க. வை ஆட்சியிலிருந்து அகற்ற பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கம்யூனிஸ்ட்கள் கொண்டு வந்தால் அதனை ஆதரிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம்தான் ஒரே வழி என்று டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார். அதேவேளை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை இன்னொரு கட்சி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் மத்திய அரசில் அதன் பங்களிப்பு இல்லாமல் போய்விடும் என்றும், சோனியா காந்தியின் நம்பிக்கை சிதறிவிடும் என்று டாக்டர் ராமதாஸ் பயப்படுகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் தி.மு.க. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று கூறி தப்பித்து விடலாம் என்றும் டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார்.
தி.மு.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்ற ஒருவரி அறிவித்தலை கெட்டியாகப் பிடித்துள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மின் வெட்டுப் பிரச்சினையை சட்ட மன்றத்தில் அவசரப் பிரச்சினையாகக் கொண்டு வந்து விவாதிப்பதற்கான நடவடிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வருகிறது. மின் வெட்டுப் பிரச்சினையை தமிழக சட்டமன்றத்தில் விவாதித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுத்தப்பட்டு விடும்.
மின்சாரத்தின் தேவை முன்னை விட அதிகளவில் அதிகரித்துள்ளது. ஆனால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தமிழக அரசாங்கம் கூடிய அக்கறை காட்டவில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கும் கட்சிகளின் கருத்து.
மின் தடை காரணமாக தமிழக அரசாங்கத்தை விமர்சிக்கும் சகல அரசியல் தலைவர்களும் தமது கட்சியின் மாநாடுகளின் போது தேவைக்கு அதிகமாக மின்சாரம் பாவிக்கப்பட்டபோது அதனைத் தட்டிக் கேட்கவில்லை.
மின் ஒளியில் ஜொலித்த பிரமாண்டமான தமது உருவங்களைப் பார்த்து ரசித்த தலைவர்கள் அனைவரும் இன்று மின் தடைக்கு எதிராகப் போராடுகின்றனர். இதேவேளை அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா என்ற திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. ஏழைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய இந்த அறிவிப்பு மின் தடையால் இருட்டடிக்கப்பட்டுள்ளது.
சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசாங்கம் கடுமையாகப்போராடி வருகிறது. அண்ணா குடும்பத்துக்கு 40 இலட்சம் நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, சத்துணவு, ஊழியர்களுக்கு சலுகை என தமிழக அரசாங்கம் அவ்வப்போது அமுல்படுத்தும் நல்ல பல செயற்றிட்டங்களை மின்தடை கபளீகரம் செய்துவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலவச அறிவிப்புகளைப் போற்றிப் புகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா என்ற திட்டத்தை மோசமாக விமர்சித்துள்ளது. தேர்தல் சமயத்தில் தனது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதனை போற்றிப் புகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்ற பின்னர் இலவசத் திட்டங்களை விமர்சனம் செய்து வந்தது.
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாவாக விற்பனை செய்வதனால் 400 கோடி ரூபா மேலதிகமாக செலவாக உள்ளது. இதற்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படுகிறது என்று தமிழக அரசாங்கம் தெரிவிக்கவில்லை. புதிய வரிகளின் மூலமும் ஒரு சில பொருட்களின் விலை உயர்வின் மூலமும் 400கோடி ரூபா வருமானமாகப் பெறப்படும் எனக் கருதப்படுகிறது.
எவ்வாறெனினும் மின் விநியோகம் சீராகும் வரை தமிழக அரசாங்கத்தின் இலவச திட்டங்கள் மக்களின் மனதைக் கவரப் போவதில்லை.

