Showing posts with label உலகக்கிண்ண ரி20. Show all posts
Showing posts with label உலகக்கிண்ண ரி20. Show all posts

Saturday, October 29, 2022

பிலிப்ஸ் சதம் நியூஸிலாந்து  வெற்றி

8-வது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.  நியூஸிலாந்து- இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து  65  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.   நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் ஆலென் மற்றும் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த அணியின் பின் ஆலென் , கான்வேஆகிய ஒருவரும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.க‌ப்டன் வில்லியம்சன் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  இதனால் அந்த அணி 3.6  ஓவர்களில்  மூன்று விக்கெற்களை இழந்து  15 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.     நான்காவது விக்கெற்ரில் இனைந்த  கிளென் பிலிப்ஸ்,டேரில் மிட்செல்  ஜோடிநியூஸிலாந்தை நிமிர்த்தியது. இவர்களி இருவரும் 64 பந்துகளில் 84  ஓட்டங்கள் எடுத்தனர். டார்ல் மிட்சேல் 22 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜிம்மி நீசம் 5 (8) ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.

இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 104 (64) ஓட்டங்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ரி20 உலக கோப்பை வரலாற்றில் ஜாம்பவான் ப்ரண்டன் மெக்கலமுக்கு பின் (123 ஓட்டங்கள், பங்களாதேசத்துக்கு எதிராக, 2012இல்) சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக ரி20 உலக கோப்பையில் சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

மிட்சேல் சாட்னர் 11* (5) ஓட்டங்கள் எடுத்தார். நியூஸிலாந்து 20 ஓவரில்  7 விக்கெற்களை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது.  இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜித்தா 2 விக்கெட்களை எடுத்தார்.

  168 ஓட்டங்கள்   எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நிசாங்கா 0, குசல் மெண்டிஸ் 4, தனஞ்ஜெயா 0, அசலங்கா 4, கருரத்ணே  என விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தினார்.

அதனால் 8/4 என தொடங்கி 24/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இலங்கைக்கு   பனுக்கா ராஜபக்சா அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (22) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹஸரங்கா 4 (6) தீக்சனா 0 (3) என வெளியேற மறுபுறம் போராடிய க‌ப்டன் சனாக்காவும் 4 பவுண்டரி 1 சிக்ஸ‌ருடன் 35 (32) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை முழுமையாக தாக்குப் பிடிக்க முடியாத இலங்கை 19.2 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து  102  ஓட்டங்கள் எடுத்தது.

 

 

Monday, November 15, 2021

ரி20 உலகக்கிண்ண துளிகள்


 

போட்டிகள்; 45

சம்பியன் அவுஸ்திரேலியா

ரன்னர் நியூஸிலாந்து 

அவுஸ்திரேலியா  ஐசிசியின் 8 போட்டிகளில் சம்பியன்

50 ஓவர் உலகக்கிண்ணம்

1987,1999,2003,2007,2015

சம்பியன்ஸ்ட்ரபி

2006,2009

ரி20  உலகக்கிண்ண ஆறாவது  சம்பியன் ஐந்தாவது நாடு.

இந்தியா 2007

பாகிஸ்தான் 2009

இங்கிலாந்து 2010

மேற்கு இந்தியா  2012

இலங்கை  2014

மேற்கு இந்தியா  2016

ஆரோன் பிஞ்சின் 6 ஆவது நாணயச்சுழற்சி வெற்றி. ஆறு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா  வென்றது.  நாணய‌ச் சுழற்சியில் இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வி. போட்டியிலும் தோல்வி

                        அதிக  ஓட்டங்கள்


பாபர் அஸாம் 303  ஓட்டங்கள்.  பாகிஸ்தான்

 

அதிக விக்கெட்கள்

 ஹஸரங்க டி சில்வா  16 இலங்கை

 வில்லியம்ஸன் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள்.  முன்னதாக சங்ககார  [இலங்கை].ஜோரூட் [இங்கிலாந்து] 33 பந்துகலில் 50 ஓட்டங்கள்.

