Showing posts with label ரோஹித் சர்மா. Show all posts
Showing posts with label ரோஹித் சர்மா. Show all posts

Friday, February 14, 2025

துடுப்பாட்டத்தில் ஸீரோ, கப்டன்ஷியில் ஹீரோ

 

 இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், கப்டனாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.  களத்தில் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் எதிர்பார்த்த முடிவுகளை கொடுத்தன. அதேநேரம், துடுப்பாட்டத்தில்  இந்த தொடர், சூர்யகுமார் யாதவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் முறையே, 0,12,14,0,2 என மிக செயற்பாட்டை  வெளிப்படுத்தினார்.   5 போட்டிகளில் சேர்த்து 28  ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ளார். இதனால், ஒரு பேட்ஸ்மேன் ஆக சூர்யகுமார் யாதவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

பேட்டிங்கில் சொதப்பினாலும், கப்டன்ஷியில் அசத்தியதால் சூர்யகுமார் யாதவ் மீதான விமர்சனங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில் தான், இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.. இதில் இந்திய அணியை கப்டன் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். கடந்த சில காலங்களாகவே மோசமான ஃபார்மில் உள்ள ரோகித், இந்த தொடர் மூலம் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உள்ளூரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ,அண்மையில் களமிறங்கிய ரஞ்சிபோட்டியில் கூட ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை. பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி, கப்டனாக கூட அணியை திறம்பட கையாளவில்லை என விமர்சனங்கள் குவிகின்றன.

நியூசிலாந்து ,அவுஸ்திரேலிய அணிகளுகு  எதிரான இந்தியாவின் தோல்விகளுக்கு, ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் மிக முக்கிய காரணமாகும். அவரது துடுப்பாட்டத்தை  இந்திய அணி எவ்வளவு சார்ந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

ச‌ம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது. இதன் மூலம் வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். பேட்டிங்கில் சொதப்பினாலும், சூர்யகுமார் யாதவை போன்று கப்டன்ஷியில்  அணிக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை தவறினால், இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடும், கடைசி ஐசிசி தொடராகவும் சம்பியன்ஸ் ட்ராபி இருக்கலாம்.     

Sunday, October 15, 2023

ஆப்கானுக்கு எதிராக இந்தியாவின் சாதனைப்பட்டியல்

  டெல்லியில்  நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்திய கப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பல சாதனைகளை முறியடித்தனர்.

 அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் (553) எண்ணிக்கையை ரோஹித் சர்மா[ 554 ]முறியடித்தார் .

2007ல் பெர்முடாவுக்கு எதிராக வீரேந்திர சேவாக் 81 பந்துகளில் அடித்த சதத்தை முறியடித்த ரோஹித்தின் 63 பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரரின் அதிவேக உலகக் கிண்ண சதம்.

 உலகக்கிண்ணப் போட்டியில் ஏழாவது சதம் அடித்த ரோஹித்  சச்சின் டெண்டுல்கரின் அதிக உலகக் கிண்ண  சத சாதனையை முறியடித்தார் . டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்தார்.

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக்  கடந்த டேவிட் வார்னரை இணைத்துள்ளார் ரோஹித். சச்சின், சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு உலகக் கிண்ணத்தில்  1000ஓட்டங்களைக் கடந்த நான்காவது இந்தியர் ரோஹித்.

1996ல் கென்யாவுக்கு எதிராக டெண்டுல்கரின் 127* ஓட்டங்களை முறியடித்தார். ரோஹித்தின் 131 ஓட்டங்கள் அடித்தார்.

ஒருநாள் உலகக் கிண்ண‌ சேஸிங்கில் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஓட்டங்களாகும்.

ரிக்கி பொண்டிங்கை (30) பின்னுக்கு தள்ளி 31வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார்.

சனத் ஜெயசூர்யாவைத் தாண்டி, ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிக சதங்கள் (29) அடித்த தொடக்க வீரராகவும் ரோஹித் இருக்கிறார். டெண்டுல்கர் 45 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித் ஒரு கலண்டர் ஆண்டில் 50 சர்வதேச சிக்ஸர்களை நான்காவது முறையாக (2017, 2018, 2019 , 2023*) கடந்தார், இது போன்ற மூன்று நிகழ்வுகளில் (2009, 2012, 2019) கெய்லின் சாதனையை முறியடித்தார்.

முதல் பவர்பிளேயில் ரோஹித்தின் 76 ஓட்டங்கள், ஒருநாள் இன்னிங்சில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும். இதற்கு முன் 2007‍ல்  மேற்கு இந்தியாவுக்கு எதிராக ரொபின் உத்தப்பா 70 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

உலகக் கிண்ணத்தில்  சதம் அடித்த மிக வயதான கப்டன் (36 ஆண்டுகள், 164 நாட்கள்) ரோஹித்.