வர்மா; வீரகேசரி வார வெளியீடு, 07.09.2008

கூட்டணியின் பலம் குறைந்ததால் தடுமாடுகிறார் முதல்வர் கருணாநிதி



காங்கிரஸ், இடதுசாரிகளின், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன் நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடிய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தற் போது இடதுசாரிக் கட்சிகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் சவால் விட்டுள்ளன.
தமிழக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சனம் என்ற பெயரில் நார் நாராக கிழித்த பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசாங்கத்தின் வழக்கமான திட்டங்களையும் அவ்வப்போது எதிர்த்து வந்தது. பொறுமை இழந்த திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியைக் கழற்றி விட்டது.
அமெரிக்காவுடனான இந்திய அரசின் அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கினார்கள். எனினும் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான இடதுசாரிகள் உறவு சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது. காங்கிரஸை எதிர்க்கும் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக்கழகத்தை எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழக முதல்வரிடம் இருந்தது.
தமிழக முதல்வரின் ஆசை நிராசையானதும் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து கடுமையான கண்டனங்களை இடதுசாரிகள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இடதுசாரிகள் மீது மிகக்கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தனர். முதல்வரும் தனது பங்குகளுக்கும் கவிதையில் வசை பாடினார். முதல்வரின் கவிதையால் கொதித்தெழுந்த இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான தொடர்பை அறுத்தெறிந்தனர்.
இடதுசாரிகள் தனக்கு கைகொடுப்பார்கள் என்று முற்றுமுழுதாக நம்பிய முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினார். இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து மூட்டையைக் கட்டியதால் பாட்டாளி மக்கள் கட்சியுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க முனைப்புக் காட்டுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழக அரசாங்கம் விடும் தவறுகளை ஆக்ரோஷமாக எதிர்க்கும் டாக்டர் ராமதாஸ் மத்திய அரசாங்கம் தவறு விடும் போதெல்லாம் மௌனமாக இருக்கிறார் அல்லது அடக்கி வாசித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டாலும் காங்கிரஸ் கட்சி தன்னை கைவிடாது என்ற நம்பிக்கை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைவிட பலமான இடதுசாரிகள் தன்னுடன் இருப்பதனால் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்ற முதல்வரின் மனக்கோட்டை சரிந்ததனால் தன்னால் தூக்கி எறியப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசார பீரங்கியான காடுவெட்டி குருவை திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் சிறையில் வைத்துள்ளது. அவர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் காடுவெட்டி குருவை விடுதலை செய்ய வேண்டும். கூட்டணிக்காக காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டால் காடுவெட்டி குருவின் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கல் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும். காடுவெட்டி குரு சிறையில் இருப்பதையே பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. தேர்தல் சமயத்தில் காடுவெட்டி குரு சிறையில் இருந்தால் அனுதாப வாக்கு கிடைக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நினைக்கிறது.
மறுபுறம் இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா பகிரங்க அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்புக்கு ஒரு வாரம் கடந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேராவிட்டால், தாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதற்கு தயாராக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியும் மதவாதக் கட்சியுமான பாரதீய ஜனதாக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என தமிழகத்தின் இடதுசாரித் தலைவர்களான தா.பாண்டியனும், வரதராஜனும் அறிவித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகக் கிளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பாரதீய ஜனதாவைவிட அதிக செல்வாக்குள்ள கட்சியாக இடதுசாரிகள் விளங்குகின்றன. அவர்களது வாக்கு வங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பியிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி என்ன செய்வதென்று தெரியாது தவித்துக் கொண்டிருக்கிறது. விஜயகாந்துடன் இணைவதற்கு முயற்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி, விஜயகாந்தை கைவிட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையத் தயாராக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தால் பாரதீய ஜனதாக் கட்சி தனித்து விடப்படும் அபாயம் உள்ளது.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்த் ஆசைப்படுகிறார். அவரின் முதலாவது தெரிவாக காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சி கைவிடும் பட்சத்தில் தனித்து நிற்கும் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் ஆட்டிப் படைக்கிறது. மத்தி யிலும் தமிழகத்திலும் ஆட்சியமைத்திருக்கும் காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எப்படிச் சமாளிக்கப் போகின்றதெனத் தெரியவில்லை.
காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருந்தாலும் அங்கு உள்ள கோஷ்டி மோதல்கள் அதன் வெற்றிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, விஜயகாந்த், பாரதீய ஜனதாக் கட்சி என நான்கு முனைப் போட்டி ஏற்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பயனைடையும் வாய்ப்பு உள்ளது.

