Friday, June 29, 2012

மிலேனியம் அப்பா வள்ளிப்பிள்ளையால் நம்பமுடியவில்லை இப்படியும் நடக்குமா எனத்தனக்குள்திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டாள்.ஐம்பதுவயது அனுபவத்தில் அவள் எத்தனையோபேருக்கு ஆலோசனைகளும்,அறிவுரைகளும் கூறியிருக்கிறாள்.
  இன்று அவள்மீது கேலிப்பார்வைகளும்.கிண்டல்பேச்சுக்களும் வரப்போவதை எண்ணி மனதுக்குள் வெதும்பினாள்.சின்னஞ்சிறிசுகளுக்குமுன் எப்படிநிற்கப்போகிறேன்எனப்பொருமினாள்.பேரப்பிள்ளைகளைக்காணவேண்டிய வயதில் இப்படிஒரு நிலையா எனத்துவண்டாள்.

  வள்ளிப்பிள்ளையின் கணவன்பொன்னம்பலம் மூண்று நாட்களாக வீட்டுக்குச்செல்லவில்லை.ப‌க‌லில் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்குச்செல்லும் அவ‌ர் இர‌வில் கோயில் ம‌ட‌த்தில் த‌ங்கினார். தனிமை‌யில் இருக்கும்போது த‌ற்கொலை எண்ண‌ம் அவ‌ர் ம‌ன‌தில் சிற‌க‌டித்த‌து.
  எதைச்சொல்வ‌து?எப்ப‌டிச்சொல்வ‌து? அறுப‌து வ‌ய‌தில் அப்பாவாக‌ப்போவ‌தைச் ச‌ந்தோச‌மாக‌ச்சொல்ல‌முடியுமா?ஊர்ப்பெரியவ‌ர்க‌ளின் அழுத்த‌த்தால் பொன்ன‌ம்ப‌ல‌ம் வீட்டுக்குச்சென்றார்.கல்‌லானாலும் க‌ண‌வ‌ன் புல்லானாலும் புருச‌ன் என்ற‌ப‌ழ‌மொழிக‌ளை ம‌ன‌தில் இருத்திய‌தால் வ‌ள்ளிப்பிள்ளை அவ‌ரை ஏற்றுக்கொண்டாள்.

   கோயில் ச‌ந்தை க‌லியாணவீடு செத்த‌வீடு போன்ற‌நிக‌ழ்ச்சிக‌ள் எத‌ற்கும் வ‌ள்ளிப்பிள்ளைபோவ‌தில்லை. பொன்‌ன‌ம்ப‌ல‌ம்தான் எங்கும் செல்வார். எவ‌ருட‌னும் அதிக‌ மாப் பேச‌மாட்டார். அதிக‌ நேர‌த்தை வீட்டிலேயே க‌ழிப்பார்.

  ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌டிக்கும் ம‌க‌ன் என்ன‌சொல்வானோ என‌த்தெரியாது இருவ‌ரும் க‌ல‌க்க‌ம‌டைந்த‌ன‌ர். ஆனால் இதைப்ப‌ற்றித்தெரிந்த‌ அவ‌ன்  ஒரு வ‌ரியும் எழுதாம‌ல் வ‌ழ‌மை போன்றே க‌டித‌ம் எழுதினான்.
  ப‌த்திரிகை ப‌டித்துக்கொண்டிருந்த‌ பொன்ன‌ம்ப‌ல‌த்துக்கு எதிரே யாரோ நிற்ப‌தைப்போன்ற‌ உண‌ர்வு உண்டான‌தும் ப‌த்திரிகையை வில‌த்திப்பார்த்தார்.அறிமுக‌மில்லாத‌ நான்குபேர் அவ‌ர்முன் நின்றன‌ர்.பொன்ன‌ம்ப‌ல‌ம் க‌தைக்க‌முன்ன‌ர் அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் க‌தையைத்தொட‌ங்கினார்.

  "ஐயா இங்கே பொன‌ன‌ம்ப‌ல‌ம் என்கிற‌து நீங்க‌ள்தானே.?"

  ஆமாம் என்ப‌துபோல‌ பொன்ன‌ம்ப‌ல‌ம் த‌லையாட்டினார்.

 " டொக்ட‌ர் வ‌டிவேல் உங்க‌ளைப்ப‌ற்றிச்சொன்ன‌வ‌ர். அதுதான் உங்க‌ளைச்ச‌ந்திக்க‌ வ‌ந்த‌னாங்க‌ள்."

 " உதிலை இருங்கோ. நீங்க‌ள் ஆர்? என்‌ன‌விச‌ய‌மாக‌ என்னைச்ச‌ந்திக்க‌வ‌ந்த‌னிய‌ள்?"

  "ச‌க்தி வைத்திய‌சாலையைப்ப‌ற்றிக்கேள்விப்பட்டிருக்கிறிய‌ளே.?"

  "ஓமோம் கொழும்பிலை பெரிய‌வைத்திய‌சாலை அது."

  " நாங்க‌ள் அங்கை இருந்துதான் வ‌ந்திருக்கிற‌ம்."

 பொன்ன‌ம்ப‌ல‌ம் எதுவும் புரியாம‌ல் அவ‌ர்க‌ள் நால்வ‌ரின் முக‌த்தையும் மாறிமாறிப்பார்த்தார். வ‌ள்ளிப்பிள்ளை குசினி அலுவ‌லை இடையில் விட்டுவிட்டு அவ‌ர்க‌ள் என்ன‌ சொல்ல‌ப்போகிறார்க‌ள் என்ப‌தைக்கேட்க‌ வாச‌லில் நின்றாள்.


  "அடுத்த‌ ஆண்டு மிலேனிய‌ம் ஆண்டு."

 தெரியும் என்ப‌துபோல் பொன்ன‌ம்ப‌ல‌ம் த‌லையாட்டினார்.

  "மிலேனிய‌ம் குழ‌ந்தை எங்கே பிற‌க்கும் எண்டு சொல்ல‌முடியாது. மிலேனிய‌ம் குழ‌ந்தை எங்க‌ள் வைத்திய‌சாலையில் பிற‌க்க‌வேன்டும் என‌ எங்க‌ள் வைத்திய‌சாலை நிர்வாக‌ம் விரும்பிய‌து. அத‌னால் மிலேனிய‌ம் குழ‌ந்தையைப்ப‌ற்றிய‌விப‌ர‌ங்க‌ளைச்சேக‌ரித்தோம்.டொக்ட‌ர் வ‌டிவேல் உங்க‌ள் விலாச‌த்தைத்த‌ந்து மிலேனிய‌ம் குழந்தைக்கு அப்பாவாகும் அதிர்ஷ்ட‌ம் உங்க‌ளுக்கு இருப்ப‌தாக‌ச்சொன்னார். அடுத்த‌வார‌ம் இங்குவ‌ரும் எங்க‌ள்வைத்திய‌சால‌க்குழுவின‌ர் உங்க‌ள் மனைவியைப்ப‌ரிசோதிப்பார்க‌ள்.ஒவ்வொருமாத‌‌மும் இங்குவ‌ந்து ப‌ரிசோத‌னை செய்வார்க‌ள். மிலேனிய‌ம் குழ‌ந்தைக்கு நீங்க‌ள் அப்பாவானால் நாங்க‌ளும் ச‌ந்தோச‌ப்ப‌டுவோம்." என‌ச்சொல்லிவிட்டு நால்வ‌ரும்சென்றார்க‌ள்.

 அதிர்ச்சிய‌டைந்த‌ பொன்ன‌ம்ப‌ல‌மும் வ‌ள்ளிப்பிள்ளையும் அவ‌ர்க‌ள் போவ‌தைப்பார்த்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

  1999 ஆம் ஆண்டு மார்க‌ழிமாத‌ம் 31 ஆம் திக‌தி இ ர‌வு 10 ம‌ணி ச‌க்தி வைத்திய‌சாலையில் தொல‌க்காட்சிப்ப‌ட‌ப்பிடிப்பாள‌ர்க‌ளும் வா னொலி ப‌த்திரிகை நிருப‌ர்க‌ளும் த‌ம‌க்கென‌ ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்களில் இருந்த‌ன‌ர்.
   மிலேனிய‌ம் அப்பாவாக‌ப்போகும் ஒருசில‌ர் அங்கும் இங்கும் ந‌ட‌மாடிக்கொண்டிருந்த‌ன‌ர்.பொன்ன‌ம்ப‌ல‌மும் அவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌ ஒருக‌திரையில் அமைதியாக‌ இருந்தார்.த‌னிமையில்யோசித்துக்கொண்டிருந்த‌ பொன்ன‌ம்ப‌லம்  "அப்பா" என்ற‌குர‌ல்  கேட்டு நிமிர்ந்தார். எதிரே அவருடைய‌ ம‌க‌ன் நின்றார்.
  "சாப்பிட்டீங்க‌ளா?" என‌ம‌க‌ன் கேட்ட‌தும் த‌ன்னையும் அறியாம‌ல் எழுந்து ம‌க‌னைத்த‌ட‌விய‌ப‌டி "சாப்பாடு  ஒத்துக்கொள்ள‌வில்லை.அடிக்க‌டி வ‌யித்தாலைபோகுது" என்றார்.அவ‌ரை இருக்கும்ப‌டி கூறிவிட்டு அப்பால் சென்றான் ம‌க‌ன்.

  மிலேனிய‌ம் ஆண்டு பிற‌க்க‌ இன்ன‌மும் அரை ம‌ணித்தியால‌ம் இருக்கிற‌து.வைத்திய‌சாலை புதிய‌க‌ளை க‌ட்டிய‌து. வைத்திய‌ர்களும் ஊழிய‌ர்க‌ளும் ச‌ரித்திர‌ முக்கிய‌த்துவ‌ம் பெற‌ப்போகும் நிக‌ழ்வுக்காக‌த்த‌ம்மைத்த‌யார்ப்ப‌டுத்தின‌ர்.