வெற்றிகரமான உலகக் கிண்ண சேஸிங்கில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை ரோஹித் இப்போது படைத்துள்ளார் ‍ மூன்று சதங்கள் அடித்துள்ளார்.

ஆசியாவில் 350 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றார்.

ஒருநாள் உலகக்  கிண்ணத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர்களில் டெண்டுல்கரை முந்தினார் ரோஹித் ‍ 28 சிக்ஸர்கள்.

53 இன்னிங்ஸ்களில் 2311 - ஐசிசி உலகக் கோப்பைகளில் (ODI மற்றும் ரி20I) அதிக ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். 50 ஓவர் உலகக் கோப்பையில் மட்டுமே பங்கேற்ற சச்சின், 45 இன்னிங்ஸ்களில் 2278 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

 வெற்றிகரமான ஒருநாள் சேஸ்களில் அதிக ஐம்பதுக்கு மேல் ஸ்கோர்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரை (45) கோஹ்லி (46)முந்தினார். 

அனைத்து ஐசிசி ஒயிட்-பால் போட்டிகளிலும் (சம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்  கிண்ணத்தில்  , ஒருநாள் உலகக்  கிண்ணத்தில்  50-க்கும் அதிகமான சராசரியைக் கொண்ட ஒரே வீரர் கோஹ்லி மட்டுமே. கோஹ்லியின் ஒருநாள் உலகக்  கிண்ணத்தில்  50.86. சம்பியன்ஸ் டிராபியில் சராசரியாக 88.16 மற்றும் ரி20 உலகக்  கிண்ணத்தில்  81.50.

 ஜஸ்பிரித் பும்ரா 4/39 தனது சிறந்த ஒருநாள்  உலகக் கோப்பை பந்துவீச்சு புள்ளிவிவரங்களை பதிவு செய்தார்.

Wednesday, May 17, 2023

ரோஹித் சர்மாவுடன் போட்டி போடும் தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில்  ரோஹித் சர்மாவும்,  தினேஷ் கார்த்திக்கும்  முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக   நடைபெற்ற ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் (ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழப்பு) ஆனதன் மூலம் ரோஹித் சர்மாவுடன்  தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.  ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனி வரும் ஒவ்வொரு ஆட்டங்களும்   வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளன.

இந்த போட்டியில் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு காலத்தில் எதிரணி பவுலர்களை கலங்கடித்த தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் பெட்டிப் பாம்பாய் அடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   16 ஆவது முறையாக ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகியுள்ளார். 16 முறை டக் அவுட்டில் ஆட்டமிழ்ந்த  ஒன்னொரு வீரராக  ரோஹித் சர்மா இருக்கிறார். இவரும் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் 15 முறை டக் அவுட் ஆனவர்களாக மன்தீப் சிங்,சுனில் நரேன்  ஆகியோர் உள்ளனர்.

 

Monday, February 20, 2023

திட்டமிட்டு தூக்கப்பட்ட கோலி சேட்டன் சர்மா ஒப்புதல்

  பிரபல தொலைக்காட்சியில் ரகசிய கேமரா இருப்பது தெரியாமலேயே இந்திய கிரிக்கெட்டின் பின்புறத்தில் நடைபெறும் நிறைய குளறுபடியான உண்மைகளைஇந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா  பேசியுள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக முழுமையாக ஃபிட்டாகாத வீரர்கள் ஊசிகளை போட்டுக் கொண்டு விளையாடுவதும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணியின் தேர்வு பற்றி தமது வீட்டுக்கே வந்து பேசியதாகவும் அவர் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் உச்சகட்டமாக கங்குலி – விராட் கோலி ஆகியோரிடையே விரிசல் என்று கடந்த வருடம் வதந்திகளாக மட்டுமே வந்த செய்திகளை தற்போது அவரால் 100% உறுதியாகியுள்ளது.

தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் விராட் கோலி, சவுரவ் கங்குலி இடையே நடந்த பிரச்சினைகள், வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொள்கிறார்கள் என பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

  உலகக் கிண்ணப்போட்டியில் சம்பியனகவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டு ரி20 உலக கிண்ணப் போட்டியுடன் ரி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தாலும் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். ஆனால் அவரது தலைமையில் துபாயில் பாகிஸ்தானிடம் முதன்முறையாக தோற்று படுதோல்வியை சந்தித்ததால் அதிருப்தியடைந்த தேர்வு குழுவினர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கப்டன்கள் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் அவருடைய ஒருநாள்  கப்டன் பதவியையும் பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி வெற்றிகரமான அக்ப்டனாக இருந்த போதிலும் டெஸ்ட் அணியின் கப்டன்  பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ரி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டதாக சௌரவ் கங்குலி தெரிவித்தார். ஆனால் யாரும் தன்னிடம் அவ்வாறு கேட்டுக் கொள்ளவில்லை என்று மறுத்த விராட் கோலி மறுத்தார். இருப்பினும் உண்மையிலேயே சவுரவ் கங்குலி அவ்வாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்த சேட்டன் சர்மா விராட் கோலி ஏன் பொய் பேசினார் என்பது புரியவில்லை என்று கூறியிருந்தார்.

