Thursday, April 29, 2021

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது சென்னை

டில்லியில் நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில்   ஹைதராபாத்தை எதிர்த்து  விளையாடிய  சென்னை  7  விக்கெட்களால்  வெற்றி  பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  ஹைதராபாத் அணித்தலைவர்  துடுப்பாட்டத்தைத் தேர்வு  செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய  சன்ரைசர் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் அடித்தது.  172 ஓட்டங்கள் எனும் வெற்றி  இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையி்ல் 3 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர்  களமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 7 (5) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ஓட்டங்களை சேர்த்தது. ஆனால், ஓட்ட சதவிகிதம்  அதிகரிக்கவில்லை.  மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தநிலையில் 57 (55) ஓட்டங்களில் வெளியேறினார். மணிஷ் பாண்டேயும் 61(46) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

வானர், மணிஷ் பாண்டே ஜோடி 87 பந்துகளில் 106  ஓட்டங்கள்  எடுத்தது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்து  வீச்சும் துரிதமான களத்தடுப்பும்  இந்த  ஜோடியைக்  கட்டுப்படுத்தியது.

கடைசி  4  ஓவர்களில் அதிரடி  காட்டிய    கேன் வில்லியம்சன், கேதார்  யாதவ் ஜோடி ஹைதராபாத்தின்  ஓட்ட  எண்ணிக்கையை  உயர்த்தியது. கேன் வில்லியம்சன் 26(10) ஓட்டங்களும், கேதர் ஜாதவ் 12 (4) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 2 விக்கெட்டுகளும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர்  களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ஓட்ட சதவிகிதத்தை  அதிரடியாக உயர்த்தியது. பவர் பிளேயில்  தொடர்ந்து  மூன்றாவது முறையாக விக்கெட் இழப்பின்றி 50  ஓட்டங் எடுத்தனர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், டூ பிளஸ்சிஸ்   ஜோடி தங்களது அரைசதத்தை பதிவு செய்தது

தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 75 (44) ஓட்டங்களில் ரஷித்கான் பந்துவீச்சில் விக்கெட்டை  இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 15 (8) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மொயின்  அலியைத் தொடர்ந்து   டூ பிளஸ்சி 56 (38) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா, ஜடேஜா ஜோடி  அதிரடியாக விளையாடி  வெற்றி  எட்டியது.


 சுரேஷ் ரெய்னா 17 (15) ஓட்டங்களும், ஜடேஜா 7 (6) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்கள்  அடித்து வெற்றி  பெற்றது. ஹைதராபாத் அணியின் சார்பில்  ரஷித்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 56 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், தவானை விட ஐந்து ஓட்டங்கள் பெற்று ஒரேஞ்ச் தொப்பியை கைப்பற்றினார் டு பிளிஸ்சிஸ்.


நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவரும் இல்லாதது ஹைதராபாத்துக்கு  பாதகமானதாக‌  உள்ளது. 

 இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி மீண்டும் புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியது. 6 போட்டிகளில் ஒரு தோல்வி, தொடர்ந்து 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. 5 தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் இந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் அணி வருவது சந்தேகம்தான்.

ருதுராஜ்  கெய்க்வாட்  தொடர்ச்சியாக  மூன்றாவது அரைசதம் அடித்தார். இப்போட்டியில் ருதுராஜ் ஒரே ஒரு சிக்ஸரும் 12  பவுண்டரிகளும் அடித்தார்.

ரெய்னா 202 சிக்ஸரும் வானர்  200 ஆவது சிக்ஸரும் அடித்தனர். கெய்ல்ஸ் 354, டிவில்லியஸ் 245, ரோஹித் 222 டோனி 217 ,பொலட் 202 சிக்ஸர்கள் அடிட்துள்ளனர்.


வானர் ரி20யில் 10000 ஓட்டங்கள் அடித்த  முதலாவது அவுஸ்திரேலிய  வீரரானார். கெய்ல்ஸ்  13839, பொலட் 10694, ஷிப் மாலிக் 10488, டேவிட் வானர் 10015 கோஹ்லி 9894,  ரோஹித் 9266  ஓட்டங்கள் அடித்துள்ளனர்.



 

 

Friday, April 23, 2021

நான்காவது போட்டியிலும் வென்றது பெங்களூர்

ரோயல் சலஞ் பெங்களூர்  ,ராஜஸ்தான் ரோயல்ஸ், ஆகியவற்ருக்கிடையே மும்பையில் நடந்த  16 ஆவது லீக் போட்டியில் 10 விக்கெட்களால் பெங்க‌ளூர் வெற்றி பெற்றது.

தேவ்தத் படிக்கலின்  சதம், க‌ப்டன் கோலியின் அரைசதம் ஆகியவற்றால்  பெங்களூர் இலகுவாக வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கோஹ்லி கள‌த்தடுப்பைத் தேர்வு செய்தார்.

 முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்கள் அடித்தது. 178 ஓட்டங்கள் எனும் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர்    விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவர்களில் 181 ஓட்டங்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ராஜஸ்தான் அணி வீரர்களான‌ ஜோஸ் பட்லர் (8), மனன் வோரா (7) . டேவிட் மில்லர் [0] ஆட்டமிழந்தனர்.க‌ப்டன் சஞ்ச சாம்சன் (21)  விரைவாக வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ரியான் பராக் (25), ஷிவம் துபே (46) ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய ராகுல் டிவாட்டியா, 23 பந்துகளில் 40 ஓட்டங்கள்(2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். கிறிஸ் மோரிஸ் (10) சோபிக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது.


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூர் அணிக்கு ப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ராகுல் டிவாட்டியா பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த படிக்கல், முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ப்டன் கோஹ்லி, அரைசதம் கடந்தார்.

பெங்களூரு அணி 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (72 ஓட்டங்கள், 3 சிக்சர், 6 பவுண்டரி), படிக்கல் (101 ஓட்டங்கள், 6 சிக்சர், 11 பவுண்டரி) ஆட்டமிழக்காது  இருந்தனர். படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


தேவ்தத் படிக்கல், விராட் கோலி கூட்டணி  பல சாதனைகளையும் படைத்துள்ளனர்ப்டன் விராட் கோஹ்லி, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 6ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்றும் 40-வது அரைசததத்தை எட்டிய வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இதுவரை 196 போட்டிகளில் விளையாடிய கோஹ்லி, 6,021 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதில் 5 சதங்கள், 40 அரைசதங்கள், 204 சிக்ஸர்கள், 518 பவுண்டரிகள் அடங்கும். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் இந்த சாதனையை எட்டியதில்லை, முதல்முறையாக 4ஆயிரம், 5 ஆயிரம் ஓட்டங்களை எட்டியவரும் கோஹ்லிதான், தற்போது 6ஆயிரத்தை தொட்டவரும்  கோஹ்லிதான்.

ஆர்சிபி அணிக்காக சர்வதேச அறிமுகம் இல்லாத 3 வீரர்கள் இதற்கு முன் சதம் அடித்துள்ளனர். ஷான் மார்ஷ்(2008,ராஜஸ்தான் எதிராக) மணிஷ் பாண்டே(2009, டெக்கான் சார்ஜர்ஸ்) பால் வால்தாட்டி(2011, சிஎஸ்கே) ஆகியோர் சதம் அடித்தனர். தற்போது ேதவ்தத் படிக்கல் சதம்அடித்துள்ளார்.

மிக இளம் வயதில் சதம் அடித்த 3-வது வீரர் எனும் பெருமையை படிக்கல் பெற்றுள்ளார். இதற்கு முன் மணிஷ் பாண்டே 2009ம்ஆண்டு சதம் அடித்தபோது அவருக்கு வயது19, 253 நாட்களாகி இருந்தது. ரிஷப்பந்த் 2018-ல் சதம் அடித்தபோது அவருக்கு வயது 20,218 நாட்களாக இருந்தது. தற்போது படிக்கல்லுக்கு வயது 20, 289வயதாகிறது.

178 ஓட்டங்களை 10 விக்கெட் வித்தியாசத்தில்ல ஆர்சிபி அணி சேஸிங் செய்தது ஐபிஎல் வரலாற்றிலேயே விக்கெட் இழப்பின்றி சேஸ் 3-வது மிகப்பெரிய இலக்காகும். இதற்கு முன், 2017ல் கொல்கத்தா அணி(184,குஜராத்லயன்ஸ்) 2020ல் சிஎஸ்கே(179,கிங்ஸ்பஞ்சாப்) ஆகியவை விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்திருந்தன.

ஆர்சிபி அணி 4-வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் 2 முறைக்கு மேல் எந்த அணியும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில்லை. கடந்த 2010ல் ராஜஸ்தான், 2015ல் டெல்லி டேர்டெவில்ஸ், 2018ல் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 10 விக்கெட்டில் ஆர்சிபி வென்றுள்ளது.

ஆர்சிபி அணி தொடர்ந்து பெறும் 4-வது வெற்றியாகும். இதன் மூலம் 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.


Thursday, April 22, 2021

சென்னையை மிரட்டிய கொல்கத்தா

மும்பையில்   நடந்த  ஐபிஎல் ரி20 போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை  எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி  பெற்ற  கொல்கத்தா கப்டன்  மோர்கன்களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்கள் சேர்த்தது. 221 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய  கொல்கத்தா19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்கள் எடுத்து  18 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

டுபிளஸிஸ், ருதுஜாஜ் கெய்க்வாட் ஆகியோரின் பொறுப்பான ஆட்டமும் அடுத்து களம் இறங்கிய வீரர்களின் அதிரடியும் சென்னை சென்னையின் ஓட்ட எண்ணிக்கையை 200 ஆக்கியது.தீபக் சஹரின் அற்புத மான பந்து வீச்சால் கொல்கட்டாவின் முக் கிய நான்கு வீரர்கள் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா  100 ஓட்டங்களை எட்டுமா என எதிர்பார்த்த வேளையில் ரஸல், கார்த்திக், கம்மின்ஸ் ஆகியோரின் அதிரடியால் சென்னைக்கு தோல்விப்   பயத்தைக் காட்டியது கொல்கத்தா.