  விடைபெற‌ப்போகும் நூற்றாண்டைப்ப‌ற்றிக்கவலைப்ப‌டாதும‌ல‌ர‌ப்போகும் புத்தாண்டில் பிற‌க்க‌ப்போகும் குழந்தையைப்ப‌ற்றியே  அங்குள் ள‌ அனைவ‌ரும் சிந்தித்தார்க‌ள்
.
  அந்த‌ ஹோலிலுள்ள‌ ம‌ ணிக்கூ டு புதிய‌ ஆண்டு பிற‌க்க‌ இன்னும் ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் இருப்ப‌தாக‌க்காட்டிய‌து. ஏதாவ‌து குடிக்க‌வேண்டும் என‌ பொன்ன‌ம்ப‌ல‌த்தின் ம‌ன‌து கூறிய‌து. வெளியேபோய் வ‌ருவ‌த‌ற்கிடையில் மிலேனிய‌ம் ஆண்டும் குழ‌ந்தையும் பிற‌ந்து விடுமோ என்ற‌ப‌ய‌த்தில் வெ ளியே செல்லாம‌ல் காத்திருந்தார்.

  இன்னும் ஐந்து நிமிட‌ம் இருக்கு என‌ யாரோ சொல்ல பொன்னம்ப‌ல‌த்தின்  இத‌ய‌ம் வேக‌மாக‌ அடித்த‌து. திடீர‌ன‌ அவ‌ரின் வ‌யிற்றினுள் விநோத‌மான‌ சத்த‌ங்க‌ள் உண்டாயின‌.வ‌யிற்றைத்த‌ட‌விய‌ப‌டி அவ‌ர் ஹோலைவிட்டு வெளியேறினார்.

  வயிறு உபாதையை முடித்துக்கொண்டு பொன்னம்பலம்வெளியேவந்தபோது மிலேனியம் குழந்தை பிறந்துவிட்டது. அவசரஅவசரமாக அவர் ஹோலுக்குள் நுழைந்தபோது டொக்டரைச்சுற்றி எல்லோரும் நின்றார்கள். சனத்தைத்தாண்டி டொக்டரின் அருகில் செல்லமுடியாத பொன்னம்பலம் ஒரு கதிரையில் ஏறி நின்று பார்த்தார்.

 தொலைக்காட்சிக்கமராக்கள் டொக்டரைமொய்த்தன. பொன்னம்பலத்தின் மகனும் டொக்டரின் அருகில் நின்றார்.கமராவெளிச்சங்கள் மின்னல் போல் எங்கும் ஒளியைச்சிந்தின. டொக்டர் சொல்வது  பொன்னம்பலத்துக்குக் கேட்கவில்லை. மிலேனியம் அப்பா யாரென அறிவதற்காக கதிரையில் நின்றவாறே உயர்ந்து உயர்ந்து பார்த்தார்.

  டொக்டரின் அருகில் நின்ற பொன்னம்பலத்தின் மகன் தகப்பனைக்காட்டி ஏதோ சொன்னார். உடனே அனைவரும் பொன்னம்பலத்தை நோக்கிச்சென்றனர்.சந்தோசத்தில் பொன்னம்பலத்தின் கை கால் எல்லாம் நடுங்கின. மிலேனியம் ஆண்டையும் மிலேனியம் குழந்தையையும் வரவேற்கும் வெடிச்சத்தங்கள் அவருடைய காதைச்செவிடாக்கின.

  மிலேனியம் அப்பா என்றசந்தோசத்தில் என்ன குழந்தை? வள்ளிப்பிள்ளை சுகமாகஇருக்கிறாளா? என்பதை எல்லாம் மறந்து சந்தோசக்கனவுகளில் மிதந்தார் பொன்னம்பலம்.தொலைக்காட்சிக்கமராக்களின் வெளிச்சம் அவரின் உடலை நெருப்புப்போல் சுட்டன. புகைப்படக்கமராவெளிச்சங்கள் அவர் கண்களுக்குஒளிக்கோலம்காட்டின.டொக்டர்பொன்னம்பலத்தின்கையைப்பிடித்துக்குலுக்கினார்.கைகளைத்தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிட்டார் பொன்னம்பலம்.

 தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பொன்னம்பலத்தின் அருகில்  சென்று "உங்கள் மகன் மிலேனியம் அப்பாகிவிட்டார்.உங்களை மிலேனியம் தாத்தா என அழைக்கலாமா?" எனக்கேட்டார்.

  திடீரெனபொன்னம்பலம் மயங்கிவிழ கிழவன் சந்தோசத்திலை மயங்கிட்டுது என யாரோ சொல்வது அவர் காதுகளில் அரை குறையாகக்கேட்டது.

சூரன்.ஏ.ரவிவர்மா
தினக்குரல் 01/01/2000


லண்டனில் தங்கத் திருவிழா 7

ஜப்பான்  

ல‌ண்டன் ஒலிம்பிக் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டியைப் போன்றே பெண்கள் உதைபந்தாட்டமும் விறுவிறுப்பு மிக்கதாக உள்ளது. ஒலிம்பிக் பெண்கள் உதைபந்தாட்டத்தில் அமெரிக்காவின் கையே மேலோங்கியுள்ளது. 1996, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டிகளில் அமெரிக்க மகளிர் அணி தங்கம் வென்றது. 2004, 2008 ஆம் ஆண்டுகளின் இறுதிப் போட்டிகளில் பிரேஸிலை வென்று அமெரிக்கா தங்கம் வென்றது.  இறுதிப் போட்டியில் 2000 ஆம் ஆண்டுநோர்வேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.
2008, 2004 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற பிரேஸில் 2009, 1996 ஆகிய ஆண்டுகளில் நான்காம் இடம்பெற்றது.
ஜேர்மனிய மகளிர் உதைபந்தாட்ட அணியும் ஒலிம்பிக்கில் சாதனை செய்துள்ளது. 2000, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் மூன்றாமிடம் பெற்று வெண்கலம் வென்றது.
2000 ஆம் ஆண்டு தங்கம் வென்ற நோர்வே 1996 ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றது. லண்டன் ஒலிம்பிக் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் ஆசியாக் கண்டத்தில் இருந்து ஜப்பானும், வட கொரியாவும் தகுதி பெற்றுள்ளன.

ஒலிம்பிக் விளையாடும் தகுதியைப் பெறும் இறுதி சுற்று சீனா, வடகொரியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் போட்டியிட்டது.
ஆபிரிக்க கண்டத்தில் இருந்து கமரூ னும் தென் ஆபிரிக்காவும் தகுதி பெற்றன. நைஜீரியா எதியோப்பியா ஆகியன இறுதிச் சுற்று வரை முன்னேறின. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவீடன் ஆகியன ஒலிம்பிக் தகுதி காண் இறுதிப் போட்டியில் விளையாடின. பிரான்ஸ், சுவீடன் ஆகியன வெற்றி பெற்று ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றன. ஒலிம்பிக்கை நடத்தும் நாடான இங்கிலாந்து நேரடியாகத் தகுதி பெற்றது.

வட அமெரிக்காவிலிருந்து கனடாவும் அமெரிக்காவும் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றன. தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸிலும் கமரூனும் தகுதி பெற்றுள்ளன. ஓசியானிக் தீவுகளிலிருந்து பபுவா நியூகினியை 150 என்ற கோல் கணக்கில் வென்ற நியூஸிலாந்தும் ஒலிம் பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற் றது. பப்புவா நியூகினித் தீவுகளின் பல மான நாடான நியூஸிலாந்து மகளிர் அணி ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பீஜீங் ஒலிம்பிக்கில் முதன் முதல் பங்கு பற்றிய நியூஸிலாந்து இப்போது 2ஆவது தடவை விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இங்கி லாந்து, பிரேஸில், கமரூன் ஆகியவற்று டன் குழு ஈ யில் உள்ளது நியூஸிலாந்து.

2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் முதன் முத லில் வடகொரிய மகளிர் அணி விளையா டத் தகுதி பெற்றது. பிரேஸில், நைஜீரியா, ஜேர்மனி ஆகிய பலம் வாய்ந்த அணிகளுடன் விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறிய நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் வட கொரியா ஒரு கோல் அடித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், கொலம்பியா ஆகியவற்றுடன் ஜீயில் வடகொரியா உள் ளது.
1996 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒலிம்பிக்கில் தடம் பதித்த ஜப்பான் பெண்கள் உதைபந்தாட்ட அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் வெளியேறிய ஜப்பான் 2004 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அரை இறுதி வரை முன்னேறியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜேர்மனியிடம் 4  2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.
கனடா, சுவீடன், தென்னாபிரிக்கா ஆகியவற்றுடன் குழு எஃப்பில் உள்ளது ஜப்பான்.
ரமணி
மெட்ரோநியூஸ்29/06//12

Sunday, June 24, 2012ஜனாதிபதித் தேர்தல் ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் சுற்றி இருப்பதைப் பொறுக்க முடியாத விஜயகாந்த், இந்திய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சோனியாவும் காங்கிரஸ் தலைவர்களும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி கருணாநிதியுடன் ஆலோசனை செய்கிறார்கள். ஜெயலலிதாவை அத்வானி சந்தித்ததும் மிக முக்கியமான சம்பவமே. அவர்கள் இருவரும் ஜனாதிபதி வேட்பாளரைப்பற்றி ஆலோசனை செய்ததாகவே செய்திகள் வெளிவந்தன.
இந்திய ஜனாதிபதித் தேர்தல் பற்றி விஜயகாந்துடன் யாரும் ஆலோசனை செய்யவில்லை. ஆகையினால் தன்னை நோக்கி மற்றவர்களைத் திசை திருப்பும் நோக்கில் பகிஷ்கரிப்பு என்ற கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார் விஜயகாந்த்.

மத்திய அரசில் உள்ள அரசியல் தலைவர்கள் விஜயகாந்தைக் கண்டு கொள்ளவில்லை. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு முறைப்படி கொடுக்க வேண்டிய நீரைக் கொடுப்ப தற்கு மத்திய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர் கொல்லப்படுவது, தாக்கப்படுவது போன்றவற்றைத் தடுப்பதற்கு கண்டிப்பான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை.
இலங்கைக்குத் தாரை வார்த்த கச்சத்தீவுக்கு இந்திய மீனவர் செல்ல முடியாத நிலை என்பவற்றைக் காரணம் காட்டி இந்திய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் அறிவிப்புக்கு கை மேல் பலன் ஏற்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியை வியகாந்த் ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்ட சபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகூடிய உறுப்பினர்கள் உள்ளனர். தனது கட்சியைச் @Œர்ந்தவர்களின் குரல் இந்திய நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புகிறார். தனிந்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை காலம் கடந்து உணர்ந்துள்ளார் விஜயகாந்த். நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் விஜயகாந்துக்கு உள்ளது. ஆகையினால் ஜனாதிபதித் தேர்தலைக் காரணம் காட்டித் தூண்டில் போட்டுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்புகிறார்கள். ஸ்டாலினின் பார்வையும் விஜயகாந்தை நோக்கியே உள்ளது. ஜெயலலிதா நட்டாற்றில் விட்டதால் கரை ஒதுங்க வேண்டிய அவசியம் விஜயகாந்துக்கு உள்ளது. ஆகையினால் காங்கரஸ் கூட்டணியில் இணைவதற்கான சந்தர்ப்பமாக இந்திய ஜனாதிபதித் தேர்தலை நோக்குகிறார் விஜயகாந்த்.இந்திய ஜனாதிபதித் தேர்தல் ஜெயலலிதாவின் கையை விட்டுப்போயுள்ளது. தமிழக சட்ட சபையில் திராவிடமுன்னேற்றக் கழகத்தினரின் எண்ணிக்கை குறைவு என்றாலும் கருணாநிதிக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளார் சோனியா காந்தி. தமிழக அரசியலில் கருணாநிதியின் செல்வாக்கு இன்னமும் மங்கவில்லை என்பதை சோனியா உணர்ந்துள்ளார்.