ரி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த  சாமுவேல்ஸுடன், வில்லியம்சன் 85 ஓட்டங்கள் எடுத்து இணைந்தார். அடுத்த இடங்களில் சாமுவேல்ஸ் 78 ஓட்டங்கள், கோலி 77 ஓட்டங்கள், கம்பீர் 75 ஓட்டங்கள்

ரி20 உலக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிக  ஒட்டங்கள் எடுத்த கப்டன் வில்லியம்ஸன் 85 ஓட்டங்கள். சங்ககார 64 ஓட்டங்களுடன் இரன்டாவது இடத்தில் உள்ளார். 

அதிக ஓட்டங்கள் கொடுத்த வீரர்

அவுஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டாக் 4 ஓவர்களில் 60 ஓட்டங்கள் கொடுத்தார். ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் கொடுத்த பந்து வீச்சாளர் இவர்தான். முன்னதாக மலிங்க 4 ஓவர்களில் 55  ஓட்டங்கள் கொடுத்தார்.

ஐபிஎல்லில் அசத்திய வீரர்கள் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் காணாமல் போய்விட்டார்கள். ஐபிஎல்லிக் கப்டன் பதவி பறிக்கப்பட்டு அணியில் இருந்து விரட்டப்பட்ட டேவிட் வானர் தொடர் நாயகனானார்

Monday, October 11, 2021

பாகிஸ்தான் கிறிக்கெற் அணியின் சீருடையால் சர்ச்சை


 இந்தியாவில் நடப்பதற்கு  ஏற்பாடு செய்யப்பட்ட ரி20 உலகக்கிண்ணப் போட்டி    கொரோனா பரவலால்   ஓமன்,  மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு  மாற்றப்பட்டது.  16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டி வருகிற 17‍   ஆம் திக‌தி தொடங்குகிறது. அமீரகத்தில்   போட்டி நடந்தாலும் அதற்குரிய அதிகாரபூர்வ உரிமம் இந்தியாவிடமே இருக்கிறது. அதனால் இது ‘ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி இந்தியா 2021’ என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

உலகக்கிண்ணப் போட்டியில் பங்கு பங்குபற்றும் அணிகள் வெளியிட்ட சீருடைகளில் "இந்தியா 2021" எனப் பொறிக்கப்பட்டுள்லது. ஆனால், பாகிஸ்தான் வெளியிட்ட  சீருடையில்  இந்தியாவின் பெயரை முடக்கி , ‘ ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி யூ.ஏ.இ.2021’ என்று பொறித்துள்ளது.

பாகிஸ்தான் க‌ப்டன் பாபர் அசாமின் சீருடையில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் இன்னும் அதிகாரபூர்வமாக தங்களது சீருடையை அறிமுகப்படுத்தவில்லை. எனவே இதே சீருடையுடன் ஆடுமா? அல்லது மாற்றம் செய்யுமா? என்பது சில தினங்களில் தெரிந்து விடும். 

முன்னாள் கப்டன்கள் மோதும் உலகக் கிண்ண ரி20


 ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  இல் நடைபெறும் டி20 உலகக்கிண்ணத்  தொடரில்  இந்திய  அணியின் முன்னாள் கப்டனும், பாகிஸ்தான் அணியின்  முன்னாள் கப்டனும் மீண்டும் சந்திக்க உள்ளனர்.

 2007‍ ஆம் ஆண்டு  தென் ஆப்பிரிக்காவில் ரி20 உலகக் கிண்ண சம்பியனான இந்திய அணியின் க‌ப்டன் டோனி. அப்போது  பாகிஸ்தான்  அணியின் க‌ப்டனாக சொஹிப் மாலிக் இருந்தார். இப்போது டோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பாகிஸ்தான் அணியின் வீரராக சொஹிப் மாலிக் இணைக்கப்பட்டுள்ளார். இதுதான் காலத்தின் முரண்.


பாகிஸ்தான் அணியின்  வீரரானசொஹிப் மக்சூத் கடுமையான முதுகு வலியால அவதிப்பட்டதால் ரி20 உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக  சொஹிப் மாலிக் இணைக்கப்பட்டுள்ளார்.

  2012, 2014, 2016  ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில்   சொஹிப் மாலிக் விளையாடினார்.2010 ஆம் ஆன்டு நடைபெற்ற உலகக்கிண்ண ரி20 யில் அவர்  விளையாடவில்லை.