Friday, August 31, 2012

வரலாற்று நாயகன்ஆம்ஸ்ரோங்அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "நாஸா'வால் கடந்த 1969 இல் சந்திரமண்டல ஆய்வுக்கென அனுப்பப்பட்டிருந்த அப்பலோ  11 விண்கலத்தில் தனது 39 ஆவது வயதில் பயணித்து சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்து சாதனை படைத்த நீல் ஆம்ஸ்ரோங் தனது 82 ஆவது அகவையில் கடந்த ஞாயிறன்று (26/08/12)காலமானார்.

அமெரிக்க, ஒஹியோ மாகாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நீல் ஆம்ஸ்ரோங் விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றிகண்ட பின்னர், "நாஸா' வின் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் ஆலோசகராகவும் மற்றும் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளையும் வகித்து வந்தவர். இந்த மாத முற்பகுதியில் இருதய சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த அவர் அதன் பின்னர் அடிக்கடி மூச்சுத் திணறலால் அவஸ்தைப்பட்டு வந்தார்.
இது குறித்து, அன்னாரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள ""அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இருதய நோயால் பாதிக்கப்பட்டுவந்த எங்கள் குடும்பத் தலைவரின் மறைவு குறித்த துயரமான செய்தியை இதயம் நொருங்கிய நிலையில் இத்தால் வெளியிடுகின்றோம். நீல் பாசமிகு கணவனாக, தந்தையாக, பாட்டனாக, சகோதரனாக மற்றும் நல்லதோர் நண்பனாக வாழ்ந்து மறைந்துள்ளார்.
 நல்லிதயம் படைத்ததோர் மனிதரை நாம்     இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் உலகம் பூராகவுமுள்ள இளைய தலைமுறையினருக்கு உதாரண புருஷராக வாழ்ந்து எமது நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த அவரின் அயரா உழைப்பை நாம் எமது நெஞ்சங்களில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். நீலைக் கண்ணியப்படுத்த விரும்புவோரிடம் நாம் உருக்கமாக வேண்டுவது யாதெனில்,
முன்னுதாரணமான அவரது சேவை மனப்பான்மையை, கண்ணியத்தை என்றுமே கௌரவப்படுத்துங்கள். அடுத்த தடவை நீங்கள் தெளிவான இரவில் வெளியே நடந்து செல்கையில் உங்களைப் பார்த்து புன்னகைக்கும் சந்திரனைப் பார்க்கும்போது எங்கள் நீல் ஆம்ஸ்ரோங்கை நினைவு'' கூர்ந்து அவருக்கு கண்ஜாடை காட்டுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீல் ஆம்ஸ்ரோங்கின் மறைவு குறித்து "நாஸா' வெளியிட்செய்தியில், விண்வெளி சாதனை வீரரும், முன்னாள் சோதனை விமானியும், சந்திரனில் முதன்முதலாக காலடி பதித்தவருமான எமது மரியாதைக்குரிய நீல் ஆம்ஸ்ரோங்கின் மறைவு குறித்து எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது அனுதாபச் செய்தியில், "கடந்த 1969 ஆம் ஆண்டில் அப்பலோ விண்கலத்தில் சந்திரமண்டல ஆய்வுக்கென நீல் ஆம்ஸ்ரோங்கும், அவரது சகாக்கள் இருவரும் எமது நாட்டின் ஒட்டுமொத்த அபிலாஷைகளை சுமந்தபடியே சென்றிருந்தனர். அவர் சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த மனிதன் என்ற வகையில், அவரது மனித சாதனை என்றுமே மறக்கப்படமாட்டாது.

""என குறிப்பிட்டுள்ளயார். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரொம்னியும் தேசியத் தலைவர்கள் மண்டபத்தில் நீல்ஆம்ஸ்ரோங்குக்கு இன்று இடமொன்று கிடைத்துள்ளது. பூமி ஈன்றெடுத்த தனது முதலாவது மகனை சந்திரன் இழந்துவிட்டது' என தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1930 ஓகஸ்ட் 5ஆம் திகதி ஒஹியோ மாகாணத்தில் வாபகெனட்டாவுக்கு அருகேயுள்ள நகரொன்றில் பிறந்த நீல் ஆம்ஸ்ரோங் அமெரிக்க இராணுவத்தில் இணைந்ததுடன் கொரிய யுத்தத்திலும் பங்குபற்றினார். பின்னர், "நாஸா' விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான விமானங்களையும் விண்கலங்களையும் இயக்கும் விமானியாகப் பணியாற்றினார்.

கடந்த 1957 இற்கும் 1975 இற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விண்வெளிப்பயண பந்தயத்தில் அமெரிக்காவும், சோவியத்யூனியனும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தன. விண்வெளி ஆய்வில் யார் முதலாவதாக ஈடுபடுவதென்ற போட்டியில் இறங்கிய இரண்டு வல்லரசுகளுக்குமிடையேயான அரசியல் யுத்தமாகவும் அது மாறிவிட்டிருந்தது. சோவியத் யூனியன் "ஸ்புட்னிக் 1' என்ற தனது செய்மதியை 1957 ஒக்டோபர் 4 ஆம் திகதி விண்ணுக்கு ஏவி, தனது முதலாவது இலக்கை அடைந்தது. ஒருமாதம் கழிந்த நிலையில், சோவியத் தனது ஸ்புட்னிக் 11 செய்மதியில் "லைக்கா' என்ற நாயையும் விண்வெளிக்கு அனுப்பியது.
1961இல் அமெரிக்கா மூன்று வயதான "ஹாம்' என்ற பெயருடைய வாலில்லாக் குருங்கை MR  2 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. அதன்பின்னர் 1961 ஏப்ரல் 12 இல் "வொஸ்டொக் 1' எனும் விண்கலம் மூலம் சோவியத் விண்வெளி வீரர் யூரி கஹாரின் உலகை வலம் வந்தார். ஆயினும், 1968இல் அவர் தனது 34ஆவது வயதில் ஜெட் விமான விபத்தில் உயிரிழந்தார்.

 1961இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன்.எவ்.கென்னடி காங்கிரஸ் மாநாட்டு உரையில், "அப்பலோ' விண்வெளி ஆய்வுக்கென "நாஸா' நிறுவனத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், சந்திரனில் காலடி பதிக்கும் சாதனையை அமெரிக்கா நிலைநாட்ட வேண்டுமெனவும் கோரியிருந்தார். அதன் பிரகாரம் அப்பலோ விண்வெளி நடவடிக்கைகள் "நாஸா'வால் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1969 ஜூலை 16ஆம் திகதி சந்திரமண்டலத்திற்கு அனுப்பப்பட்ட அப்பலோ  ஐஐ விண்கலத்தின் கொமாண்டராக நீல் ஆம்ஸ்ரோங்கும், சக வீரர்களான எட்வின் புஸ் ஆல்ட்ரின் மற்றும் விமானமோட்டி மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் செயற்பட்டனர். நான்கு நாட்கள் கடந்த நிலையில், 
உலகெங்குமுள்ளஅரை பில்லியன் மக்கள் சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் கால் பதித்த அந்த சாதனை நிகழ்வை பார்த்து ரசித்தனர். அடுத்த வருடமே  "நாஸா'வின் விண்கல அறிவியல் துறை பிரதி இணை நிர்வாகியாக கடமையாற்றிய அவர் ஒருவருடத்தின் பின்னர், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியாகவும் பணியாற்றினார். 

கமராக்களைக் கண்டால் ஓடி ஒளிந்துகொள்ளும் சுபாவமுடைய நீல் ஆம்ஸ்ரோங், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விண்வெளி பற்றிய கொள்கையினை ஏற்று, விண்வெளிக் கப்பல்களை உருவாக்கி ஆய்வு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டுமென       கடந்த 2010ஆம் ஆண்டு பொது மக்கள் முன்னிலையில் வலியுறுத்திப்பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்31/08/12

Wednesday, August 29, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 40


பெங்களூரில் உள்ள பெண்ணொருத்திக்கு அமெரிக்காவில் உள்ள இளைஞனை நிச்சயதார்த்தம் செய்கிறார்கள் பெற்றோர். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்க மாப்பிள்ளை எனத் தன்னை அறிமுகம் செய்து பழகுகிறான். உண்மை தெரிந்த அப்பெண் அதிர்ச்சியடைகிறாள். நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையைத் திருமணம் செய்
வதா? ஐந்து நாட்கள் மட்டும் பழகிய மனதில் இடம் பிடித்த இளைஞனைத் திருமணம் செய்வதா எனத் தடுமாறும் பெண்ணின் கதைதான் மின்னலே.

மாதவனும் அப்பாஸூம் ஒரே கல்லூரியில் படித்திருக்கிறார்கள். மாதவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பாஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். கலாட்டா, அடிதடி, நையாண்டி என்பனவற்றில் காலம் கடத்தும் குண இயல்வுடையவர் மாதவன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் அப்பாஸ்ஸைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் எப்பவும் இருக்கும். கல்லூரியில் எதிரும் புதிருமாக இருக்கும் மாதவனும், அப்பாஸூம் தமக்கென ஒரு கோஷ்டியை வைத்திருப்பதால் இரண்டு கோஷ்டிகளும் சந்திக்கும் போது முறுகல் ஏற்படும்.கல்லூரி இறுதி நாளில் ஒருவருடன் ஒருவர் கைலாகு கொடுத்து ஆரத்தழுவி பிரிகிறார்கள். இன்று பிரிந்தாலும்
என்றோ ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் உள்ளது. இதுதான் இறுதிச் சந்திப்பு. இனிமேல் நாங்கள் சந்திக்கக் கூடாது என்று கூறி மாதவனும் அப்பாஸூம் விடை பெறுகின்றனர்.

தொழில் கிடைத்து அப்பாஸ் அமெரிக்காவுக்குச் செல்கிறார். மாதவனுக்கு இந்தியாவில் வேலை கிடைக்கிறது. 10 ஆயிரம் டொலர் சம்பளத்துடன் சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும்படி மாதவனிடம் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது. பணத்தைவிட தாத்தாதான் முக்கியம் என்று சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல மறுக்கிறார் மாதவன். திருமணம் முடிக்கும்படி மாதவனின் தாத்தா நாகேஷ் நெருக்குதல் கொடுக்கிறார். திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் மாதவன். மாதவனுக்கு அறிவுரை கூறும்படி நண்பன் விவேக்கிடம் கூறுகிறார் நாகேஷ். யாருடைய ஆலோசனையையும் கேட்காது திருமணம் செய்வதில்லை என்ற முடிவை மாற்ற முடியாதுது என்கிறார் மாதவன்.

பெங்களூரில் ஒருநாள் இரவு கடும் மழை பெய்துகொண்டிருக்கும் போது பொதுத் தொலைபேசியிலிருந்து நாகேஷிடம் கதைக்க டயல் செய்கிறார் மாதவன். மழையில் நனைந்தபடி சில சிறுவர்கள் வெள்ளத்தில் விளையாடினார்கள். வீதி ஓரத்திலே இயந்திரக்கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்து ஒரு அழகு தேவதை இறங்கி அச்சிறுவர்களுடன் மழையில் நனைந்து விளையாடியது. மழை இருட்டில் மின்னும் வெளிச்சத்தில் அந்தஅழகு தேவதை ரீமாவைக் காண்கிறார் மாதவன். நாகேஷýடன் கதைக்க டயல் செய்ததையும் மறந்து ரீமாவின் அழகில் சொக்கிப் போனார் மாதவன். இயந்திரம் சீராக்கப்பட்ட பின் காரில் ஏறிச் சென்றார் ரீமா. ரீமா சென்று வெகு நேரமாகியும் அந்த அழகு சிலையை மறக்க முடியாது தன்னை மறந்து நின்றார் மாதவன்.
சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ரீமாவைக் கண்டு மோட்டõர் சைக்கிளையும், பின்னால் இருந்த விவேக்கையும் நடு றோட்டில் விட்டுவிட்டு ரீமாவைத் தேடி ஓடிய மாதவன். ரீமாவைக் கண்டு அவர் பின்னால் செல்கிறார். அங்கே விவேக்கும் வருகிறார். பெங்களூரில் கண்ட அழகு @தவதை ரீமாவை விவேக்குக் காட்டுகிறார் மாதவன். ரீமா சிநேகிதியுடன் செல்ல இருவரும் பின் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் ரீமாவையும் சிநேகிதியையும் தவறவிட்டுவிட்டான். ரீமாவின் நினைவால் பைத்தியம் போலாகி விட்டார் மாதவன். ரீமா தன் சிநேகிதியை மரக்கறிச் சந்தையில் கண்ட விவேக் மாதவனை உடனே வரும்படி அழைக்கிறார். இருவரும் சிநேகிதியிடம் ரீமாவைப் பற்றி விசாரிக்கின்றனர். ரீமாவின் சிநேகிதி என்றும் தொலைபேசி இலக்கம் தவறி விட்டதாகவும் கூறி தொலைபேசி இலக்கத்தை வாங்குகிறான் மாதவன். பெங்களூரிலிருந்து மாற்றலாகி ரீமா சென்னைக்கு வந்து விட்டதாகக் கூறுகிறார் சிநேகிதி. வாய் உளறி இருவரும் உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். அப்போது ரீமாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை அடுத்த வாரம் போவதாகக் கூறி தொலைபேசி இலக்கத்தை மறந்து விடும்படி கூறுகிறார் ரீமாவின் சிநேகிதி. அதைக் கேட்ட மாதவன் தன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக உணர்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையை ரீமாவுக்கு தெரியாது. தொலைபேசியில் கதைப்பார் என்பதை மாதவன் அறிகிறார். இன்னொருவனுக்கு நிச்சயம் பண்ணிய பெண் என்றாலும் ரீமாவை இழப்பதற்கு மாதவன் விரும்பவில்லை. விவேக்கும் நண்பிகளும் ரீமா வீட்டின் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கின்றனர். ரீமா அமெரிக்கா மாப்பிள்ளையை பார்க்கவில்லை என்பதனால் அமெரிக்க மாப்பிள்ளையாக செல்லும்படி தாத்தா நாகேஷ் ஆலோசனை கூறுகிறார். முதலில் தயங்கிய மாதவன் பின்னர் ஆள் மாறாட்டம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