தமிழக அரசியலில் மிக முக்கிய புள்ளியாக விளங்கிய டாக்டர் ராமதாஸ் தனது கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பலனை அனுபவித்த டாக்டர் ராமதாஸின் செல்வாக்கு அதலபாதாளத்தில் விழுந்ததனால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அவரை ஒதுக்கி வைத்தார்கள். யாருடனும் கூட்டணி சேரமாட்டேன் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்ட சபையைக் கைப்பற்றவேன் என்று சூழுரைத்த டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சி முறைப்படி ஆதரவு கேட்கபதற்கு முன் தனது கட்சி ஆதரவளிக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ராமதாஸின் கண்ணைத் திறந்துள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கான விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த விசயத்தில் கருணாநிதி கண் அசைத்தால் தான் சோனியா காந்தி பச்சைக் கொடி காட்டுவார்.
இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் வேட்பாளரையே கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். வைகோ மௌனம் காக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் நாடõளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து புதிய கூட்டணி ஏற்படும் சாத்தியம் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைச் சுற்றி இந்திய ஜனாதிபதித் தேர்தல் சுழன்றதனால் காங்கிரஸ் கட்சி பதற்றமாக இருந்தது. இந்திய அரசியல் ச‌துரங்கத்தைப் பற்றி நன்கு தெரிந்த அப்துல் கலாம் பகடைக் காயாக விரும்பாது ஒதுக்கி விட்டார். தனது சுய நலனுக்காக கலாமின் பெயரை முன்மொழிந்தார் மம்தா பனர்ஜி. அரசியல் குட்டையில் விழுந்தவர்கள் அதில் மூழ்குவதிலே பெரும் ஆனந்தம் கொள்வார்கள்.

இந்திய ஜனாதிபதியாக இருந்த வேளை ச‌ராச‌ரி அரசில் வாதியாக இல்லாது நேர்மையான மனிதனாக செயற்பட்ட அப்துல் கலாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மனச்சாட்சி இடம் தரவில்லை என்று கூறி தான் அரசியல்வாதி இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 24/06/12

Friday, June 22, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35


மகனாக நினைக்க வேண்டிய மூத்த தாரத்து மகனை மணாளனாக நினைத்து உருகிய காமுகியின் கதை தான் அசோக்குமார். எம்.கே. தியாகராஜபாகவதர் கதாநாயகனாக நடித்த இப் படம் 1941 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழாக் கொண்டாடியது. 
யுத்த களத்தில் எதிரிகளை துவம்சம் செய்து நாடடைக் கைப்பற்றி வெற்றி வீரனாக திரும்புகிறார் எம்.கே தியாகராஜபாகவதர். வெற்றி புருஷனான எம்.கே தியாகராஜ பாகவதர். தனது இரண்டாவது மனைவிக்கு அறிமுகம் செய்கிறார் சக்கரவர்த்தி வி. நாகைய்யா. வெற்றி திலகமிட்டு சக்கரவர்த்தியின்

மூத்த மனைவியின் மகன் எம்.கே தியாகராஜ பாகவதரை வரவேற்கிறாள் கண்ணாம்மாள். தியாகராஜ பாகவதரின் உடலில் விரல்பட்டதும் அந்த ஸ்பரிசத்தினால் தன்னிலை மறந்த கண்ணம்மாவின் உடலில் காமத்தீ பற்றி எரிகிறது. தியாகராஜ பாகவதர் தன் கணவனின் மகன் என்பதையும் மறந்து அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற ஆசை கண்ணம்மாவின் மனதில் எழுகிறது.
 தியாகராஜ பாகவதருக்கு திருமணம் முடிந்து விட்டது, அவரும் மனைவியும் ஒன்றாக இருப்பதை பார்த்த கண்ணம்மாவின் காமத்தீ மேலும் கிளர்ந்து விட்டு எரிகிறது. தியாகராஜ பாகவதருடன் உறவு கொள்ள வேண்டும் என்று எண்ணம் கண்ணம்மாவின் மனதில் கனன்று கொண்டிருக்கிறது. அதனை நிறைவேற்றும் நாள் அவள் எதிர்பாராது ஒரு நாள் கிடைத்தது.
Œக்கரவர்த்திக்கு சிறிய தாயாருக்கும் முன்னால் எம்.கே தியாகராஜபாகவதர் பாடிக் கொண்டிருக்கையில் மந்திரி அழைப்பதாக சேவகன் கூறியதும் சக்கரவர்த்தி எழுந்து செல்கிறார். அந்த சமயத்தில் தன் இச்சைக்கு இணங்கும்படி கண்ணம்பாள் எம்.கே தியாகராஜபாகவதரிடம் கூறுகிறாள். சிறிய தயாரின் உண்மை ரூபம் தெரிந்த எம்.கே தியாகராஜபாகவதர் மறுக்கிறார். இதனால் வெறுப்படைந்த கண்ணம்மா சக்கரவர்த்தியிடம் எம்.கே தியாகராஜபாகவதரை பற்றி தப்பாக கூறுகிறாள்.
கண்ணம்பாவினால் வீண் பழிசுமத்தப்பட்ட தியாகராஜ பாகவதர் கண்கள் பிடுங்கப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்படுகிறார் கர்ப்பவதியான மனைவி குமுதினியையும் துரத்தி விடுகிறார் சக்கரவர்த்தி.
தியாகராஜ பாகவதரும் மனைவி குமுதினியும் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வாழ்கிறார்கள் நாடோடியாகத் திரியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் குழந்தை இறந்து விடுகிறது. மனைவி கண்ணம்பாவின் Œதியால் மகனை துரத்திய உண்மை சக்கரவர்த்திக்கு தெரிய வருகிறது. செய்த பாவத்தால் மனம் உடைந்த கண்ணம்பா விஷம் அருந்தி உயிர் இழக்கிறாள்.
புத்த பிரானின் கருணையால் தியாகராஜ பாகவதர் இழந்த கண்களை பெறுகிறார்.
எம்.கே தியாகராஜ பாகவதர் வீ. நாகையா, கண்ணம்மா, டீ.வி. குமுதினி, என்.எஸ் கிருஷ்ணன், டீ.கே மதுரம் ஆகியோர் நடித்தனர். வீ. நாகையாவின் முதல் படம் இது. கண்ணம்மாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. சிறிய வேடத்தில் எம். ஜி ஆர் நடித்தார். எம்.கே தியாகராஜ பாகவதரின் புகழைப் பரப்பிய படங்களில் இதுவும் ஒன்று. கதை வசனம் இளங்கோவன் இயக்கம் ராஜா சந்திரசேகர்.
 உன்னைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ, பூமியில் மானுட ஜன்மம் எடுத்து ஆகிய பாடல்களின் மூலம் தியாகராஜ பாகவதரின் குரல் இன்றும் ஒலிக்கிறது.
ரமணி
மித்திரன்17/06/12

Tuesday, June 19, 2012

ஜெயலலிதாவின் ச‌வாலைச‌மாளித்த விஜயகாந்த்


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் வேட்பாளர் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தல் திகதி அறிவிக்க முன்னரே வேட்பாளரை அறிவித்து இடைத் தேர்தலுக்கு தயாரானார் ஜெயலலிதா. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கட்டுப்பணம் இழந்ததனால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியினர் தயங்கினர். கருணாநிதி வை.கோ, ராமதாஸ் ஆகியோர் புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். பிரதான எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பையும் மீறி 73.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கருணாநிதி, வை.கோ, டாக்டர்  ராமதாஸ் ஆகியோரின் கட்டளைக்கு அடிபணியாது புதுக்கோட்டை வாக்காளர்கள் தமது தொகுதியில் உறுப்பினரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மூன்று தலைவர்களும் இணைந்தால் ஜெயலலிதாவினால் வெற்றி பெற முடியாது.
இந்நிலையில் இவர்கள் மூவரும் தனித் தனியாக விடுத்த அறிவிப்பை அவர்களது கட்சித் தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவர்களின் கட்டளைக்கு மதிப்பளிக்காது தொண்டர்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு இலட்ச‌த்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றிபெற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கட்டளை நிறைவேற்றப்படவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கு எதிரான மக்கள் உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
தமிழக அமைச்ச‌ர்கள் பெரும் எடுப்பில் புதுக்கோட்டையில் முகாமிட்டு இரவு பகலாகப் பிரசாரம் செய்தும் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியவில்லை. விஜயகாந்தின் வேட்பாளர் தோல்வியடைந்தாலும் ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அமைச்ச‌ர்கள் கதிகலங்கிப்      போயுள்ளனர். புதுக்கோட்டை இடைத்தேர்தல் தோல்வியிலிருந்து விஜயகாந்த் புதிய எழுச்சி பெற்றுள்ளார்.

