Showing posts with label ஓ.பன்னீர்ச்செல்வம். Show all posts
Showing posts with label ஓ.பன்னீர்ச்செல்வம். Show all posts

Wednesday, May 25, 2022

எம்.பி பதவிக்காக முட்டி மோதும் அதிமுக தலைவர்கள்


   தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன.  தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் திகதி தி நடைபெறவுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார் ஆகிய ஆறு பேரின் பேர் பதவி காலியாகிறது. தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நான்கு  எம்.பி.,க்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு    இரண்டு  எம்.பி.,க்களும் இடம் பெற உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  இரட்டைத் தலைமை வழி நடத்துவதால் கடும் போட்டி நிலவுகிறது.எடப்படி பன்னீர்ச்செல்வத்துக்கு  விருப்பமான ஒருவருக்கும், ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆசியைப் பெற்ற  ஒருவருக்கும் எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த இரண்டு இடங்கலுக்காக மூத்த தலைவர்கள் துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பொன்னையன், சி.வி.சண்முகம், கோகுலஇந்திரா, அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரன், மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் அபரூபா சுனந்தனி, நடிகை விந்தியா போன்றவர்கள் எம்.பி., பதவி கேட்டு படையெடுக்கின்றனர். வன்னியர், யாதவர், கிறிஸ்துவர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலை நிலவுகிறது. எனவே, வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் சி.வி.சண்முகம், ஜே.சி.டி., பிரபாகரன்; யாதவர் சமுதாயத்தினர் மத்தியில் கோகுல இந்திரா, டாக்டர் அபரூபா சுனந்தனி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கிறிஸ்துவர், யாதவர் என்ற இரண்டு தகுதி அடிப்படையில் டாக்டர் அபரூபா சுனந்தனிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இவர் அரசியலுக்கு வரும் முன் அரசு டாக்டராக பணியாற்றினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைக்கப்பட்டதால், அரசு டாக்டர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதால் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என, கட்சியின் இரட்டை தலைமையிடம் மருத்துவ அணி நிர்வாகிகள் தரப்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நடிகை விந்தியாவும், சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அவருக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

பல பிரச்சினைகளின் மத்தியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னேற   முயற்சிக்கிறது.  தேர்தல் கால கூட்டணிக் கட்சிகள்  வெளியேறியதால்  இரண்டு எம்பிக்களைப் பெறும் சந்தர்ப்பம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.   திமுகவுக்கு கிடைக்கவுள்ள நான்கு  இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக  தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி நடைபெற இருக்கும் ஆறு மாநிலங்கள் உறுப்பினருக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் , கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திச் சேர்ந்த சேர்ந்த வைத்திலிங்கம் ஒரு ஆண்டு பதவி இருந்த நிலையில் இராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த இடத்துக்கு நடந்த தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  ராஜேஷ்குமார் தேர்வானார். மிக குறைந்த காலமே அவர் எம்.பி.யாக இருந்ததால், அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கும் வகையில் ஒரு இடத்தை அவருக்கு   கொடுக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவரை வேட்பாளராக லைமை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானவர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த கட்சி முன்னோடிகளில் ஒருவரான நாமக்கல் கே.ராமசாமியின் பேரன் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு மிக நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அத்துடன்திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு மிக நெருக்கமானவர் என்பதால் முதல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது பதவி காலம் குறுகியதாக இருந்ததால் இப்போது மீண்டும் ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைத்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை செயலாளர் என்ற அடிப்படையில் கிரிராஜனுக்கு ஏற்கனவே தேர்தல்களில் போட்டியிட   தலைமை வாய்ப்பு வழங்கி இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி விவகாரங்களை கையாளக் கூடியவர். தற்போதைய அமைச்சர் சேகர்பாபுவுக்கும் மிக நெருக்கமானவர். இந்த அடிப்படையில் விசுவாசத்திற்கான பரிசாக மீண்டும் கிரிராஜனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலில் யூகத்தில் இடம்பெறாதவர் தஞ்சை சு.கல்யாணசுந்தரம். 1950களின் இறுதியில் இருந்து கழகத்தின்  தீவிரமான தொண்டராய் கட்சிப் பணி தொடங்கியவர். தமது 19 வயதில் ஆரியபடை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினரானவர். கும்பகோணம் ஊராட்சியின் முதல் பெருந்தலைவராக இருந்தவர் கல்யாணசுந்தரத்தின் தந்தை சுந்தரராஜ். திமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றியவர். 1989-ல் மூப்பனாரை எதிர்த்து பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1998-ல் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். சீனியர் கோட்டாவில் இம்முறை தஞ்சை சு.கல்யாணசுந்தரத்துக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது

தமிழக பதவியை புதுமுகத்திற்கு வழங்க ராகுல் முடிவு செய்துள்ளார். ஆனால், சிதம்பரத்திற்கு வழங்க சோனியா விரும்புகிறார். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற தீர்மானத்தை, சிந்தனையாளர் மாநாட்டில் நிறைவேற்றி உள்ளதால், கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யாக இருப்பதால், சிதம்பரத்திற்கு பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'டில்லியில் முகாமிட்டாலும், தனி விமானத்தில் பறந்து வந்தாலும், அவர்களுக்கு முன்னுரிமை கிடையாது; உழைத்தவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்' என, ராகுல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் யார் கட்சிக்காக உழைத்தனர் என்ற அறிக்கையை, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம், ராகுல் கேட்டுள்ளார்.