ரீமாவின் வீட்டிற்குத் திடீரென ஒருநாள் சென்ற மாதவன் தான்தான் அமெரிக்க மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்துகிறார். ரீமா ஆச்சரியப்படுகிறார். மாதவன் தான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்று தவறாக நினைத்து மகிழ்ச்சியடைகிறாள். இருவரும் பல இடங்களுக்கும் செல்கின்றனர். ஐந்து நாட்களில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர்.

அமெரிக்க மாப்பிள்ளையின் பெற்றோர் தம் மருமகள் ரீமாவைச் சந்தித்து தமது மகன் இந்தியாவுக்கு வரப்போவதாகக் கூறுகின்றனர். அமெரிக்க மாப்பிள்ளை ஐந்து நாட்களாகத் தன்னுடன் ஊர் சுற்றியதை ரீமா அவர்களுக்குச் சொல்லவில்லை. மாப்பிளையை பார்க்க ரீமாவும் பெற்றோரும் பெங்களூர் சென்றனர். வீட்டில் அனைவரும் பழைய ஞாபகங்களைக் கூறியபடி சந்தோஷமாக இருக்கின்றனர். மாப்பிள்ளையைக் கூப்பிடும்படி ரீமாவின் பெற்றோர் அவசரப்படுத்தினர்.தலை குனிந்து இருந்த ரீமா தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அங்கே மாதவன் இல்லை. அப்பாஸ் கையை நீட்டிக் கொண்டிருந்தார். அப்பாஸை முதன் முதல் கண்டதும் ரீமா அதிர்ச்சியடைந்தார். தன்னை யாரோ ஏமாற்றி விட்டதாக அப்போது உணர்ந்தாள். தன்னை ஏமாற்றியவர் யார்? ஏன் அவர் ஏமாற்ற வேண்டும் என்று சிந்தித்தாள். உண்மையைச் சொல்ல முடியாது தடுமாறினாள். தன்னை சுதாகரித்துக் கொண்ட ரீமா அப்பாஸின் கையைப் பிடித்து போலியாகச் சிரித்தாள். 

சென்னைக்குத் திரும்பிய ரீமா தான் ஏமாந்த கதையைத் தன் சிநேகிதியிடம் கூறுகிறார். அமெரிக்க மாப்பிள்ளை என்று தன்னை ஏமாற்றியவன் யாரென தெரியாதெனக் குமுறுகிறாள். அப்போது இரண்டு பேர் தன்னிடம் ரீமாவைப் பற்றி விசாரித்ததை கூறுகிறார் சிநேகிதி. ரீமாவிடம் உண்மையை கூறுவதற்காகச் சென்ற மாதவனை அடையாளம் காண்கிறாள் சிநேகிதி. ரீமாவின் மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டார். அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறது எனக் கூறி மாதவனைப் போகச் சொல்கிறார் சிநேகிதி.ரீமாவை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைக் கூறத்தான் வந்தேன். ரீமாவை விரும்புகிறேன் என்கிறார் மாதவன். தன்னை ஏமாற்றிய மாதவனை வெளியே போகும்படி கூறுகிறார் ரீமா.

ரீமா தன்னை வெறுப்பதைத் தெரிந்து கொண்ட மாதவன் அடுத்து என்ன செய்வதென்று நண்பர்களுடன் ஆலோசனை செய்தார். அமெரிக்க மாப்பிள்ளையைத் தூக்க வேண்டும் என்று நண்பர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அமெரிக்க மாப்பிள்ளையை மிரட்டுவதற்காக மாதவனும் நண்பர்களும் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று மாதவனுக்கு ஏற்படுகிறது. ரீமாவை மணமுடிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த மாப்பிள்ளை மாதவனின் பரம எதிரியான அப்பாஸ் என்பது தெரியவருகிறது. இனி நாம் சந்திக்கக்கூடாது என்று கல்லூரியில் சபதம் செய்து பிரிந்த மாதவனும் அப்பாஸும் ஒரு பெண்ணை மணப்பதற்காக மீண்டும் சந்திக்கின்றனர்.

மாதவனின் மிரட்டலுக்குப் பயப்படாத அப்பாஸ் ரீமாவைத் திருமணம் செய்வதில் உறுதியாக உள்ளார். திருமண ஏற்பாடு தடல் புடலாக நடைபெறுகிறது. ரீமாவின் மனம் மாதவனை நினைத்து குமுறுகிறது. மாதவனுக்காக அப்பாஸிடம் தூது செல்கிறார் நாகேஷ். மாதவனின் மிரட்டுதலுக்கு பயப்படாது ரீமாவைக் கரம் பிடிக்கப் போவதாகக் கூறுகிறார் அப்பாஸ். ரீமா தனக்குக் கிடைக்கமாட்டார் எனத் தெரிந்ததும் மனமுடைந்த மாதவன் ரீமாவின் திருமண நாளில் சிங்கப்பூருக்குப் பயணமாகிறார் . தேவாலயத்தில் பாதிரியார் முன்னிலையில் ரீமாவின் கையைப் பிடிக்கிறார் அப்பாஸ். பாதிரியார் சொல்வது எதுவும் ரீமாவில் மனதில் ஏறவில்லை. மணப்பெண்ணின் பிடி நழுவுவதை தெரிந்து கொண்ட அப்பாஸ் ரீமாவுடன் தனியாகப் பேசவேண்டும்  என்கிறார். அப்பாஸ் என நினைத்து மாதவனுடன் பழகியதையும் மாதவனை மறக்க முடியாததையும் கூறுகிறார் ரீமா.நண்பர்களிடம் விடை பெற்று விமானத்தை நோக்கிச் செல்கிறார் மாதவன். அப்போது அப்பாஸ் அங்கு வருகிறார். இருவருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்படுமோ என்று நினைக்கும் போது ரீமாவை மாதவனிடம் ஒப்படைக்கிறார் அப்பாஸ்

.வித்தியாசமான திரைக்கதையை கையியலெடுத்து தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் கௌதம். ரீமா சென்னின் முதல் தமிழ்ப்படம். இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஹரிஸ் ஜெயராஜ் ரசிகர்களின் மனதில் சட்டெனப் புகுந்து இடம்பிடித்தார். மாதவன், அப்பாஸ் நாகேஷ், விவேக், ரீமா சென் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்தனர்.
ஓ..மாமாமா மாமு மாமு..., அழகிய தீயே எனை வாட்டுகிறாயோ, இவன் யாரோ இவன் யாரோ, இரு விழி இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே..., வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்காமேகத்துக்கா சொல்லு.. ஆகிய பாடல்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தன. வசீகரா என் நெஞ்சினிக்க... என்ற பாடலை முணு
முணுக்காதவர்களே இல்லை.

ரமணி
மித்திரன்26/08/12

Sunday, August 26, 2012

மதுரையில் கிர‌னைட் மோசடி கலக்கத்தில் அரசியல் பிரபலங்கள்தமிழக அரசைப் புரட்டிப் போட்ட ஸ்பெக்ரம் ஊழலை விட மிக மோசமான மோசடி பற்றிய விபரங்கள் சகலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. சட்டவிரோதமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்து கோடி கோடியாகப் பணம் சம்பாதித்த முதலைகளைப் பற்றிய தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்ததால் அது பற்றிய முழு விசாரணைக்கு உத்தரவிட்டார். புலன் விசாரணை செய்த பொலிஸார் பல ஆயிரம் கோடி ரூபா தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
கிரனைட் கற்களை வெட்டி எடுப்பதற்கு ஒரு சில நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. அரசுக்கு கணக்குக் காட்டாது சட்டவிரோதமான முறையில் கிரனைட் கற்களை வெட்டி எடுத்த நிறுவனங்களை இனம் கண்ட இரகசியப் பொலிஸார் அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையினால் பி.ஆர். பழனிச்சாமிக்குச் சொந்தமான பி.ஆர்.பி. நிறுவனம் செய்த முறைகேடு அம்பலத்துக்கு வந்தது. மதுரையில் உள்ள இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி தலைமறைவாக இருந்து பொலிஸாரிடம் சரணடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் அதிகாரிகள் பல வாரங்களாக நடத்திய ஆய்வின் பின்னர் அரசு அனுமதியளிக்கப்பட்டதற்கு அதிகமான கிரனைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. அதிக மோசடி செய்த பி.ஆர். நிறுவனம் தமிழக அரசின் கழுகுக் கண்களில் அகப்பட்டது. தமிழக அரசு அதிக அக்கறையுடன் மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு அரசியல் காரணம் உள்ளது.
மதுரையை ஒரு காலத்தில் தனது கைக்குள் வைத்திருந்த அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் பி.ஆர்.சி. நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தமிழக அரசு நம்புகிறது. அழகிரி, துரை தயாநிதி, பொன் முடி உட்பட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் பி.ஆர். பழனிச்சாமி மிக நெருக்கமாகப் பழகியதாக பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பி.ஆர். பழனிச்சாமி என்ற துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு அழகிரி, துரை தயாநிதி ஆகியோரைக் கைது செய்யத் தமிழக அரசு முயற்சி செய்கிறது. தமிழக பொலிஸாரின் கழுகுப்பார்வை தன் மீது விழுந்ததனால் துøர தயாநிதி தலைமறைவாகி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஜெயலலிதா அவசரப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். நில அபகரிப்புகளில் திராவிட முன்னேற்றம் கழக முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்ட போது அரசியல் பழிவாங்கல்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறியது.
அழகிரியின் மனைவியின் பெயரில் மதுரையில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் முறைகேடான வகையில் அமைக்கப்பட்டதாகக் கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முயற்சி செய்தது. அந்த முயற்சி அப்படியே அமுங்கிப் போனது. ஸ்பெக்ரம் ஊழலை மிஞ்சும் வகையில் கிரனைட் மோசடி உள்ளதாக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. பி.ஆர். பழனிச்சாமி என்ற துருப்புச் சீட்டின் மூலம் அழகிரியை அடக்குவதற்கு முயற்சி செய்கிறது தமிழக அரசு.
கிரனைட் மோசடியின் முக்கிய புள்ளியான பி.ஆர். பழனிச்சாமி சரணடைந்துள்ளார். அவரிடம் நடைபெறும் விசாரணைகள் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளிகள் பொலிஸ் வலையில் விழுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களுக்கு தமிழக அரசு வைத்துள்ள பொறியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களும் அகப்படும் சூழ்நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது அமைச்சர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர் பி.ஆர். பழனிச்சாமி. ஆட்சி மாறியதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலருடன் மிக நெருக்கமானார். பி.ஆர். பழனிச்சாமி கைது செய்யப்பட்டதால் அவர்கள் கலங்கிப் போயுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது இருந்த அதே செல்வாக்குடனேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போதும் பி.ஆர். பழனிச்சõமி பவனி வந்தார். தமிழகத்தில் ஆட்சி மாறியதே தவிர அவரின் ஆளுமை மாறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின்@பாது மதுரையில் நடைபெறும் இந்த முறைகேடு பற்றி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். மதுரை மாவட்டம் அழகிரியின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால் அன்றைய அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை. 
ஜெயலலிதா முதல்வரானதும் மதுரையில் நடைபெறும் இந்த முறைகேடு பற்றிய பூரண விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் தமது கடமையைப் பொறுப்பேற்றனர்.
தமிழக அரசில் பி.ஆர். பழனிச்சாமியின் செல்வாக்கை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது. பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்று கூடி ஆலோசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவும் அவரது உறவினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். ஜெயலலிதாவுக்கு எதிரான இந்தச் சதியில் பி.ஆர். பழனிச்சாமியும் சம்பந்தப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
கிரனைட் மோசடி விசாரணை துரிதமாக நடைபெறுவதால் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெறும் இந்த மோசடி பற்றி வாய் திறக்காது மௌனமாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு26/08/12