இந்திய ஜனாதிபதித் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் பெயரை அறிவித்து வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சியாலும்     பாரதீய ஜனதாக் கட்சியாலும் வெற்றிபெற முடியாது. பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பதற்கு கருணாநிதி போன்ற கூட்டணித் தலைவர்கள் தயாராக இருக்கின்றார்கள். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணõமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பனர்ஜியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிரதமர் மன்மோகன்சிங் மூத்த இடதுசாரி தலைவரும் முன்னாள் சபாநாயகருமான சோம்னாத் சட்டர்ஜி ஆகிய மூவரில் ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவும் மம்தா பானர்ஜியும் கூறியுள்ளனர். அப்துல் கலாமுக்கும் சோனியாகாந்திக்கும் எட்டாப் பொருத்தம் என்பது உலகறிந்த ரகசியம். இந்திய ஜனாதிபதிப் பதவிக்கு கௌரவமளித்த அப்துல் கலாமை இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக்க சோனியா காந்தி விரும்பவில்லை. ஆகையினால் உலகமே மதித்த சிறப்பான ஒரு ஜனாதிபதியை இந்தியா இழந்தது. அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கினார் அப்துல் கலாம்.
மன்மோகன் சிங் பிரதமராக இருப்பதை மம்தாவும் முலாயம் சிங்யாதவும் விரும்பவில்லைபோல் தெரிகிறது. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மன்மோகன் ஜனாதிபதியானால் அடுத்த பிரதமர் யார் என்ற சிக்கல் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுவிடும்.  முழு   நம்பிக்கைக்குரிய பாத்திரமான மன்மோகனை ஜனாதிபதியாக்க சோனியா காந்தி விரும்பமாட்டார். மூத்த அரசியல்வாதியான சோம்நாத் சட்டர்ஜிக்கும் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி தலைவரான பிரகாஷ் காரத்துக்கும் இடையேயான மோதலை அடுத்து சோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை வேட்பாளராக்கினால் இடதுசாரிகளின் வாக்குக் கிடைக்காது. மம்தாவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி அடி பணியாது தான் விரும்பிய பிரணாப் முகர்ஜியைஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துகிறது. காங்கிரஸ் வேட்பாளருக்கு பாரதீய ஜனதாக் கட்சி ஆதரவளித்தால் ஜெயலலிதாவின் பிரதமர் கனவும் இந்திய ஜனாதிபதித்தேர்தலால் நொருங்கிப்போய்விடும்
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/06/12

Sunday, June 17, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 6உருகுவே 
பிரேஸில்

பிரேஸில்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்த பிரேஸில்,உருகுவே ஆகியன தகுதி பெற்றுள்ளன.
உதைபந்தாட்ட சாம்ராஜ்யத்தின் பலம் வாய்ந்த பிரேஸில் இதுவரை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை. பிரேஸிலின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கோல்டன் போய் என அழைக்கப்படும் நைமாரின் பங்களிப்புடன் பிரேஸில் இம் முறையும் தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1984 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது பிரேஸில். 1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் சோவியத் யூனியனிடம்தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.  2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெல்ஜியத்தை வென்று வெண்கலம் பெற்றது. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போர்த்துக்கலை வென்று வெண்கலப்பதக்கம் பெற்றது. 1976 ஆம் ஆண்டு மொன்டேரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனிடம் தோல்வியடைந்து நான்காம் இடம் பெற்றது.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட தென் அமெரிக்க சம்பியன் கிண்ணத்தை வென்ற பிரேஸில் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது. தொடர்ந்து 11 ஆவது தடவையாக தென் அமெரிக்க சம்பியனான பிரேஸில் கோல்டன் போய் நைமர் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல் அடித்தார். இத்தொடரில் எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பிரேஸில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
நைமர், மாலோ, ஹென்றி கியூகன்சோ, லூகாஸ், லென்ட்@ரா டமியோ ஆகி@யாரின் துடிப்பான விளையாட்டு பிரேஸிலுக்கு தங்கத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் தடம் பதித்த லென்ட்ரோமியோ கோல்டன் போய் நைமார் ஆகிய இருவரும் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
ஒலிம்பிக் உதைபந்தாட்ட போட்டிகளில் சாதனை படைத்த டுங்கா (1984), டப்பரல், நிக்கோடா கோமஸ், ஜோர் கின் கூ, மகின் கூ, ரொமாரியே (1980), டிடா, ரொபோட்டோ காலோஸ், பெபெஹோ, ரிவால்டோ (1996), ரொனால்டி னோ ( 2000  2006) ஆகியோரைப் போன்று பிரேஸிலின் இன்றைய வீரர்களும் தடம் பதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எகிப்து, பெலாரஸ், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு பி இல் உள்ளது பிரேஸில். உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை 2014 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கையும் நடத்துவதற்கு தயாராய் உள்ளது பிரேஸில்.

உருகுவே
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவிலிருந்து தகுதி பெற்ற இரண்டாவது நாடு உருகுவே. 20 வயதுக்குட்பட்ட தென் அமெரிக்கா சம்பியன் இறுதிப் போட்டியில் விளையாடியமையால் உருகுவே லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்தது உருகுவே.
1924 ஆம் ஆண்டு பாரிஸிலும் 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்ரர்டரமிலும் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றது உருகுவே. பாரிஸில் சுவிட்ஸர்லாந்தையும் ஆம்ஸரர்டாமில் ஆர்ஜென்ரீனாவையும் வீழ்த்தி தங்கம் வென்றது உருகுவே. 1928 ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய உருகுவே 84 வருடங்களின் பின் இப்போது தான் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
கோல் கீப்பரான சல்வடோர் இசாஸோவை மீறி கோல் அடிப்பது சற்று சிரமமானது டியுகோ பொலன்ஸா, லென்ரோகபரேரா ஆகியோர் பின்கள வீரர்களாக விளையாடும்போது அவர்களை மீறிப் பந்து கோல்செல்லாவண்ணம் செயற்படுவார்கள்.
மரிசா வெசினோ, டேவிட் ரெக்செரியா ஆகியோரின் துடிப்பான விளையாட்டு எதிரணி வீரர்களை திக்கு முக்காடச் செய்யும்.
பெட்ரோ பெற்ரோனி, ஹெக்ரர் ஸ்கொரன், ஜோஜாசி நசாஸி, அன்ரஸ் மஸ்ஸெல்லா, ச‌ன்ரோஸ் உர்டிநரன் (1924 28 ஏஞ்சல் ரொமானோ (1924) ஹெக்டிர் கஸ்ரோ, அந்தோனியோ கம்போலோ (1928) ஆகியோரின் சிறப்பான விளையாட்டினால் உருகுவே ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றது.
ரமணி
மெட்ரோநியூஸ்15//06//12

Thursday, June 14, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35


திருமணம் முடித்து ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்பது பிடித்திருந்தால் தொடர்வது இல்லையேல் விவாகரத்துச் செய்வது என்ற விபரீதங்களுடன் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் பிரியமானவளே. தமிழ்க் கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்தக் கதையை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் வெற்றி பெற்றது. தமிழ்க் கலாசாரத்தைக் கொச்சைப்படுத்தும் கதையை நேர்த்தியுடன் திரைக்கதை அமைத்து இயக்கி பாராட்டுப் பெற்றவர் கே. செல்வபாரதி.
திருமணத்துக்கு ஆணின் விருப்பமே தேவை, பெண் என்பவள் பெற்றோர் காட்டும் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து வித்தியாசமான கோணத்தில் திருமண உறவை அணுகியுள்ளார் இயக்குனர் கே.செல்வபாரதி.
 பல நிறுவனங்களின் உரிமையாளர் கோடீஸ்வரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரது ஒரே மகன் விஜய். சிறுவயதில் தாயை இழந்த விஜய் அமெரிக்காவில் படிக்கிறார். படிப்பு முடித்து இந்தியாவுக்குத் திரும்பும் விஜய்க்கு இந்தியக் கலாசாரம் புதுமையாகத் தெரிகிறது. விஜய்க்குத் திருமணத்தை நடத்திவிட்டு தான் ஓய்வெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்த விஜய் தனது நிபந்தனையைக் கூறுகிறார். விஜயின் நிபந்தனை யைக் கேட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதிர்ச்சியடைகிறார். எந்தப் பெண்ணும் சம்மதிக்காத ஒரு நிபந்தனையை கூறுகிறார் விஜய்.
திருமணம் முடிந்து ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்பது, பிடித்திருந்தால் திருமணத்தைத் தொடர்வது பிடிக்கவில்லை என்றால் ஒரு வருடத்தின் பின் விவாகரத்துச் செய்வது.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் சிம்ரனைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். வசதி இல்லாதகுடும்பத்துப் பெண்கனான. சிம்ரனுக்குத் திடீரென அதிர்ஷ்டக்காற்று அடிக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியபடி விஜயைச் சந்திக்கிறார் சிம்ரன். அப்போதுதான் ஒப்பந்தம் பற்றிய விபரம் சிம்ரனுக்கு தெரிய வருகிறது. திருமணம் என்ற பெயரில் நடைபெற இருக்கும் மோசமான நிலையை உணர்ந்து பெண் சிங்கமாக கொதித்தெழுகிறார் சிம்ரன். விஜயிடமும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடமும் தனது ஆத்திரம் அத்தனையையும் கொட்டித் தீர்க்கிறார் சிம்ரன்.
இருதய சத்திர சிகிச்சைக்காக வீட்டிலே தங்கி உள்ள மூத்த சகோதரி. சத்திரசிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ள மூத்த சகோதரியின் கணவர். காதலித்தவனிடம் தன்னை இழந்த தங்கை. இந்தத் திருமணம் நடைபெற வேண்டுமானால் நகை, வீடு, கார் என்று அளவுக்கதிகமாக வரதட்சணை கேட்கும் காதலனின் பெற்றோர். படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் தம்பி. கணவன் இல்லாது மூன்று பெண்களையும் ஒரு ஆண் மகனைப் பாதுகாக்கும் தாய். வீட்டுச் சூழ்நிலை சிம்ரனின் மனதை மாற்றுகிறது. ஒரு வருட ஒப்பந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்.
ஒரு வருடத்தில் விஜய் மனம் மாறி விடலாம் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், சிம்ரனும் எதிர்பார்க்கிறார்கள். கழுத்தில் தாலி ஏற முன்னரே விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் சிம்ரன். சிம்ரனின் குடும்பக் கஷ்டம் படிப்படியாக மறைகிறது.

விஜயை மிகவும் அக்கறையுடன் கவனிக்கிறார்கள் சிம்ரன் அமெரிக்கக் கலாசாரத்தில் வளர்ந்த விஜய்க்கு இந்திய பண்பாடு கொஞ்சமும் தெரியவில்லை. சிம்ரனை மனைவியாக ஏற்றுக்கொள்ள விஜயின் மனம் துணியவில்லை.
அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக லொறி விபத்தில் விஜயைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக விஜய் உயிர் பிழைக்கிறார். விஜயின் உயிர் பிழைத்து மீண்டும் ஆரோக்கியமடைவதற்காக சிம்ரன் ஆலயங்களில் நேர்த்தி வைக்கிறார். இரவு பகலாக விஜயுடன் இருந்து வேண்டிய உதவிகளை செய்கிறார் சிம்ரன்.