அவர் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து, இறுதியாக வேட்பாளர் யார் என்பதை சோனியா, ராகுல் முடிவு செய்து, அறிவிக்க உள்ளனர். அவர்களின் அறிவிப்பு பட்டியலில் சிதம்பரம் இடம் பெறுவாரா அல்லது புதுமுகத்திற்கு வாய்ப்பா என்ற கேள்வி அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Saturday, January 29, 2022

மிரட்டுகிற‌து தி.மு.க முரண்டு பிடிக்கிறது அ.திமு.க‌


 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் 10 வருட ஆட்சியை அகற்றுவதற்கு ஸ்டாலின் கையில் எடுத ஆயுதங்களில் கமிஷன் - கலெக்ஷன் – கரெப்ஷன் என்ற சொற்தொடரும் அடக்கம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிபீடம் ஏரினால் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்குச் செல்வார்கள் என ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

கடந்த பத்தாண்டுக்கால  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக் ஆட்சியின் போது , முதல்வர் உள்ளிட்ட அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை திராவிட முன்னேற்றக் கழகம்   கிளப்பியது. உள்ளாட்சித் துறை பிளீச்சிங் பவுடர் வாங்கியது முதல் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டது வரை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகார்கள் அடுக்கப்பட்டன. 

ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்களை நடத்தியது.  2020 டிசம்பரில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை ஸ்டாலின் அளித்தார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் புகார்களை கூட்டணிக் கட்சிகளான பாரதீய ஜனதாக்கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் முன்வைத்து அதிர்ச்சியளித்தன.  ஊழல் இல்லாத இந்தியா எனக் கூறும் பாரதீய ஜனதாத் தலைவர்கள் ஊழல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம்  ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு பொலிஸ் ஜூலையில்  நடவடிக்கையைத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 20 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த நடவடிக்கை, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக, ஓகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். அடுத்து, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, ஒக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர், டிசம்பர் மாதம் தங்கமணி, ஜனவரி மாதம் கே.பி.அன்பழகன் என மாதம் ஒருவர் வீதம் லஞ்ச ஒழிப்பு பொலிஸாரின் சோதனை நடைபெற்றது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி இடங்களில் சோதனை நடந்தபோது இருந்த பரபரப்பும் முக்கியத்துவமும், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டில் நடந்த சோதனையின்போது இல்லை.

  சோதனைகள், விசாரணைகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இவர்கள் கைது செய்யப்படவில்லை. வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற‌ இருக்கு தகவல் அவருக்கு முன்பே தெரிந்து விட்டது. அதனால் அடுத்த சோதனைகளை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டன. முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி விரட்டிப் பிடிக்கப்பட்டார். அவர் இப்போது  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆட்சியாளர்களின் ஊழலுக்குத் துணைபுரிந்த அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் இப்போது முக்கியமாக எழுந்திருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடவடிக்கை குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது 14 புகார்களை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நாங்கள் அளித்தோம். அவற்றின் மீது முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று கூறினார். அவரிடம், “மாதம் ஓர் அமைச்சர் என்று ரெய்டு போவதையும், அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “அனைத்துப் புகார்கள்மீதும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அதிகாரிகள், ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், ஆடிட்டர்கள் ஆகியோரைக் கொண்ட கட்டமைப்பு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் போதுமான அளவு இல்லை. அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்கான சுதந்திரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், கடந்த ஆட்சியில் ஊழல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளை தற்போதைய அரசு பாதுகாக்கிறது என்றுதான் பார்க்கிறோம் என்றார் அவர்.

ஊழல் வழக்கில் யாரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 1996-ல் ஜெயலலிதா மீதும் பல அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், யாரையும் உடனே கைது செய்யவில்லை. ஜெயலலிதாவைக் கைது செய்ததுகூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான். நினைத்தவுடன் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது. சட்ட நடைமுறைகள் இப்படித்தான் இருக்கின்றன. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தருவோம். ஊழல் அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், அதற்கும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன என ஹிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவைத் தமிழகத்தில் உரிய முறையில் ஏற்படுத்தி, அதன் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையைக் கொண்டுவந்துவிட்டால், ஊழல் புகார்களையெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், 2014-க்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய லோக் ஆயுக்தாவை, 2018-ல்தான் தமிழகத்தில் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு, அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. “லோக் ஆயுக்தாவைச் செயல்பட வைப்போம் என்பது தி.மு.க-வின் முக்கியமான தேர்தல் வாக்குறுதி. 75 சதவிகிதமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பெருமைப்படும் முதல்வர் ஸ்டாலின், லோக் ஆயுக்தாவை எப்போது செயல்பட வைப்பார்  என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 

முன்னாள் அமைச்சர்களின் வீடுகள்,அலுவலகங்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்களின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் பின்னர் வழக்கம் போல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கைகள் வெளியிட்டனர்.  குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் சட்டப்படி குற்றச் சாட்டுகளைச் சந்திப்போம் என சிரித்தவாறு பேட்டியளித்தனர்.

வழக்கை எப்படி இழுத்தடிக்கலாம், எப்படித் தாமதப் படுத்தலாம் எனபதை  முன்னாள் அமைச்சர்கள் அறிவார்கள். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் அப்பீல் செய்யும் வாய்ப்பு உள்ளது.  ஆகையால் இது இப்போதைக்கு முடியும் விவகாரமல்ல.