வர்மா;வீரகேசரி வாரவெளியீடு, 31.08.2008

தி.மு.க. கூட்டணியைப் பிரிக்க முயற்சி செய்கிறார் ஜெயலலிதா



திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறுவது உறுதியாகிவிட்டது. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கிய இடதுசாரிகள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
காங்கிரஸ், இடதுசாரிகள் என்ற இரட்டைக் குதிரையில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார். காங்கிரஸுடனான உறவுகளை முறித்துக் கொண்ட இடதுசாரிகள் தமிழகத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கிய இடதுசாரிகள் அடுத்து என்ன செய்வதென்று இன்னமும் முடிவு செய்யவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது இடதுசாரிகளின் செல்வாக்கு வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அதேபோன்று தமிழக அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் இடது சாரிகளின் செல்வாக்கு உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடது சாரிகளுக்குக்கும் இடையேயான உறவு இன்னமும் அப்படியேதான் உள்ளது. இடதுசாரிகளை அரவணைத்துச்செல்லும் நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் கண்ணும் கருத்துமாகச் செயற்படுகிறது. இந்த நிலையில் இடது சாரிகளுக்கு பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி செய்கிறது. மத்தியில் ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியை புறந்தள்ளி இடது சாரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அணுகு முறை அரசியல் கட்சிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டர் ராமதாஸ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், பாரதீய ஜனதாக் கட்சியிடமிருந்து கூட டாக்டர் ராமதாஸுக்கு அழைப்பு வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறாமல் இருக்கும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை நாடி பிடித்துப் பார்க்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அழைப்புக்கு இடதுசாரிகளிடமிருந்து எதுவிதமான பதிலும் வெளிவரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறும் இடது சாரிகள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது.
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துத்தான் சிறுதாவூர் பங்களா, ஜெயலலிதாவால் கட்டப்பட்டது என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தமிழக முதல்வரிடம் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைகளை நடத்திய நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையிலான கமிஷன், புறம்போக்கு நிலத்தை அபகரித்தே சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
ஜெயலலிதாவின் மீது அழுத்தமான குற்றச்சாட்டை சுமத்திய மாக்ஸிஸ்ட்டுகள் அவருடன் எப்படி இணைவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் இதனை மறந்து விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்டு விட்டது. இடதுசாரிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான பலம் குறைந்துவிடும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இடத்தை நிரப்ப அவர்களின் சமுதாயத்தில் இருந்து சிலரை திராவிட முன்னேற்றக் கழகம் வளைத்துப் போட்டுள்ளது. படையாச்சியார் பேரவை என்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக களமிறங்கத் தயாராகி உள்ளது.
மறைந்த ராமசாமி படையாட்சியின் மகன் டாக்டர் ராமதாஸ்தான் இந்த நிறுவனத்தின் தலைவர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸைப் போன்றே இவரும் தமது சமுதாயத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார்.
டாக்டர் ராமதாஸின் பின்னால் சென்ற வன்னியர் சமூகத்தின் வாக்கு வங்கியை கவர்வதற்கான நடவடிக்கைகளில் படையாட்சியின் பேரவை களமிறங்கி உள்ளது.
முதல்வர் கருணாநிதி வன்னிய சமுதாயத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். வன்னியர் சமுதாயத்துக்கு முதல்வர் கருணாநிதி செய்த நன்மைகளை பட்டியலிட்டுள்ளது.
பலமான கூட்டணி அமைப்பதற்காக சகல தலைவர்களும் காத்திருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றின் செல்வாக்கு தமிழகத்தில் சரிந்துள்ளது. எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் மிக மோசமாகச் சரிந்துள்ளது. பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஜெயலலிதாவுக்கு எதிராக உள்ளது.
ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைக்கலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார். அவரின் கனவுக்குத் தடையாக விஜயகாந்த் உள்ளார். ஜெயலலிதாவும் பலமான கூட்டணி அமைக்காவிட்டால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் என்று முதல்வர் இப்பொழுதே அறிவித்தால் கட்சி உத்வேகம் பெறும். அதற்குரிய ஏற்பாடுகளை தமிழக முதல்வர் முன்னெடுத்தால் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

வர்மா; வீரகேசரி வார வெளியீடு, 24.08.2008