விஜய் சிம்ரன் திருமணம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகிறது. சிம்ரனை விட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் விஜயிடம் கெஞ்சுகிறார். ஒப்பந்தம் முடிந்ததால் போய் விட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். விஜயின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்த சிம்ரன் தன் வீட்டுக்குப் போகிறார். சிம்ரனின் நிலை அறிந்து அவரது குடும்பத்தவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். விஜயைப் பிரிந்து வந்த பின் வைத்திய பரிசோதனையில் சிம்ரன் கர்ப்பம் என்ற உண்மை தெரிய வருகிறது.

வீட்டில் இருக்க விரும்பாத சிம்ரன் வேறு ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். காலம் தாழ்த்தி சிம்ரனின் தியாகத்தைத் தெரிந்து கொள்கிறார் விஜய். ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு தன்னுடன் வீட்டுக்கு வருமாறு சிம்ரனை அழைக்கிறார் விஜய்.
விஜயினால் பாதிக்கப்பட்ட சிம்ரன் மறுக்கிறார். சிம்ரன் வேலை செய்யும் அலுவலகம் நஷ்டத்தில் இயங்குவதால் விøரவில் மூடு விழா நடக்கும் என்ற தகவல் வெளியானதும் அந்த அலுவலகத்தை விலைக்கு வாங்குகிறார் விஜய்.

சிம்ரனைக் கவர்வதற்கு விஜய் செய்யும் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. விஜய் மீது இரக்கம் காட்ட மறுக்கிறார் சிம்ரன். தன் தவறை உணர்ந்து சிம்ரனுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சிம்ரனால் ஏற்படும் அவமானங்களைத் தாங்குகிறார் விஜய்.

விவேக், தாமு, சிம்ரனின் தம்பி ஆகியோர் விஜயையும் சிம்ரனையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இறுதியில் விஜயை மன்னித்து ஒன்றிணைகிறார் சிம்ரன்.

விஜய், சிம்ரன் , எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக், தாமு ஆகியோர் நடித்தனர். இசை எஸ்.ஏ.ராஜ்குமார். வெல்கம் போய்ஸ், வெல்கம் கேள்ஸ், என்னவோ என்னவோ என் வசம் நானில்லை, கல்யாணம் என்பது பூர்வ பந்தம் அழகே அழகே உன்னை மீண்டும் மீண்டும் ஆகிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.

விஜய், சிம்ரன் ஆகிய இருவரும் போட்டி போட்டு நடித்தனர். முன் பாதியில் விஜயின் கை ஓங்கியிருந்தாலும் பிற்பகுதியில் சிம்ரன் கைதட்டல் பெறுகிறார். விஜயை அவமானப்படுத்தும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் சிம்ரன். விஜய்க்கு சமமாக சிம்ரனுக்கும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரமணி
மித்திரன்10/06/12

Tuesday, June 12, 2012

ஜெயலலிதா விஜயகாந்த் மோதல் வேடிக்கை பார்க்கும் கருணாநிதிபுதுக்கோட்டை இடைத் தேர்தலினால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வருக்கு தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் நேரடிப் போட்டியாக மாறியுள்ள இந்த இடைத் தேர்தலைத் தமிழகத்தின் ஏனைய கட்சிகள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் பதவியிலிருந்து தன்னை இறக்குவதற்குக் கைகோர்த்த ஜெயலலிதாவும் விஜயகாந்தும் முட்டி மோதுவதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார் கருணாநிதி.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற ஜெயலலிதாவும் விஜயகாந்தும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கருணாநிதியின் அரசியல் அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்தார்கள். அரசியலில் பொது எதிரியான கருணாநிதியை வீழ்த்துவதற்காக ஒரே ஒரு கொள்கையிலேயே இருவரும் கை கோர்த்தார்கள். தமிழக முதல்வர் பதவியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் ஜெயலலிதா. இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் நாளைய முதல்வர் என்ற கனவுடன் இருக்கும் விஜயகாந்துக்கு அரசியல் சதுரங்கம் இன்னும் சரியாகப் பிடிபடவில்லை.
விஜயகாந்தையும் அவர் கட்சி உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் காரியங்களை வெகு கச்சிதமாக செய்து வருகிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை நம்பி ஏமாந்த உண்மையைக் காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்டார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஓரம் கட்டி இரண்டாவது இடைத் தைப் பிடித்த விஜயகாந்த் இப்போ நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த இடத்தையே பிடித்தது. விஜயகாந்தின் இரண்டாவது இடம் பறிபோய் விட்டது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கட்டுப்பணத்தை இழக்க வேண்டும் என்ற மேலிடத்து உத்தரவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களும் தொண்டர்களும் பிரசாரம் செய்கின்றனர். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற முடிவுடன் வேட்பாளரை நிறுத்தி இருக்கும் விஜயகாந்த் கௌரவமான தோல்வியையே எதிர்பார்க்கிறார். சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் ஏற்பட்ட அவமானத்துக்கு பரிகாரம் காண வேண்டும் என்ற நோக்கம் விஜயகாந்திடம் உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க கருணாநிதி விரும்பவில்லை. தமிழக சட்ட சபைத் தேர்தலில் அடைந்த படுதோல்வியிலிருந்து மீள்வதற்கு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் கருணாநிதி. அதற்கான ஒரு களமாகவே புதுக்கோட்டை இடைத் தேர்தலைப் பயன்படுத்துகிறார் கருணாநிதி. ஜெயலலிதாவை விட்டு விஜயகாந்த் வெளியேற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பிக் கூட்டணி வைத்து ஏமாந்து விட்டோம் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மீதான வெறுப்பு பிரேமலதாவின் வாயிலாக வெளி வந்துள்ளது. புதுக்கோட்டை யில் பிரசாரம் செய்த பிரேமலதா கருணாநிதியின் பிறந்த நாளன்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறித் தனது பிரசாரத்தினை ஆரம்பித்தார். கருணாநிதிக்கு விஜயகாந்த் விடுத்த சாதக சமிக்ஞையாகவே இது கருதப்படுகிறது.
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லா விட்டாலும் மத்திய அரசில் பங்காளியாக இருந்தால் மாநிலத்தில் செல்வாக்குச் செலுத்தலாம். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்துள்ளது. மத்திய அரசில் திராவிட முன்னேற்றகக் கழகம் பங்காளி இருப்பதனால் திராவிட முன் னேற்றக் கழக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வாக்குடன் உள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் திராவிட முன்னேற்றக்கழகம் முன்னெடுக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைவடைந்துள்ளது. அண்மையில் வட மாநில சட்ட சபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியை கைவிடும் எண்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பாரதீய ஜனதாக் கட்சி கூறிய சில கருத்துகளைத் திராவிட முன்னேற்றம் கழகம் ஆதரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் விடும் மறைமுக எச்சரிக்கையாக இது உள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததற்கு ஸ்பெக்ரம் ஊழலே மிக முக்கிய காரணம். ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த போது காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவில்லை என்ற கோபம் கருணாநிதியிடம் உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை இழந்த நிலையில் மத்திய அரசில் இருந்தும் வெளியேறினால் நிலைமை விபரீதமாகி விடும் என்பதனால் பொறுமையாக உள்ளார் கருணாநிதி.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 10/06/12