Saturday, August 25, 2012

ஒலிம்பிக் ஞாபகச் சின்னம்


  லண்டன் 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டதை நினைவு கூரும் முகமாக  ஒலிம்பிக்  வளையங்களை அமெரிக்க நீச்சல் வீராங்கனை மிசிம்பிராங்ளின் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
ஏனைய நீச்சல் வீரர்களான மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் றியான் லொச்டே ஆகியோருடன் இணைந்தே அவர் பச்சை குத்தும் கழகத்தில் இணைந் துள்ளதாக தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அனைதும் பச்சை குத்தப்பட்டாயிற்று ஆகா இதனை நம்பவே முடியவில்லை எனது ஒன்றே ஒன்றான பச்சை இது என தனது பச்சை குத்தப்பட்ட  அழகைக் காட்டிடும் அந்தப்படத்துடன் அவர் கிச்சிடுகின்றார். அவர்  ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களையும் வெண்கலப் பதக்கமொன்றையும் பெற்று ஒலிம்பிக் வரலாறு படைத்துள்ளார்

 இந்த மாத முற்பகுதியில் வெளியாகியிருந்தToday show  சஞ்சிகைக்கு அளித்திருந்த செவ்வியின் போது அவர் சக வீரர்களை மைக்கல் பெல்ப்ஸ் , பிரெண்டன் ஹான் சென் மற்றும் மட் கிறெவேர்ஸ் ஆகியோரைப் போன்று தானும் தனது உடம்பில் பச்சை குத்திக் கொள்வது பற்றி யோசித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். நான் இவ்வாறு பச்சை குத்திக் கொள்வேனென இதற்கு முன்னர் நினைத்திருக்கவேயில்லை. ஆயினும் சம்பாதித்துக் கொள்ள  வேண்டிய ஒன்றாகவே நான் இதனைக் கருதுவதுடன் அதிகளவு அர்த்தம் கொண்டுள்ள ஒன்றாகவும் நான் உண்மையில் இதனை மதிக்கின்றேன்  எனவும் கூறிய அவர் இதனை இவ்வாறு வைத்துக் கொள்வது பெருமை சேர்க்கும் ஒன்றெனவும் குறிப்பிட்டார். அவரது தந்தையரான டிக் (Dick)  இந்தப் பச்சை குத்தலுக்கான அங்கீகாரத்தை ஒலிம்பிக் சாதனை படைத்துள்ள தனது மகளுக்கு வழங்கியதுடன் அவர் சம்பாதிக்க வேண்டிய தொன்றே இது இதனை அவர் சம்பாதித்தே விட்டாள் என பெருமிதத்துடன் Today show  சஞ்சிகைக்குத் தெரிவித்தார். கொரோடாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான மிசி ஃபிராங்ளின் 200 மீற்றர் நீச்சல் போட்டியில் தனது மூன்றாவது  தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இன்னுமொரு அமெரிக்க நீச்சல் வீராங்கனையான எலிஸபெத் பெய்செல். அந்தப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றார். அவர் மிசி பற்றி கூறுகையில் ""மிசி எப்போதும் பிரம்மிப்பூட்டும் வகையிலேயே போட்டிகளில் ஜெயித்துக்காட்டுவார்'' அந்தப் போட்டியில் நான் மூன்றாமிடம் பெற்ற நிலையில் உணர்ச்சிவசப்பட்டபோது ஹாஸ்யமாக அவர் பேசி என்னைச் சிரிக்கவைத்தார் என்றார்.

மெட்ரோநியூஸ்24/08/12

Friday, August 24, 2012

கனத்த இதயத்துடன்விடைபெற்றார் லக்ஷ்மண்இந்திய கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரண கர்த்தாவான வி.வி. லக்ஷ்மண் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்று விட்டார். அவரது முடிவு கிரிக்கெட் இரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தோல்விப் பாதையில் போய்க் கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் வெற்றிக் கம்பத்தைக் கெட்டியாகப் பிடித்து எதிரணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தவர்.

இந்திய அணியில் தோல்வி உறுதி என நினைத்து இரசிகர்கள் வெளியேறிய பல சந்தர்ப்பங்களில் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி தனது அற்புதமான விளையாட்டினால் வெற்றியைத் தேடிக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர். டெஸ்ட் போட்டிக்குத் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து எதிரணி வீரர்களை வெறுப்பேற்றிய லக்ஷ்மண் அவசரப்பட்டு ஓய்வை அறிவித்து விட்டார் என்று கருத்து நிலவுகிறது. மருத்துவப் படிப்பில் நுழைய வேண்டிய சந்தர்ப்பத்தை ஒதுக்கித் தள்ளி கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த லக்ஷ்மன் கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்து தனது பெயரைப் பொறித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி அஹமதாபாத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அறிமுக வீரராகக் களமிறங்கிய லக்ஷ்மண் இரண்டாவது இன்னிங்ஸில் அரைச் சதம் அடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தினார். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய லக்ஷ்மண் தனது துடுப்பின் மூலம் எதிரணிகளை கலக்கமடைய வைத்தார்.
சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி, 167 ஓட்டங்கள் அடித்து எதிரணியை மிரட்டினார்.
16டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று சாதனை செய்த  ஸ்டீவோ தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராகக் களமிறங்கியது. 17 ஆவது டெஸ்ட் வெற்றியைக் குறி வைத்து விளையாடிய  அவுஸ்திரேலிய அணியின் முன்னால் இந்தியா தடுமாறியது. பெரலோ ஓன் பெற்ற இந்தியா தோல்வியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் லக்ஷ்மண், ட்ராவிட் ஜோடி அவுஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. லக்ஷ்மண் 281 ஓட்டங்களும் ட்ராவிட் 180 எடுத்தனர்.
 இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 657 ஓட்டங்கள் எடுத்தது. இந்த டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா 171 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. 16 டெஸ்ட் தொடர்களை  வென்ற அவுஸ்திரேலியா, இந்தியாவில் தொடரை இழந்து வெறுங் கையுடன் நாடு திரும்பியது.

உலகின் முதல் தர அணியாக விளங்கிய அவுஸ்தி@ரலியாவுக்கு எதிராக தனது  ஆதிக்கத்தை நிலை நாட்டினார். 2003 ஆம் ஆண்டு அடிலெயிட்டில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.  இப்@பாட்டியில் லக்ஷ்மண் 148 ஓட்டங்களும் ட்ராவிட் 233 ஓட்டங்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 303 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது.
2007-.08. இல் பாகிஸ்தானுக்கு எதிராக  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு ச‌தம்  அரைச் சதம் உட்பட 209 ஓட்டங்களை எடுத்தார்.

134 டெஸ்ட்டுகளில் விளையாடி 17 சதம் 56 அரைச் சதங்களுடன் 8781 ஓட்டங்கள் எடுத்த நான்காவது இந்திய வீரராக உள்ளார்.  முதல் மூன்று இடங்களில் முறையே சச்சின், ட்ராவிட், கவாஸ்கர் உள்ளனர். வெளிநாட்டு மண்ணில் 5 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்த நான்கு இந்திய வீரர்களில் லக்ஷ்மணும் ஒருவர்.

2001 ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 59,281 ஓட்டங்கள் என்று மொத்தமாக 304 ஓட்டங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 135  பிடி எடுத்த இரண்டாவது இந்திய வீரர். முதலிடத்தில் ட்ராவிட் (210) உள்ளார்.
2004 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினுடன் இணைந்து  நான்காவது விக்கெட்  இணைப்பாட்டத்தில் 376  ஓட்டங்கள் அடித்தார்.
2010 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் @டானியுடன் இணைந்து 7 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 259 ஓட்டங்கள்  எடுத்தார்.
டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளைச் செய்த லக்ஷ்மண் ஒரு நாள் போட்டியில்  சோபிக்கவில்லை. அதிரடி இவருக்கு கை கொடுக்கவில்லை. நிதானம் பொறுமை என்பவற்றினால் கட்டுப்பட்ட லக்ஷ்மண் ஒருநாள் போட்டிகளில் இருந்து காலப் போக்கில் ஓரம் கட்டப்பட்டார்.
2006 ஆம் ஆண்டின் பின் ஒருநாள் போட்டியில் லக்ஷ்மண் விளையாடவில்லை. 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் அடித்து ஒரு தொடரின் அதிக சதம் அடித்த சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.  இத் தொடரில் 10போட்டிகளில் 12 பிடிகள் எடுத்து ஒரு தொடரில் அதிக பிடி எடுத்த அலன் போடரின் சாதனையை சமப்படுத்தினார்.


கிரிக்கெட்டை நேசித்த லக்ஷ்மணுக்கு உரிய மதிப்பும் கௌரவமும் வழங்கப்படவில்லை. 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய லக்ஷ்மனுக்கு அணித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின் லக்ஷ்மண் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவசரப்பட்டு அவர் ஓய்வை அறிவித்த காரணம் தெரியவில்லை.

கங்குலி, ட்ராவிட் ஆகியோரைத் தொடர்ந்து லக்ஷ்மணும் ஓய்வு பெற்று விட்டார். இளைஞர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே ஓய்வு பெற்றதாக லக்ஷ்மண் அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்பக் கூடிய இளம் வீரர் இந்திய அணியில் இல்லை. ட்ராவிட், கங்குலி ஆகியோர் விட்டுச் சென்ற இடைவெளி இன்னமும் காலியாகவே உள்ளது. அதேபோல் லக்ஷ்மணின் இடமும் இப்போதைக்கு காலியாகவே உள்ளது.
16 வருட கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சினைகள், சர்ச்சைகள் எவற்றிலும் சிக்காதவர் லக்ஷ்மண். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுதோல்வியடைந்தது. அப்போது லக்ஷ்மண் மீதும் கடும் விமர்சனம் சுமத்தப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கு லக்ஷ்மண் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது. நாட்டுக்காக விளையாடிய திருப்தியுடன் விடை பெற்றுள்ளார் லக்ஷ்மண்.
ரமணி
மெட்ரோநியூஸ் 24/08/12Wednesday, August 22, 2012

திரைக்குவராதசங்கதி 43


தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு'' என்ற பாடலைஎழுதியவர் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வெ. ராமலிங்கம்பிள்ளை. அந்தக்காலத்திலே அப்பாடல் ஒலிக்காத இடமேஇல்லை.நாமக்கல்கவிஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைவிமர்சிப்பவர்களில் கலைஞரும் ஒருவர்.இருவருக்கும் இடையே தொடர்பு எதுவும்இல்லாததும் இருவரும் எதிரெதிர் முகாம்களில்இருந்ததும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது.

நாமக்கல் கவிஞர் எழுதிய மிகச் சிறந்த நாவல்"மலைக்கள்ளன்'. அந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த கோவை பட்சி ராஜபிலிம்ஸ் அதிபர் ஸ்ரீராமுலுநாயுடு அதனைப்படமாக்க விரும்பினார். கலைஞரின் திரைக்கதையில் வெளியான படங்கள் பெருவெற்றி பெற்றதால் அப்படத்துக்குக்கதை,வசனம் எழுதும்படி கலைஞரைக்கேட்டார் ஸ்ரீராமுலு நாயுடு.