“அதிலும் குறிப்பாக தாம் இல்லையென்றால் இந்தியாவில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் நின்று விடும் என்று விராட் கோலி நினைத்தார். ஆனால் அது எப்போதாவது நடைபெறுமா? ஏனெனில் வரலாற்றில் நம்முடைய சில நட்சத்திர வீரர்கள் வந்து விளையாடி விட்டு சென்றாலும் கிரிக்கெட் அதே நிலைமையில் தான் உள்ளது. எனவே விராட் கோலி அந்த சமயத்தில் தலைவர் கங்குலிக்கு பதிலடி கொடுக்க முயற்சித்தார். அது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலியின் செயல்பாடுகள் பிசிசிஐக்கு எதிராக ஒருவர் நடந்து கொள்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது”

“ஆனால் தலைவர் பிசிசிஐயை பிரதிபலிப்பவர் அல்லவா? அந்த சமயத்தில் தவறு யார் மீது இருந்தாலும் அது காலப்போக்கில் தீர்மானிக்கப்படும். ஆனால் அதற்காக விராட் கோலி பிசிசிஐயை தாக்கினார். இந்திய வீரர்கள் அதற்கு எதிராக இருந்தார்கள். ஏனெனில் அவ்வாறு செய்தால் தங்களது இடம் பறி போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த இடத்தில் தலைவர் மீது தவறு இருந்தாலும் நீங்கள் அவர்களுடைய பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டும்”

“அதனால் ரோகித் சர்மா தாமாக ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பேறறார். அந்த சமயத்தில் ஈகோ சண்டை நடந்தது. குறிப்பாக தமது கேப்டன்ஷிப் பறிபோவதற்கு கங்குலி காரணம் என்று நினைத்த விராட் கோலி அவருக்கு பாடத்தை புகட்ட நினைத்தார். ஆனால் வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று தேர்வு குழுவினரான நாங்கள் தான் அந்த முடிவை எடுத்தோம். இருப்பினும் அவர் மீடியாவில் கங்குலி பற்றி அவ்வாறு பேசியது இறுதியில் அவருக்கே பிரச்சனையாக உருவெடுத்தது” என்று கூறினார்.

உடல் தகுதியை நிருபிப்பதற்காக வீரர்கள் ஊசிகளை செலுத்திக் கொள்வார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

 வீரர்கள் சிலர் 85 சதவீத உடல் தகுதியுடன்தான் இருப்பார்கள். மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும் கூட, தாங்கள் விளையாட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒழுங்காக குனியக் கூட தெரியாது. அவருக்கு ஒன்று அல்லது இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றபடி, 80 சதவீத உடல் தகுதியுடைய வீரர்கள், ஊசியை எடுத்துக் கொண்டு வந்து, தாங்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகசொல்வார்கள். வலி மருந்தை வீரர்கள் சிலர் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் வரும் என்பதை வீரர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். 

இதேபோன்று ஊசியை பயன்படுத்துவதால் போதை தடுப்பு நடவடிக்கையில் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இந்திய வீரர்கள் சூப்பர் ஸ்டார்கள். அவர்களுக்கு டாக்டருக்கா பஞ்சம் ஏற்படும்? போன் செய்தால் டாக்டர்கள் வீட்டிற்கே வந்து ஊசி போட்டுவிட்டு செல்லப் போகிறார்கள். பெரும்பாலும் ஊசியை செலுத்தி உடல் தகுதியை நிரூபிக்கும் வீரர்களிடம் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஆனால் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே பெரிய பிரச்னை, பிளவு என்று ஏதும் இல்லை. எல்லாம் மீடியாக்களின் ஊகச் செய்திதான். ஓரிடத்தில் மிகப்பெரும் 2 நட்சத்திரங்கள் இருக்கும்போது சிறதளவு ஈகோ இருக்கத்தான் செய்யும். இது அமிதாப் பச்சனுக்கும், தர்மேந்திராவுக்கும் இடையில் இருக்கும் ஈகோவைப் போன்றது. எதுவெல்லாம் கிடையாதோ அதுவெல்லாம் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உண்மையிலேயே விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஒருவருக்கொருவர் உதவிகரமாக செயல்பட்டனர். விராட் கோலி ரன் எடுக்க திணறியபோது, ரோஹித் ஆலோசனைகளை வழங்கினார். ரோஹித்தின் மோசமான தருணங்களில் கோலி உதவியாக இருந்தார்

இந்த விவகாரம் இந்திய கிறிக்கெற்றில் புயலைக் கிளப்பி உள்ளது.