Sunday, June 10, 2012

திரைக்குவராதசங்கதி39நடிகர் திலகம்சிவாஜி கணேசன்> கலைஞர் கருணாநிதி>கண்ணாம்பா> டி.ஆர். ராஜகுமாரி ஆகியோருக்கு பெரும் பெயரைப் பெற்றுக்கொடுத்தபடம் மனோகரா. மனோகராவில் டி.ஆர். ராஜகுமாரியின் அசட்டு மகனாக நடித்துஅனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி பாராட்டுப் பெற்றவர் காக்கா ராதா கிருஷ்ணன்.
எம்.கே. தியாகராஜாவின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் சிந்தாமணி. சிந்தாமணி படம் வெளியான போதுராதா கிருஷ்ணனுக்கு எட்டு வயது. எம்.கே.தியாகராக பாகவதர் பாடிய பாடல்களைஅட்சரம் பிசகாமல் பாடினார் றுவனானராதாகிருஷ்ணன்.ராதா கிருஷ்ணன் பாடியதைக் கேட்டவர்கள் அவன் சினிமாவில்சேர்ந்தால் புகழ்பெறுவான் என்று ராதாகிருஷ்ணனின் தாயிடம் கூறினார்கள். தன்மகனை நடிகனாகப் பார்க்க வேண்டும்என்ற ஆசை ராதா கிருஷ்ணனின் தாயாரின் மனதிலும் எழுந்தது.
மகனையும் அழைத்துக் கொண்டு தியாகராஜா பாகவதரின் வீட்டுக்குச் சென்றார்ராதா கிருஷ்ணனின் தாயார். என் பையன்நன்றாகப் பாடுவான். அவன் சினிமாவில்நடிக்க விரும்புகிறான். ஒரு சந்தர்ப்பம்தாருங்கள் என்று ராதாகிருஷ்ணனின் தாயார் கேட்டார்.
சினிமாவில் நடிக்க வேண்டுமானால் நாடகத்தில் நடித்த அனுபவம் வேண்டும். நாடகஅனுபவம் இல்லாதவர்கள் சினிமாவில்நடிக்க முடியாது எனதியாகராஜபாகவதர்கூறினார்.மகனின்சினிமாக் கனவுஇலகுவானது அல்லஎன்பதை தாயார்புரிந்துகொண்டார். அவர் அதற்காக சோர்ந்து போய்விடவில்லை. நாடகக்குழுவில் மகனைச் சேர்க்க வேண்டும் என்றுவிரும்பினார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை நடத்திய மதுரை ஸ்ரீபாலகான சபாஎன்ற நாடகக் கம்பனியில் மகனைச் சேர்க்கவேண்டும் என்று தாயார் விரும்பினார்.
மகன் ராதாகிருஷ்ணனுடன் அந்த நாடகக்கொம்பனிக்குச் சென்றார். அதனை நடத்தியவரான யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளைதான்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நாடகஆசிரியர்ராதாகிருஷ்ணனைப் பார்த்து நாடக மனேஜர் ஒரு பாட்டுப் பாடு என்றார். சற்றும் தயங்காமல் சிறுவனான ராதா கிருஷ்ணன் சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடிய ஞானக்கண் இருக்கும் போதிலே என்று பாடினான்.
கூடியிருந்த அனைவரும் வாய்விட்டுச்சிரித்தனர்.ஒன்றரைக் கண்ணனான இவனுக்குஞானக் கண் வேண்டுமா என்றுஅனைவரும் கேலியாகச் சிரித்ததைப்பொருட்படுத்தாது ராதா கிருஷ்ணன்தொடர்ந்து பாடினான். அவனின் சாரீரத்தைகேட்ட அனைவரும் சிறிது நேரத்தில்சிரிப்பை அடக்கினார்கள். குரல்வளம் நன்றாக இருந்ததனால் ராதாகிருஷ்ணனுக்கு நடிப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நடிகர் திலகத்தின் வீடும் ராதாகிருஷ்ணனின்வீடும் அருகருகே இருந்ததனால்நாடகக் கொம்பனியில் இணைந்து அவர்களது நட்பு மேலும் இறுக்கமாகியது.1940 ஆம் ஆண்டு கலைவாணர்என்.எஸ். கிருஷ்ணன் சந்திரஹரி என்றபடத்தைத் தயாரித்தார். அரிச்சந்திரனுக்கு நேர்மாறானவன் சந்திரஹரிஅவன் உண்மை சொல்லவே மாட்டான்.அப்படத்தில் நடிப்பதற்காக சிறுவன் ஒருவனை என்.எஸ்.கிருஷ்ணன் தேடினார்அப்போது ராதா கிருஷ்ணனைப்பற்றி கூறினார்கள். என்.எஸ். கிருஷ்ணனுக்குராதா கிருஷ்ணனின் நடிப்புபிடித்ததால் சந்திரஹரி படத்தில் சிறுவனாகநடித்தார்.
சந்திரஹரி ஒரு மணி நேரம் மட்டுமேஓடக்கூடிய படம். ஆகையினால்இழந்த காதல் என்னும் நாடகத்தையும்படமாக்கி இரண்டு கதைகளையும்இணைத்து சந்திரஹரி இணைந்த காதல்எனும் தலைப்பில் வெளியிட்டார்என்.எஸ். கிருஷ்ணன்.தியாகராஜ பாகவதரின் "அசோக்குமார்'> பி.யு. சின்னப்பாவின் "ஆர்யமாலா'> எம்.எஸ். சுப்புலட்சுமியின் "சாவித்திரி' ஆகிய படங்களுடன் வெளியானசந்திரஹரி இழந்த காதல் வெற்றிபெற்றது.
சிங்காரி என்ற படத்தில் ராதா கிருஷ்ணன்பாடிய ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்தஉலகில் ஏது கலாட்டா. அரிசிப் பஞ்சமேவராட்டா நம்ம உயிரை வாங்குமே பராட்டாஎன்ற பாடல் மூலை முடுக்கெங்கும் ஒலித்தது.மங்கையர்க்கரசி என்ற படமே அவருக்குகாக்கா ராதா கிருஷ்ணன் என்ற பட்டத்தைவழங்கியது. அப்படத்தில் நடித்தார் ராதாகிருஷ்ணன். உங்கப்பா அரசாங்கத்தில்வேலை பாத்தவர்டா> காக்கா கீக்கா பிடிச்சுஅரசாங்க வேலை வாங்கு மகனே என மகனுக்குமதுரம் கூறுவார்.
தாயின் சொல்லை வேதவாக்காகக் கருதியராதா கிருஷ்ணன் மரத்தில் ஏறி காகம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வந்து காக்கா பிடிச்சிட்டேன்அரசாங்க வேலை கிடைச்சிடும்என்று சத்தம் போட்டார். அன்றிலிருந்து காக்காராதா கிருஷ்ணன் என்ற பெயர் அவருக்கு ஒட்டிக்கொண்டது.
ரமணி
மித்திரன்10.12.2006

Friday, June 8, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 5

மெக்ஸிக்கோ 

மெக்ஸிக்கோ
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு வட அமெரிக்கா மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிக்கோ, ஹொண்டூரால் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
ஆம்ஸ்ரடாமில் 1928 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மெக்ஸிக்கோ உதைபந்தாட்ட அணி முதன் முதலில் கலந்து கொண்டது. 1968 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பெற்றது மெக்ஸிக்கோ. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியது.
23 வயதுக்குட்பட்ட இணிணஞிச்ஞிச்ஞூ சம்பியனான மெக்ஸிகோ விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றது. கனடாவுடனான அரையிறுதிப் போட்டியில் 3  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்ஸிக்கோ லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2  1 என்ற கோல் கணக்கில் ஹொன்டூராவை வென்று சம்பியனாகி சாதனை படைத்தது. ஹொண்டூராஸ் ஐந்து போட்டிகளிலும் 26 கோல்கள் அடித்தது. எதிரணிகள் மூன்று கோல்களை மாத்திரம் அடித்தன.
மெக்ஸிக்கோவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட (பீஃபா) சம்பியன் 2011 ஆம் ஆண்டு கொலம்பியாவில் பீஃபா நடத்திய வெற்றி 20 வயதுக்குட்பட்ட (பீஃபா) சம்பியன் ஆகியன மெக்ஸிக்கோவுக்கு கூடுதல் பலமாக உள்ளன.
டியோகோ ரியாஸ், ஹெக்டர் ஹெரேரா, மார்கோபபியன், அலன்புலிடோ, எரிக் ரொரிஸ் ஆகியோரின் வேகத்துக்கு எதிரணி வீரர்கள் தடை போடுவது சிரமமானது. மார்கோபடியன், அலன் புலிடோ ஆகியோர் தலா ஐந்து கோல்கள் அடித்துள்ளனர். வடகொரியா, ஹோகென், சுவிட்ஸர்லாந்து ஆகியவற்றுடன் குழு "பீ'யில் உள்ளது மெக்ஸிக்கோ.
ஹொண்டூராஸ்  

ஹொண்டூராஸ்
சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹொண்டூராஸ் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும் ஹொண்டூராஸ் அணி விளையாடியது. இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஹொண்டூராஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது.
சிட்னி ஒலிம்பிக்கில் டேவிட் சுஹாசோ அதிகபட்சமாக நான்கு கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
23 வயதுக்குட்பட்ட இணிணஞிச்ஞிச்ஞூ சம்பியன் போட்டியில் பனாமாவுடனான போட்டியில் 3  1 என்ற கோல் கணக்கிலும், டிரினிலாண்ட் அன்ட்டுபாக்கோ உடனான போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கிலும் ஹொண்டூராஸ் வெற்றி பெற்றது.
மெக்ஸிக்கோவுடனான போட்டியில் 3  0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. எல்சல்வடோருடனான அரையிறுதிப் போட்டியில் 3  2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது ஹொண்டூராஸ். மெக்ஸிக்கோவுடனான இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2  1 என்ற கோல் கணக்கில் ஹொண்டூராஸ் தோல்வியடைந்தது.
ஜொனி லெவெரொன், கெர்சன் ரொடாஸ், ரொஜத்ரோஜாஸ், எடி ஹெனன்ட்ஸ் ஆகியோர் ஹொண்டூராஸின் பலம் மிக்க வீரர்களாவர். ரொஜர் ரோஜாஸ் எடி ஹெனன்ட்ஸ் ஆகியோர் தலா மூன்று கோல் அடித்துள்ளனர்.
 ரமணி
மெட்ரோநியூஸ்29/05/12  