நாமக்கல் கவிஞரின் நாவலுக்கு திரைக்கதைவசனம் எழுதுவதற்கு கலைஞர்மறுத்துவிட்டார். அப்படத்தின் நாயகனான,எம்.ஜி.ஆரையும் டி.பாலசுப்பிரமணியத்தையும் கலைஞரிடம் தூதுவிட்டார்ஸ்ரீராமநாயுடு. அவர்களின் வேண்டுகோளுக்குமதிப்பளித்த கலைஞர், மலைக்கள்ளன்படத்துக்கு திரைக்கதை வசனம்எழுதினார்.எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் பெரு வெற்றிபெற்றது. ஜனாதிபதி விருது பெற்ற முதலாவதுதமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
அரசியல் பிரச்சினை காரணமாக நாமக்கல்கவிஞருடன் கலைஞர் முரண்பட்டாலும்அவர் முதல்வராக இருந்தபோது நாமக்கல்கவிஞரின் குடும்பத்தின் சிரமங்களைஅறிந்து தமிழக அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார். தமிழக அரசின்சார்பில்கட்டப்பட்ட தலைமைச் செயலகபத்துமாடிக்கட்டடத்துக்கு நாமக்கல் கவிஞர்மாளிகை எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்கலைஞர்.திருச்சியில் ஓவியன் என்ற நாடகம் எம்.ஜி.
ஆரின் முன்னிலையில் கலைஞரின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவிலேபேசிய கலைஞர் ""புரட்சி நடிகர்'' என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டார். அன்றிலிருந்துபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று அனைவரும் அழைத்தார்கள். பின்னர் அதுவே ""புரட்சித் தலைவர்'' என்ற பெயர் வரக்காரணமானது.
கலைஞரால் புரட்சி நடிகர்என அழைக்கப்பட்டவர்தான் புரட்சித் தலைவராகிகருணாநிதியைஎதிர்த்துதமிழகத்தில்ஆட்சி புரிந்தார்.இதன்பின்னணியிலேயே ஜெயலலிதாவைப் புரட்சித்தலைவி என்றார்கள். விஜயகாந்தைபுரட்சிக் கலைஞர்என்றார்கள்.புரட்சிஎன்றபட்டப்பெயர்உடையஅனைவரும்அரசியலில் கலைஞருக்கு எதிரானவர்களாகவே உள்ளனர்.


மேகலா பிக்ஸர்ஸ் தயாரித்த வெற்றிப்படங்களில் ஒன்று குறவஞ்சி. குறவஞ்சி படத்துக்குகதை வசனம் எழுதியவர் கலைஞர்.மேகலா பிக்ஸர்ஸ் தயாரிப்பாளர்களில்கலைஞரும் ஒருவர்."குறவஞ்சி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நடித்தனர். அப்படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர்.எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோரின் நடிப்பில் குறவஞ்சிஐயாயிரம் அடிக்கு மேல் படமாக்கப்பட்ட நிலையில் முக்கியமான வசனம் ஒன்றைப் பேசுவதற்கு ராஜசுலோசனா மறுத்துவிட்டார்."கடவுளே உனக்கு கண் இல்லையா' என்ற வசனம் கடவுளைத்திட்டுவதாகக் கூறி அதனைப் பேசராஜசுலோசனா மறுத்துவிட்டார். வசனத்தை மாற்றிஎழுதும் படி ராஜசுலோசனாவின்கணவர் கலைஞரிடம் கூறினார். கலைஞர் அதற்கு மறுத்துவிட்டார். ராஜசுலோசனாவை நீக்கிவிட்டு சாவித்திரியை ஒப்பந்தம் செய்தனர்.இந்த நிலையில் எஸ்.எஸ்.ஆரும் விஜயகுமாரியும் திருமணம் செய்தனர். அவர்களினால் படப்பிடிப்பு தடைப்பட்டது.படம் பாதிக்கு மேல் முடிந்துவிட்டது.அவர்கள் இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குறவஞ்சி படத்தின் நிலையை நடிகர்திலகத்திடம் கூறி குறவஞ்சி படத்தில்நடிக்க வேண்டும் எனக் கேட்டார்கலைஞர். நடிகர் திலகமும் ஒப்புக்கொண்டார்.
பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில்படமாக்கப்பட்ட குறவஞ்சி வெற்றிப்படமானது.அப்படத்தின் வெற்றிக்குநடிகர் திலகம் தான் காரணம் என்பதை கலைஞர் ளிப்படையாகஒப்புக்கொண்டார்
.இளையராஜாவின்இசை தமிழ்த்திரைப்படங்களில் கோலோச்சத் தொடங்கிய காலகட்டத்தில்அவருக்கு காரைக்குடியில் பாராட்டுவிழா நடந்தது. அந்த விழாவில் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜா கலைஞரின் நெருங்கிய நண்பர்.இளையராஜாவுடன் கலைஞர் பழகவில்லை.நண்பனின் தம்பிக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் கலந்து கொள்வதற்குசென்னையிலிருந்து காரைக்குடிக்குச் சென்றார் கலைஞர்.

காரில் பயணம் செய்யும்போது இளையராஜாவின் இசையைக் கேட்டுக்கொண்டேசென்றார் கலைஞர். இளையராஜாவின்இசை கலைஞரைக் கட்டிப்போட்டது.இளையராஜாவுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அவரது இசையைப்பற்றி பலரும் புகழ்ந்து பேசினார்கள்.
அங்கு பேசியவர்கள் இளையராஜாவின்இசைக்கு மயங்கியவர்கள்.நிறைவுரையாற்றகலைஞர் மைக்கின் முன்னே சென்றார்.அந்த மேடையில் இளையராஜாவுக்கு கலைஞர் வழங்கிய பட்டம்தான் இசைஞானி.இன்று இசைஞானி என்றால்அது இளையராஜாதான்என்றுமாறிவிட்டது.
ரமணி
மித்திரன்07/01/2007
102


Monday, August 20, 2012

முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி திரிச‌ங்கு நிலையில் வழக்குகள்ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பி.எம். மல்லிகார் ஜுனைய்யா கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்று விட்டார். கர்நாடகாவில் நடைபெறும் இந்த வழக்கின் அரச தரப்பு அட்வகேட் ஜெனரல் ஆச்சரியா கடந்த வாரம் திடீரென தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டார். இதனால் ஜெயலலிதா நிமமதியடைந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் பல வழக்குகளைத் தாக்கல் செய்தது. வருமானத்துக்கு மீறிய சொத்துச் சேர்த்தது. டான்சி நிலபேர ஊழல் என்பனவே அவற்றில் மிக முக்கியமானவை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மாறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கை நடத்தும் புதிய காட்சி தோன்றியது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விபரீதமாகப் போகும் என்பதை உணர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடி கர்நாடகத்தில் இந்த வழக்கை விசாரிக்க அனுமதி பெற்றது.

நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா ,அரசதரப்பு சட்டத்தரணி ஆச்சாரியார் ஆகிய இருவரும் போட்ட கிடுக்குப் பிடியில் சிக்கிய ஜெயலலிதா வெளியேற வழியின்றித் தவித்தார். நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவின் ஓய்வும் ஆச்சார்யாவின் இராஜினாமாவும் ஜெயலலிதாவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அரசியலில் ஜெயலலிதாவின் பரம எதிரியாக கருணாநிதி இருந்தாலும் மல்லிகார்ஜுனாவும் ஆச்சார்யாவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் ஜெயலலிதாவை ஆட்டிப் படைத்தார்கள்.
வழக்கு விசாரணைக்கு நீதிமன்றப் படி ஏறாத ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நிறுத்தி ஆயிரத்துக்கும் அதிகமான குறுக்குக் கேள்விகளைக் கேட்டுப் பதிலைப் பெற்றவர் நீதிபதி மல்லிகார் ஜுனைய்ய. வழக்கு விசாரணைகளின் போது ஆஜராகாது தவணை கேட்டு நீதிமன்றத்தை நோகடித்த ஜெயலலிதாவை ஆட்டிப் படைத்தவர் மல்லிகார் ஜுனைய்யா. இவர் ஓய்வு பெறுவதால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கின் நிலை எப்படியாகும் என்று கவலையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.

ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சதோதரி சசிகலாவிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பதிலைப் பெற்றுள்ளார். இன்னும் சில கேள்விகள் பாக்கியுள்ளன. அக்கேள்விகளைக் கேட்பதற்கு அழைப்பு விடுத்தபோது உடல் நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்தார் சசிகலா. நீதிபதி மல்லிகா ஜுனைய்யாவின் ஓய்வின் பின்னர் இந்த வழக்கில் போக்கில் மாற்றம் ஏற்படும் என்பதனால் சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

மல்லிகா ஜுனைய்யாவுக்கு பதிலாகப் புதிய நீதிபதியை நியமித்தால், அவர் இந்த வழக்கின் முழு விபரங்களையும் படித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும். ஆகையினால் இந்த வழக்கின் விசாரணை தாமதப்படும் என்று ஜெயலலிதா தரப்பு நம்புகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதி மல்லிகா ஜுனைய்யாவைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கருதுகிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த வழக்கின் தார்ப்பரியத்தை உணர்ந்த கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவுக்குப் பதவி நீடிப்பை வழங்குமா என்ற கோணத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆலோசனை செய்கிறது. இதேவேளை நீதிபதி மல்லிகா ஜுனையாவுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கான கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகுவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆலோசனை செய்கிறது.
நீதிபதி மல்லிகார் ஜுனைய்யா கடந்த 4ஆம் திகதி ஓய்வு பெற்றாலும் அதற்கான உத்தரவு இம்மாத இறுதியில் தான் வழங்கப்படும். பதவி நீடிப்பை அவர் விரும்பவில்லை என்று நீதிபதிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை துரித கதியில் விசாரிக்கும்படி உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டால் நீதிபதி மல்லிகார் ஜுனைய்யா பதவியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவைப் போல ஜெயலலிதாவை ஆட்டிப்படைத்த இன்னொருவர் அரசதரப்பு சட்டத்தரணிஆச்சார்யா. இவரின் வாதமும் வழக்கை நடத்திய நேர்த்தியும் ஜெயலிதாவையும் அவரின் சகாக்களையும் கதி கலங்க வைத்தன. இவரின் திடீர் இராஜினாமாவினால் ஜெயலலிதா நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். இவரை இந்த வழக்கிலிருந்து அகற்றுவதற்கு திரை மறைவில் பல முயற்சிகள் நடந்தன. இவருக்கு உயர் பதவி கொடுக்க கர்நாடக அரசு முன் வந்தது. உயர் பதவியை விட இந்த வழக்குத்தான் முக்கியம் என்று மறுத்து விட்டார். இந்த வழக்கில் வாதாடுவதற்காக இன்னொரு பதவியைக் கைவிட்டார். இந்த வழக்குத் தான் மிக முக்கியமானது என்று அடித்துக் கூறிய அரசதரப்பு சட்டத்தரணி ஆச்சார்யாவின் இராஜினாமாவின உண்மையான காரணம் தெரியவில்லை. புதியஅரசதரப்பு சட்டத்தரணியை நியமிக்கும் வரை சேவையில் தொடருமாறு நீதிமன்றம் ஆச்சார்யாவிடம் கூறியுள்ளது.
நீதிபதி மல்லிகார் ஜுனைய்யாவின் ஓய்வு, ஆச்சாsர்யாவின் ராஜினாமா ஆகியவற்றால் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் கர்நாடகம் மட்டுமல்ல, டில்லியும் இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஜெயலலிதாவின் மீதான பிடி இறுகி விட்டது. இந்த வழக்கில் இருந்து அவர் தப்ப முடியாது. நீதிபதி மல்லிகார் ஜுனைய்யா அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா ஆகிய இருவரின் கிடுக்குப் பிடியில் சிக்கியுள்ளார் ஜெயலலிதா என்று பரபரப்பான செய்திகள் வெளியாகின. இந்த இருவரும் இல்லாத ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாக் கட்சி ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானது. இந்திய மத்திய அரசின் மிக விருப்பத்துக்குரியவர் கருணாநிதி. ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான கௌரவ போர் கர்நாடக மாநில அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான விவகாரமாக மாறியுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு119/08/12

Saturday, August 18, 2012

திரைக்குவராதசங்கதி 42
தூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்படம் ஏ.வி.எம்மின் வெற்றிப் பட வரிசையில்இடம்பிடித்தது.