ருதுராஜ் கெய்க்வாட்,பாப் டு பிளிஸ்சிஸ்  ஜோடி ளம் இறங்கியது. சென்னையின் கண்டமான முதலாவது பவர் பிளேயையும் தான்டி இந்த ஜோடி அசத்தியது. 10 ஆவ்து ஓவரில் இந்த ஜோடி 82 ஓட்டங்கள் எடுத்தது.  சென்னை 115 ஓட்டங்கள் எடுத்தபோது முதலாவது விக்கெட்டை இழந்தது. ருதுராஜ்  42 பந்துகளில்  64ஓட்டங்கள்,  மொயின் 12 பந்துகளில்  25 ஓட்டங்கள்,மொயி அலிக்குப் பின்னர் ரெய்னா வருவார் என எதிர் பார்த்தபோ டோனி களம் இறங்கினார். 8 பந்துகளில்  17  ஓட்டங்கள் , டுபிளஸிஸ் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 95  ஓட்டங்கள். 20 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஜடேஜா  சிக்ஸ் அடித்து  சென்னையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழப்புக்கு 220 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து 221 ஓட்டங்ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்தது கொல்கத்தா.  முத்ல் பவர்  பிளே சென்னைக்கு சாதகமாக இருந்தது.  கொல்கத்தா ரசிகர்கள் தோல்வியை எதிர்பார்த்தனர். இந்த நிலையில் ஆண்ட்ரே ரசல் - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இவர்களின் அதிரடியை சென்னை பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தினேஷ் கார்த்திக்  24 பந்துகளில் 42 ஓட்டங்கள் அடித்தபோது லுங்கி இங்கிடி பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆண்ட்ரே ரசல், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 22 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்த அவர், சாம் கர்ரனின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.


 கொல்கத்தாவின் கதை முடிந்தது என நினைத்திருந்த வேளையில் நான் இருக்கிரேன் என பாட் கம்மின்ஸ் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், மற்றும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 66 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 18  ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வெற்றி  பெற்றது.


இரு அணி வீரர்களும் சேர்த்து இந்தப் போட்டியில் மொத்தம் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளனர், இதில் கொல்கத்தா வீரர்களான கம்மின்ஸ், ரஸல், கார்த்திக் 3 பேரும் சேர்ந்து 16 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். மொத்தம் 33 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. 60 பந்துகளில் 95 ஓட்டங்கள் (4சிக்ஸர்,9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த டூப்பிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார. கடந்த 3 போட்டிகளில்  15 ஓட்டங்கள் அடித்த அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை டோனி பொய்யாக்கினார்., தன் மீது சிஎஸ்கே அணி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி 42 பந்துகளில் 62 ஓட்டங்கள்(4சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.


சாம்கரன் 4 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்தார்.. சிஎஸ்கே வரலாற்றிலேயே மோகித் சர்மாவுக்குப் பின்னர்  மோசமான பந்துவீச்சு இதுவாகும்.  2015 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோகித் சர்மா 58 ஓட்டங்களை வழங்கி்னார்.

 ஐபிஎல் தொடரில் 150-வது வீரரை டோனி  ஆட்டமிழக்கச் செய்தார்.ஐபிஎல் தொடரில் சுனில் நரேனின் பந்து வீச்சில் பவுண்டரி அடித்ததில்லை. இந்தப் போட்டியில் ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். சுனில் நரேனின் ஓவர்களில் 80 பந்துகளைச் சந்தித்த டோனி இரண்டு முறை ஆட்டமிழந்து 39 ஓட்டங்களை மட்டுமே அடித்தார்.

8-வது வீரராக் களமிறங்கி அதிக ஓட்டங்கள் அடித்தவீரர் எனும் பெருமையை கம்மின்ஸ்(64)பெற்றார். இதற்கு முன் 2015ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் 54 ஓட்டங்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.இரு அணி வீரர்களும்  இந்தப் போட்டியில் மொத்தம் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளனர், இதில் கொல்கத்தா வீரர்களானகம்மின்ஸ், ரஸல், கார்த்திக் 3 பேரும் சேர்ந்து 16 சிக்ஸர்களை பறக்கவிட்டனர். மொத்தம் 33 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.


இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்திக்கிறது, 4 போட்டிகளில் 3 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த ரி20 போட்டிகளில் இதுவரை எந்த அணியும் 200 ஓட்டங்களை விரட்டி வெற்ரி பெற்றதில்லை.

60 பந்துகளில் 95 ஓட்டங்கள் (4சிக்ஸர்,9பவுண்டரி) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த டூப்பிளசிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்