Thursday, June 7, 2012

திரைக்குவராதசங்கதி38


சூப்பர் ஸ்டார் யாரென்று கேட்டால் எந்தக்குழந்தையும் பதில் சொல்லிவிடும்.அதேபோல் சூப்பர்ஸ்டாரினியாரென்றால்விஜயசாந்தி என்று அனைவரும்கூறுவார்கள். இந்தியாவில் பேசும் படங்கள்தயாரான புதிதில் ஹிந்தியில் நாடியாவும்,தமிழில் கே.டி.ருக்குமணியும் ஆண்களுக்குஇணையாக சண்டைக்காட்சிகளில் தூள்கிளப்பினர்.
ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனாபோன்ற படங்களின் மூலம்சண்டைக்காட்சிகளில் நடித்து பாராட்டுப்பெற்றவர் ஜோதிலட்சுமி> அவருக்குப்பின்னர் அடி தடிக்காட்சிகளில் தூள் கிளப்பிலேடி ஜேம்ஸ் பொன்ட்> லேடிஅமிதாப்பச்சன் என்று பெயரெடுத்தவர்விஜயசாந்தி. இவர் அறிமுகமானதுபாரதிராஜா மூலம் தமிழ்ப் படத்தில் தான்என்றாலும் இவர் புகழ்தெலுங்குப்படங்களின் மூலமே வெளிவந்தது.
விஜயசாந்தியின் சித்தி விஜயலலிதாதெலுங்கிலும்> தமிழிலும் நடித்தார்.விஜயசாந்தி ஆந்திராவில் பிறந்தார்.எனினும் சென்னையில் வளர்ந்தார்.சிறுவயதில் படப்பிடிப்பைப் பார்ப்பதற்காகசித்தியுடன் ஸ்டூடியோவுக்குச் செல்வார்விஜயசாந்தி. சினிமா பற்றிய பிரமிப்புஅவரிடம் இருந்தது. ஆனாலும் நடிகையாகவேண்டும்என்றஎண்ணம்அவர் மனதில்இருக்கவில்லை.
மருத்துவத்துறையில் படித்துடாக்டராக வேண்டும் என் பதுஅவரது கனவாக இருந்தது.பாரதிராஜாவின் இயக்கத்தில்க‌ல்லுக்குள்ஈரம் என்ற படம் தயாராகிக்கொண்டிருந்தது. கதாநாயகன் பாரதிராஜா>கதாநாயகியாக நடிக்க அருணா ஒப்பந்தம்செய்யப்பட்டார். அருணாவின் தோழியாகபிரதான பாத்திரத்தில் நடிக்க புதுமுகம்ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.ஸ்ரூடியோ ஒன்றில் விஜயசாந்தியின்படத்தைப் பார்த்த பட அதிபர் விஜயன்அதைப்பற்றி பாரதிராஜாவிடம் கூறினார்.படத்தைப் பார்த்த பாரதிராஜா அந்தப்பெண்ணைத் தேடினார்.விஜயசாந்தியின் வீட்டைக் கண்டு பிடித்துபாரதிராஜாவின் விருப்பத்தைக்கூறினார்கள். அப்போது விஜயசாந்திஎட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
சினிமாவில் நடிக்கும் ஆசை இல்லாதவிஜயசாந்தியின் மனதில் சினிமா ஆசைவளரத் தொடங் கியது.பாரதிராஜாவின் படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காதா என பலரும் ஏங்கிக்கொண் டிருக்கையில் பாரதிராஜாஅனுப்பியவரே வீடு தேடி வந்ததால்விஜயசாந்தி சம்மதம் தெரிவித்தார்.கல்லுக்கு ஈரம் வெற்றிப்படமல்ல; ஆனால்.சிறந்த படமென்று பலராலும் பாராட்டப் பட்டபடம். தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தெலுங்குப்படங்களிலும் விஜயசாந்தி நடிக்கத் தொடங்கினார். கில்லாடி கிருஷ்ணா என்ற படத்தில்கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்படம்மிகப் பெரிய வெற்றிபெற்றதால் விஜயசாந்தியின் மதிப்புஉயர்ந்தது.
1988 ஆம் ஆண்டு வெளியானபிரதிகடனா (எதிர்த்தாக்குதல்) என்றபுரட்சிப்படம் விஜய சாந்தியை உச்சத்தில்கொண்டு போய் நிறுத் தியது. டி. கிருஷ்ணாஇயக்கிய அப்படத்தில் விஜயசாந்தி கதாநாயகியாக நடித்தார். சரண்ராஜ்இப்படத்தின் மூலம் வில்லனாகஅறிமுகமானார்.
பிரதிகடனா என்ற படம் பூ ஒன்று புயலானது என தமிழில் டப் செய்துவெளியிடப் பட்டது. வசனங்ளைஆருர்தாஸ் எழுதினார்.வாலி பாடல்கள் எழுதினார். பூ ஒன்றுபுயலானது என்ற படம் தமிழில் பெருவெற்றி பெற்றது. மொழிமாற்றம்செய்யப்பட்ட அந்தப் படம் நேரடித் தமிழ்ப்படங்களுடன் போட்டிபோட்டுசென்னையில் 100 நாட்களுக்கு மேல்ஓடியது.
விஜயசாந்திக்காகவே அடிதடி சண்டைக்காட்சிகள் உள்ள கதைகள் எழுதப்பட்டன.சண்டைப்படங்களில் துணிச்சலுடன் நடித்துபாராட்டுப் பெற்றார். பெண் பொலிஸ்அதிகாரியான கிரான் பேடியின்வாழ்க்கையைத் தழுவி வைஜந்தி ஐ.பி.எஸ்,பூலான் தேவியின் வாழ்வை மையமாக்கிஅடிமைப் பெண் ஆகிய படங்களில்விஜயசாந்தி நடித்தார். இரண்டும்வெற்றிப்படங்கள் வரிசையில் சேர்ந்தன.முதலமைச்சர் ஜெயந்தி, கவுண்டர்பெண்ணா, கொக்கா,, மறவன் மகள்,பொலிஸ் லாக்கப், லேடி பாஸ், ஸ்ரீட்பைட்டர், ஆட்டோராணி ஆகியனவிஜயசாந்தியின் நடிப்பின் மூலம்வெற்றிபெற்ற படங்கள்.பொலிஸ் லாக்கப் எனும் படத்தில் துடுக்குப்பெண்ணாகவும் அப்பாவிப் பெண்ணாகவும்மாறுபட்ட இரு வேடங்களில் நடித்தார்.
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டபடங்களுக்கு விஜயசாந்திக்காக நடிகைசரிதா குரல் கொடுத்தார்.மிக நீண்ட நாட்களின் பின்னர் மன்னன்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.விஜயசாந்தி 175 படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு 12,, தமிழ் 39, ஹிந்தி 6,கன்னடம்5 , மலையாளம் 4 சிறந்தநடிப்புக்கான தேசிய விருதை ஒரு முறைபெற்றுள்ள விஜயசாந்தி ஆந்திரமாநிலஅரசின் தேசிய விருதை நான்கு முறைபெற்றார்
ரமணி
மித்திரன் 03.12.2006
97

Tuesday, June 5, 2012

மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க.


இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பங்காளியான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், பஸ் கட்டணம் என்பன உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எரிபொருளின் விலை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது. அதனால் தான் இந்த விலை உயர்வு என்று மத்திய அரசு காரணம் கூறினாலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எரிபொருள் விலை அதிகம் என்று ஸ்டாலின் ஆதாரங்களுடன் புட்டு வைக்கிறõர். மத்திய அரசுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு அதற்கு தகுந்த காரணமாக அமைந்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எரிபொருள் விலை உயர்வால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மத்திய அரசின் ஆலோசனையின்படி வற் வரியை நீக்கியதால் எரிபொருள் விலை உயர்வினால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எதுவும் இல்லை.
எரிபொருளுக்கான வற் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசு மாநில அரசைக் கேட்டது. மத்திய அரசில் குற்றங் காண சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்ற மாயையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மக்களின் மீதான சுமையைக் குறைப்பதற்குத் தமிழக அரசு விரும்பினால் வற் வரியைக் குறைத்து எரிபொருளின் விலையைச் சீராக்கலாம். அப்படிச் செய்தால் மத்திய அரசின் மீது தமிழக மக்கள் குற்றம் சுமத்தமாட்டார்கள் என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் ஜெயலலிதாவுக்கு எரிபொருள் விலை உயர்வு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது. மக்கள் மீது மத்திய அரசு விதித்த பெரும் சுமையாக எரிபொருள் விøல உயர்வு புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பிரதான பாத்திரத்தை வகிக்கப் போகிறது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாக முன்னரே வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியை ஆரம்பித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தின் அரச பலத்தின் முன்னால் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளன. படுதோல்வியானாலும் பரவாயில்லை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஒரே ஒரு குறிக்கோள் என்ற எண்ணத்துடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலைச் சந்திக்கிறார் விஜயகாந்த். தமிழக அரச‌யந்திரம் அனைத்தும் புதுக்கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இடைத் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அதன் விருப்பத்துக்கு மதிப்பளிக்காது தனது கட்சி வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் வாதத்தினால் பொது வேட்பாளர் என்ற நிலை இல்லாமல் போய்விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் கண் அசைத்தால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் சூடு பிடிக்கும். விஜயகாந்தின் வேட்பாளருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளித்தால் இடைத் தேர்தல் பரபரப்பாக இருக்கும். வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட தேர்தலாகவே புதுக்கோட்டை இடைத் தேர்தல் நடைபெறப் போகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவின் பெயரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதான கட்சிகள் எவையும் சங்மாவை ஆதரிப்பதாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சங்மா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு இந்தியத் தேசியக் கட்சிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவதாகச் செய்தி கசிந்துள்ளது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வல்லமை உடைய காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் தடுமாறிக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் டில்லி அரசியலில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி விரும்பினாலும் அவரை ஜனாதிபதியாக்குவதற்கு காங்கிரஸ்கட்சி ஒத்துக் கொள்ளாது. ஆகையினால் கருணாநிதிக்கு எதிரானவர்களினால் பரப்பப்பட்ட வதந்தியாகவே இது உள்ளது.
இந்திய மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கருணாநிதிக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மத்திய அரசு தவறு விடும்போது தட்டிக் கேட்பேன். மத்திய அரசில் இருந்து இப்போதைக்கு வெளியேறமாட்டேன் என்ற உத்தரவாதத்துடனேயே கருணõநிதி போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டத்தின் காரணமாக மத்திய அரசு இறங்கி வரப் போவதில்லை. மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள எரிபொருள் விலை உயர்வு புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுக்கப்போகிறது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு03/06/12