போதைக்கு அடிமையாகி விடக் கூடாதுஎன்ற நல்ல நோக்கத்தில்எடுக்கப்பட்டபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறொருபடத்துக்காக படமாக்கப்பட்டது என்பதுஅதிகமான ரசிகர்களுக்குத் தெரியாது.திரைப்படத் தயாரிப்பாளரான வித்துவான்வே. லட்சுமணனும், ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் மகன் சரவணனும் ஒருநாள் கதைத்துக் கொண்டிருக்கும் போது,""நானும் மணியனும் சேர்ந்து பத்து இலட்சம் ரூபா செலவில் ஹிந்திப் டமொன்றுக்காகஅருமையான கிளைமாக்ஸ் காட்சியைஎடுத்தோம். படம் சரியாகப் போகவில்லை.ஆகையால் அது மக்களைச் சென்றடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதை ஒருமுறை பாருங்கள்'' என வித்துவான் வே.லட்சுமணன், எம். சரவணனிடம் கூறினார்.
வித்துவான் வே. லட்சுமணன் கூறிய கிளைமாக்ஸ் காட்சியை எம். சரவணன் பார்த்தபோது அது அவருக்குப் பிடித்து விட்டது.அந்த கிளைமாக்ஸைத் தரும்படி சரவணன்கேட்டார். அதைக் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட வித்துவான் வே. லட்சுமணன் 50ஆயிரம் ரூபா தரும்படி கேட்டார். பேரம்பேசியதில் 30 ஆயிரம் ரூபாவுக்கு அந்தகிளைமாக்ஸ் காட்சியை வித்துவான் வே.இலட்சுமணனிடம் இருந்து எம். சரவணன்வாங்கினார்.
மிகச் சிறந்ததொரு கிளைமாக்ஸ் காட்சிகையில் உள்ளது. அதனை தூங்காதே தம்பிதூங்காதேயில் எப்படி இணைப்பது என்றசிக்கல் எழுந்தது. அதனைச் செய்து கொடுக்கக் கூடிய ஒருவர் திரை உலகில் இருக்கிறார். அவர்தான் விசு. விசுவைக் கூப்பிட்டுகிளைமாக்ஸ் காட்சியைப் போட்டுக் காட்டினார்கள்.தூங்காதே தம்பி தூங்காதே கதையில் செந்தாமரையின் பாத்திரத்தை புகுத்தி கிளைமாக்ஸை மிகச் சிறப்பாகச் செய்து கொடுத்தார் விசு. அப்படத்தில் இடம்பெற்ற ஹெலிஹொப்டர் காட்சி விசுவின் ஐடியாவில்உதித்தது.
"நானாக நானில்லை தாயே' எனும் பாடலுக்காகவே ஜமுனாவை கமலின் தாயாகநடிக்க அழைத்தார்கள். எந்த விதமான கிரபிக்ஸ் வேலையும் இல்லாமல் இன்னொருபடத்துக்காக உருவாக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி தூங்காதே தம்பி தூங்காதேக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.ஏ.வி.எம். தயாரித்த இன்னொரு வெற்றிப்படம் "நல்லவனுக்கு நல்லவன்', "தர்மாத்முடு' என்ற தெலுங்கு படம்தான் நல்லவனுக்குநல்லவன் என தமிழில் வெளியானது.

தெலுங்குப் படத்தைப் பார்த்த ஏ.சி.திருலோகசந்தர் தமிழில் அப்படத்தை எடுக்கலாம் என எம். சரவணனுக்கு பரிந்துரைசெய்தனர். தயாரிப்பாளரும் நடிகருமானபாலாஜியும் அந்தப் படத்தைப் பார்த்தார்.நடிகர் திலகத்தை வைத்து படங்கள் தயாரித்த பாலாஜி அப்படம் நடிகர் திலகத்துக்குசரிப்பட்டு வராது என நினைத்து அதை தமிழில் படமாக்கும்முயற்சியைக்கைவிட்டார்.சிவாஜி நடித்ததோல் விப் படமான "ஹிட்லர்உமாநாத்' தான் தர்மாத் முடு எனதெலுங்கில்வெளியாகியுள்ளது.
அதையேமீண்டும் தமிழாக்கம் செய்வது நல்லதல்ல என்று பஞ்சுஅருணாசலம் கூறினார். ஆனால் எம். சரவணனும், இயக்குனர் எஸ்.பி. முத்துராமனும்அதைத் தமிழில் தயாரிக்க வேண்டும் என்றுவிரும்பினார்கள். விசுவைஅழைத்து தெலுங்குப் படத்தைப்போட்டுக் காட்டினார்கள். சின்னச்சின்ன மாற்றங்கள் செய்தால்தமிழில் நல்லா வரும் என்றார்விசு. விசுவுக்கு ஒரு தொகைபேசி படவேலை ஆரம்பமானது.
எம். சரவணன் கொடுக்க ஒப்புக்கொண்ட தொகை போதுமானதல்ல என விசு கூறினார்.முதலில் படத்தை முடிப்போம்மிகுதியைப் பிறகு பார்க்கலாம்என்று எம். சரவணன் கூறினார்.நல்லவனுக்கு நல்லவன் படவேலை மளளவென நடந்தது.ரஜினி, ராதிகா நடித்தார்கள்.படம் முடிந்ததும் போட்டுப் பார்த்த எம். சரவணனுக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.
இரு ஒரு மசாலாப் படம். முடிவு மென்மையாக கவிதைபோல் உள்ளது. ஆக்ஷன்கிளைமாக்ஸ் தான் படத்தை வெற்றி பெறச்செய்யும் என்றார் எம். சரவணன். ரஜினிக்கும், எஸ்.பி. முத்துராமனுக்கும் மென்மையான கிளைமாக்ஸே பிடித்திருந்தது.

படம் முழுவதும் முடிந்து சென்சார் ஆகிவிட்டது. இந்த நிலையில் எம். சரவணனின்விருப்பப்படி ஆக்க்ஷன் கிளைமாக்ஸ் காட்சிபடமாக்கப்பட்டு அதற்கும் சென்ஸார்வாங்கி விட்டார்கள். மென்மையான கிளைமாக்ஸை விட ஆக்ஷனின் கிளைமாக்ஸ்தான்அனைவருக்கும் பிடித்திருந்தது.
ஆகையால் ஆக்க்ஷன் கிளைமாக்ஸின் படம்வெளியாகி பெரு வெற்றி பெற்றது.விசுவை அழைத்து பேசிய தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுத்தார் எம். சரவணன். விசு அதிர்ச்சியில்உறைந்து விட்டார்.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வேலைநிறுத்தக் காட்சி ஒன்று உண்டு. ரி.வி. எஸ்.நிறுவனத்தில் நடந்த உண்மையான வேலைநிறுத்தத்தை வைத்தே அக்காட்சி படமாக்கப்பட்டது.""என்னைத் தானே...'' என்ற காலத்தால்அழியாத பாடல் நல்லவனுக்கு நல்லவன்படத்தில் இடம்பெற்றது. அப்பாடல் வி.சி.குகநாதனின் படத்துக்காக வைரமுத்துவால்எழுதப்பட்டு இளையராஜா இசையமைக்ககே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் வி.சி. குகநாதனின் படத்தில் அப்பாடல் இடம்பெறாததனால் எம். சரவணன் அப்பாடலை வாங்கிநல்லவனுக்கு நல்லவனில் இணைத்தார்.
ரமணி
மித்திரன்
101.a

Wednesday, August 15, 2012

விஜயகாந்துக்கு எதிராக பிரதான கட்சிகள் ச‌திதமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விஜயகாந்தை அகற்றுவதற்கு பிரதான கட்சிகள் முனைப்புக்காட்டி வருகின்றன. கடவுளுடனும் மக்களுடனும் மட்டும் தான் கூட்டணி என அடித்துக் கூறி வந்த விஜயகாந்த் சட்ட சபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டுச் சேர்ந்தார். கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற பொதுக் கொள்கையுடனேயே விஜயகாந்தும் ஜெயலலிதாவும் கருணாநிதியை முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்றிய இக்கூட்டணி நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒருவருடன் ஒருவர் இணங்கி அரசியல் பாதையில் செல்வதற்கு தயாராக இல்லாததனால் கூட்டணி விரைவில் தகர்ந்தது.

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டதனால் இருவருமே பலனடைந்தனர். ஜெயலலிதா முதல்வரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்துக்கு தாரை வார்க்கும் என்று எவருக்கும் எதிர்பார்க்கவில்லை. பிரமாண்டமாக செல்வாக்குப் பெற்ற கட்சியை சரியாக வழி நடத்துவதற்கு விஜயகாந்தால் முடியவில்லை. விஜயகாந்த்துடன் கட்சி பிரச்சினைகளை விவாதிப்பதற்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் இல்லை. விஜயகாந்த் அவர் மனைவி பிரேமலதா, பிரேமலதாவின் சகோதரன் ”தீஷ் ஆகியோர் தான் கட்சியை வழி நடத்துகிறார்கள். கட்சியின் கொள்கை என்ன? அடுத்து கட்சி என்ன செய்யப் போகிறது என்பது அக்கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களுக்கே தெரியாத நிலை உள்ளது.
விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த சட்ட சபை
உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களைத் தம் பக்கம் இழுக்க பிரதான கட்சிகள் சில வியூகம் வகுத்துள்ளன கட்சியை வளர்ப்பதற்கு மிகவும் முயற்சி செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் மௌனமாக இருக்கிறார். அவரின் செயற்பாடுகளை தலைமை முடக்கியுள்ளது. தமிழக சட்ட சபையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு எதிராக விஜயகாந்த் முழங்கிய ஆவேச பேச்சுதான் கூட்டணி உøடவதற்கு முக்கிய காரணமானது.
விஜயகாந்தின் செயற்பாடுகளின் அதிருப்தியுற்ற மகளிர் அணித் தலைவி ரெஜினா  பாட்ஷா தலைமைப் பதவியைத் துறந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். மகளிர் அணியைக் கட்டி வளர்ப்பதற்காக இவர் ஆற்றிய பங்களிப்பை விஜயகாந்த் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார். திண்டுக்கல் முத்துவேல்ராஜ், öŒன்னை மாநகரச‌பைத் @தர்தல் மேயர் வேட்பாளர் வேல் முருகன் ஆகியோர் வெளியேறியதால் விஜயகாந்த் அதிர்ச்சியடைந்தார். கட்சி மீது அதிருப்திகொண்டிருப்பவர்களை இனம்கண்டு அவர்களை சமாதானப்படுத்துவதற்கு விஜயகாந்த் முயற்சிக்கவில்லை. ஆகையினால் அதிருப்தியøடந்த சட்ட சபை உறுப்பினர்களை வளைப்பதற்கு பிரதான கட்சிகள் முயற்சி செய்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி விஜயகாந்துடன் இணைந்த ஏ.ஜி. சம்பத் தனக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்படாததனால் மீண்டும் தாய்க்கழகத்துக்கு öசன்று விட்டார். தேசிய முற்போக்கு திராவிடக் கழக வக்கீல் அணித் தலைவரான மணிமாறன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. விஜயகாந்தின் கட்சிச் சின்னத்தை பெறுவதற்கு டில்லி வரை சென்று போராடிய மணிமாறன் விஜயகாந்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இவரை தம்பக்கம் இழுக்க பிரதான கட்சி முயற்சி செய்கிறது. இவரைத் தவிர சட்டசபை உறுப்பினர்கள் சிலரும் கட்சியிலிருந்து வெளியேறப் போவதாகச் செய்திகள கசிந்துள்ளன.
இந்தியப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விஜயகாந்தின் கட்சி உடைந்தால் முரசு சின்னம் முடக்கப்படும். கட்சிக்குள் கலகம் ஏற்படும். பிரதான கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேர முடியாத நிலை ஏற்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் சேரப் போவதில்லை. திரõவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்தால் ஜெயலலிதாவுக்குப் பாரிய நெருக்கடியைக் கொடுக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. விஜயகாந்தின் கட்சி உடைந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் அவரைத் தம்முடன் இணைக்க விரும்பமாட்டா. தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கியே விஜயகாந்த் சென்று கொண்டிருக்கிறார்.

வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கி பறிபோனதால் பிரதான கட்சிகள் அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
அதேபோன்றதொரு நெருக்கடியான நிலையையே விஜயகாந்தும் எதிர்நோக்கி உள்ளார். இந்தியப் பொதுத் தேர்தலுக்கும் தமிழக சட்ட சபைத் தேர்தலும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்ட சபைத் தேர்தலின் வெற்றி தோல்வியை சிறிய கட்சிகளினால் தீர்மானிக்க முடியும். பொதுத் தேர்தலின் வெற்றி தோல்விக்கு சிறிய கட்சிகளால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.
வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவரும் இணைந்து இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி எட்டாத் தூரத்திலேயே உள்ளது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/08/12

Saturday, August 11, 2012

சாதனை வீரன் உசைன் போல்ட்


1986 : மேக்காவில் உள்ள ட்ரெலோனி எனுமிடத்தில் ஓகஸ்ட் 21 ஆம் திகதியன்று பிறந்தார்.
2002 : கிங்ஸ்டனில் நடைபெற்ற உலக கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 4x100 மீற்றர் மற்றும் 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் தனது 15 ஆவது வயதில் தனதாக்கிக் கொண்டார்.
2003: ஷெர் புரூக்கில் நடைபெற்ற உலக இளையோர் சம்பியன் ஷிப் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
2004: இதற்கு முன்னர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலான 20 விநாடிகள் சாதனையை 19.93 விநாடிகளில் ஓடிமுடித்த முதல் கனிஷ்ட வீரரென்ற பெருமையைப் பெற்றார்.
2005: மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் சம்பியன்ஷிப் போட்டிகளின் போது 200 மீற்றர் தூரத்தை 20.03 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
2007: ஜப்பான் ஒசாக்காவில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டிகளின் போது 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் 4து100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஒரு வீரர் என்ற வகையிலும் வெள் ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
உசைன் போல்ட் 2008 ஆம் ஆண்டில் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இந்த உலகையே அதிசயிக்க வைத்தார்.
2008 மே 3 : ஜ@மக்காவில் நடைபெற்ற போட்டியில் 100 மீற்றர் குறுந் தூரத்தை 9.76 விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாவது அதி வேக வீரரென்ற சாதனையைப் பதிவு செய்தார்.
மே 31: ரீபொக் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியின் தனது ஐந்தாவது 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9.72 விநாடிகளில் ஓடி முடித்து உலக சாதனையை முறியடித்தார்.
ஜூலை 13: எதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் @பாட்டியில் 200 மீற்றர் தூரத்தை 19.67 விநாடிகளில் ஓடி முடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்தார்.
ஆகஸ்ட் 16: பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது 100 மீற்றர் தூரத்தை 9.69 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஓகஸ்ட் 20: ஒலிம்பிக் குறுந் தூர ஓட்டப் போட்டிகளில் 200 மீற்றர் தூரத்தை 19.30 விநாடிகளில் ஓடி முடித்து புதியதோர் உலக சாதனை நிலை நாட்டினார்.
ஓகஸ்ட் 22: ஒலிம்பிக்கின் 4து100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 37.10 விநாடிகள் ஓடி முடித்து உலக சாதனை படைத்த ஜ@மக்கா அணியில் மூன்றாவது ஓட்ட வீரராக கலந்து கொண்டார்.
நவம்பர் 23: 2008 ஆம் ஆண்டிற்கான ஐ அ அ ஊ உலக ஆண் மெய்வல்லுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2009 ஏப்ரல் 29: கிங்ஸ்டனுக்கு வெளியே நிகழ்ந்த தனது B M W M  3 கார் விபத்தில் சிக்கியபோது படுகாயத்திலிருந்து தப்பியதுடன் காலில் சிறிய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
மே 17: மன்செஸ்டர் மா நகர் 150 மீற்றர் குறுந் தூரப் போட்டியில் 14.35 விநாடிகளில் ஓடி முடித்து வெற்றி வாகை சூடினார். முதலாவது 100 மீற்றர் போட்டியை 9.91 விநாடிகளிலும் இரண்டாவது 100 மீற்றர் போட்டியை 8.70 விநாடிகளிலும் ஓடி முடித்ததார். 
ஜூன் 10: 2009 ஆம் ஆண்டிற்கான லோறியஸ் உலக விளையாட்டு வீரர் எனும் பட்டத்தை வென்றார். 
ஓகஸ்ட் 16: பேர்லினில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் குறுந் தூரத்தை 9.58 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப்பதக்கம் பெற்று புதிய உலக சாதனை.
ஓகஸ்ட் 20: பேர்லினில் நடைபெற்ற உலக சம்பியன் ஷிப் போட்டியில் 200 மீற்றர் தூரத்தை 19.19 விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கியதுடன் புதிய உலக சாதனை நிலை நாட்டினார். 
2010 ஓகஸ்ட் 6: ஸ்டொங் கோமில் நடைபெற்ற 100 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியில் டைசன் கேயிடம் இரண்டாவது தோல்வியைச் சந்தித்தார். 
2011 ஓகஸ்ட் 28: தீகுவில் இடம் பெற்ற உலக சம்பியன் ஷிப் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முறையற்ற ஆரம்பம் காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்@பாது வீரரான யொஹான் பிளேக் தங்கப் பதக்கம் வென்றார். 
செப்டெம்பர் : 200 மீற்றர் அதி வேக ஓட்ட வீரர் என்ற பெருமையைத் தக்க வைத்ததுடன் அதன் பின்னர் 4து100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஜமை க்கா அணி 37.04 விநாடிகளில் ஓடி முடி த்து புதிய உலக சாதனை படைத்திட உதவி செய்தார். 
2012 ஜூன்: லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமேக்காவில் நடாத்தப்பட்ட 100 மற்றும் 200 மீற்றர் தகுதி காண் போட்டிகளில் யொஹான் பிளேக்கிடம் தோல்வியடைந்த போதிலும், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் இடம் பிடித்தார். 
ஜூலை 26: முதுகு வலியால் தான் அவஸ்தைப் பட்டதனை ஏற்றுக் கொள்ளல். ஆயினும், தனது பட்டங்களைத் தக்க வைப்பதற்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்திக் கூறினார். 
ஓகஸ்ட் 5: லண்டன் 2012 ஒலிம்பிக் 100 மீற்றர் தூரத்தை வரலாற்றில் இரண்டாவது அதி விரைவான நேரமான 9.63 விநாடிகளில் ஓடி முடித்தார். 


ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் 
போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றோர் விபரம்
2012 லண்டன்: உசைன் போல்ட் (ஜமேமக்கா) 9.63
2008 பீஜிங்: உசைன் போல்ட் (ஜமேக்கா) 9.69
2004 ஏதென்ஸ்: ஜஸ்டின் கட்லின் (அமெரிக்கா) 9.85
2000 சிட்னி: மொரிஸ் கிறீன் (அமெரிக்கா) 9.87
1996 அட்லாண்டா: டொனோவன் பெய்லி (கனடா) 9.84
1992 பார்சி லோனா: லின் போர்ட் கிறிஸ்டி (பிரித்தானியா) 9.96
1988 சியோல்: கார்ல் லூயிஸ் (அமெரிக்கா) கனேடிய வீரர் பென் ஜோன்சன் 9.79 விநாடிகளில் ஓடி வென்ற போதிலும் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 
1984 லொஸ் ஏஞ்செல்ஸ்: கார்ல் லூயிஸ் (அமெரிக்கா) 9.99
1980 மொஸ்கோ: அலன் வெல்ஸ் (பிரித்தானியா) 10.25
1976 மொன்றியல்: ஹாஸ்லி குசோ மோர்ட் (ரினிடாட்) 10.06
1972 மியூனிக்: வலேரி போர் ஸோவ் (சோவிட் யூனியன்) 10.14
1968 மெக்ஸிக்கோ: ஜிம் ஹைன்ஸ் (அமெரிக்கா) 9.95
1964 டோக்கியோ: பொப் ஹேயிஸ் (அமெரிக்கா) 10.0
1960 ரோம்: ஆர்மின் ஹரி (ஜேர்மனி) 10.2
1956 மெல்போர்ன்: பொபி மோரோ (அமெரிக்கா) 10.62
1952 ஹெல்சிங்கி: லின்டி ரெமிஜினோ (அமெரிக்கா) 10.79
1948 லண்டன்: ஹரிசன்டி லார்ட் (அமெரிக்கா) 10.3
1936 பேர்லின் ஜெசி ஓவென்ஸ் (அமெரிக்கா) 10.3
மெட்ரோநியூஸ்10/08/12Friday, August 10, 2012

உசைன் போல்ட்டை நோக்கிபியர் போத்தல் எறிந்தவர் கைது


லண்டன் 2012 ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்ற மைதானத்தில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த அதிவேக மனிதன் உசேன் போல்ட்டுக்குப் பின்னால் வெற்று பியர் போத்தலொன்று வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விற்பனை இயந்திர தொழில்நுட்பவியாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
உசேன் போல்ட் 9.63 வினாடிகளில் பந்தய தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொள்ள சற்று நேரத்திற்கு முன்னரே இந்த பரபரப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள லீட்ஸ் எனுமிடத்தைச் சேர்ந்த அஷ்லி கில் (Ashley Gill) ) ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்பிப்பவர் என அவரது அயலவர்கள் பொலிஸாரிடம் தெரி வித்த அதேவேளை அவர் இதற்கு முன்னர் ஒரு ஆசிரி யராகப் பயிற்றப்பட்டிருந்ததாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.
எடுக்கப்பட்டிருந்த காணொளியில் நீல நிற உடையணிந்த பார்வையாளரொருவர் தட களத்தை நோக்கி வெற்றுப் போத்தலொன்றை வீசியெறிவதாகவும் அந்தப் போத்தல் தடகள அருகில் நின்றிருந்த ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான ஒல்லாந்து வீராங்கனை எடித் போஸ் (Edith Bosch) அருகில் போய் விழுவதையும் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து போத்தலை வீசிய அந்த மனிதனுக்கு தான் அடித்ததாகவும் அவர் ருவிட்டர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்னுமொரு காணொளியில் தனது இறுதிப் போட்டி ஆரம்பமாகும் இடத்தை நோக்கி உசேன் போல்ட் போய்க் கொண்டிருக்கும் போது குறித்த நீல நிற உடை தரித்த அந்த மனிதன் உசேன் போல்ட்டை பார்த்து நீ வெல்லப் போவதில்லை என உரத்துச் சத்தமிடுவதும் பதிவாகியுள்ளது. கிழக்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஆஷ்லி கில் குடி போதையிலேயே அந்த வெற்று பியர் போத்தலை எறிந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மெட்ரோநியூஸ்08/08/12

Thursday, August 9, 2012

ஓய்வு பெறுகிறார் தங்கமகன்


ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 22 பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்ட வாழ் நாள் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்பஸ்  நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 4x100 மீற்றர் அஞ்சல் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அமெரிக்க வீரரான மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை  பதினெ ட்டு (18) தங்கப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் இருபத்தியிரண்டு (22) பதக்கங்கங்களை பெற்றுள்ள இவர். நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடைபெற்றிருந்த ஒலிம்பிக் போட்டியில் 200 மீற்றர் பட்டர் பிளை நீச்சல் போட்டியில் 5ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த 27 வயதான பெல்ப்ஸ் எதென்ஸ் நகரில் இடம் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண் கலப் பதக்கங்களையும் சீனத்  தலை நகர் பீஜிங்கில் கடந்த  2008 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த  எட்டு தங்கப் பதக்கங்களையும் தன தாக்கிக் கொண்டார்.


சிட்னியில்  விளையாடியதன்  பின்னர் மிகவும் மோசமான பெறுபேற்றை அவர்  லண்டன் 2012 ஒலிம்பிக்கில் 400 மீற்றர்  தனி நபர் கலப்பு நீச்சல் போட்டியில்  சரியான முறையில் ஆரம்பிக்க தவறியதால் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  அத்துடன், 200 மீற்றர் பட்டர் ஃபிளை நீச்சல் போட்டியிலும் இலக்குச் சுவருக்குள் சரியான முறையில் ஊர்ந்து செல்லத் தவறியதால் அது தென்னாபிரிக்க வீரர் தங்கப் பதக்கம் வென்றிட வழிசமைத்தது. ஆயினும், போல்டி மோர்  நீச்சல்வீரரான பெல்ப்ஸ், தனது நாட்டவரான ரயன் லொக் டெயை  ஓரங் கட்டி 100 மீற்றர் பட்டர் பிளை மற்றும் 200 மீற்றர் கலப்பு நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றதுடன், 4x200 மீற்றர், 4x100 மீற்றர் நீச்சல் போட்டிகளிலும் பதக்கங்களைவென்றார். இத்தகைய சாதனைகளுக்காக  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவருடன் தொலைபேசி மூலமும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.  அத்துடன்  தலைவர் ஜூலியோ  மக்லய னால் வீரர் பெல்ப் ஸுக்கு  நேற்று  முன்தினம் வழங்கப்பட்ட "Fina"  வாழ்நாள் சாதனை விருதில், "ஒலிம்பிக்கின் வாழ் நாள் சாதனை வீரர் மைக்கல் பெல் ப்ஸ் அவர்களுக்கு  ""Fina" ஓகஸ்ட் 4, 2012, லண்டன் பிரித்தானியா' என்ற வாசகங்கள்  பொறிக்கப்பட்டிருந்தன.  தனது இறுதிப் போட்டியின் பின்னர், ஊடகவியலாளர் மாநாடொன்றில்  கருத்து வெளியிட்ட பெல்ப்ஸ் "ஒலிம்பிக்கின் வாழ்நாள் சாதனையாளர் நானே' என்ற வாசகங்களைக் கொண்டுள்ள  தெய்வீகத் தன்மை வாய்ந்த அதிர்ஷ்ட வசமான இந்த வெற்றிக் கிண்ணத்தை பார்க்கையில் நான் பரவச மடைகின்றேன். தனது  நீச்சல் போட்டித் துறையில் சாதனை படைத்துள்ள மைக்கல் ஜோர்டானை நான் பெரிதும் மதிக்கின்றேன்.  அவரது பேருதவியினாலேயே நான் இன்று வாழ் நாள் அதி சிறந்த நீச்சல் வீரராக வந்துள்ளேன். நான் அவருக்கு நன்றி கூறினேன். அப்போது அவர், அப்படிச் சொல்வது நல்லதல்ல. நீங்கள் தானே நீச்சல் தடாகத்தில் இருந்தீர்கள்' என்றார். நான் திருப்பி அவரிடம் எது நல்ல தல்ல எனக் கேட்டேன். எனது அந்த நீச்சல் கண்ணாடிகளூடே ஆனந்தக் கண்ணீரை நான் வடிக்கிறேன். ஆனால் உங்கள் ஆனந்தக் கண்ணீரோ உங்கள் முகத்தில் வழிந் தோடுகிறதே. என்றேன். அவர்  இல்லாமல் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். அவரைப் போன்று ஒருவர் எனக்கு கிடைத்ததற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகின்றேன் என கண்கள் பனித்த நிலையில் தெரிவித்தார்.

நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவது பற்றி அவர் குறிப்பிடுகையில்...  முப்பது வயதுக்குப் பின்னர் நான் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை. அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின்போது. நான் முப்பது வயதைக்கடந்து விடுவேன். நான் எதை சாதிக்க வேண்டுமென விரும்பினேனோ அதை சாதித்துக் காட்டி விட்டேன்.
எனதுபயிற்சியாளர் பொப் போவ் மானுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் என்னால் செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்வடைகின்றேன் என்றார்...

மெட்ரோநியூஸ்07/08/12


தங்கக் கணவுகளுடன் இங்கிலாந்து ஒலிம்பிக்போட்டியாளர்கள்


நீச்சல் வீராங்கனை
ஜென்னா (Jenna) (23)
தனது இரண்டாவது வயதிலேயே நீந்தக் கற்றுக்கொண்ட இந்த வீராங்கனை தனது ஏழாவது வயதில் அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றுத்தேர்ந்தார். 5 அடி  8 அங்குல உயரமுடைய ஜென்னõவின் நீண்ட உடல் அவயவங்கள் தண்ணீருக்குள் ஓசையின்றி நீந்த உதவுவதுடன் அவரது கைகள் மூன்றரை நிமிடத்திலான 750  நகர்வுகளுக்கு நம்ப முடியாதளவும் பெரிதும் உதவுகின்றன. ஒல்லியான தோற்றமும் காருண்யப் பார்வையும் கொண்ட அவர் தனது  உடல் அமைப்பை  உரியவாறு  பராமரித்து வருவதுடன் நீச்சல் தடாகத்தில் பத்து மணித்தியாலங்களை கழித்து  வருவதுடன் வாரத்தில் ஆறு நாட்கள் தேகப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். ஜென்னாவுக்கு அப்பம் தோசை என்றால் அந்தளவுக்கு பிரியமாம். காலை உணவாக அவர் அப்பத்துடன் சீமைக் கோழி (வான்கோழி) யும் இரவு உணவாக  பெரிய பஸ்டா (Pasta) வும் எடுத்து வருகின்றார்.
ரசெல் கோதோர்ன்
(Rachel cawthorn) (23)
(படகோட்டல் வீராங்கனை)
கில் போர்ட்டில் பிறந்த ரசெல் தனது 15 ஆவது வயதில் முதன் முதலில் எஸ்கிமோக்கள் பாவிக்கும் ஒரு வகைப்படகைச் செலுத்தக் கற்றுக் கொண்டார். ஆயினும் தவறி வீழ்ந்த அனுபவத்தையும் பெற்றார். இருந்த போதிலும் அது அவரைக் கைவிடவேயில்லை. அந்த நாள் தொட்டு படகு செலுத்தும் போட்டிகளில் பதக்கங்களைச் சுவீகரிக்கும் முதலாவது பிரித்தானிய வீராங்கனையாக விளங்கி வரும் ரசெல் ஐரோப்பிய மற்றும் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் முறையே  தங்கப் பத்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
அவரது  உடற்கட்டு இறுக்கமானதாகவும் நெகிழ்வõனதாகவும் அமைந்துள்ள அதேவேளை, அவரது 5 அடி ஒன்பது அங்குல உயரமானது அவரை நீண்ட நேரம் தண்ணீரில் போராட வைக்கப் பேருதவி புரிகிறதாம். காலை உணவாக அவர் யோகர்ட் மியூஸ்லி மற்றும் பழங்களையும் கொழுப்பை நீக்குவதற்கென தேன் பூசி  சாப்பிட்டு வருகின்றார்.

டோனியா கௌச்
(சுழியோடி) (Tonia Couch)
பிளவுமவுத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  23 வயதான டோனியா கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சுழியோடியாக விளங்கி வருகின்றõர். தனது முழங்கை விலகிப் போனதன் பின்னர் அவர் தேகப்பயிற்சி செய்வதை நிறுத்தியிருந்தார். பிரித்தõனிய அதி கூடிய வெற்றி வாய்ப்புகளைப் பெற்ற பிரித்தானிய மகளிர் இரட்டையர் ஆட்டக்காரர்களாக டோனியாவும் சாரா பரோவுமே விளங்குகின்றனர்.
கடந்த 74 வருடங்களின் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் டோனியா தங்கப் பதக்கம் வென்றதுடன் நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சியை அவர் எடுத்து வருகின்றார். தான் உண்பவற்றை அவதானித்து வரும் அவருக்கு சீனத்தயாரிப்புகள் மற்றும் மக்டொனால்ட்ஸ் நிறுவனத் தயாரிப்புகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

ஆன் கியோதாவொங்
(Anne keothavong)
(டென்னிஸ் வீராங்கனை)
தனது ஏழாவது வயதில் டென்னிஸ் விளையாட  ஆரம்பித்த  பின்னரும் முழங்காலில் இரு தடவைகள் அச்சுறுத்தும் சத்திர சிகிச்சைகள் செய்வித்த பின்னரும் கூட லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆன் தற்போது பிரித்தானியாவின் இரண்டாம் தர வீராங்கனையாக வலம் வருகின்றார். 5 அடி ஒன்பது அங்குல உயரங் கொண்ட 28 வயதான அவர் கால்களுக்குச் சக்தியூட்டும் பயிற்சியை எடுத்து வருகின்றார்.
மோ ஃபாரா  (Mo Farah)
நெடுந்தூர ஓட்ட வீரர்
சோமாலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயதான வீரர் மோ தனது எட்டு வயதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் குடியேறினார். லண்டனில் உள்ள பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் ஓடத் தொடங்கிய அவர் இளையோருக்கான  ஐந்து பட்டங்களை வென்றார். குறுந்தூர அதிவேக ஓட்டத்தில் பிரபல்யம் பெற்றுள்ள  அவர் ஒரு மைல் தூரத்தை 5.4  என்ற சராசரி  நிமிடக் கணக்கில்  ஓடி முடித்ததுடன் வாரமொன்றில் 120 மைல் தூரத்தை ஓடி முடிக்கின்றார். 5 அடி ஒன்பது அங்குல உயரமுடைய வீரர் மோவுக்கு கண்டிப்பான சாப்பாடென்று எதுவுமில்லை. ஆயினும் ஓட்டப் பந்தயமொன்றுக்கு முன்னர் அவர் மாச்சத்துள்ள உணவுகளை எப்படியும் எடுத்து
விடுவாராம்
.ரொம் ஜேம்ஸ் (Tom James)
படகோட்டல் வீரர்
"கார்டிவ்' எனும் இடத்தைச் சேர்ந்த 28 வயதான ரொம் கடந்த 2008 இல் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். கேம்பிரிட்ஜ் உடனான படகோட்டப் போட்டியிலும் வெற்றியடைந்துள்ளார். ஆறடி இரண்டு அங்குலம் உயரமுள்ள அவர் பின்பக்க தசைகளை முறுக்கேற்றி படகு வலிக்கும் யுக்தியைக் கொண்டவர். கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய சிகிச்சையும் கவனிப்பும் அவரைத் தொடர்ந்தும் போட்டிகளில் விளையாட அனுமதித்துள்ளன.
ரொம்மைப் போன்ற படகோட்ட வீரர்கள் பொதுவாக ஓட் (Oat)) எனும் தானியத்தை போட்டி தொடங்குவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு  முன்னர் எடுப்பது  வழக்கம்.
பிரையொனி  ஷோ
(Bryony Shaw)
லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரையொனி தனது 29 ஆவது வயதில் கடந்த 2008 இல் நடைபெற்ற  ஒலிம்பிக் அலையாடல் போட்டியில் Windsurfingவெண்கலப்பதக்கம் வென்ற ஒரேயொரு பிரித்தானிய வீராங்கனையாவார். தனது ஒன்பதாவது வயதிலேயே அலைச்சறுக்கல் கற்றுக்கொள்ள ஆரம்பித்த அவர் கடந்த 2004 இல் கட்டிடக் கலை பற்றிய தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை அலைச்சறுக்கலில் முழு நேரமாக ஈடுபடும் பொருட்டு  ஒத்திப் போட்டார். 5 அடி 4 அங்குல உயரமுடைய அவர்  அலையாடலில் ஈடுபட சிறிய தோற்றத்தைக் கொண்டவராயினும் இல்லையென்ற அளவுக்கு சமநிலை வாய்க்கப் பெற்றவர். காலையுணவாக அவர் கஞ்சியை அல்லது தானிக் கூழையே பாவிப்பதுடன்  மதிய போசனத்திற்கென பழ வகைகளையும்  இராச் சாப்பாட்டிற்கென உயர் புரதச் சத்துள்ள உணவுகளையும் எடுத்து வருகின்றார். போட்டிகள் முடிவுற்றதும் கோழி டிக்கா கூடிடுடுச் மசாலாவையே பெரிதும் விரும்பிச் சுவைக்கின்றார்

மெட்ரோநியூஸ்31/08/12

Monday, August 6, 2012

மது இல்லாத தமிழகம் ஜெயலலிதாவின் புது வியூகம்இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராகி விட்டார். தமிழகப் பெண்களின் மனதில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளõர் ஜெயலலிதா. தமிழ் நாட்டில் உள்ள மதுபானக் கடைகளை இழுத்து மூடுவதற்கு முடிவு செய்துள்ளõர் ஜெயலலிதா.

தமிழ் நாட்டுக்கு அதிக வருமானத்தை அள்ளிக் கொடுப்பவை மதுபானக் கடைகளே. மது அருந்துவதனால் குடும்பங்களுக்குள் பெரும் பிரச்சினைகள் உருவாகின்றன. இள வயதுடையவர்கள் மதுவுக்கு அடிமையாவதனால் அவர்களது எதிர்காலம் பாழாகிறது. மது அருந்துபவர்களினால் கலை, கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்ற காரணங்களினால் மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது. அந்தக் கோரிக்கையை தனக்குச் சாதகமாக பயன்படுத்தும் காரியத்தில் முனைப்புக் காட்டுகிறார் ஜெயலலிதா.