Friday, June 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 34கர்நாடக இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜே.கே.பி. என்ற இசை விற்பன்னரிடம் சங்கீதம், பயில வந்த இளம் பெண் அவரின் சாரீரத்தில் மயங்கி தன் சரீரத்தைக் கொடுத்து ஒரு குழந்தைக்குத்தாயாகும்ஒருவரிக்கதையுடன்வெளியானபடம்1985ஆம்ஆண்டுவெளியானசிந்துபைரவி.இசையுடன்சம்பந்தப்பட்டவலுவானகதைஅமைப்பும்இசைஞானியின்இசைவேள்வியும்திருமணமாகாதபெண்ணுக்குப்பிறந்தவள்திருமணமாகமலேஒருகுழந்தைக்குத்தாயானவிபரீதத்தைமறைத்துவிட்டன
    கண்டிப்பு,ஒழுக்கம்,நேர்மைஎன்பனவற்றுக்குமுதலிடமகொடுப்பவர் பிரபல கர்நாடக இசை ஜாம்பவான் சிவகுமார்.மதுஅருந்திவிட்டுமேடையில்இருக்கும்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷைமேடையிலிருந்துஇறக்கிவிட்டுஅதற்கானகாரணத்தைசபையிடம்கூறிமன்னிப்புக்கேட்டுவிட்டுமகாகபதியுடன்கச்சேரியைஆரம்பிக்கிறார்சிவகுமார்.மிருதங்கம்இல்லாதஇசைக்கச்சேரிகளைகட்டுகிறது.இயக்குநரின்காட்சிஅமைப்புசிவகுமாரின்நடிப்பு,டாக்டர்கே.ஜே.ஜேசுதாஸின்குரல்அத்தனையும்காட்சியைமெருகூட்டுகின்றன.இளையராஜாவின்இசைஒருபடிமேலேபோய்காதில்ரீங்காரமிடுகிறது.இசைமேதைசிவகுமாரின்இசைக்குஉலகெங்கும்பெருமதிப்பு.அவரதுஇசைக்குமயங்கிரசிகர்களானவர்கள்ப‌லர்.சிவகுமாரின்இசைக்கச்சேரிநடக்கும்மண்டபங்கள்கட்டுக்கடங்காதகூட்டத்தால்நிரம்பிவழியும்.தனதுஇசைஅனுபவங்களைபலருடன்பகிர்ந்துமகிழும்சிவகுமார்வீட்டிலேஇசையைப்பறறி கதைக்க முடியாத நிலை அவரின்மனைவிசுலக்க்ஷனாவுக்குஇசைஞானம்சிறிதளவுகூடஇல்லை.இசைஎன்றால்கிலோஎன்னவிலைஎனக்கேட்கும்அப்பாவிசுலக்க்ஷனாவுக்குகுழந்தைஇல்லை என்ற கவலை உள்ளது. தனது மனைவிக்கு இசைஅறிவுஇல்லைஎன்றகவலையில்தினமும்கூனிக்குறுகுகிறார்சிவகுமார்.
            சிவகுமாரின்கர்நாடகஇசையில்ரசிகர்கள்மயங்கிஇருக்கும்வேளையில்தமிழ்இசைக்குநீங்கள்ஏன்முக்கியத்துவம்கொடுப்பதில்லைஎன்றகுரல்ஒன்றுஆக்ரோஷமாகஎழுகிறது.சிவகுமாரின்இசைக்குஅடிமையானவர்கள் தமிழ் இசை ஏன் பாடுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய சுஹாஷினியைஅடக்கமுனைகிறார்.சகலரையும்அமைதிப்படுத்தியசிவகுமார்சுஹாசினியைமேடைக்குஅழைத்து தமிழிசையைப்பற்றிகேள்விகேட்டுவிட்டுஅவமானப்படுத்துகிறார்.தமிழிசையின்பெருமையைவிபரிக்கிறார்.சுஹாசினிஅப்போதுதமிழ்பாடல்ஒன்றைப்பாடிரசிகர்களின்ஆதரவைப்பெறும்படிசவாலவிடுக்கிறார்சிவகுமார்.பாடறியேன்படிப்பறியேன்பள்ளிக்கூடம்தான்அறியேன்ஏடறியேன்எழுத்தறியேன்எழுத்துவகைநான்அறியேன்என்றுபாடியவாறுகைவிரலைசுண்டிதாளம்போடுகிறார்சுஹாசினி.சுஹாசினியின்இசையில்இலயித்தசிவகுமாரின்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷ்மிருதங்கம்வாசிக்கதயாராகுகிறார்.தன்னைசுதாகரித்தடில்லிகணேஷ்கையைகட்டிககொண்டு இருக்கிறார். சிவகுமாரின்கண்அசைவின்பின்மிருதங்கம்இசைக்கிறார்டெல்லிகணேஷ்.சிவகுமாரின்கையசைவின்பின்னர்வயலின்கலைஞரும்சுஹாசினியின்பாடலுக்குபின்னணிஇசை வழங்குகிறார். தமிழ் பாடலை பாடி விட்டு சிவகுமார் பாடிய கர்நாடக இசைப் பாடலைபாடிமுடிக்கிறார்சுஹாசினி.சுஹாசினியின்தமிழ்இசைபாடலில்மயங்கியரசிகர்கள்கைதட்டிஆரவாரம்செய்கிறார்கள்.சிவகுமார் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி வேண்டா வெறுப்பாகக் கை தட்டுகிறார்.
       சிவகுமாரின்கர்நாடகஇசையில்சுஹாசினியும்சுஹாசினியின்தமிழ்இசையில்சிவகுமாரும்மயங்குகிறார்.சிவகுமாரின்நண்பர்நீதிபதியின்வீட்டில்சுஹாசினியைபாடும்படிகேட்கிறார்கள்.அப்போது நான் ஒரு சிந்து என்ற பாடலை பாடுகின்றார். அப்பாடலின் வரிகள் அனைத்தும் சுஹாசினியின் வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. தாயும் மகளும்ஒருவரைஒருவர்உறவுகூறமுடியாத நிலையில் வாழ்வதை வைரமுத்து உணர்ச்சிகரமான வரிகளில் வடித்துள்ளார்.
இசையைப்பற்றி ஆய்வு செய்வதற்காக முனைந்த சிவகுமாரும் சுஹாசினியும் இசை பற்றியே நாள் முழுவதும் கதைக்கிறார்கள். சிவகுமாரின் மனைவி சுஹாசினிக்கு கணவன் மீதும் சுஹாசினி மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரும் மறுக்கின்றனர். விதி இருவரையும் சேர்க்கிறது. எதுவெல்லாம் செய்யக் கூடாது என்று சிவகுமார் கூறினாரோ அவையெல்லாவற்றையும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சிவகுமாரின் இசையைப் பணத்தால் வாங்க ஒருவர் முயற்சித்த போது இசை மீது கொண்ட விசுவாசத்தால் அவனை விரட்டியடிக்கிறார். மதுவுக்கு அடிமையான சிவகுமார் மது போத்தலுக்கா தன்னால் விரட்டப்பட்டவனிடம் சரணடைந்து தண்ணித்தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான் என்று பாடுகின்றார்.

சிவகுமார் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் அவரின் கெட்ட நடத்தையால் அவரை விட்டு விலகுகின்றனர். இசை உலகில் அவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகிறது. இசை உலகில் அவரது கெõடி மீண்டும் பறக்க வேண்டும் என்று சுஹாசினியும் சுலக்சனாவும் விரும்புகின்றனர். சிவகுமாருடன் ஏற்பட்ட உறவால் தாயாகிய சுஹாசினியும் குழந்தையைப் பெற்று சுலக்சனாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். தன் தவறுகளை உணர்ந்த சிவகுமார் மீண்டும் இசை உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.

அன்பு, அடக்கம், பொறுமை நிறைந்த மனைவி வீட்டில் இருக்க இசையைப் பற்றிப் படிக்க வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கதாநாயகனை தமிழ் ரசிகர்கள் வெறுக்கவில்லை. வெள்ளி விழாக் கொண்டாடிய இப்படம் பின்னாளில் பாடகி சித்ராவுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. சிவகுமார் இசைக் கலைஞராக வாழ்ந்தார். இப்படியும் அப்பாவிப் பெண்ணா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் சுலக்சனா. சுஹாசினியின் சுறுசுறுப்பும் உருக்கமும் மனதில் பதிந்துவிட்டது. டெல்லி கணேஷ், கனகராஜ் ஆகியோரின் நகைச்சுவை படத்துக்கு கலகலப்பூட்டியது. மணிமாலா சிவச்சந்திரன் மீரா ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

சுஹாசினியின் பெயர் சிந்து, சுலக்சனாவின் பெயர் பைரவி. இரண்டு கதாநõயகிகளின் பெயரை இணைத்து சிந்து பைரவி என்று பெயரிட்டார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் பெண் பாத்திரங்களுக்கு ராகங்களின் பெயரைச் சூட்டியது போலவே சிந்துபைரவி படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்கும் ராகங்களின் பெயரைச் சூட்டினார். படத்தின் பெயரும் ராகத்தின் பெயரில் அமைந்துள்ளது.

சிந்துபைரவி படத்தில் சுலக்சனாவைத் தவிர அனைத்துப் பாத்திரங்களும் இசை ஞானம் உள்ளவர்கள் நீதிபதியின் கார்ச்சாரதியே இசையைப் பற்றி விளக்கமளிக்கிறார். வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் படத்தின் கதைக்கு வலுச் சேர்க்கின்றன. இசைஞானி இளையராஜா இசை வேள்வியை நடத்தியுள்ளார். டாக்டர் கே.@ஜ. ஜேசுதாஸ் சின்னக்குயில் சித்ரா ஆகியோரின் குரல்களின் பாடல்கள் மனதைவிட்டு வெளியேற மறுக்கின்றன.

ரமணி
மித்திரன்03/06/12

லண்டனில் தங்கத் திருவிழா 4

ஸ்பெய்ன்  

ஸ்பெய்ன்
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் சாதிக்கும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் உதை பந்தாட்ட அணி தகுதி பெற்றது. அதன் பின்னர் 2முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றும் தகுதியை இழந்தது. 12 வருடங்களின் பின் மீண்டும் ஸ்பெயின் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகிறது.
21 வயதுக்குட்பட்ட யூ. ஈ. எஃப். ஏ. ஐரோப்பிய கிண்ண சம்பியன் போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதால் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. முன்னதாக நடை பெற்ற அரை இறுதிப் போட்டியில் பெலாரஸுடன் விளையாடி 3  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செக் குடியரசு, உக்ரைனுடனான போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஸ்பெயின் இங்கிலாந்துடனான போட்டியைச் சமப்படுத்தியது.
அட்ரின், டேவிட் டி கி, செசர் அஸபிலியூட், அன்டர் ஹெராரே, ஒரி ஒல் ரொமியு ஆகியோர் ஸ்பெயின் உதை பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்கள். தென் ஆபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் சம்பியனான ஸ்பெயின் அணியில் விளையாடிய ஜுவன் மாதா, ஜவி மாட்டின் ஆகியோர் இருப்பது கூடுதல் பலமாக உள்ளது. அட்ரின் ஐந்து கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார்.
1920 ஆம் ஆண்டு அன்ட் வேட்பில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 1992 பார்ஸிலோனா ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் போலந்துடனான போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றது.
ஹொண்டூராஸ், ஜப்பான், மொராக்கோ ஆகியவற்றுடன் குழு "டி' யில் ஸ்பெய்ன் உள்ளது.
சுவிட்ஸர்லாந்து 
சுவிட்ஸர்லாந்து
ஒலிம்பிக் உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை 84 வருடங்களின் பின்னர் பெற்றுள்ளது சுவிட்ஸர்லாந்து. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் உதை பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் தாய் நாடு திரும்பினர் சுவிட்ஸர்லாந்து வீரர்கள். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ் டர் டமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விøயாடிய சுவிட் ஸர்லாந்து முதல் சுற்றுடன் வெளியேறியது. டென்மார்க்கில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட யூ. ஈ. எஃப். ஏ. கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் 0  2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. 
முன்னதாக அரை இறுதியில் 2  0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வென்றது. ஐரோப்பாவின் பல கழகங்களில் விளையாடும் இளம் வீரர்கள் சுவிட் ஸர்லாந்து உதை பந்தாட்ட அணியில் உள்ளனர். 
மிக்கார்டோ லாட்றிக், ஒலிவர் பவ், சிகியூரி, வலன் ரின்ஸ் ரொக்கர் ஆகிய இளம் வீரர்கள் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பர். அட்மிர் மெஹதி மூன்று கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரைக் கட்டுப்படுத்துவது எதிரணி வீரர்களுக்கு சிரமமாக இருக்கும். 
மெக்ஸிகோ, வடகொரியா, கோபன் ஆகியவற்றுடன் குழு "பி'யில் உள்ளது சுவிட்ஸர்லாந்து
.ரமணி
மெட்ரோநியூஸ்29/05/12