தமிழகத்தில் மது விலக்கு அமுல்படுத்தினால் பல குடும்பங்கள் மகிழ்ச்சியடையும். பெண்களின் ஆதரவு அபரிமிதமாகக் கிடைக்கும். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனால், தகப்பனால் ஏற்படும் களேபரம் இல்லாது ஒழிந்து விடும் என நம்பும் பெண்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள். தமிழகத்துக்கு அதிக வருவாயை தரும் மதுபானக் கடைகளை மூடினால் இழக்கப் போகும் வருமானத்தை எப்படிப் பெறுவது என்று நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஜெயலலிதா. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ளது. அங்கு மதுபானக் கடைகள் எவையும் இல்லை. மது விலக்கால் இழந்த வருமானத்தை குஜராத்மாநிலம் எப்படிச் சமாளிக்கிறது என்பதை அறிந்து அதேபோன்று அல்லது அதற்கு ஒப்பான வருமானத்தைப் பெறும் திட்டங்களை நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.
இலவசங்களால் பெற்ற ஆட்சியை ஜி 2 அலைவரிசையினால் இழந்த கருணாநிதி அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இதேவேளை, காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லாத டெசோ மாநாட்டைப் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார். கருணாநிதியின் வியூகத்தை முறியடிப்பதற்காகவே மது விலக்கு என்ற பிரமாஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா.

காந்தி பிறந்த நாளான ஒக்டோபர் 2ஆம் திகதி அல்லது ”தந்திர தினமான ஓகஸ்ட் 15ஆம் திகதி தமிழகத்தில் மது விலக்கு அமுல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் உயர்தர ஹோட்டல்களில் வெளிநாட்டினருக்கு மது வகை வழங்க அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் தோல்வியடைந்தாலும் அதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத அவர் இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசை அமைக்கும் சக்தியை எதிர்பார்க்கிறார். தமிழகத்தின் ஆட்சி ஜெயலலிதாவிடம் இருந்தாலும் இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு எதிராகவே உள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் இணைந்து இருப்பதனால் ஜெயலலிதாவினால் நினைத்தைதைச் சாதிக்க முடியவில்லை. ஆகையினால் மத்திய அரசை அமைக்கும் பொறுப்பை எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா
.
தமிழகத்தில மதுபானக் கடைகளைப் பூட்ட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று அடிக்கடி அறிக்கை விடுக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ். மதுக் கடைகளைப் பூட்டியதால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

மதுவுக்கும் புகைத்தலுக்கும் கடுமையான எதிர்ப்பைக் காட்டி வரும் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் மதுவிலக்குக்கு பூரண ஆதரவு கொடுப்பார்கள். வைகோ, விஜயகாந்த் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு அமுல்படுத்தினால் சந்தோஷப்படுவார்கள். ஜெயலலிதா அமுல்படுத்தத் தயாராகும் மது விலக்கு கருணாநிதிக்கு பெருந்தலையிடியைக் கொடுக்கப் போகிறது.
ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கிடையேயான அதிகாரப் போட்டி மதுரை மாநகரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்ற அழகிரியின் ஆதரவாளர்கள் வெறும் கையுடன் மதுரைக்குத் திரும்பியுள்ளனர். மதுரையில் அழகிரியின் செல்வாக்கு உள்ளது. அங்கு ஸ்டாலினின் ஆதவாளர்களினால் பெரிதாக எதனையும் Œõதிக்க  முடியாதுள்ளது.

தமிழகம் எங்கும் இளைஞர் அமைப்பை வலுப்படுத்தும் ஸ்டாலின் மதுரையிலும் இளைஞர் அமைப்பை உருவாக்கினார். ஸ்டாலினின் மதுரை விஜயம் அழகிரியின் ஆதவாளர்களினால் ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவர்களையும்மீறி மதுரையில் காலடி வைத்து சில நியமங்களைச் செய்தார் ஸ்டாலின்.
ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட இளைஞர் அணி உறுப்பினர்களை மாற்றுவதற்கு கருணாநிதி விரும்பவில்லை என அழகிரியின் ஆதரவாளர்கள் அறிந்து கொண்டார்கள். ஸ்டாலின் நியமித்த இளைஞர் அணி உறுப்பினர்களுடன் அழகிரியின் ஆதரவாளர்கள் இணைந்து செயற்படத்தயாராக இல்லை. அழகிரி ஸ்டாலின் பிரச்சினையில் மதுரையில் மீண்டும் ஒரு சிக்கலை எதிர்நோக்க உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்டாலின் நியமித்த இளைஞர் அணி உறுப்பினர்களுடன் அழகிரியின் ஆதரவாளர்கள் இணைந்து செயற்படத்தயாராக இல்லை. அழகிரி ஸ்டாலின் பிரச்சினையில் மதுரையில் மீண்டும் ஒரு சிக்கலை எதிர்நோக்க உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு05/08/12

Saturday, August 4, 2012

திரைக்குவராதசங்கதி 41


""அறிஞர்'' அண்ணா, ""கலைஞர்'' கருணாநிதி, ""கவிஞர்'' கண்ணதாசன், ""நடிகர் திலகம்'' சிவாஜி, ""மக்கள் திலகம்'' எம்.ஜி.ஆர்.போன்று ""சூப்பர் ஸ்டார்'' என்றால் அது ரஜினிதான் என்பது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது.

சிவாஜிக்குப் பின்னர் யார் என்ற கேள்விஎழுந்தபோது அனைவரும் கமலை காட்டினார்கள். கமலுடன் விக்ரமும், சூர்யாவும்அந்த இடத்தைப் பிடிக்க போட்டி போடுகின்றனர். இதேபோல் ம்.ஜி.ஆருக்குப்பின்னர்ஆக்ஷன் நடிகர் யார் என்று கேட்டபோதுகுட்டி எம்.ஜி.ஆர். என ரவிச்சந்திரனைக்காட்டினார்கள். தென்னக ஜேம்ஸ் பொன்ட்என்று ஜெய்சங்கரைக் கூறினார்கள்.  அக்க்ஷன்கிங் என அர்ஜுனை அடையாளம்காட்டினார்கள். அந்த இடைவெளியை இலகுவில் நிரப்பியவர் ரஜினிகாந்த்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் எனக்கேட்டபோது  இதோ லிட்டில் சூப்பர்ஸ்டார் என தன் மகனை அறிமுகப்படுத்தினார் டி.ராஜேந்தர். அஜித்தும். விஜயும் அந்த இடத்தைப்பிடிக்க கடும் முயற்சி செய்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் என்றால் நான்தான் என்பதைமீண்டும் மீண்டும் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு தற்செயலாக சூட்டப்பட்டது. அந்தப்பட்டத்தைரஜினி விரும்பவில்லை. ரசிகர்கள் அப்பட்டத்தைவிரும்பியதால் விருப்பமில்லாத பட்டத்தைஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு ரஜினிதள்ளப்பட்டார்.
ரஜினிகாந்த் என்றபெயர் திரை உலகில்பிரபலமாகத் தொடங்கியது. கதாநாயகனின்நண்பனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்த ரஜினியை கதாநாயகனாக்கியவர் கலைஞானம்

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ஆறுபுஷ்பங்கள் என்றபடத்துக்குக் கதை வசனம்எழுதியபோது அப்படத்தில் நடித்த ரஜினிக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

ரஜினியிடம் ஒரு கதையைக் கூறி நீங்கள்தான்கதாநாயகன் என்றார். ரஜினிக்கு கதைபிடித்துவிட்டது. உடனே சம்மதம் ரிவித்துவிட்டார். கலைஞானத்தின் கையில் பணமில்லை. மறுநாள் பணத்தைச் சேர்த்து ரஜினியிடம் ஐயாயிரம்ரூபா அட்வான்ஸ்கொடுத்துஒப்பந்தம்போட்டார்.
கதாநாயகியாகஸ்ரீபிரியாவைஒப்பந்தம் செய்தார். படத்தின்பூஜையைக்கூட போடாமல்கதையைக்கூறி விநியோகஸ்தரிடம் பணம் பெற்றார்.

 ரஜினி முதன்முதலாக கதாநாயகனாக நடித்த "பைரவி'படம் பெரு வெற்றி பெற்றது. சென்னைநகர விநியோக உரிமையை தனது நண்பர்களுடன் இணைந்து கலைப்புலி தாணுபெற்றார். ""ஸ்டைல் மன்னன்'' எனஅழைக்கப்பட்ட ரஜினியை ""சூப்பர் ஸ்டார்'' ஆக்கியவர் கலைப்புலி தாணு.அண்ணாசாலையில் உள்ள பிளாசா தியேட்டரில் பைரவி படம் திரையிடப்பட்டது. 35அடி உயர ரஜினியின் கட் அவுட் தியேட்டரின் உயரத்தை மிஞ்சி நின்றது. மூன்று விதமான போஸ்டர்கள் அடித்து சென்னை நகரமெங்கும் ஒட்டினார்கள். எல்லா போஸ்டர்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரப்படுத்தியிருந்தார். சூப்பர் ஸ்டார் என்றபட்டம் ரஜினி ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

சென்னை நகர விளம்பரம் ரஜினியையும்கவர்ந்துவிட்டது. கலைப்புலி தாணுவைஅழைத்து கைகொடுத்துப் பாராட்டினார்ரஜினி. நாள் செல்லச் செல்ல சூப்பர்ஸ்டார்என்ற பட்டம் பிரபலமானது. த்திரிகைகள்ரஜினியின் பெயருக்கு முன்னால் சூப்பர்
ஸ்டார் எனக்குறிப்பிட்டன.சிவாஜி , எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும்திலகங்களுக்கிடையே சூப்பர் ஸ்டார் என்றபட்டம் தனக்குப் பொருத்தமானதா என சிந்தித்த ரஜினி அப்பட்டத்தை விளம்பரத்திலிருந்து அகற்றும்படி கலைப்புலி தாணுவிடம்வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும், அதுகாலம் கடந்த விடயமாகி விட்டது. சூப்பர்ஸ்டார் என்றபட்டம் ரஜினிக்கு நிரந்தரமாகிவிட்டது

.பைரவி படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். ""நண்டுரூது நரியூருது'' என்ற பாடலை டி.எம். சௌந்தரராஜன் பாட .ஏ.வி.எம்.மில் ஒலிப்பதிவானது. ஒலிப்பதிவைப்பார்ப்பதற்காக ரஜினி ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார். ஒலிப்பதிவு முடிந்ததும்கலை ஞானத்தின் கையைப்பிடித்து தனதுநன்றியைக் கூறினார். சௌந்தரராஜன் பாடதான் நடிப்பேன் என நினைக்கவில்லை எனநெகிழ்ந்து கூறினார்.

பைரவி படத்தை ரசிகர்களுடன் சேர்ந்துபார்த்தார் ரஜினி. பைரவி படத்தைப் பார்த்தபட அதிபர் சின்னப்பா தேவர் தனது படத்தில்நடிப்பதற்கு சிபார்சு செய்யும்படி கலைஞானத்திடம் கூறினார்.நீங்களே போன் பண்ணுங்கள், ரஜினி ஒப்புக்கொள்வார் என கலைஞானம் கூறினார்.அதேபோல் தேவர் பிலிம்ஸின்தொலைபேசி அழைப்புக்கேட்ட ஐந்தாவதுநிமிடத்தில் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்குச்சென்று தேவரிடம் ஆசிபெற்றதுடன்இரண்டு படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டார்
ரமணி
மித்திரன்31/12/2006
101.

Thursday, August 2, 2012

மைக்கல் பெல்ப்ஸ் புதிய சாதனை


லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் தொடரிலான  4து200 மீற்றர்  நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர்  மைக்கேல்  பெல்ப்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை  19 பதக்கங்களுக்குச் சொந்தக்காரர்  என்ற புதிய சாதனையையும்  படைத்துள்ளார்.
 முன்னாள் சோவியத் வீரர்  லரிசா லட்டினியா   கடந்த 48 வருடங்களாக   தக்கவைத்திருந்த  ஒலிம்பிக்கின் 18 பதக்கங்களைச் சுவீகரித்தவர் என்ற சாதனையை  இதன்மூலம்  பெல்ப்ஸ் முறியடித்துள்ளார்.
  ஒலிம்பிக் போட்டிகளின்  அதிசிறந்த   வீரரென்ற   பெருமையை  அவருக்கு ஈட்டிக் கொடுத்த 19 பதக்கங்களை  அவர் அடைவதற்கு  சரித்திர முக்கியத்துவம்  வாய்ந்த கடந்த செவ்வா#க் கிழமையன்று அவருக்கு கிடைத்திருந்த அந்த இரண்டு பதக்கங்களுமே வழி வகுத்திருந்தன.
அவர் 200 மீற்றர்  பட்டர்ஃபிளை  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை  15 தங்கப் பதக்கங்களையும், இரண்டு  வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளன.
மெட்ரோநியூஸ்01/08/12